Tuesday, May 7, 2013

நகைச்சுவை நடிகர் நாகேஸ் 28.09.2012


நகைச்சுவை நடிகர் நாகேஸ் 28.09.2012

இடுக்கன் வருங்கால் நகுக  எனும் வல்லுவனின் வாக்கிற்கிணங்க ஒவ்வொருவரும் , தங்களது வாழ்வில் துன்;பத்தை சந்திக்கிம்போது புன்னகைக்கும் எழுதப்படாத விதி நடைமுறையிலுள்ளது. ஆனால் தமக்குள் துன்பங்களை வைத்துக்கொண்டு பிறரை சிரிக்க வைத்து, அவர்களின் துன்பத்தை இல்லாதொழிப்பவர்கள் கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்ட கலைக்குழந்தைகள். இவ்வாறு உலகில் பல கலைக்குழந்தைகள் இறந்தும் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.  இவ்வாறு நம்முன்னே தங்களது நடிப்பாற்றலாலும், நகைச்சுவை உணர்வினாலும் தங்களை அடையாளப்படுத்தி ,  வாழ்ந்த , வாழ்ந்துகொண்டிருக்கின்ற கலைஞர்களில் அடையாளப்படுத்தி சொல்லக்கூடியவர்களில் ஒருவர். தமிழத்திரையுலகில் தன் நகைச்சுவையாலும், நடிப்பாற்றலாலும், 50 வருடங்களுக்குமேல் தமிழ் திரையுலகை தன்னகப்படுத்தி , ரசிகர்களை தன்பால் ஈர்த்து வைத்த மாபெரும் நகைச்சுவை நடிகர் நாகேஸ். கடந்த 1933 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27 ம் திகதி தமிழ்நாட்டின் தாராபுரம் பகுதியிலுள்ள கொளிஞ்சிவாடி எனும் ஊரில் கிருஷ்ணாராவ் ,ருக்மணியம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் நாகேசுவரன் எனப்படும் நாகேஸ். இவர் , குண்டப்பா , குண்டுராவ் எனும் பெயர்களாலும் அழைக்கப்பட்டார். தனது சொந்த ஊரான தாராபுரத்தில் ஆரம்பகல்வியை மேற்கொண்;ட நடிகர் நாகேஸ் பின்னர் கோவையிலுள்ள பீ எஸ் ஜீ எனும் கல்லூரியில் கலைப்பிரிவில் படித்து பட்டம் பெற்றார்.  தனது தாய் தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமூகத்தில் தன்னுடைய பெயர் தெரியும் அளவுக்கு முன்னேறிய பிறகே வீட்டுக்கு வருகை தருவேன் எனும் சவாலை விடுத்து , நாகேஸ் சென்னையை வந்தடைந்தார். சென்னைக்கு வந்த நாகேஸ்; ரயில்வே ஊழியராக பணிபுரிந்தார். இந்நிலையில் தனது இடம் இதுவல்ல என நன்றாக அறிந்துவைத்திருந்த நாகேஸ் , தனது இலக்கை நிர்ணயித்துக்கொள்ளாத நிலையில், தனது வாழ்க்கை தொடர்ந்தார். அந்த சந்தர்ப்பத்தில் கம்பராமாயணம் எனும் நாடகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்ட நாகேஸ் அதில், வயிற்றுவலிகாரராக வேடமிட்டு,  தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். குறித்த நாடகத்திற்கு தலைமை தாங்க வந்திருந்த மக்கள் திலகம் எம் ஜி ஆர் ,  அவரின் நடிப்பு திறனை பாராட்டி , பரிசு வழங்கினார். குறித்த நிகழ்வு நாகேசின் வாழ்க்கையில் திருப்பு முனையாக மாறியது. அதனைத்தொடர்ந்து தொடர்ச்சியாக  பல நாடகங்களில் நடித்துவந்த நடிகர் நாகேஸ்  , கடந்த 1959 ம் ஆண்டு, திரையுலகில் கால்தடம் பதித்தார். தாமரைக்குளம் எனும் திரைப்படத்தில் நாகேஸ், முதன்முதலில் நடித்தார். அதனைத்தொடர்ந்து பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்துவந்தார். இந்நிலையில் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படத்தில் அவருக்கு முக்கிய நகைச்சுவை பாத்திரத்தில் வாய்ப்பளிக்கப்பட்டது. குறித்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதில் நாகேசுக்கு ஜோடியாக திரையுலகில் ஆச்சி என எல்லோராலும் அழைக்கப்படுகின்ற மனோராமா நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தனது நகைச்சுவை நடிப்பில் முத்திரை பதித்துக்கொண்ட நடிகர் நாகேஸ்     தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த காலப்பகுதியில் இருவேறு பாதைகளில் பயணித்துக்கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம் ஜீ ஆர் ஆகியோருடன் தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.  மேலும் கே பாலச்சந்தரின் சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் ,குணச்சித்திர பாத்திரத்தில் நடித்த நடிகர் நாகேஸ் , மக்கள் மனதில் இடம்பிடித்தார். இவ்வாறு நகைச்சுவை பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த நாகேசை , கதாநாயகன்; அந்தஸ்திற்கு கொண்டுசென்ற பெருமை இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரையே சாரும். நீர்;க்குமிழி எனும் திரைப்படத்தில் நாகேசை , கதாநாயகனாக நடிக்கவைத்தார் கே பாலச்சந்தர். குறித்த திரைப்படமானது மிகப்பெரிய வெற்றிபெற்றதையடுத்து, தன்னால் சகல துறைகளிலும் சோபிக்க முடியுமென்பதை நிரூபித்திருந்தார் நடிகர் நாகேஸ். அதனைத்தொடர்ந்து, தேன் கிண்ணம், நவக்கிரகம் , எதிர்நீச்சல், யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற திரைப்படங்களில் நாகேஸ், கதாநாயகனாக நடித்தார். மேலும் நடிகர் கமலஹாசன் தயாரித்து நடித்த, அப+ர்வ சகோதரர்கள் திரைப்படத்தில், ஒரு வில்லனாகவும் நடிகர் நாகேஸ் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அதனைத்தொடர்ந்து  பல நடிகர்களுன் நகைச்சுவை  மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த நாகேஸ் , இறுதியாக கமலஹாசன் நடித்து வெளிவந்த தசாவதாரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். 50 வருட திரைவாழ்க்கையில் நாகேஸ் ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.  அதில் மக்கள் திலகம் எம் ஜீ ஆருடன் 45 திரைப்படங்களில் நடித்து, அவரிடம் பாராட்டை பெற்றவர் நடிகர் நாகேஸ். இவர் நடித்த பல திரைப்படங்களில் இவருக்கு ஜோடியாக மனோரமாவே இணைந்து நடித்துள்ளார். முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொள்ளாத நாகேஸ், நடனத்தில் தனக்கென   ஒரு தனிப்பானியை அமைத்துக்கொண்டு நாகேஸ் பானி எனும் முத்திரையினை பதித்துக்கொண்டார். இவரும் சிவாஜி கணேசனின் இணைந்து நடித்த திருவிளையாடல் எனும் திரைப்படத்தில் வந்த , நகைச்சுவைக்காட்சி, தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் என்றும் மறக்க முடியாத காட்சி. இவ்வாறு தனது வெற்றிப்பாதையினை தொடர்ந்த நாகேஸ், தன் பெயர் ஊர்சொல்லும் அளவிற்கு பிரபல்யமடைந்த விடயத்தினை தனது தாயிடம் சொல்ல புறப்பட்ட நாளில்,  அவரது தாயின் இறுதிச்சடங்கு நடைபெற்றமை அவரை நீங்கா துயருக்கு கொண்டுசென்றது. ரெஜீனா எனும் பெண்ணை திருமணம் செய்துகொண்ட நாகேசுக்கு ஆனந்தபாபு, ரமேஸ் பாபு, ராஜேஸ் பாபு எனும் 3 மகன்கள் உள்ளனர். அவர்களின் ஆனந்த் பாபுவை திரையுலக நட்சத்திரமாக்கும் முயற்சியில் ஈடுபட்ட நடிகர் நாகேஸ் , தான் தயாரித்த பார்த்த ஞாபகம் இல்லையோ எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்தார். எனினும்  குறித்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியடைய அவருக்கு, பொருளாதார ரீதியில் பல பின்னடைவுகள் ஏற்பட, வாழ்க்கையிலும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டார். எனினும் தொடர்ந்தும் தனது மகனை வைத்து, திரைப்படத்தினை இயக்கிய நடிகர் நாகேஸ், பல திரைப்படங்களில் வெற்றியினை பதிவுசெய்துகொண்டார். எனினும் கிடைக்கப்பெற்ற வெற்றிகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளாத நடிகர் ஆனந்தபாபு,  போதைக்கு அடிமையாகி நாகேஸின் இதயத்தில் மேலும் ரணத்தை ஏற்படுத்தினார்.  வாழ்க்கையில்  இவ்வாறு பல பிரச்சினைகளை சந்தித்த நகைச்சுவை மாமன்னர் நடிகர் நாகேஸ் , ஏதோ சில காரணங்களுக்காக , இந்திய திரையுலகிலிருந்து ஒதுக்கப்பட்ட கலைஞராகவே பார்க்கப்படுகிறார். நகைச்சுவை, நடனம், நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, கதை வசனம் ,கவிதை, எனப்பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகை ஆட்சி செய்த நடிகர் நாகேஸ், கடந்த 2009 ம் ஆண்டு, ஜனவரி மாதம் 31 ம் திகதி மாரடைப்பால் உயிர்நீத்தார். 5 தசாப்தமாக தமிழ் திரை ரசிகர்களை மனம் விட்டு சிரிக்கவைத்து , மனம்கொண்ட சோகங்களை மறக்க வைத்த நடிகர் நாகேஸிற்கு, இந்திய அரசின் எவ்வித விருதுகளும் கௌரவிக்கவில்லையென்பது கலையுலகை சற்றே கண்கலக்க வைக்கும் நிகழ்வாகும். இந்தியாவின் ஜெரிலூயி என அழைக்கப்பட்ட நடிகர் நாகேஸ், தான் நடித்த தசாவதாரம் திரைப்படத்தின் இறுதிநாள் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டபின்னர் , அவர் சொன்ன கடைசி வார்;த்தை என் கடைசி படம் நல்லப்படம், ஐஆ ர்ழுNழுருசு டா கமல் என்ற வார்த்தையாகும். தாமரைக்குளம் எனும் தமிழ் திரைப்படத்தினூடாக திரையுலகில் தவழ ஆரம்பித்த மாபெரும் கலைஞன் நடிகர் நாகேஸ், பல அவதாரங்களை எடுத்து, தசாவதாரத்தில் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.  நாகேசுக்கு பின்னர் , எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இன்று திரையுலகில் ஜொலித்து வந்தாலும்,  அவர்கள் அனைவருக்குமு; நகைச்சுவையில் முன்னோடியாக திகழ்ந்தவர் நடிகர் நாகேஸ். இந்திய அரசு அவருக்கு விருது வழங்கி கௌரவிக்காவிடினும்,  கலை ரசிகர்கள் ,  திரையுலகத்தினர் , உலக மக்கள் அனைவரும் அவருக்கு வழங்கிய மிகப்பெரிய பரிசு அவரின் அந்த ஆயிரம் திரைப்படங்களையும் ஏற்றுக்கொண்டமையே.  நடிகர் திலகம், மக்கள் திலகம் போன்ற சகாப்தங்கள் வாழ்ந்த காலத்தில் தன்னையும் மிளிர வைத்து, தனக்கென தனியிடத்தை பதித்து, இந்திய திரையுலகில் தனித்துவமிக்க நாயகனாக விளங்கிய நடிகர் நாகேஸ், என்றும் நம் உதட்டோர புன்னகையின் சின்னமாய்...........................................................................................… பிரசன்னா 

எம். ஜி.ஆர்


எம். ஜி.ஆர்    17.01.2013
தமிழ் திரையுலக வரலாற்றில் இவர் வாழ்ந்த காலம் பொற்காலம். திரை உலகத்தில் ஒரு நடிகராக மாத்திரமின்றி நல்ல மனிதனாகவும் அனைத்து மக்களின் இதயத்தில் இடம்பிடித்த மகானாகவும் வலம் வந்தவர். அவர் இறந்த பின்பும் இன்றைய இளைஞர்கள் கூட இவரின் கொள்கைகளை பின்பற்றுவதும் அவரது வார்த்தைகளை உபயோகிப்பது அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தத்தைதரும்.  3 எழுத்தில் தன் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னே தன் பேச்சிருக்கும் எனக் கூறி இறந்தும் வாழ்ந்து கொண்டிருப்பவர் மக்கள் திலகம் எம். ஜி.ஆர். இவர் கடந்த  1917 ம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ம் திகதி இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி எனும் ஊரில் மருதூர் கோபலமேனனுக்கும் சத்திய பாபாவுக்கும் மகனாக பிறந்தார். இவரது தந்தை மருதூர் கோபால மேனன் கேரளாவில் வழக்கு அறிஞராக பணிபுரிந்தார். தனது தந்தையின் மரணித்தின் பின்னர் இந்தியாவின் தமிழ் நாட்டில் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலை காரணமாக தனது படிப்பை தொடர முடியாத காரணத்தினால் அவர் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். நாடகத்தில் மிகச் சிறந்த நடிகராக உருவெடுத்து மருதூர் கோபலமேனன் ராமசந்திரன் கடந்த 1936 ம் ஆண்டு திரையுலகில் காலடிவைத்தார். அவர் சதிலீலாவதி எனும் திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் எம்.ஜி.ராமசந்திரன் நடித்திருந்தாலும் கடந்த 1947 ம் ஆண்டு அவர் நடித்து  வெளிவந்த ராஜகுமாரி திரைப்படம் அவரை தமிழ் திரை உலகில் அடையாள படுத்தியது. அதனைத் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த எம்.ஜி.ஆர் தொடர்ந்து வந்த 25 ஆண்டுகள் தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னனாக ஆட்சி புரிந்தார். அவர் நடித்த திரைப்படங்கள் சமூக விழிப்புணர்வு கருத்துக்களையும் கருத்தாளங்கொண்ட கதைகளையும் உள்ளடக்கிய திரைப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து திரைப்படத்தில் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்கள் வாயிலாகவும் ரசிகர்களின் இதயத்தை குடிகொண்டு தனது நல்லெண்ணம் கொண்ட சிந்தனைகளினால் அனைவரைவும் கவர்ந்தார். காந்திய  வாதத்தால் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்  அரசியலிலும் கால் தடம் பதித்தார். இவர் ஒரு மலையாளியாக இருந்த போதிலும் முன்னணி தமிழ் தேசிய வாதியாகவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் காணப்பட்டார். அறிஞர் அண்ணாவின் மறைவினையடுத்து திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக மு.கருணாநிதி முதலமைச்சர் ஆனதை தொடர்ந்து ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எனும் பெயரில் கட்சியொன்றை ஆரம்பித்து அதனூடாக அரசியலில் பலமாக தடம் பதித்த எம்.ஜி.ஆர் திரைப்படத்தின் ஊடாக பெற்றுக்கொண்ட நற்பெயரினால் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார். திரைப்படங்களின் மூலம் அவர் அடைந்த புகழும் அவருடைய வசீகரமான தோற்றமும் சமூக தொண்டனாகவும் ஏழைகளின் தோழனாகவும் கொடையாளியாகவும் வீரனாகவும் அவர் பெற்றுக்கொண்ட நற்பெயரும் அவர் மிக விரைவில் மக்கள் ஆதரவை பெற உதவின அதற்கமைய கடந்த 1977 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மிகப் பெரிய வெற்றிபெற்று தமிழகத்தின் முதலமைச்சராக எம்.ஜி.ஆர் தெரிவானார். இதேவேளை கடந்த  1984 ம் ஆண்டு கடுமையாக நோய்வாய்ப்பட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு வராமலேயே வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வரான சாதனையாளராகவும் இவர் போற்றப்படுகிறார். அதற்கமைய இவர் கடந்த 1977 ம் ஆண்டு முதல் 87 ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழகத்தின் முதலமைச்சராக எம்.ஜி.ஆர் பதவி வகித்தார்.  இவர் தனது ஆட்சிக்காலத்தின் போது பல்வேறு திட்டங்களை மக்களுக்கென அறிமுகப்படுத்தி சிறந்த தலைமைத்துவ பண்பினை வெளிக்காட்டினார். அதற்கமைய சத்துணவு திட்டம், விதவை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி பணியாளர்களுக்கான தங்கும் விடுதி அமைத்தல் தாய், சேய் இல்லங்கள் இலவச சீருடை , காலணி மற்றும் பாடநூல் வழங்கும் திட்டம், குடிநீர் வழங்கும் திட்டம் என்பவற்றை அறிமுகப்படுத்தினார்;. இதேவேளை தமிழ் மக்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியல், வரலாறு, மருத்துவம், கைவினைகள், மரபுப்பெருமையை பரப்புதல் போன்றவற்றை பரப்புவதற்காக எம்.ஜி.ராமசந்திரன் கடந்த 1981 ம் ஆண்டு தமது அரசாங்கத்தினால்  தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தினை உருவாக்கினார். இதேவேளை அரசியலில் இருந்து கொண்டே தமிழ் திரைப்படங்களிலும் எம்.ஜி.ஆர் தொடர்ச்சியாக நடித்து வந்தார். இதேவேளை அரசியல் குழப்பங்கள் காரணமாக தமிழ் திரை உலகின் நடிகர்களில் ஒருவராக எம்.ஆர். ராதாவினால் எம்.ஜி.ஆர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து எம்.ஜி.ஆர் தெளிவாக பேசும் திறனை இழந்தார். பின்னர் தனது நட்சத்திர அந்தஷ்த்து குறையாமல் மீண்டும் பரிணாமம் எடுத்த எம்.ஜீ.ஆர் இயக்குனராகவும் தயாரிப்பளாரகவும் பரிணாமம் எடுத்தார். நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற திரைப்படங்கள் எம்.ஜீ.ஆரினால் இயக்கப்பட்டன. இவர் பலமுறை சிறந்த நடிகருக்கான விருதினையும் பெற்றுள்ளார். இவரை அகில இந்திய சிறந்த நடிகராக தெரிவு செய்து இவருக்கு இந்திய மத்தியரசு பாரத் விருதினையும் வழங்கியது. இவ்வாறு தமிழ் திரை உலக வரலாற்றில் அசைக்க முடியாத நாயகனாகவும் , இந்தியா அரசியல் வரலாற்றில் தன்னிகரற்ற தலைவராகவும் வாழ்ந்த எம்.ஜி.ராமசந்திரன் கடந்த 1987ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் திகதி தனது 70 வது வயதில் முதலமைச்சராக இருந்த  வேளையில் சுகயீனமுற்ற நிலையில் கொடை வள்ளல் தியாகச் சுடர், வாத்தியார், பொன்மனச் செம்மல் என அழைக்கப்படும் எம்.ஜி.ராமசந்திரன் இவ்வுலகைவிட்டு பிரிந்தார். அவர் பிரிந்தாலும் அவரின் நினைவுகளும் சாதனைகளும் தமிழ் திரை உலகை இன்றும் அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. இவருக்கு பல்வேறு பட்ட விருதுகள் சகல தர்பினரால் வழங்கப்பட்டாலும் டொக்டர் எம்.ஜி.ராம சந்திரனக்கு இந்திய மத்திய அரசினால் பராத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சதிலீலாவதியில் தனது திரை உலக வாழ்வை ஆரம்பித்த எம்.ஜி.ராம சந்திரன் இறுதியாக நடித்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகும் .எம்.ஜி.ஆர் என்ற சகாப்தம் இலங்கையில் ப+த்து இந்தியாவில் மலர்ந்து நறுமணம் வீசி மக்கள் மனதில் இன்றும் நீங்காத இடம்பிடித்துள்ளது. அவர் இந்த ப+மிக்கு வந்து இன்றுடன் 96 வருடங்கள் ஆகும் இந்நாளில் இதயக்கனி வாத்தியார், மக்கள் திலகம், எம்.ஜி.ஆரின் நினைவுகள் என்றும் நெஞ்சோடு நீங்காமல்…. பிரசன்னா 




ரஜினிகாந்… 12.12.12



ரஜினிகாந்…                        12.12.12

அப+ர்வம், எளிமை என்று சொன்னால் அது இவரின் பெயரை சொல்லும் இவர் மயக்கத்தில் மந்திரர். இயக்கத்தில் எந்திரன் சுண்டும் ஸ்டைலில் சுப்பர் மேன் . வீரத்தில் அடங்காத முரட்டுக்காளை நல்லுங்களுக்கு உதவுவதில் இவர் மனிதன். கெட்டவர்களுக்கு பொல்லாதவன், இலட்சியப் போக்கில் செல்லும் இவன் பாட்சா, பகைவர்களுக்கு இவர் மாவீரன் சிவாஜி, நல்லோர் மனதில் இவன் முத்து, அதனால் இவன் பின்னே உலக ரசிகர் படையப்பா, இளம் பெண்களுக்கு மன்னன், முதியருக்கு இவன் தர்மத்தின் தலைவன், சிறுவர்கள் உள்ளத்தில் என்றும் இவர் அன்புள்ள ரஜினிகாந்,  திரையுலக வரலாற்றில் தனக்கென ஒரு பாணியை வளர்த்து தன்னை ஒவ்வொரு ரசிகர்கள் மத்தியிலும் கடவுள் என்றும் சொல்லும் அளவிற்கு வாழ்;க்கையிலும் ஆண்மீகத்திலும் தன்னிகரற்ற மனிதனாக வாழ்ந்தவர், எங்கள் உலக சுப்பர் ஸ்டார், ரஜினி காந்…இவர் கடந்த 1949 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ம் திகதி இந்தியாவின் கர்நாடகத்தில் ராமோஜி ராவ் கயாட் வாடுக்கும் ரமபாய்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தார். இவரது இயற்பெயர் சிவாஜிராவ் கயாக்வாட் என்பதாகும். தனது ஐந்தாவது வயதில் தாயை இழந்த ரஜினிகாந் தனது அண்ணனின் அரவணைப்பில் வழந்தார். பெங்களுரில் ஆசாரிய பாடசாலை மற்றும் விவாகனந்தர் பால சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்த சிவாஜிராவ் வறுமையின் ஒவ்வொரு படியினையும் தாண்டி வந்தவர். தனது இளமைக் கல்வியை முடித்த சிவாஜி ராவ் எனும் எங்கள் சுப்பர் ஸ்டார். பெங்களுரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இக்கால கட்டத்தில் பல மேடை நாடகங்களில்  கண்டு கொண்ட சிவாஜி ராவ் தனது மனதில் நடிக்கும் ஆவலை வளர்த்துக்கொண்டார். அந்த ஆசை அவரை சென்னைக்கு அழைத்து வந்தது. ஒரு நண்பனின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் இணைந்து நடிப்பு துறையினை கற்றுக்கொண்டார். சாதாரண வறிய குடும்பத்தில் பிறந்து பேருந்து நடத்துனராக வாழ்க்கையில் கால் வைத்து திரைப்பட துறையில் இணையும் ஆசையுடன் சென்னை வந்த சிவாஜி ராவுக்கு கடந்த 1975 ம் ஆண்டு விடிவுகாலமாய் அமைந்தது. கடந்த 1975 ம் ஆண்டு இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கிய அப+ர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் சுப்பர் ஸ்டார் நடித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 1976 ம் ஆண்டு ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு திரைப்படம் அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அத்திரைப்படத்திலேயே ரஜினியின் ஸ்டைலான நடிப்புக்கு அடித்தளம் இட்டது.  அதன் பிறகு 16 வயதினிலேயே காயத்திரி போன்ற திரைப்படங்களில் சிவாஜி ராவ் வில்லனாக நடித்தார். சிவாஜி ராவாக திரையுலகிக்கு வந்த அவரை ரஜினிகாந் என பெயர் சூட்டியவர் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் ஆகும். வில்லனாக விருந்த ரஜினி புவனா ஒரு கேள்விக் குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் கதாநாயனாக நடித்து பில்லா , போக்கிரி ராஜா, முரட்டுக்காளை போன்ற திரைப்படங்களில் அதிரடி நாயகனாக களமிறங்கினார். எனினும் வில்லனாக மாத்திரம் நடித்து வந்த ரஜினிகாந் கதாநாயனாக நடித்த முதல் திரைப்படம் பைரவி திரைப்படமாகும். இத்திரைப்படத்திலேயே இவருக்கு சுப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டது. நான் போட்ட சவால் எனும் திரைப்படத்திலிருந்து ரஜினிக்காந்திற்கு சுப்பர் ஸ்டார் எனும் பட்டம் பதியப்பட்டது. ரஜினிகாந்துக்கு சுப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வழங்கியவர் கலைப்புலி ஸ் தானு ஆகும். பல பன்ச் டயலாக்குகளால் சமூக கருத்துக்களையும் உண்மை நிலையினையும் எடுத்துக் கூறும் ரஜினி முதல் பேசிய பஞ் டயலொக் “ இது எப்படி இருக்கு” இதே வசனத்தையே ஹவ் இஸ் இற் என ஆங்கிலத்திலும் இப்படிச்சூடு என தெலுங்கிலும் குறித்த பஞ் டயலொக் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தது. அவர் நடித்த தில்லுமுல்லு திரைப்படம் அவரை சிறந்த ஒரு நகைச்சுவை நடிகர் என்பதை வெளிப்படுத்தியது. ( படையப்பா 1)   பின்னர் தனது ஸ்டைல், நடிப்பு, அதிரடி, நகைச்சுவை என தனது திறமைகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து திரைப்படங்களில் வலம் வந்த சுப்பர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் அவர்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்தார். சுயதini_யுடிழரவ_புழழன_Pநழிடந_in_Pயனமையவாயஎயn குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், முதியோர்கள் என சகலரையும் தனது அன்பால் தன்னுள் ஈர்த்துக்கொண்டவர் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந். டீநளவ ளுஉநநெ குசழஅ Pயனயலயிpய  சிறுவர்கள் இதயத்தில் இவர் குழந்தை ரஜினிகாந் இளைஞர்களுக்கருகில் இவர் நண்பன் ரஜினிகாந் முதியோர்கள் மத்தியில் மரியாதைக்குரிய மனிதன் ரஜினி காந், திரையுலகத்திற்கு முன்னால் ஈடு, இணையற்ற சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்  உலகளாவிய ரீதியில் , அனைவரதும் உள்ளவம் கவர்ந்த கள்வன் இந்த சுப்பர் ஸ்டார் ரஜினிகாந், இவர் எப்போது திரைக்கு வந்தாலும் அப்போது அது உலகளாவிய ரீதியில் மற்றுமொரு பண்டிகையாக கொண்டாடப்படும். இவரை விரும்பாத மனிதர்களே இல்லை அதனால் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சாதனையுடன் வெற்றி  பெறும். சுடீளுஐ - ஆரவார Pரnஉh னுயைடழரபந --) பல வெற்றிப் படங்களை  தொடர்ச்சியாக சுவைத்த வந்த ரஜினியின் முதல் தோல்வி திரைப்படமாக பதியப்பட்டது. வணக்கத்துக்குரிய காதலி திரைப்படமாகும். 70 களின் இறுதிக்காலப்பகுதிகளில் திரையுலகத்தில் சில்லென அடித்த ரஜினி எனும் காற்று 80 களில் தென்றலாகவும் 90 களில் பாதியப்பற்ற சூறாவளியாகவும் 21 ம் நூற்றாண்டில் திரை உலக ரசிகர்களின் சுவாசமாகவும் மாறியுள்ளது. பேருந்து நடத்துனராக வாழ்க்கைய ஆரம்பித்த சுப்பர் ஸ்டார் எனும் அந்த சகாப்தம் இன்றும் உலகளாவிய ரசிகர்களை வழிநடத்தும் மகாநாக உருவெடுத்துள்ளது. ஆன்மீகம் , சமூக சிந்தனை, எதிர்கால சந்ததியினரை வழிநடத்தல் அவரது ஒவ்வொரு வார்த்தைகளும் ஒரு தடவையல்ல 100 தடவைகளுக்கு மேல் சொன்னாலும் சலித்துப்போவதில்லை. ( குசேலன் ) இவரின் ஒரு வார்த்தைக்காய் அவரது ரசிகர்கள் காத்திருக்கும் தருணத்தில் அவர் அரசியலுக்கு வருவரா??? இல்லையா ???? என்பது கேள்விக் குறியானது. எனினும் சுப்பர் ஸ்டார் ரஜினி காந் அரசியல் வாசத்தை சுவாசிக்க தொடர்ந்தும் மறுத்தே வருகிறார்;. இந்த வையகமே தவமிருந்து பெற்ற அருட்செல்வனாக மாறி அனைவரையும் ஆட்கொள்ளும் மானுடப் பிறவியாக சுப்பர் ஸ்டார் ரஜினி காந் உருவெடுத்துள்ளார். .............................................. பிரசன்னா 


நோபல் பரிசு


நோபல் பரிசு


ஒரு மனிதனின் படைப்புக்களையும் ,அவனது திறமையினையும் தட்டிக்கொடுத்து, பாராட்டுவதென்பது,  அவனிடமிருந்து மேலமிக படைப்புக்களையும்,  அவனுடைய திறமையின் உச்சகட்ட வெளிப்பாட்டையும் பெற்றுக்கொள்வதற்கு அடிப்படையாக அமையும்.  அந்த வகையில் உலகளாவிய ரீதியில் எவ்வித பேதங்களுமின்றி உண்மையான திறமையுடையவனுக்கு,  பலதரப்பட்ட போட்டிகளுக்கு மத்தியில் உலக அங்கீகாரம் பெற்றுக்கொடுக்கும் வகையில், சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விருது, நோபல் பரிசாகும்.  இயற்பியல், வேதியியல்,  இலக்கியம், மருத்துவம், அமைதி மற்றும்  பொருளியல் ஆகியவற்றுக்கு  நோபல் பரிசு வழங்கப்படுகிறது. குறித்த பரிசு,  வழங்கப்படுகின்ற விடயம் இப்போது, உலகில் மிக முக்கிய நிகழ்வாக அமைகிறது.  ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதம் 10 ம் திகதி நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதுவரை 800 ற்கும் அதிகமான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த நோபல் பரிசு வழங்குவதற்கு  பின்னணியில், ஒருவரின் சாதனையும், மரணமும் மறைந்து காணப்படுகிறது.  உலக கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் நோபல் பரிசினை ,  வழங்குவதற்கு, அடித்தளம் அமைத்தவர் சுவீடனின்
வேதியியல் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்பு ஆகியவற்றில்  சாதனை படைத்த அல்பிரட் நோபல் ஆவார்.  கடந்த 1833 ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 21 ம் திகதி,  சுவீடனில் பிறந்த எல்பிரட் நோபல், ஒரு வேதியியலாளராகவும், பொறியியலாளராகவும் தன்னை வளர்த்துக்கொண்டார். பின்னர், இரும்பு ஆலையை நடத்திவந்த நோபல், அதனை பெரும் ஆயுத உற்பத்தி தொழிற்சாலையாக மாற்றி பலவித புகையற்ற இராணுவ வெடிபொருட்களுக்கு முன்னோடியான பொலிஸ்டிக்கை கண்டுபிடித்தார். இது  பின்னாளில் யுத்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு ஆயுதங்களை உருவாக்குவதங்கு அடித்தளம் அமைத்தது. இதைப்பயன்படுத்தி தனது வாழ்நாளில் நோபல் பெருமளவான  செல்வங்களை சேர்த்த்தார். அவரது வருமானத்தின்பெரும்பகுதி அவர் கண்டுபிடித்த 355 புதிய கண்டுபிடிப்புக்களால் கிடைத்தவையாகும்.  அவற்றில் முக்கியமான கண்டுபிடிப்பு,  டைனமைட் ஆகும் இது தற்போதைய உலகத்தில் உயிர்களை பலியெடுப்பதற்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் தலைமை இயக்குனராக உருவெடுத்துள்ளது. இதனை கண்டுபிடித்த பின்னர் நோபல், உலகளாவிய ரீதியில்,  பேசப்பட்ட போதிலும்,  இவரது கண்டுபிடிப்பு,  இவரை மரணத்தின் வியாபாரி என சொல்லும் அளவிற்கு, இவரை வளர்த்துவிட்டது. ஒரு பத்திரிக்கையில் வெளிவந்த குறித்த செய்தியை அறிந்தநோபல், தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்புக்கள் உலகை அச்சுறுத்தும் ஆயுதங்கள் என்பதை உணர்ந்து தனது சொத்தில் 94 வீதத்தினை மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்தவர்களுக்கு பயன்படுத்துமாறு உயில் எழுதினார். அதற்கமையவே ,  இயற்பியல் வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு தனது பெயரிலேயே பரிசில்களை வழங்குமாறு நோபல் தனது உயிலில் எழுதிவைத்தார்.  அழிக்கும் ஆயுதங்களால் தான் பெற்றுக்கொண்ட செல்வங்கள்,  ஆக்கும் உயிர்களுக்கு செல்லட்டும் என்பதே அவரின் வாழ்நாளின் இறுதி ஆசையாகும்.  இந்நிலையில் கடந்த 1895 ம் ஆண்டு, டிசெம்பர் மாதம் 10ம் திகதி தனது 63 ஆவது வயதில்,  எல்பிரட் நோபல் உயிரிழந்தார். அவர் தனது கடைசி உயிலினை 1895 ம் ஆண்டு,  நவம்பர் மாதம் 27 ம் திகதி பெரிசிலிருந்த சுவீடன், நோர்வே  மன்றத்தில்,  கையளித்தார். அதனைத்தொடரந்து அவரின் உயிலின் மேலிருந்த அச்சம் காரணமாக  அவரின் உயிலை கடந்த 1897 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதியே நோர்வே பாராளுமன்றம் அங்கீகரித்தது. அதன்பின்னர் குறித்த நோபர் பரிசு வழங்குவதற்கென விசேட உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் நோபல் பரிசை பெறுபவர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் 1905ம ; ஆண்டு நோர்வேயும், சுவீடனும் பிரிந்த பிறகு, அமைதிக்கான நோபல் பரிசை வழங்குவதற்கான பொறுப்பு, நோர்வேயிடம் வழங்கப்பட்டதோடு, ஏனைய பரிசில்களையும் வழங்கும் பொறுப்பு சுவீடனிடம் வழங்கப்பட்டது.  கடந்த 1900 ம் ஆணடு ஜீன் மாதம் 29 ம் திகதி முதல் நோபல் அரக்கட்டளை ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு, நோபலின் உயிலின்படி அதன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் நோபல் பரிசு வழங்கும் நடவடிக்கைகளுக்கு ,  எப்பொழுதும் சில எதிர்ப்புக்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதனையும் தாண்டி, நோபலின் எண்ணங்கள் , நோபல் பரிசினால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும்  நோபலின் சொத்தை முதலீடாக கொண்டு செயற்படும் குறித்த அரக்கட்டளைக்கு சுவீடன் , அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகள்  முழுமையான வரிவிலக்கீடு அளித்துள்ளது. நோபல் பிறந்த ஊரான, ஸ்டாக்ஹோமை தலைமையகமாக கொண்டு குறித்த நோபல் அரக்கட்டளை இயங்கி வருகிறது. நோபல் பரிசு பெறுபவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை,  அரசாங்கங்கள், சர்வதேச நீதிமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள், கல்லூரி தலைவர்கள், முன்னாள் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களால் பரிந்துரை செய்யப்படுபவர்களின் விபரங்கள் நோபல் குழவிற்கு அனுப்பப்பட்டு, அதன்பின்னர் ஆலோசனைகள் இடம்பெற்று, சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது. இதேவேளை எல்பிரட் நோபல் குறிப்பிட்டதற்கு மேலதிகமாக  கடந்த 1968 ம் ஆண்டு  முதல், சுவீடனால் பொருளியலுக்கான நோபல் பரிசு இதனுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. அதற்கமைய வருடந்தோரும் எல்பிரட் நோபலின் நினைவுத்தினமான டிசெம்பர் மாதம் 10 ம் திகதி ,  நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பிரதான நிகழ்வு சுவீடனிலுள்ள ஸ்டொக்ஹொம் நகரில் இடம்பெறுவதோடு,  அமைதிக்கான நோபல் பரிசு மாத்திரம்  நோர்வேயிலுள்ள ஒஸ்லோ நகரில் வழங்கப்படுகிறது. நோபல் வாழ்ந்த காலத்தில் நோர்வேயும், சுவீடனும் ஒரே நாடாக இருந்ததன் காரணமாகவே இவ்வாறு நோபல் பரிசு பிரித்து வழங்கப்படுகிறது. தான்கண்டுபிடித்த கண்டுபிடிப்புக்களில்  மக்களுக்கு நலன்கிடைத்திருந்தாலும், சில கண்டுபிடிப்புக்கள் மக்களையே அழிக்கும் ஆயதமாக மாறிவிட்டமையை உணர்ந்த எல்பிரட் நோபலினால்,   உருவாக்கப்பட்ட நோபல் பரிசு,  அவரை வாழ்நாள் முழுதும் தவறான எண்ணக்கவிலிருந்து பாதுகாக்கிறது. எனினும் அவர் கண்டுபிடித்த டைனமைட் இன்றும் அழிவின் அடித்தளமாகவே உலகை வலம் வருகிறது. எவ்வாறெனினும் உலக படைப்பாளிகளையும், கண்டுபிடிப்பாளர்களையும் உன்னத மனிதர்களையும் அடையாளம் காட்டி, அவர்களின் தொடர்ச்சியான சாதனைகளுக்கு வழிவகுக்கும், நோபல் பரிசு, உலக அங்கீகாரங்களில் ஒன்று.............................................. பிரசன்னா 

ஆறுமுகநாவலர்


ஆறுமுகநாவலர்

தமிழ் மொழியின் தொன்மையினை பாதுகாப்பதற்கும் அதனை மேலும் பரிணமிக்க செய்வதற்கும் இவ்வுலகில் பல உன்னத பிறப்புக்கள் பிறந்து வாழ்ந்து தமிழ் மொழியை அழியா சொத்தாக நிலை நிறுத்த பாடுபட்டுள்ளனர். அந்த வகையில் தமிழ் மொழியை மாத்திரமின்றி சைவ சமய மறுமலர்ச்சிக்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்  ஆறுமுக நாவலர் ஆகும். இவர் கடந்த 1822 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தப்பிள்ளை சிவகாமி அம்மையார் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவரது  இயற்பெயர் ஆறுமுகம் பிள்ளை என்பதாகும். இவரது தந்தை கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தன், ப+ட்டன் இலங்கை காவல  முதலியார் ஆகியோர் தமிழ் அறிஞர்களாவர். தனது 5 வது வயதில் கல்வி கற்க ஆரம்பித்த ஆறுமுக நாவலர் நல்லூர் சுப்பரமணிய உபாத்தியாரிடம் நீதி நூல்களையும் தமிழையும் கற்றார். தனது 9 வது  வயதில் தந்தையை இழந்த ஆறுமுக நாவலர் சரவணமுத்து புலவர் மற்றும் சேனாதிராசா முதலியார் ஆகியோரிடம் உயர்கல்வியை கற்றார். தனது 12 வது வயதிலேயே தமிழ், சமஷ்கிருதம், ஆகிய மொழிகளை கற்று புலமை பெற்றார். தற்போதைய யாழ் மத்திய கல்லூரியான அப்போதைய மெதடிஸ் த ஆங்கிலப்பாடசாலையில் கல்வி கற்று ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றார். இந்நிலையில் தனது 20 வது வயதில் பாடசாலையில் ஆசிரியராகவும் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து சைவ தமிழ் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவ சமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காக பணிபுரிய தொடங்கிய ஆறுமுகநாவலர் சைவ சமய வளர்;ச்சிக்காக பிரசங்கங்களை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து சைவப்பிள்ளைகளுக்கு பாடநூல்களை அச்சிடும் நடவடிக்கையை கடந்த 1849  ம் ஆண்டு ஆரம்பித்தார். இதனிடையே சென்னைக்கு சென்ற அவர் திருவாவடு துறை எனும் ஊரில் அவரின் சைவ புலமையை பாராட்டி அவருக்கு நாவலர் எனும் பட்டத்தை பெற்றார். பின்னர் சைவ சமய நூல்களை பதிப்பிடும் நடவடிக்கையில் ஈடுபட்ட அவர் தனது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திர சாலை எனும் பெயரில் ஓர் அச்சகத்தை நிறுவி பாலபாடம், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், சைவ சமயசாரம், கொலைமறுத்தல், நன்னூல் விருத்தியுரை திருச்சந்தினிரோட்டக யமஹவந்தாதி  உரை, திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களை அச்சிட்டார். மேலும் திருத்தொண்டர் பெரிய புராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். இலங்கையில் மாத்திரமின்றி தமிழ் நாட்டிலும் இவரது பணி தொடர்ந்தது. சைவ சமயத்திற்கும் தமிழ் மொழிக்கும் உலகளாவிய ரீதியில் பணியாற்றியவர் பெருமைக்குரிய ஆறுமுகநாவலர் ஆவார். இதேவேளை 1870ம் ஆண்டு கோப்பாயில் ஒரு வித்தியசாலையை ஆரம்பித்து தனது சொந்த செலவில் நடத்தினார். இதேவேளை கடந்த 1872 ம்  ஆண்டு ஜனவரி மாதம் சைவ சமய பிள்ளைகளுக்காக வண்ணார் பண்ணை சைவ ஆங்கில பாடசாலையொன்றை நிறுவி நடாத்தி வந்தார்.   இதேவேளை கடந்த 1875 ம் ஆண்டுக்கும் 1878 ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தமிழ் அகராதி, தமிழ் சமஷ்கிருத அகராதி, தமிழ் ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவ பிரசங்கங்களை செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார். இவ்வாறு சமூதாயத்தின் மேம்பாட்டுக்காக பல பணிகளை மேற்கொண்ட ஆறுமுகநாவலர் கடந்த 1879 ம் ஆண்டு சுகயீனமுற்றநிலையில் அதே ஆண்டில் டிசம்பர் மாதம் 5 ம் திகதி தனது 56 வது வயதில் இறையடி சேர்ந்தார். அவரது குருப+ஷை தினம் கார்த்திகை மகமாகும். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் சைவ சமயத்தின் மறுமலர்ச்சிக்காகவும் பாடுபட்ட ஆறுமுகநாவலர் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத மகான்களில் ஒருவர்….. பிரசன்னா 


ஊனமுற்றவர் தினம்…..03.12.2012


ஊனமுற்றவர் தினம்…..03.12.2012


இந்த வையகம் இயங்க ஆரம்பித்த நாள் முதல் மனிதன் என்பவன் தனக்குள்ள திறமையை பயன்படுத்தி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உலகை ஆச்சரியப்பட வைத்துள்ளான். இந்த சாதனைகள் அனைத்தும் முழுமையான ஒரு மனிதனால் மாத்திரம் எட்டப்படவில்லை. ஒவ்வொரு சாதரன படைத்த மனிதனும் தனக்குள் ஏதாவதொரு குறைபாடுடையவனாகவே அடையாளம் காணப்பட்டுள்ளான். அவர்கள் தங்களுக்குள் இருக்கும் ஊனத்தை கவனத்தில் கொள்ளாமல் தங்களுக்குள்ள தன்நம்பிக்கையும் திறமைiயும் வெளிப்படுத்த பழககொண்டனர். அப்படியானவர்கள் தான் இன்று உலகில் சாதனையாளர்களாக இடம் பிடித்துள்ளனர். எனினும் காலப்போக்கில் ஊனம் என்பது பிரித்து பார்க்கப்பட்ட நிலையில் ஊனமுற்றோர் பல அசௌகரியங்களை சந்தித்தனர். இதனை நிவர்த்தி செய்வதற்கு உலகளாவிய ரீதியில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கமைய ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ம் திகதி உலக மாற்று திறனாளிகள் அனுஸ்டிக்கப்படுகிறது. கடந்த 1981 ம் ஆண்டு உலக மாற்று திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 1982 ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ம் திகதியே உலக மாற்று திறனாளிகள் நாளாக அனுஷ்டிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது. உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் குறித்த நாள் கொண்டாடப்படுகிறது. ஊனமுற்றோரின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் அனைத்து மக்களும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குரிய இடத்தையும் உரிமைகளையும் வழங்குவதில் யாரும் பின்னிற்க கூடாது என்ற கருத்தினை மக்கள் மத்தியில் உருவாக்குவதே இத்தினத்தின் பிரதான நோக்கமாகும். ஊனமுற்றோர் நோயாளிகளாக அல்லாமல் சமுதாயத்தில் நம்பிக்கைகுரிய பிரஜைகள் என்ற அடிப்படையில் நோக்கபடுவதிலும் இவர்களும் மனிதாபிமான சிந்தனை மிக்கவர்களே என்பதை மையமாக கொண்டு உலகம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலகில் மக்கள் தொகையில் 10 வீதமானோர் அதாவது 65 கோடி மக்கள் ஊனமுற்றவர்களென உலக சுகாதார நிறுவக புள்ளி விபரங்கள் தெரிவித்தன. இவர்களில் 80 வீதத்தினர் மூன்றாம் உலகநாடுகளில் வாழ்கின்றனர். இதேவேளை அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலுள்ள ஊனமுற்ற சிறுவர்களில் 90 வீதத்தினர் பாடசாலைக்கு செல்வதில்லையென ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. பல நாடுகள் அரச நிறுவனங்கள் மற்றும் அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் ஊனமுற்றவர்களின் நிலையை உயர்த்துவதற்கு செயல்திட்டங்களை தீட்டி அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிந்துவருகின்றனர். மேலும் சமூதாயத்தில் ஊனமுற்றவர்களின் நிலையை உயர்த்த கருத்தரங்குகள் பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை ஏற்பாடு செய்கின்றனர். ஊனம் என்பது பொதுவான நிலையில் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது இயலாத் தன்மையை இருப்பதையே குறிக்கும் இது உடற்குறைப்பாடு , புலன் குறைபாடு , மூளை வளர்ச்சி குறைப்பாடு, உளவியல் குறைபாடு, பிற நோய்கள் தொடர்பான குறைபாடு என்பவையே ஊனமெனப்படுகிறது. ஊனம் என்பது ஒருவரின் வாழ்க்கை காலத்தில் அல்லது பிறப்பிலேயே ஏற்படலாம். ஊனம் என்பது தனிப்பட்ட ஒருவரோடு மாத்திரம் தொடர்புடையதாக காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட தனிப்பட்டவரை எவ்வாறு சிறப்பாக செயற்பட வைக்கமுடியும் என்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். ஊனமென்பது முயற்சிகளுக்கு தடையாக அமைவதில்லை முயற்சியுடைய பல ஊனமுற்றவர்கள் உலகளாவிய ரீதியில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர். கல்வி, கலை, கலாசாரம் என்ற அடிப்படையில் அவர்களின் சாதனை தொடர்கிறது. மேலும் இன்று ஊனமுற்றவர்கள் விளையாட்டுத்துறையிலும் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்திக் கொண்டு வருகின்றார்கள். அதற்கமைய கடந்த 1960 ம் ஆண்டு முதல் ஊனமுற்றோருக்கான பரா ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஊனம் என்பது ஒரு தடையாக பார்க்காமல் ஊனமுள்ளவர்களையும் திறமை மிக்கவர்களாகவும் மனிதாபிமான நோக்குடன் நோக்குவது எம் ஒவ்வொருவரதும் கடமையாகும். ஊனமுற்றவர்களை சமுதாயத்திலிருந்து வேறுபடுத்தாமல் அவர்களுக்கு நம்பிக்கை தந்து எம்மோடு இணைத்து செயலாற்ற ஊனமுற்றோர் தினத்தில் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு பொழுதும் இது தொடர்பான உணர்வினை நாம் வளர்த்துக்கொள்வோம். உலக மனிவர்களைப் பொறுத்த வரையில் ஏதோ ஒரு வகையில் ஊனம் என்ற ஒன்று காணப்படுகிறது. ஆகயால் மாற்று திறனாளிகளின் மறுமலர்ச்சிக்கு எம் ஒவ்வொருவரது நல்லெண்ணங்களும் சமூக ஒத்துழைப்பும் அவசியம்…............................................................. பிரசன்னா