Tuesday, May 7, 2013

ஆறுமுகநாவலர்


ஆறுமுகநாவலர்

தமிழ் மொழியின் தொன்மையினை பாதுகாப்பதற்கும் அதனை மேலும் பரிணமிக்க செய்வதற்கும் இவ்வுலகில் பல உன்னத பிறப்புக்கள் பிறந்து வாழ்ந்து தமிழ் மொழியை அழியா சொத்தாக நிலை நிறுத்த பாடுபட்டுள்ளனர். அந்த வகையில் தமிழ் மொழியை மாத்திரமின்றி சைவ சமய மறுமலர்ச்சிக்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்  ஆறுமுக நாவலர் ஆகும். இவர் கடந்த 1822 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தப்பிள்ளை சிவகாமி அம்மையார் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவரது  இயற்பெயர் ஆறுமுகம் பிள்ளை என்பதாகும். இவரது தந்தை கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தன், ப+ட்டன் இலங்கை காவல  முதலியார் ஆகியோர் தமிழ் அறிஞர்களாவர். தனது 5 வது வயதில் கல்வி கற்க ஆரம்பித்த ஆறுமுக நாவலர் நல்லூர் சுப்பரமணிய உபாத்தியாரிடம் நீதி நூல்களையும் தமிழையும் கற்றார். தனது 9 வது  வயதில் தந்தையை இழந்த ஆறுமுக நாவலர் சரவணமுத்து புலவர் மற்றும் சேனாதிராசா முதலியார் ஆகியோரிடம் உயர்கல்வியை கற்றார். தனது 12 வது வயதிலேயே தமிழ், சமஷ்கிருதம், ஆகிய மொழிகளை கற்று புலமை பெற்றார். தற்போதைய யாழ் மத்திய கல்லூரியான அப்போதைய மெதடிஸ் த ஆங்கிலப்பாடசாலையில் கல்வி கற்று ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றார். இந்நிலையில் தனது 20 வது வயதில் பாடசாலையில் ஆசிரியராகவும் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து சைவ தமிழ் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவ சமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காக பணிபுரிய தொடங்கிய ஆறுமுகநாவலர் சைவ சமய வளர்;ச்சிக்காக பிரசங்கங்களை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து சைவப்பிள்ளைகளுக்கு பாடநூல்களை அச்சிடும் நடவடிக்கையை கடந்த 1849  ம் ஆண்டு ஆரம்பித்தார். இதனிடையே சென்னைக்கு சென்ற அவர் திருவாவடு துறை எனும் ஊரில் அவரின் சைவ புலமையை பாராட்டி அவருக்கு நாவலர் எனும் பட்டத்தை பெற்றார். பின்னர் சைவ சமய நூல்களை பதிப்பிடும் நடவடிக்கையில் ஈடுபட்ட அவர் தனது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திர சாலை எனும் பெயரில் ஓர் அச்சகத்தை நிறுவி பாலபாடம், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், சைவ சமயசாரம், கொலைமறுத்தல், நன்னூல் விருத்தியுரை திருச்சந்தினிரோட்டக யமஹவந்தாதி  உரை, திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களை அச்சிட்டார். மேலும் திருத்தொண்டர் பெரிய புராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். இலங்கையில் மாத்திரமின்றி தமிழ் நாட்டிலும் இவரது பணி தொடர்ந்தது. சைவ சமயத்திற்கும் தமிழ் மொழிக்கும் உலகளாவிய ரீதியில் பணியாற்றியவர் பெருமைக்குரிய ஆறுமுகநாவலர் ஆவார். இதேவேளை 1870ம் ஆண்டு கோப்பாயில் ஒரு வித்தியசாலையை ஆரம்பித்து தனது சொந்த செலவில் நடத்தினார். இதேவேளை கடந்த 1872 ம்  ஆண்டு ஜனவரி மாதம் சைவ சமய பிள்ளைகளுக்காக வண்ணார் பண்ணை சைவ ஆங்கில பாடசாலையொன்றை நிறுவி நடாத்தி வந்தார்.   இதேவேளை கடந்த 1875 ம் ஆண்டுக்கும் 1878 ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தமிழ் அகராதி, தமிழ் சமஷ்கிருத அகராதி, தமிழ் ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவ பிரசங்கங்களை செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார். இவ்வாறு சமூதாயத்தின் மேம்பாட்டுக்காக பல பணிகளை மேற்கொண்ட ஆறுமுகநாவலர் கடந்த 1879 ம் ஆண்டு சுகயீனமுற்றநிலையில் அதே ஆண்டில் டிசம்பர் மாதம் 5 ம் திகதி தனது 56 வது வயதில் இறையடி சேர்ந்தார். அவரது குருப+ஷை தினம் கார்த்திகை மகமாகும். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் சைவ சமயத்தின் மறுமலர்ச்சிக்காகவும் பாடுபட்ட ஆறுமுகநாவலர் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத மகான்களில் ஒருவர்….. பிரசன்னா 


No comments:

Post a Comment

hi