ஊனமுற்றவர் தினம்…..03.12.2012
இந்த வையகம் இயங்க ஆரம்பித்த நாள் முதல் மனிதன் என்பவன் தனக்குள்ள திறமையை பயன்படுத்தி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உலகை ஆச்சரியப்பட வைத்துள்ளான். இந்த சாதனைகள் அனைத்தும் முழுமையான ஒரு மனிதனால் மாத்திரம் எட்டப்படவில்லை. ஒவ்வொரு சாதரன படைத்த மனிதனும் தனக்குள் ஏதாவதொரு குறைபாடுடையவனாகவே அடையாளம் காணப்பட்டுள்ளான். அவர்கள் தங்களுக்குள் இருக்கும் ஊனத்தை கவனத்தில் கொள்ளாமல் தங்களுக்குள்ள தன்நம்பிக்கையும் திறமைiயும் வெளிப்படுத்த பழககொண்டனர். அப்படியானவர்கள் தான் இன்று உலகில் சாதனையாளர்களாக இடம் பிடித்துள்ளனர். எனினும் காலப்போக்கில் ஊனம் என்பது பிரித்து பார்க்கப்பட்ட நிலையில் ஊனமுற்றோர் பல அசௌகரியங்களை சந்தித்தனர். இதனை நிவர்த்தி செய்வதற்கு உலகளாவிய ரீதியில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கமைய ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ம் திகதி உலக மாற்று திறனாளிகள் அனுஸ்டிக்கப்படுகிறது. கடந்த 1981 ம் ஆண்டு உலக மாற்று திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 1982 ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ம் திகதியே உலக மாற்று திறனாளிகள் நாளாக அனுஷ்டிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது. உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் குறித்த நாள் கொண்டாடப்படுகிறது. ஊனமுற்றோரின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் அனைத்து மக்களும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குரிய இடத்தையும் உரிமைகளையும் வழங்குவதில் யாரும் பின்னிற்க கூடாது என்ற கருத்தினை மக்கள் மத்தியில் உருவாக்குவதே இத்தினத்தின் பிரதான நோக்கமாகும். ஊனமுற்றோர் நோயாளிகளாக அல்லாமல் சமுதாயத்தில் நம்பிக்கைகுரிய பிரஜைகள் என்ற அடிப்படையில் நோக்கபடுவதிலும் இவர்களும் மனிதாபிமான சிந்தனை மிக்கவர்களே என்பதை மையமாக கொண்டு உலகம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலகில் மக்கள் தொகையில் 10 வீதமானோர் அதாவது 65 கோடி மக்கள் ஊனமுற்றவர்களென உலக சுகாதார நிறுவக புள்ளி விபரங்கள் தெரிவித்தன. இவர்களில் 80 வீதத்தினர் மூன்றாம் உலகநாடுகளில் வாழ்கின்றனர். இதேவேளை அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலுள்ள ஊனமுற்ற சிறுவர்களில் 90 வீதத்தினர் பாடசாலைக்கு செல்வதில்லையென ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. பல நாடுகள் அரச நிறுவனங்கள் மற்றும் அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் ஊனமுற்றவர்களின் நிலையை உயர்த்துவதற்கு செயல்திட்டங்களை தீட்டி அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிந்துவருகின்றனர். மேலும் சமூதாயத்தில் ஊனமுற்றவர்களின் நிலையை உயர்த்த கருத்தரங்குகள் பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை ஏற்பாடு செய்கின்றனர். ஊனம் என்பது பொதுவான நிலையில் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது இயலாத் தன்மையை இருப்பதையே குறிக்கும் இது உடற்குறைப்பாடு , புலன் குறைபாடு , மூளை வளர்ச்சி குறைப்பாடு, உளவியல் குறைபாடு, பிற நோய்கள் தொடர்பான குறைபாடு என்பவையே ஊனமெனப்படுகிறது. ஊனம் என்பது ஒருவரின் வாழ்க்கை காலத்தில் அல்லது பிறப்பிலேயே ஏற்படலாம். ஊனம் என்பது தனிப்பட்ட ஒருவரோடு மாத்திரம் தொடர்புடையதாக காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட தனிப்பட்டவரை எவ்வாறு சிறப்பாக செயற்பட வைக்கமுடியும் என்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். ஊனமென்பது முயற்சிகளுக்கு தடையாக அமைவதில்லை முயற்சியுடைய பல ஊனமுற்றவர்கள் உலகளாவிய ரீதியில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர். கல்வி, கலை, கலாசாரம் என்ற அடிப்படையில் அவர்களின் சாதனை தொடர்கிறது. மேலும் இன்று ஊனமுற்றவர்கள் விளையாட்டுத்துறையிலும் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்திக் கொண்டு வருகின்றார்கள். அதற்கமைய கடந்த 1960 ம் ஆண்டு முதல் ஊனமுற்றோருக்கான பரா ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஊனம் என்பது ஒரு தடையாக பார்க்காமல் ஊனமுள்ளவர்களையும் திறமை மிக்கவர்களாகவும் மனிதாபிமான நோக்குடன் நோக்குவது எம் ஒவ்வொருவரதும் கடமையாகும். ஊனமுற்றவர்களை சமுதாயத்திலிருந்து வேறுபடுத்தாமல் அவர்களுக்கு நம்பிக்கை தந்து எம்மோடு இணைத்து செயலாற்ற ஊனமுற்றோர் தினத்தில் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு பொழுதும் இது தொடர்பான உணர்வினை நாம் வளர்த்துக்கொள்வோம். உலக மனிவர்களைப் பொறுத்த வரையில் ஏதோ ஒரு வகையில் ஊனம் என்ற ஒன்று காணப்படுகிறது. ஆகயால் மாற்று திறனாளிகளின் மறுமலர்ச்சிக்கு எம் ஒவ்வொருவரது நல்லெண்ணங்களும் சமூக ஒத்துழைப்பும் அவசியம்…............................................................. பிரசன்னா
No comments:
Post a Comment
hi