Saturday, November 3, 2012
இந்திரா காந்தி
இந்திரா காந்தி
இந்திய நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் இவரும் ஒருவர். உலக வரலாற்றில் பெண்களினாலும் ஒரு நாட்டை நிர்வகிக்க முடியுமென்ற நிலையை ஆணித்தனமாக நிரூபித்து இந்திய நாட்டின் முதலாவது பெண் பிரதமராக பதவி வகித்த பெருமைக்குரியவர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. கடந்த 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜவஹர்லால் நேருவிற்கும் கமலா நேருவிற்கும் மகளாக பிறந்தார் இந்திரா காந்தி என அழைக்கப்பட்ட இந்திரா பிரியதர்ஷனி. இவரின் தந்தையான ஜவஹர்லால் நேரு இந்திய நாட்டின் முதல் பிரதமரும் சிறந்த கல்வி மாமேதையும் ஆவார். மேலும் சுதந்திர போராட்டங்களில் காந்தியுடன் இணைந்து செயற்பட்ட ஜவஹர்லால் நேரு மக்களிடம் பெற்ற நன்மதிப்பை அடிப்படையாக வைத்து பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். அதேபோல் தனது தந்தையின் வழியை பின்பற்றி இந்திரா காந்தி அரசியலில் நுழைந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை இந்திரா காந்திக்கும் மகாத்மா காந்திக்கும் எவ்வித இரத்த உறவுகளும் இல்லையென்பதும் அவர் மரியாதை நிமித்தம் காந்தி எனும் பெயரை தன் பெயருக்கு பின்னால் இணைத்துக்கொண்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. கடந்த 1936 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் தாயார் கமலா நேரு உயிரிழந்த பின்னர் இந்திரா காந்தி நிலையானதொரு குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கவில்லை. இந்நிலையில் அவர் தனது இளமைக் காலத்தில் இங்கிலாந்தின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுகொண்டிருந்த காலத்தில் லண்டனை மையமாகக் கொண்ட தீவிர சுதந்திரத்திற்கு ஆதரவான இந்திய குழுவின் உறுப்பினராகவும் செயற்ப்பட்டார். இதனிடையே அவர் கல்விகற்ற காலப்பகுதியில் பிரோசு காந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தனது கல்வியை முடித்துக்கொண்ட அவர் அரசியலில் கால்பதித்தார். அதற்கமைய 1959 ஆம் ஆண்டு மற்றும் 60 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர ;பதவிக்காக போட்டியிட்டு வெற்றிபெற்றார். எனினும் அவர் தனது தந்தையான நேருவின் பிரதிநிதியாகவே பதவியில் நடிக்க வேண்டியிருந்ததை அவருக்கு பெரிதாக ஈடுபாடின்றி காணப்பட்டது. பின்னர் சில காலங்களாக தனது சிறந்த அரசியல் திட்டம் காரணமாக பல அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு அவர் கடந்த 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று இந்திய நாட்டின் முதலாவது பெண் பிரதமராக பதவியேற்றார். அவர் 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி முதல் கடந்த 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை பிரதமர் பதவியில் திகழ்ந்தார். எனினும் கடந்த 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரின் பிழையான அரசியல் நகர்வுகள் மற்றும் அதிகார பகிர்வில் ஏற்ப்பட்ட சிக்கல் நிலை காரணமாக மிகப்பெரிய தோல்வியை தழுவினார். அதன்பின்னர் தனது அயராத உழைப்பினாலும் திடமான நம்பிக்கையினாலும் கடந்த 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதம 14 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்று கடந்த 1984 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்படும் வரை பதவியில் நீடித்தார். ஒரு பிரதம மந்திரியாக அவருக்கு கிடைத்த அனைத்து வளங்களையும் அவதானமாக பயன்படுத்தி தனது பலத்தையும் அதிகாரத்தையும் பலப்படுத்திக் கொண்டார். மேலும் அவருக்கு இருந்த அதிகாரத்தை பயன்படுத்தி வலு குறைந்த அமைச்சரவைகளை அமைத்து;க்கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. மேலும் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பலம்மிக்க மூத்த தலைவர்களை புறந்தள்ளியதன் காரணமாக இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாக பிளவுப்பட்டது. அதன்காரணமாக பிளவுபட்ட கட்சியின் ஒரு பகுதி இந்திரா காங்கிரஸ் எனவும் அழைக்கப்பட்டது. இதனிடையே கடந்த 1971 ஆம் ஆண்டு மேற்கு கிழக்கு பாகிஸ்தான்களுக்கிடையில் ஏற்ப்பட்ட மோதல்களை கவனத்திற்கொண்டு கிழக்கு பாகிஸ்தானின் தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவாக பாகிஸ்தானுடன் போரை நடாத்தி மேற்கு பாகிஸ்தானை தோற்கடித்து பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்படும் பங்களாதேசைப் பிரித்து தனிநாடாக அமைக்க உதவிபுரிந்தார். மேலும் கடந்த 1975 ஆம் ஆண்டு அவசரகால சட்டத்தை அறிவித்த இந்திரா காந்தி அரசியல் சட்டத்தில் தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக்கொண்டார். மேலும் குறித்த விடயமானது எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையென அவர் மீது வழக்கு தொடரப்பட்டு சுமார் 19 மாதங்கள் அவர் வழக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் குறித்த விடயமானது அவரது செல்வாக்கை பாதித்த நிலையில் கடந்த 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தில் படுதோல்வியடைந்தமைக்கு அதுவும் காரணமாக அமைந்தது. இதனிடையே இவரின் பல்வேறு அரசியல் நகர்வுகள் பல மூத்த அரசியல்வாதிகளை மூக்கின் மீது விரல் வைக்கும் அளவிற்கு மெய்சிலிர்க்க வைத்தது. இதேவேளை இவரின் ஆட்சிக்காலத்திலேயே இந்தியா முதலாவது அணுவாயு சோதனையை நடத்தியது. கடந்த 1967 ஆம் ஆண்டு ஒரு தேசி அணுசக்தி திட்டம் தொடங்கப்பட்டது. அது கடந்த 1974 ஆம் ஆண்டு சிரிக்கும் புத்தர் எனும் இரகசிய பெயருடன் இராஜஸ்தானில் நிலத்திற்கடியில் குறித்த அணு சோதனை நடாத்தப்பட்டது. குறித்த அணு சோதனை இந்தியாவை உலகில் இளம் அணுசக்தி அதிகாரமுள்ள நாடாக பிரதிபலித்தது. மேலும் 1960 ஆம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில் இந்திரா காந்தியினால் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சி திட்டம் நிலவி வந்த உணவுப் பற்றாக்குறை நீக்க உதவியது. மேலும் இந்தியாவின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க செய்வதற்கும் அவரின் பசுமைப் புரட்சி; உதவியது. இன்றைய தினமும் குறித்த பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றமை அவரின் சிறந்த அரசியல் முன்னெடுப்புகளுக்கு சான்றாக அமைந்துள்ளது.இந்நிலையில் இந்திரா காந்தி சீக்கிய தீவிரவாதம் வளர்ந்து வந்த காலப்பகுதியில் தீவிரவாதிகளை இல்லாதொழிக்கும் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். இந்நிலையில் இந்தியா பஞ்சாப் மாநிலத்திலுள்ள பொற்கோயிலுக்குள் முகாமிட்டிருந்த தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு இந்திய இராணுவத்திற்கு பொற்கோயிலுக்குள் சென்று தாக்குதல் நடாத்த இந்திரா காந்தி அனுமதி வழங்கினார். குறித்த விடயமானது இந்திரா காந்தி மீது சீக்கியர்கள் சினம்கொள்வதற்கு பிரதான காரணமாக அமைந்தது. மேலும் சீக்கிய தீவிரவாதிகள் மீது இந்திரா காந்தி தொடர்ச்சியாக மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக அவர் மீதான வெறுப்பு சீக்கியர்களுக்கு மேலும் அதிகரித்தது. இந்நிலையில் கடந்த 1984 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி புதடில்லியிலுள்ள தனது தலைமைஅமைச்சர் இல்லத்தில் வைத்து தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் அவர் தனது முதலாவது புதல்வரான சஞ்சய் காந்தியை தனது தேர்ந்தெடுக்கப்படட அரசியல் வாரிசாக வளர்த்து வந்தார். எனினும் அவர் ஒரு விமான விபத்தில் இறந்த பின்னர் விமான ஓட்டியாக கடமையாற்றிய தனது 2 ஆவது மகனான ராஜீவ் காந்தியை அரசியல் வாரிசாக இந்திரா காந்தி அறிமுகப்படுத்தினார். அதற்கமைய இந்திரா காந்தியின் மரணத்தின் பின்னர் ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக பதவியேற்று கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் படுகொலை செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்த்க்கது. மேலும் ராஜீவ் காந்தியின் மனைவியான சோனியா காந்தி தற்போது இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயற்ப்பட்டு வருவதோடு தான் தேர்தலில் வெற்றிபெற்ற போதும் மன்மோகன் சிங்கை பிரதமராக தெரிவு செய்து தனது அரசியல் வாழ்வை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றார். இந்திய வரலாற்றில் முதல் பெண் பிரதமர் என்ற அந்தஸ்தை பெற்று இந்திய வரலாற்றில் சர்வதேச ரீதியில் வல்லமைமிக்க ஒரு நாடாக மாற்றிய பெருமைக்குரியவர். மேலும் இந்திய நாட்டில் பல தலைவர்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் இந்திரா காந்தி இந்திய நாட்டின் இரும்புப் பெண்மணி என்று சொல்லும் அளவிற்கு தனது சீரான ஆட்சியை மேற்கொண்டு உலகளாவிய ரீதியில் அனைவரது மனத்pலும் இடம்பிடித்த தலைவர்களில் ஒருவராவார். .................பிரசன்னா
கியூரியாசிட்டி
கியூரியாசிட்டி 03.11.2012
வேற்றுக்கிரகங்கள் தொடர்பான மனிதனின் ஆராய்ச்சிகள் , மும்முரமாக இடம்பெறும் இக்காலப்பகுதியில், அதனுடன் கூடி தேடல்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் பல்வேறு பட்ட முன்னெடுப்புக்கள் மூலம் வேற்றுக்கிரகங்கள் தொட்பான தங்களது ஆராய்ச்சிகளை பல பரிமாணங்கள் மேற்கொண்டு வருகின்றன. அந்த ஆராய்சச்pயின் விளைவு ப+மியில் வாழும் மனிதனை, வேற்றுக்கிரகங்களில் வாழவேண்டுமென்ற ஆசைக்கு கொண்டு சென்றது. அதற்கிணங்க மனிதனால் சுவாசிக்க கூடிய வகையிலும் அவனுக்கு தேவையான வாழ்வாதர உறுப்புக்கள் கிடைக்கக்கூடிய வகையிலும் அமைந்துள்ள கோள்களை தேடி விஞ்ஞானம் விரைந்துள்ளது. அதன் பயனாக ப+மிக்கு, மிக அருகிலுள்ள மற்றுமொரு கோளான செவ்வாய்க்கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கேற்ற அத்தனை அம்சங்களும் உள்ளதாக அண்மைய ஆராய்ச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனால் செவ்வாயில் வாழவேண்டுமென்ற எண்ணம், மனிதனை உச்சநிலைக்கு கொண்டு சென்றது. இந்நிலையில் செவ்வாயில் மனிதன் வாழக்கூடிய சூழல் உள்ளதா என்பதை ஆராயவும், அங்குள்ள பௌதீக நிலைப்பாடுகளை தெரிந்துகொள்ளும் வகையிலும் நாசா நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட செய்மதி, க்ய+ரியாசிட்டி ஆகும். இதுவரை மனிதானல் விண்ணுக்கு ஏவப்பட்ட விண்கலங்களில், க்ய+ரியாசிட்டி, அதிநவீன தொழில்நுட்ப கருவிகளையும், கெமராக்களையும் சுமந்து சென்றுள்ளது. கடந்த வருடம் , நவம்பர் மாதம் 26 ம் திகதி க்ய+ரியாசிட்டி ரோவர் விண்கலம், விண்ணுக்கு ஏவப்பட்டது. இது 7 மாத பயணத்திற்கு பின்னர், கடந்த ஜீன் மாதம் 6 ம் திகதி செவ்வாய்க்கிரகத்திற் தரையிறங்கி , தனது ஆய்வுப்பணியினை ஆரம்பித்தது. இந்நிலையில் ஆய்வு செய்ய ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரை பல வித்தியாசமான கோணங்களில் செவ்வாய்கிரகத்தின் புகைப்படங்கள் க்ய+ரியாசிட்டியினால் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் செவ்வாயின் தரையை தனது கூர்மையான் ஆயுதங்களால் தோன்டியெத்தும், பாறைகளை பிளந்தும், அது தொடர்பாக தகவல்களையும், புகைப்படங்களையும் க்ய+ரியாசிட்டி, ப+மிக்கு அனுப்பிவைத்துள்ளது. இந்நிலையில் க்ய+ரியாசிட்டி அனுப்பிவைத்துள்ள செவ்வாயின் மண்மாதிரிகள் , ப+மியின் ஜப்பான் நாட்டின் ஹவாய் தீவின் மண்மாதிரிகளை ஒத்ததாக உள்ளதென விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அதன் காரணமாக அங்கு மனித இனமோ, அல்லது உயிரினங்களோ வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் , சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதனிடையே செவ்வாய்ககிரகத்தில் கணிமவளங்கள் காணப்படுவதால் குறித்த கனிய வளங்கள் மீதான பார்வையும் மனிதனுக்கு அதிகரித்துள்ளது. இதேவேளை க்ய+ரியாசிட்டி வெளியிட்ட செவ்வாய்க்கிரகம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கறுப்பு நிற பறக்கும் தட்டு போன்ற ஒரு மர்மப்பொருள் காணப்பட்டது. குறித்த மர்மப்பொருளானது, செவ்வாய்ககிரக வாசிகள், மனிதர்களை வேவு பார்ப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட வேவு கப்பலாக இருக்கலாமெனவும் , சிலவேளை ஏலியன்கள் என சொல்லப்படும் வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும தட்டுக்கலாக இருக்கலாமெனவும், விஞ்ஞானிகள் மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றது. எனினும் சிலர் , குறித்த கறுப்பு நிற மர்மப்பொருளானது, க்ய+ரியாசிட்டியின் புகைப்பட கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரினால் ஏற்பட்ட கருந்துளையென குறிப்பிடுகின்றனர். எவ்வாறெனினும் செவ்வாயின் மண்மாதிரியை ஆய்வுசெய்யும்போது, அங்கு ஹைட்ரிஜன் மற்றும் மக்னீசியத்தின் செறிவு அதிகமாக காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. நாம் வாழும் ப+மியிலிருந்து 57 கோடி தொலைவிலுள்ள செவ்வாய் கிரகமானது, சூரியனிலிருந்து ப+மியை விட தொலைவில் உள்ளதன் காரணமாக சூரிய வெப்ப மிதமான அளவு அங்கு காணப்படுமென விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இதேவேளை செவ்வாய் நிலப்பரப்பிலுள்ள குழிகள் மற்றும் மேட்டு நிலங்கள் என்பன அங்கு, ப+மியில் நடைபெற்றதை போல், மிகப்பெரிய யுத்தங்கள் நடைபெற்றமைக்கான சான்றாக இருக்கலாமென கருதப்படுகிறத. எவ்வாறெனினும் செவ்வாயில் மனிதன் வாழக்கூடியதற்கு ஏற்ற சூழல் காணப்படுவதால், க்ய+ரியாசிட்டியின் மும்முரமான தேடல் மற்றும் நகர்வுகளால், அதனை உறுதிப்படுத்தக்கூடிய செவ்வாய்க்கிரகம் தொடர்பான பல விடயங்கள் ப+மிக்கு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை செவ்வாய்க்கிரகத்தை நோக்கிய ஆராய்ச்சிகளில் மாத்திரமே நாசா விஞ்ஞானிகள் ,இறங்கியிருக்கும் நிலையில் அதற்கு ஒரு படி மேல் சென்று ஹோலண்ட் விஞ்ஞானிகள் இப்போதிலிருந்தே செவ்வாயில் குடியிருப்புக்களை அமைப்பதற்கான திட்டங்களை தீ;ட்டி வருகின்றனர். அதறகமைய எதிர்வரும் 2023 ம் ஆண்டளவில் செவ்வாய்க்கிரகத்திற்கு மனிதர்களை குடியிருப்பதற்காக அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், அதனைத்தொடர்ந்து பலர் குழுக்களாக செவ்வாய்க்கு அனுப்பபட்டு, அங்கு குடியிருப்பதற்கான திட்டவரைபுகளை அமைப்பதில் ஹோலண்ட் விஞ்ஞானிகள் தீவிரமாகவுள்ளனர். இந்நிலையில் உலகில் ,முதன்முறையாக தயாரிக்கப்பட்டு விண்ணுக்கு ஏவப்பட்ட முதலாவது செயற்கைகோள் ஸ்புட்னிக் 1 ஆகும், சோவியத் ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்ட விண்வெளிக்கு செயற்கை கோள்களை அனுப்பும் நடவடிக்கை இன்று செவ்வாயில் மனிதன் வாழ முடியுமா என ஆராய்ந்து வரும் க்ய+ரியாசிட்டி வரை பரிமாணித்துள்ளது. மேலும் கடந்த 1977 ம் ஆண்டு, அண்டவெளியினையும், உலகிலுள்ள ஏனைய சூரிய மண்டலங்களையும் ஆராயும் பொருட்டு அனுப்பப்பட்ட வயேஜர் 1 மற்றும் வயேஜர் 2 ஆகிய விண்கலங்கள் ,சுமார் 33 வருடங்களுக்கு பின்னர், சூரியன் உள்ள பகுதிக்கு சென்றுள்ளது. இந்நிலையில் குறித்த வயேஜர் 1 மற்றும் வயேஜர் 2 ஆகிய விண்கலங்கள் , அண்டவெளியிலுள்ள 23 நிலவுகளை கண்டுபிடித்துள்ளதோடு, பல சூரிய குடும்பங்களையும் கண்டுபிடித்துள்ளது. மேலும் குறித்த விண்கலங்களானது தொடர்ந்தும் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டவாறு பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவை மேலும் 2 லட்சத்து, 96 ஆயிரம் வருடங்களுக்கு சேதமடையாமல் பயணிக்குமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அப்படி குறித்த விண்கலம் பயணிக்கும் பட்சத்தில் அண்டவெளியில் மிகப்பிரகாசமான நட்சத்திரமான சிரியசை அடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனவே எல்லையற்ற அண்டவெளியில் மனிதன் தனது ,செய்மதிகள் மூலமும், விண்கலங்கள் மூலமும் மடிவற்ற ஆராய்ச்சிகளை தொடரும் இக்காலத்தில், க்ய+ரியாசிட்டி மனிதனை செவ்வாயை நோக்கி பயணிக்க வைக்கும் யுகத்திற்கு அழைத்துசெல்லும் படிமுறைக்கு வழிவகுக்கிறது. மனிதனி;ன தொடரும் ஆராய்ச்சிகளால் செவ்வாயில் மாத்திரமின்றி , உலகிலுள்ள இன்னும் எத்தனை கோள்களில் அவன் எதிர்காலத்தில் வாழ முற்படுவான் என்பது இயற்கைக்கும் , அண்டவெளிக்கும் மனிதன் சவாலாகவே அமையும். ..................................................................பிரசன்னா