Monday, December 3, 2012

எய்ட்ஸ் எய்ட்ஸ் (01.12.2012)
20ம் நூற்றாண்டின்  இறுதிக்காலப்பகுதியிலிருந்து,  இன்று வரை உலகை ஆட்டிப்படைக்கும் பயங்கர ஆட்கொல்லி இது. உலக மனிதர்கள் மத்தியில் பலவிதமான நோய்கள் வந்து மறைந்திருந்தாலும் இந்த நோய் வந்து மனிதன் மறையும் வரை உடலில் ஒட்டியிருக்கும். மனித வரலாற்றில் இதுவரை தீர்வு காணமுடியாத நோயாக உருவெடுத்திருப்பது எச் ஐ வி என அழைக்கப்படும் எய்ட்ஸ் நோயாகும்.  பல மில்லியன் உயிர்களை காவுகொண்டுள்ள இந்த கொடிய நோயைப்பற்றிய முழுமையான விபரங்களை,  அறிந்திருக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் காலத்தின் தேவையாகும். எச் ஐ வி எனப்படும் மிக நுண்ணிய வைரசினால் குறித்த நோய் உருவாக்கப்படுகிறது. எய்ட்சை உண்டாக்கும்  எச் ஐ   வைரஸ், மனித  உடலின் நிர்ப்பீடண தொகுதியை நேரடியாக தாக்குகிறது. அதன் காரணமாக மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாக குறைந்து, பிற்காலத்தில்  பலவிதமான நோய்களுக்கு மனிதன் உட்பட்டு,  இறக்க நேரிடும். ஒருவர் பலருடன் உடலுறவு கொள்ளுதல், பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளுதல், போன்றவை எய்ட்ஸ் நோய் உருவாகுவதற்கு பிரதான காரணமாகும். எனினும் வைத்திய நிறுவனங்களில் பாதுகாப்பற்ற சிகிச்சை முறை, போன்றவையும் எய்ட்ஸ் நோய் தொற்றுவதற்கு காரணமாக அமைகின்றன. மேலும் எய்ட்ஸ் நோயானது தாயிடமிருந்து,  குழந்தைக்கு பரவும் சந்தர்ப்பமும் அதிகம் நிகழ்ந்திருக்கிறது. கர்ப்ப காலம் , மகப்பேரு காலம் மற்றும் தாய்ப்பாலூட்டும்  காலங்களில் குழந்தைகளுக்கும் எய்ட்ஸ் நோய் தொற்றும் வாய்ப்பு காணப்படுகிறது. எச் ஐ வியானது மனித உடலின் எல்லா திரவங்களிலும் படிந்திருக்கிறது. எனினும் இரத்தம் , விந்து, தாய்ப்பால் மற்றும் பெண்ணுறுப்புக்களில் உருவாகும் திரவங்கள் என்பவற்றினூடாகவே அதிகளவில் பரவுகிறது. இதன்காரணமாகவே பாதுகாப்பற்ற உடலுறவு எய்ட்ஸ் நோயை தோற்றுவிக்கும் முக்கிய காரணியாக மாறுகிறது. ஆனால் எய்ட்ஸ் நோய் தொற்றுக்கு உள்ளானவர்களிடம்  நாம் சாதாரண சமூக பழக்க வழக்கங்களில் ஈடுபவடுவதினூடாகவோ, கை குழுக்குதல் , தொடுதல், கட்டியணைத்தல், விளையாடுதல் ஆகியவற்றினூடாகவோ ,வியர்வை ,  கண்ணீர், சிறுநீர் மற்றும் பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்துதல்,  அவர்கள் பயன்படுத்தும் உணவுப்பாத்திரத்தை பயன்படுத்துதல், தும்மல், இருமல் , அவர்கள் பயன்படுத்தும் ஆடைகள்  மற்றும் முத்தமிடுதல் ஆகியவற்றினூடாகவும் பரவுவதில்லை. எச் ஐ வி நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களிடம் பலருக்கு அதன் ஆரம்பநிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிவதில்லை. எனினும் சிலருக்கு புளு காய்ச்சல் எனப்படும் அறிகுறி எச் ஐ வி நோய்த்தொற்றுக்கு உள்ளாகி 3 அல்லது 4 வாரங்களில் தெரியவரும்.  இந்நிலையில்  எச் ஐ வி நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களில் குழந்தைகளுக்கு இரண்டு வருடங்களில் அதன் நோய் அறிகுறிகள் தென்படும். எனினும் வயது வந்தவர்களுக்கு சுமார் 10 வருடங்களுக்கு பின்னரே அதன் நோய் அறிகுறிகள் வெளிப்படும்.  உடல்நலக்குறைவு , காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு, இரவு நேரங்களில் வியர்வை, நடுக்கம்,  வயிற்றுப்போக்கு, வாந்தி,  நெரிக்கட்டுதல்,  போன்ற அறிகுறிகள் வெளிப்படும்.  ஆரம்பநிலையில் எச் ஐ வி தொற்றை கண்டுபிடிப்பது கடினமான விடயமாகும். உடலின் நோய் எதிர்ப்பு கலங்கலான வெண்குருதி சிறுதுணிக்கைகளை எச் ஐ  வைரஸ் முற்றாக அழித்து, உடலிலுள்ள ஏனைய தொகுதிகளையும் ஊடுறுவிய பின்னர், எய்ட்ஸ் நோய்க்கான அறிகுறிகள் வெளிப்படும். உடல் எடை குறைவு, தொடர்ச்சியான காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியன , எச் ஐ வியின் மிக முக்கிய அறிகுறிகளாகும். இவ்வாறு மனிதனை அணு அணுவாக கொல்லும் எய்ட்ஸ் நோய், முதன்முதலில் கடந்த 1981 ம் ஆண்டு,  கண்டுபிடிக்கப்பட்டது.  அமெரிக்காவை சேர்ந்த நபரொருவரே முதலாவது எய்ட்ஸ் நோயாளியாக கண்டுபிடிக்கப்பட்டார். குறித்த நோயாளி கண்டுபிடிக்கப்பட்டு, 7 வருடங்களுக்குள் அதாவது கடந்த 1988 ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ம் திகதிவரை ஒரு லட்சத்து, 19 ஆயிரத்து 818 பேர் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். எனினும் குறித்த நோயை உருவாக்கும் வைரஸ்   கடந்த 1983 ம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தபோதிலும் கடந்த 1986 ம் ஆண்டே  குறித்த வைரஸ் எச் ஐ வி என அடையாளம் காணப்பட்டு, பெயரிடப்பட்டது.  அதற்கமைவாக எய்ட்ஸ் தினம் பற்றிய எண்ணக்கரு முதன்முதலாக கடந்த 1988 ம் ஆண்டில் நடைபெற்ற எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. குறித்த மாநாட்டிலேயே எய்ட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படவேண்டுமென தீர்மானம் எட்டப்பட்டது. அதற்கமைவாகவே ஒவ்வொரு டிசெம்பர் மாதம் முதலாம் திகதி, எய்ட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படவேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், டிசெம்பர் மாதம் முதலாம் திகதி  எய்ட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது,  ஒவ்வொரு நாட்டு அரசுகளும், தன்னார்வ தொண்டர் நிறுவனங்களும் இந்நாளை ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. எய்ட்ஸ் மேலும் பரவாமல் தடுக்குவும், அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களை குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும். இந்நிலையில் கடந்த 1996 ம் ஆண்டு, எய்ட்சுக்காக கூட்டு ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி ,  செயல்பாட்டிற்கு வந்தது. இதுவே,  உலக எய்ட்ஸ் தினத்திற்கான திட்டம் மற்றும் ஊக்குவிப்பை செய்தது.  அதனைத்தொடர்ந்தே கல்வியினூடாக எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு கருப்பொருளின்கீழ், உலக எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 1988 ம் ஆண்டு முதல் ,2004 ம் ஆண்டு வரை எய்ட்ஸ் தினம் ஐக்கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் நிறுவனத்தால், நேரடியாக மேற்கொள்ளப்பட்டுவந்தது. எனினும் கடந்த 2005 ம் ஆண்டு முதல் இதன் பொறுப்பு உலக எய்ட்ஸ் பிரச்சாரம் எனும் அமைப்பிடம் , ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்முறை பூச்சியமாக்குதல் எனும் தொனிப்பொருளில் சர்வதேச எய்ட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. எய்ட்சுக்கான குறியுPடாக சிவப்பு நிற நாடா பயன்படுத்தப்படுகிறது. உலகில் அதிகளவான எய்ட்ஸ் நோயாளர்களை கொண்ட நாடாக, தென்னாபிரிக்கா காணப்படுகிறது.  அங்கு அதிகளவாக பெண்களே எச் ஐ வீ தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். தென்னாபிரிக்காவை தொடர்ந்து, நைஜீரியா மற்றும்  இந்தியா ஆகிய நாடுகள் எச் ஐ வீ நோயாளர்களை அதிகம் கொண்ட நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கடந்த 2006 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி , 3லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள், எச் ஐ வி தொற்றினால் உயிரிழந்திருந்தனர்.  39.5 மில்லியன் மக்கள் எச் ஐ வீ நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியது. இதேவேளை இலங்கையிலும் எய்ட்ஸ் நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்கள் காணப்படுகின்றனர். இவ்வருடம் மாத்திரம் எய்ட்ஸ் நோயினால் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரத்து 597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலகளாவிய ரீதியில் தற்போது, எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வுகள் அதிகரித்துள்ளதாகவும், ஆரம்பகாலத்தை விட தற்போது அதன் தொற்று குறைவடைந்து வருவதாகவும், சுட்டிக்காட்டப்பட்டாலும்,   எச் ஐ வீ நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களின் வீதம் , அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.  இதுவரை எச் ஐ வீ யினை முற்றாக குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கப்படாவிடினும், அதன் தாக்கத்தை குறைப்பதற்கு மனிதனால் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பாவனையிலும் உள்ளது. குணப்படுத்தவே முடியாது என மனிதக்கடவுள்களான விஞ்ஞானிகளாலும்,  வைத்தியர்களாலும் கைவிடப்பட்ட குறித்த நோயிலிருந்து இனிவரும் சமுதாயம் தங்களை பாதுகாத்துக்கொள்வது அவசியமாகும். ஒருவனுக்கு ஒருத்தி எனும் எமது பண்பாடு எய்ட்ஸ் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியுமென்பதை வலியுறுத்தி நிற்கிறது.  ஆசைக்கு அடிமைப்பட்டு ஆபத்தை விலைகொடுத்து வாங்குவதை மனிதகுலம் நிறுத்த வேண்டும். எச் ஐ வீ எனும் கொடூர அரக்கனின் பிடியிலிருந்து, இந்த உலகம் , விரைவில் விடைபெறவேண்டும்.  அதற்கு ஆறரிவு கொண்ட மனிதஇனம் நாம் குறித்த நோய் தொடர்பான விழிப்புணர்வை தங்களுக்குள்ளும், பிறருக்கும் ஏற்படுத்தி தொற்றுநோயற்ற சமுதாயத்தை உருவாக்க முன்வரவேண்டும். ஆபத்தான ஆசையை எறிப்போம். எய்ட்சை பூச்சியமாக்குவோம்......................................... பிரசன்னா 

யுனெஸ்கோ


 யுனெஸ்கோ
க்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனங்களில் ஒன்றான யுனெஸ்கோ நிறுவனம் 1945 ம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ம் திகதி உருவாக்கப்பட்டது. அதன் உறுப்பு நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்பாடல் துறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே யுனஸ்கோ நிறுவனத்தின் பிரதான பணியாகும். இதன் மூலம் உலகின் இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் சம நீதி என்பதை உறுதிப்படுத்துவதே இவ்வமைப்பின் நோக்கமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் அதிகார பத்திரத்தில் அடங்கியுள்ள விதிகளின் அடிப்படையில் யுனஸ்கோவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. கல்வி, இயற்கை அறிவியல், சமூக மற்றும் மனித அறிவியல், பண்பாடு, செய்தி தொடர்பு போன்ற 5 விடயங்கள் மூலம் யுனெஸ்கோ அமைப்பின் நோக்கங்கள் நிறைவேற்றப்படுகின்றன.  இந்நிலையில் உலகில் இடம்பெற்ற பல்வேறு பிரச்சினைகளில் தலையிட்டு அதற்கான  தீர்வைப்பெற்றுக்கொடுப்பதில் யுனஸ்கோ பாரிய பங்கு வகித்தது. 1950 முதல் 1908 ம் ஆண்டு வரை இன வெறிக்கெதிராக யுனெஸ்கோ பாடுபட்டது. இதன்போது 1956 ல் ஆபிரிக்க குடியரசு தமது நாட்டின் இனப்பிரச்சினையில் யுனெஸ்கோ தலையிடுவதாக கூறி அதன் உறுப்புரிமையிலிருந்து விலகி கொண்டது. அதன் பின்னர்; நெல்சன் மண்டேலா தலைமையில் மீண்டும் யுனெஸ்கோவுடன் இணைந்தது. 1968 ம் ஆண்டு யுனெஸ்கோ மாநாட்டின் விளைவால் “ மனிதன் மற்றும் உயிர்கோள திட்டம்” உருவானது. 1989 ல் உலகளாவிய வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. யுனெஸ்கோ தனது நடவடிக்கைகளை அதன் 5 நிரல்கள் மூலமாக தனது செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. சமூக அக்கறையுள்ள நிகழ்வுகள் தினங்கள் என்பவற்றை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்ட யுனெஸ்கோ திட்டங்களை வகுப்பதற்கான நிதியுதவிகளையும் பெற்றுக்கொடுத்தது. 323 சர்வதேச அரச சாரா நிறுவனங்களுடன் குறித்த அமைப்பு உத்தியோகப+ர்வ உறவுகளைக்கொண்டது. அனைவருக்கும் தரம் வாய்ந்த கல்வி, வாழ் நாள் முழுவதும் கல்வி, செய்தி தொடர்பு மூலம் அறிவார்ந்த சமூகத்தை ஏற்படுத்தல் என்பவற்றிற்கு யுனெஸ்கோ முன்னுரிமை வழங்கியது. ஜெனிவாவில் யுனெஸ்கோ சர்வதேச கல்வி பணியகம் நிறுவப்பட்டுள்ளது. அதில் கல்விசார் கருத்துக்கள், முறைகள் மற்றும் கட்டமைப்புக்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் யுனெஸ்கோ கூட்டு மற்றும் தேசிய அலுவலகங்களுக்கு பிரத்தியேகமாக ஆதரவளித்தது. அதன் நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் பிரத்தியேகமான துறைகளை யுனஸ்கோ அமைப்பின் நிறுவனங்களாகும். யுனெஸ்கோ தபால் தலைகளை பலநாடுகள் வெளியிட்டுள்ளன. குறித்த அமைப்பின் முத்திரையில் அதன் தலைமை அலுவலக அமைப்பும் ஒரே பொருளை அடிப்படையாக கொண்டுள்ளன. 1955 ல் ஐக்கிய நாடுகளின் அஞ்சல் நிர்வாகம் யுனெஸ்கோவை பெருமைப்படுத்த அஞ்சல் தலைகளை வெளியிட்டது. குறித்த தபால் தலைகள் பல்வேறு நாடுகளின் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டன. இதேவேளை 193 உறுப்பு நாடுகளையும் 7 பங்கு பற்று உறுப்பினர்களையும் கொண்;ட யுனெஸ்கோ அமைப்பு களப்பணி அலுவலகங்கள் மூலமாக செயற்படுகிறது. வரலாற்று திட்டங்களை உயர்த்துதல், உலக பண்பாடு மற்றும் இயற்கை மரபுரிமை ஆகியவற்றை பாதுகாப்பதற்கு உலகளாவிய ஒத்துழைப்புக்களை பெறுவதே யுனஸ்கோவின் திட்டமாகும். இது உலக நாடுகளின் முன்னேற்ற குழுவின் ஓர் அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது............................................................................................பிரசன்னா 

கலைவாணர் என்.எஸ்.கிருஸ்ணன்


கலைவாணர் என்.எஸ்.கிருஸ்ணன். 29.11.2012

மிழ் சினிமா துறையில் பல கலைஞர்கள் உருவாகி சாதித்து மறைந்திருந்தாலும் எம் ஞெ;சில் நீங்காத இடத்தை பிடித்த சிலரே உள்ளனர். அவர்களில் தங்களின் தனித்துவத்தைப் பேணிய கலைஞர்களே இன்றும் பேசப்படுகின்றனர். இந்திய தமிழ் திரையுலகில் உதித்த நகைச்சுவையாளர்களில் தனது தனித்தன்மை வெளிப்பாட்டினால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்களில் இவரும் ஒருவர். இவர்  அனைவராலும் கலைவாணர் என அழைக்கப்பட்டார். நகைச்சுவையில் சமூக கருத்துக்களையும் மக்களை விழிப்படைய செய்யும் சிந்தனைகளையும் உட்படுத்தி ரசிகர்களையும் சிரிக்கவைத்தவர் பழம் பெரும் நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஸ்ணன் ஆவார். இவர் கடந்த 1908 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இந்தியாவின் நாகர் கோவில் எனும் ஊரில் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணன் சிறுவயதிலேயே நாடககொட்டகைகளில் குளிர்பானம் விற்கும் பையனாக தொழில்புரிந்து வந்தார். பின்னர் சாதாரண வில்லுப்பாட்டு கலைஞராக தன்னை கலையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து நாடகத்துறையில் நுழைந்த அவர் சொந்த நாடக கம்பனியை நடத்தும் அளவிற்கு தன்னை வளர்த்துக்கொண்டார். அதே காலப்பகுதியில் தமிழ் திரைப்படத்துறை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்பட்டது. இந்நிலையில் திரையுலகில் நுழைந்த என்.எஸ்.கிருஷ்ணன் நகைச்சுவை பாத்திரத்தை தெரிவு செய்து அதில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி தன்னையொரு சிறந்த முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்த்து திரையுலகில் நிலையான இடத்தினை பெற்றார். இவர் நடித்த முதலாவது திரைப்படம் கடந்த 1936 ஆம் ஆண்டு வெளிவந்த சதீலீலாவதி எனும் திரைப்படமாகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும் திரைப்படத்திலும் பயன்படுத்துவதை வளக்கமாக கொண்டிருந்தார். அவர் யார் மனதையும் புண்படுத்தாமல் தனது நகைச்சுவை மூலமாக சமுதாயத்திற் கருத்துக்களை பரப்பினார். இவரது மனைவி மதுரம் என்பவரும் பிரபல நடிகை என்பதன் காரணத்தினால் இவர்கள் இருவரும் இணைந்தே பல திரைப்படங்களில் நத்திருந்தனர். இதேவேளை நகைச்சவைகளை சினிமா காட்சிகளா மாத்திரமன்றி பாடல்களாகவும் அமைக்க முடியுமென நிரூபித்தவர் கலைவானன் என்.எஸ்.கிருஷ்ணன் ஆவார். ஒரு நடிகனாக மாத்திரமன்றி சிறந்த சமுதாய விழிப்புணர்வு கருத்தக்களை கொண்ட மனிதனாகவும் ஒரு பாடகராகவும் படைப்பாளியாகவும் பன்முகத்திறமைகளை தனக்குள் கொண்டவர் ஆவார். பழங்கால கலைகளில் பண்பினை வீணடிக்காமல் அவற்றை புதமைப்படுத்தி மக்களுக்கு ஏற்ற விதத்தில் தந்தவர் கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணன் அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டுமென அக்கறை மற்றும் ஆர்வம் கொண்ட அவர் தான் நடித்த ஏரத்தாள 150 திரைப்படங்களுக்குமே தனது சீர்த்திருத்த கருத்துக்களை தைரியமாக திரையில் எடுத்துச் சொன்னவர் ஆவார். திரையுலகில் சமுதாய சீர்த்திருத்த கருத்துக்களை வாரி வழங்கிய இவர் தனது சொந்த வாழ்க்கையில் ஏனையவர்களுக்கு உதவிகளை வாரி வழங்குவதிலும் வல்லலாகவே காணப்பட்டார். காந்தியடிகள் மீது அதிக பற்றுக்கொண்ட என்.எஸ்.கிருஷ்ணன் தனது சொந்த செலவில் அவருக்கு நினைவுத் தூபியையும் எழுப்பியுள்ளமை அவரது தேசப்பற்றினை எடுத்துக்காட்டியது. இதேவேளை இவ்வாறான கலையுலக வாழ்வை ரசனையுடன் வாழ்ந்த என்.எஸ்.கிருஷ்ணன் அவ்வப்போது சில பிரச்சினைகளிலும் சிக்குண்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இவரது வாழ்க்கையில் இவர் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டமை இவரது கலைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.  30 மாத சிறைவாழ்க்கையின் பின்னர் விடுதலை பெற்ற கலைவானன் என்.எஸ்.கிருஷ்ணன் மீண்டும் தனது திரையுலக வாழ்வை ஆரம்பித்து திரையுலகில் தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டார். அவர் நடித்த அம்பிகாபதி, மதுரை வீரன், நல்லதம்பி ஆகிய திரைப்படங்கள் அவருக்கு பெரும் புகழை பெற்றுக்கொடுத்தது. மேலும் ஒரு இயக்குனராக அவர் பணம் மற்றும் மணமகள் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமுதாய கருத்துக்களை நகைச்சுவையின் ஊடாகவும் திரைப்பட பாடல்கள் ஊடாகவும் இவர் வெளிப்படுத்தும் பாணியை தற்போதைய தமிழ் திரையுலக நகைச்சுவை நடிகரான விவேக் பின்பற்றி வருவதன் காரணமாக அவருக்கு சின்னக்கலைவானன் எனும் பட்டமும் வழங்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. தமிழ் திரையுலக வரலாற்றை பொறுத்தவரை நகைச்சுவையில்  புதிய பரிமாணத்தை புகுத்தி தமிழ் திரையுலகில் அனைவரும் எதிர்பார்க்கும் அளவிற்கு தனது பாத்திரத்தாலும் நடிப்பினாலும் கொண்டுச் சென்ற கலைவாணன் என்.எஸ்.கிருஷ்ணன் சுகயீனமுற்ற நிலையில் கடந்த 1957 ஆம் ஆண்டு ஓகஸ்;ட் மாதம் 30 ஆம் திகதி தனது 49 ஆவது வயதில் உயிரிழந்தார். அவரை கௌரவப்படுத்தும் முகமாக தமிழ் நாடு அரசு சென்னையிலுள்ள அரச அரங்கத்திற்கு கலைவானர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது. மேலும் குறுகிய காலமே திரையுலகை ஆட்சி செய்திருந்தாலும் தான் திரையுலகில் வாழ்ந்த காலம் பொற்காலம் என நிரூபிக்கும் அளவிற்கு தன்னை நிலைநிறுத்தி தமிழ் திரையுலக வரலாற்றில் தனக்கும் ஒரு பங்குண்டு என்பதை நிரூபித்துச் சென்று கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணன் கலையுலகில் முத்தான சொத்துக்களில் ஒருவர் ....................................................................................................................................பிரசன்னா 

புரூஸ்லீ


புரூஸ்லீ………………..
ஹொலிவுட் திரைப்படங்களில் ஏவுகணைகளையும் ஏகே 47 துப்பாக்கிகளையும் பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்களின் ரசனையை மாற்றிய வீரர் இவர். கைகளையும் கால்களையும் பயன்படுத்தி  உலகை வெல்ல முடியுமென உணர்த்தியவர் இவர். சீனாவின் தற்காப்பு கலையை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்ற பெருமைக்குரிய தற்பாதுகாப்பு கலை நிபுணர். இவர்  குன்ப+ கலையின் பிதா மகன் எனவும் அழைக்கப்படுகிறார். 6 படங்களில் மாத்திரம் நடித்திருந்தாலும் உலகின் மூலை முடுக்கெங்குமுள்ள ஒவ்வொரு திரை உலக ரசிகனையும் தனது அற்புத கலை நுட்பத்தால் தன்பால் ஈர்த்த ஹொலிவுட் நடிகர் புரூஸ்லி இவர் கடந்த 1940 ம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ம் திகதி அமெரிக்காவின் ஜோன் ப்ரான்சிஸ்கோவின் சைனா டவுன் எனும் பகுதியிலுள்ள மருத்துவ மனையொன்றில் புரூஸ்லி பிறந்தார். இவரது தந்தையான லீ ஹோய் சுவேன் ஒரு நடிகர் ஆவர். இவரது தயாரின் பெயர் க்ரேஸ் என்பதாகும். புரூஸ்லிக்கு அவரது பெற்றோர்கள் சீன மொழியில் உலக பாதுகாவலர் என பொருள் படும் லீ ஜூன்பேன் எனும் பெயரை சூட்டினர். எனினும் புரூஸ்லி  பிறந்த வைத்தியசாலையில் அவருக்கு மருத்துவம் செய்த தாதி என அவரை புரூஸ் என செல்லமாக  அழைக்க அதுவே இவரது பெயராக பிற்காலத்தில் நிலைபெற்றது. புரூஸ்லி பிறந்து 3 மாதமாகும் போது அவரது  குடும்பம் சீனாவின் ஹொங்கொங்கிற்கு வருகை தந்தது. இந்நிலையில் தனது 12 வது வயதுவரை ஹொங்கொங்கிலுள்ள லோஷல் கல்லூரியில் கல்வி பயின்ற புரூஸ்லி பின்னர் ப்ரான்சிஸ் சேவியர் கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த 1959 ம் ஆண்டு  தனது 18 வது வயதில் ஹொங்ஹோங்கில் ஒரு நபரை புரூஸ்லி தாக்க அதனை அறிந்து கொண்ட அவனது பெற்றோர் அவரைப் பாதுகாப்பதற்காக புரூஸ்லியை ஜோன் ப்ரான்சிஸ்கோவிற்கு அனுப்பி வைத்தனர். குறித்த நபரை புரூஸ்லி தாக்கிய போது அவர் பயன்படுத்திய தற்காப்பு கலை பரவலாக  பேசப்பட்டது. பின்னர் சென் ப்ரான்ஸிஸ்கோவில் தனது படிப்பை தொடர்ந்தார் புரூஸ்லி. அவரது தந்தை ஒரு நடிகர் என்பதால் சிறுவயதிலிருந்தே அவ்வப்போது திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களை ஏற்று புரூஸ்லி நடித்துள்ளார். மேலும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் புரூஸ்லி நடித்தார். அதற்கமைய திரை உலக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பார்வை புரூஸ்லி மீது விழுந்தது. அதனைத் தொடர்ந்து கோல்டன் ஹோவஸ்ட் எனும் நிறுவனம் கடந்த 1971 ம் ஆண்டு தயாரித்த பிக் போஸ் எனும் திரைப்படத்தில் புரூஸ்லி முதன் முதல் கதா நாயகனாக நடித்தார். எனினும் அதற்கு முன்பே மர்லோ எனும் திரைப்படத்தில் முக்கிய கதா பாத்திரமொன்றில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் முதல் கதாநாயகனாக நடித்த த பிக் போஸ்  திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே புரூஸ்லி ஹொங்கொங் முழுவதும் பிரபலமாக அறியப்பட்டிருந்தார். இவர் பொக்சின் மற்றும் ஏனைய தற்காப்பு கலைகளில் காட்டிய திறமையின் காரணமாக இவர் பரவலாக  அறியப்பட்ட நிலையில் பிக்போஸ் திரைப்படம் வெளிவந்தது. அதற்கமைய திரைப்படமானது ஆசியாவில் 12 மில்லியன் டொலர்களை வசூலித்து மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இவரின் அதி வேக சண்டை காட்சிகள் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 1972 ம் ஆண்டு வெளிவந்த பிஸ்ட் ஒப் பிவுரி திரைப்படம் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலித்து மிகப் பெரிய வெற்றியடைந்தது. அதே ஆண்டில் புரூஸ்லி கதை எழுதி இயக்கிய வே ரூ த ட்ராகன் திரைப்படம் புரூஸ்லியின் புகழை உலகளவில் கொண்டு சென்றதோடு அவருடன் சேர்;ந்து குங்ப+ கலையும் பிரபல்யமடைந்தது. இக்கால கட்டத்தில் புரூஸ்லியின் குங்ப+ கலை ஹொலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக்கொடுத்த புரூஸ்லி இளைஞர்களின் ஆதர்ஸ நாயகனாக உருவெடுத்தார். புரூஸ்லி சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் எதிரியை தாக்கும் வேகத்திற்கு அன்றைய தொழிநுட்பத்தால் கூட ஈடுகொடுக்க முடியவில்லை. மேலும் தனது உடம்பை எவ்வாறு பேணுவது என்று உலகுக்கு கற்றுக்கொடுத்த ஆசானும் இவராவார். இவ்வாறு குங்ப+ கலையை வளர்ப்பதில் அதிக நாட்டம் செலுத்திய புரூஸ்லி குங்ப+ கலைக்குள் பல வித்தியாசமான முறைகளை உலகிற்கு வெளிப்படுத்தினார். அதற்கமைய அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புரூஸ்லி உருவாக்கிய என்டர் த ட்ராகன் திரைப்படம் ஹொலிவுட்டை மாத்திரமின்றி உலகையே ஆட்கொண்டது. குறித்த திரைப்படமானது அன்றைய காலப்பகுதியில் அமெரிக்காவில் மாத்திரம் 8 இலட்சத்து 50 ஆயிரம் டொலர்களை வசூலித்தது. உலகம் முழுவதும் 200 மில்லியன் டொலர்களை வசூலித்து வெற்றி நடைபோட்ட என்ர த ட்ராகன் திரைப்படம் புரூஸ்லியை தற்காப்பு கலையின் முடிசூடா மன்னன் ஆக்கியது.  ஆனால் குறித்த திரைப்படத்தின் வெற்றியை புரூஸ்லியால் பார்க்க முடியவில்லை என் ட ட்ராகன் திரைப்படம் வெளியாவதற்கு 3 வாரங்களுக்கு முன்பே அதாவது கடந்த 1973ம் ஆண்டு ஜூலை மாதம் 20 ம் திகதி புரூஸ்லி தனது 32 வது வயதில் மர்மமான முறையில் மரணத்தை தழுவினார். அன்றிரவு தூக்க மாத்திரையை எடுத்துக்கொண்டு உறங்கிய தற்காப்பு கலையின் நாயகன் பின்னர் கோமா நிலைக்கு சென்று ஹொஹ்கோங்கிலுள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமலையே காலமானார். இன்றுவரை புரூஸ்லியின் மரணம் மர்மமாகவே உள்ளது. புரூஸ்லி என்ற சகாப்தம் சொற்ப காலங்கள் மாத்திரமே திரை உலகை ஆட்சி செய்தாலும் திரை உலகின் போக்கையே மாற்றிச் சென்றார்.  புரூஸ்லியின் அசைவுகளில் செய்து பார்க்காத ரசிகர்களே இல்லைய அன்றைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை ஒவ்வொருவரது வீட்டிலும் புரூஸ்லியின் தற்காப்பு கலை அடையாள புகைப்படங்கள் அவரை நினைவு கூறிக்கொண்டே இருக்கிறது. மேலும் கராத்தே கலையுடன் சில நுணுக்கங்களை சேர்த்து புரூஸ்லி உருவாக்கிய புதிய தற்காப்பு கலை அவரது பெயரிலேயே புரூஸ்லி குங்ப+ என அழைக்கப்பட்டது. இதனை தத்துவ பாடத்துடன் இணைத்து ஜே கே டி எனும் புதிய பயிற்சியை புரூஸ்லி அறிமுகப்படுத்தினார். மேலும் உள்ளொளி தற்காப்பு கலையான ஜூட் குண் டோ வை தோற்று வித்தவரும் இவராவார்.  இதனிடையே ஒரு அங்குல தாக்குதல் என்பதை அறிமுகப்படுத்தி அனைவரையும் வியப்படையச் செய்தார். தாக்கப் போகும் நபருக்கும் இவருக்குமிடையே ஒரு அங்குல இடைவெளி இருந்தாலும் எதிரியை நிலைகுலைய செய்யலாமென கூறியதோடு அதனை நிரூபித்துக் காட்டினார். புரூஸ்லியை தொடர்ந்து இவரைப்போன்ற மாதிரிகள் பலர் உருவாகியிருந்தாலும் புரூஸ்லிக்கு முன்பும் அவருக்கு பின்பும் உண்மையான தற்காப்பு கலை அடைந்த நடிகன் இல்லை. இந்நிலையில் அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹொங்கொங் அரசு அவரது  முழு உருவ வெண்கல சிலையொன்றை நிறுவியுள்ளது. மேலும் டைமஸ் பத்திரிகை நடத்திய கடந்த நூற்றாண்டில் சமூகத்தை பாதித்த சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் புரூஸ்லியும் இணைக்கப்பட்டுள்ளார். என்டர த ட்ராகன், த பிக் போஸ். கேம் ஒப் டெத், பிஸ்ட் ஒப் பிவுரி, வே ஒப் த ட்ராகன் ,உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தற்காப்பு கலை நிபுணராக வளர்ந்ததோடு அனைத்துலக திரையுலக ரசிகர்கள் மனதில் ரோல் மொடலாக வளர்ந்து இன்றும் நினைவுகளோடு வாழும் புரூஸ்லி 20 ம் நூற்றாண்டின் தன்னிகரற்ற தற்பாதுகாப்பு கலை நிபுணர்களில் ஒருவர்.......................பிரசன்னா 

சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா


சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா

ரு நாட்டின் அபிவிருத்தியில் முன்னிலை வகிக்கும் காரணிகளில் கல்வி அறிவு பிரதான பங்குவகிக்கிறது. அதற்கமைய ஒரு நாட்டின் கல்வி நிலையினை வளர்ப்பதற்கு ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் முன்னின்று உழைக்கும் அளவிற்கு கல்வி என்ற ஒன்று முக்கியத்துவம் அடைந்துள்ளது. அந்த வகையில் “கண்ணுடை என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையார் கல்லாதார்” எனும் வல்லுவனின் வாக்குக்கமைய ஒவ்வொரு நாட்டிற்கும் இரண்டு கண்களாகவே பார்க்கப்படுகிறது. ஆசியாவை பொறுத்தவரையில் இலங்கையின் கல்வி அறிவு வீதத்தை அதிகரிப்பதற்கு பாடுபட்;ட தலைவர்களில் இலங்கையின் இலவசக் கல்வியின் தந்தை எனப்போற்றப்படும் சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரா முதன்மை பெற்றுள்ளார். இவரே இலங்கையில் முதன் முதலில் இலவசக் கல்வியினை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவராவார். இவர் கடந்த 1884 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ம் திகதி அம்பலாங்கொடையில் பிறந்தார். கிறிஸ்த்தோபர் வில்லியம் விஜயகோன் கன்னங்கர எனும் சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர தனது ஆரம்பக் கல்வியை அம்பலாங்கொடை வெஸ்லி ஆங்கில உயர் பாடசாலையிலும் பின்னர் காலி ரிச்மன்ட் கல்லூரியிலும் மேற்கொண்டார். பிரித்தானிய ஏகாதிபத்திய நாடுகளில் மிகச் சிறந்த மாணவர்க்குரிய பரிசையும் இவர் பெற்றார். பின்னர் இவர் மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். தொடர்ந்து சட்டத்துறையில் தகுதி பெற்ற அவர் பின்பு காலியில் சட்டத்தரணியாக கடமையாற்றினார். தனது  சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி கடந்த 1919 ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். அவர் அரசியலில் பல நகர்வுகளை மேற்கொண்டு கடந்த 1931 ம் ஆண்டு இலங்கையில் கல்வி அமைச்சரமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அதற்கமைய அன்றிலிருந்து 1946 ம் ஆண்டு வரை இலங்கையின் கல்வி அமைச்சராக செற்பட்டு நாட்டின் கல்வி வளர்ச்சியில் அளப்பெரிய சேவையினை வழங்கியுள்ளார். அவரை இன்றும்  கல்வியின்  தந்தையாக இலங்கையின் கல்வி வளர்ச்சியின் கடவுளாக போற்றுவதற்கும் அவரால் அமுல்படுத்தப்பட்ட முதலாம் தரம் முதல் பல்கலைக்கழகம் வரையான இலவச கல்வி திட்டம் காணப்படுகின்றது. உண்மையிலும் அவர் கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் தாய் மொழியை கல்விய+டாக மொழியாக்குதல் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்றல் மத்திய மகா வித்தியாலயத்தை ஆரம்பித்தல் போன்ற திட்டங்களும் ஒவ்வொரு பிள்ளைக்கும் தமது பெற்றோரின் சமயத்தை கற்பித்தல் குறைந்த வருமானம் உடைய குடும்பங்களை சார்ந்த பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் வழங்குதல் பொதுவான பாடத்திட்டம் தயாரித்தல் பாடசாலைகளுக்கு விளையாட்டு மைதானங்களை அமைத்துக்கொடுத்தல் போன்ற திட்டங்களையும் முன்னெடுத்தார். மேலும் மாணவர்கள் இசை, நடனம், மெய் வல்லுனர் விளையாட்டுக்கள் ஆகியவற்றை கற்க ஆரம்பித்தல், 2 ம் தரம் முதல் ஆங்கிலப் பாடம் கற்பதை கட்டாயமாக்குதல் போன்றவை அவர் கல்வித்துறைக்கு ஆற்றிய சேவைகளில் முக்கியமானவையாகும் இவரது கல்வி தொடர்பான திட்டங்களாக இலங்கையில் கல்வி நிலையில் புதிய திருப்பத்தினை ஏற்படுத்தியது. அன்றைய காலப்பகுதியில் ஆசியாவில் மிக அபிவிருத்தி அடைந்த நாடு எனும் நிலையை இலங்கை அடைந்தது. வெளிநாட்டவரின் ஆதிக்கத்தின் கீழிருந்த ஒரு கட்டமாக இருந்த போதிலும் இலங்கையின் கல்வி நிலையை உயர்த்துவதற்கு தோள் கொடுத்த மகானாவான் கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு எனும் வாக்கியத்தை இலங்கை வாழ் மக்களுக்கு உரித்தாக்கி இறந்தும் வாழ் மகானாவார். தற்போது எங்கோர் மூலையிலுள்ள ஏழையும் கல்வியைப் பெறுவதற்கு வழிசமைத்த சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர இலங்கை கல்வித்துறையில் தன்னிகரற்ற தலைவர் ஆவார். இவ்வாறு இலங்கை மக்களை உலகளாவிய ரீதியில் முன்னிலைப்படுத்த அயராது உழைத்த சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரா கடந்த 1969 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ம் திகதி தனது 75 வது வயதில் உயிர் நீத்தார். இறந்தும் வாழும் சகாப்தம் என்பதையும் தாண்டி இன்று இலங்கையிலுள்ள ஒவ்வொரு மாணவர்களும் சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா என்பரை வணங்கியே கல்விக்குள் நுழைவது அவரை பெருமை சேர்க்கும் விடயமாகும்.அழியா சொத்தான கல்வியைத் தந்த தேசிய கல்வித் தந்தை சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா இலங்கை வரலாற்றில் அழியாத வரலாற்று நாயகன்.................................................................பிரசன்னா 

சேர் பொன்னம்பலம் ராமநாதன்சேர் பொன்னம்பலம் ராமநாதன்…26.11.2012

லங்கை வரலாற்றில் பல அரசியல் தலைவர்கள் உருவாகி சாதித்து இறந்தும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதில் தமிழ் இனத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பல முன்னணி தேசிய தலைவர்களும் எமக்கு வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்துள்ளனர். அந்த வகையில் இலங்கையின் தேசிய தலைவர்களுள் ஒருவரும் சிறந்த அரசியல்வாதியாகவும் வாழ்ந்தவர், சேர். பொன்னம்பலம் ராமநாதன் இவர் கடந்த 1851 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ம் திகதி யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த கேட் முதலியார் அருணாசலம் பொன்னம்பலத்திற்கு இரண்டாவது மகனாக கொழும்பில் பிறந்தார். இவர் குமார சுவாமி முதலியார் மற்றும் இலங்கையின் தேசிய தலைவர்களுள் ஒருவரான சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரருமாவார். இவர் தனது ஆரம்ப  கல்வியை கொழும்பு வேத்தியர் கல்லூரியில் பயின்றார். பின்னர் தனது 13 வது வயதில் பிரசிடன்சி கல்லூரியில் கல்வி கற்பதற்காக இவர் சென்னைக்கு சென்றார். அதனைத் தொடர்ந்து சட்டக் கல்வியை பயின்ற இவர் கடந்த 1873 ம் ஆண்டிலேயே உயர்நீதிமன்ற வழக்கறிஞரானார். பின்னர் சொலிஷ்டர் ஜெனரலாக பதவிவகித்து கடந்த  1906 ம் ஆண்டு தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இதனிடையே கடந்த 1879 ம் ஆண்டு இலங்கையின் சட்ட சபை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சேர் பொன் ராமநாதன் கடந்த 1911 ம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் சட்ட சபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். இந்நிலையில் விக்டோரியா மகா ராணியின் 50 ஆண்டு நிறைவு விழாவுக்கு இலங்கையின் பிரதிநிதியாக செல்வதற்கு சேர் பொன் ராமநாதனே தெரிவுசெய்யப்பட்டார். குறித்த விழாவின் போது அவருக்கு இலங்கையின் முழுமையான தேசியவாதியென பிரித்தானியா அரசு தங்க பதக்கம் வழங்கி கௌரவித்தது. மேலும் கடந்த 1921 ம் ஆண்டு  அவர் பிரித்தானியா அரசினால் சேர் பட்டம் வழங்கி  கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் கொண்ட இவர் இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி நாட்டவர்களின் நலன்களை பாதுகாத்தார். மேலும் அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர்களின் கொடுமையில் சிக்குண்ட சிங்கள தலைவர்களை போராட்டத்தின் மூலம் மீட்டெடுத்து அனைத்தின மக்களும் இன வேறுபாடின்றி அனைவராலும் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். இவர் அரசியல் மூலம் மக்களுக்கு பல நலத்திட்டங்களை மேற்கொண்டு அனைத்தின மக்களின் இதயத்திலும் இடம் பிடித்தார். பின்னர் சமயத் தொண்டுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சேர் பொன் இராமநாதன், இந்துக்களின் கல்வி மேம்பாட்டிற்காக இவர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே இரண்டு பாடசாலைகளை நிறுவியுள்ளார். இவற்றில் உடுவிலில் அமைந்துள்ள ராமநாதன் பெண்கள் கல்லூரி இன்றும் யாழப்பாணத்தின் மிக முக்கிய கல்லூரிகளில் ஒன்றாக விளங்குகின்றது. இவரால் ஆண்களுக்காக அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பரமேஷ்வரா கல்லூரி கடந்த 1970 ம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் யாழ் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் ஒரு பகுதியாக்கப்பட்டது. இதேவேளை பல சமய தத்துவம், யோக நெறி என்பவற்றை தெளிவாக கற்றறிந்த சேர் பொன்னம்பலம் ராமநாதன் கீழத்தேய மெய்யியல் தூதுவராக கடந்த 1905 ம் ஆண்டு முதல் 1906 ம் ஆண்டு வரை அமெரிக்காவுக்கு சென்று  சொற்பொழிவுகள் ஆற்றி பெயர் பெற்றார். இதேவேளை கடந்த 1906 ம் ஆண்டு சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் முதல் மாநாட்டிற்கு தலைமை வகித்த பெருமைக்குரியவர் ஆவார். இதனிடையே சேர் பொன் ராமநாதனின் தந்தை கடந்த 1857 ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்டிமுடித்த ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயம் எழுந்தருளிய இடத்திலேயே இவர் கடந்த 1907 ம் ஆண்டு கருங்கற் பனியாக புதிய கோயிலொன்றை கட்ட ஆரம்பித்து கடந்த  1912 ம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ம் திகதி கும்பாவிசேகம் செய்வித்தார். இதேவேளை கடந்த 1923 ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் சைவ வித்தியா விருத்தி சங்கம் தோன்றுவதற்கு காரணமாக இருந்த சேர் பொன் ராமநாதன் அதன் முதல் தலைவராகவும் பள்ளிககூடங்களின் முகாமையாளராகவும் அதன் போசகராவும் விளங்கினார். இந்நிலையில் இவர் கடந்த 1930 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி 79 வயதில் இறையடி சேர்ந்தார். இவ்வாறு தனது சொந்த வாழ்விலும் சமூக வாழ்விலும் பொது நலன் கருதியே வாழ்ந்த இவரை கௌரவிக்கும் முகமாக இலங்கை அரசாங்கத்தினால். பழைய பாரளுமன்ற கட்டிட தொகுதியில் சேர் பொன் ராமநாதனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாழ்ந்த தமிழ் தலைவர்களில் அனைத்தினத்தவரும் ஏற்றுக்கொண்ட தேசிய தலைவராக வாழ்ந்த சேர் பொன்னம்பலம் ராமநாதன் இலங்கையின் வரலாற்று நாயகர்களில் ஒருவர். .............................................................................பிரசன்னா 

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிக்கும் நாள்… 25.11.2012


பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிக்கும் நாள்… 25.11.2012
லகில் ஆண்களுக்கு நிகராக நாங்களும் வரவேண்டும் எனும் இலட்சியப் போக்குடன்   பல நாடுகளில் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் தங்களின் தன்னம்பிக்கையும் வளர்த்து சாதித்து வருகின்றனர். பெண்கள் நாட்டின் கண்கள்  என சொல்லுமளவிற்கு முக்கியமானவர்கள். இறைவனின் படைப்பின் உன்னத படைப்பான பெண்கள் இந்த உலகில் ஆக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர்கள். அவ்வாறிருக்கும் பெண்கள் பல வன்முறைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் உட்படுத்தப்படுவது உலகில் சாதாரண விடயமாக மாறிவந்துள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 25 ம் திகதி பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்புநாள் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன. இன்றைய சமுதாயத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் பல விதங்களில் இடம்பெறுகின்றன. தொழிற்சாலைகளில் அலுவலகங்களில் மருத்துவ மனைகளில் பாடசாலைகளிலென பல இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன. இதேவேளை குடும்ப உறுப்பினர்களாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பொதுவாக துஷ்பிரயோகம் குடும்ப வன்முறை, சீதனக் கொடுமை, பெண் சிசுக் கொலை, பாலியல் வல்லுறவு, தரக் குறைவாக நடத்துதல், அடிமைத்தனம் மற்றும் உடல் உள ரீதியான துன்புறுத்தல்கள் என்பன பெண்களுக்கு எதிரான வன்முறைகளாக காணப்படுகின்றன.  கடந்த 1999 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ம் திகதி இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தின் போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. குறித்த தினம் அனுஸ்டிக்கப்படுகின்றமைக்கு 3 சகோதரிகள் முக்கிய காரணிகளாக அமைந்தனர். கடந்த 1960 ம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ம் திகதி டொமினிக் குடியரசின் மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்பட்ட 3 சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக  அந்நாட்டின் ஆட்சியாளன் ரபாயல் டுருஜிலியோ உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்படும் பெண்களுக்கு எதிராக இவர்கள் குரல் கொடுத்ததன் காரணமாகவே மூவரும் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கமைய மறக்க முடியாத வண்ணத்துப்ப+ச்சிகள் என பின்னர் உலகில் பெயர் பெற்ற குறித்த மெராபல் சகோதரிகள் லத்தீன் அமெரிக்காவின் பெண்களுக்கெதிரான வன்முறை கொடுமையின் சின்னமாக மாறினர். இந்நிலையில் கடந்த 1980 ம் ஆண்டு முதல் குறித்த நாளானது அவர்களின் படுகொலைளை நினைவு கோர்வதற்காகவும் பால் நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் அனுஸ்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 1999 ம் ஆண்டு முதல் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளான நவம்பர் மாதம் 25 ம் திகதி  , பெண்களுக்கு  எதிரான அனைத்துலக வன்முறை எதிர்ப்பு நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நவம்பர் மாதம் 25 ம் திகதி முதல் தொடர்ந்து வரும் 16 நாட்களுக் பால் நிலை வன்முறைகளுக்கெதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். நவம்பர் மாதம் 25 ம் திகதி முதல் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் மாதம் 10 ம் திகதி வரை குறித்த செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை தன்னை கொழுத்துவோமென பாரதியார் சொன்ன கூற்றுக்கு அமைய பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க உலக வாழ் மனிதர்கள் நாம் ஒன்று சேர்வோம்...............................................பிரசன்னா 

தொலைக்காட்சி தினம் 21.11.2012


தொலைக்காட்சி தினம் 21.11.2012

லகின் தொழிநுட்ப வளர்ச்சியின் பரிமாணத்தில் பல மின்சாதனப் பொருட்கள் மனிதர்களிடத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் அவை ஒவ்வொன்றும் மனிதனின் ஒவ்வொரு தேவையை ப+ர்த்தி செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில் மனிதனை ஓரிடத்திலிருந்து உலகில் மூலை முடுக்கெங்கும் கொண்டு செல்லும் கண்முன்னே உள்ள தொழிநுட்ப சாதனம்  தொலைக்காட்சி ஆகும். தொலைக்காட்சி கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து இன்றைய இப்பொழுது வரை மனிதனுக்கு முக்கியத்துவம் வாயந்த சாதனங்களில் ஒன்றாக நிலை பெற்றுள்ளது.  பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவரையும் தன்பால் ஈர்த்து அவர்கள் இலகுவில் அணுகக்கூடிய ஒரே தொலைத்தொடர்பு சாதனமாக தொலைக்காட்சி முன்னிலை வகிக்கின்றது. 1920 ஆம் ஆண்டு ஜோன் லொகி பெயாட் தொலைக்காட்சயை கண்டுபிடித்தார். அன்று முதல் இன்று வரை பல தொழிநுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுத்து தொலைக்காட்சி பல பரிமாணங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுவருகிறது. அதன் காரணமாக காலத்திற்கு காலம் மக்களின் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த சாதனமாக விளங்கும் தொலைக்காட்சி உலகையே ஆட்சி செய்யும் தொலைத்தொடர்பு சாதனமாக உருவெடுத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஊடகத்துறையில் மிகவும் செல்வாக்குமிக்க சாதனமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. அதனூடாக வெளியிடப்படும் புகைப்படங்கள், காணொலிகள், புதிய ஆலோசனைகள் மற்றும் வடிவமைப்பு என்பன மக்களை அதிகளவில் கவர்கின்றன. தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறையின் மிகவும் குறிப்பிடத்தக்க ஊடகமாக தொலைக்காட்சி வளர்ச்சியடைந்துள்ளது. அதற்கு பிரதான காரணம் உலகளாவிய ரீதியில் மிகவும் குறைந்த வசதியில் தொலைக்காட்சியை நாடமுடியும் என்பதால் அதற்கான ரசிகரகளும் உலகளாவிய ரீதியில் அதிகமாக காணப்படுகின்றனர். சமூக வேறுபாடு வயது வேறுபாடு மற்றும் தேசிய வேறுபாடு ஆகியவற்றை கலைந்து அனைவர் மத்தியிலும் பொதுவான விருப்பத்திற்கு உரிமையுடைய சாதனமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. தொலைக்காட்சியில் ஒளிரபப்பாகும் காணொலிகளிளை புரிந்துகொள்வதற்கு மேலதிக அறிவு தேவையில்லை. இதனால்; கல்வியறிவு குறைந்தவர்களும் அதனை பயன்படுத்துவதில் ஆர்வம ;செலுத்துகின்றனர். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விடயங்கள் மூலம் பல தகவல்களை மக்கள் அறிய முடியுமென்பதால் உலகளாவிய ரீதியி; அதன் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை யுனெஸ்கோ அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.இந்நிலையில் தொலைக்காட்சி உருவாக்கத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் அதன் பயன்பாடுகளை தெளிவுபடுத்தும் முகமாகவும்  உலக தொலைக்காட்சின தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதற்கமைய கடந்த 1996 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தொடரின் போது உலக தொலைக்காட்சி நாள் ஒவ்வொரு வடமும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுமென பிரகடனப்படுத்தப்பட்டது. மனித உணர்வுகளை நேரடியாகவும் அவர்களின் நிலைமையை விளக்கிக்கூறும் பலம்மிக்க சாதனமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. இதனால் உலக தொலைக்காட்சி தினத்தை அனுஷ்டிப்பதில் யுனெஸ்கோ அமைப்பு முன்னிலை வகிக்கின்றது. கருத்து சுதந்திரத்தை மேம்படுத்தல், ஆற்றல்களை வெளிப்பாடு மற்றும் சிறந்த காணொளிகள் என்பது யுனெஸ்கோ திட்டங்களுக்கு அவசியம் என்பதால் தொலைக்காட்சி தினம் யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டது. உலகில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் கலாசார சீர்கேடுகள் என்பன தொடர்;பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாதனமாக தொலைக்காட்சி பயன்பத்தப்பட வேண்டுமென யுனெஸ்கோ தெரிவித்திருந்தது. இதன்மூலம் சிறுவர்கள் மாத்திரமன்றி இளைஞர்களையும் தெளிவுபடுத்த முடியுமென நம்பிக்கை வெளியிடப்பட்டது. ஊடகத் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் வன்முறைகளை குறைக்கலாம். அந்த வகையில் குறித்த செயற்பாட்டை செய்யும் பாரிய பங்கை தொலைக்காட்சி வகிக்கின்றது. இந்நிலையில் உள்ளுர் சமூகங்களின் முக்கியத்துவம் மற்றும் கலாசாரங்களின் கௌரவம் அவற்றின் பாதுகாப்பு என்பவற்றை வெளிப்படுத்தும் வகையில் தொலைக்காட்சி படைப்புகள் அமைய வேண்டுமென யுனெஸ்கோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது. தொலைக்காட்சி மூலம் ஒளிரப்பப்படும் விடயங்கள் பயிற்சிகளுக்கு அமைவாக அமையப்பெற்றுள்ளது. அதன்மூலம் உள்நாட்டில் திறமையான நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், தொலைக்காட்சி எழுத்தாளர்கள், வர்ணனையாளர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள் ஆகியோரை  உருப்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். இதேவேளை வருடந்தோறும் உலக தொலைக்காட்சி தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் யுனெஸ்கோ அமைப்பு என்பன செயலமர்வுகளை நடாத்தி  வருகின்றது. உயர்தரத்திலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உலகில் முக்கிய அரசியல் மாற்றங்களுக்கு காரணமாக அமைந்துள்ளன. அரசியல் விடயங்கள் தொடர்பான பொது விவாதங்களில் அதில் முக்கிய இடம் வகிக்கின்றன. இந்நிலையில் ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் இலத்திரனியல் சாதனங்களில் தொலைக்காட்சி முக்கிய பங்கு வகிக்கின்றது. இதேவேளை உலக தொலைக்காட்சி தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனைத்து தொலைக்காட்சி ஊடக வலையமைப்பினையும் கைக்கோர்க்குமாறு யுனெஸ்கோ அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. தொலைக்காட்சி பாவனை அதிகரித்து வந்தாலும் அதில் பல நன்மைகள் நமக்கிருந்தாலும் அதனூடாக நாமே அறியாத சில தீமைகளும் எம்மை வந்தடைய வாய்ப்புண்டு ஆகவே  தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தையறிந்து அதனை நாம் எமது அறிவை மேம்படுத்துவதற்காகவும் பொழுது போக்கிற்காகவும் அளவாக பயன்படுத்த வேண்டியது. இந்த தொலைக்காட்சி தினத்தில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். .,.....................................................................பிரசன்னா 

உலக நீரிழிவு நோய் தினம்

உலக நீரிழிவு நோய் தினம்

21 ஆம் நூற்றாண்டில் மனித இனத்திற்கு பல துறைகளில் பல கோணங்களில் சவால்கள் உருவாகின. சமூக ரீதியான சவால்கள் அதில் முக்கியத்துவம் பெற்றன. மனித சமூகத்தை பாதிக்கும் பிரதான சவால்களில் யுத்தமும் நோயும் முன்னிலை வகிக்கின்றன. சுகாதாரம் மற்றும் சமூகவியல் சார்ந்த பிரச்சினையாக உருவாகிய ஒரு நோய் இன்று எல்லை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. அது தான் நீரிழிவு நோயாகும். இதற்கு சீனி நோய்; என்றும் பெயர் உண்டு.  ஆனாலும் நோயால் பீடிக்கப்பட்டவர்களின் வாழ்வு கசப்பாகவே அமைவதுண்டு. நீரிழிவு என்பது மனிதனுக்கு தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த முடியாத நிலையையே குறிக்கிறது. மனித உடலில் சக்கரையை உடலுக்கு தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாகும். இரத்தத்தில் சக்கரை அளவு சரியாக கட்டுப்படுத்தப்டவில்லையெனின் உயர் இரத்தழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுவதால் பாரிசவாதம் போன்ற நோயும் ஏற்படும் ஆபத்து உருவாகிறது. கடந்த 1922 ஆம் ஆண்டில் பெட்ரிக் பொன்டிங் என்ற விஞ்ஞானி சார்ள்ஸ் பெஸ்ட் என்பவருடன் இணைந்து நீரிழிவு நோயாளர்களின் உயிரைக் காக்கும் இன்சுலினை கண்டுபிடித்தார். இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. மக்கள் மத்தியில் நீரிழிவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பெட்ரிக் பொன்டிங்கின் பிறந்தநாள் உலக நீரிழிவு தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது. இதனால் வருடந்தோறும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி உலக நீரிழிவு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரத்தின் படி உலகில் 350 மில்லியனிற்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நீரிழிவு நோய் 3 வகைகளைக் கொண்டதாகும். முதலாவது வகை நீரிழிவு நோயானது குழந்தைகள், சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. அவர்களுக்கு இன்சுலினை பயன்படுத்தியே சிகிச்சை வழங்க வேண்டும். இன்சுலின் சுரப்பிகள் அதன் செயற்பாட்டை இழப்பதால் இவ்வகை நோய் ஏற்படுகிறது. உலகிலுள்ள 10 வீதமான நீரிழிவு நோயாளர்கள் முதலாவது வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 2 ஆவது வகை நீரிழிவு இன்சுலின் சுரப்பிகள் போதியளவு இன்சுலினை சுரக்காததினாலோ அல்லது சுரக்கப்படும் இன்சுலினிற்கு எதிர் வினை ஏற்படுவதாலோ உருவாகின்றது. இந்த வகை நீரிழிவு நோயினால் 90 வீதமான நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வயது வந்தவர்களுக்கு மட்டுமே ஏற்படும் நீரிழிவு நோய் வகையாகும். அதிக உடற்பருமன் உள்ளவர்களை 2 ஆவது வகை நீரிழிவு தாக்குகிறது. எடையை குறைப்பதாலும், சப்பாட்டு கட்டுப்பாட்டினாலும், உடற்பயிற்சிகளாலும் இதை கட்டுப்படுத்த முடியும். 3 ஆவது வகை நீரிழிவு நோய் கர்ப்பக்கால நீரிழிவு கருதப்படுகிறது. இதில் 2 முதல் 4 வீதமான பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் போது ஏற்படும். குழந்தை பிறந்தவுடன் நோய் மறைந்துவிடும். எனினும் பிற்காலத்தில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும். மனித உடலிலுள்ள இறைப்பையும் குடலும் உணவிலிருந்து குளுகோஸ் எனும் வெள்ளத்தை எடுத்து குருதியில் செலுத்துகிறது. இதே சமயம் கனயத்திலிருந்தும் இன்சுலின் உற்பத்தியாகி குருதியுடன் கலக்கிறது. 3 ஆவது வகை நீரிழிவு நோய் அதிகமாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் பரம்பரையில் நீரிழிவு நோய் இருப்பவர்களுக்குமே ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோயினால் இதயம், கண், சிறுநீரகம் மற்றும் பாதங்கள் ஆகியவையே பாதிக்கப்படுகின்றன. தொடர்ச்சியான நீரிழிவு தாக்கம் கண்பார்வையை இழக்கச் செய்வதோடு செவிப்புலனையும் இழக்கச் செய்வதாக மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது எதிர்காலமே இருண்டு விட்டதாக கவலையடைகின்றனர். ஆனால் அதிகளவான நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உலகை வென்றவர்களும் நம்மத்தியில் வ வாழந்துகொண்டிருக்கின்றனர். உலகின் அதிசிறந்த வேகப்பந்துவீச்சாளரும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவருமான வசீம் அக்ரம் நீரிழிவு நோயை வென்ற வீரராவார். இன்சுலினே வாழ்க்கை என்றிருந்த வசீம் மனம்தளராது கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கி பல்வேறு சாதனைகளை தனதாக்கினார். அவர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு தூதுவராகவும் செயற்படுகின்றார். ; உலகில் ஆசிய நாடுகளில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. நொறுக்குத்தீனிகளுக்கும், பாஸ்ட் புட்டிற்கும்  நவீன சமுதாயம் பழக்கப்பட்டுள்ளமையே இதற்கு முக்கிய காரணமாகும இலங்கையிலும் நீரிழிவு நோயின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. 2050 ஆம் ஆண்டளவில் இலங்கை சனத்தொகையில் அரைப்பங்கினர் அதாவது 50 வீதமானோர் நீரிழிவு நோயின் தாக்கத்திற்கு உட்படலாமென சுகாதார அமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போது 10 முதல் 15 வீதமான பாடசாலை மாணவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை இலங்கை மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதனின் உடலுக்குள் நுழைந்து மனிதனை தவணை முறையில் மரணிக்கச் செய்யும் நீரிழிவு நோயை உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் அழிக்க முடியும். நவீன மருத்துவம் பல்வேறு கொரிய நோய்களை குணப்படுத்தும் தற்காலத்தில் நீரிழிவு நோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பது பாதிக்கப்பட்ட நோயாளர்களின் மன தைரியத்திலேயே தங்கியுள்ளது. ......................................................................................................பிரசன்னா 

நம்பியார்


நம்பியார்   19.11.2012
மிழ் திரையுலகத்தில் வில்லன் எனும் கதாபாத்திரத்திற்கு முதல் அடித்தளம் இட்டவர். திரையில் இவரை பார்க்கும் ரசிகர்கள் அவரை பொல்லதவனாகவும் அநியாயம் அட்டூழியங்களை செய்யும் அரக்கனாகவும் பார்க்கும் அளவுக்கு தன்னுடைய நடிப்பால் திரையுலக வரலாற்றில் வில்லன் கதாபாத்திரத்தில் தனி முத்திரை பதித்த பழம் பெரும் வில்லன் நடிகன் இவர். எம்.ஜி.ஆருடன் இவர் சண்டையிடுவதை பார்த்து இவரை அடிக்க துணிந்த ரசிகர்களும் உள்ளனர். அவ்வாறு திரை உலகையே தன்வசப்படுத்தியிருந்த வில்லன்  எம்.என்.நம்பியார். இவர் கடந்த 1919 ம் ஆண்டு மே மாதம் 21 ம் திகதி இந்திய கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில்  பெருவமூர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை கேளு நம்பியார் என்பவராவார் இவர் குடும்பத்தின் கடைசிக் குழந்தையாக பிறந்தார் எம்.என். நம்பியார் எனப்படும் மாஞ்சேரி நாராயணன் நம்பியார். இவரின் 8 வது வயதிலேயே அவரது தந்தை இறந்த நிலையில் அவர் தனது அண்ணனது பராமரிப்பில் வளர்ந்தார். அதற்கமைய உதக மண்டலம் எனும் ஊரிலுள்ள உயர் நிலை பள்ளியொன்றில் 3 ம் வகுப்பு வரை மாத்திரமே நம்பியார் கல்வி பயின்றார். தொடர்ந்து படிப்பதற்கு பொருளாதாரம் இடம்கொடுக்காததன் காரணமாக  அவர் தனது 13 வது வயதிலேயே நாடக குழுவொன்றுடன் இணைந்து கொண்டார். அதில் நம்பியாருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக அவர் நாடக குழுவில் சமையலறை உதவியாளராகவே பணியாற்றினார். தொடர்ந்து சமையல் உதவியாளராகவே பணியாற்றிய அவர் நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் தொழில் புரிந்த நாடக கம்பனி கடந்த 1935 ம் ஆண்டு ராம்தாஸ் எனும் நாடகத்தை பக்த ராம்தாஸ் எனும் பெயரில் திரைப்படமாக எடுத்தது. குறித்த திரைப்படத்தில் நம்பியாருக்கு மாதண்ணா எனும் நகைச்சுவை வேடம் வழங்கப்பட்டது. இதுவே எம்.என்.நம்பியார் நடித்த முதல் திரைப்படமாகும். அதன் பின்னர் குறித்த நாடக குழுவின் நாடகங்களில் சிறிய வேடங்களில் நம்பியார் நடிக்க ஆரம்பித்தார்.  இந்நிலையில் தொடர்ச்சியாக பல நாடகங்களை நடித்து தனது நடிப்பு திறமைகளை வெளிக்காட்டிய எம்.என்.நம்பியார். கடந்த 1939 ம் ஆண்டு காலப்பகுதிகளில் மிகப்பெரிய நாடக நடிகராக வளர்ந்தார். அதனைத் தொடர்ந்து 1944 ம் ஆண்டு காலப்பகுதிகளில் நம்பியாருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. அதற்கமைய கடந்த 1946 ம் ஆண்டு வெளிவந்த வித்தியாபதி ராஜகுமாரி ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 1947 ம் ஆண்டு கஞ்சன் எனும் திரைப்படத்தில் எம்.என்.நம்பியார் கதாநாயகனாக வேடம் ஏற்று நடித்தார். அதனைத் தொடர்ந்து அபிமன்யு, மோகினி போன்ற திரைப்படங்களில் நடித்த எம்.என்.நம்பியார். அறிஞர் அண்ணாவின் திரைக்கதையில் வெளிவந்த வேலைக்காறி எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அனைவரது எதிர்பார்ப்பையும் பெற்றார். அதன் பின்னர் வில்லன் கதாபாத்திரங்களில் தனது கவனத்தை செலுத்திய எம்.என்.நம்பியார் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வில்லன் கதாபாத்திரத்தில் தனி முத்திரை பதித்தார். அதற்கமைய அக்காலத்தின் திரையுலக சிகரங்களான எம்.ஜீ.ஆர். மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோரின் திரைப்படங்களில் நிரந்தர வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தன்னை ரசிகர்கள் மத்தியில் வில்லனாகவே மாற்றிக்கொண்டார். இந்நிலையில் வில்லன் என்ற நிலையிலிருந்த நம்பியாரை 1980 ம் ஆண்டு காலப்பகுதிகளில் இயக்குனர் கே.பாக்கியராஜ் இவரை குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்க வைத்தார். பின்னர் குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த நம்பியார். அதிலும் தனி முத்திரை பதித்தார். தமிழ் தவிர ஜங்கிள் எனும் ஆங்கிர திரைப்படத்திலும் கணவனே கண் கண்ட தெய்வம் திரைப்படத்தில் இந்திப்பதிப்பிலும் நடித்த எம்.என்.நம்பியார் இதுவரை ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் திகம்பர சாமியார் எனும் திரைப்படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதானை புரிந்தார். சுமார் 60 வருடங்களுக்கு மேலாக திரையுலகை ஆட்சி செய்த எம்.என்.நம்பியார் கடந்த 1946 ம் ஆண்டு ருக்மணி என்பவரை திருமணம் முடித்தார். இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளன. இந்நிலையில் மிகப் பெரிய ஆன்மீக வாதியான எம்.என்.நம்பியார் கடந்த 65 ஆண்டுகளாக சபரி மலைக்கு செல்வதை தனது வாழ் நாள் கடமையாக தொடர்ந்தும் மேற்கொண்டார். இதேவேளை எம்.என்.நம்பியார் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தான் நடிக்கின்ற ஒவ்வொரு கதாபத்திரத்திலும் முத்திரை பதித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இந்நிலையில் கடந்த 2008 ம் ஆண்டு உடல் நல குறைவின் காரணமாக சென்னை தனியார் மருத்துவ மனையொன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ம் திகதி தனது 89 வது வயதில் இறைவனடி சேர்ந்தார். அவர் மறைந்தாலும் வில்லன் என்ற கதாபாத்திரத்திற்கு முகவரி இட்டுத்தந்த நம்பியார் இன்றும் ஒவ்வொரு வில்லன்களுக்கும் ஆசானாக விளங்குகின்றார். சிவாஜி கணேஷன் , எம். ஜி. ஆர் போன்ற திரையுலக சாம்ராஜ்யங்கள் வாழந்த காலத்தில் தன்னை அவர்களுக்கு இணையாக வளர்த்துக்கொண்டார். இந்நிலையில் அவர் இறுதியாக நடித்து வெளிவந்த திரைப்படம் சுதேசி ஆகும்…எம்.என். நம்பியார் என்ற வில்லன் உலகை விட்டு மறைந்தாலும் தமது உள்ளங்களில் இன்றும் கதாநாயகனாக எம்.என். நம்பியார். .........................................................பிரசன்னா 

நெல்சன் மண்டேலா


நெல்சன் மண்டேலா
நிறவெறிக்கெதிராகவும் அடக்கு முறைக்கு எதிராகவும் குரல் கொடுத்து உலக வாழ் அனைத்து மக்களினதும் இதயத்தை வென்றவர்.  இவரின் பெயரிலுள்ள வித்தியாசம் இவரின் சிந்தனைகளிலும் உள்ளது. இன்றும் இவரை உலகில் பல நாடுகள் முன் மாதிரியாக கொண்டு தங்களது நிர்வாகத்தினையும் அரசியல் முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளுமளவுக்கு உலக வரலாற்றில் இடம்பிடித்த வாழும் சகாப்தம். கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து அவர்களுக்கும் சம அந்தஸ்த்து பெற்றுக்கொடுத்து இன்று நிறவெறியொன்றை உலகில் இல்லாதொழித்த பெருமைக்குரியவர் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா. கடந்த 1918 ம் ஆண்டு ஜூலை மாதம் 18 ம் திகதி தென்னாபிரிக்காவிலுள்ள பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்தார். நெல்சன் மண்டேலா என அழைக்கப்படும் நெல்சன் ரோபிசலா மண்டேலா இவர் சோஷா பழங்குடி இனத்தை சேர்ந்தவராவார். நெல்சன் மண்டேலா இவரது தந்தையின் மூன்றாவது மனைவிக்கு பிறந்தவராவார். தனது குடும்பத்தில் முதன் முதலில் பள்ளிக்கு சென்ற நபரான நெல்சன் மண்டேலா இளம் வயதில் ஆடு,மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். அவர் பள்ளியில் பயின்ற போதே போர் பிரியும் கலைகளையும் கற்றுக்கொண்டார். இவரின் பெயரின் முன்னாள் உள்ள நெல்சன் எனும் சொல் இவரின் பள்ளி ஆசிரியரால் சூட்டப்பட்டதாகும். கல்வியில் அதிக நாட்டம் செலுத்திய நெல்சன் மண்டேலா லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். மேலும் கடந்த 1941 ம் ஆண்டு ஜொகன்னஸ் பேக்குக்கு சென்ற இவர் பகுதி நேர சட்டக் கல்வியினையும் மேற்கொண்டார். அதன் போது தங்க சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும் தோட்ட முகவராகவும் பணியாற்றினார். இந்நிலையில் தென்னாபிரிக்காவில் கறுப்பு இனத்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த போதிலும் அங்கு சிறுபான்மையினமான வெள்ளையர்களின் ஆட்சியே நிலவியது. இந்நிலையில் அவர்கள் கறுப்பினத்தவர்களுக்கெதிராக அடக்கு முறை ஆட்சியினையும் சித்திரவதைகளையும் மேற்கொண்டனர். மேலும் கறுப்பினத்தவர்களின்  அதற்கமைய மண்டேலா கடந்த 1939 ம் ஆண்டு தனது 21 வது வயதிலேயே கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிலையில் அவர்களை விழிப்படைய செய்வதில் வெற்றியடையச் செய்த நெல்சன் மண்டேலா அம் மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்தார். இந்நிலையில் இனவாதமும் ஒடுக்குமுறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்துகொண்ட மண்டேலா சீற்றம் கொண்டவராக அரசியலில் இறங்கினார். அதற்கமைய ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் எனும் கட்சியை அமைத்து அதன் தலைவரான நெல்சன் மண்டேலா இனவெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து போராடினார். இந்நிலையில் அரசுக்கெதிரான இவரது போராட்டங்கள் வளர்ச்சியடைவதை கண்ட வெள்ளையர் அரசாங்கம். கடந்த 1956 ம் ஆண்டில் அரசுக்கெதிராக புரட்சி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சிறையிலிருந்து மண்டேலா வெளியாகிய நிலையில் அவரது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சியடைந்தது. அறவெளி போராட்டங்களும் உரிமைகளை பெற முடியாதென மண்டேலா  கடந்த 1961 ம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரசின் ஆயுதப்படை தலைவனாக உருவெடுத்தார். அதனைத் தொடர்ந்து வெளிநாட்டு சக்திகளிடமிருந்து பணம் மற்றும் இராணுவ சக்திகளை பெற்று அரசு மற்றும் இராணுவ கேந்திர நிலையங்கள் மூலம் கெரில்லா பாணியிலான தாக்குதல்களை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கை காரணமாக தலைமறைவான நெல்சன் மண்டேலா கடந்த 1962 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் திகதி கைது செய்யப்பட்டார். அதன்போது அரசுக்கெதிராக புரட்சி செய்தமை அமைதியை குலைத்தமை கலகத்தை உருவாக்கியமை  மற்றும் அரசாங்கத்தை கவிழ்க்க முயன்றார் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மண்டேலாவுக்கு கடந்த 1964 ம் ஆண்டும ஜூன் மாதம் 15 ம் திகதி அவரது 46 வது வயதில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  பல ஆண்டுகள் அவரை தனிமைச் சிறையில் அடைத்து தென்னாபிரிக்கா அரசாங்கம் கொடுமை செய்தது. இந்நிலையில் 1988 ம் ஆண்டு மண்டேலாவுக்கு கடுமையான காசநோய் ஏற்பட்டு மரணத்தின் எல்லைக்கு சென்ற அவர் பின்னர் வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்டார். ஏறத்தாள 27 ஆண்டுகள் மண்டேலா சிறைவைக்கப்பட்டார். உலகில் நீண்ட காலம் சிறையில் வாழ்ந்த தலைவர்களில் மண்டேலா முதலிடம் பிடித்தார். இந்நிலையில் மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. எனினும் அப்போதைய நிறவெறி ஆட்சியின் தலைவர் அவரை விடுதலை செய்ய மறுத்தார். பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட கடந்த 1990 ம் ஆண்டு 2 ம் மாதம் 11 ம் திகதி உலக நாடுகளின் கோரிக்கைகளுக்கமைய தனது 71  வது வயதில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். அவரை வரவேற்க உலகம் முழுவதிலுமிருந்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதோடு ஆபிரிக்க நாட்டுத்தலைவர்கள் மற்றும் அவரது மக்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். விடுதலையின் பின்னர் உரையாற்றிய மண்டேலா நிறவெறிக்கெதிராக தான் தொடர்ந்தும் போராட  உள்ளதாக அறிவித்தார். மேலும் அரசியில் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்திற்கு முடிவு கண்டு கறுப்பினத்தவர்களுக்கு சம உரிமை கிடைக்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அவர் மக்களுக்காக மேற்கொண்ட தியாகம் அவரை மக்கள் மத்தியிலும் உலக நாடுகள் மத்தியிலும் ஒரு தலைவராகவும் தியாகியகவும் எடுத்துக்காட்டியது. உலக சமாதானத்திற்காக மண்டேலா ஆற்றிய சேவையினை பாராட்டி அவர் சிறையிலிருந்த போதே பல விருதுகள் வழங்கப்பட்;டன.  அதற்கிணங்க கடந்த 1994 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற அவர் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். அதற்கமைய கடந்த 1999 ம் ஆண்டு வரை அவர் ஜனாதிபதி பதவியை தொடர்ந்தார். அவரின் பதவிக்காலத்தில் கறுப்பினத்தவர்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டதோடு தென்னாபிரிக்காவில் நிலவி வந்த வெள்ளையர்களின் ஆதிக்கம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. இதேவேளை  மண்டேலா நோமதாம் சங்கர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.  அவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1958 ம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மண்டேலாவின் முதல் மனைவிக்கு 3 குழந்தைகளும் 2 வது மனைவிக்கு 2 குழந்தைகளும் உள்ளன. இந்நிலையில் கடந்த 1993 ம் ஆண்டு நெல்சன் மண்டேலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதேவேளை தென்னாபிரிக்க நாட்டு தலைவரான நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாள் கடந்த 2010 ம் ஆண்டு முதல் சர்வதேச நெல்சன் மண்டேல தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. அதற்கமைய ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 18 ம் திகதி சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. தென்னாபிரிக்காவில் மாத்திரமன்றி உலகின் பல பாகங்களில் நிலவி வந்த இனவெறி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர்களில் நெல்சன் மண்டேலா என்றும் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஊலகின் அனைத்தின மக்களாலும் மதிக்கப்பட்டு வருகின்ற நெல்சன் மண்டேலா இன்றும் தான் தென்னாபிரிக்கா மக்களுக்கு பெற்றுத்தந்த சுதந்திர காற்றை சுவாசித்து இந்த ப+மியை பெருமைப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார். நெல்சன் மண்டேலா வாழும் மனித இனத்தின் பொக்கிஷம்.

ஜெமினி கணேசன்


ஜெமினி கணேசன்
பொற்கால தமிழ் சினிமாத்துறை வரலாற்றில் , முப்பெரும் தேவர்கள் என அழைக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.  தனக்கு கிடைத்த அத்தனை கதாபாத்திரங்களிலும் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தி , திரையுலக ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பெற்று,  அனைவராலும் காதல் மன்னன் என அழைக்கப்பட்டவர் நடிகர் ஜெமினி கணேசன். இவர் கடந்த 1920 ம் ஆண்டு, நவம்பர் மாதம் 17 ம் திகதி , தமிழகத்தின் புதுக்கோட்டையில் பிறந்தார். ஆரம்பகாலத்தில் ஆசிரியராக பணியாற்றிய ஜெமினி கணேசன் , தனது திரையுலக வாழ்க்கைக்கென ஜெமினி கணேசன் நிறுவனத்தில் மேலாளராக இணைந்து, தனது திரையுலகுடனான வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னாளில் அந்நிறுவனத்தின் பல வெற்றிப்படங்களில் கதாநாயகனாக நடித்த அவர் ,பல நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் அதிகாரியாகவும் ஜெமினி நிறுவனத்தில் கடமையாற்றினார். இவர் கடந்த 1947 ம் ஆண்டு வெளிவந்த ,மிஸ் மாலினி எனும் திரைப்படத்தில் சிறிய வேடமொன்றை ஏற்று ,நடித்திருந்தார். எனினும் தொடர்ச்சியாக அவர் மக்கள் மனதில் இடம்பிடிப்பதற்கு ஏதுவாக அமைந்த திரைப்படம் கடந்த 1952 ம் ஆண்டில் வெளியான தாயுள்ளம் எனும் திரைப்படமாகும். இதில் , ஆர் எஸ் மனோகர் , கதாநாயனகானவும், ஜெமினி கணேசன் வில்லனாகவும் வேடமேற்கு நடித்திருந்தார். பின்னாளில் ஜெமினி கணேசன், கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தவுடன் ,நடிகர் மனோகர் வில்லன் காதாபத்திரத்தில் நிலைபெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இசந்நிலையில் ஜெமினி கணேசன், முதன்முதலாக கதாநாயகன் வேடமேற்று நடித்த திரைப்படம் , கடந்த 1953 ம் ஆண்டு வெளியான பெண் எனும் திரைப்படமாகும். அதனை தொடர்ந்து  கடந்த 1953 ம் ஆண்டு, மனம் போல மாங்கல்யம் எனும் திரைப்படத்தில் ஜெமினி கணேசன்  இரட்டை வேடமேற்று  நடித்திருந்தார். குறித்த திரைப்பட்மானகது அவரது திரைவாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்தது. அதேபோல் ,இத்திரைப்படத்திலேயே, நடிகையர் திலகம் என அழைக்கப்படும் நடிகை  சாவித்திரியை அவர் திருமணம் செய்துகொண்டார்.  சந்திதத் அவர் , அதேகாலப்பகுதியில் ஜெமினி கணேசனின் மிகப்பெரிய நடிப்புத்திறமை அவரை எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிறந்த முறையில் எடுத்துக்காட்டியது. ஆரம்பத்தில் ஆர் கணேஸ் எனும் பெயருடன் இவர் திரையுலகில் நடித்துவந்தார். எனினும் ஆரம்பத்தில் சிவாஜி கணேசனும் கணேசன் எனும் பெயரைக்கொணடே திரைப்படங்களில் நடித்து  வந்ததன் காரணமாக ஆர் கணேசன் தன்னை ளர்த்த நிறுவனமான ஜெமினி நிறுவனத்தை தன் பெயருக்கு முன்னாள் இணைத்து ஜெமினி கணேசன என மாற்றிக்கொண்டார்.  காதல் மற்றும் குடும்ப கதைகளில் நடித்து பெயர்வாங்கிய ஜெமினி கணேசன வஞ்சிக்கோட்டைவாலிபன் எனும் திரைப்படத்தினூடாக ஒரு சாகச நாயகனாகவும் தன்னை நிலைநிறுத்தினார். சிவாஜி கணேசன், எம் ஜீ ஆர்என அக்கால திரையுலக ராஜாக்கள் வாழ்ந்த நிலையில் ,தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை அவர் வைத்pதிருந்தர். மேலுமு; அக்காலத்தில் மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களை வழங்கிய இயக்குனர்களாக கே எஸ் கோபாலகிருஷ்ணண் , ஸ்ரீதர் ,கே பாலச்சந்தர்,  பீம்சிங் ஆகியோரின்  படங்களுக்கு முதல் தெரிவாக , ஜெமினி கணேசனே காணப்பட்டார். மேலும் அவர்களின் இயக்கத்தில் ஜெமினி கணேசன நடித்து வெளிவந்த பல திரைப்படங்கள் காலத்தால் அழியாதவை.  மேலும் நடிகர் திலகம் கே பாலசந்தர் விரும்பி இயக்கிய நடிகர்களில் ஜெமினி கணேசனும் ஒருவராவார்.  தாமரை நெஞ்சம், பூவா தலையா, இரு கோடுகள், வெள்ளிவிழா , புன்னகை ,  கண்ணா நலமா, நான் அவன் இல்லை என இவர்களின் வெற்றிக்கூட்டணி தொடர்ந்தது. மேலும் நான் அவன் இல்லை திரைப்படத்தை தயாரித்து,  பல வேடங்களில்  நடித்திருந்த ஜெமினி கணேசனுக்கு பிலிம் பேர் விருதும் வழங்கப்பட்டது. தானொரு முன்னணி கதாநாயகனாக இருந்தபோதும் ,  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் எம் ஜீ ஆர் போன்ற இறவா புகழ்பெற்ற நடிகர்களு;டன் இணை பாத்திரங்களில் நடித்தள்ளார்.  அதற்கமைய  நடிகர் திலகத்துடன் பாசமலர் , பாவமன்னிப்பு பார்த்தால் பசி தீரும் ,  வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்களில்  அவருக்கு இணையான நடிப்பினை ஜெமினி கணேசன வெளிப்படுத்தியிருந்தார் . எம் ஜு ஆருடன் முகராசி எனும் ஒரு திரைப்படத்தில் மாத்திரமே ஜெமினி கணேசன நடித்துள்ளார். பின்னர் திரைக்கு வந்த ஜெய்சங்கர் ,  ஏ வி எம்ராஜன் முத்துராமன் ஆகியோருடனும்  இவர் , பல திரைப்படங்களில்  நடித்துள்ளார்.   எந்தவொரு நட்சத்திர நடிகையுடனும் இயல்பாக பொறுந்திவிடும் இவரது திறன். இவரை காதல் மன்னணன் என அடையாளப்படுத்தியது. இவருடன் சாவித்திரி, அஞ்சலி தேவி , பத்மினி, சரோஜாதேவி மற்றும் ஜெயந்தி ஆகியோர் அதிகளவான திரைப்படறங்களில் நடித்துள்ளனர் . ஜெமினி கணேசன்  தமிழ், ஹிந்தி ,தெழுங்கு, மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் 200ற்கும் மெற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு  ஏ எம் ராஜா, பீ பீ ஸ்ரீனிவாஸ் ஆகியோரது குரல்கள் ஒத்திருந்ததால், டி எம் சௌந்தரராஜனைவிட ,  இவர்களே ஜெமினி கணேசனுக்கு அதிகளவில் பாடல்களுக்கு குரல் கொடுத்தனர்.  பின்னர் ,பாடும் நிலா எஸ் பீ பீயும் ஜெமினி கணேசனின் பாடல்களுக்கு குரல் கொடுத்துள்ளார். மேலும் ஷ ஜெமினி கணேசன  தனது இயல்பான குரலில் பாடக்கூடிய திறனையும் பெற்றிருந்தார். மேலும் இவரது வாரிசாக நடிகை ரேக்கா திரையுலகில் நடித்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அது மாத்திரமின்றி அவர் இதயமலர் எனும் திரைப்படத்தினை இயக்கியுமுள்ளார். அவர் கதாநாயகான நடித்த இறுதி திரைப்படம் கடந்த 1970 ம் ஆண்டு வெளிவந்த லலிதா என்ற திரைப்படமாகும்; . பின்னாளில் தனது நாயகம் அந்தஸ்தை விட்டு குணச்சித்திர பாத்திரங்களில் ஜெமினி கணேசன நடிக்க ஆரம்பித்தார்.   ப அவர் இறுதியாக குணச்சித்திர பாத்திp0ரத்’தில் நடித்த திரைப்படம் நடிகர் கமலஹாசன் நடித்து வெளிவந்த ஒளவை சண்முகி என்ற திரைப்படாகும்.   இப்படியான மிகபபெரும் சகாப்தமாக வாழ்ந்த அவர் கடந்த 2005 ம் ஆண்டு , மார்ச் மாதம் 22ம ;திகதி சிறுநீரக கோளாறு உள்ளிட்ட  பல நோய்களால் பாதி;ப்படைந்து, இறையடி சேர்ந்தார்.  இவருக்கு பத்மஸ்ரீ,  நடிப்பு செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளும் பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. திரையுலக மும்மூர்த்திகள் என அழைக்கப்பட்டவர்களில் தனக்கென ஒரு பாணியை அமைத்து, அனைத்து திரை ரசிகர்கள் இதயத்திலும் நீங்காத இடம் பிடித்த , காதல் மன்னன் ஜெமினி கணேசன்,  இன்றும் ஞாபக சுவடுகளோடு எம் ஒவ்வொருவரதும் இதயத்தில்.....................................................................பிரசன்னா 

சீனப் பெருஞ் சுவர்
னிதன் தன்னை இவ்வுலகிற்கு வாழ்வதற்கென பழக்கப்படுத்திய நாள் முதல் மனித இனத்திற்குள் யுத்தங்களும் நில அபகரிப்புகளும் இடம்பெற்று வந்துள்ளன. அன்றைய காலப்பகுதியில் ஒரு நாடு இன்னொரு நாட்டிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கு தங்களால் முடிந்த பல வியூகங்களை அமைத்து ஆட்சிகளை நிறுவி வந்துள்ளன. தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத அன்றைய காலப்பகுதியில் அவர்கள் செய்த ஒவ்வொரு படைப்புக்களும் இன்றைய மனிதனை பொறுத்தவரையில் ஆச்சரியமாகவே அமைகிறது. அவர்களால் இந்த விடயத்தினை எப்படி செய்திருக்க முடியும் என்றதொரு கேள்வி எழுந்தாலும் அப்போதுள்ள மனிதர்கள் சிறந்த உழைப்பாளிகளாகவும் பொறிமுறை சிந்தனை உள்ளவர்களாகவும் காணப்பட்டனர். அதனால்தான் அவர்களால் இவ்வுலகிற்கு தந்த பல படைப்புகள் இன்றும் அழியாத சொத்துக்களாய் பாதுகாக்கப்படுகின்றன. அப்படி பண்டையகால மனிதன் இவ்வுலகிற்கு தந்த பிரம்மாண்டமான சொத்துக்களில் இன்றும் ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம் தரும் ஒரு விடயம் சீனப் பெருஞ் சுவர் ஆகும். பண்டைய காலத்தில் பிற நாட்டு ஆக்கிரமிப்பகளையும் தடுப்பதற்கும் பிறநாட்டு படைகள் குதிரைகள் என்பன சீனாவிற்குள் ஊடுறுவதை தடுக்கும் பொருட்டு15 ஆம் 16 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அரனே சீனப் பெருஞ் சுவர்  ஆகும். கற்களும் மண்ணும் கலக்கப்பட்டு உறுதியான சுவராக சீனப் பெருஞ்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சீனாவை ஆரம்பத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் அவற்றின் எல்லையை வலுப்படுத்துவதற்காக சீனப் பெருஞ் சுவர்  ஆங்காங்கே எழுப்பியிருந்தனர். எனினும் கடந்த கி.மு. 221 ஆம் நூற்றாண்டில் சென் ஹி ஹ_வான் எனும் மன்னன்; எதிரி நாடுகளை கைப்பற்றி சீனாவில் ஒன்றிணைந்த கிங் வம்ச அரசை நிறுவினார். இந்நிலையில் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்புகளை பாதுகாப்பதற்கும ;மையப்படுத்தி ஆட்சியை மே;றகொள்வதற்கும் அவர் எண்ணினார். அதன் காரணமாக தனது பேரரசுக்குட்பட்ட நாடுகளில் இடையில் அமைந்திருந்த எல்லை சுவர்களை இடித்து அதற்கு வெளியே ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த சீன சுவரின் எல்லையை விஸ்தரித்தார். பின்னர் குறித்த சுவர் ஆட்சிக்கு வந்த பல மன்னர்களால் திருத்தப்பட்டும் விரிவாக்கப்பட்டும் தற்போதைய வடிவத்தை எடுத்துள்ளது. அதற்கமைய கி.மு. 208 ஆம் ஆண்டு கிங் வம்சத்தினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட சீனப் பெருஞ் சுவர் அமைக்கும் நடவடிக்கை கி.மு. முதலாம் நூற்றாண்டில் ஹான் வம்சத்தினாலும் கடந்த 1138 ஆம் ஆண்டு தொடக்கம் 1198 ஆம் ஆண்டு வரையான 10 வம்சங்களினதும் 5 அரசுக்களின் காலங்களிலும் கடந்த 1368 ஆம் அண்டு மிங் வம்சத்தினாலும் சீனப் பெருஞ் சுவர்   அமைக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்டது. சீனப் பெருஞ் சுவரானது காடுகள் , பாலைவனங்கள், மலைப்பிரதேசங்கள் பனியுறை பிரதேசங்கள் என சீனாவின் சகல எல்லைகளையும் உட்படுத்தி நிற்கிறது. மிங் வம்ச காலப்பகுதியிலேயே சீனப் பெருஞ் சுவரின் கட்டுமாண பணிகள் உச்ச நிலையையடைந்தன. அதற்கமைய குறித்த ஆட்சிக்காலத்தின் போது சீனப் பெருஞ் சுவரில் 10 இலட்சம் படையினர் வரை காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே பல நூற்றாண்டுகளாக இடம்பெற்ற சீனப் பெருஞ் சுவரின் கட்டுமாண பணியின் போது 20 தொடக்கம் 30 இலட்சம் மக்கள் இறந்திருக்ககூடுமென கணிக்கப்படுகிறது. இந்நிலையில் யுத்தத்தினாலும் கட்டுமாண பணிகளாலும் சீனப் பெருஞ் சுவர்pல் பலர் உயிரிழந்ததன் காரணமக இச்சுவரை உலகின் அதி நீளமான மயானம் என்றும் அழைக்கப்படுகிறது. சீனப் பெருஞ்சுவரானது குறிப்பிடத்தக்க 3 பகுதிகளைக் கொண்டு உள்ளடக்கப்படுகிறது. ஜியோங் குவான் கடவை, ஜியா யுகுவான் கடவை, ஷாங் ஹாய் குவான் கடவை ஆகிய 3 பகுதிகளாக சீனப் பெருஞ் சுவர்  வரையறுக்கப்படுகிறது. பெருஞ்சுவரின் நீளம் முழுவதும் இருந்த பாதுகாவலருக்கிடையிலான தகவல் தொடர்புகள் மற்றும் தேவையான கூடுதல் படைகளை அழைப்பதற்காக வசதிகளும் முக்கியமான தேவைகள் உள்ளிட்டவற்றை கருத்திற்கொண்டு மலை முகடுகளிலும் சுவர் பகுதிகளிலும் பிற உயரமான பகுதிகளிலும் சமிஞ்சை கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆரம்பகாலத்தில் மண் கற்கள் மரம் ஆகியவற்றை பயன்படுத்தி கட்டப்பட்ட சீனப் பெருஞ் சுவர்  பின்னர் செங்கற்கள் ஓடுகள், சுண்ணாம்பு என்பவற்றை பயன்படுத்தியும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல உயிர்களை பலியெடுத்தும் நாட்டை பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்ட சீனப் பெருஞ் சுவர்  மனித வரலாற்றில் மற்றுமொரு மிக்பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது. அதற்கமைய தற்போது சீனப் பெருஞ் சுவரின் பல இடங்களில் திருத்தப் பணிகள் இடம்பெறுவதோடு சில பகுதிகளில் பெருஞ்சுவர் உறுதியற்ற நிலையில் காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பெருஞ்சுவர் தொடர்பான விரிவான ஆய்வுகள் செய்யப்படாததன் காரணமாக தற்போது சீனப் பெருஞ் சுவரின் நீளம் குறித்து எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை. எனினும் ஏற்கனவே உள்ள தகவல்களின் அடிப்படையில் சீனப் பெருஞ் சுவரானது 7 ஆயிரத்து 200 கிலோமீற்றர் நீளமும் 3.5 மீற்றர் உயரமும் 4.5 மீற்றர் அகலமும் உடையாகும். இதனிடையே காலத்திற்கு காலம் சீனப் பெருஞ் சுவரின் நீளங்களும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  இதேவேளை சீனப் பெருஞ் சுவர்  பாதுகாக்கப்படாவிடின் இன்னும் 20 ஆண்டுகளுக்குள் மணற்புயல் மற்றும் அறிப்பினால் அழிவடையக்கூடிய அபாயம் காணப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சீனப் பெருஞ் சுவரானது தற்போது உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகின்ற போதிலும் கிரேக்கர்களினால் அடையாளம் காணப்பட்ட பண்டைய உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக இது கருதப்படவில்லை. இதனிடையே கடந்த 1938 ஆம் ஆண்டு ரிச்சர்ட் ஹலிபொட்டர் எழுதிய அதிசயங்களில் இரண்டாவது எனும் புத்தகத்தில் சீனப் பெருஞ் சுவரை நிலவிலிருந்து பார்க்கமுடியுமென குறிப்பிட்டிருந்தார். எனினும் சீனப் பெருஞ் சுவரை நிலவிலிருந்து வெறுங்கண்களால் பார்க்கமுடியாதென பின்னர் ஆய்வுகள் நிரூபித்திருந்தன. இதேவேளை கடந்த 1987 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் சீனப் பெருஞ் சுவர் உலக பராம்பரிய தளங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. மனித கட்டுமாணத்தின் மற்றுமொரு உச்சகட்டமான சீனப் பெருஞ் சுவர் ஆரம்பகால மனித வராற்றினை நீண்டுச் செல்லும் நீண்டதொரு வரலாற்று குறிப்பாகும். ................................................................................................................பிரசன்னா 


ஜவஹர்லால் நேரு


ஜவஹர்லால் நேரு

காத்மா காந்தியினால் சுதந்திரம் பெற்றுத்தரப்பட்ட சுதந்திர இந்தியாவினை முதற்முறையாக ஆட்சிசெய்த பெருமைக்குரியவர். நீதி, நேர்மை, கோட்பாடு என காந்தியவாதத்தின் கருத்துக்களை முன்னிலைப்படுத்தி, இந்தியாவில் மாத்திரமின்றி உலகம் போற்றும் தலைவராக வாழ்;ந்தவர் இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு. இவர் கடந்த 1889 ம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ம் திகதி  இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் அலகாபாத் எனும் இடத்தில் மோதிலால் நேருவுக்கும், சுவரூபராணி அம்மையாருக்கும் , மகனாக பிறந்தார்.  நேரு, ஹிந்தி , சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை தனது இளம் பராயத்திலே கற்றதோடு இந்திய கலைகளும் அவருக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. மேலும் இவரின் தந்தையான மோதிலால் நேரு, தனது மகன் இந்திய குடிமக்கள் சேவைக்கு, தகுதிபெறவேண்டுமென விரும்பி,  மேற்படிப்புக்காக இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தார்.  எனினும் நேரு, குறித்த பள்ளிவாழ்க்கை முற்றிலும் விரும்பவில்லையெனவும் , தனது தந்தையின் விருப்பத்திற்காகவே கல்வி கற்றதாகவும் தனது வரலாற்றுக்குறிப்புக்களில்   குறிப்பிட்டுள்ளார். பின்னர் தனது பள்ளிப்படிப்பை முடித்து லண்டன் கேம்பிரிஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த 1907 ம் ஆண்டு தேர்வுப்பரீட்சைகளில் தோற்றி, அந்நாட்டின் டிரின்டி கல்லூரியில் இணைந்து இயற்கை  அறிவியலை கற்றார்.  அதற்கமைய கடந்த 1910 ம் ஆண்டு, குறித்த பல்கலைக்கழகத்தில்  2 ம் இடத்தை பெற்று பட்டம் பெற்றார்.  அதற்கமைய நேரு தனது தந்தையின் விருப்பத்திற்காகவே படித்து சட்டத்துறையிலும் பட்டத்தை பெற்ற நிலையில், இந்தியா திரும்பினார். அதற்கமைய கடந்த 1916 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ம் திகதி கமலா கவ்ல் எனும் பெண்ணை திருமணம் செய்தார். அவர்களுக்கு இந்திரா பிரியதர்சினி எனும் பிள்ளையும் பிறந்தது. அவர் பின்னாளில்  பிரதமராகவும், பதவிவகித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.  இந்நிலையில் கடந்த 1916 ம் ஆண்டில் , தனது தந்தையின் வழிகாட்டலின் கீழ், காந்தியடிகளை சந்தித்த நேரு,  காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டதோடு, காந்தியடிகளின் ஆர்ப்பாட்ட வலிமைகளில் பெரிதும்  ஈர்த்து,  காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினராகவும், காந்தியடிகளின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகவும் மாறினார்.  அதற்கமைய 1920 ம் ஆண்டில் காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த நேரு,  கடந்த 1921 ம் ஆண்டு முதன்முறையாக சிறைக்கு சென்றார். பின்னர் கடந்த 1922 ம் ஆண்டில் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், காந்தியுடன் இணைந்து பலபோராட்டங்களை நடத்திய காரணங்களுக்காக 9 வருடங்களாக அவர் சிறைவாசம் அனுபவித்தார்.  தனது சிறைவாசத்தின்போது, ஜவஹர்லால் நேரு  உலக வரலாற்றின் காட்சிகள், சுயசரிதை , இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். குறித்த படைப்புக்கள் அவரை ஒரு சிறந்த எழுத்தாளராக பெருமைப்படுத்தியதோடு, இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது.  இந்நிலையில் கடந்த 1929 ம் ஆண்டு காந்தியடிகளின் வழிகாட்டலில் இந்திய தேசிய காங்கிரசை தலைமையேற்று நடத்தினார். மேலும் இளம் வயதிலேயே மகாத்மாகாந்தியின் வழிகாட்டலின்கீழ், அவர் காங்கிரசின் இடதுசாரி தலைவராகவும் செயற்பட்டுள்ளார். அதற்கமைய நேரு , துடிதுடிப்பு மிக்க  புரட்சித்தலைவராக ஆங்கில அரசின் பிடியிலிருந்து இந்தியாவை விடுவித்து, முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார்.  மேலும் கடந்த 1947 ம் ஆண்டு,  ஓகஸ்ட் மாதம் 15 ம் திகதி , சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிச்சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம், உலகியல் வாதம் ,ஏழைகள் ,தாழ்த்தப்பட்டவர்கள் பற்றிய அவரது அக்கறை ,அவரை வழிநடத்தி இன்றுவரை இந்தியாவில் தாக்கத்தை உண்டாக்கிய வழிமையான திட்டங்களை உருவாக்க செய்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. சில சமயங்களில் நேருவை , நவீன இந்தியாவின் சிற்பியெனவும், அழைக்கப்படுவதோடு, . இந்நிலையில் இந்தியாவின் முஸ்லிம் பண்டிதர் நேரு எனவும் அழைக்கப்பட்டார். லீக்கின் முஸ்லிம்களுக்கான பாகிஸ்தான் எனும் தனிநாடு கோரிக்கை உள்நாட்டு மோதல்களை ஏற்படுத்தியது. மேலும் தனது சமாதான முயற்சிகள் தோல்விகண்ட நேரு, இந்தியாவின் பிரிவினைவாதத்திற்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்.  அதனைத்தொடர்ந்து பல முறை, பாகிஸ்தானிய தலைவர்களுடனும் நேரு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டபோதும் அவை வெற்றியளிக்கவில்லை. இதனிடையே கடந்த 1947 ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் இந்து பாகிஸ்தான ;போரை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தபோதிலும்,  அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. எனினும் இந்தியாவை உலகில் தன்னிகரற்ற நாடாக உருவாக்கும் திட்டத்தில் மும்முரமாக இறங்கய பிரதமர் ஜவஹர்லால் நேரு,  கடந்த 1951 ம் ஆண்டு, தனது முதல் ஐந்தாண்டு திட்டத்தை வரைந்தார். கல்வி, மருத்துவம் , அறிவியல் , பொருளாதாரம் தொழில்நுட்பம் என பல துறைகளையும் தனது திட்டங்களால் அபிவிருத்தி செய்தார். மேலும்  நேரு உலகின் பல நாடுகளும் வியக்கும் வண்ணம் இந்தியாவின் ஆட்சி கட்டமைப்புக்களை மாற்றியமைத்து, கடந்த 1947 ம் ஆண்டு  முதல், கடந்த 1964 ம் ஆண்டு வரை இந்தியாவை தலைமைத்துவமேற்று வழிநடத்தினார்.  குறித்த காலப்பகுதியில் நேருவிற்கு மக்களின் ஆதரவு அதிகப்படியாகவே  காணப்பட்டது. இந்நிலையில் பல தேர்தல்களில் காங்கிரசை மிகப்பெரிய வெற்றிப்பாதைக்கு இழுத்துச்சென்ற நேரு பல முறை பிரச்சினைகளையும் , விமர்சனங்களையும் அவரது அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.  சில சமயங்களில் அவர் தனது பதவியை விட்டும் விலகுவதற்கு முடிவெடுத்ததாக குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1953 ம் ஆண்டு முதல் நேருவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக அவர்,  காஷ்மீரில் ஓய்வெடுத்து வந்தார். எனினும் சிலர்  அவர் இந்தியாவை  சீனா ஊடுறுவவதன் காரணமாக  , தான் தப்பித்துக்கொள்வதற்கு நடத்தப்படும் நாடகமென விமர்சித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 1964 ம் ஆண்டு, காஷ்மீரிலிருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பிய ஜவஹர்லால் நேரு, பக்கவாதத்தாலும், மாரடைப்பாலும் அவதியுற்றார். தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 1964 ம் ஆண்டு மே மாதம் 24 ம் திகதி  இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, உயிர்நீத்தார்.  அவரது பூதவுடல் இந்து சமய சடங்குகளின் முறைப்படி யமுனை நதிக்கரையில்  தகனம் செய்யப்பட்டது.  இந்தியாவின் முதல் பிரதம மந்திரி மற்றும் பாதுகாப்பு வெளியுறவுத்துறை அமைச்சராக மிக சக்திவாய்ந்த வெளிநாட்டுக்கொள்கையுடன் நவீன இந்திய அரசாங்கத்தை மற்றும் அரசியல் கலாச்சாரத்தை வடிவமைத்ததில் முக்கிய பங்கு வகித்தார்.  இந்நிலையில் அவரின் தலைமைத்துவத்தை பாராட்டி , கடந்த 1989 ம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தினால் நினைவுத்தபால் தலையொன்றும் வெளியிடப்பட்டது.  மேலும் அவர் அணிந்த உடை அவரின் பெயராலேயே இன்றும்  அழைக்கப்படுகிறது.  நேருவின் ஞாபகார்த்தமாக இந்தியாவில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளதோடு, மும்பை நகருக்கு அருகில் ஜவஹர்லால் நேரு துறைமுகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேரு பிரதமராக இருந்த காலத்திpல் அவரது இல்லமாக இருந்த தீன் மூர்த்தி பவான் தற்போது, அவரது நினைவாக அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. சிறந்த ஆங்கில எழுத்தாளராக திகழ்ந்த நேரு, த டிஸ்கவரி ஒப் இந்தியா, கிளைம்ஸ் ஒப் வேல்ட் ஹிஸ்ட்ரி , மற்றும் டுவெட்ஸ் ப்ரீடம் , அதனோடு சுயசரிதை ஆகியவற்றை இவ்வுலகிற்கு தந்தளித்துள்ளார். சுமார் 17 வருடங்களுக்கும் மேலாக சுதந்திர இந்தியாவினை வழிப்படுத்திய ஜவஹர்லால் நேரு இந்தியாவை கட்டியெழுப்பிய முதல் தலைவராவார். .............................................................................................................................................பிரசன்னா 

ஷமார்டின் லூதர் கிங்


ஷமார்டின் லூதர் கிங்

மெரிக்காவின் அடிமை முறையையும் நிற வேறுபாட்டையும் ஒழிப்பதற்கு முதன்முதலில் குரல் கொடுத்தவர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஆகும். அதன் விளைவு ஒரு நாடாக நடிகனால் ஆபிரகாம் லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் ஆபிரகாம் லிங்கனை தொடர்ந்து அமெரிக்காவில் நிலவி வந்த நிறவெறியை எதிர்த்து மீண்டும் ஒருவர் குரல் கொடுத்தார். அவரின் முடிவும் ஆரம்ப முடிவைப் போல் இருந்தாலும் அவரின் உரிமை போராட்டங்கள் இன்றும் உலகளாவிய ரீதியில் பேசப்படுகிறது. அமெரிக்க மக்கள் மத்தியில் இன்றும் நீங்காத இடத்தைப் பிடித்த போராட்ட வீரர் மார்டின் லூதர் கிங் ஆகும். அவர் கடந்த 1929 ஆம் ஆண்டு பிறந்தார். தனது இளமைக்காலம் முதல் சாதாரண பிரஜையாக வாழ்ந்த மார்டின் லூதர் கிங் கடந்த 1954 ஆம் ஆண்டில் அலபாமா எனும் ஊரில் கிறிஸ்தவ மத போதகரானார். அங்கு எளிய மக்களோடும் கறுப்பு இன மக்களோடும் பழகும் வாய்ப்பை பெற்றுக்கொண்ட மார்டின் லூதர் கிங் அந்த மக்கள் படும் இன்னல்களை பொறுக்க முடியாதவராக காணப்பட்டார். அப்போது அமெரிக்காவின் தென் மாநிலங்களில் கறுப்பு இன மக்கள் பொது இடங்களில் நடமாடக்கூடாதென தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் பேருந்துகளிலும் ரயில்களிலும் நீக்ரோ மக்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. வெள்ளையர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் நீக்ரோக்களின் குழந்தைகள் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே கல்வி வேலைவாய்ப்பு போன்றவற்றை நீக்ரோக்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்டது. மேலும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டதோடு அவர்கள் அடிமைகளாக நடாத்தப்பட்டனர். இந்த கொடுமைகளிலிருந்து விடுபட நிக்ரோக்கள் ஒரு தலைவரை எதிர்பார்த்த சந்தர்ப்பத்தில் அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அவர்களின் போராட்ட எழுச்சிக்கு மார்டின் லூதர் கிங் தலைமையேற்றார். ஒரு சந்தர்ப்பத்தில் கறுப்பு இன பெண்ணொருவர் பேருந்தில் வெள்ளையர்கள் அமரும் பகுதியில் தான் அமரப் போவதாகவும் தனக்கு சம உரிமை வேண்டுமெனவும் வாதிட்டார். எனவும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் அவர் கைதுசெய்து சிறைவைக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த விடயத்தினை அறிந்துகொண்ட மார்டின் லூதர் கிங் கறுப்பு இன மக்களை திரட்டி எந்த பேருந்தும் செல்ல முடியாதளவிற்கு போராட்டத்தை ஆரம்பித்தார். இறுதியில் கறுப்பு இன மக்களை பேருநதிலிருந்து ஒதுக்கிவைக்கும் சட்டம் நீக்கப்பட்டது. இந்நிலையில் மார்டின் லூதர் கிங்கின் போராட்டம் அமெரிக்காவிலுள்ள பிற மாநிலங்களுக்கும் பரவியது. அதனைத் தொடர்ந்த கடந்த 1955 ஆம் ஆண்டு மார்டின் லூதர் கிங் சம உரிமை கேட்டு போராட்டத்தை ஆரம்பித்தார். அதற்கு அமெரிக்காவிலிருந்த அனைத்து கறுப்பு இன மக்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தனர். இந்தியாவின் மகாத்மா காந்தியின் போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட மார்டின் லூதர் கிங் தனது வன்முறையின்றிய அமைதியான வழிமுறைகளில் போராட்டங்களை நடாத்தி வந்தார். இந்நிலையில் உலகம் முழுவதும் மார்டின் லூதர் கிங்கின் புகழ் பரவியது. நிக்ரோ மக்களிடத்தில் அவரது செல்வாக்கும் அதிகரித்தது. அதனால் கறுப்பு இன மக்கள் மார்டின் லூதர் கிங்கை கறுப்பு இன மக்களின் காந்தி என அழைத்தனர். வெள்ளையர் மீது பகைமை பாராட்டமலும் கறுப்பு இன மக்களின் நியாயமான போராட்டங்களை விட்டுக்கொடுக்காமலும் மார்டின் லூதர் கிங் போராடினார். இந்நிலையில் அவரது சேவையினை பாராட்டி கடந்த 1964 ஆம் ஆண்டு மார்டின் லூதர் கிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் மாநாடு பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் என கறுப்பு இன மக்களின் விடிவிற்காக அயராது உழைத்தார். அதற்கமைய கடந்த 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி மார்டின் லூதர் கிங் டென்சினி மாகாணத்திலுள்ள லொரேன் எனும் ஹோட்டலில் மேல்மாடியிலிருந்து பொதுக்கூட்டமொன்றில் உரையாடிக்கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்காவின் நிறவெறியை எதிர்த்து போராடிய இவரின் போராட்டம் பல இடங்களில் வெற்றிபெற்று இன்று அமெரிக்காவின் நிறவெறி முற்றாக ஒழிக்கப்பட்டமைக்கு காரணமானவர் ஆனார். இந்நிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் குறித்த ஹோட்டல் அறையில் இதுவரை யாரும் தங்கவில்லை. அதற்கைமைய அவர் தங்கிய்306 ஆம் இலக்க அறையை பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டதோடு குறித்த ஹோட்டல் அருங்காட்சியமாக மாற்றப்பட்டது. உலகில் நிறவெறியை எதிர்த்து போராடிய நெல்சன் மண்டேலா, ஆபிரகாம் லிங்கன் மற்றும் மார்டின் லூதர் கிங் ஆகியோர் இன்றும் கறுப்பு இன மக்களின் கடவுள்களாகவே அடையாளப்படுத்தப்படுகின்றர். மார்டின் லூதர் கிங் மறைந்தாலும் அவர் கறுப்பு இன மக்களுக்கு பெற்றுக்கொடுத்த சுதந்திரம் உரிமைகள் இன்றும் அவரை நினைவுகூறும் இன்றும் அமெரிக்கா கறுப்பு இன வெள்ளையர் பாகுபாடின்றி உலகின் தலைசிறந்த நாடாக அமைவதற்கும் வழிவகுத்த மார்டின் லூதர் கிங் உலகில் இணையற்ற தலைவர்களில் ஒருவர். .............................................................................................................................பிரசன்னா 

தாஜ்மஹால்


தாஜ்மஹால்.   11.11.2012

காதல் என்ற வார்த்தையை பயன்படுத்தாத மனிதன் இல்லை. ஓவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் காதல் வயப்பட்டுள்ளான். ஆனால் காதலுக்குள் செல்லதவர்களையும் வசப்படுத்திய உலகின் பிரமாண்ட சின்னம் காதல் என்பதை அடையாளப்படுத்துவதற்கு இரண்டு சின்னங்கள் உண்டு. ஒன்று மனித இதயம் மற்றொன்று காதலின் நினைவுச் சின்னமாக உண்மையான காதலை பரிணமித்து நிற்கும் தாஜ்மஹால். இந்தியாவின் உத்ரபிரதேஸ் மாநிலத்தில் ஆக்ரா எனும் இடத்தில் காதலின் சின்னமான தாஜ்மஹால் அமைக்கப்பட்டது. தாஜ்மஹால் இன்றைக்கு 350 வருட வரலாற்றைக்கொண்ட பலமும் செல்வ செழிப்பும் கொண்ட முஹல சாம்ராஜ்சியத்தின் வரலாற்றை பின்னணியாக கொண்டதாகும். முஹல சாம்ராஜ்சியத்தின் பேரரசனான தனது காதலியும் மனைவியும் அரசியுமான மும்தாஜ் மகாலின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டதே தாஜ்மஹாலாகும். கடந்த 631  ம் ஆண்டு ஜூன் மாதம் 7 ம் திகதி சாஜஹானின் மனைவியான மும்தாஜ் மஹால் தனது 13 வது பிரவசத்தின் போது உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் தற்சிணப் பிரதேசத்தில் புதைக்கப்பட்டது. இந்நிலையில் அவர் புதைக்கப்பட்டு 6 மாதங்களின் பின்னர் மும்தாஜ் மஹாலின் உடல் தற்போது தாஜ்மஹால் அமைக்கப்பட்டிருக்கும் பிரதேசத்திற்கு எடுத்து வரப்பட்டு எமுனை நதிக்கரையில் புதைக்கப்பட்டது. அதனையடுத்து தனது மனைவிக்காக பிரமாண்டமான கல்லறையொன்றை அமைக்க திட்டமிட்ட மன்னன் சாஜஹானின் சிந்தையில் தோன்றிய கற்பனை சின்னமே தாஜ்மஹாலாகும். அதற்கமைய முஹலாய பேரரசரான சாஜஹானால் கடந்த 1631 ம் ஆண்டு தாஜ்மஹாலுக்கான கட்டுமான பணிகள் ஆரம்பமானது. யமுனை நதிக்கரையில் 42 ஏக்கர் நிலப்பரப்பில் மிகவும் அரிதான வெள்ளை பளிங்கு கற்களை கொண்டு தாஜ்மஹால் அமைக்கப்பட்டது. தாஜ்மஹாலானது கடந்த 1631 ம் ஆண்டு கட்ட ஆரம்பித்து கடந்த 1651 ம் ஆண்டு அதாவது 22 வருட காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது. கட்டுமானத்தின்போது அதிநுட்பமுடைய சுமைக்காவிகள், பொறிகள் மற்றும் 22 ஆயிரம் வேலையாட்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகள் பல நிபுணர்கள் இரவு பகலாக பயன்படுத்தப்பட்டு தாஜ் மஹால் அமைக்கப்பட்டது. தாஜ்மஹால் கட்டித்தின் அடித்தளம் 186 அடி சதுரமான நிலப்பரப்பிலும் நிலத்திலிருந்து 22 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டது. இதன் முதன்மையான கோபுரம் 186 அடியும் ஏனைய 4 கோபுரங்களும் நூற்று 37 அடி உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டது. கோபுரங்களானது தாஜ்மஹால் கட்டிடத்திற்கு வெளிப்பகுதியில் சரிந்த வண்ணமே கட்டப்பட்டுள்ளமை சில அசம்பாவிதங்கள் ஏற்படும்பட்சத்தில் தாஜ்மஹாலை கோபுரங்கள் பாதிக்காக வகையில் கட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தாங்கிகள் இன்றி அமைக்கப்பட்டுள்ள குறித்த கோபுரம் 13 ஆயிரம் டொன் அதாவது 2 ஆயிரம் யானைகளின் எடைக்கு சமனாக காணப்படுகிறது. இஸ்லாமிய மதத்தின் கட்டிட அமைப்புடன் சமச்சீரான அமைப்பில் தாஜ்மஹால் அமைக்கப்பட்டுள்ளது. அதனைச்சூழ அமைக்கப்பட்டுள்ள நீர் நிலைகளில் தாஜ்மகாலின் நிழல் கறுப்பு நிறமாக தோன்றுவதும் அப+ர்வ காட்சியாகும். இதேவேளை தாஜ்மஹாலின் வெளிப்புற கதவுகள் மற்றும் சுவர்களில் பதிப்பெதற்கென ரஷ்யா, திபெத், பாரசீகம் ஆகிய இடங்களிலிருந்து வைரம், வைடூரியம், முத்து, பவளம் ஆகியன வரவழைக்கப்பட்டு பொறிக்கப்பட்டுள்ளன.  தாஜ்மஹாலுக்கான திட்ட வரைவானது ஆரம்பத்திலிருந்தே எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாமல் அமைக்கப்பட்டமை அதன் சிறப்பம்சமாகும். மேலும் தாஜ்மஹாலின் முகப்பில் புனித குர்ஆனின் வசனங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. குறித்த வசனத்தை பொறித்த பாரசீக கலைஞரான அமானகானின் பெயர் மாத்திரமே தாஜ்மஹாலின் ஒரு சுவரில் எழுதப்பட்டுள்ளது. அதில் மன்னரின் பெயரோ குர்ஆனைத் தவிர வேறு எந்த மொழிகளோ அதில் எழுதப்படவில்லை. இந்நிலையில் மும்தாஜின் கல்லறையானது பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதோடு அதனை சூழ சதுர வடிவிலான தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லறை மண்டபத்திற்கு இடது மற்றும் வலது புறங்களில் சிவப்பு நிறத்திலான மசூதி மற்றும் அதற்கு இணையான மற்றுமொரு கட்டிடமும் அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாறான வரலாற்று சாதனை கொண்ட தாஜ்மஹாலின் பின்புலக்கதைகள் சற்று வியப்புக்குள்ளானதாகவே காணப்படுகிறது. அதாவது தாஜ்மஹால் கட்டிப்பணிகள் நிறைவு பெற்றதும் அங்கு வேலை செய்த அனைவரதும் கைகள் வெட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. தாஜ்மஹாலைப்போன்ற ஓர் நினைவாலயம் வேறொருவரால் கட்டப்படுவதை தடுப்பதற்காக சாஜஹான் குறித்த கட்டளையை விடுத்ததாக வரலாற்று செய்திகள் குறிப்பிடுகின்றன. யமுனை நதிக்கரையோரத்தில் முஹலாய சாம்ராஜ்சியத்தின் செல்வ செழிப்பினையும் அன்றைய காலகட்ட கட்டிட நிர்மாண துறையினையும் அன்பின் பெறுமதியினையும் வெளிப்படுத்தி தாஜ்மஹால் ஜொலித்து நிற்கிறது. அதற்கமைய கடந்த 1983 ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் கவ்வி, விஞ்ஞான, கலாசார மையமான யுனஸ்கோ, தாஜ்மஹாலை உலக கலாசார சின்னமாக அறிவித்தது.  பல நுணுக்கமான கட்டிட கலையாலும் உலகில் எப்பகுதியிலும் இல்லாத திட்ட வரைபிலும் அமைக்கப்பட்டுள்ள காதலின் சின்னமான தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதைக் காண்பதற்கு ஆண்டுதோறும் 3 மில்லியனுக்கு அதிகமான மக்கள் வருகைதருகின்றனர். இதேவேளை தாஜ்மஹாலின் மூடப்பட்டுள்ள பல கதவுகள் திறக்கப்படும் போது தாஜ்மஹால் தொடர்பாகவும் முஹலாய சாம்ராஜ்சியத்தின் வரலாறு தொடர்பாகவும் பல விடயங்கள் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது. உலக வரலாற்றில் தாஜ்மஹாலைப்போல ஓர் இனிய கல்லறை இன்னும் எத்தனை ஜென்மங்களிலும் உதயமாகப்போவதில்லை மும்தாஜ் எனும் அழகிய மனைவி மீது சாஜஹான் வைத்திருந்த காதலின் கலை வடிவமே தாஜ்மஹாலாகும். காதல் என்ற 3 எழுத்து சொல்லுக்கு முக்காலமும் சாட்சி கூறும் வகையில் கண்ணீரில் எழுதப்பட்ட காவியத்தின் அடையாளம் தாஜ்மஹால். ......................................................................................................பிரசன்னா 

வீரபாண்டிய கட்டபொம்மன்


வீரபாண்டிய கட்டபொம்மன்


வீரத்தின் உருவமாகவிருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் இந்தியாவின் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போரிட்ட முதன்மையான மன்னராவார். 1760 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி ஜகவீர கட்டபொம்மனுக்கும், ஆறுமுகத்தானுக்கும் மகனாக வீரபாண்டியன் பிறந்தார். தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் வம்சத்தில் பிறந்த வீரபாண்டி கட்டபொம்மன் இன்றும் வீரத்திற்கும் உதாரணமாக கருதப்படுகின்றார். அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் ஆட்சிபுரிந்த ஜகவீரபாண்டியனின் அமைச்சரவையில் பொம்மு என்கின்ற கெட்டிபொம்மு அமைச்சராக பணிபுரிந்தார். வீரம்மிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டிபொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி தமிழில் கட்டபொம்மன் என்று மாற்றமடைந்தது. குறித்த பொம்மு மரபில் வந்தவர்களே ஜகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தால் தம்பதியர் ஆவர். அவர்களது மகனாகவே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டி கட்டபொம்மன் நாயக்க வம்சத்தில் பிறந்து மன்னராக முடிசூடினார். இந்நிலையில் கடந்த 1793 ஆம் ஆண்டு கும்பினியார் எனப்படும் கிழக்கிந்திய கம்பனி கட்டபொம்மனிடம் கப்பம் கேட்டது. எனினும் அதனை கட்டபொம்மன் மறுத்தார். அதனைததொடர்ந்து 1797 ஆம் ஆண்டு ஆங்கிலேய எலன்துறை பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு வந்து கட்டபொம்மனுடன் பேச்சுவார்ததைகளை மேற்கொண்டபோது அதற்கு கட்டபொம்மன் இணங்காததன் காரணமாக ஆங்கிலேயர் கட்டமொம்மன் ஆட்சிக்கு எதிராக போர் பிரகடனம் செய்தனர். நடைபெற்ற போரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்திற்கு முகம்கொடுக்க முடியாமல்  எலன்துறை தோல்வியை சந்தித்தார். நெல்லை மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்த ஜெக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனை தந்திரத்தால் கைதுசெய்ய மேற்கொண்ட முயற்சியும் வீணானது. இதனால் 1799 ஆம் ஆண்டு பார்னமென் என்ற ஆங்கிலேய தளபதி பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டார். தந்திரமாக பின்வாங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறியதால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ஆங்கிலேயர் வசமானது. அதே ஆண்டு புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைதுசெய்யப்பட்டு கிழக்கிந்திய கம்பனியிடம் ஒப்படைக்கப்பட்டார். 1799 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி ஆங்கிலேய தளபதி பேர்னமேனின் உத்தரவுபடி கைத்தாற்று என்ற இடத்தில் வைத்து வீரபாண்டி கட்டபொம்மன் தூக்கலிடப்பட்டார். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டாலும் பாஞ்சாலங்குறிச்சியின் வரலாறு முடியவில்லை. ஆங்கிலேயர்களால் பாலையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துறை 1801 ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். இதனால் கோட்டை மீண்டும் பாஞ்சாலங்குறிச்சி மக்களின் வசமானது. ஆங்கிலேயர்கள் கோட்டையை கைப்பற்றுவதற்காக மேக்காலய என்ற தளபதியின் தலைமையில் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இதனால் பெரும் படையுடன் மீண்டும் ஆங்கிலேயர் கோட்டையை கைப்பற்றினர். குறித்த சந்தர்ப்பத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துறை மற்றும் துரைசிங்கம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். கோட்டையும் தரைமட்டமாக்கப்பட்டது. பாஞ்சாலங்குறிச்சி என்ற கிராமமும் தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் 1974 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராகவிருந்த கலைஞர் கருணாநிதி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு புகழை சேர்க்கும் விதத்தில் கோட்டையை மீள எழுப்பினார். தற்போது அது பிரதான சுற்றுலாத் தளமாக காணப்படுகிறது. வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வரலாற்றை ஓவியங்களாக தீட்டி கோட்டையில் காட்சிக்காக வைத்துள்ளனர். ஆங்கிலேய ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் இன்றும் வீரத்தின் உருவமாக கணிக்கப்படுகின்றமை அவரின் அஞ்சா நெஞ்சத்திற்கு கிடைத்த கௌரவமாகவே காணப்படுகிறது................................................பிரசன்னா 

இராஜேஸ்வரி சண்முகம்


இராஜேஸ்வரி சண்முகம்

வானொலியில் ஒலித்த ஒரு குரல் உலகையே இலங்கை வானொலியை நோக்கி திரும்பிப்பார்க்கச் செய்தது. அவர் வணக்கம் என்று சொன்னால் தமிழ் மணக்கும். இனிமை, ஒலிநயம், உச்சரிப்பு என வானொலி நேயர்களை தன் குரலின் வசியத்தால் கட்டிப்போட்டவர். தலைக்கணத்தில் பூச்சியம் அவர் தமிழ் இலக்கணத்தில் இராச்சியம் அவர்தான் இராஜேஸ்வரி சண்முகம். இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பில் அறிவிப்பாளராக கடமையாற்றிய இராஜேஸ்வரி சண்முகம் மழலை குரலை விட இனிப்பாக மொழி பேசியவர். 1938 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி கொழும்பு கொட்டாஞ்சேனையில் இராஜேஸ்வரி பிறந்தார். தனது ஆரம்பகல்வியை ஆங்கில மொழியில் கற்ற அவர் தமிழில் புகழ்பூத்த அறிவிப்பாளராக விளங்கினார். 1952 ஆம் ஆண்டு தனது 14 ஆவது வயதில் வானொலி கலையகத்திற்குள் காலடி  எடுத்து வைத்தவர் இராஜேஸ்வரி எஸ்.எம்.ராமைய்யா எழுதிய விடிவெள்ளி நாடகம் மூலமாக தன் திறமையை வெளிக்காட்டிய இராஜேஸ்வரி புதிய நட்சத்திரமாக உருவெடுத்தார். வானொலி நாடகம், மேடை நாடகம் என எதுவாக இருப்பினும் மங்காத விடிவெள்ளியாகவே இராஜேஸ்வரி திகழ்ந்தார். நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்து தனது மதுரக்குரலால் மக்களை மயக்கிய இராஜேஸ்வரி 1969 ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராக இணைந்துகொண்டார். 1971 ஆம் ஆண்டில் மாதர்,  சிறுவர் நிகழ்ச்சி தயாரிப்பாளராக செயற்ப்பட்ட அவர் 1974 ஆம் ஆண்டு இலங்கை வானொலியின் நிரந்தர அறிவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டார். 1982 ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் முதல் தர அறிவிப்பாளராக தகுதிபெற்றார். வயது போனாலும் சிலருக்கு இளமை போவதில்லை. இராஜேஸ்வரியை பொறுத்தவரைக்கும் வயது போக போக அவரது குரலின் இனிமை மேலும் அதிகரித்தது. 1994 ஆம் ஆண்டு இராஜேஸ்வரி இலங்கை வானொலியின் மீ.உயர் அறிவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டார். அதே ஆண்டில் சிறந்த அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருதும் அவருக்கு கிடைத்தது. 1995 ஆம் ஆண்டு டொக்டர். புரட்சித்தலைவி விருது ஜெயலலிதாவினால் இராஜேஸ்வரி சண்முகத்திற்கு வழங்கப்பட்டது. மொழிவளர் செல்வி என்ற பட்டம் கலாசார அமைச்சின் மூலம் அவருக்கு வழங்கப்பட்டது. ஐரோப்பாவின் பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ், நோர்வே, ஜேர்மன், லண்டன் போன்ற நாடுகளில் இராஜேஸ்வரிக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. சுவாமி விபுலானந்தரின் நூற்றாண்டு பெருவிழாவினை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் வாகீச கலாமணி என்ற பட்டம் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரால் தொடர்பியல் வித்தகர் என்ற பட்டமும், எட்டையபுரம் தென்பொதி தமிழ்ச் சங்கத்தால் வானொலி குயில் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. விருதுகளும் பதக்கங்களும் பரிசுகளும் இராஜேஸ்வரியைத் தேடிச் சென்று தமது கௌரவத்தை கூட்டிக்கொண்டன. எத்தனையோ பட்டங்கள் பெற்ற போதிலும் தம்பட்டம் இல்லாமல் தயவுடன் பழகிய இராஜேஸ்வரி சண்முகம் அறிவிப்புத்துறையில் மூத்தோர் முதல் இளையோர் வரை அனைவராலும் ‘அம்மா’ என்று கௌரவமாக அழைக்கப்பட்டார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் 50 வருடங்களுக்கும் மேலாக சேவை புரிந்த இராஜேஸ்வரி சண்முகம் உலகின் தலைசிறந்த பெண் அறிவிப்பாளராக பாராட்டப்பட்டுள்ளார். இலட்சக்கணக்கான, மில்லியன் கணக்கான தமிழ் பேசும் உலக நேய நெஞ்சங்களில் நீங்காத இடத்தை பெற்ற அம்மா இராஜேஸ்வரி சண்முகம் வானொலி நேயர்களின் ஒரு சொத்து என பிரபல கவிஞர் கவிப்பேரரசு வாழ்த்தியுள்ளார். நேயர்களின் சொத்தாக மாத்திரமன்றி ஒலிபரப்பு துறையின் முத்தாகவும் இருந்த இராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலித் துறையில் கால வெள்ளத்தில் அழியாத கல்வெட்டாய் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஒரு காலத்தில் இராஜேஸ்வரி சண்முகத்தின் குரல் ஒலிக்காத விளம்பரங்களே இல்லை எனும் அளவிற்கு அவரது புகழ் வானலை வழியே வான் எல்லையை தொட்டிருந்தது. விளம்பர நிகழ்ச்சி, கல்வி நிகழ்ச்சி, சமய நிகழ்ச்சி, செய்தி வாசிப்பு, நேர்காணல். மேடை அறிவிப்பு, பொழுதுபோக்கு நிகழ்ச்சி என அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறப்பாக செய்யக்கூடிய திறமைகள் பூத்துக்குளுங்கம் நந்தவனமாக இராஜேஸ்வரி சண்முகம் காணப்பட்டார். சினிமா நட்சத்திரங்களும் உலக பிரபல்யங்களும் இராஜேஸ்வரி சண்முகத்திற்கு பேட்டி கொடுத்து தமது புகழை மேலும் உயர்த்திக்கொள்ள ஆசைப்பட்டனர். தனது இறுதி மூச்சு வரை வானொலியோடு இணைந்திருந்து கலைத்துறை மீதான தனது பற்றை பறைசாற்றியவர் இராஜேஸ்வரி சண்முகம். அவரிடம் அறிவிப்பு கலையை கற்றவர்கள் ஏராளம். இன்று அவரது மாணவர்கள் இல்லாத ஊடகங்களே இல்லை. இலங்கை வானொலியிலிருந்து ஓய்வுபெற்ற போதிலும் அவரது குரல் கலைத்துறையிலிருந்து ஓய்வு பெறவில்லை. தள்ளாத வயதிலும் நில்லாது தமிழ் தொண்டாற்றியவர் இராஜேஸ்வரி சண்முகம். 70 வயதுகளிலும் இராஜேஸ்வரி சண்முகம் வானொலி நிகழ்ச்சிகளுக்கு குரல் கொடுத்து வந்தார். பல நிகழ்ச்சிகளுக்கு வரையறை அமைக்கு அளவுகோளாக செயற்ப்பட்டவர் இராஜேஸ்வரி சண்முகம். இறைவன் அவரது வாழ்க்கைக்கும் வரையறை வைத்தான். இராஜேஸ்வரி சண்முகம் எனும் வானொலி குயில் தமது 72 ஆவது வயதில் மௌனத்தை சொந்தமாக்கியது. யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் வைத்து இராஜேஸ்வரி சண்முகம் இறையடி சேர்ந்தார். அவரது இழப்பு இலங்கை வானொலித்துறைக்கு பேரிழப்பாகும். இராஜேஸ்வரி சண்முகம் உலகை விட்டு பிரிந்த போதிலும் அவரது குரல் இன்றும் ஒலி அலைகளில் ரீங்காரமிடுகின்றன. இராஜேஸ்வரி சண்முகம் அறிவிப்புத்துறையில் ஓர் பல்கலைக்கழகமாகும். அவரது ஒவ்வொரு அனுபவமும் ஏனையவர்களுக்கு பாடத்திட்டமாகும். பெண்ணாக பிறந்து தமிழ் மண் எங்கும் சொல்லாட்சி புரிந்த வானொலி குயில் இராஜேஸ்வரி சண்முகம் வானொலி ஒலிபரப்பு துறையில் மகுடத்திற்கு மேல் மகுடம் சூட்டிய மாணிக்கமாகும். தமிழ் ஒலிபரப்பு துறை இருக்கும் வரைக்கும் மறுக்கவோ மறக்கவோ முடியாத சாதனைகளை ............................................பிரசன்னா