Monday, December 3, 2012

உலக நீரிழிவு நோய் தினம்

உலக நீரிழிவு நோய் தினம்

21 ஆம் நூற்றாண்டில் மனித இனத்திற்கு பல துறைகளில் பல கோணங்களில் சவால்கள் உருவாகின. சமூக ரீதியான சவால்கள் அதில் முக்கியத்துவம் பெற்றன. மனித சமூகத்தை பாதிக்கும் பிரதான சவால்களில் யுத்தமும் நோயும் முன்னிலை வகிக்கின்றன. சுகாதாரம் மற்றும் சமூகவியல் சார்ந்த பிரச்சினையாக உருவாகிய ஒரு நோய் இன்று எல்லை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. அது தான் நீரிழிவு நோயாகும். இதற்கு சீனி நோய்; என்றும் பெயர் உண்டு.  ஆனாலும் நோயால் பீடிக்கப்பட்டவர்களின் வாழ்வு கசப்பாகவே அமைவதுண்டு. நீரிழிவு என்பது மனிதனுக்கு தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த முடியாத நிலையையே குறிக்கிறது. மனித உடலில் சக்கரையை உடலுக்கு தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாகும். இரத்தத்தில் சக்கரை அளவு சரியாக கட்டுப்படுத்தப்டவில்லையெனின் உயர் இரத்தழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுவதால் பாரிசவாதம் போன்ற நோயும் ஏற்படும் ஆபத்து உருவாகிறது. கடந்த 1922 ஆம் ஆண்டில் பெட்ரிக் பொன்டிங் என்ற விஞ்ஞானி சார்ள்ஸ் பெஸ்ட் என்பவருடன் இணைந்து நீரிழிவு நோயாளர்களின் உயிரைக் காக்கும் இன்சுலினை கண்டுபிடித்தார். இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. மக்கள் மத்தியில் நீரிழிவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பெட்ரிக் பொன்டிங்கின் பிறந்தநாள் உலக நீரிழிவு தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது. இதனால் வருடந்தோறும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி உலக நீரிழிவு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரத்தின் படி உலகில் 350 மில்லியனிற்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நீரிழிவு நோய் 3 வகைகளைக் கொண்டதாகும். முதலாவது வகை நீரிழிவு நோயானது குழந்தைகள், சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. அவர்களுக்கு இன்சுலினை பயன்படுத்தியே சிகிச்சை வழங்க வேண்டும். இன்சுலின் சுரப்பிகள் அதன் செயற்பாட்டை இழப்பதால் இவ்வகை நோய் ஏற்படுகிறது. உலகிலுள்ள 10 வீதமான நீரிழிவு நோயாளர்கள் முதலாவது வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 2 ஆவது வகை நீரிழிவு இன்சுலின் சுரப்பிகள் போதியளவு இன்சுலினை சுரக்காததினாலோ அல்லது சுரக்கப்படும் இன்சுலினிற்கு எதிர் வினை ஏற்படுவதாலோ உருவாகின்றது. இந்த வகை நீரிழிவு நோயினால் 90 வீதமான நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வயது வந்தவர்களுக்கு மட்டுமே ஏற்படும் நீரிழிவு நோய் வகையாகும். அதிக உடற்பருமன் உள்ளவர்களை 2 ஆவது வகை நீரிழிவு தாக்குகிறது. எடையை குறைப்பதாலும், சப்பாட்டு கட்டுப்பாட்டினாலும், உடற்பயிற்சிகளாலும் இதை கட்டுப்படுத்த முடியும். 3 ஆவது வகை நீரிழிவு நோய் கர்ப்பக்கால நீரிழிவு கருதப்படுகிறது. இதில் 2 முதல் 4 வீதமான பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் போது ஏற்படும். குழந்தை பிறந்தவுடன் நோய் மறைந்துவிடும். எனினும் பிற்காலத்தில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும். மனித உடலிலுள்ள இறைப்பையும் குடலும் உணவிலிருந்து குளுகோஸ் எனும் வெள்ளத்தை எடுத்து குருதியில் செலுத்துகிறது. இதே சமயம் கனயத்திலிருந்தும் இன்சுலின் உற்பத்தியாகி குருதியுடன் கலக்கிறது. 3 ஆவது வகை நீரிழிவு நோய் அதிகமாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் பரம்பரையில் நீரிழிவு நோய் இருப்பவர்களுக்குமே ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோயினால் இதயம், கண், சிறுநீரகம் மற்றும் பாதங்கள் ஆகியவையே பாதிக்கப்படுகின்றன. தொடர்ச்சியான நீரிழிவு தாக்கம் கண்பார்வையை இழக்கச் செய்வதோடு செவிப்புலனையும் இழக்கச் செய்வதாக மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது எதிர்காலமே இருண்டு விட்டதாக கவலையடைகின்றனர். ஆனால் அதிகளவான நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உலகை வென்றவர்களும் நம்மத்தியில் வ வாழந்துகொண்டிருக்கின்றனர். உலகின் அதிசிறந்த வேகப்பந்துவீச்சாளரும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவருமான வசீம் அக்ரம் நீரிழிவு நோயை வென்ற வீரராவார். இன்சுலினே வாழ்க்கை என்றிருந்த வசீம் மனம்தளராது கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கி பல்வேறு சாதனைகளை தனதாக்கினார். அவர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு தூதுவராகவும் செயற்படுகின்றார். ; உலகில் ஆசிய நாடுகளில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. நொறுக்குத்தீனிகளுக்கும், பாஸ்ட் புட்டிற்கும்  நவீன சமுதாயம் பழக்கப்பட்டுள்ளமையே இதற்கு முக்கிய காரணமாகும இலங்கையிலும் நீரிழிவு நோயின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. 2050 ஆம் ஆண்டளவில் இலங்கை சனத்தொகையில் அரைப்பங்கினர் அதாவது 50 வீதமானோர் நீரிழிவு நோயின் தாக்கத்திற்கு உட்படலாமென சுகாதார அமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போது 10 முதல் 15 வீதமான பாடசாலை மாணவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை இலங்கை மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதனின் உடலுக்குள் நுழைந்து மனிதனை தவணை முறையில் மரணிக்கச் செய்யும் நீரிழிவு நோயை உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் அழிக்க முடியும். நவீன மருத்துவம் பல்வேறு கொரிய நோய்களை குணப்படுத்தும் தற்காலத்தில் நீரிழிவு நோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பது பாதிக்கப்பட்ட நோயாளர்களின் மன தைரியத்திலேயே தங்கியுள்ளது. ......................................................................................................பிரசன்னா 

No comments:

Post a Comment

hi