Tuesday, October 30, 2012
பனாமா கால்வாய்
பனாமா கால்வாய்
உலகின் அதிசயங்களில் ஒன்றாக பலகாலம் தெரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட மனித வரலாற்றில் மிகப்பெரிய கட்டுமாணங்களில் இதுவும் ஒன்று சுமார் 400 வருட வரலாறு கொண்ட கட்டுமானமாது இன்றும் நவீனமயப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. அவ்வாறு மனிதனின் கற்பனையில் சாத்தியமான கட்டுமானமாக இன்றும் ஆச்சரியத்துக்குரியதாக காணப்படுவது பனாமா கால்வாய் அட்லான்டிக் சமுத்திரம் பசுபிக் சமுத்திரம் ஆகியவற்றின் ஊடாக கப்பல்கள் பயணிப்பதற்காக குறுக்கு இணைப்பாக பனாமாக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. பனாமா நாட்டின் வரலாற்று சின்னமாக குறித்த கால்வாய் காணப்படுகிறது. அட்லான்டிக் பகுதியிலுள்ள கப்பல்கள் கொலோன் எனும் பகுதியின் ஊடாக பல மைல்கள் பயணித்து கெடூன் எனும் இடத்தை அடைந்தவுடன் தடுப்பு தொட்டிகளின் ஊடாக கடல் மட்டத்திலிருந்து 85 அடி உயரத்திற்கு உயர்த்தப்பட்டு 32 மைல்கள் வரை பயணித்று மறுகரையிலுள்ள ஹைலாட் பகுதியில் 3 தொட்டிகளின் உதவியுடன் கடல் மட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு மிரப் லொரஸ் பிரதேசத்தின் ஊடாக 11 மைல்கள் பயணித்து பசுபிக் சமுத்திரத்தில் பயணிக்கின்றன. இதற்கு வழியமைத்து கொடுத்தது பனாமா கால்வாயாகும். பனாமாக கால்வாயின் வரலாறு கடந்த 1524 ஆம் ஆண்டு ஆரம்பித்தது. ஸ்பானியர்ளகின் கட்டுப்பாட்டில் தென் அமெரிக்க நாடுகள் இருந்த காலத்தில் கடல்மார்க்கத்தில் பொன்னையும் பொருளையும் குறுக்கு வழி மார்க்கமாக சேர்ப்பத்தில் தேடிய பாதையின் விளைவே பனாமாக கால்வாய்க்கு முதன்முதலில் வித்திட்டது. அதற்கமைய கடந்த 1529 ஆம் ஆண்டு ஸ்பானிய மன்னரால் பனாமாக கால்வாய்;க்கான திட்டமிடல்கள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் கட்டுமான பணிகள் ஆரம்பித்து 1534 ஆம் வருடம் கைவிடப்பட்டது. 1534 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் உருவான போர் காரணமாக கைவிடப்பட்டது. எனினும் பல்லாயிரணக்கான உயிர்களை பலிகொடுத்து பல நூறாண்டுகளுக்கு பிறகு குறித்த கால்வாய் திட்டம் அமெரிக்காவினால் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. ஸ்பானியர்கள் பிரித்தானியர்கள் பிரான்ஸ் நாட்டவர்கள், ரஷ்ய நாட்டவர்கள் என பலர் குறித்த கால்வாய் பணிகளை மேற்கொண்டு வெற்றிபெற முடியாத நிலையில் கைவிட்டனர். எனினும் கடந்த 1889 ஆம் ஆண்டு சுமார் 250 மில்லியன் டொலர்கள் செலவில் அமெரிக்க அரசாங்கம் குறித்த பனாமாக கால்வாய் கட்டுமாணத்தினை நிறைவு செய்து வரலாற்றில் இடம்பிடித்தது. பனாமா நாட்டிலுள்ள 51 மைல்கள் நீளமான இரு வழிப் பயணப் பாதைகளையும் 3 படிமுறை உயரங்களையும் கொண்டது பனாமாக கால்வாய்hகும். குறித்த கால்வாய் பல வருட கட்டுமாணத்தின் பின்னர் கடந்த 1914 ஆம் அண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி சர்வதேச கப்பல் போக்குவரத்pற்காக திறக்கப்பட்டது. இதன் கட்டுமாண பணிகளில் தினமும் சராசரியாக 44 ஆயிரம் வேலையாட்கள் முழு நேரம் கடமையாற்றினர். வளைந்தும் நெலிந்தும் செல்லும் பனாமாக கால்வாய் கடல் மட்டத்திலிருந்து 290 அடி ஆழத்திலும் 275 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. பனாமாக கால்வாயின் பெரும்பகுதி சீமெந்தினால் கட்டப்பட்டதாக கட்டுமாணத்திற்கான 5 மில்லியன் தொன் சீமெந்துகள் அமெரிக்காவிலிருந்து கப்பல் மூலமாக பனாமாவிற்கு எடுத்துவரப்பட்டது. பனாமாக கால்வாயின் இரு மரங்களிலும் 3 சோடி தொட்டிகளும் சீமெந்தினால் கட்டப்பட்டுள்ளன. அதில் அமைக்கப்பட்டுள்ள இராட்சத கதவுகள் வி வடிவில் மூடி திறக்கும் வகையில் அமைக்கப்பட்டுளு;ளன. ஒவ்வொரு கதவுகளும் சராசரியாக 750 தொன் எடை கொண்டவையாகும். மேலும் ஒவ்வொரு கதவுகளும் 64 அடி அகலமும் 7 அடி உயரமும் கொண்டதாகும். குறித்த கதவுகள் அனைத்தும் மின்சாரத்தின் உதவியுடன் மூடி திறக்கப்படுகின்றன. மேலும் தொட்டிகள் ஒவ்வொன்றும் 110 அடி அகலமும் ஆயிரம் அடி நீளமும் உள்ளனவாகும். ஒரு கப்பலானது பனாமாக கால்வாயை கடப்பதற்கு சராசரியாக 52 மில்லியன் கலன் நீர் தேவைப்படுகின்றது. ஒவ்வொரு தொட்டிகளிலுமுள்ள நீரின் அளவை உயரத்துவதற்கும் தாழ்த்துவதற்கும் சராசரியாக 15நிமிடங்கள் தேவைப்படுகின்றன. தொட்டிகள் ஊடாக கப்பலானது சராரியாக 85 அடி உயரத்திற்கு உயர்த்த அல்லது தாழ்த்துவதற்கு நீர் பயன்படுத்தப்படுகிறது. மேலும் குறித்த பனாமாக கால்வாயை கடப்பதற்கு 8 தொடக்கம் 10 மணிநேரம் எடுக்கும். இதன்காரணமாக அட்லான்டிக் மற்றும் பசுபிக் சமுத்திரத்தையும் கடந்து கப்பல் பயணிப்பதற்கான நேரத்தில் 40 மடங்கு நேரம் மிச்சமாகின்றது. அதிகளவில் ஈரவலய காடுகளைக் கொண்ட பனாமா நாட்டில் மழை வீழ்ச்சிக்கு பஞ்சமில்லை என்பதால் பனாமாக கால்வாயை சுற்றி இயற்கை எழில் கொஞ்சும் பசுமை காடுகளும் இயற்கை மலைத்தொடர்களும் காணப்படுகின்றன. மேலும் கப்பல் போக்குவரத்தினால் விரயமாகும் தண்ணீரை அந்நாட்டின் மழைவீழ்ச்சி ஈடு செய்கிறது. மேலும் வரலாற்று குறிப்புகளின் அடிப்படையில் பனாமாக கால்வாயின் கட்டுமாண காலங்களில் விபத்துக்கள் தொற்றுநோய்கள் தற்கொலைகள் காரணமாக சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மனித உயிர் இழப்புகள் ஏற்ப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. பனாமாக கட்டுமாண காலத்தில் குறித்த பகுதியிலிருந்து தோண்டப்பட்ட மண் கல் பாறை என்பவற்றின் தொகை பூமியின் ஒரு அந்தத்தில் இருந்து மறு அந்தம் வரை 16.2 சதுர அடி பரப்புள்ள துளையிடுவதற்கு சமமானதாக ஒப்பிடப்படுகிறது. மேலும் கால்வாயின் இரு அந்தங்களிலும் 15 அங்கல விட்டமுள்ளதும் 20 மைல்கள் எறிவீச்சு உள்ளதுமான பீரங்கிகள் நிலையாக நிறுவப்பட்டுள்ளன. எனினும் குறித்த பீரங்கிகள் இன்று வரை சுடுவதற்கு பாவிக்கும் நிலை ஏற்படவில்லை. மேலும் பனாமாக கால்வாய்pன் கட்டுமான பணிகளுக்கென 27 ஆயிரம் தொன் எடைகொண்ட வெடிமருந்துகள் பாவிக்கப்பட்டுள்ளன. வருடம் முழுவதும் 24 மணிநேரம் இயங்கும் கால்வாயின் ஊடாக பயணிக்கும் கப்பல்களில் 68 வீதமான கப்பல்கள் அமெரிக்காவிற்கு பயணிப்பதாகும். குறித்த கப்பல் பயணிப்பதற்காக கட்டணத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 349 டொலர்கள் செலுத்தப்பட்டமை வரலாற்று சாதனையாகவுள்ளது. பனாமாக கால்வாயின் ஊடாக கடந்த 1914 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் அண்டு வரை 9 இலட்சத்து 22 அயிரத்திற்கும் அதிகமான கப்பல்கள் பயணித்துள்ளன. இந்நிiயில் கடந்த 1+903 ஆம் ஆண்டு முதல் தனது கட்டுப்பாட்டில் பனாமாக கால்வாயை வைத்திருந்த அமெரிக்கா கடந்த 1977 ஆம் ஆண்டு பனாமா நாட்டுடன் கைச்சாத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த 1990 ஆம் அண்டு டிசம்பர் 31 ஆம் திகதி சம்பிரதாய பூர்வமாக பனாமாவிடம் பனாமா கால்வாயை ஒப்படைத்தது. இந்நிலையில் பனாமா நாட்டினால் நிர்வாகத்திற்கு கொண்டுவரப்பட்ட குறித்த கால்வாய் தற்காலத்தில் பெருகி வரும் நவீன இராட்சத கப்பல்களையும் உள்வாங்கும் வகையில் நவீனமானதும் மிகவும் விரிவானதுமான கால்வாயுமாக அ மைக்கப்பட்டு வருகிறது கடந்த 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்டுமான பணிகள் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது, புதிய கட்டுமாணத்தற்கான உத்தேச செலவு 5.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கட்டப்பட்திலிருந்து வருடம் முழவதம் இயங்கிய பனாமாக கால்வாய் மண்சரிவு அமெரிக்க இராணுவ தேவை கடும் மழை காரணமாக கடந்த 1915 , 1989, 2010 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மூடப்பட்டன. சுமார் 400 வருடத்திற்கு மேலாக கால்வாய் பணிகளின் பயனை தற்போது பனாமா நாடு அனுபவிக்கிறது. மேலும் பனாமா நாட்டின் தேசிய வருமானத்தில் மிகப்பெரும் பங்களிப்பு பனாமா கால்வயின் ஊடாக கிடைக்கப்பெறுகிறது. இவ்வாறு மனிதனின் கட்டுமான வரலாற்றில் வாழ்நாள் வரை வாழ்ந்துகொண்டிருக்கும் பனாமாக கால்வாய இன்றும் என்றும் உலகின் அழியா சொத்துக்களில் ஒன்று… சுழலும் உலகில் வலம் வரும் வசந்த்தின் வலம் வரும் நீங்களும் பனாமாக கால்வாயில் வலம் வர வாழ்த்துக்கள்.....................................பிரசன்னா
சௌமியமூர்த்தி தொண்டமான்
சௌமியமூர்த்தி தொண்டமான்
சுமார் 50 வருடகாலத்திற்கு மேலாக குடியுரிமைக்கும் கல்வி பெறுவதற்கும் போராட்டம் நடத்தப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட பெருந்தோட்ட மக்களை தலைநிமிர்ந்து வாழவைப்பதற்கு அடித்தளம் அமைத்தவர். இன்றும் இந்திய வம்சாவளி மக்களின் தன்னிகரற்ற தலைவராகவும் வாழ்வாதார உரிமைகளை பெற்றுத்தந்த மாகானாகவும் போற்றப்படுபவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆவார். இவர் கடந்த 1913 ஆம் ஆண்டு ஓகஸ்;ட் மாதம் 30 ஆம் திகதி இந்தியாவின் புதுக்கோட்டையில் அரச பரம்பரை வழிவந்த கருப்பைய்யா , சீதாம்மை ஆகியோருக்கு 5 ஆவது பிள்ளையாக பிறந்தார் சௌமியமூர்த்தி எனும் சௌமியமூர்த்தி தொண்டமான். இந்நிலையில் கடந்த 1924 ஆம் ஆண்டு தனது 11 ஆவது வயதில் சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கைக்கு வந்தார். அதற்கிணங்க கடந்த 1927 ஆம் ஆண்டு தனது 14 ஆவது வயதிலிருந்து கம்பளை புனித அந்திரேயர் கல்லூரியில் சௌமியமூர்த்தி கல்வியை மேற்கொண்டார். இதனிடையே குறித்த காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்திருந்த மகாத்மா காந்தி கண்டியில் ஆற்றிய உரை சௌமியமூர்த்தியின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன்காரணமாக இந்திய விடுதலை இயக்கத்தில் இவரது நாட்டம் அதிகரித்தது. இதேவேளை கடந்த 1932 ஆம் ஆண்டு சௌமியமூர்த்தி தொண்டமான் இந்தியாவைச் சேர்ந்த கோதை என்பவரை திருமணம் முடித்தார். அவர்களுக்கு இராமநாதன் எனும் குழந்தையும் பிறந்தது. பின்னர் தனது தந்தையின் தோட்ட நிர்வாகத்தினை ஏற்று இயக்கி வந்த தொண்டமான கடந்த 1940 ஆம் ஆண்டு அவரது தந்தை இறப்பதற்கு முன்பு தனது குடும்பத்தை இலங்;கைக்கு அழைத்து வந்தார். இந்நிலையில் கடந்த 1930 ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் ஹெட்டன் நகரில் இயங்கி வந்த காந்தி சேவா சங்கம் எனும் இயக்கத்தில் கூட்டங்களில் செல்வந்தராகவிருந்த சௌமியமூர்த்தி பங்கேற்று வந்தார். தனது தந்தைக்கு அரசியல் மீது ஆர்வம் இல்லையெனினும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த வேலையாட்கள் படும் துயரங்களை அறிந்ததன் காரணமாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இயக்கம் உள்ளிட்ட பலவற்றில் உரையாற்றி வந்தார். பின்னர் கடந்த 1939 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 24 ஆம் திகதி ஜவஹர்லால் நேருவின் கருத்திற்கேற்ப ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரசின் கம்பளை கிளையின் தலைவராக சௌமியமூர்த்தி தொண்டமான் தெரிவு செய்யப்பட்டார். கடந்த 1930 ஆம் ஆண்டின் இறுதிக் காலப்பகுதியில் ஏற்ப்பட்ட இந்திய எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அதிகளவான தோட்ட தொழிலாளர்கள் இலங்கை இந்திய காங்கிரசில் இணைந்தனர். இதன் காரணமாக குறித்த மக்களின் பிரச்சினை தொடர்பாக பேசவேண்டிய தேவை இலங்கை இந்திய காங்கிரசிற்கு ஏற்ப்பட்டது. எனினும் ஒரு அரசியல் கட்சியிடம் பேச்சுவார்த்தைகள் நடத்த அப்போதைய தோட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. மேலும் தொழிற்ச்சங்கங்களுடனேயே பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுமென அறிவித்தனர். அதன் விளைவாக கடந்த 1940 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை இந்திய காங்கிரசின் தொழிற்ச்சங்க கிளை ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப தலைவராக சௌமியமூர்த்தி தொண்டமான் தெரிவு செய்யப்பட்டார். மேலும் இதன் செயலாளராக இந்திய பாம்பே பல்கலைக்கழகத்தின் வர்த்தக பட்டதாரியும் இடதுசாரி கருத்துக்களை கொண்டவருமான அப்துல் அசீசும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதற்கமைய கடந்த 1940 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி இலங்கை இந்திய காங்கிரசின் ஆரம்ப நிகழ்வை தலைமையேற்று சௌமியமூர்த்தி தொண்டமான் நடாத்தியிருந்தார். இதுவே அவரது வாழ்வின் முதலாவது பிரதான அரசியல் நிகழ்வாகும். இந்நிலையில் கடந்த 1942 ஆம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரசின் தலைமைப் பதவிக்கான போட்டியில் அசீசிடம் தோல்வியடைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் கடந்த 1945 ஆம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரசினதும், அதன் தொழிற்ச்சங்கத்தினதும் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 1946 ஆம் ஆண்டில் கேகாலை தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்ப்பட்ட பிரச்சி;னைகளை தீர்ப்பதற்கு தொழிற்ச்சங்க போராட்டத்தை சௌமியமூர்த்தி ஆரம்பித்து அதில் வெற்றிகண்டார். இதேவேளை கடந்த 1947 ஆம் ஆண்டின் 95 பாராளுமன்ற அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டது. அதில் இலங்கை இந்திய காங்கிரஸ் 8 ஆசனங்களுக்கு போட்டியிட 7 ஆசனங்களை கைப்பற்றியது. அதில் சௌமியமூர்த்தி தொண்டமான் நுவரெலியா ஆசனத்தில் போட்டியிட்டு 9 ஆயிரத்து 386 வாக்குளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். பின்னர் இலங்கையின் முக்கிய அரசியல் சக்தியாக வளர ஆரம்பித்த சௌமியமூர்த்தி தொண்டமான் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இதேவேளை இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனாநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பரிப்பு சட்டத்தை எதிர்த்து பல போராட்டங்களை ஆரம்பித்தார். எனினும் அவரால் அப்போது குறித்த சட்டத்தை தடுத்து நிறுத்த முடியாத நிலையில் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க இறந்த பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொண்டமானும் ஏனைய 6 பிரதிநிதிகளும் மீண்டும் பாராளுமன்றத்திற்கு செல்ல தெரிவு செய்யப்படவில்லை. இந்தியர்கள் குடியுரிமை அற்றவர்களாக காணப்பட்டமையே இதற்கு காரணமாகும். இந்நிலையில் கடந்த 1952 ஆம் அண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி இல்ங்கை வாழ் இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு தொண்டமான பேரணியொன்றையும் சாத்தியாகிரக போராட்டமொன்றை நடத்த ஆரம்பித்தார். மேலும் அப்துல் அசீசுடன் இணைந்து பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியிலும் தனது சத்தியாகிரக போராட்டத்தை நடத்தி இந்திய மக்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் அளவிற்கு அனுமதி வாங்கினார். இந்நிலையில் ஆரம்பத்திலிருந்தே அசீசுடன் பல கருத்து முரண்பாடுகள் கொண்டிருந்த சௌமியமூர்த்தி தொண்டமான் பின்னர் கடந்த 1945 ஆம் ஆண்டு இவர்களது உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது. இந்நிலையில் கடந்த 1952 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகத அசீஸ் கடசியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் அசீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் எனும் புதிய கட்சி;யை ஆரம்பித்தார். இந்நிலையில் கடந்த 1954 ஆம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரசிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட இந்திய சார்பு குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் இலங்கை இந்திய காங்கிரசானது இலங்கை ஜனநாயக காங்கிரசாக பெயர்மாற்றப்பட்டது. அப்போது இலங்கை இந்திய காங்கிரசி;ன தலைவராக அசீச் செயற்பட்டார். இந்நிலையில் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற்ச்சங்கமானது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அசீஸ் கட்சியிலிருந்து வெளியேறியதன் காரணமாக ஏற்ப்பட்ட சட்டச்சிக்கல்களினால் கடந்த 1954 ஆம் ஆண்டு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமைப் பொறுப்பு சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு வழங்கப்பட்டது, அதிலிருந்து கடந்த 1999 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவராக பதவி வகித்தார். இதேவேளை தொண்டமான் கடந்த 1956 ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டு கடந்த 1978 ஆம் ஆண்டு வரை அதில் பொறுப்பு வகித்து வந்தார். மேலும் கடந்த 1957 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சில முரண்பாடுகளை மலையகத்திற்கு புகுத்திய போது அதனை தடுத்து நிறுத்தி மலையகத்தை பிரச்சினைகளிலிருந்து பாதுகாத்திருந்தார். இதனிடையே கடந்த 1959 ஆம் ஆண்டு அசீஸின் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டது. அதில் தொண்டமான் தோல்வியுற்று பாரளுமன்றம் செல்ல முடியாத நிலையில் காணப்பட்டார். எனினும் கடந்த 1960 ஆம் ஆண்டில் இலங்கை பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சௌமியமூர்த்தி தொண்டமானை தொழிலாளர் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்தார். அவர் கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த அவர் இலங்கையிலுள்ள அனைத்து மக்களுக்கும் தனது சேவையினை செவ்வனே செய்துள்ளார். மேலும் மலையகத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் சீர் செய்து மலையக கல்வியினை வளர்ப்பத்தில் பெரும் பங்காற்றியுள்ளார். அவரின் முயற்சியால் மலையகத்திலுள்ள பெரும்பாலான பாடசாலைகள் சுவீடனின் சீடா நிதியுதவியுடனான கல்வியமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகளின் கல்வி அபிவிருத்த pவேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு இன்றும் குறித்த நடவடிக்கை .இடம்பெறுகிறது, மேலும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் சார்பில் பாராளுமன்ற அங்கத்துவம் பெறுதவற்கு வழியமைத்துக்கொடுத்த மாபெரும் தலைவர் இவராவார். அவர் செய்த போராட்டங்களை இன்று பெருந்தோட்ட மக்கள் குடியுரிமை பெற்று இந்நாட்டு பிரஜைகளாக வாழ்வதற்கு வழியமைத்தது. இந்நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தனது 86 ஆவது வயதில் பெருந்தோட்ட மக்களை தலைநிமிர்ந்து வாழவைத்த சௌமியமூர்த்தி தொண்டமான் உயிர்நீத்தார். சுமார் 21 வருடங்களாக இலங்கை பாராளுமன்றத்தில் அமைச்சராக பதவி வகித்த அவர் இறக்கும் வரை அதாவது 86 ஆவது வயது வரை அமைச்சுப் பதவியினை வகித்துள்ளார். மேலும் இலங்கையில் அதிகூடிய வயதில் அமைச்சராக செயற்ப்பட்டவரும் அவரே ஆவார். இதேவேளை தான் இறக்கும் வரை இலங்கை அரசியலில ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் தொண்டமான் இருந்து வந்தமை இலங்கை வாழ் மக்களின் அனைவரினதும் வரவேற்பையும் பெற்றது. இவரை கௌரவிக்கும் முகமாக இலங்கை அரசினால் பழைய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இவரின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் ஆரம்பித்த பல வேலைத்திட்டங்கள் இன்றும் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மலையகத்தின் வளர்ச்சி, கல்வி, பொருளாதாரம் , குடியுரிமை அரசியல் , கலாசாரம் என அனைத்தையும் வளர்த்து இன்றும் என்றும் இந்திய வம்சாவளி மக்களின் மனதில் மாத்திரமில்லாமல் இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களின் இதயத்தில் குடிகொண்ட பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆவார். .............................................................................................................................................பிரசன்னா
Sunday, October 28, 2012
சார்லி சாப்ளின்
சார்லி சாப்ளின் (28.10.2012)
திரையுலகிற்கு நகைச்சுவை பாத்திரத்தை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். இவரை திரையில் பார்க்கும் போதே துன்பங்கள் நீங்கி , உள்ளங்கள் சிரிக்குமளவில் தன் நகைச்சுவையால் அனைவரையும் கவர்ந்த ஒருவர். நடிகர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் என பல பரிமாணங்களில் வெற்றிபெற்று இன்றும் நகைச்சுவையின் முகவரியாக காணப்படுபவர் சார்ளி சாப்ளின். இவர் , கடந்த 1889 ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 16 ம் திகதி , இலண்டனில் வால்வோர்த் சார்ள்சுக்கும், ஹனா ஹரியாத் ஹில்லுக்கும் மகனாக பிறந்தார் சார்ள்ஸ் ஸ்பென்சர் சாப்ளின் எனப்படும் சார்ளி சாப்ளின். இவரது தாய் , தந்தையருக்க்pடையில் பிரிவு ஏற்பட , சிறுவயதிலேயே தாயின் பராமரிப்பிலேயே சார்ளி சாப்ளின் வளர்ந்தார். இந்நிலையில் கடந்த 1896 ம் ஆண்டில் ,வேலையெதுவும் கிடைக்காத நிலையில், சார்ளியும் , அவரது சித்தியும் லம்பெத்திலுள்ள வேர்க் ஹவுஸ் ஒன்றில் தங்கியிருந்த தங்களது வாழ்க்கையினை கொண்டுசென்றனர். இதனிடையே அவரது தந்தை , சார்ளி சாப்ளினுக்கு 12 வயதாகும் போது, உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து மன உளைச்சலுக்குள்ளான அவரது தாய், சிறிது காலத்தில் உயிரிழந்தார். அதனையடுத்து, தனது வாழ்க்கையை தானாகவே நடத்திக்கொள்ள வேண்டிய கட்டத்திலிருந்த சார்ளி சாப்ளின், நாடகங்கள் நடித்தல், மேடைகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றல் என தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். சாப்ளினுக்கு 5 வயதாகும்போதே , அவர் தனது தாயின் உதவியுடன் நடிப்புத்துறையில் களமிறக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து பல்வேறுபட்ட வேடங்களில் நடித்த சார்ளி சாப்ளின், தனது தாயின்வழிகாட்டலுக்கமைய நடிப்புத்துறையையே தெரிவுசெய்தார். இந்நிலையில் சாப்ளினின் நடிப்புத்திறமையினை பார்த்த தயாரிப்பாளர் மேக் செனட் , அவரது நிறுவனமான கீஸ்டோன் திரைப்பட நிறுவனத்தில் சாப்ளினை இணைத்துக்கொண்டார். அதில் கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்திய சார்ளி சாப்ளின், பின்னர் கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார். அதிலும் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்த சார்ளி சாப்ளின், மக்கள் மனதில் வேகமாக இடம்பிடித்து தனக்கென ஒரு பாணியினை உருவாக்கினார். மேலும் அவர் குறித்த நிறுவுனத்தில் ஆரம்பத்தில் 150 டொலர்களை மாத்திரமே ஊதியமாக பெற்றவந்த நிலையில், தனது அபரிதமான வளர்ச்சியினால் கடந்த 1917 ம் ஆண்டுகளில் ஒரு மில்லியன் டொலருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். குறித்த நிறுவனத்தில் தொழில்புரியும்போதே அவர் புதிய படைப்புக்களை இயக்கவும், அவற்றை வெளியிடவும் தனது திறமையால் அனுமதி பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து தனது அனுபவங்களை பயன்படுத்தி , கடந்த 1919 ம் ஆண்டு, யுனைட்டன் ஆர்ட்டிஸ்ட் எனும் கலையகத்தை ஆரம்பித்தார். இந்நிலையில் திரையுலகில் கதை வசனமின்றி, தனது உடல் அசைவினாலும் தன்னிகரற்ற நடிப்பினாலும், நகைச்சுவைகளை வெளிப்படுத்தி , அதன்மூலம் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு கலைஞராக சார்ளி சாப்ளின் வளர்ந்தார். கடந்த 1927 ம் ஆண்டிலேயே , பேசும் திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்திருந்தன. எனினும் கடந்த 1930 ம் ஆண்டு வரை சாப்ளின் பேசும் படங்களிலிருந்து ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் சார்ளி சாப்ளின் , முதன்முதலில் நடித்த பேசும் திரைப்படம் , கடந்த 1940 ம் ஆண்டு வெளியான த கிரேட் டிக்டேட்டர் எனும் திரைப்படமாகும். குறித்த திரைப்படமானது ஹிட்லரையும், அவரது கொள்கையையும் எதிர்த்து குரல்கொடுத்த படமாகும். குறித்த திரைப்படம் அமெரிக்க , 2 ம் உலகப்போரிற்கு செல்வதற்கு முன்பதாக வெளியிடப்பட்டது. குறித்த திரைப்படத்தில் சாப்ளின் ஹிட்லர் மற்றும் ய+த இனத்தை சேர்ந்த ஒருவராக இரட்டை வேடம் கொண்டு நடித்திருந்தார். குறித்த திரைப்படத்தை ஹிட்லர் இரண்டு முறைகள் பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவர் திரைப்படங்களில் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்கவைத்திருந்தாலும், இவரது வாழ்க்கை சற்று கடினமான வாழ்க்கையாகவே அமைந்தது. இவரது திருமணங்கள் அனைத்தும் விவாகரத்திலேயே சென்று முடிந்தது. மேலும் இவரது திரையுலக வெற்றிகள் மூலமாக இவருக்கு கிடைத்த புகழ் பலமுறை அவரது தனிப்பட்ட வாழ்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. சாப்ளின் கடந்த 1918 ம் ஆண்டு, தனது 28 ஆவது வயதில் 16 வயதுமிக்க மில்ட்ரெட் ஹாரிசை திருமணம் முடித்தார். எனினும் கடந்த 1920 ம் ஆண்டு இருவருக்குமிடையில் , விவாகரத்து ஏற்பட்டுது. பின்னர் தனது 35 ஆவது வயதில் 16 வயதான லீடா கிரே என்பவரை கடந்த 1924 ம் ஆண்டு திருமணம் முடித்துக்கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்த நிலையில் , இவர்களது வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்தது. மேலும் குறித்த திருமண வாழ்க்கையானது ஒப்பந்த அடிப்படையில் நிறைவுபெற வருமான வரி சிக்கல்களினாலும் மன அழுத்தத்தினாலும் பெருமளவில் பாதிக்கப்பட்ட சார்ளி சாப்ளின், தனது நகைச்சுவை பாத்திரத்தில் ஒருபோதும் இவற்றை வெளிப்படுத்தியதில்லை. இதனிடையே சாப்ளின் தொடர்பாக பல அந்தரங்க விடயங்கள் நீதிமன்றத்தினால் வெளியிடப்பட, அவர் மீதான எதிர்ப்பு பிரச்சாரங்கள் ஆரம்பமாகின. இந்நிலையில் சாப்ளின் தனது 47 ஆவது வயதில் , கடந்த 1936 ம் ஆண்டு பாலட் கொடர்டை ரகசியமாக திருமணம் முடித்துக்கொண்டார். சில வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த இவரது திருமண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிவடைந்தது. பின்னர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சார்ளி சாப்ளின், தனது புகழை இழக்கும் தருவாய்க்கு சென்றார். இதேவேளை பின்னர் தனது 54 ஆவது வயதில், கடந்த 1943 ம் ஆண்டு சார்ளி சாப்ளின் 17 வயதான ஓணா ஓணீ என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 8 குழந்தைகள் பிறந்து அதன்பின், சீரான திருமண வாழ்க்கை சாப்ளின் மேற்கொண்டாலும், அவர் மீது எழுந்த ஒவ்வொரு கசப்பான அனுபவங்களும் அவரை , மேலும் பாதித்தது. இதனிடையே இவரது திரைப்படங்களில் பாட்டாளிகள் மற்றும் ஏழைகளின் கவலைக்கிடமான நிலைமையினை சித்தரித்து காட்சிகள் அமைக்கப்பட்டதன் காரணமாக அவர் அமெரிக்க கொள்கைளுக்கு புரம்பான நடவடிக்கைளில் ஈடுபடுவதாகவும், அவர் கம்ய+னீசிய வாதியெனதும் சந்தேகிக்கப்பட்டார். மேலும் அவரை கண்காணிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, அமெரிக்காவில் சாப்ளின் வாழும் உரிமையை நீகக்வும் முயற்சிகள் இடம்பெற்றன. சார்ளி சாப்ளின் பெற்ற வெற்றிகள் அனைத்தும் அமெரிக்காவில் பெறப்பட்டவையென்றாலும், அவர் பிரித்தானிய குடியுரிமையுள்ள ஒரு நபராகவே வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 1952 ம் ஆண்டில் சார்ளி சாப்ளின் , இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அவர் அங்கிருந்து நாடு திரும்புவதை தவிர்ப்பதற்கு சூழ்ச்சிகள் இடம்பெற்று அவர் அமெரிக்கா திரும்புவதற்கான அனுமதிச்சீட்டு இரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக அவர் ஐரோப்பாவிலேயே தங்கி வாழ்ந்ததோடு, பெரும்பாலும் வெவே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிலேயே வாழ்ந்தார். இந்நிலையில் இவர் கடந்த 1977 ம் ஆண்டு, தனது 88 ஆவது வயதில் , டிசம்பர் மாதம் 25 ம் திகதி , உயிர்நீத்தார். இவரது உடல் வார்ட் நகரிலுள்ள கல்லரையில் அடக்கம் செய்யப்பட்டது. எனினும் அவரது குடும்பத்தாரிடம் பணம் பரிப்பதற்காக , இவரது உடல் கல்லரையிலிருந்து திருடப்பட்டது. எனினும் திருடர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டு, அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. அவர் 2 முறை சிறப்பு ஓஸ்கார் பெற்ற பெருமைக்குரியவராவார். த சக்சஸ் மற்றும், த ஜாஸ் சிங்கர் ஆகிய திரைப்படங்களுக்காக இவருக்கு ஒஸ்கார் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 1975 ம் ஆண்டு மார்ச் மாதம் 4 ம் திகதி பிரித்தானியாவின் 2 ம் எலிசபெத் அரசியினால் சாப்ளினுக்கு சேர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் கடந்த 1985 ம் ஆண்டு அவரை கௌரவிக்கும் நோக்கில் , இங்கிலாந்து அரசு இவரது உருவத்தை அஞ்சர் தலையொன்றில் வெளியிட்டு பெருமையளித்தது. இதேவேளை கடந்த 1994 ம் ஆண்டு ,அமெரிக்க அஞ்சர் தலையொன்றிலும் இவரது உருவம் பொறிக்கப்பட்டது. இதனிடையே சார்ளி சாப்லினின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில், கடந்த 1992 ம் ஆண்டு சாப்ளின் எனும் திரைப்படமும் வெளியிடப்பட்டது. இதனிடையே கடந்த 2005 ம் ஆண்டு நடைபெற்ற நகைச்சுவையாளர்களின் நகைச்சுவையாளர் எனும் கருத்துக்கணிப்பில் உலகத்தின் தலைசிறந்த 20 நகைச்சுவை நடிகர்கர்களில் ஒருவராக சாப்ளின் தெரிவுசெய்யப்பட்டார். நகைச்சுவை என்ற ஒரு விடயத்தை திரைப்படத்துறையில் அறிமுகம் செய்து, வசனங்களின்றி தன் உடல் அசைவினால் கோடிக்கணக்கான உள்ளங்களை சிரிக்க வைத்து, அனைவரது மனதிலும் இடம்பிடித்து, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சொந்த வாழ்க்கையில் எத்தனையோ சோகங்களை சுமந்தாலும் , மக்களை தங்களது கவலை மறந்து சிரிக்கசெய்த சார்ளி சாப்லின் ஒரு சகாப்தம்............................................................................................................பிரசன்னா
Saturday, October 27, 2012
ஆபிரகாம்லிங்கன்
ஆபிரகாம்லிங்கன் (26.10.2012)
மனித இனத்திலேயே ஒருவர் மற்றொருவரை அடிமையாக நடத்துகின்ற போக்குஇ மனித இனம் தோன்றிய காலத்திலேயே தொடங்கிவிட்டது. பணம்இ பதவிஇ நிறம்இ இனம்இ மொழி ஆகியவற்றைக்கொண்டு மனிதர்கள் பிரிவதும்இ பேதம் காணுவதும்இ அதன் மூலம் கலவரங்கள் மூள்வதும் இன்றும் இடம்பெற்று வருகிறது.அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடியவர்கள் உலகில் பலருண்டு. அவர்களில் தலைசிறந்தவர் மனிதன் முயற்சித்தால் எந்தவொரு காரியத்தையும் செய்து முடித்துவிடலாம் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர். சாதாரண எளிய குடும்பமொன்றில் பிறந்து தனது இடைவிடாத முயற்சியினால் , உலக வல்லரசான அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவிவகித்தவர் ஆக்கமேதை ஆபிரகாம் லிங்கன். இவர் கடந்த 1809 ம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 12 ம் திகதி அமெரிக்காவின் கென்டக்கியில் , ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார் ஆபிரகாம்லிங்கன். அவரது தந்தை தோமஸ் லிங்கன் ஒரு தச்சராவார். அவரது தாயின் பெயர் நான்சி ஹாங்ஸ் என்பதாகும். சிறுவனாக இருந்தபோதே தந்தையின் தச்சுப்பணிகளில், லிங்கன் உதவிப்புரிந்து வந்தார். ஆபிரகாம்லிங்கனுக்கு 9 வயதாகும்போது அவர் தனது தாயை இழந்தார். அதன்பின்னர் ஏழ்மைக்குடும்பம் என்பதால் ஆபிரகாம்லிங்கனால் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. பிறருக்கு உதவி செய்தல், அடுத்தவர் மீது அன்பு செலுத்துதல் , கலகலப்பாக பழகுதல், வேடிக்கையாக பேசுதல் என சிறுவயதிலேயே , பல அரிய குணங்களை கொண்ட ஆபிரகாம்லிங்கன் மீது, மற்றவர்களுக்கு விருப்பம் ஏற்பட்டது. ஆபிரகாம்லிங்கன் வாழ்ந்த காலத்தில் அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்கள் அடிமைகளாக விற்கப்படும் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன. அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் கொடுமைகளை பார்த்த ஆபிரகாம்லிங்கன் அதனை எவ்வாறாவாது தடுத்து நிறுத்த வேண்டுமென சிந்தித்தார். அதற்கான வழிமுறைகளை கண்டறிய ஆபிரகாம்லிங்கன் பல முயற்சிகளை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து தனது 22 ஆவது வயதில் அலுவலகமொன்றில் குமாஸ்தாவாக வேலைபார்த்த ஆபிரகாம்லிங்கன் சொந்த தொழில் முயற்சியை மேற்கொண்டு அதில் தோல்வியடைந்தார். பின்னர் , அஞ்சல் காரராக பணியாற்றிய அவர் , இரவல் புத்தகங்களை வாங்கி சுயமாக கற்று, ஒரு வழக்கறிஞராகினார். இந்நிலையில் அரசியலில் ஈடுபடுவதன் மூலமே அடிமைத்தனத்தை ஒழிக்க முடியுமென முடிவுக்கு வந்த ஆபிரகாம்லிங்கன், கடந்த 1834 ம் ஆண்டு , தனது 25 ஆவது வயதில் முதன்முதலாக இலிநோய் மாநில சட்டமன்ற பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற அமெரிக்க செனட்சபை தேர்தலிலும் வெற்றிபெற்று ,செனட்சபைக்கும் தெரிவானார் ஆபிரகாம்லிங்கன். அமெரிக்க தேசத்தின் வரலாறு, அமெரிக்க அரசியல், அன்றைய அமெரிக்காவின் நிலைமை, நீக்ரோக்களை அடிமையாக நடத்தும் வழக்கம், வெள்ளையர், கறுப்பர் என்ற பாகுபாடு, தேசத்தை சீரழிக்கும் சூழ்ச்சிகள் என்பவற்றையெல்லாம் தனது
தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெளிவுபடுத்திய ஆபிரகாம்லிங்கன், மக்கள் மனதில் இடம்பிடித்து, அமெரிக்க செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து சில காரணங்களுக்காக அரசியலை விட்டு விலகிய ஆபிரகாம்லிங்கன், 5 ஆண்டுகள் தனியார் துறையில் வழக்குறைஞராக பணியாற்றினார். பின்னர் 1854 ம் ஆண்டில் , மீண்டும் அரசியலில் நுழைந்த ஆபிரகாம்லிங்கன், அரசியலில் கடுமையாக உழைத்தார். அவரின் முயற்சியால் கடந்த 1860 ம் ஆண்டு, அமெரிக்காவின் 16 ஆவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் , அவர் அடுத்த ஆண்டு ஜனவரி முதல், அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர். அதன்பின் அமெரிக்காவில் அடிமைத்தனம் இருக்க கூடாதென பிரகடனம் செய்தார். இந்நிலையில் ஆபிரகாம்லிங்கனின் குறித்த பிரகடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் தென்பகுதியிலுள்ள மாநிலங்கள் , பிரிந்து சென்றன. அதனைத்தொடர்ந்து தென் மாநிலத்திற்கும் , ஆபிரகாம்லிங்கனை ஆதரித்த வடமாநிலத்திற்குமிடையில் உள்நாட்டு போர் ஆரம்பமானது. இந்நிலையில் இரு மாநிலங்களையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆபிரகாம்லிங்கன், அடிமைத்தலையையும் , அமெரிக்காவை ஒன்றுபடுத்தவும் உள்நாட்டு போர் அவசியமென்பதை உணர்ந்தார். அதன் காரணமாக சுமார் 4 வருடங்களாக ஆபிரகாம்லிங்கன், அமெரிக்காவில் உள்நாட்டு போரை நடத்தினார். அதனைத்தொடர்ந்து தென் மாநிலம் தோற்கடிக்கப்பட்டு, ஆபிரகாம்லிங்கனின் உயரிய சிந்தனைக்கு வெற்றிகிடைத்தது. அதற்கமைய 1865 ம் ஆண்டில் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டுமென்ற தீர்மானம் அமெரிக்க மக்களைவில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. மேலும் யுத்த காலத்தின்போது, கடந்த 1863 ம் ஆண்டு, ஆபிரகாம்லிங்கன்
ஆற்றிய கெட்டிச்பேர்க் பேருரையில் , விடுதலை உணர்ச்சி மிக்க ஐக்கிய அமெரிக்காவை பாதுகாப்பதற்கே , உள்நாட்டு போர் நடத்தப்படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப்பட்டவர்கள் என அவரின் உண்ணத வாசகம் அனைவரையும் ஈர்த்தது. மேலும் மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம் ,மக்களால் ஆளப்படும் அரசாங்கம் எனும் வாக்குமொழிகள் அழிந்துபோகாது என்பது ஆபிரகாம்லிங்கனின் மிகப்புகழ்பெற்ற மக்களாட்சி குறித்த விளக்கமாகும். இந்நிலையில் கடந்த 1842 ம் ஆண்டு, தனது 33 ஆவது வயதில் , மேரி டோட் எனும் பெண்ணை மணந்த ஆபிரகாம்லிங்கனுக்கும் , 4 ஆண்குழந்தைகள் பிறந்தனர். இதனைத்தொடர்ந்து, கடந்த 1864 ம் ஆண்டு, நடைபெற்ற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது தடவையாகவும் ஆபிரகாம்லிங்கன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர் இரண்டாவது முறையாக பதவியேற்று ஒருமாத காலத்துள் அமெரிக்காவில் இடம்பெற்ற அனைத்து, போர் நடவடிக்கைகளையும் முடிவுக்கு கொண்டு வந்த அவர், அமெரிக்காவில் அமைதியான நிலைமையை ஏற்படுத்தினார். இந்நிலையில் கடந்த 1865 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ம் திகதி , ஆபிரகாம்லிங்கன் தனது மனைவியுடன் அமெரிக்கன் கசின் எனும் நாடகத்தை பார்ப்பதற்காக சென்றவேளை, நாடக அரங்கத்தில் வைத்து, ஜோன் வில்ஸ் ப+த் எனும் நாடக நடிகன் ஆபிரகாம்லிங்கனை குறிவைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். படுகாயங்களுக்கு உள்ளாகிய அவர், கடந்த 1865 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ம் திகதி தனது 56 ஆவது வயதில் உயிரிழந்தார். பிரிந்துபோன வட, தென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன. மேலும் தென்பகுதி அமெரிக்க அடிமைகளான கறுப்பினத்தவர்களுக்கு விடுதலை கிடைத்தது. எனினும் அமெரிக்காவை பொறுத்தவரையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நிகழ்வினை, நிகழ்வதற்கு காரணமாக இருந்த ஆபிரகாம்லிங்கனால் கண்டுகளிக்க முடியாமல் போனமை , அனைவரது மனதினையும் நெகிழச்செய்தது. இந்நிலையில் அமெரிக்க வரலாற்றை பொறுத்தவரையில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, வரலாற்று ரீதியான கறுப்பின , வெள்ளையர் முரண்பாடுகளை தீர்த்து, மறக்க முடியாத ஆக்கமேதையாக ஆபிரகாம்லிங்கன் போற்றப்படுகிறார். இந்நிலையில் அமெரிக்காவின் சிறந்த அதிபருக்கான வாக்கெடுப்புகளில் ஆபிரகாம்லிங்கன் தொடர்ச்சியாக முதல் 3 இடங்களுக்குள் தரப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் கடந்த 2004 ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்போது ஆபிரகாம்லிங்கனை பல வரலாற்று ஆய்வாளர்கள் சிறந்த ஜனாதிபதியாக முதலிடத்தில் தரப்படுத்தினர். அமெரிக்காவின் ஜோர்ஜ் வொஷிங்டனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது ஜனாதிபதியாக ஆபிரகாம்லிங்கன் போற்றப்படுகிறார். ஆபிரகாம்லிங்கன் படுகொலை செய்யப்பட்;ட பின்னர், அவர் அமெரிக்க மக்களால் ஒரு தேசிய தியாகியென மரியாதை செய்யப்படுகிறார். மேலும் அடிமைத்தனத்தை ஒழிக்க போராடியதால் மக்களால் அவர் , ஒரு சிறந்த சுதந்திர போராளியாக வணங்கப்படுகிறார். தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்! எனும் வாக்கியத்தை கூறி, உலகில் பலருக்கு முன்னோடியாக திகழ்ந்த ஆபிரகாம்லிங்கன் , உலகை மாற்றியவர்களில் ஒருவர்…...........................................பிரசன்னா
Sunday, October 21, 2012
ஈபிள் டவர்
ஈபிள் டவர்..
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்டது. பிரான்ஸ் நாட்டை அடையாளப்படுத்தும் சின்னமாகவும் திக்கற்றவர்களுக்கு ஒரு களங்கரை விளக்கமாகவும் காணப்படுவது பிரான்சின் ஈபிள் கோபுரம். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஷ் நகரத்தின் மையத்தில் வானுயர்ந்த கோபுரமாக காணப்படும் கோபுரம் ஈபிள் கோபுரம் உலக சுற்றுலா துறையின் முக்கிய தளமாக மாறியுள்ளது. அண்மைய மதிப்பீட்டின் அடிப்படையில் கோபுரம் ஐரோப்பாவின் விலைமதிப்பு மிக்க நினைவுச்சின்னமாக பெயரிடப்பட்டுள்ளது. மேலும் பிரான்சின் பொருளாதாரத்தில் ஆண்டுதோறும் 344 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்களை ஈபிள் டவர் ஈட்டித்தருவதாக அண்மைய புள்ளிய விபரம் சுட்டிக்காட்டுகின்றது. கடந்த 1887 ம் ஆண்டு ஈபிள் டவரின் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய கடந்த 1889 ம் ஆண்டு மார்ச் மாதம் 31 ம் திகதி ஈபிள் கோபுரம் திறக்கப்பட்டது. இதனை 121 வேலையாட்கள் இரண்டு வருடம் 2 மாத காலத்தில் கட்டி முடித்தனர். இது அகில உலக கண்காட்சி மற்றும் பிரன்ச் புரட்சி நூற்றாண்டு நிiவு ஆகியவற்றை நினைவு கூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது. கடந்த 1887 ல் ஈபிள் டவர் நிர்மாணிக்க தொடங்கிய காலத்தில் அதனை 20 வருடங்களின் பின்னர் இடிப்பதாக திட்டமிடப்பட்டது. எனினும் குறித்த திட்டம் பின்னர் கைவிடப்பட்ட தற்காலத்தில் அது நிரந்தர சின்னமாகி உலக புகழ்பெற்று விளங்குகின்றது. கோபுரத்தின் மொத் உயரம். 984 அடியாகும். அதாவது 324 மீற்றராகும். சுமார் 100 சதுர மீற்றர் பரப்பில் 8 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள் அதாவது தற்போதைய பெறுமதியில் 30 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் செலவில் ஈபிள் கோபுரம் கட்டிமுடிக்கப்பட்டது. கோபுரமானது முற்றுமுழுதாக 18 ஆயிரத்து 38 விசேட உருக்கு இரும்பு துண்டங்களால் உருவாக்கப்பட்டது. துண்டங்கள் அனைத்தும் 2.5 மில்லியன் தரையாணிகளின் உதவியுடன் பொருத்தப்பட்டுள்ளது. கோபுரத்தின் மொத்த எடை 10 ஆயிரத்து 100 தொன் என கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு 7 வருடத்திற்கும் ஒருமுறை 60 தொன் எடையுடையதும் மண் நிறம் கொண்டதுமான வர்ணக்கலவை கோபுரத்திற்கு ப+சப்படுகிறது. கோபுரமானது மொத்தமாக 3 தட்டுகள் கொண்டு காணப்படுகிறது. அதில் மொத்தமாக 1665 படிக்கட்டுக்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு கோபுர தட்டுக்களிலும் உணவகம் கண்காட்சி மண்டபம். ஓய்வெடுக்கும் பகுதி சுற்றுலா வெளி தகவல் நிலையம் என்பவை காணப்படுகின்றன. ஈபிள் கோபுரத்தின் உச்சிப்பகுதி கடந்த 1909 ம் ஆண்டிலிருந்து வானொலி ஒளிபரப்பு தேவைக்கும் கடந்த 1957 ம் ஆண்டிலிருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் கோபுரத்தின் நிலகீழ் பகுதியில் சுரங்க வானொலி நிலையமும் இயங்கிவருகிறது. ஈபிள் கோபுரமானது கட்டிமுடிக்கப்பட்ட காலத்திலிருந்து கடந்த 1930 ஆண்டு வரையான 40 வருடங்களில் உலகின் மிகவும் உயரமான கோபுரம் எனவும் பெயர் பெற்றிருந்தது. கோபுரத்தின் அடிப்பகுதியில் 4 முகப்புகளிலும் ஒன்றில் 18 பெயர் வீதம் பிரான்ஸ் நாட்டின் 72 விஞ்ஞானிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்;டுள்ளன. பிரான்சின் ஈபிள் கோபுரமானது அந்நாட்டினை உலகளாவிய ரீதியில் அடையாளப்படுத்திக்காட்டியது. கோபுரமானது மனிதனின் சாமார்த்தியமிக்க தொழிநுட்ப நகர்வுகளை உலகுக்கு எடுத்துக்காட்டி இன்றும் அசையாமல் உயர்ந்து நிக்கிறது. உலகில் இன்றும் தலைநிமிர்ந்து வாழும் ஈபிள் கோபுரம் மனித வரலாற்றின் சாதனை பட்டியலில் தன்னையும் இணைத்து வானுயர வாழ்கிறது...............பிரசன்னா
பேர்ஜ் டுபாய் கோபுரம்
பேர்ஜ் டுபாய் கோபுரம்.
உலகில் நவீனதொழில்நுட்பம் வளர்ச்சியடையும் சமகாலத்தில் ஏனைய துறைகளும் பாரிய வளர்ச்சியை பெற்றுள்ளன. கட்டிடநிர்மாணத்துறை அபிவிருத்தியின் புரட்சியை எட்டியுள்ளது. டுபாயில் அமைக்கப்பட்டுள்ள பேர்ஜ் டுபாய் கட்டிடம் இதற்கு சிறந்த முன்னுதாரணமாகும். 828 மீற்றர் உயரத்தையுடைய பேர்ஜ் டுபாய் கோபுரம் உலகில் மிக உயர்ந்த கட்டிடமாக் காணப்படுகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ள பேர்ஜ் டுபாய் கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் நிர்மாணப் பணிகள் நிறைவுபெற்றன. 190 ஹெக்டேயர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டள்ள கட்டிடம் 160 மாடிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. பிரம்பிப்பூட்டும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள பேர்ஜ் டுபாய் கோபுரத்தில் செயற்கை நதியும் அமைக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களால் 29 மில்லியன் மணித்தியாலங்களில் 8 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றத்திற்கு முகம் கொடுக்கக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள பேர்ஜ் டுபாய் கோபுரத்தில் 66 இரட்டைத் தட்டுமேல் கீழ் காவிகள் காணப்படுகின்றன. அதுசெக்கனுக்கு 18 மீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடியது. ஒரேநேரத்தில் 42 பயணிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள மேல் கீழ் காவியின் ஊடாக கட்டிடத்தின் அடித்தட்டிலிருந்து மேல் தட்டிட்கு பயணிக்க 15 நிமிட மணிநேரம் தேவைப்படுகிறது. பேர்ஜ் டுபாய் கட்டிடத்தின் அடித்தட்டிலிருந்து மேல் தட்டைநோக்கி 8 பாகை செல்சியசினால் வெப்பநிலை குறைவடைவதும் விசேட அம்சமாகும். 175 ஹோட்டல் அறைகள், 900 தொடர்மாடிகள், 4 நீச்சல் தடாகங்கள், உடற்பயிற்சி கூடம், ஆகியவற்றுடன் கூடியபேர்ஜ் டுபாய் கோபுரத்தில் 3 ஆயிரம் தனியார் வீடுகளும் காணப்படுகின்றன. சிறந்த காலநிலையில் கோபுரத்தை 60 மைல் தூரத்திலிருந்து வெற்றுக்கண்களால் பார்க்கமுடியுமென கணிப்பிடப்பட்டுள்ளது. சிக்காக்கோ கட்டிடகலைஞரால் வடிவமைக்கப்பட்ட பேர்ஜ் டுபாய் கோபுரம் பாலைவனத்தில் கட்டிடகலை நிகழ்த்திய அற்புதமென வர்ணிக்கப்படுகிறது. பேர்ஜ் டுபாய் எனஅழைக்கப்பட்ட கட்டிடம் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி பேர்ஜ் கலிபா எனபெயர் மாற்றம் பெற்றது. கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்வதற்கு பொருளாதார சிக்கல் ஏற்ப்பட்ட சந்தர்ப்பத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைவர் உதவிபுரிந்தமைக்காக கலிபா என்ற தலைவரை அராபிய மொழிப்பதம் கட்டிடத்தின் பெயரோடு இணைக்கப்பட்டது. பேர்ஜ் என்பது அராபிய மொழியில் நட்சத்திர கூட்டம் எனபொருள்படும். பேர்ஜ் கலிபா என்பது நட்சத்திர கூட்டத்தின் தலைவர் எனபொருள்படுகிறது. பெயரைப் போலவே உலகில் மனிதனால் கட்டப்பட்ட மிக உயர்ந்த கோபுரமாக காணப்படும் பேர்ஜ் கலிபா கட்டிடம் உலக மக்களை நிமிர்ந்துபார்க்கச் செய்யும் மற்றுமோர் அற்புதபடைப்பாகும்..........................................................................................பிரசன்னா
பாப்பரசர் முதலாம் ஜோன் போல்
முதலாம் ஜோன் போல்
உலகளாவிய கிறிஸ்தவர்கள் மத்தியில் ,அழியாத நினைவலைகளை ஏற்படுத்திச்சென்றவர்களில் இவரும் ஒருவர். கிறிஸ்தவர்களின் புனித தந்தையாக கருதப்படுபவர்கள் , பலர் வாழ்ந்து மறைந்திருந்தாலும் சில காலங்கள் மாத்திரமே திருத்தந்தையாக வாழ்ந்து, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் திருத்தந்தை முதலாம் ஜோன் போல் ஆகும். இவர் கடந்த 1912 ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 17 ம் திகதி , வேர்னிஸ் நகரில் எல்பினோ லூச்சினியா எனும் இயற்பெயருடன் பிறந்தார் திருத்தந்தை முதலாம் ஜோன் போல். ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவரான இவர் , மரைமாவட்ட குருமடத்தில் இணைந்து, தனது சமயக்கல்வியினை கற்றதோடு, உயர்குரு மடத்தில் பயின்றுகொண்டு, யேசு சபையில் இணைய விருப்பம் கொண்டார். எனினும் அவர் பயின்றுகொண்டிருந்த குரு மட அதிபர் , அதற்கு அனுமதி தர மறுத்ததன் காரணமாக , மரைமாவட்ட குருத்துவப்பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு, கடந்த 1935 ம் ஆண்டு குருவானார். தான் படித்த அதே குருமடத்தில், பேராசிரியராகவும், துணை அதிபராகவும் பணியில் இணைந்த திருத்தந்தை முதலாம் ஜோன் போல், உரோம் நகரின் கிரக்கோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் , இறையியலில் முனைவர் பட்டம் பெற விரும்பினார். இந்நிலையில் அங்கு கல்வி கற்க சென்ற அவரை படிக்கும்போதே, கற்பிக்கவும் வேண்டுமென குருமட அதிகாரிகள் விருப்பம் கொண்டனர். எனினும் கிரகோரியன் பல்கலைக்கழகம், இவர் உரோம் நகருக்கு வந்து, ஒரு வருடமாவது கல்லூரியில் படிக்க வேண்டுமென நிர்ப்பந்தித்தது. எனினும் திருத்தந்தை முதலாம் ஜோன் போலை இழக்க விரும்பாத வேர்னிஸ் குருமடத்திற்காக குறித்த விடயத்தில் ,நேரடியாக தலையிட்ட பாப்பிறை 12 ம் பயஸ் , அவரை அங்கிருந்தே முனைவர் பட்டப்படிப்பை உரோம் பல்கலைக்கழகத்தில் தொடர , சிறப்பு அனுமதி வழங்கினார். இந்;நிலையில் திருந்தந்தை 23 ம் ஜோன் , கடந்த 1958 ம் ஆண்டு, குருலூச்சினியாவை ஆயராக அறிவித்து, அவரை திருநிலைப்படுத்தினார். அதற்கிணங்க திருத்தந்தை 23 ம் ஜோன் கூட்டிய இரண்டாம் வத்திக்கான் பொது அவையின் அனைத்து கூட்டங்களிலும், கலந்துகொண்டார் ஆயர் லூச்சினியா. இந்நிலையில் கடந்த 1970 ம் ஆண்டு வேர்னிஸ் பேராயராகவும், முதுபெரும் தலைவராகவும் , பொறுப்பேற்றுக்கொண்ட இவரை, கடந்த 1973 ம் ஆண்டு, கர்தினாலாக உயர்த்தினார் திருத்தந்தை 6 ம் போல். அதற்கமைய 1978 ம் ஆண்டில் இவர், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 263 ஆவது திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கமைய தன்னை ஆயராக திருநிலைப்படுத்திய மற்றும் கர்தினாலாக உயர்த்திய இரண்டு முன்னாள் திருத்தந்தையர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களின் பெயர்களை தனக்கு வைத்துக்கொண்டார். அதற்கமைய திருத்தந்தையாக பதவியேற்றதன் பின்னர், தனது பெயரை முதலாம் ஜோன்போல் என மாற்றிக்கொண்டார் லூச்சியானி. மேலும் திருத்தந்தையர்களில் முதலாம் எனும் விடயத்தினை முதலில் பெயருக்கு முன் பயன்படுத்திய முதலாவது திருத்தந்தையும் இவராவார். இதேவேளை இரண்டு பெயர்களை கொண்ட முதலாவது திருத்தந்தையும் இவரேயாவார். தனது எளிமையான நடவடிக்கைகளாவும், புன்னகையாலும் அனைவரையும் கைநீட்டி வரவேற்பும் பண்பாலும் உலகையே கவர்ந்தார் திருத்தந்தை முதலாம் ஜோன் போல். இந்நிலையில் தான் திருத்தந்தையாக பதவியேற்கும்போது எளிமையின் அடையாளமாக மும்முடி அணிதலை தவிர்த்தவரும் இவரேயாவார். மேலும் உலகின் ஒவ்வொரு கோவிpலின் வருமானத்திலும் ஒரு பகுதி , மூன்றாம் உலக நாடுகளின் ஏழைத்திருச்சபை;பு வழங்கப்படவேண்டுமென்ற விதியை , முதன் முதல் அமுல்படுத்தியவரும் இவரேயாவார். இவருக்கு முன்னாலுள்ள மற்றும் பின்னால் வந்த அனைத்து திருத்தந்தையர்களும் எதை சொன்னாலும் திருச்சபையின் சார்பாக பேசுவதாக, நாம் என்ற பதத்தையே பயன்படுத்தி வந்தனர். எனினும் முதன்முதலில் நான் என்ற பதத்தை , பயன்படுத்திய பெருமைக்குரியவர் திருத்தந்தை முதலாம் ஜோன் போல் ஆவார். திருச்சபையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்ட பெருமையும் இவருக்குரியது. தொடர்ந்து, திருச்சபையில் பல சீர்திருத்தங்களை ஏற்படுத்துவாரென எதிர்பார்க்கப்பட்ட திருத்தந்தை முதலாம் ஜோன் போல், 33 நாட்கள் மாத்திரமே திருத்தந்தையாக கடமையாற்றினார். பாப்பரசராக மக்கள் மத்தியில் இவர் பிரபலமாவதற்கு முன்னரே, கடந்த 1978 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 ம் திகதி , மாரடைப்பால் உயிர்நீத்தார். உலகில் அதிகுறைந்த நாட்கள் திருத்தந்தையாக வாழ்ந்தவர்களில் முதலாம் ஜோன் போல் திருத்தந்தையும் ஒருவராவார். உலகில் திருத்தந்தையர்களின் வரலாற்றில், ஒரு தனியிடம் பிடித்து, எளிமையின் அடையாளமாக வாழ்ந்து, குறைந்த நாட்கள் திருத்தந்தையாக வாழ்ந்த பாப்பரசர் முதலாம் ஜோன் போல் அவர்கள் , என்றும் மக்கள் மனதில் மரியாதைக்குரியவர்.....................பிரசன்னா
சர்வாதிகாரி ஹிட்லர்….
சர்வாதிகாரி ஹிட்லர்….
யுத்தம், வீரம், சர்வாதிகாரம், என்ற வார்த்தைகளை கேட்கும்போதெல்லாம் இவரின் பெயர் , அவ்வப்போது அனைவரையும் ஞாபகப்படுத்திச்செல்லும், 2 ம் உலக மகா யுத்தம் இடம்பெறுவதற்கும், சுமார் 20 கோடி பேருக்கு மேல் உயிரிழப்பதற்கும், காணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். இன்றும் , சர்வாதிகார ஆட்சியென்று சொல்வதற்கு பதிலாக, அனைவரும் ஹிட்லரின் ஆட்சி என்று சொல்லுமளவுக்கு, வரலாற்றில் இடம்பிடித்தவர், ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லர். இவர் , கடந்த 1889 ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 20 ம் திகதி வடஆஸ்திரியாவிலுள்ள பிரானோ எனும் ஊரில், எலோய்ஸ்; ஹிட்லர், கிளாரா போல்ஸ் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் ஹிட்லர். தான் பிறந்தது முதலே, நோயுற்றவராக இருந்த ஹிட்லர், அடிக்கடி சுகயீனமுற்ற நிலையில், பிறந்து ஒரு வருடத்திற்கு பின்னரே சீரான உடல்நிலையை பெற்றார். மேலும் தனது தாயின் மீது ஹிட்லர், அதிக பக்தியும் , பாசமும் கொண்டவராக காணப்பட்டார். இதேவேளை தனது தந்தையின் மூன்றாவது மனைவியின் பிள்ளையான ஹிட்லர், தந்தையின் ஏனைய மனைவிமார்களின் துன்புறுத்தல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் இளம் வயதிலேயே உள்ளாகியிருந்ததாக, தனது மெயின் கேம் எனும் சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தார். ஹிட்லர் பாடசாலையில் படிக்கும்போது, வகுப்பில் முதல் மாணவனாக வரும் அளவிற்கு, கல்வியில் சிறந்து விளங்கினார். எனினும் அவர் 6 ம் வகுப்பிற்கு பின்னர் , கல்வியில் சோபிக்காத நிலையில் , படிப்பில் ஆர்வம் குறைந்து , சித்திரங்கள் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. அதன் காரணமாக அழகான ஓவியங்களை வரைவதற்கான ஆற்றலை சிறுவயதிலேயே பெற்றார். மேலும் மாணவப்பருவத்திலேயே நாவல்கள் படிக்கும் ஆர்வம் கொண்ட அவர், போர்கள் பற்றிய கதைகளில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 1903 ம் ஆண்டில் ஹிட்லரின் தந்தை இறந்தபிறகு தந்தையின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த ஹிட்லர் நாட்கள் செல்ல , முரடனாக மாறினார். மாணவர்கள், ஆசிரியர்களுடன் சண்டையிடும் அளவிற்கு, தனது மனநிலையை மாற்றியமைத்துக்கொண்டார். தனது 17 ஆவது வயதில் கல்லூரி இறுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஹிட்லர், தனது முரட்டுத்தனத்தினால் கணக்கின்றி , கல்வியினை புரக்கணித்தார். இந்நிலையில் தனது கல்லூரி தேர்வினை பயன்படுத்தி, கடந்த 1907 ம் ஆண்டில் ஓவியக்கல்லூரியில் இணைய முயன்றபோதும் , ஹிட்லருக்கு அனுமதி கிடைக்கவில்லை. பின்னர், அதேயாண்டில் தனது தாய் இறந்துபோக மனமுடைந்த ஹிட்லர் , ஓவியங்களை வரைந்து தனது வாழ்வாதாரத்தை மேற்கொண்டார். இவரின் ஓவியங்கள் மக்களிடம் நன்மதிப்பு பெற்றதன் காரணமாக சொந்தமாக ஓவியக்கூடமொன்றை அமைத்து , வாழ்க்கையை தொடர்ந்தார். இதனிடையே, சிந்தியா எனும் பெண்ணை காதலித்த ஹிட்லருக்கு காதல் தோல்வி ஏற்பட, ஹிட்லர் இராணுவத்தில் இணைந்துகொண்டார். அதற்கமைய முதலாம் உலகப்போரின் போது ஜேர்மனி இராணுவத்தில் இணைந்து, பணியாற்றினார். அதற்கமைய கடந்த 1918 ம் ஆண்டு, முதலாம் உலகப்போரில் ஜேர்மனி தோல்வியடைந்தது. தோல்விக்கு ஜனநாயக வாதிகளும் , ய+தர்களும் தான் காரணமென நினைத்த ஹிட்லர் , உலகம் முழவதையும் ஜேர்மனியின் ஆதிகத்தின்கீழ் கொண்டுவர வேண்டுமென விரும்பினார். பேச்சு வல்லமை மிக்கவரான ஹிட்லர் , தேசிய சோசலிஸ்ட் ஜேர்மனி தொழிலாளர் கட்சியில் இணைந்து, தனது பேச்சுவல்லமையினால் குறுகிய காலத்தில், கட்சியின் தலைமைப்பதவியை வகித்தார். இந்நிலையில் நாட்டின் நிர்வாகம் சீரற்ற காணப்படுவதாக சுட்டிக்காட்டி , அரசாங்கத்திற்கெதிராக மக்களை தூண்டிவிட்டு, ஆட்சியை கைப்பற்ற முயன்ற ஹிட்லருக்கு தோல்வியே கிடைத்தது. அதன் காரணமாக அப்போதைய ஜேர்மனி அரசாங்கம் அவரை கைதுசெய்து, 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், பின்னர் அது ஓராண்டு தண்டனையாக குறைக்கப்பட்டது. சிறையில் இருந்தபோதே ஹிட்லர் எனது போராட்டம் எனும் பெயரில் தனது சுயசரிதையை எழுதினார். தொடர்ந்தும் தனது முயற்சிகளை மேற்கொண்ட ஹிட்லர் , தனது கட்சியின் பெயரை , நாசிக்கட்டி என மாற்றி, நாடு முழுவதிலும் அரசாங்கத்திற்கெதிராக கிளர்ச்சிகளை ஏற்படுத்தி, மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார். இவருடைய இராஜதந்திரங்கள் வெற்றிபெற்ற நிலையில் , அரசாங்கத்திற்கெதிராக மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற கட்டிடம் இடித்து எரிக்கப்பட்டதோடு, அப்போதைய ஜேர்மனி ஜனாதிபதியாக இருந்த ஹில்ட்டன் பேர்க், மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்தார். இந்நிலையில் கடந்த 1933 ம் ஆண்டு, ஜனவரி மாதம் 30 ம் திகதி , ஜனாதிபதி ஹில்ட்டன் பேர்க், ஹிட்லரை அந்நாட்டின் பிரதமராக நியமித்தார். இந்நிலையில் ஜனாதிபதி ஹில்ட்டன் பேர்க், மரணமடைய , ஜனாதிபதி பதவியை கைப்பற்றிக்கொண்ட ஹிட்லர் ஜேர்மனியின் சர்வாதிகாரியானார். பாராளுமன்றத்தை கலைத்து, இராணுவத்திணைக்களத்தினையும், இராணுவ தளபதி பதவியினையும் தானே ஏற்றுக்கொண்டார். அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் தடை செய்து, ஜேர்மனியில் இனி , ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லையென அறிவித்தார். அவரின் ஆட்சிக்காலத்தில் தினமும் சராசரியாக 6 ஆயிரம் தொடக்கம், 10 ஆயிரம் பேர் வரை விஷப்புகையிட்டு கொல்லப்பட்டனர். ஹிட்லரால் சுமார் 50 லட்சதம்திற்கும் அதிகமான யூதர்கள் கொல்லப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுளளது. மேலும் கடந்த 1939 ம் ஆண்டு, அல்பேனியா , செக்கோச்லோவாக்கியா ஆகிய நாடுகளை கைப்பற்றிய ஹிட்லர் , போலந்து நாட்டின் மீது படையெடுத்தார். இதனால் 2 ம் உலக மகாயுத்தம் ஆரம்பமாகியது. ஆரம்பத்தில் உலக மகா யுத்தத்தில் ஹிட்லரின் கைகள் ஓங்கியிருந்தது. எனினும் ஜேர்மனிக்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்த பின்னர் ஹிட்லரின் ஆதிக்கம் குறைவடைந்து ஜேர்மனி தலைநகரான பேர்லினில் ஹிட்லர் சுரங்கம் அமைத்து மறைந்து வாழ்ந்தார். இந்நிலையில் கடந்த 1945 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பேர்லின் நகர் மீது ரஸ்யா விமான குண்டுகளை வீசியதன் காரணமாக ஹிட்லரின் பாதாள சுரங்கம் சிறியளவிலான பாதிப்புக்குள்ளாகியது. இந்நிலையில் தனது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்த சர்வதிகாரி ஹிட்லர் மரண சாசனம் ஒன்றை எழுதினார். அதில் பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கப்பட்ட நிலையில் “நான் எந்த ஜேர்மன் நாட்டு மண்ணுக்காக கடந்த 12 வருடங்களாக பாடுபட்டுவந்தேனோ இந்த ஜேர்மன் மண்ணிலேயே என்னையும், எனது காதலி ஈவாவையும் உடனே எரித்துவிடுங்கள் என குறிப்பிட்ட விடயம் அனைவரையும் சற்று சிந்திக்க வைத்தது. இந்நிலையில் கடந்த 1930 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ம் திகதி இரவு 9 மணியளவில் இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வதிகாரி முசொலினியும் அவரது மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியறிந்த ஹிட்லர் முகம் வாடினார். மேலும் அன்றிரவு 12 மணியளவில் பேர்லின் நகரம் முற்றிலுமாக ரஷ்ய படைகள் வசமாகிவிட்டதெனவும் ஹிட்லர் வசித்து வந்த சுரங்க மாளிகை தகர்க்கப்படலாமெனவும் அவருக்கு செய்தி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தனது உதவியாளர்களை அழைத்த ஹிட்லர் நானும் ஈவாவும் ஒன்றாக இறந்து விடப்போகின்றோம் நாங்கள் இறந்த பின் எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுற்றி எரித்து சாம்பலாக்கிவிடுமாறு அறிவித்தான், சிறிது நேரத்தில் தனது காதலியை அழைத்து அறைக்குள் சென்ற ஹிடலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். அவரது காதலி சைனட் அருந்தி அதே இடத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரினதும் உடல்கள் உதவியாளர்களால் எரிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் குறித்த இடத்திற்கு வந்த ரஷ்ய படைகள் அவரின் நடவடிக்கையினை பார்த்து திகைத்துப்போனதாக குறிப்பிடப்படுகிறது. ஹிடலர் ஈவ் இரக்கமின்றி மனித கொலைகளை செய்த கொடியவராக இருந்தாலும் சில நல்ல குணங்களும் அவர் வசப்பட்டது. அவருக்கு புகைப்பிடித்தல் பழக்கமோ, மாமிசங்கள் உண்ணும் பழக்கம் இல்லையென வரலாற்று சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. சர்வதிகாரி எனும் சொல்லிற்கு மறுமொழியாக தன்பெரை வரலாற்றில் பதிய செய்து உலக வாழ்க்கையை முடித்துக்கொண்ட ஹிட்லர் இன்றும் உலக மக்கள் மனதில் சர்வதிகாரியாகவே வாழ்கிறார். ................................................................பிரசன்னா
யுத்தம், வீரம், சர்வாதிகாரம், என்ற வார்த்தைகளை கேட்கும்போதெல்லாம் இவரின் பெயர் , அவ்வப்போது அனைவரையும் ஞாபகப்படுத்திச்செல்லும், 2 ம் உலக மகா யுத்தம் இடம்பெறுவதற்கும், சுமார் 20 கோடி பேருக்கு மேல் உயிரிழப்பதற்கும், காணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். இன்றும் , சர்வாதிகார ஆட்சியென்று சொல்வதற்கு பதிலாக, அனைவரும் ஹிட்லரின் ஆட்சி என்று சொல்லுமளவுக்கு, வரலாற்றில் இடம்பிடித்தவர், ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லர். இவர் , கடந்த 1889 ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 20 ம் திகதி வடஆஸ்திரியாவிலுள்ள பிரானோ எனும் ஊரில், எலோய்ஸ்; ஹிட்லர், கிளாரா போல்ஸ் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் ஹிட்லர். தான் பிறந்தது முதலே, நோயுற்றவராக இருந்த ஹிட்லர், அடிக்கடி சுகயீனமுற்ற நிலையில், பிறந்து ஒரு வருடத்திற்கு பின்னரே சீரான உடல்நிலையை பெற்றார். மேலும் தனது தாயின் மீது ஹிட்லர், அதிக பக்தியும் , பாசமும் கொண்டவராக காணப்பட்டார். இதேவேளை தனது தந்தையின் மூன்றாவது மனைவியின் பிள்ளையான ஹிட்லர், தந்தையின் ஏனைய மனைவிமார்களின் துன்புறுத்தல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் இளம் வயதிலேயே உள்ளாகியிருந்ததாக, தனது மெயின் கேம் எனும் சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தார். ஹிட்லர் பாடசாலையில் படிக்கும்போது, வகுப்பில் முதல் மாணவனாக வரும் அளவிற்கு, கல்வியில் சிறந்து விளங்கினார். எனினும் அவர் 6 ம் வகுப்பிற்கு பின்னர் , கல்வியில் சோபிக்காத நிலையில் , படிப்பில் ஆர்வம் குறைந்து , சித்திரங்கள் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. அதன் காரணமாக அழகான ஓவியங்களை வரைவதற்கான ஆற்றலை சிறுவயதிலேயே பெற்றார். மேலும் மாணவப்பருவத்திலேயே நாவல்கள் படிக்கும் ஆர்வம் கொண்ட அவர், போர்கள் பற்றிய கதைகளில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 1903 ம் ஆண்டில் ஹிட்லரின் தந்தை இறந்தபிறகு தந்தையின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த ஹிட்லர் நாட்கள் செல்ல , முரடனாக மாறினார். மாணவர்கள், ஆசிரியர்களுடன் சண்டையிடும் அளவிற்கு, தனது மனநிலையை மாற்றியமைத்துக்கொண்டார். தனது 17 ஆவது வயதில் கல்லூரி இறுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஹிட்லர், தனது முரட்டுத்தனத்தினால் கணக்கின்றி , கல்வியினை புரக்கணித்தார். இந்நிலையில் தனது கல்லூரி தேர்வினை பயன்படுத்தி, கடந்த 1907 ம் ஆண்டில் ஓவியக்கல்லூரியில் இணைய முயன்றபோதும் , ஹிட்லருக்கு அனுமதி கிடைக்கவில்லை. பின்னர், அதேயாண்டில் தனது தாய் இறந்துபோக மனமுடைந்த ஹிட்லர் , ஓவியங்களை வரைந்து தனது வாழ்வாதாரத்தை மேற்கொண்டார். இவரின் ஓவியங்கள் மக்களிடம் நன்மதிப்பு பெற்றதன் காரணமாக சொந்தமாக ஓவியக்கூடமொன்றை அமைத்து , வாழ்க்கையை தொடர்ந்தார். இதனிடையே, சிந்தியா எனும் பெண்ணை காதலித்த ஹிட்லருக்கு காதல் தோல்வி ஏற்பட, ஹிட்லர் இராணுவத்தில் இணைந்துகொண்டார். அதற்கமைய முதலாம் உலகப்போரின் போது ஜேர்மனி இராணுவத்தில் இணைந்து, பணியாற்றினார். அதற்கமைய கடந்த 1918 ம் ஆண்டு, முதலாம் உலகப்போரில் ஜேர்மனி தோல்வியடைந்தது. தோல்விக்கு ஜனநாயக வாதிகளும் , ய+தர்களும் தான் காரணமென நினைத்த ஹிட்லர் , உலகம் முழவதையும் ஜேர்மனியின் ஆதிகத்தின்கீழ் கொண்டுவர வேண்டுமென விரும்பினார். பேச்சு வல்லமை மிக்கவரான ஹிட்லர் , தேசிய சோசலிஸ்ட் ஜேர்மனி தொழிலாளர் கட்சியில் இணைந்து, தனது பேச்சுவல்லமையினால் குறுகிய காலத்தில், கட்சியின் தலைமைப்பதவியை வகித்தார். இந்நிலையில் நாட்டின் நிர்வாகம் சீரற்ற காணப்படுவதாக சுட்டிக்காட்டி , அரசாங்கத்திற்கெதிராக மக்களை தூண்டிவிட்டு, ஆட்சியை கைப்பற்ற முயன்ற ஹிட்லருக்கு தோல்வியே கிடைத்தது. அதன் காரணமாக அப்போதைய ஜேர்மனி அரசாங்கம் அவரை கைதுசெய்து, 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், பின்னர் அது ஓராண்டு தண்டனையாக குறைக்கப்பட்டது. சிறையில் இருந்தபோதே ஹிட்லர் எனது போராட்டம் எனும் பெயரில் தனது சுயசரிதையை எழுதினார். தொடர்ந்தும் தனது முயற்சிகளை மேற்கொண்ட ஹிட்லர் , தனது கட்சியின் பெயரை , நாசிக்கட்டி என மாற்றி, நாடு முழுவதிலும் அரசாங்கத்திற்கெதிராக கிளர்ச்சிகளை ஏற்படுத்தி, மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார். இவருடைய இராஜதந்திரங்கள் வெற்றிபெற்ற நிலையில் , அரசாங்கத்திற்கெதிராக மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற கட்டிடம் இடித்து எரிக்கப்பட்டதோடு, அப்போதைய ஜேர்மனி ஜனாதிபதியாக இருந்த ஹில்ட்டன் பேர்க், மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்தார். இந்நிலையில் கடந்த 1933 ம் ஆண்டு, ஜனவரி மாதம் 30 ம் திகதி , ஜனாதிபதி ஹில்ட்டன் பேர்க், ஹிட்லரை அந்நாட்டின் பிரதமராக நியமித்தார். இந்நிலையில் ஜனாதிபதி ஹில்ட்டன் பேர்க், மரணமடைய , ஜனாதிபதி பதவியை கைப்பற்றிக்கொண்ட ஹிட்லர் ஜேர்மனியின் சர்வாதிகாரியானார். பாராளுமன்றத்தை கலைத்து, இராணுவத்திணைக்களத்தினையும், இராணுவ தளபதி பதவியினையும் தானே ஏற்றுக்கொண்டார். அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் தடை செய்து, ஜேர்மனியில் இனி , ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லையென அறிவித்தார். அவரின் ஆட்சிக்காலத்தில் தினமும் சராசரியாக 6 ஆயிரம் தொடக்கம், 10 ஆயிரம் பேர் வரை விஷப்புகையிட்டு கொல்லப்பட்டனர். ஹிட்லரால் சுமார் 50 லட்சதம்திற்கும் அதிகமான யூதர்கள் கொல்லப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுளளது. மேலும் கடந்த 1939 ம் ஆண்டு, அல்பேனியா , செக்கோச்லோவாக்கியா ஆகிய நாடுகளை கைப்பற்றிய ஹிட்லர் , போலந்து நாட்டின் மீது படையெடுத்தார். இதனால் 2 ம் உலக மகாயுத்தம் ஆரம்பமாகியது. ஆரம்பத்தில் உலக மகா யுத்தத்தில் ஹிட்லரின் கைகள் ஓங்கியிருந்தது. எனினும் ஜேர்மனிக்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்த பின்னர் ஹிட்லரின் ஆதிக்கம் குறைவடைந்து ஜேர்மனி தலைநகரான பேர்லினில் ஹிட்லர் சுரங்கம் அமைத்து மறைந்து வாழ்ந்தார். இந்நிலையில் கடந்த 1945 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பேர்லின் நகர் மீது ரஸ்யா விமான குண்டுகளை வீசியதன் காரணமாக ஹிட்லரின் பாதாள சுரங்கம் சிறியளவிலான பாதிப்புக்குள்ளாகியது. இந்நிலையில் தனது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்த சர்வதிகாரி ஹிட்லர் மரண சாசனம் ஒன்றை எழுதினார். அதில் பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கப்பட்ட நிலையில் “நான் எந்த ஜேர்மன் நாட்டு மண்ணுக்காக கடந்த 12 வருடங்களாக பாடுபட்டுவந்தேனோ இந்த ஜேர்மன் மண்ணிலேயே என்னையும், எனது காதலி ஈவாவையும் உடனே எரித்துவிடுங்கள் என குறிப்பிட்ட விடயம் அனைவரையும் சற்று சிந்திக்க வைத்தது. இந்நிலையில் கடந்த 1930 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ம் திகதி இரவு 9 மணியளவில் இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வதிகாரி முசொலினியும் அவரது மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியறிந்த ஹிட்லர் முகம் வாடினார். மேலும் அன்றிரவு 12 மணியளவில் பேர்லின் நகரம் முற்றிலுமாக ரஷ்ய படைகள் வசமாகிவிட்டதெனவும் ஹிட்லர் வசித்து வந்த சுரங்க மாளிகை தகர்க்கப்படலாமெனவும் அவருக்கு செய்தி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தனது உதவியாளர்களை அழைத்த ஹிட்லர் நானும் ஈவாவும் ஒன்றாக இறந்து விடப்போகின்றோம் நாங்கள் இறந்த பின் எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுற்றி எரித்து சாம்பலாக்கிவிடுமாறு அறிவித்தான், சிறிது நேரத்தில் தனது காதலியை அழைத்து அறைக்குள் சென்ற ஹிடலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். அவரது காதலி சைனட் அருந்தி அதே இடத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரினதும் உடல்கள் உதவியாளர்களால் எரிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் குறித்த இடத்திற்கு வந்த ரஷ்ய படைகள் அவரின் நடவடிக்கையினை பார்த்து திகைத்துப்போனதாக குறிப்பிடப்படுகிறது. ஹிடலர் ஈவ் இரக்கமின்றி மனித கொலைகளை செய்த கொடியவராக இருந்தாலும் சில நல்ல குணங்களும் அவர் வசப்பட்டது. அவருக்கு புகைப்பிடித்தல் பழக்கமோ, மாமிசங்கள் உண்ணும் பழக்கம் இல்லையென வரலாற்று சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. சர்வதிகாரி எனும் சொல்லிற்கு மறுமொழியாக தன்பெரை வரலாற்றில் பதிய செய்து உலக வாழ்க்கையை முடித்துக்கொண்ட ஹிட்லர் இன்றும் உலக மக்கள் மனதில் சர்வதிகாரியாகவே வாழ்கிறார். ................................................................பிரசன்னா
தேசத்தந்தை டி.எஸ்.சேனாநாயக்க
டி.எஸ்.சேனாநாயக்க
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மறக்க முடியாத தலைவர்களில் இவரும் ஒருவர். இலங்கையின் வரலாற்று பக்கத்தை திருப்பும் போது இவரின் பெயரின்றி அடுத்த பக்கம் இல்லை என்று சொல்லுமளவிற்கு வரலாற்றில் இடம்பிடித்தவர். அந்நியர்களின் ஆட்சிக்காலம் ஒழிந்து இலங்கை சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டு அந்த சுதந்திர நாட்டை முதன்முதலில் தலைமைவகித்து சீரான அரசியல் நிலையை ஏற்படுத்தியவர் இலங்கையின் முதலாவது பிரதமரும் இலங்கையின் தேசத்தந்தையுமான டி.எஸ்.சேனாநாயக்க. இவர் கடந்த 1884 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நீர்கொழும்பு போதலே எனும் இடத்தில் முதலி தொன் ஸ்பாமர் சேனாநாயக்க மற்றும் டொன் கெத்தரினா எலிசபெத் பெரேரா குணசேகர சேனாநாயக்க ஆகியோருக்கு மகனாக பிறந்தார் டி.எஸ்.சேனாநாயக்க என அழைக்கப்படும் தொன் ஸ்டீபன் சேனாநாயக்க. ஆரம்பத்தில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றிய அவர் பின்னர் பௌத்த மதத்திற்கு மாறினார். தனது இளமைக் கால கல்வியினை கொழும்பு சென்ட். தோமஸ் கல்லூரியில் பயின்றார். பின்னர் சிறிதுகாலம் நிலஅளவை திணைக்களத்தில் எழுத்தாளராக பணியாற்றினார். கடந்த 1914 ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாம் உலக மகா யுத்தத்தோடு கடந்த 1915 ஆம் ஆண்டு இலங்கையில் சந்தேகத்தின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் தனது சகோதரரான எப்.ஆர்.சேனாநாயக்கவின் மூலமாக கடந்த 1926 ஆம் ஆண்டு அவர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து இலங்கையின் அமைதிக்காகவும் சுதந்திரத்திற்காகவும் பலவேறு நடவடிக்கைகளை மே;றகொண்ட அவர் கடந்த 1929 ஆம் ஆண்டு இலங்கை சட்டவாக்க கழகத்தில் ஓர் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அவர் 1931 ஆம் ஆண்டு மினுவாங்கொட பிரதேச சபையின் ஊடாக மாநில அவைக்கு தெரிவு செய்யப்பட்டு, வேளாண்மை காணி அமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில் வேளாண்மை மறுமலர்ச்சிக்கென பாரியளவிலான சேவைகளை அவர் வழங்கியுள்ளார். இந்நிலையில் பிரித்தானியர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிய பின்னர் கடந்த 1946 ஆம் ஆண்டு டி.எஸ்.சேனாநாயக்க அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியினை ஸ்தாபித்தார். அதற்கமைய கடந்த 1947 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற முதலாவது தேர்தலில் வெற்றிபெற்று இலங்கையின் முதலாவது பிரதமராக பதவியேற்றார். மேலும் அவரின் பதவிக்காலத்தின் போது பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நைட் பட்டத்தை மறுத்த அவர் தொடர்ந்;தும் பிரித்தானியர்களுடன் நல்லுறவினை மேம்படுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கையில் பிரித்தானியரின் ஆதிக்கம் முழுமையாக நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து சுதந்திரமடைந்த இலங்கையை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று சிறந்த தலைவராக ஆட்சி செய்தார். இந்நிலையில் அதனைத்தொடர்ந்து மக்களுக்கான பல நலன்திட்டங்களை முன்னெடுத்த அவர் கல்லோயா திட்டத்தை ஆரம்பித்துவைத்தார். இந்நிலையில் நாட்டிலுள்ள சகல இன மக்களுக்கும் மரியாதைக்குரிய தலைவராக டி.எஸ்.சேனாநாயக்க விளங்கினார். இவர் மோலி துனுவில என்பவரை திருமணம் முடித்து அவருக்கு டட்லி சேனாநாயக்க மற்றும் ரொபர்ட் சேனாநாயக்க ஆகிய இரு புதல்வர்கள் இருந்தனர். இலங்கையின் முதலாவது பிரதமர் மற்றும் தேசத்தந்தையாக வாழ்ந்த பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க பிரித்தானியாவிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட நாட்டின் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றினார். கடந்த 1952 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி காலி முகத்திடலில் குதிரைச் சவாரியில் இருந்த போது தவறி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு பின்னர் அவரது மகனான ட்டலி சேனாநாயக்க இலங்கையின் பிரதமராக பதவியேற்றார். அதற்கிணங்க கடந்த 1952 ஆண்டு கடந்த 1960 தொடக்கம் 1965 ஆம் ஆண்டு வரையும் , கடந்த 1965 ஆம் ஆண்டு தொடக்கம் 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் டட்லி சேனாநாயக்க இலங்கையின் 2 ஆவது பிரதமராக பதவி வகித்தார். இலங்கை வரலாற்றில் முதல் தலைவர் என்ற பெருமைக்குரிய டி.எஸ்.சேனாநாயக்க இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வளர்ச்சியில் பெரும்பாங்காற்றிய தலைவர்களில் ஒருவர். அவர் மறைந்தாலும் இலங்கையின் முதலாவது பிரதமர் என்ற அவரது வரலாற்றுப் பதிவு என்றும் அழியாத சுவடுகளாய்...................................................................................................பிரசன்னா
Thursday, October 18, 2012
உலக தர நிர்ண நாள்
உலக தர நிர்ண நாள்
தரமற்ற பொருட்களை கொள்வனவு செய்வது சாத்தியமற்ற விடயம் அவ்வாறு தரமான பொருட்களை உற்பத்தி செய்தும் அதனை தரமான பொருள் என்பதை நிர்ணயிக்க ஒரு சான்று தேவை அவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்ற தரமான பொருட்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட அமைப்பே உலக ஐ.எஸ்.ஓ. என அழைப்படும் உலக தரக்கட்டுப்பாட்டு நிறுவனமாகும். உலக தரக்கட்டுப்பாட்டு அமைப்பானது கடந்த 1974 ஆம் ஆண்டு ஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் குறித்த அமைப்பில் வளர்ச்சியடைந்த நாடுகள் மாத்திரமே உறுப்பினராகவிருந்தன. இந்நிலையில் படிப்படியாக அனைத்து நாடுகளும் உறுப்பினர் அந்தஸ்த்தை பெற்று தற்போது ஐ.எஸ்.ஓ அமைப்பில் 100க்கும் அதிகமான நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலகத்தர நிறுவனத்தின் அலுவலங்கள் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்படுகின்றன. மேலும் 500க்கும் அதிகமான நிறுவனங்கள் உலக தர நிர்ணய நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. அதற்கிணங்க தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்துவதற்கு அறிவுரை மற்றும் ஆலொசனைகளை வழங்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி உலக தர நிர்ணய தினம் கொண்டாடப்படுகிறது. சீர்த்திருத்தத்திற்கான அனைத்துலக நிறுவனமான ஐ.எஸ்.ஓ அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையமான ஐ.ஈ.சி. மற்றும் அனைத்துலக தொலைத்தொடர்பு ஒன்றியமான ஐ.டி.யூ ஆகிய நிறுவனங்களின் வழிமுறைக்குட்பட்டு உலக தரங்களை உருவாக்கப் பாடுபடும் தொழில்துறை வல்லுனர்களின் சேவையை பாராட்டவும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விளங்க வேண்டிய சீரமை தன்மையை உலகளாவிய ரீதியில் வலியுறுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. அதற்கிணங்க அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையம்,; அனைத்துலக தொலைத்தொடர்பு ஒன்றியம் மற்றும் அனைத்துலக தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியன இணைந்து சந்தைகளை உருவாக்கல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் பணக்கார மற்றும் வறிய நாடுகளுக்கான வேறுபாடுகளை கலைவது போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த 3 அமைப்புகளும் ஒன்று சேர்ந்து கடந்த 1969 ஆம் ஆண்டிலிருந்து ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதியை உலக தர நிர்ணய நாளாக அனுசரிக்கின்றன. உலகளாவிய நாடுகளின் உற்பத்தி பொருட்கள் ஐ.எஸ்.ஓ சான்றிதழை பெரும் பட்சத்தில் அது தரம்வாய்ந்த பொருள் எனவும் பாவனைக்கு உகந்த பொருள் எனவும் வழங்கப்படுகிறது. அதற்கிணங்க இலங்கையில் மாத்திரமில்லாமல் உலக நாடுகளிலுள்ள ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது உற்பத்தி பொருட்களுக்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் அதாவது உலக தர நிர்ணய சான்றிதழை பெறும் நோக்கில் தரமான பொருட்களை உற்பத்தி செய்கின்றன. மக்களுக்கு தரமான பொருட்களை பாவனைக்கு பெற்றுத்தர செயற்ப்பட்டு வரும் உலக தர நிர்ணய அமைப்பின் செயற்பாடு என்றும் நன்மதிப்புக்குரியது.,...........................................பிரசன்னா
தரமற்ற பொருட்களை கொள்வனவு செய்வது சாத்தியமற்ற விடயம் அவ்வாறு தரமான பொருட்களை உற்பத்தி செய்தும் அதனை தரமான பொருள் என்பதை நிர்ணயிக்க ஒரு சான்று தேவை அவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்ற தரமான பொருட்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட அமைப்பே உலக ஐ.எஸ்.ஓ. என அழைப்படும் உலக தரக்கட்டுப்பாட்டு நிறுவனமாகும். உலக தரக்கட்டுப்பாட்டு அமைப்பானது கடந்த 1974 ஆம் ஆண்டு ஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் குறித்த அமைப்பில் வளர்ச்சியடைந்த நாடுகள் மாத்திரமே உறுப்பினராகவிருந்தன. இந்நிலையில் படிப்படியாக அனைத்து நாடுகளும் உறுப்பினர் அந்தஸ்த்தை பெற்று தற்போது ஐ.எஸ்.ஓ அமைப்பில் 100க்கும் அதிகமான நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலகத்தர நிறுவனத்தின் அலுவலங்கள் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்படுகின்றன. மேலும் 500க்கும் அதிகமான நிறுவனங்கள் உலக தர நிர்ணய நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. அதற்கிணங்க தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்துவதற்கு அறிவுரை மற்றும் ஆலொசனைகளை வழங்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி உலக தர நிர்ணய தினம் கொண்டாடப்படுகிறது. சீர்த்திருத்தத்திற்கான அனைத்துலக நிறுவனமான ஐ.எஸ்.ஓ அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையமான ஐ.ஈ.சி. மற்றும் அனைத்துலக தொலைத்தொடர்பு ஒன்றியமான ஐ.டி.யூ ஆகிய நிறுவனங்களின் வழிமுறைக்குட்பட்டு உலக தரங்களை உருவாக்கப் பாடுபடும் தொழில்துறை வல்லுனர்களின் சேவையை பாராட்டவும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விளங்க வேண்டிய சீரமை தன்மையை உலகளாவிய ரீதியில் வலியுறுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. அதற்கிணங்க அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையம்,; அனைத்துலக தொலைத்தொடர்பு ஒன்றியம் மற்றும் அனைத்துலக தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியன இணைந்து சந்தைகளை உருவாக்கல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் பணக்கார மற்றும் வறிய நாடுகளுக்கான வேறுபாடுகளை கலைவது போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த 3 அமைப்புகளும் ஒன்று சேர்ந்து கடந்த 1969 ஆம் ஆண்டிலிருந்து ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதியை உலக தர நிர்ணய நாளாக அனுசரிக்கின்றன. உலகளாவிய நாடுகளின் உற்பத்தி பொருட்கள் ஐ.எஸ்.ஓ சான்றிதழை பெரும் பட்சத்தில் அது தரம்வாய்ந்த பொருள் எனவும் பாவனைக்கு உகந்த பொருள் எனவும் வழங்கப்படுகிறது. அதற்கிணங்க இலங்கையில் மாத்திரமில்லாமல் உலக நாடுகளிலுள்ள ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது உற்பத்தி பொருட்களுக்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் அதாவது உலக தர நிர்ணய சான்றிதழை பெறும் நோக்கில் தரமான பொருட்களை உற்பத்தி செய்கின்றன. மக்களுக்கு தரமான பொருட்களை பாவனைக்கு பெற்றுத்தர செயற்ப்பட்டு வரும் உலக தர நிர்ணய அமைப்பின் செயற்பாடு என்றும் நன்மதிப்புக்குரியது.,...........................................பிரசன்னா
தோமஸ் அல்வா எடிஷன்…
தோமஸ் அல்வா எடிஷன்…
படைப்புக்கு வேண்டியது “ஆக்கும் உள் எழுச்சி ஒரு சதவீதம்” “வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம்” என தனது முயற்சியை பின்பற்றி உலகை வெற்றி கண்டவர். இன்று உலகளாவிய மக்கள் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான மின்சாதனங்களுக்கு சொந்தமானவர் உலகுக்கே ஒளி தந்த மின் விளக்கை கண்டுபிடித்து ஒவ்வொருவரது வீட்டிலும் இன்றும் அணையா விளக்காக ஒளிந்து கொண்டிருப்பவர் அமெரிக்க கண்டு பிடிப்பாளர் தோமஸ் அல்வா எடிஷன். இவர் கடந்த 1847ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் திகதி அமெரிக்காவின் ஒஹியோவிலுள்ள மிலான் எனும் ஊரில் சாமுவேல் எடிசன், நாண்சி எடிசன் ஆகியோருக்கு 7 வது மகனாக பிறந்தார் தோமஸ் அல்வா எடிசன். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவரான தோமஸ் அல்வா எடிசன் சிறுவயதிலேயே காது கேட்கும் திறனை இழந்;தார். அதன் காரணமாக தனது நடை, உடை பாவனையில் பாதிப்பை ஏற்பட்டது. குறித்த விடயமே உலகின் பல கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தது. சிறுவயதிலேயே நோய்வாய்;க்குட்பட்ட தோமஸ் அல்வா எடிசன் தனது 8 வது வயதிலேயே பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தார்;. பள்ளிக்கு சென்று 3 மாதங்களுக்கு பின் அவரது ஆசிரியர் ஒருவர் எடிசனை மூளைக்கோளாறு உள்ளவன் என்று திட்டியதன் காரணமாக அன்றிலிருந்து தனது பள்ளி படிப்பை நிறுத்திக்கொண்டார். தொடர்ந்து தனது தாயுடன் வீட்டிலே கல்வி பயின்ற அவர், பின்னர் தன்னை புத்தகங்கள் வாசிக்கும் அளவுக்கு வளர்த்துக் கொண்டார். அதற்கிணங்க தனது 11 வது வயதிலேயே சேர் ஐசக் நியுட்டனின் கோட்பாடுகள் உள்ளிட்ட பல நூல்களை கற்க ஆரம்பித்தார், தோமஸ் அல்வா எடிசன். இவேளை தன்வசப்படுத்திய அணுக்கரு அமைப்பை விளக்கிய விஞ்ஞானி நீல்போ, கணித விஞ்ஞான நிபுணர் சேர் ஐசக் நியுட்டன் ஆகியோரும் சிறுவயதிலேயே மூளை தளர்ச்சி உள்ளவர்களாக பள்ளிக்கூடங்களில் கருதப்பட்டனர். தொடர்ந்து தனது 21 ம் வயதில் விஞ்ஞானி மைகல் பரடேயின் மின்சக்தி பயிற்சி ஆராய்சிகள் குறித்தான பல குறிப்புகளை படித்து வந்த தோமஸ் அல்வா எடிசனுக்கு அவருடைய கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளம் இட்டவையாக காணப்பட்டது. கணித அறிவும், அறிவியல் இயற்பாடு எதையுமே முறையாக கற்காத தோமஸ் அல்வா எடிசன் சோதனைகள் மூலம் மாத்திரமே முயன்று பல அரிய தொழிநுட்ப கருவிகளை படைத்தார். இந்நிலையில் கடந்த 1860 ம்ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் தோமஸ் அல்வா எடிசனுக்கு ரயில் நிலையத்தில் தந்தி இயக்கும் தொழில் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து குறித்த வேலையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதிலிருந்து விலகி ரயில் நிலையத்தில் சிற்றுண்டிகள் விற்கும் நடவடிக்கையிலும் சில காலம் இறைச்சி விற்பனை வியாபாரியாகவும், சில காலம் காய் கறி வணிகராகவும் தொழில் புரிந்தார். இந்நிலையில் கடந்த 1862 ம் ஆண்டு ரயில் பெட்டியொன்றை அச்சகமாக மாற்றி அதிலிருந்து த வீக்லீ ஏரோல்ட் எனும் வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார். இந்நிலையில் தனது நுண்ணறிவினாலும் ஆய்வுகள் மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாகவும் கடந்த 1869 ம் ஆண்டு தனது 22 வயதில் ரயில் நிலையத்தில் தொழில் புரிந்தபோது இரட்டை தந்தியடிப்பு சாதனத்தை பதிவுக்கு கருவியுடன் இணைத்து இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில் அனுப்பி காட்டினார். இதுவே இவரது முதலாவது கண்டு பிடிப்பாகும். இந்நிலையில் அமெரிக்காவின் நிய் ஜேசிக்கு சென்ற தோமஸ் அல்வா எடிசன் அங்குள்ள மெட்லோ ப+ங்காவில் தனது ஆய்வகத்தை அமைத்தார். எடிசன் அதில் பங்குச் சந்தை புள்ளிகளை தொடராக பதிவேற்றும் தந்திக்கருவிகளை உருவாக்கினார். அதனைத் தொடர்ந்து தனது நண்பரான பிரான் பொக் என்பவருடன் இணைந்து உலக பதிப்பி மற்றும் வேறு பதிக்கும் கருவிகளை உருவாக்கினார். இந்நிலையில் கடந்த 1870 ம் ஆண்டு தொடக்கம் 1875 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தானியங்கி தந்தியினை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து தனது இராசாயன அறிவைப்பயன்படுத்தி மின்சாரப்பபேன பிரதி எடுப்பி போன்ற சாதனங்களை உருவாக்கினார். அதனைத் தொடர்ந்து இசைத்தட்டையும் உருவாக்கினார். எடிசன் புதிய பல கருவிகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் முனையும் போது சில புதிய கருவிகளும் கண்டு பிடிக்கப்பட்டன. அவற்றுள்; காபன் ட்ரான்ஸ் மீற்றர், ஒலி வரைவி, ஆகியன உள்ளடங்குகின்றன. மேலும் கண்டு பிடிப்புக்களில் அரிய கண்டுபிடிப்பாக என்றும் காணப்படுவது கடந்த 1852 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மின் குமிழியாகும் இதுவே ஆக்கமேதை எடிசனின் புகழை உலகெங்கும் பரப்பியது. அதனைத் தொடர்ந்து மின்சார மோட்டர், ரெலிபோன் ஸ்பீக்கர், மைக்ரோபோன் ஆகியவற்றை கண்டுபிடித்ததோடு இதுவரை 1093 கண்டு பிடிப்புக்களின் காப்புரிமைகளை பதிவுசெய்துள்ளதோடு இன்னும் ஏராளமான பொருட்களை இவ்வுலகுக்கு தந்தளித்தார். 18 ம் 19 ம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மின்சக்தி இயந்திரயுகம் தோன்ற அடிகோலியவர்களுள் முக்கியமானவர் தோமஸ் அல்வா எடிசன.; பள்ளிப்படிப்பு உயர்ந்த பட்டப்படிப்பு இல்லா தோமஸ் அல்வா எடிசன் கடின உழைப்பாலும் ஞான நுட்பத்தினாலும் பல வித சாதனங்களை படைத்து ஏழ்;மையிலிருந்து செல்வந்தரான மேதையாவார். மேலும் அவர் தன்னைப்பற்றி சொல்லும் போது நான் ஒரு விஞ்ஞானியல்ல டோலர், வெள்ளி நாணயம் சம்பாதிக்கும் உழைக்கும் ஒரு வாணிப படைப்பாளி எனத்தெரிவித்திருந்தார். அதற்கமைய ஆக்கமேதை தோமஸ் அல்வா எடிசன் தனது 84 வயது வரை இவ்வுலகில் வாழ்ந்தார். அதற்கமைய கடந்த 1931 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ம் திகதி நியுஜேசிலுள்ள வெஸ்ட் ஓரென்ஞ் நகரில் தனது 84 வயதில் உலகுக்கு ஒளிதந்த எடிசன் எனும் ஒளி விளக்கு அணைந்தது. அவரை கௌவரப்படுத்தும் நோக்கில் எடிசனின் உடல் அடக்கத்தின் போது அமெரிக்க முழுவதும் தேவையான விளக்குகளை தவிர ஏனைய அனைத்து மின் விளக்குகளும் ஒரு நிமிடத்திற்கு அணைக்கப்பட்டது. கடந்த 1931 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ம் திகதி மாலை வேளையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. எடிசன் உலகைவிட்டு பிரிந்திரிந்தாலும் அவரின் ஆத்மாவான மின்விளக்குகள் இன்னும் பல்லாயிரம் ஆண்டு ஒளிபாய்ச்சு கொண்டிருக்கும் என்பது அவரின் அழியா புகழை பறைசாற்றுகிறது. .........................................................................பிரசன்னா
கவியரசர் கண்ணதாசர்
கவியரசர் கண்ணதாசர்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. என்ற வரிகளை உண்மையாக்கி சென்ற கவிஞர். பல தத்துவ மேதைகளால் சிந்தனைகளால் மட்டும் எட்ட முடிந்த விடயங்களை தனது கதவிதைகளாலும் வரிகளாலும் இவ்வுலகிற்கு தந்த காலத்தால் அழியாத புகழ்பெற்ற மாமனிதன் கவியரசர் கண்ணதாசர் இவர் கடந்த 1927 ஆம் ஆண்டு ஜீன் மாதம்; 24 ஆம் திகதி தமிழ்நாட்டில் சிறுகூடல்ப்பட்டி எனும் ஊரில் விசாலாட்சியாட்சி சாத்தப்பனார் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் கண்ணதாசன் என அழைக்கப்படும் முத்தைய்யா சிறுவயதிலேயே இவரை வியாபாரி ஒருவர் அவரது பெற்றோரிடமிருந்து 7 ஆயிரம் ரூபாய்க்கு தத்தெடுத்து வளர்த்து வந்தார். அவர் கண்ணதாசனுக்கு வைத்த பெயர் நாராயணன் என்பதாகும். தனது ஆரம்பகல்வியை சிறுகூடல்ப்பட்டியிலும் அமராவதி புதூர் உயர் நிலைப் பள்ளியில் 8 ஆம் ஆண்டு வரை கல்வி பயின்றார் கவியரசர் கண்ணதாசர். இவர் கடந்த 1943 ஆம் ஆண்டு தனது கல்வியை நிறுத்தி ஏஜாக்ஸ் எனும் நிறுவனத்தில் வேலைக்காக சென்றார். சிறு வயதிலேயே பாரதிதாசன், பாரதியார், போன்ற மகான்களின் கவிதைகள் மீது, அதிக ஆர்வம் கொண்டிருந்த கவியரசர் கண்ணதாசன் அப்போதிருந்தே கவிதைகளை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். அதற்கமைய கடநற்த 1944 ம் ஆண்டு முதல், 1981 ம் ஆண்டு வரை தமிழுக்கும், தமிழ் சினிமாத்துறைக்கும் காலத்தால் அழியாத கவிதைகளையும், பாடல் வரிகளையும், பல்வேறு படைப்புக்களையும் தந்தளித்துள்ளார். இந்நிலையில் அவரது மொழிப்புலமையினை பயன்படுததி, சண்டமாருதம்இ திருமகள்இ திரை ஒலிஇ மேதாவிஇ தென்றல்இ தென்றல்திரைஇ முல்லைஇ கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக பணியாற்றினார். மேலும் கலையுலகில் கால்தடம் பதித்து, தமிழ் உலகை வையகம் போற்ற செய்த கவியரசர் கண்ணதாசன் , அரசியலிலும் , கால்தடம் பதித்தார். அவர் தனியாக திரையுலகில் ஒரு பாடலாசிரியராக மாத்திரமல்லாமல், தயாரிப்பாளராகவும், நடிகனாகவும், மாபெரும் கவிஞனாகவும் வலம்வந்தவர் கவியரசராவார். முத்தையா எனும் இயற்பெயரை கொண்ட கண்ணதாசன் காரை முத்துப் புலவர்இ வணங்காமுடிஇ கமகப்பிரியாஇ பார்வதிநாதன்இ ஆரோக்கியசாமி ஆகிய பெயர்களிலும் அழைக்கப்பட்டார். ஆனால் மக்கள் மனதில் நின்று நிலைத்த பெயர் கவியரசர் கண்ணதாசன் என்ற பெயராகும். அவர் எழுதிய பல பாடல்கள் இன்றும் காலத்தால் அழியாத சொத்துக்களாகவும், தமிழுக்கு கிடைத்த முத்துக்களாகவும் மிளிர்ந்து வருகின்றன. தத்துவம் , காதல் , குடும்பம், நட்பு, சமூகம் , என பல்வேறு பட்ட கோணங்களில் தனது வரிகளை கவிதைக்குள் அழைத்துவந்த கவியரசர் கவியுலகத்திற்கும், ஒரு புதிய யுகத்தினை ஆரம்பித்து வைத்தார் . 8 ம் ஆண்டுவரை மாத்திரம் கல்வி பயின்றிருந்தாலும், தமிழ் உலகில் எட்டாக்கனிகளையும் எட்டிப்பிடித்த பெருமைக்குரியவர். இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் , 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள் , கவிதை நூல்கள், புதினங்கள், வாழ்க்கை சரித்தரங்கள் கட்டுரைகள் நாடகங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். அவரின் படைப்புக்களில் இயேசு காவியம், அர்த்தமுள்ள இந்துமதம் உள்ளிட்ட சில படைப்புக்கள் அவரை மேலும் உச்சத்திற்கு கொண்டுசென்றது. மேலும் தன்னுடைய கவிப்புலமையால் , அவர் தமிழக அரசின் அரசவைக்கவிஞராக இருந்தார். கண்ணதாசனுக்கு பொன்னம்மா ,பார்வதி மற்றும் வள்ளியம்மை என மூன்று மனைவிமார்களும் , 14 குழந்தைகளும் உள்ளனர். தான் வாழும் வரை அவர் தமிழுக்கு தந்த ஒவ்வொரு வரிகளும் காலத்தால் என்றும் போற்றப்படுகின்ற வரிகளாக மாறின. இந்நிலையில் சுமார் 37 வருடங்கள் தனது முத்தான வரிகளாலும் , கட்டுக்கடங்கா சிந்தனையாலும் கவியுலகை தன்னகத்தே வைத்திருந்தவர் கவிஞர் கண்ணதாசன். இந்நிலையில் 1981 ம் ஆண்டு, ஜீலை மாதம் 24 ம் திகதி சுகவீனமுற்ற நிலையில் சிக்காகோவிலுள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார். அனைவரும் எனக்காக ஒருமுறையாவது அழுங்கள். அழத்தெறியாத உங்களை நம்பி நான் எப்படி சாவது. என வீரவரிகளை வைராக்கியத்துடன் சொல்லியிருந்த கவிஞர் கண்ணதாசன் , கடந்த 1981 ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 17 ம் திகதி தனது 54 ஆவது வயதில் கலையுலகை வாழவைத்து விண்ணுலகம் சென்றார். அவர் மறைந்தாலும் , இன்றைய இக்கணம் வரைக்கும் அவருடைய நினைவுகளும் எண்ணங்களும் , அழியாமல் இவ்வுலகில் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. அவர் இறுதியாக தமிழ் உலகத்திற்கும், தமிழ் திரையுலகத்திற்கும், கலையுலகத்திற்கும் கண்ணே, கலைமானே கண்ணிமயிலென கண்டென் உணை நானே…எனும் வரிகளை தந்தளித்தார். கவியரசரை கௌரவிப்பதற்கு தமிழக அரசு அவரின் ஞாபகமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மண்டபததினை அமைத்துள்ளது. அதில் கவியரசர் கண்ணதாசனின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளதோடு, நூலகமொன்றும் இயங்கி வருகின்றது. காலமகள் பெற்றெடுத்த கவிநாயகன் கண்ணதாசனின் உலகை விட்டுபிரிந்தாலும் ,அவரின் எண்ணங்கள் சிந்தனைகள் , அனைத்தும் அவரின் படைப்புக்கள் மூலம் இவ்வுலகை இன்னும் ஆட்சி செய்துதான் வருகிறது. ஆதிமுதல் பாரம்பரியம் கொண்ட தமிழ்மொழியில் ,ப+த்து உதிர்ந்த அற்புதமலர்களில், கவிஞர் கண்ணதாசனும் ஒருவர்..தமிழ்த்தாய் தந்த கவித்தலைமகன் என்றும் எம் நெஞ்சோடு.............................................................................................................பிரசன்னா
Monday, October 15, 2012
அப்துல் கலாம்
அப்துல் கலாம்
நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதை எல்லாம் விட நீ சிறந்தவன், ‘உயர்ந்தவன்’ என்ற உறுதி வேண்டும்! இன்னல்களும் பிரச்சினைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புக்கள் என்பது எனது நம்பிக்கையென பொன்மொழி தந்தவர். “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கங்கள்! எனும் ஒரு வாக்கியத்தால் உலகளாவிய இளைஞர்களுக்கு உறுதி மொழி வழங்கியவர். சாதாரண கிராமம் ஒன்றில் பிறந்து ஒரு நாட்டை ஆளும் தலைவர் என்ற அந்தஸ்த்தை பிடித்து உலகளாவிய விஞ்ஞான துறையின் வளர்ச்சியில் தனது பங்கையும் பாரியளவில் வகித்துவருபவர், முன்னாள் இந்திய குடியரசு தலைவரும் அணு விஞ்ஞானியுமான “ஏவுகணை மனிதன்” என அழைக்கப்படும் டொக்டர் அப்துல் கலாம். கடந்த 1931 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ம் திகதி இந்தியாவின் தமிழ் நாட்டின் ராமேஸ்வரும் எனும் ஊரில் பிறந்தார் அப்துல் கலாம் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் என அழைக்கப்படும். ஆவுல் பஹீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் ஏழ்மையான குடும்பம் ஒன்றில் பிறந்த டொக்டர் அப்துல் கலாம் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவர். அப்துல் கலாம் தனது ஆரம்பகால கல்வி செலவுக்காக நாளிதழ்களை விற்று கல்வியை மேற்கொண்டவர். ராமேஸ்வரத்திலுள்ள சுவாட்ஸ் உயர்நிலை பள்ளியில் கல்விபயின்ற அப்துல் கலாம் திருச்சி சென் ஜோசப் கல்லூரியில் விஞ்ஞான அடிப்படை கல்வியை கண்டார். இந்நிலையில் கடந்த 1954 ம் ஆண்டு சென்னை பொறியியல் துறைக்கல்லூரியில் சிறப்பு பொறிநுணுக்கு டாக்டர் பட்ட படிப்பினை ஆரம்பித்த அவர் கடந்த 1957 ம் ஆண்டு குறித்த படிப்பினை நிறைவு செய்து அப்துல் கலாம் விமானவியல் பொறியியல் துறையினை தெரிவு செய்தார். தனது பட்டபடிப்பின் போதே பெங்ளுரிலுள்ள ஹிந்துஸ்தான் விமான தொழிற்கூடத்தில் பயிற்சிக்கு சென்றார். அப்துல் கலாம் அதற்கிணங்க ஹிந்துஸ்தான் விமான தொழிற் கூடத்தில் பயிற்சிகளை முடித்து பட்டம் பெற்றார். அதற்கிணங்க தனது இலட்சியமான விமானியாக வரவிரும்பிய அப்துல் கலாமிற்கு இராணு அமைச்சகத்தின் தொழில்நுணுக்க விருத்தி மற்றும் உற்பத்திதுறை விருத்தி கூடத்தில் தொழில்புரிவதற்கான வழிகிடைத்தது. மேலும் இந்திய விமான படையில் ஊழியத்திலும் தொழில் புரிவதற்கான வாய்ப்பு கிடைத்தது. குறித்த இரண்டிற்கும் விண்ணப்பித்த அப்துல் கலாமிற்கு நடைபெற்ற தேர்வில் தோல்வியே கிடைத்தது. தோல்வியோடு வீடு திரும்பிய அப்துல் கலாமிற்கு நம்பிக்கை தந்த பெருமைக்குரியவர் சுவாமி சிவானந்தாவாகும். தன்னுடைய நிலைமையினை சுவாமி சிவானந்தாவிடம் எடுத்துக்கூறிய அப்துல் கலாம் அவரின் வாக்கிற்கமைய தனது கடவுளின் எண்ணங்களுக்கிணங்க செயற்பட உத்தேசித்தார். அதனைத்தொடர்ந்து , பல தொழில்முயற்சிகளை மேற்கொண்ட கலாநிதி அப்துல் கலாம், கடந்த 1962 ம் ஆண்டு, இந்திய விண்வெளி திட்டத்தில், தொழில்புரிய ஆரம்பித்தார். அதற்கிணங்க 1963 ம் ஆண்டு முதல் 1982 ம் ஆண்டு வரையான 20 ஆண்டுகள் அப்துல் கலாம், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கூடத்தில் பல பதவிகளில் பணிபுரிந்தார். பின்னர், தும்பாவில் துணைக்கோள் ஏவுகணை குழுவில் இணைந்துகொண்ட டொக்டர் அப்துல் கலாம், எஸ் எல் வீ 3 எனும் ஏவுகணை படைப்பு திட்டத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். அதில் 44 துணை சாதனங்களை வடிவமைத்து, பயிற்சி செய்து, எஸ் எல் வீத திட்டத்தினை செம்மை செய்து, வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவ பணிபுரிந்தார். இதுவரை அவர், 5 ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். நாக ஏவுகணை திட்டம், பிரித்வீ ஏவுகணை திட்டம், ஆகாய ஏவுகணை திட்டம், திரிசுல் ஏவுகணை திட்டம், இக்னி ஏவுகணை திட்டம் ஆகிய பல முக்கிய ஏவுகணை திட்டங்களில் டொக்டர் அப்துல் கலாம் பிரதான பங்கு வகித்தார். உலகம்’ போற்றுமு; விஞ்ஞானியாகவிருந்த டொக்டர் அப்துல் கலாம் சிறந்த ஆன்மீகவாதியாகவும் காணப்பட்டார். அவர் இஸ்லாமிய மதத்தை பின்பற்றிய போதிலும் ,ஒரு சிறந்த ராம பக்தராக விளங்கினார். மேலும் தனது அறையில் நடராஜர் வெண்கல சிலையை வைத்து தினமும் ப+ஜிக்கும் பழக்கமும் அப்துல் கலாமிற்கு உண்டு. அதனைத்தவிர வீணை இயற்றுவது, ராகங்களை ரசிப்பது, கவிதை புனைவது எனும் துறைகளிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் தனது வாழ்க்கையை பற்றி எழுதிய அக்னி சிறகுகள் எனும் நூல் , இன்றும் உலகில் சாதிக்கத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும், வழிகாட்டியாகவுள்ளது. மேலும் அவர் எழுச்சி தீபங்கள் , இந்தியா 2020 மற்றும் அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை எனும் நூல்களையும் எழுதியுள்ளார். உலகம் போற்றும் விஞ்ஞானியான அப்துல் கலாம் பொன்மொழிகள், கவிதைகள், வாசகங்கள் என தன்னுடைய இலக்கியத்துறை மேன்மையினையும் வெளிப்படுத்தினார். இந்திய நாட்டின் ராணுவ ரொக்கட் படைப்பின் பிதாவாக அப்துல் கலாம் போற்றப்படுகிறார். இந்நிலையில் கடந்த 2002 ம் ஆண்டு ஜீலை மாதம் 25 ம் திகதி இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக அப்துல் கலாம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலிருந்து கடந்த 2007 ம் ஆண்டு ஜீலை மாதம் 25 ம் திகதி வரையான 5 வருடங்கள் இந்திய நாட்டின் குடியரசு தலைவராக , அப்துல் கலாம் சேவையாற்றினார். இந்;நிலையில் அவரை , கௌரவப்படுத்தும் முகமாக கடந்த 1997 ம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான , பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. மேலும் கடந்த 1981 ம் ஆண்டு, பத்மப+ஷனன் விருதும் ,கடந்த 1990ம் ஆண்டு பத்மவிபூஷணண் விருதும் கலாநிதி அப்துல் கலாமுக்கு வழங்கப்பட்டது. சாதாரண ஒரு, ஏழைக்குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் இதுவரை காலமும் விஞ்ஞானத்தின் வளர்ச்சியிலும், சமூகத்தின் மேம்பாட்டிலும் தன்னை முற்றுமுழுதாக ஈடுபடுத்தி வருகிறார். அவரது சொற்பொழிவுகளும் , வார்த்தைகளும், உலகிலுள்ள அனைவரையும் ஈர்த்த ஒரு விடயமாகும். ஒவ்வொரு நாடும் அப்துல் கலாமை , தங்களது நாட்டில் , சொற்பொழிவாற்ற வர அழைக்கும் இத்தருணத்தில் அவர் இலங்கைக்கு , பல முறை விஜயம் மேற்கொண்டு எமது மாணவ சமூகத்திடம் தனது கருத்துக்களை பகிரந்துகொண்டமை எமக்கு பெருமைக்குரிய விடயம். எனினும் அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற தமிழர்களின் பெருமைமிகு, மாநாடான செம்’மொழி மாநாட்டில் அப்துல் கலாம் , புரக்கணிக்கப்பட்டமை அனைவர் மனதிலும் ஆறாத வடுவினை ஏற்படுத்தியது. எனினும் அவர் புரக்கணிக்கப்பட்டமைக்கான காரணம் இதுவரை சொல்லப்படவில்லை. தமிழ் பேசும் மக்களின் பெருமையை உலகுக்கு உணர்த்திய சிறுப்புக்குரியவரும் ,இந்தியாவை அணுவாயுத வல்லராச மாற்றியதில் பெரும் பங்கு வகித்த ஏவுகணை மனிதன் கலாநிதி அப்துல் கலாம், செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ளாமை, மாநாட்டை நிறைவடைய செய்யவில்லை. தன்னுடைய வாழ்நாளை அணுவிஞ்ஞான துறைக்கும், விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கும் அர்ப்பணித்துள்ள அப்துல் கலாம் இன்றும் எளிமையான வாழ்வையே வாழ்ந்து வருகிறார். சாதாரண கிராமமொன்றில் வறிய குடும்பத்தில் பிறந்து , இன்று உலகம் போற்றும் மகானாக வாழும் கலாநிதி அப்துல் கலாம் , வாழும் சரித்திரம்….....................................................................................................பிரசன்னா
Thursday, October 11, 2012
தஞ்சை பெரும்கோயில்
தஞ்சை பெரும்கோயில்
தமிழ் மக்களின் பாரம்பரிய சமய பண்பாட்டு கோட்பாடுகளை உலகளாவிய ரீதியில் பரப்புவதற்கு மிகப் பெரிய பங்குவகித்த வரலாற்று சின்னம் இந்து மதத்தவரின் உருவ வழிபாட்டின் கோட்பாட்டிற்கமைய அவர்களின் பாரம்பரியம் மற்றும் சமயத்தின் தொன்மை என்பவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டும் இந்து மதத்தின் ஆதார சின்னமாக விளங்குவது தஞ்சை பெரும்கோவில். இந்திய தமிழ் நாட்டின் தஞ்சாவ+ர் எனும் ஊரில் தமிழர்களின் கலை, கலாசாரம், கற்பனை, சிற்ப திறனை எடுத்துக்காட்டும் சின்னமாக தஞ்சை பெரும் கோயில் அமைந்துள்ளது. கடந்த கி.பி. 986 ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ராஜராஜ சோளமன்னா சேர,பாண்டிய, பல்லவ, சாலூக்கிய மன்னர்களை வெற்றிகொண்டு அவர்களின் நாடுகளை தன்வசப்படுத்தினார். இந்நிலையில் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்த நகர் அனைத்தையும் ஒன்றுசேர்த்து தனது புகழை பரப்புவதற்காக அமைக்கப்பட்ட கோயிலே தஞ்சை பெரும் கோவிலாகும். அதனடிப்படையில் கிறிஸ்த்துவுக்கு பின் 1003 ம் ஆண்டில் தொடங்கிய தஞ்சை பெரும் கோவிலின் கட்டுமான பணிகள் கி.பி. 1010 ம் ஆண்டு நிறைவடைந்தது. 7 வருடங்களில் பல சிறப்புகளுடன் கூடிய தஞ்சை பெரும் கோயில் அமைக்கப்பட்டது. அதற்கமைய ஆலயத்தின் முதன்மை கோபுரத்தின் உயரம் 215 அடி அதாவது 65 மீற்றர் என கணக்கிடப்பட்டுள்ளது. அது கருவரைக்கு மேற்பகுதியில் 96 அடி சதுரமான அடித்தளத்தின் மேல் ஒரே கல்லால் உருவாக்கப்பட்டுள்ளமை அதன் விசேட சிறப்பாகும். இதேவேளை குறித்த கோபுரத்தின் நிழல் எந்தவொரு காலத்திலும் நிலத்தில் படாத வண்ணம் கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பக் கிரகத்தில் மாத்திரம் சூரிய வெளிச்சம் படும் அற்புதமான கட்டிட கலையால் ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் கருவரையில் அமைந்துள்ள மூல லிங்கம் ஆவுடையார் எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. அது விசேட ரக கல்லில் உருவாக்கப்பட்டுள்ளதோடு அதன் உயரம் 23 அடியும் சுற்றளவு 54 அடி உடையதாகவும் காணப்படுகிறது. மேலும் கோவிலின் முற்பகுதியில் அமர்ந்த நிலையிலுள்ள தனிக்கல்லில் செதுக்கிய நந்தி 25 டொன் எடையும் 20 அடி உயரமும் 8 அடி அகலமும் 20 அடி நீளமும் உடையது. கோபுரத்தின் உச்சியிலுள்ள கலசம் 3.8 மீற்றர் உயரமும் 89 டொன் எடையும் உடைய தனியான 25 அடி சதுரக்கல்லில் செதுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. குறித்த கலசத்தினை உச்சியில் அமைப்பெதற்கான கல்லை அக்காலத்தில் 6 கிலோ மீற்றர் தூரத்திலிருந்து கொண்டு வந்த மகா திறமை இன்றும் புரியாத புதிராகயுள்ளது. இதுவே அவ்வாலயத்தின் அழியாத புகழுக்கு காரணமாகும். தஞ்சை பெரும் கோயில் கட்டுவதற்கு இந்தியாவின் பல பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களின் மொத்த அளவு ஜீஷா ப்ரமிட் கட்டுவதற்கு பயன்படுத்திய கற்களை விடவும் பெரியதென ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர். குறித்த ஆலயத்தின் பரப்பானது 200 தாஜ்மகால்களை உள்ளடக்கும் அளவுக்கு விசாலமானதாகவும் பிரமாண்டமானதாகவும் காணப்படுகிறது. இதேவேளை கோயிலின் பல இடங்களில் கல்வெட்டுக்கள் மற்றும் சிற்பங்கள் என்பன தென்படுவதாகவும் அவை அனைத்தும் ராஜ ராஜ சோழ மன்னன் காலத்திற்குரியதெனவும் சொல்லப்படுகிறது. மேலும் அவற்றின் 107 பந்திகளில் கல்வெட்டு வசனங்கள் 108 சிவ தாண்ட வடிவங்கள் சமய நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு என பல விடயங்கள் காணப்படுகின்றன. ஆலயத்தில் வெளிப்பகுதியில் சோள பேரரசன் ராஜ ராஜனின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆலயமானது தஞ்சை பெருவுடையார் கோயில் பெரிய கோயில் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. பல பண்டைய சிற்பக்கலை வெளிப்பாடுகளை கொண்ட தஞ்சய பெருங்கோயிலானது யுனஸ்கோவினால் உலக கலாசார சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் நெற்களஞ்சியமென வர்ணிக்கப்பட்ட தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள தஞ்சை பெருங்கோயிலானது உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களின் தொன்மை சிறப்பினையும் அழியா புகழினையும் எடுத்துச்செல்லும் வரலாற்று சான்றாகும். தஞ்சை பெருங்கோயில் தமிழர்களின் வரலாற்று சுவடுகளின் தஞ்சம்…….............பிரசன்னா
தமிழ் மக்களின் பாரம்பரிய சமய பண்பாட்டு கோட்பாடுகளை உலகளாவிய ரீதியில் பரப்புவதற்கு மிகப் பெரிய பங்குவகித்த வரலாற்று சின்னம் இந்து மதத்தவரின் உருவ வழிபாட்டின் கோட்பாட்டிற்கமைய அவர்களின் பாரம்பரியம் மற்றும் சமயத்தின் தொன்மை என்பவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டும் இந்து மதத்தின் ஆதார சின்னமாக விளங்குவது தஞ்சை பெரும்கோவில். இந்திய தமிழ் நாட்டின் தஞ்சாவ+ர் எனும் ஊரில் தமிழர்களின் கலை, கலாசாரம், கற்பனை, சிற்ப திறனை எடுத்துக்காட்டும் சின்னமாக தஞ்சை பெரும் கோயில் அமைந்துள்ளது. கடந்த கி.பி. 986 ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ராஜராஜ சோளமன்னா சேர,பாண்டிய, பல்லவ, சாலூக்கிய மன்னர்களை வெற்றிகொண்டு அவர்களின் நாடுகளை தன்வசப்படுத்தினார். இந்நிலையில் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்த நகர் அனைத்தையும் ஒன்றுசேர்த்து தனது புகழை பரப்புவதற்காக அமைக்கப்பட்ட கோயிலே தஞ்சை பெரும் கோவிலாகும். அதனடிப்படையில் கிறிஸ்த்துவுக்கு பின் 1003 ம் ஆண்டில் தொடங்கிய தஞ்சை பெரும் கோவிலின் கட்டுமான பணிகள் கி.பி. 1010 ம் ஆண்டு நிறைவடைந்தது. 7 வருடங்களில் பல சிறப்புகளுடன் கூடிய தஞ்சை பெரும் கோயில் அமைக்கப்பட்டது. அதற்கமைய ஆலயத்தின் முதன்மை கோபுரத்தின் உயரம் 215 அடி அதாவது 65 மீற்றர் என கணக்கிடப்பட்டுள்ளது. அது கருவரைக்கு மேற்பகுதியில் 96 அடி சதுரமான அடித்தளத்தின் மேல் ஒரே கல்லால் உருவாக்கப்பட்டுள்ளமை அதன் விசேட சிறப்பாகும். இதேவேளை குறித்த கோபுரத்தின் நிழல் எந்தவொரு காலத்திலும் நிலத்தில் படாத வண்ணம் கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பக் கிரகத்தில் மாத்திரம் சூரிய வெளிச்சம் படும் அற்புதமான கட்டிட கலையால் ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் கருவரையில் அமைந்துள்ள மூல லிங்கம் ஆவுடையார் எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. அது விசேட ரக கல்லில் உருவாக்கப்பட்டுள்ளதோடு அதன் உயரம் 23 அடியும் சுற்றளவு 54 அடி உடையதாகவும் காணப்படுகிறது. மேலும் கோவிலின் முற்பகுதியில் அமர்ந்த நிலையிலுள்ள தனிக்கல்லில் செதுக்கிய நந்தி 25 டொன் எடையும் 20 அடி உயரமும் 8 அடி அகலமும் 20 அடி நீளமும் உடையது. கோபுரத்தின் உச்சியிலுள்ள கலசம் 3.8 மீற்றர் உயரமும் 89 டொன் எடையும் உடைய தனியான 25 அடி சதுரக்கல்லில் செதுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. குறித்த கலசத்தினை உச்சியில் அமைப்பெதற்கான கல்லை அக்காலத்தில் 6 கிலோ மீற்றர் தூரத்திலிருந்து கொண்டு வந்த மகா திறமை இன்றும் புரியாத புதிராகயுள்ளது. இதுவே அவ்வாலயத்தின் அழியாத புகழுக்கு காரணமாகும். தஞ்சை பெரும் கோயில் கட்டுவதற்கு இந்தியாவின் பல பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களின் மொத்த அளவு ஜீஷா ப்ரமிட் கட்டுவதற்கு பயன்படுத்திய கற்களை விடவும் பெரியதென ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர். குறித்த ஆலயத்தின் பரப்பானது 200 தாஜ்மகால்களை உள்ளடக்கும் அளவுக்கு விசாலமானதாகவும் பிரமாண்டமானதாகவும் காணப்படுகிறது. இதேவேளை கோயிலின் பல இடங்களில் கல்வெட்டுக்கள் மற்றும் சிற்பங்கள் என்பன தென்படுவதாகவும் அவை அனைத்தும் ராஜ ராஜ சோழ மன்னன் காலத்திற்குரியதெனவும் சொல்லப்படுகிறது. மேலும் அவற்றின் 107 பந்திகளில் கல்வெட்டு வசனங்கள் 108 சிவ தாண்ட வடிவங்கள் சமய நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு என பல விடயங்கள் காணப்படுகின்றன. ஆலயத்தில் வெளிப்பகுதியில் சோள பேரரசன் ராஜ ராஜனின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆலயமானது தஞ்சை பெருவுடையார் கோயில் பெரிய கோயில் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. பல பண்டைய சிற்பக்கலை வெளிப்பாடுகளை கொண்ட தஞ்சய பெருங்கோயிலானது யுனஸ்கோவினால் உலக கலாசார சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் நெற்களஞ்சியமென வர்ணிக்கப்பட்ட தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள தஞ்சை பெருங்கோயிலானது உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களின் தொன்மை சிறப்பினையும் அழியா புகழினையும் எடுத்துச்செல்லும் வரலாற்று சான்றாகும். தஞ்சை பெருங்கோயில் தமிழர்களின் வரலாற்று சுவடுகளின் தஞ்சம்…….............பிரசன்னா
Tuesday, October 9, 2012
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்….
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்….
எளிமையான தமிழில் பாமர மக்களுக்கும் விளங்க கூடிய வகையில் தனது கருத்துக்களை வெளி;;க்கொணர்ந்தவர். தான் எழுதிய பாடல்கள் மூலம் தமிழ் திரையுலக பாடல்களுக்கு தனி அந்தஸ்த்து தேடி தந்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். கடந்த 1930 ம் ஆண்டு நான்காம் மாதம் 13 ம் திகதி தமிழ் நாட்டின் தஞ்சாவ+ர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகேயுள்ள சங்கம் படைத்தான் காடு எனும் சிற்றூரில் பிந்தார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இவரின் தாய் தந்தை அருணாசலனார் , ரிசாலாட்சி ஆகியோராவார். எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்;. 2ம் ஆண்டு வரையே பள்ளிப்படிப்பை மேற்கொண்டார். தனது 19வது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் கொண்ட பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கிராமிய மண்ணைத் தழுவிய பாடல்களில் அதிக ஆர்வம் கொண்டார். தனது தந்தையான அருணாசலனார் கவிதை எழுதும் ஆற்றல் உடையவர். அதேபோல் அவரை வளர்த்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சகோதரரும் கவிதை பாடுதல் மற்றும் ஒவியத்துறைகளில் சிறந்து விளங்கியமை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தர்த்தின் திறமைகளை இயல்பாகவே வளர்த்துக்கொள்ள வாய்ப்பளித்தது. இளம் வயதிலேயே பாடல்களை பாடுவதில் ஆர்வம் காட்டிய கல்யாண சுந்தரம் நாடகம், சினிமா போன்றவற்றை பார்த்து விட்டு அதிலுள்ள பாடல்களை திறம்பட பாடுவதற்கு பழகிகொண்டார். பகுத்தறிவு கொள்கைகள் கமினியுசிய கொள்கைகள் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். தனது பாடல்களில் உருவங்களை காட்டமல் உணர்ச்சிகளை வெளிக்காட்டியவர் நாட்டிலிருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக்காட்டியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும் ஆவேசத்தையும் உணர்ச்சி பொங்க தனது பாடல்களில் வெளிக்கொணர்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். கடந்த 1955 ம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலையேற்றி அத்துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார். மேலும் நாடகத்துறையில் ஈடுபாடு கொண்ட அவர் பல நாடகங்களிலும் நடித்திருந்தார். திரையுலகில் அவர் எழுதிய அனைத்து பாடல்களும் முத்தான பாடல்களாக அமைந்தது. இவரது பாடல் எழுதும் திறன் சமூக கருத்துக்கள் நிறைந்த வரிகள் என்பன அனைவரையும் வெகுவாக கவர்;ந்தன. அதனைத்தொடர்ந்து கடந்த 1957 , 58 ம் ஆண்டு காலப்பகுதிகளில் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன் ஆகியோர் நடித்த திரைப்படங்களில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்கள் இடம்பெற்றன. எம்.ஜி.ஆரின் முதல் சொந்த படமான நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு கல்யாண சுந்தரம் எழுதிய பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றிபெற்றன. அதில் தூங்காதே தம்பி தூங்காதே எனும் பாடல் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அவரின் பாடல் திறனைக் கண்டு கவிஞர் கண்ணதாசன் அவரை புகழ்ந்து பாராட்டியுள்ளார். திரையுலகில் பாட்டு எழுதுவோர் வரலாம் போகலாம் ஆனால் ஒரு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் இனி வரமாட்டான். ஆரம்பமானான் ஒரு பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்கினான் மண்ணுக்குள்ளே…திரையுலகில் அவனே தத்துவ ஞானி! ஆழ்ந்த சிந்தனை, அழுத்தமான சொல்லாட்சி, ஒருவரிக்கு ஒருவரி உயிர்கொடுக்கும் தன்மை அவன் எழுதிய எல்லா பாடல்களிலும் உள்ளதென கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார். தனது கவிதை வளர்ச்சிக்கும் திரைப்பட உலக பிரவேசத்திற்கும் துணையாக பாரதிதாசன் விளங்கியதால் தன்னுடைய கவிதை, கடிதம உள்ளிட்டவற்றை எழுதும் போது முதலில் பாரதிதாசன் துணை என எழுதுவது அவரது வழக்கம். அவர் புகழின் உச்சியிலிருந்த போது கடந்த 1959 ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் மீண்டும் தனக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக சென்னை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 1959 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ம் திகதி தனது 29 வயதில் இறையடிசேர்ந்தார். அவரது மனைவியின் பெயர் கௌரவாம்பாள் அவருக்கு அவர் உயிரிழந்த போது 5 மாத கைக்குழந்தையொன்றும் இருந்தது. குறுகிய காலத்தில் பரந்த சிந்தனையை உருவாக்கி பல பாடல்களை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தமிழ் உலகிற்கு மிகப்பெரிய இழப்பு….இந்நிலையில் அவரை கௌரவப்படுத்துவதற்கு அவரது மறைவிற்கு பின் கடந்த 1981 ம் ஆண்டு தமிழக அரசில் பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படுவதாக அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.அறிவித்தார். இதேவேளை கடந்த 1955 ம் ஆண்டு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டது. மேலும் அவரின் நினைவை போற்றும் வகையில் இந்திய தஞ்சாவ+ரில் தமிழக அரசினால் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணி மண்டபம் அமைக்கப்பட்டது. 29 வருடங்கள் மாத்திரமே இவ்வுலகில் வாழ்ந்த புரட்சி கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மக்களின் வாழ்வியலில் எழுச்சி வரணே;டுமென பாடுபட்டவர். பட்டு;க்கோட்டை கல்யாண சுந்தரம் என்றும் மக்கள் மனதில்… நீங்காத நினைவுகளாய்;….......................................................................................................................பிரசன்னா
சேகுவேரா
சேகுவேரா……
சோசலிச புரட்சி, மார்க்சியவாதம், அரசியல் உள்ளிட்ட பலதுறைகளில் தனது முத்திரையை பதித்து உலகளாவியரீதியில் அறியப்பட்டவர். ஆயுதமற்ற புரட்சியைமுன்னெடுத்து புரட்சியில் தனிமுத்திரை பதித்து உலகில் இன்று அனைவராலும் அறியப்பட்ட புரட்சியாளர் சேகுவேரா. கடந்த 1928ம் ஆண்டு ஜூன் மாதம் 15 ம் திகதி ஆர்ஜேன்டினாவிலுள்ள உள்ள ரோசாரியோ எனும் இடத்தில் பிறந்தார் சேகுவாரா என அனைவராலும் அழைக்கப்பட்ட ஏணஸ்டோ குவேரா டிலா சேனா ஸ்பானிய பாஸ்கர் ஐரீசிய மரபுவழிகளை கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளையாக பிறந்தவர் சேகுவேரா இவரது குடும்பம். இடது சாரிசார்பான குடும்பமாக இருந்ததன் காரணமாக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்தநோக்கு இவருக்குகிடைத்தது. மேலும் அவரது தந்தைசோசலிசத்தின் ஆதரவாளர் என்பதால் சோஷலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு அதுவழிகாட்டியது. வாழ்க்கை முழவதும் இவரை ஆஸ்மாநோய் பாதித்திருந்தாலும் இவர் சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இளம் வயதிலேயே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் கொண்ட சேகுவேரா கவிதைகள் மீதும் அதிகஆர்வம் கொண்டிருந்தார். குவேராவின் வீட்டில் சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான நூல்கள் காணப்பட்டன. இதுவேஅவரின் தனித்துவமான கருத்துக்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மருத்துவராக விரும்பிய சேகுவேரா கடந்த 1948 ம் ஆண்டு மருத்துவ படிப்பிற்காக புவனஸ் அயஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அதற்கமையகடந்த 1951 ம் ஆண்டில் தனது படிப்பிலிருந்து ஒருவருட ஓய்வினை எடுத்துக் கொண்ட சேகுவேராதனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்காவிற்கான பயணத்தை ஆரம்பித்தார். இதன்போது அவர் மோட்டார் சைக்கிள் டயரி எனப்படும் நூலையும் எழுதிவெளியிட்டார். ஆயுதம் ஏந்தியபுரட்சி மூலமே சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வுகாண முடியுமென ஷேகுவேராநம்பினார். இதனால் எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்காஎனும் புரட்சிக் கொள்கையை ஷேகுவேரா முன்வைத்தார். தனது கல்வி நடவடிக்கையிலும் கவனம் செலுத்திய ஷேகுவேரா 1953 ஆம் ஆண்டு ஜீன் மாதம் மருத்துவ டிப்ளோமா பட்டத்தை பெற்றார். முற்போக்கு சிந்தனையை கொண்டிருந்த ஷேகுவேராபின்னர் பிடல் கெஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைந்துகொண்டார். 1959 ஆம் ஆண்டுகுறித்த இயக்கம் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. ஷேகுவேரா கியூப அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டார். 1965 ஆம் ஆண்டு கியூபாவிலிருந்து வெளியேறிய ஷேகுவேரா கொங்கோ மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிச போராட்ட வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கினார். உலகிலுள்ள புரட்சி இயக்கங்களினால் மரியாதைக்குரியவராக சேகுவேரா கருதப்படுகின்றார். 1966 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் கெரில்லாபோரை வழிநடத்தும் நோக்கத்துடன் பொலிவியாவிற்குள் நுழைந்த சேகுவேரா பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார். 5 நாடுகளை எல்லையாக கொண்ட பொலிவியாவின் கெரில்லா போராட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் ஏனைய நாடுகளுக்கும் விரிவுபடுத்துவதே சேகுவேராவின் பிரதான நோக்கமாக காணப்பட்டது. பிடல் கெஸ்ட்ரோவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த சேகுவேரா ‘சே’ என்றே அழைக்கப்பட்டார். சே என்பது நண்பர் என்றபொருள் கொண்ட ஆர்ஜன்டின சொல்லாகும். சேகுவேராவின் போரட்ட வலிமையால் அமெரிக்கா உட்பட பலநாடுகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளன. கல்வியறிவும், போராட்டகுணமும் திடகாத்திரமும் கொண்ட சேகுவேராவை கொன்றொழிப்பது இலகுவான காரியம் அல்லவென அவருக்கு எதிரான சக்திகள் உணர்ந்துகொண்டன. எனினும் சேகுவேராவின் புரட்சிக்கு முற்றுப்புள்ளிவைக்க அவரது மரணத்தின் மூலமே முடியுமென அமெரிக்கா திட்டவட்டமாக நம்பியது. இதனால் அமெரிக்க உளவுப் பிரிவு 24 மணிநேரமும் சேகுவேராவை ஒழிப்பதற்கான திட்டத்தில் ஈடுபட்டது. இந்நிலையில் பொலிவியா நாட்டில் வைத்து அமெரிக்கசிறப்பு இராணுவத்தினரால் சேகுவேராகைது செய்யப்பட்டார். அவர் பொலிவியாலுள்ளலாகி குவேரா எனும் இடத்தில் 1967 ஆம் ஆண்டு ஒக்டோர் மாதம் 9 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார். தன்னை கொலை செய்யவந்தவனை பார்த்ததும், கைதியாகவிருந்த நேரத்திலும் கூட சேகுவேரா கொலை செய்யவந்தவனிடம் “ஒருநிமிடம் பொறுநான் எழுந்துநிற்கிறேன் பிறகுஎன்னை சுடு” என்று கூறிமரணத்தின் போதுவீரனாகவே சேகுவேரா இறந்துள்ளார். உலகில் பல்வேறுபோராட்ட இயக்கங்களில் பல தலைவர்கள் தோன்றியிருந்தாலும் கூட சேகுவேராவை போன்று எந்த ஒருவரையும் போராட்டவீரராக உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. சேகுவேரா மரணித்தபோதும் அவரது கொள்கைகள் இன்றும் பின்பற்றப்படுகின்றன. உலக நாடுகளிலுள்ள பலவாகனங்களிலும் ஏன் இலங்கையில் கூட முச்சக்கரவண்டி முதல் பலவாகனங்களிலும் சேகுவேராவின் முகம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு அவரை கௌரவிக்கும் காட்சியைநாம் காண்கின்றோம். இது சேகுவேராவிற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும். மரணித்தும் இன்னும் உலகமக்களின் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் போராட்டவீரர் சேகுவேராவின் வாழ்க்கை ஓர் சரித்திரமாகும்............................................................................பிரசன்னா
Monday, October 8, 2012
ஆசிரியர் தினம்
ஆசிரியர் தினம்…
எழுத்தறிவித்தவன் இறைவன், அந்த எழுத்தை எங்களுக்கு புகட்டியவன் ஆசான். அதனால் கடவளுக்கும் மேலாக இவ்வுலகில் போற்றப்படவேண்டிய உன்னத பிறவிகள் ஆசான்கள். உலகில் கல்வி அறிவே இல்லாமல் வாழ்பவன் தனது இரண்டு கண்களையும் இழந்து வாழ்தற்கு சமன். இந்நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனது அறிவை புகட்டி இவ்வுலகை அறிவார்ந்த ப+ர்வமாக பார்ப்பதற்கு கண்களை எமக்கு தந்தவர்கள் ஆசான்கள் ஒவ்வொரு சமூகத்தையும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் ஒரு ஏணியாக சமூகத்தின் உயர்வினை தாங்குபவர்கள் ஆசான்கள் இவ்வாறான ஆசான்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக யுனஸ்கோ நிறுவனத்தினால் உலக ஆசிரியர் தினம் அங்கீகரிக்கப்பட்டது. அதற்கமைய உலகளாவிய ரீதியில் ஒக்டோபர் மாதம் 5 ம் திகதியும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் ஒக்டோபர் மாதம் 6 ம் திகதியும் உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 1994 ம் ஆண்டிலிருந்து ஆசிரியர்களை கௌரவிப்பதற்காக ஆசிரியர் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரி இல்லாத கடிதத்திற்கு சமம் இவ்வாறான முகவரியில்லாத மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முகவரி தந்து சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ப+ரணத்துவமிக்க மனிதர்களாக மாற்றுகின்றனர். தனது வழிகாட்டலின் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் ஆசிரியர்களின் மனதில் தோன்றும் மகிழ்ச்சியை அளவிடமுடியாது. ஆசிரியர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல அதற்கு உயிர்கொடுப்பவர்கள். சுடர்விடும் தீபமொன்றிலிருந்தான் மற்றொரு விளக்கை ஏற்ற முடியும் அதற்கொத்த பணியை செய்பவர்கள்தான் ஆசான்கள் எவ்வித பலன்களையும் எதிர்பாராமல் தம்மிடமுள்ள அனைத்து அறிவுப+ர்வமான விடயங்களையும் தன்னை நம்பிவரும் மாணவர்களுக்கு கற்றுத்தரும் மகான்கள். இவ்வுலகில் சாதனை படைத்த ஒவ்வொரு சாதனையாளர்களும் எங்கோ ஒரு மூலையில் தனது ஆசானின் வழிகாட்டலுக்கு இணங்கவே சாதனையாளன் எனும் பட்டத்தை பெறுகிறான். அந்த பட்டத்திற்கு எந்தவொரு ஆசானும் இதுவரை உரிமை கோரவில்லை அதுவே ஆசான்களின் ஈடு இணையற்ற சேவைக்கு சான்றாகும். தாய் தந்தையிடமிருந்து சிறுபராயத்திலேயே ஆசான்கள் எனும் மற்றொரு தாய் தந்தையிடம் நாம் ஒப்படைக்கப்படுகிறோம். எனவே ஒரு மனிதன் சிறுவன் என்ற கட்டத்தை முழுமையாக ஆசான்களுடனே நகர்த்துகின்றான் .அதனால் தான் எமது சமூகம் இன்றும் சக்தி மிக்க அடித்தளத்தை கொண்டு காணப்படுகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்திற்கு முன்பே ஆசானை மதிக்க வேண்டும் என்பதின் அர்த்தம் அன்றே குருகுல கல்விக்காலத்திலிருந்தே பேணப்படுகிறது. எனவே இவ்வுலகம் இயங்க ஆரம்பித்த நாள் முதல் ஒவ்வொரு மனிதனுக்கும் தனது துறைசார்ந்த ஒவ்வொரு மட்டத்திலும் தனக்கென ஒரு ஆசானை தீர்மானித்து கொள்கின்றான். அப்படி ஆசான்களை மதித்த மாணவர்கள்தான் இன்று உலகம் போற்றும் மகாகன்காளக மாறியுள்ளனர். ஆசிரியர் என்பவர் கற்றல் கற்பித்தலில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல் ஒரு அவதானியாக ஆலோசகராக ஒழுங்கமைப்பாளராக மதிப்பீட்டாளராக முகாமையாளராக ஊக்குவிப்பாளராக பல பரிமாணங்களில் தேடலில் வழி செய்பவராக இருக்க வேண்டுமென கல்வியலளார் அறிஞர் லுஈஸ் கொகாலே தெரிவித்துள்ளார். ஆசாரியர் பணி என்பது ஒருவரின் வாழ்வாதரத்திற்கான பணி அல்ல தனது வாழ்வையே ஆதாரமாக்கும் பணி. இந்நிலையில் ஆசிரியர்களை கௌரவப்படுத்துவதற்கும் சமூகத்தின் கண்களாகவும் அசைக்க முடியாத தூண்களாகவும் இருக்கும் ஆசான்களை நினைவு கூர்வதற்கும் இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலையிலும் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 6 ம் திகதி உலக ஆசிரியர் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. தனது வாழ் நாளை குறைத்து சமூகத்தின் வாழ்நாளை சீராக்கி ஒரு ஏணியாய் நின்று இவ்வுலகை வையகத்தில் காத்துவரும் ஆசான்கள் என்றும் எந்நாளிலும் எக்கணத்திலும் நினைவு கூறத்தக்கவர்கள். இறைவன் அறிவித்த எழுத்தினை எமக்கு புகட்டி முகவரி இல்லாத எமது வாழ்க்கைக்கு முகவரி தந்து ஒவ்வொரு மனிதனது வெற்றிக்கு பின்னிற்கும் ஆசான்கள் எம் கண்முன்னே நிற்கும் கடவுள்கள். தாயின் கருவறையில் 10 மாதங்கள் தான் ஐயா!! ஆனால் ஆசானின் கரங்களில் காலமெல்லாம்…..வாழ்க ஆசரியர் தொண்டு …....................................................................................பிரசன்னா
ப்ரமிட்
ப்ரமிட்…
உலக அதிசயங்களில் ஒன்றான ப்ரமிட் இன்றும் உலகை ப்ரமிக்கவைக்கும் அற்புத படைப்பாகும். தற்போதைய நவீன தொழிநுட்ப யுகத்தால் கூட சிந்திக்க முடியாத கட்டிட அமைப்பை கொண்டதாக ப்ரமிட் காணப்படுகிறது. நிலவிலிருந்து பார்த்தால் கூட தெரியக்கூடியதாக அமைந்துள்ள ப்ரமிட் ஐய்யாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொன்மை மிக்க வரலாற்றை கொண்டது. பல்வேறு இயற்கை சீற்றங்களை எதிர்கொண்ட போதும் அணுவளவேனும் பாதிப்படையாத ப்ரமிட் உலகில் மர்மமான ஒரு சரித்திரத்தின் அடையாளமே காணப்படுகிறது. ப்ரமிட்டுக்களை உருவாக்கியது யார்??? ஏன் உருவாக்கப்பட்டது??? முக்கோண வடிவில் அமைக்கப்பட்ட கட்டிட அமைப்பின் ரகசியம் என்ன??? இந்த கேள்விகளுக்கு இன்றுவரை விஞ்ஞானத்தாலோ தொழிநுட்பத்தாலோ பதில் கண்டுபிடிப்படவில்லை. எகிப்தின் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்துள்ள ப்ரமிட் இறந்த மன்னர்களின் கல்லறைகளே என கருத்து நிலவுகிறது. மம்மி என்று அழைக்கப்படும் மனிதவுடல் ப்ரமிட்டுக்குள் இருக்க கூடுமென ஐதீகம் நிலவுகிறது. பாரிய கற்களை கொண்டு நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டுள்ள ப்ரமிட்டுகளை எவ்வித தொழிநுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கினார்கள் என்பது இன்றும் விஞ்ஞானிகளின் தூக்கத்தை கெடுக்கும் வினாவாகவே காணப்படுகிறது. ப்ரமிட்டுக்களை உருவாக்க பயன்படுத்தப்பட்ட இலட்சக்கணக்கான கற்கள் எங்கிருந்து பெறப்பட்டதென்பது தொடரும் மர்மமாகும். ப்ரமிட்டுக்களின் உயரம் வரலாற்று ஆய்வாளர்களை வாய்பிழந்து யோசிக்க வைத்துள்ளது. வேற்றுக்கிரக வாசிகள் ப்ரமிட்டை கட்டியிருக்கலாமென நம்பப்படுகிறது. செவ்வாய் கிரகத்திலுள்ள சைடோனிக் என குறிப்பிடப்படும் பகுதியில் எகிப்திலுள்ள ப்ரமிட்டுக்களை போன்ற ப்ரமிட் அமைப்புக்கள் காணப்படுகின்றன. இதனால் செவ்வாய் கிரக ப்ரமிட்டுக்கும் எகிப்து ப்ரமிட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாமென கருதப்படுகிறது. ரஷ்ய விஞ்ஞானிகள் இதை உண்மையாக இருக்கலாமென கருதுகின்றனர். பண்டைய காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் தாம் இறந்ததன் பின்னர் வாழ்க்கை உண்டு என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருந்தார்கள். இதனால் எகிப்திய மன்னர்கள் தமது மறுவாழ்;க்கைக்கு தேவையான அரண்மனைகளாகவே ப்ரமிட்டுக்களை அமைத்ததாக ஜதீகம் காணப்படுகிறது. ப்ரமிட்டுக்களில் மன்னரின் சடலத்தோடு அவர் உயிருடன் இருந்தபோது பயன்படுத்திய விலையுயர்ந்த ஆபரணங்களும் பொருட்களும், உணவுத் தானியங்களும் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மன்னர்கள் மாத்திரமின்றி மகாராணிகள் மதகுருமார்கள் உட்பட பலசாரார் அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப தமக்கான ப்ரமிட்டுக்களை உருவாக்கியதாக பண்டைய வரலாறு கூறுகிறது. விஞ்ஞானிகள் அதிசய ப்ரமிட்டின் வியப்புகளை கண்டறிய எத்தனையோ முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். பண்டைய காலம் தொட்டு ப்ரமிட்டின் இரகசியம் பரம ரகசியமாகவே காணப்படுகிறது. விஞ்ஞானிகள் மாத்திரமன்றி மன்னர்களும் ப்ரமிட்டின் மர்மத்தை கண்டறிய களத்தில் குதித்து செயற்பட்டனர். உலகையே ப்ரமிக்க வைத்த மாவீரன் நெப்போலியனை கூட ப்ரமிட்டுக்கள் ப்ரமிக்க வைத்துள்ளன. ப்ரமிட்டுக்களின் ரகசியத்தை கண்டறிய ஆர்வம் கொண்ட மாவீரன் நெப்போலியன் தனியாளாக ஓர் இரவு ப்ரமிட்டில் தங்கியுள்ளார். மறுநாள் காலை வெளிவந்த அவர் ப்ரமிப்பின் உச்சத்தில் இருந்ததாக வரலாறு சொல்கிறது. ப்ரமிட்டின் பல ரகசியங்களை அனுபவரீதியாக கண்டறிந்த மாவீரன் நெப்போலியன் அவற்றை முழுமையாக வெளியிடவில்லை. “ நான் சொல்வதை யாரும் நம்பமாட்டர்கள்” என்ற கருத்தை மட்டும் நெப்போலியன் வெளியிட்டிருந்தார். நவீன தொழிநுட்ப யுகத்தில் அதிநவீன கெமராக்கள், இலத்திரனியல் உபகரணங்கள், ஆய்வுகளை மேற்கொள்வதற்கான பொருட்கள் என அனைத்தும் கைக்கெட்டிய தூரத்தில் காணப்படும் காலத்தில் ப்ரமிட்டுக்கள் தொடர்பில் தொடர்ந்தும் மர்மம் நீடிப்பது விஞ்ஞான உலகத்திற்கு தோல்வியே!!! ப்ரமிட்டின் ப்ரமிக்க வைக்கும் மர்மங்கள் தொடர்ந்தும் வியப்ப+ட்டும் நிலையில் அதன் மீதான மக்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளமை விசேட அம்சமாகும். .................................பிரசன்னா