ஆசிரியர் தினம்…
எழுத்தறிவித்தவன் இறைவன், அந்த எழுத்தை எங்களுக்கு புகட்டியவன் ஆசான். அதனால் கடவளுக்கும் மேலாக இவ்வுலகில் போற்றப்படவேண்டிய உன்னத பிறவிகள் ஆசான்கள். உலகில் கல்வி அறிவே இல்லாமல் வாழ்பவன் தனது இரண்டு கண்களையும் இழந்து வாழ்தற்கு சமன். இந்நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனது அறிவை புகட்டி இவ்வுலகை அறிவார்ந்த ப+ர்வமாக பார்ப்பதற்கு கண்களை எமக்கு தந்தவர்கள் ஆசான்கள் ஒவ்வொரு சமூகத்தையும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் ஒரு ஏணியாக சமூகத்தின் உயர்வினை தாங்குபவர்கள் ஆசான்கள் இவ்வாறான ஆசான்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக யுனஸ்கோ நிறுவனத்தினால் உலக ஆசிரியர் தினம் அங்கீகரிக்கப்பட்டது. அதற்கமைய உலகளாவிய ரீதியில் ஒக்டோபர் மாதம் 5 ம் திகதியும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் ஒக்டோபர் மாதம் 6 ம் திகதியும் உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 1994 ம் ஆண்டிலிருந்து ஆசிரியர்களை கௌரவிப்பதற்காக ஆசிரியர் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரி இல்லாத கடிதத்திற்கு சமம் இவ்வாறான முகவரியில்லாத மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முகவரி தந்து சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ப+ரணத்துவமிக்க மனிதர்களாக மாற்றுகின்றனர். தனது வழிகாட்டலின் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் ஆசிரியர்களின் மனதில் தோன்றும் மகிழ்ச்சியை அளவிடமுடியாது. ஆசிரியர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல அதற்கு உயிர்கொடுப்பவர்கள். சுடர்விடும் தீபமொன்றிலிருந்தான் மற்றொரு விளக்கை ஏற்ற முடியும் அதற்கொத்த பணியை செய்பவர்கள்தான் ஆசான்கள் எவ்வித பலன்களையும் எதிர்பாராமல் தம்மிடமுள்ள அனைத்து அறிவுப+ர்வமான விடயங்களையும் தன்னை நம்பிவரும் மாணவர்களுக்கு கற்றுத்தரும் மகான்கள். இவ்வுலகில் சாதனை படைத்த ஒவ்வொரு சாதனையாளர்களும் எங்கோ ஒரு மூலையில் தனது ஆசானின் வழிகாட்டலுக்கு இணங்கவே சாதனையாளன் எனும் பட்டத்தை பெறுகிறான். அந்த பட்டத்திற்கு எந்தவொரு ஆசானும் இதுவரை உரிமை கோரவில்லை அதுவே ஆசான்களின் ஈடு இணையற்ற சேவைக்கு சான்றாகும். தாய் தந்தையிடமிருந்து சிறுபராயத்திலேயே ஆசான்கள் எனும் மற்றொரு தாய் தந்தையிடம் நாம் ஒப்படைக்கப்படுகிறோம். எனவே ஒரு மனிதன் சிறுவன் என்ற கட்டத்தை முழுமையாக ஆசான்களுடனே நகர்த்துகின்றான் .அதனால் தான் எமது சமூகம் இன்றும் சக்தி மிக்க அடித்தளத்தை கொண்டு காணப்படுகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்திற்கு முன்பே ஆசானை மதிக்க வேண்டும் என்பதின் அர்த்தம் அன்றே குருகுல கல்விக்காலத்திலிருந்தே பேணப்படுகிறது. எனவே இவ்வுலகம் இயங்க ஆரம்பித்த நாள் முதல் ஒவ்வொரு மனிதனுக்கும் தனது துறைசார்ந்த ஒவ்வொரு மட்டத்திலும் தனக்கென ஒரு ஆசானை தீர்மானித்து கொள்கின்றான். அப்படி ஆசான்களை மதித்த மாணவர்கள்தான் இன்று உலகம் போற்றும் மகாகன்காளக மாறியுள்ளனர். ஆசிரியர் என்பவர் கற்றல் கற்பித்தலில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல் ஒரு அவதானியாக ஆலோசகராக ஒழுங்கமைப்பாளராக மதிப்பீட்டாளராக முகாமையாளராக ஊக்குவிப்பாளராக பல பரிமாணங்களில் தேடலில் வழி செய்பவராக இருக்க வேண்டுமென கல்வியலளார் அறிஞர் லுஈஸ் கொகாலே தெரிவித்துள்ளார். ஆசாரியர் பணி என்பது ஒருவரின் வாழ்வாதரத்திற்கான பணி அல்ல தனது வாழ்வையே ஆதாரமாக்கும் பணி. இந்நிலையில் ஆசிரியர்களை கௌரவப்படுத்துவதற்கும் சமூகத்தின் கண்களாகவும் அசைக்க முடியாத தூண்களாகவும் இருக்கும் ஆசான்களை நினைவு கூர்வதற்கும் இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலையிலும் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 6 ம் திகதி உலக ஆசிரியர் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. தனது வாழ் நாளை குறைத்து சமூகத்தின் வாழ்நாளை சீராக்கி ஒரு ஏணியாய் நின்று இவ்வுலகை வையகத்தில் காத்துவரும் ஆசான்கள் என்றும் எந்நாளிலும் எக்கணத்திலும் நினைவு கூறத்தக்கவர்கள். இறைவன் அறிவித்த எழுத்தினை எமக்கு புகட்டி முகவரி இல்லாத எமது வாழ்க்கைக்கு முகவரி தந்து ஒவ்வொரு மனிதனது வெற்றிக்கு பின்னிற்கும் ஆசான்கள் எம் கண்முன்னே நிற்கும் கடவுள்கள். தாயின் கருவறையில் 10 மாதங்கள் தான் ஐயா!! ஆனால் ஆசானின் கரங்களில் காலமெல்லாம்…..வாழ்க ஆசரியர் தொண்டு …....................................................................................பிரசன்னா
No comments:
Post a Comment
hi