முதலாம் ஜோன் போல்
உலகளாவிய கிறிஸ்தவர்கள் மத்தியில் ,அழியாத நினைவலைகளை ஏற்படுத்திச்சென்றவர்களில் இவரும் ஒருவர். கிறிஸ்தவர்களின் புனித தந்தையாக கருதப்படுபவர்கள் , பலர் வாழ்ந்து மறைந்திருந்தாலும் சில காலங்கள் மாத்திரமே திருத்தந்தையாக வாழ்ந்து, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் திருத்தந்தை முதலாம் ஜோன் போல் ஆகும். இவர் கடந்த 1912 ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 17 ம் திகதி , வேர்னிஸ் நகரில் எல்பினோ லூச்சினியா எனும் இயற்பெயருடன் பிறந்தார் திருத்தந்தை முதலாம் ஜோன் போல். ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவரான இவர் , மரைமாவட்ட குருமடத்தில் இணைந்து, தனது சமயக்கல்வியினை கற்றதோடு, உயர்குரு மடத்தில் பயின்றுகொண்டு, யேசு சபையில் இணைய விருப்பம் கொண்டார். எனினும் அவர் பயின்றுகொண்டிருந்த குரு மட அதிபர் , அதற்கு அனுமதி தர மறுத்ததன் காரணமாக , மரைமாவட்ட குருத்துவப்பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு, கடந்த 1935 ம் ஆண்டு குருவானார். தான் படித்த அதே குருமடத்தில், பேராசிரியராகவும், துணை அதிபராகவும் பணியில் இணைந்த திருத்தந்தை முதலாம் ஜோன் போல், உரோம் நகரின் கிரக்கோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் , இறையியலில் முனைவர் பட்டம் பெற விரும்பினார். இந்நிலையில் அங்கு கல்வி கற்க சென்ற அவரை படிக்கும்போதே, கற்பிக்கவும் வேண்டுமென குருமட அதிகாரிகள் விருப்பம் கொண்டனர். எனினும் கிரகோரியன் பல்கலைக்கழகம், இவர் உரோம் நகருக்கு வந்து, ஒரு வருடமாவது கல்லூரியில் படிக்க வேண்டுமென நிர்ப்பந்தித்தது. எனினும் திருத்தந்தை முதலாம் ஜோன் போலை இழக்க விரும்பாத வேர்னிஸ் குருமடத்திற்காக குறித்த விடயத்தில் ,நேரடியாக தலையிட்ட பாப்பிறை 12 ம் பயஸ் , அவரை அங்கிருந்தே முனைவர் பட்டப்படிப்பை உரோம் பல்கலைக்கழகத்தில் தொடர , சிறப்பு அனுமதி வழங்கினார். இந்;நிலையில் திருந்தந்தை 23 ம் ஜோன் , கடந்த 1958 ம் ஆண்டு, குருலூச்சினியாவை ஆயராக அறிவித்து, அவரை திருநிலைப்படுத்தினார். அதற்கிணங்க திருத்தந்தை 23 ம் ஜோன் கூட்டிய இரண்டாம் வத்திக்கான் பொது அவையின் அனைத்து கூட்டங்களிலும், கலந்துகொண்டார் ஆயர் லூச்சினியா. இந்நிலையில் கடந்த 1970 ம் ஆண்டு வேர்னிஸ் பேராயராகவும், முதுபெரும் தலைவராகவும் , பொறுப்பேற்றுக்கொண்ட இவரை, கடந்த 1973 ம் ஆண்டு, கர்தினாலாக உயர்த்தினார் திருத்தந்தை 6 ம் போல். அதற்கமைய 1978 ம் ஆண்டில் இவர், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 263 ஆவது திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கமைய தன்னை ஆயராக திருநிலைப்படுத்திய மற்றும் கர்தினாலாக உயர்த்திய இரண்டு முன்னாள் திருத்தந்தையர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களின் பெயர்களை தனக்கு வைத்துக்கொண்டார். அதற்கமைய திருத்தந்தையாக பதவியேற்றதன் பின்னர், தனது பெயரை முதலாம் ஜோன்போல் என மாற்றிக்கொண்டார் லூச்சியானி. மேலும் திருத்தந்தையர்களில் முதலாம் எனும் விடயத்தினை முதலில் பெயருக்கு முன் பயன்படுத்திய முதலாவது திருத்தந்தையும் இவராவார். இதேவேளை இரண்டு பெயர்களை கொண்ட முதலாவது திருத்தந்தையும் இவரேயாவார். தனது எளிமையான நடவடிக்கைகளாவும், புன்னகையாலும் அனைவரையும் கைநீட்டி வரவேற்பும் பண்பாலும் உலகையே கவர்ந்தார் திருத்தந்தை முதலாம் ஜோன் போல். இந்நிலையில் தான் திருத்தந்தையாக பதவியேற்கும்போது எளிமையின் அடையாளமாக மும்முடி அணிதலை தவிர்த்தவரும் இவரேயாவார். மேலும் உலகின் ஒவ்வொரு கோவிpலின் வருமானத்திலும் ஒரு பகுதி , மூன்றாம் உலக நாடுகளின் ஏழைத்திருச்சபை;பு வழங்கப்படவேண்டுமென்ற விதியை , முதன் முதல் அமுல்படுத்தியவரும் இவரேயாவார். இவருக்கு முன்னாலுள்ள மற்றும் பின்னால் வந்த அனைத்து திருத்தந்தையர்களும் எதை சொன்னாலும் திருச்சபையின் சார்பாக பேசுவதாக, நாம் என்ற பதத்தையே பயன்படுத்தி வந்தனர். எனினும் முதன்முதலில் நான் என்ற பதத்தை , பயன்படுத்திய பெருமைக்குரியவர் திருத்தந்தை முதலாம் ஜோன் போல் ஆவார். திருச்சபையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்ட பெருமையும் இவருக்குரியது. தொடர்ந்து, திருச்சபையில் பல சீர்திருத்தங்களை ஏற்படுத்துவாரென எதிர்பார்க்கப்பட்ட திருத்தந்தை முதலாம் ஜோன் போல், 33 நாட்கள் மாத்திரமே திருத்தந்தையாக கடமையாற்றினார். பாப்பரசராக மக்கள் மத்தியில் இவர் பிரபலமாவதற்கு முன்னரே, கடந்த 1978 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 ம் திகதி , மாரடைப்பால் உயிர்நீத்தார். உலகில் அதிகுறைந்த நாட்கள் திருத்தந்தையாக வாழ்ந்தவர்களில் முதலாம் ஜோன் போல் திருத்தந்தையும் ஒருவராவார். உலகில் திருத்தந்தையர்களின் வரலாற்றில், ஒரு தனியிடம் பிடித்து, எளிமையின் அடையாளமாக வாழ்ந்து, குறைந்த நாட்கள் திருத்தந்தையாக வாழ்ந்த பாப்பரசர் முதலாம் ஜோன் போல் அவர்கள் , என்றும் மக்கள் மனதில் மரியாதைக்குரியவர்.....................பிரசன்னா
No comments:
Post a Comment
hi