Sunday, October 21, 2012

பேர்ஜ் டுபாய் கோபுரம்


பேர்ஜ் டுபாய் கோபுரம்.

லகில் நவீனதொழில்நுட்பம் வளர்ச்சியடையும் சமகாலத்தில் ஏனைய துறைகளும் பாரிய வளர்ச்சியை பெற்றுள்ளன. கட்டிடநிர்மாணத்துறை அபிவிருத்தியின் புரட்சியை எட்டியுள்ளது. டுபாயில் அமைக்கப்பட்டுள்ள பேர்ஜ் டுபாய் கட்டிடம் இதற்கு சிறந்த முன்னுதாரணமாகும். 828 மீற்றர் உயரத்தையுடைய பேர்ஜ் டுபாய் கோபுரம் உலகில் மிக உயர்ந்த கட்டிடமாக் காணப்படுகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ள பேர்ஜ் டுபாய் கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் நிர்மாணப் பணிகள் நிறைவுபெற்றன. 190 ஹெக்டேயர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டள்ள கட்டிடம் 160 மாடிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. பிரம்பிப்பூட்டும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள பேர்ஜ் டுபாய் கோபுரத்தில் செயற்கை நதியும் அமைக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களால் 29 மில்லியன் மணித்தியாலங்களில் 8 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றத்திற்கு முகம் கொடுக்கக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள பேர்ஜ் டுபாய் கோபுரத்தில் 66 இரட்டைத் தட்டுமேல் கீழ் காவிகள் காணப்படுகின்றன. அதுசெக்கனுக்கு 18 மீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடியது. ஒரேநேரத்தில் 42 பயணிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள மேல் கீழ் காவியின் ஊடாக கட்டிடத்தின் அடித்தட்டிலிருந்து மேல் தட்டிட்கு பயணிக்க 15 நிமிட மணிநேரம் தேவைப்படுகிறது. பேர்ஜ் டுபாய் கட்டிடத்தின் அடித்தட்டிலிருந்து மேல் தட்டைநோக்கி 8 பாகை செல்சியசினால் வெப்பநிலை குறைவடைவதும் விசேட அம்சமாகும். 175 ஹோட்டல் அறைகள், 900 தொடர்மாடிகள், 4 நீச்சல் தடாகங்கள், உடற்பயிற்சி கூடம், ஆகியவற்றுடன் கூடியபேர்ஜ் டுபாய் கோபுரத்தில் 3 ஆயிரம் தனியார் வீடுகளும் காணப்படுகின்றன. சிறந்த காலநிலையில் கோபுரத்தை 60 மைல் தூரத்திலிருந்து வெற்றுக்கண்களால் பார்க்கமுடியுமென கணிப்பிடப்பட்டுள்ளது. சிக்காக்கோ கட்டிடகலைஞரால் வடிவமைக்கப்பட்ட பேர்ஜ் டுபாய் கோபுரம் பாலைவனத்தில் கட்டிடகலை நிகழ்த்திய அற்புதமென வர்ணிக்கப்படுகிறது. பேர்ஜ் டுபாய் எனஅழைக்கப்பட்ட கட்டிடம் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி பேர்ஜ் கலிபா எனபெயர் மாற்றம் பெற்றது. கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்வதற்கு பொருளாதார சிக்கல் ஏற்ப்பட்ட சந்தர்ப்பத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைவர் உதவிபுரிந்தமைக்காக கலிபா என்ற தலைவரை அராபிய மொழிப்பதம் கட்டிடத்தின் பெயரோடு இணைக்கப்பட்டது. பேர்ஜ் என்பது அராபிய மொழியில் நட்சத்திர கூட்டம் எனபொருள்படும். பேர்ஜ் கலிபா என்பது நட்சத்திர கூட்டத்தின் தலைவர் எனபொருள்படுகிறது. பெயரைப் போலவே உலகில் மனிதனால் கட்டப்பட்ட மிக உயர்ந்த கோபுரமாக காணப்படும் பேர்ஜ் கலிபா கட்டிடம் உலக மக்களை நிமிர்ந்துபார்க்கச் செய்யும் மற்றுமோர் அற்புதபடைப்பாகும்..........................................................................................பிரசன்னா  

No comments:

Post a Comment

hi