Thursday, October 4, 2012

காமராசர்


காமராசர்…..


ந்திய அரசியல் வரலாற்றில் தன்னிகரற்ற தலைவராக திகழ்ந்தவர். தன்னால் இந்தியாவில் அரசியல் தலைமையினை தீர்மானிக்க முடியுமென்ற நிலைக்கு தன்னை மாற்றியமைத்துக்கொண்டார். இந்திய தமிழகத்தில் மற்றுமொரு மகாத்மா காந்தியாக வாழ்ந்தவர் பெரும் தலைவர் காமராஜன். கடந்த 1903 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 15 ஆம் திகதி இந்தியாவின் விருது நகரில் குமாரசுவாமி நாடார் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் காமராஜர் இவருக்கு தாய் தந்தை வைத்த பெயர் காமாட்சி என்பதாகும். எனினும் அவரது தாயார் அவரை ராசா என்று அழைத்து வந்த நிலையில் நாளடைவில் காமாட்சி என்ற பெயர் காமராசு என மாற்றம் பெற்றது. தனது ஆரம்ப கல்வியினை சத்திரிய வித்தியாசாலா பள்ளியில் தொடங்கிய காமராஜர் இளம் வயதிலேயே பொறுமையுடனும் விட்டுக்கொடுக்கும் மனதுடனும் செயற்ப்பட்டார். இந்நிலையில் தனது பள்ளிப்படிப்பினை தொடர  முடியாத காமராஜர் தனது மாமாவிற்கு சொந்தமான ஆடை கடையொன்றில் தொழில்புரிந்து வந்தார். அங்கு தொழில்புரியும் சந்தர்ப்பத்தில் தேசத்தைலைவர்களின் வார்த்தைகளால் கவரப்பட்ட அவர் அரசியலிலும் சுதந்திர போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். அதற்கமைய தன்னுடைய 16 ஆம் வயதிலேயே தன்னை காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக மாற்றிககொண்டார். இந்நிலையில் கடந்த 1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் அவர் கலந்துகொண்டார். அதில் கைதுசெய்யப்பட்ட காமராஜர் கடந்த 1931 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கடந்த 1940 ஆம் ஆண்டு மீண்டும் கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அவர் அங்கிருந்த போதே விருது நகர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 9 மாதங்களின் பின்னர் விடுதலையான அவர் தனது பதவியினை இராஜினாமா செய்து பதவிக்கு நேர்மையாக முழுமையாக கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக்கொண்டிருப்பது தவறு என தனது கொள்கையினை வெளிக்காட்டினார். மேலும் சுதந்திர போராட்டத்தினை ஆரம்பிதத காமராஜர் கடந்த 1942 ஆம் ஆண்டு புரட்சியின் காரணமாக கைதுசெய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டார். இவ்வாறு சிறைவைக்கப்பட்ட காலத்தில் காமராஜர் சுயமாக படித்து தனது கல்வியறிவை வளர்த்துக்கொண்டார். அவர் தன்னுடைய அரசியல் குருவாக 1936 ஆம் ஆண்டு காங்கிரஷ் கட்சி தலைவராகவிருந்த சத்தியமூர்த்தியை ஏற்றுககொண்டார். சத்தியமூரத்தி காங்கிரஸ் கட்சி தலைவரான போது காமராஜரை செயலாளராக மாற்றிக்கொண்டார். இந்திய சுதந்திர போராட்டத்தில் மிகப்பெரும் பங்கு வகித்திருந்த பெருந்தலைவர் காமராஜர் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்திருந்தார். இந்நிலையில் கடந்த 1953 ஆம் ஆண்டு தமிழக காங்கிரஸ் அரசியலில் ஏற்ப்பட்ட சிக்கல் நிலை காரணமாக தலைமைப்பதவியில் மாற்றங்கள் ஏற்பட்டன. எனினும் காமராஜர் ஆட்சி தலைமைப்பொறுப்புக்கு வர தயங்கினார். அவருக்கு மொழி வளம் குறித்த தாழ்வுணர்ச்சியை ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு தயக்கம் என குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராகவிருந்த இராஜாஜி குளக்கல்வி திட்டமொன்றை அமுல்படுத்த அது அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி கடந்த 1953 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தமிழகத்திலிருந்து ஆந்திரா வேறு மாநிலமாக பிரிந்தது. இந்நிலையில் தனது அரசியல் பதவியினை இராஜாஜி இராஜினாமா செய்ய அந்த பதவிக்கு பெருந்தலைவர் காமராஜர் தெரிவு செய்யப்பட்டார். அதற்கமைய கடந்த 1954 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக காமராஜர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அவர் தனது அமைச்சரவையில் பல நுட்பமான விடயத்தினை கையாண்டிருந்தார். 8 அமைச்சர்களை மாத்திரமே தனது அமைச்சரவையின் நிர்வாகிகளாக அமைத்திருந்தார். மேலும் தனது அரசியல் வாழ்க்கையின் மூடப்பட்டிருந்த 6 ஆயிரம் பள்ளிகளை திறந்தும் 12 ஆயிரம் பள்ளிகளை தோற்றுவித்ததும் அவரை மக்கள் மனதில் நீங்காத இடத்திற்கு கொண்டு சென்றது. அவரது ஆட்சிக்காலத்தில் சுமார் 2 ஆயிரத்து 700 பள்ளிகளை ஆரம்பித்தார். மேலும் அவரது ஆட்சிக்காலத்தில் அவர் கொண்டு வந்த பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம் இன்றும் உலகளாவிய ரீதியில் பாராட்டப்பட்டு வரும் திட்டமாகும். இதேவேளை இந்தியாவின் பல தொழில்நுட்ப நிறுவனங்களை ஆரம்;பித்து கல்விக்கான அடித்தளத்தினை பெற்றுகn;காடுத்த பெருமைக்குரியவர் பெருந்தலைவர் காமராஜர் ஆவார். அவரது ஆட்சிக்காலத்தில் பல நீர்ப்பாசன திட்டங்கள் மின்சார திட்டங்கள் ரயில் நிலைய வேலைத்திட்டங்கள் மருத்துவம் சார்ந்த தொழிற்சாலைகள் என பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டிருந்தார். இவரது மக்கள் நல திட்டங்கள் காரணமாக 3 முறை தமிழக முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். கடந்த 1954 ஆம் ஆண்டு முதல் 57 ஆம் ஆண்டு வரையும் கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் 57 ஆம் ஆண்டு வரையும் கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் 63 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தார். இந்நிலையில் தமிழகத்தில் மூத்த அரசியல் தலைவர்கள் பதவி விலகி காங்கிரஸ் கட்சியினை வளர்ப்பதற்கு செல்ல வேண்டுமென தீர்மானமெடுத்த காமராஜர் கடந்த 1963 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 2 ஆம் திகதி தனது முதலமைச்சர் பதவியினை இராஜினாமா செய்து அகில இந்திய காங்கிரசின் தலைவராக பதவியேற்றார். அதன்காரணமாக இந்தியளவில் அவரது பெயர் பேசப்பட்டதுடன் அனைவர் மத்தியிலும் மரியாதை மிக்க செல்வாக்குள்ள தலைவராக மாறினார் காமராஜர் இந்நிலையில் கடந்த 1964 ஆம் ஆண்டு ஜகவர்லால் நேரு மரணமடைந்ததுடன் லால் பகதூர் சாசுதாரி என்பவதை இந்திய பிரதமராக தெரிவு செய்தார்;. காமராஜர் எனினும் அவர் கடந்த 1966 ஆம் ஆண்டு திடிர் மரணமடைந்ததன் பின்னர் காமராஜரை இந்திய பிரதமராக பதவியேற்க அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அதனை நிராகரித்து இந்திரா காந்தியை பிரதமராக கொண்டுவருவதற்கான முயறசிகளில் ஈடுபட்டு அதில் வெற்றிபெற்றார். இந்நிலையில் சில காலங்களில் இந்திரா காந்திக்கும் காமராஜருக்குமிடையில் ஏற்ப்படட முறுகல் நிலை காரணமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவடையும் அபாயம் ஏற்ப்பட்டது. இந்நிலையில் அகில இந்திய காங்கிரசிலிருந்து அவர் தமிழகத்திற்குள் மாத்திரம் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டார். அப்போது திராவிட முன்னேற்றக் கழகம் அபரிமீதமான வளர்ச்சி கண் ஆட்சியமைத்தன் காரணமாக அவர்களின் ஆட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி வந்தார். தொடர்ந்து இந்திய ஆட்சியில் ஏற்ப்பட்ட அசாதாரண போக்கு குறித்து மிகுந்த கவலையை கொண்டிருந்த பெருந்தலைவர் காமராஜர் கடந்த 1975 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அதாவது காந்தியின் பிறந்த தினத்தன்று இறையடி சேர்ந்தார்.
அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தை தவிர வேறு வங்கிக் கணக்கோ சொந்த வீடோ வேறு எந்த விதமான சொத்துக்களும் இல்லையென்பது அவரின் நேர்மையான அரசியல் வாழ்வை உலகளவில் எடுத்துக்காட்டியது. தனது வாழ்நாளில் திருமணம் செய்துகொள்ளாத பெருந்தலைவர் காமராஜர் வாடகை வீடொன்றிலேயே வசித்து வந்தமை அவர் மீதான மரியாதையினையும் அன்பினையும மேலும் வலுவடையச் செய்கிறது. இந்நிலையில் அவரின் மறையா நினைவுகளை என்னும் ஞாபகப்படுத்த சென்னை கிண்டியில் காமராஜர் நினைவிடமொன்று அமைக்கப்பட்டுள்ளதோடு அவரின் உருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமாரியில் அவரின் பெயரில மணி மண்டபமொன்றும் அமைக்கப்பட்டுள்ளதோடு நூலகமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் பெயரில் சென்னை உள்நாட்டு விமான நிலையமொன்றும் அமைக்கப்ட்டுள்ளது. இந்நிலையில் அவரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு காமராசு எனும் திரைப்படம் வெளியானது. இதேவேளை பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை வெளியிட்டனர். முன்னாள் இந்தியப் பிரதமர் ஜகவர்லால் நேரு, தந்தை பெரியார், இந்திரா காந்தி, கருணாநிதி உள்ளிட்ட பல தலைவர்கள் அவர் பற்றிய எண்ணங்களை ஒவ்வொரு மேடைகளிலும் பகிர்ந்து வந்தனர். அவரின் மறைவிற்கு பின்னர் கடந்த 1976 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசினால் காமராஜருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர்பெற்ற காமராஜர் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கிங் மேகர் அதாததுவ அரசை உருவாக்குபவர் மற்றும் பெருந்தலைவர் என புகழப்படுகிறார். படிக்காத பள்ளிப்படிப்பில் படிக்காத பாடங்களை வாழ்க்கையில் கற்றுக்கொண்டு இந்திய வராற்றில் அரசியலிலும் மக்களின் வாழ்க்கை நிலையிலும் ஏனைய சலக விடயங்களிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்திய பெருந்தலைவர் காமராசர் மக்களின் மனதில் தியாகச் சுடராய் என்றும் நீங்காத இடத்தில்....................................................................................................................பிரசன்னா
.

No comments:

Post a Comment

hi