Sunday, October 21, 2012

தேசத்தந்தை டி.எஸ்.சேனாநாயக்க


டி.எஸ்.சேனாநாயக்க

லங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மறக்க முடியாத தலைவர்களில் இவரும் ஒருவர். இலங்கையின் வரலாற்று பக்கத்தை திருப்பும் போது இவரின் பெயரின்றி அடுத்த பக்கம் இல்லை என்று  சொல்லுமளவிற்கு வரலாற்றில் இடம்பிடித்தவர். அந்நியர்களின் ஆட்சிக்காலம் ஒழிந்து இலங்கை சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டு அந்த சுதந்திர நாட்டை முதன்முதலில் தலைமைவகித்து சீரான அரசியல் நிலையை ஏற்படுத்தியவர் இலங்கையின் முதலாவது பிரதமரும் இலங்கையின் தேசத்தந்தையுமான டி.எஸ்.சேனாநாயக்க. இவர் கடந்த 1884 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நீர்கொழும்பு போதலே எனும் இடத்தில் முதலி தொன் ஸ்பாமர் சேனாநாயக்க மற்றும் டொன் கெத்தரினா எலிசபெத் பெரேரா குணசேகர சேனாநாயக்க ஆகியோருக்கு  மகனாக பிறந்தார் டி.எஸ்.சேனாநாயக்க என அழைக்கப்படும் தொன் ஸ்டீபன் சேனாநாயக்க. ஆரம்பத்தில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றிய அவர் பின்னர் பௌத்த மதத்திற்கு மாறினார். தனது இளமைக் கால கல்வியினை கொழும்பு சென்ட். தோமஸ் கல்லூரியில் பயின்றார். பின்னர் சிறிதுகாலம் நிலஅளவை திணைக்களத்தில் எழுத்தாளராக பணியாற்றினார். கடந்த 1914 ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாம் உலக மகா யுத்தத்தோடு கடந்த 1915 ஆம் ஆண்டு இலங்கையில் சந்தேகத்தின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் தனது சகோதரரான எப்.ஆர்.சேனாநாயக்கவின் மூலமாக கடந்த 1926 ஆம் ஆண்டு அவர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து இலங்கையின் அமைதிக்காகவும் சுதந்திரத்திற்காகவும் பலவேறு நடவடிக்கைகளை மே;றகொண்ட அவர் கடந்த 1929 ஆம் ஆண்டு இலங்கை சட்டவாக்க கழகத்தில் ஓர் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அவர் 1931 ஆம் ஆண்டு மினுவாங்கொட பிரதேச சபையின் ஊடாக மாநில அவைக்கு தெரிவு செய்யப்பட்டு, வேளாண்மை காணி அமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில் வேளாண்மை மறுமலர்ச்சிக்கென பாரியளவிலான சேவைகளை அவர் வழங்கியுள்ளார். இந்நிலையில் பிரித்தானியர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிய பின்னர் கடந்த 1946 ஆம் ஆண்டு டி.எஸ்.சேனாநாயக்க அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியினை ஸ்தாபித்தார். அதற்கமைய கடந்த 1947 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற முதலாவது தேர்தலில் வெற்றிபெற்று இலங்கையின் முதலாவது பிரதமராக பதவியேற்றார். மேலும் அவரின் பதவிக்காலத்தின் போது பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நைட் பட்டத்தை மறுத்த அவர் தொடர்ந்;தும் பிரித்தானியர்களுடன் நல்லுறவினை மேம்படுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கையில் பிரித்தானியரின் ஆதிக்கம் முழுமையாக நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து சுதந்திரமடைந்த இலங்கையை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று சிறந்த தலைவராக ஆட்சி செய்தார். இந்நிலையில் அதனைத்தொடர்ந்து மக்களுக்கான பல நலன்திட்டங்களை முன்னெடுத்த அவர் கல்லோயா திட்டத்தை ஆரம்பித்துவைத்தார். இந்நிலையில் நாட்டிலுள்ள சகல இன மக்களுக்கும் மரியாதைக்குரிய தலைவராக டி.எஸ்.சேனாநாயக்க விளங்கினார். இவர் மோலி துனுவில என்பவரை திருமணம் முடித்து அவருக்கு டட்லி சேனாநாயக்க மற்றும் ரொபர்ட் சேனாநாயக்க ஆகிய இரு புதல்வர்கள் இருந்தனர். இலங்கையின் முதலாவது பிரதமர் மற்றும் தேசத்தந்தையாக வாழ்ந்த பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க பிரித்தானியாவிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட நாட்டின் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றினார். கடந்த 1952 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி காலி முகத்திடலில் குதிரைச் சவாரியில் இருந்த போது தவறி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு பின்னர் அவரது மகனான ட்டலி சேனாநாயக்க இலங்கையின் பிரதமராக பதவியேற்றார். அதற்கிணங்க கடந்த 1952 ஆண்டு கடந்த 1960 தொடக்கம் 1965 ஆம் ஆண்டு வரையும் , கடந்த 1965 ஆம் ஆண்டு தொடக்கம் 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் டட்லி சேனாநாயக்க இலங்கையின் 2 ஆவது பிரதமராக பதவி வகித்தார். இலங்கை வரலாற்றில் முதல் தலைவர் என்ற பெருமைக்குரிய டி.எஸ்.சேனாநாயக்க இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வளர்ச்சியில் பெரும்பாங்காற்றிய தலைவர்களில் ஒருவர். அவர் மறைந்தாலும் இலங்கையின் முதலாவது பிரதமர் என்ற அவரது வரலாற்றுப் பதிவு என்றும் அழியாத சுவடுகளாய்...................................................................................................பிரசன்னா

No comments:

Post a Comment

hi