சுந்தராம்பாள்…… 21.09.2012
Sunday, September 30, 2012
கே.பீ. சுந்தரம்பாள்
சுந்தராம்பாள்…… 21.09.2012
எம்.ஆர்.ராதா
எம்.ஆர்.ராதா……
திரையுலகில் பரவலாக பேசப்பட்ட நடிகர்களில் ஒருவர் நகைச்சுவை நடிகராக, வில்லன் நடிகராக, மேடை நாடகத்தில் புகழ் பெற்றவருமாக திகழ்ந்தவர். திரையுலகில் நடிகர் வேல் என அழைக்கப்பட்ட எம்.ஆர்.ராதா. கடந்த 1907 ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் சென்னையில் ராஜகோபால் ராசம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் எம்.ஆர்.ராதா எனும் ராதகிருஸ்ணன். மதராஸ் ராஜகோபால் அவர்களின் மகன் ராதகிருஸ்ணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதாவாகும். ராதாவின் தந்தை ரஷ்ய எல்லைப்பகுதியில் வசுலீயா எனும் இடத்தில் இராணுவ வீரராக கடமையாற்றி போரில் மரணமடைந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்த எம்.ஆர்.ராதா தாயுடன் முரண்பட்டு வீட்டை விட்டு வெளியேறி சென்னை எழும்ப+ர் ரயில் நிலையத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக செயற்பட்டார். குறித்த இடத்தில் ராதாவைப் பார்த்த ஆலந்தூர் போய்ஸ் கம்பனி உரிமையாளர் ஆலந்தூர் டப்பி அரங்க நாயிடுசிதம்பரம் தனது நாடக கம்பனியில் நடிப்பதற்காக ராதாவினை அழைத்து செல்கிறார். அதனைத் தொடர்ந்து பல நாடாக கம்பனிகளில் தனது நடிப்பு துறையினை வெளிக்காட்டி நாடக ரசிகர்கள் மத்தியிலும் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றார். தனத வாழ்க்கையில் நாடகத்தை மட்டும் நம்பியிராமல் ஒரு மெக்கானிக்காகவும், எலக்ரீசியனாகவும் தனது தொழிலினை எம்.ஆர்.ராதா மேற்கொண்டார். அக்காலத்தில் நாடக நடிகர்களுக்கு பெண்தருவது என்பது எட்டாக்கனியாக இருந்த வேளையில் அவரின் தொழில் ராதாவின் திருமண வாழ்க்கைக்கு உதவியது. எம்.ஆர். ராதாவிற்கு எம்.ஆர்.ஆர். வாசு , ராதா ரவி ஆகிய மகன்களும் ராதிக நிரோசா ஆகிய மகள்களும் உள்ளனர். அவர்களும் சினிமா துறையில் நடித்த வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. தான் எடுத்துக் கொண்ட அத்தனை நாடக பாத்திரத்திலும் உணர்ச்சி ப+ர்வமான நடிப்பை வெளிப்படுத்தி எம்.ஆர்.ராதா சில சமயங்களில் சர்ச்சைக்குள்ளான நிலையில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டும் இருக்கிறார். இதனிடையே நாடகமுதுறையில் புகழ்பெற்று விழங்கிய எம்.ஆர்.ராதா கடந்த 1937 ம் ஆண்டு வெளிவந்த ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி எனும் திரைப்படத்தின் ஊடாக திரையுலக வாழ்வை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து 1942 ம் ஆண்டு வரை சுமார் 5 திரைப்படங்களில் நடித்த எம்.ஆர்.ராதா தனது சினிமா வாழ்வை விட்டு மீண்டும் நாடக துறைக் சென்றார். அதன்பின் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு தான் நாடகமாக அரங்கேற்றிய ரத்தக்கண்ணீர் நாடகத்தினை கடந்த 1954 ம் ஆண்டு திரைப்படமாக எடுத்து கதாநாயகனாக மீண்டும் திரையுலக வாழ்க்கைகுள் நுழைந்தார் எம்.ஆர்.ராதா. அதனைத் தொடர்ந்து வில்லனாகவும் நகைச்சுவை நடிகராகவும் பாத்திரமேற்று நடிக்க ஆரம்பித்த எம்.ஆர்.ராதா தனது வாழ்நாளில் 125 திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த ரத்தக்கண்ணீர், 1000 ருபாய், கைகொடுத்த தெய்வம், பாவமன்னிப்பு, புதிய பறவை, பலே பாண்டியா, பெற்றால்தான் பிள்ளையா மற்றும் தாயைக் காத்த தனையன் ஆகிய திரைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டன. எனினும் அவருக்கு நாடகங்கள் நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காணப்பட்டது. இதேவேளை தன்னிச்சையாக செயற்பட்டு தனக்கு நியாயம் என்று படுகின்ற விடயத்தினை எந்த சூழலிலும் துணிந்து செய்யக்கூடிய மனம் படைத்தவர் நடிகர் எம்.ஆர். ராதா தனது இறுதி நாள் வரை தந்தை பெரியாரின் கொள்கைகளை பின்பற்றினார். அதற்கிணங்க பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட திராவிட கழகத்தின் முன்னணி ஆதரவாளராக எம்.ஆர்.ராதா செயற்பட்டார். அவர் காமராஜரின் தனிப்பட்ட நண்பராக இருந்து பெரியார் காங்கிரசை ஆதரித்த போது அவர் காமராஜருக்காக தேர்தலில் வாக்குசேகரித்தார். இவரது அரசியல் சாய்வினாலும் தொழில் ரீதியிலும் எம்.ஜி.ஆருடன் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தார். கடந்த 1952 ம் ஆண்டு திருச்சி தேவர் மன்றத்தில் எம்.ஆர். ராதா போர்வாள் எனும் நாடகத்தை அரங்கேற்றினார். அப்போது தந்தை பெரியார் முன்னிலையில் அவருக்கு வழங்கப்பட்ட பட்டம்தான் நடிகவேல். தனது அரசியல் வாழ்விலும் மாறுபட்ட கருத்துக்களை கொண்ட எம்.ஆர்.ராதா சமூக சீரழிவுக்கு எதிரான துணிச்சலா போராட்டங்கள் பகிர்த்தறிவு பிரச்சாரம் போன்றவற்றினை முன்னெடுத்துள்ளார். இதுபோன்ற அரசியல் செயற்பாடுகளாலும் தொழில் ரீதியான முரண்பாடு காரணமாகவும் கடந்த 1967 ம் ஆண்டு திரையுலகில் புரட்சித் தலைவர் என அழைப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு 3 அரை வருட சிறைத்தண்டனையும் அனுபவித்தார். ராதா மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தால் எம்.ஜி.ஆர் தனது இயல்பான குரல் வளத்தை இழந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. அதனைத்தொடர்ந்து மீண்டும் தனது திரைவாழ்வில் தனித்துவமிக்க நடிப்பினை வெளிக்காட்டி எம்.ஆர்.ராதா கடந்த 1979 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் திகதி தனது 72 வது வயதில் மண்ணுலகை விட்டு பிரிந்தார். தந்தை பெரியார் பிறந்த அதேதினத்தில் பெரியாரின் 101 வது பிறந்தநாளன்று எம்.ஆர்.ராதா உயிரிழந்தமை குறிப்பிடத்தப்பது. சினிமா துறையிலிருந்தே அந்த துறையுடன் தொடர்புடைய சீர்கேடுகளை தைரியமாக வெளிக்கொணர்ந்தவர் எம்.ஆர்.ராதா. நாடக துறையில் தனது கலை வாழ்;க்கையினை ஆரம்பித்து சினிமாவில் ஜொலித்து அரசியலில் கால்தடம் பதித்து மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம்பிடித்த நடிகவேல் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை காலவெள்ளத்தில் என்றும் அழியாத கல்வெட்டாகவே பதிந்துள்ளது…….........................................................................................................பிரசன்னா
தந்தை பெரியார்
தந்தை பெரியார்…… 17.09.2012
சமூக சீர்திருத்ததிற்காகவும் சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும் மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும் பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாக கருதப்படும் திராவிட கழகத்தினை தோற்றுவித்தவர். பரவலாக பெரியார் என அறியப்படும் வெங்கட் ராமசாமி கடந்த 1879 ம் ஆண்டு செப்டம்பர் மாதம்17 ம் திகதி தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் வெங்கட்ட நாயக்கர் சின்னத்தாயம்மாள் ஆகியோருக்கு பிறந்தார் ஈ.வே. ராமசாமி;. வசதியான குடும்பத்தில் பிறந்த ஈ.வே.ராமசாமி எனும் தந்தை பெரியார் 5 ம் ஆண்டு வரை மாத்திரமே கல்வி பயின்றார். அதன் பின் கல்வியில் நாட்டம் இல்லாமையினால் தனுத 12 வது வயதுமுதல் தந்தையின் வணிகத் தொழிலை மேற்கொண்டார். சிறுவர் வயதிலிருந்தே மூடநம்பிக்கைகளிலும் சமய குருமார்களிடமும் வெறுப்புக்கொண்டிருந்த தந்தை பெரியார் குறித்த விடயத்திலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை தனக்குள் வளர்த்துக்கொண்டார். இந்நிலையில் தனது 19 வது வயதிலேயே 13 வயதான நாகம்மையாரை திருமணம் செய்துகொண்டார். தனது கணவனினன் புரட்சிகரமான செயல்களுக்கு தன்னை முழுமையாக ஆட்படுத்திக்கொண்ட நாகம்மையார், தந்தை பெரியாருடன் இணைந்து பல போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார். தொடர்ச்சியாக மதங்கள் மீமு கொண்டுள்ள வெறுப்பு மற்றும் மூடநம்பிக்கைகள் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த தந்தை பெரியார், தனது அரசியல் வாழ்வினையும் ஆரம்பித்தார். அதற்கமைய பெரியார் 1919 ம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்தி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் மகாத்மா காந்தியின் கதர் ஆடையை உடுத்திக்கொண்டதோடு பிறரையும் உடுத்தும்படி செய்தார் மேலும் மதுபான கடைகளை மூடுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த அவர் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கெதிராக போராட்டங்களையும் நடத்தியுள்ளார். இதேவேளை தீண்டாமையை வேறிருக்க அரும்பணியாற்றியுள்ளார். இந்நிலையில் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக கடந்த 1921 ம் ஆண்டு தந்தை பெரியார் சிறைத்தண்டனையை அனுபவித்தார். இந்நிலையில் கடந்த 1922 ம் ஆண்டு தந்தை பெரியார் சென்னை இராசதானியின் காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அது தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் என வழங்கப்படுகிறது. இந்நிலையில் அரசபணிகள் , கல்வி போன்றவற்றின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த தந்தை பெரியாரின் எண்ணங்களே காங்கிரஸ் கட்சி ஏற்கமறுத்தது. அதன் காரணமாக கடந்த 1925 ம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். இதனிடையே கடந்த 1924 ம் ஆண்டு முதல் 25 ம் ஆண்டு வரை கேரளாவிலுள்ள வைகம் எனும் இடத்தில் சாதி எதிர்ப்பு சத்தியகிரகம் போராட்டத்தினை பெரியார் மேற்கொண்டார். அதில் வெற்றி கண்ட அவருக்கு வைகம் வீரர் என பெயர் சூட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூடப்பழக்க வழக்கங்களை சமூதாயத்திலிருந்து ஒழித்து மக்களை அறிவின்மையிலிருந்து மீட்டெடுத்து தெளிவுடையோராக மாற்ற கடந்த 1925 ம் ஆண்டு தந்ததை பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதனிடையே அவர் தனது கொள்கைகளையும் கருத்துக்களையும் வெளிநாடுகளுக்கு சென்று பரப்பியுள்ளார்;. அதற்கமைய கடந்த 1929 ம் ஆண்டு முதல் 1932 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எகிப்து கிறீஸ் துருக்கி, ரஷ்யா, ஜேர்மனி, இங்கிலாந்து, ஸ்பெய்ன், பிரான்ஸ், மலேசியா, சிங்கப்ப+ர், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று தனது கொள்கைகளை தெளிவுபடுத்தினார். பெரியாரின் சுயமரியாதை கொள்கையானது ரஷ்யாவின் கமினியுசிய கொள்கையை ஒத்ததாக காணப்பட்டது. இதேவேளை கடந்த 1937 ம் ஆண்டு சென்னையில் ஹிந்தி கட்டாயப்பாடமாக பாடசாலையில் கற்பிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பெரியார் கடந்த 1916 ம் ஆண்டு ஆரம்பித்த நீதிக்கட்சியின் ஊடாக தமிழ் நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டார். தமிழ்நாடு தமிழனுக்கே என்று முதல் முதலில் முழக்கமிட்டவர் தந்தை பெரியாராவார். இந்நிலையில் பெரியாரினால் ஆரம்பிக்கபட்ட அவரின் தலைமையில் செயற்பட்டு வந்த நீதிக்கட்சி கடந்த 1944 ம் ஆண்டு பெரியாரினால் திராவிட கழகம் என பெயர் மாற்றப்பட்டது. இதனிடையே திராவிட கழகத்தின் தந்தைபெரியாரின் தலைமை தளபதியாக இருந்த அறிஞர் அண்ணா துரை அவரிடமிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக்கழகம் எனும் தமிழ் கட்சியினை ஆரம்பித்தார். தந்தை பெரியார் திராவிட நாடு அல்லது தனித்தமிழ் நாடு கோரிக்கையினை முன்வைத்தார். எனினும் அறிஞர் அண்ணா துரை மத்திய அரசாங்கத்துடன் இணைந்து கூடுதல் அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சி பெறுவதில் அக்கறை காட்டினார். குறித்த கருத்துவேறுபாடு இருவருக்குமிடையிலான பிரிவுக்கு காரணமாகும். தனது இறுதி காலத்தில் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மாள் என்பரை மறுமணம் புரிந்தமையும் அவரின் கொள்கையிலிருந்து பலர் விலகுவதற்கு காரணமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. எனினும் தனது கொள்கைகளையும் கருத்துக்களையும் தொடர்ச்சியாக அவர் வலியுறுத்தி வந்தார். தந்தை பெரியாரின் சமூதாய பங்களிப்பை பாராட்டி யுனஸ்கோ அவருக்கு புத்துலக தொலைநோக்காளர் , தென்கிழக்காசியாவின் சோக்கரடீஸ் , சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை என பல்வேறு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கியுள்ளன. இந்நிலையில் கடந்த 1973 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ம் திகதி தனது இறுதி கூட்டத்தில் தந்தை பெரியார் கலந்துகொண்டார். குறித்த கூட்டத்தினை தொடர்ந்து சுகவீனம் உற்றநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும் உறுதியான பகுத்தறிவு சிற்பி என அனைவராலும் போற்றப்பட்ட தந்தை பெரியார் சிகிச்சை பலனின்றி கடந்த 1973 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் திகதி தனது 94 வது வயதில் இறையடி சேர்ந்தார். இந்நிலையில் தந்தை பெரியாரை நினைவுப்படுத்தும் வகையில் அவர் போரட்டம் நடத்திய கேரள மாநிலம் வைக்கம் எனும் இடத்தில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரின் அமர்ந்த நிலையிலான 4 அடி உயர உருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.. மேலும் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை தமிழ்நாடு அரசாங்கம் பெரியார் அண்ணா நினைவு இல்லமாக மாற்றி அங்கு அவரின் சிலை வைக்கப்பட்டுள்ளதோடு அவரின் புகைப்படங்கள் மற்றும் வாழ்க்கை வரலாறு என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தனக்கென சுயசிந்தனையினை வளர்த்து மக்கள் வாழ்வில் மூடநம்பிக்கையினை இல்லாதொழித்து மக்களை சுயமரியாதையுடன் வாழ வைப்பதற்கென வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் எம் ஒவ்வொருவரினதும் இதயங்களை விட்டு பிரியார்……………...................................................................................................பிரசன்னா
ஓசோன்
ஓசோன் படலம்…… 16.09.2012
சூரிய ஒளிப்பிழம்பிலிருந்து வெளியேறும் புறவ+தா கதிர்தாக்கத்திலிருந்து உயிர்களைகாத்து ப+மியில் வாழும் உயிரினங்களுக்கு பாதுகாப்பு படையாக காணப்படுவது ஓசோன் படலமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 20 தொடக்கம் 50 கிலோமீற்றர் வரையுள்ள அடுக்கு வாயுக்களை கொண்ட வலயமே ஒசோன் படலமாகும். 1840 ம் ஆண்டில் ஜேர்மன் அறிஞர் ப்ரடரிக் ஸ்கோன் பெய்ன் ஓசோனை கண்டறிந்தார். ஓசோனின் அளவையும் பரப்பையும் செயற்கைகோள் மூலமாக துல்லியமாக அறியமுடியும். இவ்வாறு ப+மியினை ஆபத்தான கதிர்வீச்சுக்களிலிருந்து காத்துவரும் ஓசோனின் அளவு படிப்படியாக குறைந்து வருதை அறிஞர்கள் கண்டறிந்தனர். அதனை அடுத்து ஓசோனை பாதுகாப்பதற்கு கடந்த 1987 ம் ஆண்டு செப்டமபர் மாதம் 16 ம் திகதி கனடாவிலுள்ள மேன்றில் நகரில் மேன்றின் ஒப்பந்தம் எனும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. குறித்த உடன்படிக்கையின் பின்னர் ஓசோனின் துளை அளவு குறைந்திருந்தது. இந்நிலையில் இதேநிலை நீடிக்குமாயின் 2050 ம் ஆண்டுக்குள் ஓசோன் துளை மறைந்து விடுமென அறிவியலாளர்கள் நம்புகின்றனர்;. அதற்கமைய கடந்த 1987 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ம் திகதி ஏற்படுத்திக் கொண்ட மேன்றில் ஒப்பந்தத்தை குறிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 16 ம் திகதி சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ழு3 எனும் இரசாயன குறியீட்டால் அளையாளப்படுத்தப்படும் ஓசோனின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும். ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு நாம் பயன்படுத்தும் வேதிப்பொருட்களை முக்கிய காரணமாகும். குறிப்பாக O3 என குறிக்கப்படும். குளோரோ புளோரோ காபனின் பாவனையில் ஓசோன் படலம் பாதிப்படைவதற்கு அதிக காரணமாக விளங்குகின்றது. குளிரூட்டியில் பயன்படுத்தப்படும். குளோரோபுளோரோ காபன் ஓசோனை அதிகளவு பாதிப்புக்குள்ளாக்குகிறது. மேலும் ஏ சி , நெய்ல்ஸ் பொலிஸ், லிப்டிக்ஸ், தீயணைப்பு கருவி, ஸ்ப்றெஸ் போன்றவற்றின் குறித்த குளோரோ புளோரோ காபன் குளிரூட்டியாக பயன்படுத்தப்படுகிறது. குறித்த குளோரோ புளோரோ காபன் ஓசோனுடன் தாக்கமடைந்து குளோரினை தோற்றுவித்து குறித்த குளோரின் ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கிறது. ஒரு குளோரோபுளோரோ காபன் மூலக்கூறு 1000 ஓசோன் மூலக்கூறுகளை சிதைக்க கூடியது. அதனால் குளோரோபுளோரோ காபனை ஓசோன் கொல்லி எனவும் சொல்லப்படுகிறது. இதேவேளை ஓசோன் படலம் குறைவடைவதனால் சூரிய கதிர்கள் நேரடியாக ப+மியை தாக்கும். அதனால் ப+மியின் வெப்பம் அதிகரிக்கும். துருவப்பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி கடலின் நீர்மட்டம் உயரும், தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் மேலும் ஓசோன் படலத்தில் ஏற்படும் துளைகள் வழியே ப+மியை அடையும் புறவ+தா கதிர்கள் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும். குறித்த கதிர்வீச்சு கண்ணோய், பார்வை இழப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்தல், தோல்புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் குறித்த புறவ+த கதிர்கள் கடல் உணவுச்சங்கிலியின் முதல் இடத்திலுள்ள மிதவை உயிரினங்களை எழிதில் அழிக்கும். இவை அழிவதால் மற்றைய கடல் உயிர்கள் அழிவடையும் அபாயம் ஏற்படும். இந்நிலையில் கடந்த 2000 ம் ஆண்டு ஓசோன் படையின் துளையின் அளவு 28.3 மில்லியன் சதுரகிலோ மீற்றர் பரப்பளவாக காணப்பட்டது. இது அவுஸ்திரேலிய கண்டம் போல் 3 மடங்கான பரப்பளவை கொண்டது. இந்நிலையில் ஒசோன் படை தொடர்பான உலக விழிப்புணர்வு காரணமாக கடந்த 2002 ம் ஆண்டு குறித்த துளையின் பரப்பளவு 15 மில்லியன் சதுரகிலோ மீற்றராக குறைவடைந்தது. தொடர்ந்து ஒசோன் படையை பாதுகாப்பதற்கு உலக உயிரினங்களாகிய நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். உயிரினங்களை வாழ வைப்பதற்கு வளிமண்டலத்திலிருந்து செயற்படும் ஓசோன் படையின் அடர்த்தியை குறையவிடாமல் காப்பற்ற வேண்டியது மனித வர்க்கத்தினர் அனைவருக்கும் உரிய மிகப்பெரிய பொறுப்பாகும். அதற்கமைய ஒசோனை சிதைக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் ப+மியில் நாம் மேற்கொள்ள மாட்டோமென அனைவரும் உறுதி ப+ணுவோமாக….........................................................................................................பிரசன்னா..
அறிஞர் அண்ணாதுரை
அறிஞர் அண்ணாதுரை 15.09.2012 பிறந்தநாள்….
எந்த வாக்கியமும் ஒரு வார்த்தையை கொண்டு துவங்காது அந்தவார்த்தை ஏனென்றால்… ஏனென்றால்? ஏனென்றால் என்பது… ஒர் இணைப்பு சொல் என விளக்கம் தந்தவர். தமிழகத்தின் 6 வது முதலமைச்சராக பதவி வகித்தவர். எல்லோராலும் பரவலாக அறிஞர் அண்ணா என அறியப்பட்டவர் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை. 1909 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ம் திகதி இந்திய காஞ்சிபுரத்திலுள்ள நெசவு தொழிலலாளர் குடும்பமொன்றில் நடராஜன் மற்றும் பங்காறு அம்மாளுக்கு மகனாக பிறந்தவர் அண்ணாதுரை. சென்னை பச்சையப்பர் உயர் நிலை பள்ளியிலும் பின்னர் கல்வி கற்ற அண்ணா 1934 ம் ஆண்டு இளம் கலை மாமணி மேதகமை மற்றும் முதுகலை மாமணி பொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புக்களை மேற்கொண்டார். தமிழலிலும் ஆங்கிலத்திலும் மிகச் சிறந்த பேச்சாளரும் எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கியதோடு அதிலொரு பாத்திரமாகவும் நடடித்துள்ளார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி அதனூடாக தனது திராவிட சீர்திருத்த கருத்துக்களை முதல் முதலாக பரப்பியவரும் அண்ணாதுரை ஆவார். இதேவேளை தமிழில் அடுக்கு மொழிகளுடன் மிக நாகரீகமான முறையில் அனைவரையும் கவருகின்ற வகையில் தனது கறகரத்த குரலில் வளத்துடன் பேசும் திறன் பெற்றவர். இதேவேளை அண்ணா துரை எழுதிய மிகச் சிறந்த நாவல்களான வேலைக்காறி ஓர் இரவு, போன்ற நாவல்கள் திரைப்படமாக எழுதப்பட்டன. மேலும் அறிஞர் அண்ணாவிற்கு ரி.வி. நாராயண சுவாமி கே.ஆர். ராமசாமி, என்.எஸ் கிருஸ்ணன், எஸ்.எஸ். ராஜேந்திரன், சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி. ராமசந்திரன் ஆகியோர் பக்கபலமாக விளங்கியுள்ளனர். நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான அண்ணதுரை தனது ஆரம்ப வாழ்;க்கையை பள்ளிக்கூட ஆசிரியராக ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் அவர் செயற்பட்டார். அதனைத் தொடர்ந்து அக்காலத்தில் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நீதிக்கட்சியில் சேர்ந்த அண்ணாதுரை பெரியாருடன் திராவிட கழகத்தில் இணைந்து மூட நம்பிக்கைகளுக்கெதிரான பகுத்தறிவு கருத்துக்களையும் சமூக சீர்திருத்த கருத்துக்களை பரப்புவது தொடர்பிலும் அதிக ஈடுபாடு காட்டினார். இந்நிலையில் பெரியாருடன் ஏற்பட்ட சில கருத்து முரண்பாடுகள் காரணமாக 1949 ம் ஆண்டு பெரியாரை விட்டு விலகி திராவிட முன்னேற்றக் கழகம் எனும் புதிய இயக்கமொன்றினை நிறுவினார். தொடர்ச்சியாக அவர் மக்கள் மீது கொண்ட அக்கறை மற்றும் அவரது உரிமை போராட்டங்கள் என்பன அவரை மக்கள் மத்தியில் சிறந்த தலைவர் என்ற இடத்திற்கு கொண்டு சென்றது. அதற்கமைய 1967 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட அண்ணா துரை தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் முதலாவது திராவிட ஆட்சியை அமைத்தது. அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்டதாக விளங்கியது. மேலும் தமிழகத்திலிருந்த மும்மொழி சட்டத்தினை தகர்த்தெறிந்து இருமொழி சட்டத்தினை கொண்டு வந்தார். இதேவேளை மதராஸ் மாநிலம் என அழைக்கப்பட்ட சென்னை மாகாணத்தினை தமிழ் நாடு என பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தார். இதேவேளை அரசியலில் காங்கிரசில்லாத திராவிட கட்சிகளில் முதல் பங்களிப்பாளராக அண்ணதுரை விளங்கினார். இதேவேளை இந்தியா குடியரசான பிறகு ஆட்சியமைத்த முதல் காங்கிரஸ் அல்லாத திராவிட கட்சி என்ற பெருமையுடன் ஆட்சியமைத்தவர் அறிஞர் அண்ணாதுரையாவார். இந்நிலையில் 1967 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அண்ணாதுரை தமிழ் நாட்டில் 6 வது முதலமைச்சராகவும் தெரிவானார் எனினும் அவர் இரண்டு வருடகாலமே தனது முதலமைச்சர் பதவியை நீடித்தார். புற்றுநோய் தாக்கத்திற்குள்ளாகிய அறிஞர் அண்ணா மருத்துவ மனையில் அனுமதிக்கப்ட்ட நிலையில் கடந்த 1969 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3 ம் திகதி உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். இது கிண்ணஸ் உலகப்புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. இறுதி மரியாதையில் சுமார் 150 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தலைவரான அண்ணாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டதோடு அவரின் நினைவை போற்றும் வகையில் அவ்விடத்தில் அண்ணா சதுக்கம் எனும் நினைவிடமும் அமைக்கப்பட்டது, இதேவேளை அவர் வாழ்ந்த காஞ்சிபுர இல்லத்திற்கு பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் எனும் பெயர் சூட்டப்பட்டு நினைவுச்சின்னமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதோடு அங்கு அண்ணாவின் அமர்ந்த நிலையிலான சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை தி.முகாவிலிருந்து பிரிந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரன் அண்ணாவினை கௌரவப்படுத்தும் முகமாக தான் ஆரம்பித்த கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என பெயர் வைத்தார். இதேவேளை அண்ணாவினை கௌரவப்படுத்தும் விதத்தில் தமிழகத்தில் தி.மு.க. தலைமை செயலக கட்டிடத்திற்கு அண்ணா அறிவாலயமெனவும் தமிழக தொழிநுட்ப பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் அவரை கௌரவப்படுத்த தமிழ் நாட்டின் பிரதான பாதையொன்றிற்கு அண்ணாசாலை என பெயர் மாற்றப்பட்டுள்ளதோடு தமிழ் நாட்டின் சில குடியிருப்புகளுக்கு அண்ணா நகர் எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 2009 ம் ஆண்டு இந்திய மத்தியரசு அண்ணா நினைவாக அவரின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபா நாணயத்தை வெளியிட்டது. மேலும் கடந்த 2010 ம் ஆண்டு அண்ணாவின் நூற்றாண்டு ப+;ர்த்தியை நினைவு கோரும் வகையில் தமிழக அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும் உருவாக்கியுள்ளது. இந்திய மக்களின் உள்ளங்களை வென்று தன்னிகரற்ற தலைவராக வாழந்த அறிஞர் அண்ணா என்றும் மக்களின் சொத்து…....................................பிரசன்னா
சேர் பொன்னம்பலம் அருணாசலம்
சேர் பொன்னம்பலம் அருணாசலம். பிறந்த நாள் 14.09.2012
இலங்கையின் தேசிய தலைவர்களுள் ஒருவராக கருதப்படுபவர் சேர் பொன்னம்பலம் அருணாசலம். இவர் 1853 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் திகதி யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்த பொன்னம்பலம் முதலியாருக்கும் செல்லாட்சி அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவர் குமார சுவாமி முதலியார் சேர் பொன் இராமநாதன் ஆகியோரின் சகோதரனாவார். இவரது தாய் மாமனான சேர் முத்துக்குமார சுவாமியின் கண்காணிப்பில் அவர் இலங்கையின் தலைநகரான கொழும்பிலே வழந்தார் அதற்கமைய கொழும்பு ரோயல் கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்த சேர் பொன்னம்பலம் அருணாசலம். 1870 ம் ஆண்டு தனக்கு கிடைக்கப்பெற்ற ராணி புலமைப்பரிசிலை பெற்று லண்டன் கேம்றிட்ஜ் பல்கலைகழகத்திற்கு சென்று கலைமாமணி பட்டம் பெற்றார். இதேவேளை அவர் கணிதத்திலும் புராதான இலக்கியத்திலும் சிறந்த சித்திகளை பெற்று கல்வியில் வல்லமையுடையவராக வாழ்ந்தார். அதற்கமைய இங்கிலாந்தில் பரிஸ்றராகவும் திகழ்ந்த அவர் 1875 ம் ஆண்டு சிவில் சேவை உத்தியோகத்தில் சித்திபெற்ற முதல் இலங்கையராகவும் நாடுதிரும்பினார். அதனைத்தொடர்ந்து 1913 ம் ஆண்டு வரை அரச சேவையில் பல்வேறு உயர் பதவிகளை அவர் வகித்துள்ளார். முதலில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் பணியாற்றிய இவர் கண்டி காவல் துறை நீதிமனறத்திலும் தொடர்ந்து இலங்கையில் பல பகுதிகளிலுமுள்ள நீதிமன்றங்களில் அலுவலராக பணிபுரிந்தார். குறித்த அனுபவங்கள் காரணமாக அவருக்கு மட்டக்களப்பில் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றும் சந்தர்ப்பமும் கிடைத்தது. அவரது அனுபவங்களை திரட்டி சிவில் சட்டச்சுருக்கம் எனும் நூலை எழுதினார். இந்நிலையில் 1888ம் ஆண்டு முதல் 1902 ம் ஆண்டு வரை பதிவாளர் நாயகமாக பணியாற்றிய சேர் பொன் அருணாசலம் பல்வேறு நுணுக்கங்களுடனான குடிசன மதிப்பீட்டு முறையினை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் 1913 ம் ஆண்டு தனது 60 வது வயதில் அருணாசலம் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். இவரது அரசாங்க சேவையை பாராட்டி 5 ம் ஜோர்ஜ் மன்னர் பெங்கிங் ஹோம் அரண்மனையில் வைத்து இவருக்கு சேர் பட்டம் வழங்கினார். அரச பணியிலிருந்து ஓய்வு பெற்ற சேர் பொன் அருணாசலம் அரசயில் வாழ்க்கைக்குள் நுழைந்தார். அதற்கமைய சட்டநிரூபண சபையில் சேர் பொன் இராமநாதனுக்கு பின்னர் உறுப்பினராக இருந்தார். இந்நிலையில் தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக 1915ம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ம் திகதி சமூக சேவை சங்கத்தினை உருவாக்கி அதன் தலைவராகவும் பொறுப்பேற்றார். தொடர்ந்து தேசிய இயக்க அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சேர் பொன் அருணாசலம் தேசிய இயக்க அரசியலுக்காக 1917 டிசம்பர் மாதத்திலும் 1918 டிசம்பர் மாதத்திலும் இரு மாநாடுகளை ஏற்பாடு செய்தார். அதனைத் தொடர்ந்து 1919 ம் ஆண்டு ஜூன் மாதம் 25 ம் திகதி இலங்கை தொழிலாளர் சேம விருத்தி சங்கத்தை உருவாக்கி அதன் தலைவராகவும் அருணாசலம் செயற்பட்டார். குறித்த சங்கமானது 1920 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை தொழிலாளர்கள் சம்மேளனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதேவேளை சேர் பொன் அருணாசலத்தின் முயற்சியால் 1919 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் திகதி இலங்கையின் முதலாவது தேசிய இயக்கமான இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. 1919 ம் ஆண்டு முதல் 1922 ம் ஆண்டு வரை அதன் தலைவராகவும் இவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். எனினும் 1921 ம் ஆண்டு சில அரசியல் குழப்பங்களால் இலங்கை தேசிய காங்கிரசிலிருந்து அவர் வெளியேறினார். அதே ஆண்டில் ஒகஸ்ட் மாதம் தமிழர்களின் அடையாள அரசியலை நிலை நிறுத்தும் வகையில் தமிழர் மஹஜன சபையை உருவாக்கி அதன் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். எனினும் தமிழர் அடையாள அரசியலில் அருணாசலத்தின் ஆளுமையை முழுமையாகவே பெற முடியவில்லை. அவர் 1924 ம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ம் திகதி தனது 71 வது வயதில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் வைத்து இறையடிசேர்ந்தார்….இந்நிலையில் அவரின் தேசிய செயற்பாட்டிற்கு கௌரவம் அளிக்கும் வகையில் கடந்த 1930 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ம் திகதி அரசாங்க சபை மைதானத்தில் அதாவது தற்போதைய ஜனாதிபதி செயலகத்தில் அவரி;ன் வெண்கலச் சிலை திறந்து வைக்கப்பட்டது. அவரது உருவப்படங்கள் கொழும்பு ரோயல் கல்லூரி சமூக சேவை சங்கம் இலங்கை தேசிய காங்கிரசின் தலைமை அலுவலகம் என்பவற்றில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பேராதனை பல்கலைக்கழக மண்டபத்தில் சேர் அருணாசலத்தின் பெரும் சூட்ப்பட்டுள்ளது. அவர் கடந்த 1895 ம் ஆண்டு தாயுமான சுவாமிகளின் பாடல்கள் சிலவற்றை மொழிபெயர்த்து செய்துள்ளார். மேலும் 1897 ம் ஆண்டு மாணிக்க வாசகரினதும் தாயுமானவரினதும் பாடல்களை மொழிபெயர்த்தார். இதேவேளை ஆய்வுகளும் மொழிபெயர்ப்களும் எனும் நூலையும் கட்டுரை தொகுதிகளையும் வெளியிட்;டுள்ளார். இதைத்தவிர திருக்கோவையார் , கல்லாடம் திருமுருகாற்றுப்படை, ஞானவாசிட்டம், புறநானுறு என்பவற்றிலிருந்தும் மொழிபெயர்ப்புக்களையும் செய்துள்ளார். இலங்கை வரலாற்றில் பல்வேறு பதவிகளை வகித்து மக்களின் வாழ்க்கை எழுச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய இலங்கையின் தேசிய தலைவரான சேர் பொன்னம்பலம் அருணாசலம் என்றும் மறையா சொத்து……..............பிரசன்னா

ஷேன்வோன்
…
உலக கிரிக்கட் வரலாற்றில் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு தனியிடத்தை பெற்றுத் தந்த பந்துவீச்சாளர். தனது சுழலின் மூலம் உலகையே தன்மீதான பார்வைக்கு இட்டுச்சென்ற உலக சாதனை பந்து வீச்சாளர் சேன் வோன். 1969 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ம் திகதி அவுஸ்திரேலிய விக்டோரிய நகரில் பிறந்த ஷேன் கெய்த்வோன் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களுள் ஒருவராவார். கடந்த 1922ம் ஆண்டு முதல் 2007 ம் ஆண்டு வரையான 15 வருடங்கள் அவுஸ்திரேலிய அணிக்காக அவர் விளையாடியுள்ளார். உலகில் வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த வேளையில் அதனை தகர்த்து சுழல் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தை கிரிக்கெட்டில் புகுத்திய பெருமைக்குரியவர் ஆரம்பத்தில் கிரிக்கட் வரலாற்றில் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கமே நிலவி வந்தது. இந்நிலையில் துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கம் நிலவிய காலகட்டத்தில் தனது பந்து வீச்சினை செம்மை செய்து அந்தக்காலப்பகுதியிலும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார் சேன் வோன். முத்தையா முரளிதரண், சச்சின் டெண்டுல்கார், ப்ரைன் லாரா போன்ற கிரிக்கட் சகாப்தங்கள் விளையாடிய காலப்பகுதியில் தன்னையும் கிரிக்கெட்டின் சகாப்தமாக உலகிற்கு வெளிப்படுத்திக்கொண்டார் சேன் வோன். ஆரம்பகாலத்தில் ஹாம் செயார்இ விக்டோரியா ஆகிய பிராந்திய அணிகளுக்காக விளையாடிய சேன்வோன் 1992 ம் ஆண்டு இந்திய அணிக்கெதிராக சிட்னியில் விளையாடிய அவுஸ்திரேலிய அணிக்காக தனது கிரிக்கட் வாழ்வை ஆரம்பித்தார். வோன் தனது முதலாவது போட்டியில் முதல் இனிங்சில் ஒரு விக்கெட்டினை வீழ்த்தி தனது டெஸ்ட் கிரிக்கட் வாழ்வினை ஆரம்பித்தார். இதேபோல் ஒரு நாள் கிரிக்கட் போட்டிகளில் 1993 ம் ஆண்டு நியுசிலாந்து வெலிங்டனில் நடைபெற்ற நியுசிலாந்து அணிக்கெதிரான போட்டிக்காக அவுஸ்திரேலிய அணியில் விளையாடினார். இப்போட்டியில் சேன் வோன் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தி தனது ஒருநாள் சர்வதேச போட்டிக்கான ஆரம்பத்தை மேற்கொண்டார். அதற்கமைய கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஆசிய பதினொருவர் அணிக்கும் ஐசிசி உலக பதினொருவர் அணிக்குமிடையிலான போட்டியே அவரது இறுதி ஒருநாள் சர்வதேச போட்டியாக அமைந்தது. போட்டியில் ஐசிசி உலக பதினொருவர் அணிக்காக விளையாடிய சேன் வோன் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 12 வருட காலமாக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் சேன்வோன் பல்வேறு சாதனைளை புரிந்துள்ளார். குறித்த காலப்பகுதியில் 194 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள சேன் வோன் 293 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியமையே ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் சேன்வோனின் சிறந்த பந்து வீச்சு பெறுதியாகும். இதேவேளை 1992 ம் ஆண்டு தனது டெஸ்ட் வாழ்வை ஆரம்பித்த சேன்வோன் கடந்த 2007 ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக சிட்னியில் நடைபெற்ற ஆசஸ் கிண்ண போட்டியிலேயே இறுதியாக விளையாடினார். இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுக்களால் இங்கிலாந்தை வீழ்த்தியது. குறித்த போட்டியில் சேன்வோன் மொத்தமாக இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியதோடு துடுப்பாட்டத்தில் 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார். இதுவரை 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சேன்வோன் 708 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 128 ஓட்டங்களுக்கு 12 விக்கெட்டுக்களை வீழத்தியமையே அவரின் சிறந்த பந்து வீச்சு பெறுதியாகும். அவர் 10 தடவைகள் 10 விக்கெட் பெறுதியினையும் 37 தடவைகள் 5 விக்கெட் பெறுதியினையும் 48 தடவைகள் 4 விக்கெட் பெறுதியினையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பதிவுசெய்துள்ளார். எனினும் இலங்கை அணியின் உலக பந்து வீச்சு சகாப்தமாக முத்தையா முரளிதரண் அவரின் சாதனையை முறியடித்து 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி அதிக வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வீரர் என்ற பெருமையையும் சேன்வோன் தனதாக்கி கொண்டார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 1018 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ள ஷேன்வோன் 55 ஓட்டங்களை அதிகூடிய ஒட்டமாக பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்;டில் 12 அரைச்சதங்களை கடந்துள்ள ஷேன்வோன் 3154 ஓட்டங்களை பெற்றுள்ளதோடு 99 ஓட்டங்களை அதிகூடிய ஓட்டமாக பெற்றுள்ளார். மேலும் 66 ருவன்றி 20 போட்டிகளில் விளையாடியுள்ள சேன்வோன் 66 விக்கெட்டுக்களை வீழ்த்தியதோடு 210 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கட் வாழ்விலிருந்து ஒய்வினை அறிவித்த சேன்வோன் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டு முதலாவது ஐபிஎல் பருவகாலத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு தலைமை தாங்கி அவ்வணியினை சம்பியனாகவும் கொண்டுவந்தார். கிரிக்கட் விளையாடிய போது சேன்வோன் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்த போதிலும் தனது பந்து வீச்சு பாணியினால் அனைவரையும் கவர்ந்திருந்தார். சுழல் பந்து வீச்சாளர்களுக்கு கிரிக்கெட்டில் தனி முத்திரை பதித்து பல்வேறு சாதனைகளுடன் கிரிக்கெட்டில் வலம் வந்த ஷேன்வோன் என்றும் சுழலின் நாயகன்……........................................................................................................பிரசன்னா
சி.வை. தாமோதரம் பிள்ளை
சி.வை. தாமோதரம் பிள்ளை. 12.09.2012 பிறந்த நாள்..
பண்டைய சங்கத்தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்;து போகாது பாதுகாத்தவர். தனது அரிய தேடல் மூலம் அவற்றை மீட்டெடுத்து காத்து ஒப்பிட்டு பரிசோதித்த அச்சிட்டு வாழக்கூடிய பெருமைக்குரியவர். சி.வை. தாமோதரம் பிள்ளை. 1832 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ம் திகதி வைரவநாதன் பெருந்தேதி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். யாழ்ப்பாணம் சிறுபிட்டியில் பிறந்தவர் சி.வை. தாமோதரம்பிள்ளை. தமிழில் அருமை பெருமையினை தமிழர்கள் உணர்ந்து. உயரவேண்டுமென்ற உன்னத நோக்கத்தோடு இறுதிவரை வாழ்;ந்தவர். இவரின் தந்தை ஆசிரியராக இருந்ததன் காரணமாக தந்தையின் அறிவு வழிகாட்டல் அவரின் வளர்ச்சிக்கு துணை நின்றது. தாமோதரம்பிள்ளை 1844 ம் ஆண்டு முதல் 1852 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தெல்லிப்பளை மிசன் பாடசாலை வட்டுகோட்டை கல்வி நிலையம் ஆகியவற்றில் கல்வி பயின்றதோடு யாழ்ப்பாண கல்லூரியில் தனது ஆங்கில கல்வியினை பெற்றுக்கொண்டார். தனது 20 வது வயதில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆசிரியராக விளங்கிய இவர் 1856ம் ஆண்டு இனவர்த்தமானி பத்திரிகையின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். இந்நிலையில் 1856 ம் ஆண்டு இந்தியாவின் சென்னைக்கு சென்று தனது கல்வியினை ஆரம்பித்த தாமோதரனார் 1857 ம் ஆண்டு சென்னை மாநிலக்கல்லூரியில் தமது ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். குறித்த கல்லூரியில் உ.வே.சாமிநாத ஐயர், சேர். பொன். இராமநாதன் மற்றும் இலங்கையில் அமைதிக்கா பெரும் பணியாற்றிய ஜி.பார்த்த சாரதி ஆகியோரும் வாழ்ந்த தடங்கள் உள்ளன என்பதும் பெருமைக்குரிய விடயம். 1871 ம் ஆண்டு தனது 39 வது வயதில் கல்விக்கோட்டை அரசினர் கல்லூரியில் இளங்கலை சட்டம் தொடர்பாக பட்டம் பெற்ற அவர் தனது 50 வது வயதில் அரச பணியிலிருந்து ஓய்வுபெற்றார். இந்நிலையில் 1884 ம் ஆண்டில் சட்டத்துறையில் சிறப்பு பெற்றிருந்த இவருக்கு புதுக்கோட்டை அரசின் முறைமன்றநடுவராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் குறித்த பணியிலிருந்து 1890 ம் ஆண்டு ஓய்வு பெற்ற இவருக்கு 1895 ம் ஆண்டு ராவ் பகதூர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழ் மொழியை வளர்ப்பதற்காக அரும்பணியாற்றிய தாமோதரனார் பலநூல்களை எமக்கு தந்தளித்துள்ளார். அதற்கமைய 1854 ம் ஆண்டு நீதிநெறி விளக்கம் 1868 ம் ஆண்டு தொல்சேனாவரையம் 1881 ம் ஆண்டு வீரசோலியம் 1883 ம் ஆண்டு இரையனார் கலவியல் மற்றும் தனிகை புறாணம், 1885ம் ஆண்டு தொல்பொருள் நச்சு நாக்கினியம் 1887 ம் ஆண்டு கலித்தொகை 1889 ம் ஆண்டு இலக்கண விளக்கம் மற்றும் சூளாமணி 1891ம் ஆண்டு தொல் எழுத்து 1892 ம் ஆண்டு தொல் சொல் நச்சு ஆகிய நூல்களை தாமோதரனார் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் 1898ம் ஆண்டு அகநாநூற்றை வெளியிட அவர் எடுத்த முயற்சி அவரை வரலாற்றில் இடம்பெறச் செய்ததது. தன்வாழ் நாள் முழவதையும் பதிப்பு துறைக்கு அர்ப்பணித்த தாமோதரனார் ஈழத்தமிழ் தமிழுக்கு தந்த உன்னத படைப்பாளி. மறைந்து போக தயார் நிலையிலிருந்த தமிழ் இலக்கியங்கள் வரலாறு சான்றுகள் என்பவற்றை மீண்டும் காப்பாற்றி எடுத்து இவ்வுலக்கு தந்து தமிழர் பெருமையை உலகம் போற்ற செய்தவர் சீ.வை.தாமோதரம் பிள்ளை. இந்நிலையில் 1832 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ம் திகதி யாழ்ப்பாணம் சிறுபிட்டியில் உதயமாகி சீ.வை.தாமோதரம் பிள்ளை 1901ம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ம் திகதி தமிழகத்தின் தலைநகரான சென்னையிலுள்ள புறசைவாக்கம் எனும் பகுதியில் தனது 69 வது வயதில் இறையடிசேர்ந்தார்.
தாமோதரம் பிள்ளையின் இழப்பால் தமிழ் உலகமே கண்ணீர் துயர் கொண்டு நின்றது. அவர் மறைந்த போது அவரின் அளவிடற்கரிய பெருமையை இந்திய புலவர் ஒருவர் பாடல் வரிகளில் குறிப்பிட்டுள்ளார்.
காமோதி வண்டு தேன்கடிமலர் கூட்டுதல் போல்
நாமோது செந்தமிழில் நன்னூல் பதிப்பித்த
தாமோதரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்றயவர்
தாமோதரமுடையார்…
என அந்த பாடல் அமையப்பெற்றது. எவ்வாறெனினும் மறைந்த தமிழுக்கு மீண்டும் உருகொடுத்து உயிர்கொடுத்து எதிர்கால சமூகத்திற்கு தமிழ் மொழியின் அருமை பெருமையினை கையளித்த சீ.வை.தாமோதரம்பிள்ளை தமிழ் மொழியின் அழியா சொத்து…. ....................................................பிரசன்னா
செப்டம்பர் 11 தாக்குதல்….
11.09.2012 அமெரிக்க உலக கோபுரம் மீதான தாக்குதல்….
உலகை தன் கட்டுக்கோப்பிற்குள் கொண்டுவர நினைக்கும் அமெரிக்காவிளை உருகுலைய வைத்தநாள் இன்று. கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் திகதி அமெரிக்க வரலாற்றில் பாரிய இழப்பை சந்தித்த நாள் அவ்வாண்டின் இதே தினத்தில் இதேபோன்றதொரு செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் அமைந்துள்ள உலக வர்த்தக மையமான பென்டகன் மீது அல்குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். குறித்த சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 11 வருடங்கள் ப+ர்த்தியாகின்றன. வல்லரசு நாடான அமெரிக்காவுக்கெதிராக பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதலாக பென்டகன் தாக்குதல் வரலாற்றில் பதியப்பப்பட்டுள்ளது. நிவ்யோர்க் நகரில் கம்பீரமாக காட்சியளித்த உலக வர்த்தக மையத்தின் வடக்கு மற்றும் தென்பகுதி கட்டிடங்கள் 110 மாடிகளை உள்ளடக்கிய பாரிய கட்டிடமாகும். 1922 ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட குறித்த கட்டிடம் அந்த ஆண்டிலிருந்து 1973 ம் ஆண்டு வரை உலகின் மிக உயரமான கட்டிடமாக காணப்பட்டது. குறித்த கட்டிடமீது 1993 ம் ஆண்டு முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 6 பேர் கொல்லப்பட்டதோடு கட்டிடம் சிறியளவிலான சேதங்களுக்குள்ளாகியது.
இந்நிலையில் 2ம் தடவையாக குறித்த கட்டிடமீது கடந்த 2001 ம் ஆண்டு 11 ம் திகதி 2 வது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 2 ஆயிரத்து 973 பேர் கொல்லப்பட்டதோடு 6291 பேர் காயங்களுக்குள்ளாகினர். கொல்லப்பட்டவர்களில் 300 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். குறித்த தாக்குதலுக்காக கடத்தப்பட்ட 4 விமானங்களிலிமிருந்த 246 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு 19 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். வல்லரசு நாடான அமெரிக்கா பயங்கரவாதத்திற்கெதிராக மேற்கொண்ட அழுத்தத்தினூடாக சந்தித்த பாரிய அழிவு இதுவென அரசியல் ஆய்வாளலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமது ஆதிக்கத்தை உலக ரீதியில் நிலைநிறுத்த விரும்பும் அமெரிக்காவை , ஆட்டிப்பார்க்க விரும்பிய அல்குவைதா அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லாடனின் திட்டமே செப்டெம்பர் 11 தாக்குதல். நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் விமானங்கள் கடத்தப்பட்டு, மேற்கொள்ளப்பட்டது. 2001 ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் டபிள்ய+ புஷ்சின் ஆட்சிக்கு , அல்குவைதா அமைப்பினரால் வழங்கப்பட்ட நினைவுப்பரிசாக பென்டகன் தாக்குதல் அமைந்துள்ளது.
நெருப்பில் வீழ்ந்தாலும் மீள உயிர்பெற்று எழும் பீனிக்ஸ் பறவையை போல, தம்மால் மீண்டும் எழ முடியுமென வல்லரசு நாடான அமெரிக்கா சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளது. அழிப்பது எளிது ஆக்குவது கடினம் என்பதை புரந்தள்ளி , அமெரிக்க பொறியியலாளர் நவீன தொழில்நுட்பங்கனூடாக சாதித்து காட்டியுள்ளனர். நிய+யோர்க்கின் பெருமைக்குரிய பென்டகன் அழிக்கப்பட்டபோது இருந்த நிலையை விட, பல மடங்கு நவீனமான முறையில் தற்பொழுது கட்டியெழுப்பபட்டு வருகிறது. சுமார் 3.8 பில்லியம் டொலர் செலவில் 104 மாடிகளுடன் கட்டப்படும் புதிய 4 கட்டிடங்களும் 16 ஏக்கர் நிலப்பரப்பில் அமையப்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை அடுத்த ஆண்டு நினைவுதினத்திற்குள் நிறைவுசெய்யவுள்ளதாக அமெரிக்க பொறியிலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதனிடையே குறித்த தாக்குலானது அல்குவைதா அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட போதிலும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஸ் தாக்குதல் தொடர்பில் அறிந்திருந்த போதிலும் அதனை பாரதூரமான தாக்குதலாக மாற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாக சில உத்தியோகப+ர்வமற்ற தகவல்கள் வெளிவந்த போதிலும் அது இதுவரை உறுதிப்படுத்தவில்லை எவ்வாறெனினும் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 11 வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று இரட்டைகோபுரம் இருந்த இடத்தில் நடைபெற்றது. மேலும் உலகளாவிய ரீதயில் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களும் இன்று நினைவு தினத்தை அனுஸ்டித்தனர். எவ்வாறெனினும் மனித உயிர்களை காவுகொண்டு இலட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ள நடாத்தப்பட்ட தாக்குதலானது எப்போது மறக்கவும் மன்னிக்கவும் முடியாத சம்பவமாகும். இந்நிலையில் செப்டம்பர் 11 தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கென இந்நாளில் நாமும் பிரார்த்திப்போம்…...............................................................பிரசன்னா
பாரதியார்
பாரதியார்
கவிதை எழுதுபவன் கவியன்று கவிதையே வாழ்க்கையாக உடையவன,;
வாழ்க்கையே கவிதையாக செய்தோன் அவனே கவி….
அவர்தான் சுப்பிரமணிய பாரதி….
1882 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ம் திகதி இந்தியாவின் எட்டயபுரத்தில் சின்ன சுவாமி ஐயருக்கும் லக்ஸ்மி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார் சுப்பையா என அழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி சுப்பையா தனது 11ம் வயதில் பள்ளியில் படித்துவரும் போது கவிப்புயம் ஆற்றலை வெளிப்படுத்தினார். பிற்காலத்தில் ஒரு கவிஞராக எழுத்தாளராக பத்திரிகை ஆசிரியராக விடுதலை வீரராக சமூக சீர்திருத்தவாதியாக தனது பரிமாணங்களை வகுத்துகொண்டவர் சுப்பிரமணிய பாரதி. தமிழில் கவிதை மற்றும் உரைநடையில் தன்நிகரற்ற பேரறிவாளர் தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். அவர் மகாத்மா காந்தி பாலகங்காதர திலக உ.வே.சு ஐயர் சிதம்பரபிள்ளை மற்றும் மகான் அறவிந்தர் ஆகியோர் வாழ்ந்த இந்திய வரலாற்றில் திருப்பு முனையான காலப்பகுதியில் வாழ்ந்தவர் சுப்பிரமணிய பாரதி தமிழர் நலன் இந்திய விடுதலை பெண் விடுதலை சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து அவர் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் எனினும் அவரின் கவித்திறனை பாராட்டி எட்டயபுர அரச சபையால் அவருக்கு பாரதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. சுப்பிரமணிய பாரதி சுப்பையா, பாரதியார், சக்திதாசன், மகாகவி, புதுக்கவிதை புலவன், கவிஞாயிறு என பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்பட்டார். பாரதி தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம், வங்காளம், ஹிந்தி, பிரன்ச் போன்ற மொழிகளில் தனிப்புலமை பெற்றவர் அம்மொழிகளில் தனிச்சிறப்பு மிக்க படைப்புக்களை தமிழ் மொழியாக்கம் செய்தவர் சுப்பிரமணியம் பாரதி. பலமொழிகளில் தனிபுலமை பெற்றிருந்தாலும் யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என கவி புனைந்தார் கவி ஞாயிறு பாரதி. பழந்தமிழ் காவியங்களின் மீது தனிஈடுபாடு கொண்ட பாரதி அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் கொண்ட மாமேதையாவார். தேசிய கவி என்ற முறையிலும் உலகம் தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவித்திறனாலும் அவர் உலகில் தலை சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழ் தன்னிகரற்ற கவியேறு பாரதி, குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், போன்ற படைப்புக்கள் பாரதியின் தன்னிகரற்ற படைப்புக்களாகும். கவிஞராகயிருந்த பாரதி 1904 ம் ஆண்டு முதல் 1906 ம் ஆண்டு வரை பத்திரிகை ஆசிரியராக செயற்பட்டுள்ளார். பாரதி தாசனை முதன்மையாக கொண்டு கவி புனைந்த பாரதி பாடல்களின் இலக்கண கட்டுக்களை தகர்த்தெறிந்தார். இவருக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல் பொருள்கொள் யாப்பு, அணி, என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதையே புனைந்தனர். இலக்கண சட்டங்களை தகர்த்தெறிந்த பாரதி புதுக்கவிதையென புகழப்படும் பாமரரும் கேட்டுணரும் வசனக் கவிதையையும் தமிழுக்கு தந்தவர் சுப்பிரமணியம் பாரதி மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என பெண்கள் உரிமை தொடர்பிவ் குரல் கொடுத்த முதல் பெண் சுப்பிரமணிய பாரதியார்…. இந்திய நாட்டின் விடுதலைக்கென மக்களை தெளிவு படுத்தும் பல கவிதைகளை புனைந்துள்ள சுப்பிரமணிய பாரதி தேசிய கவியாக போற்றப்பட்டார். 1897 ம் ஆண்டு செல்லம்மா என்பவரை மணந்த சுப்பிரமணிய பாரதி 1898 ம் ஆண்டு தொழில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையை அடைந்தார். அதனைத் தொடர்ந்து எட்டயபுரம் அரண்மனையில் பணிபுரிந்த அவர் சில காலங்களில் எட்டயபுரத்தை விட்டு காசிக்கு சென்றார். பின்னர்; மீண்டும் எட்டயபுரத்து மன்னனால் பாரதி அழைக்கப்பட்டு 1898 ம் ஆண்டு முதல் 1902 ம் ஆண்டு வரை பாரதி அரண்மனையில் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளராக பணிபுரிந்த சுப்பிரமணிய பாரதி இந்தியாவில் ஆலயமொன்றிற்கு வழிபாட்டிற்காக சென்ற அவர் யானை தாக்கியதால் சுகயீனத்துக்குள்ளாகிய நிலையில் கடந்த 1921 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் திகதி தனது 39 ம் வயதில் இறையடிசேர்ந்தார். பாரதியின்; புதுமையை சொல்லும் வகையில் எடுக்கப்பட்டு கடந்த 2000 ம் ஆண்டு வெளிவந்த பாரதி திரைப்படம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினையும் பெற்றது. மேலும் இன்றும் சிறுவர் முதல் பெரியோர் வரை பாரதியின் கவிதைகளையும் பாடல்களையும் படித்து ரசிக்காதவர்கள் சிந்தையைத் தூண்டாதவர்கள் இருக்க முடியாதென்பது மகா கவி பாரதியின் பெருமையை எடுத்தியம்புகிறது, தமிழ் இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றின் புதுமைகள் பலசெய்து பாமர மக்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் தமது படைப்புக்களை வெளிக்கொணர்ந்து மக்கள் மனதில் சிந்தனை எண்ணத்தை தூற்றிவிட்;ட மகாகவி சுப்பிரமணிய பாரதி தமிழ் மொழியில் என்றும் அணையா விளக்கு………… .................................பிரசன்னா
எந்தவொரு மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும், படிக்கவும் தெரியாமல் இருத்தல் எழுத்தறிவின்மை என ஐக்கிய நாடுகள் சபை தனது சாசனத்தில் வரையறை செய்துள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு செம்டெம்பர் மாதம் 8 ம் திகதி உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகிறது. எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், எழுத்தறிவற்றவர்கள் இல்லாத உலகை ஏற்படுத்துவதுமே உலக எழுத்தறிவு தினத்தின் பிரதான நோக்கம். கடந்த 1965 ம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் 8 ம் திகதி தெஹரான் நகரில் சர்வதேச கல்வி அமைச்சர்கள் மாநாடு இடம்பெற்றது. குறித்த மாநாட்டில் உலக அளவில் எழுத்தறிவு இன்மையால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் , ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் மாதம் 8 ம் திகதி சர்வதேச எழுத்தறிவு தினமாக அனுஷ்டிக்க தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் 1965 ம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ம் திகதி யுனெஸ்கோ நிறுவனம் செப்டெம்பர் மாதம் 8 ம் திகதி சர்வதேச எழுத்தாளர் தினமாக பிரகடனப்படுத்தியது. அதற்கமைய 1966 ம் ஆண்டு முதல் எழுத்தறிவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒரு மனிதன் எந்த மொழியிலும் எளிய வார்த்தைகளை எழுதவும், படிக்கவும் தெரியாமையே, எழுத்தறிவின்மை என ஐக்கிய நாடுகள் சபை எழுத்தறிவின்மையை வரையறுத்துள்ளது. இந்நிலையில் உலகில் சுமார் 80 கோடி வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக காணப்படுகிறார்கள். அதாவது வயது வந்தவர்களில் 5 பேரில் ஒருவருக்கு எழுத படிக்க தெரியாது. அவர்களில் 3 இல் இரண்டு பகுதியினர் பெண்கள். மேலும் உலகில் 11 கோடி சிறுவர்கள் பள்ளிக்கூட வசதியில்லாமல் காணப்படுகின்றனர். 1998 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பின் அடிப்படையில் உலக சனத்தொகையில் 20 வீதமானோர் எழுத்தறிவற்றவர்களாக காணப்பட்டனர். எனினும் அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை முகவர் அமைப்பின் அறிக்கையின்படி தற்போது, உலக சனத்தொகையில் எழுத்தறிவு வீதம் 82 ஆக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை கடற்த 2006 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்கமைய தெற்கு மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளிலேயே , படிப்பறிவில்லாதவர்கள் அதிகம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மனித அபிவிருத்தி உள்ளடக்க புள்ளிவிபரப்படி , உலகில் 100 சதவீத எழுத்தறிவு பெற்றுள்ள நாடு என்ற பெருமையை ஜோர்ஜியா பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் 99.8 வீத எழுத்தறிவுடன் எஸ்டோனியா நாடும், 3 ம் இடத்தில் 99.8 வீத எழுத்தறிவுடன் லாட்வியா நாடும் , 99.8 வீத எழுத்தறிவுடன் 4 ம் இடத்தில் க்ய+பாவுடன் காணப்படுகின்றன. இதேவேளை 99 வீத எழுத்தறிவுள்ள பட்டியலில் 49 நாடுகள் காணப்படுகின்றன. மேலும் 98 வீத எழுத்தறிவுள்ள 8 நாடுகளும் , 97 வீத எழுத்தறிவுள்ள 10 நாடுகளும், காணப்படுகின்றன. இப்பட்டியலில் இலங்கைக்கு 99 ஆவது இடம் கிடைத்துள்ளது. இலங்கையின் எழுத்தறிவு வீதம் 90.8 வீதமாகும். மேலும் தெற்காசியாவுடன் ஒப்பிடும்போது எழுத்தறிவு வீதத்தில் இலங்கை முதலிடத்தில் காணப்படுகிறது. குறித்த பட்டியில் இந்தியாவுக்கு 159 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் எழுத்தறிவு வீத அதிகரிப்பிற்கு 5 தொடக்கம், 14 வயதான வயதெல்லை கட்டாயக்கல்விக்கான வயதெல்லையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையே ஆகும். இலங்கையானது யுனெஸ்கோவின் கல்விசார் அபி;விருத்தி திட்டங்களில் இணைந்து செயற்படுவதற்கு 1949 ம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ம் திகதி யுனெஸ்கோ அமைப்பில் இணைந்துகொண்டது. இன்று இலங்கையில் எழுத்தறிவு வீதமானது நகர்புரங்களிலேயே முன்னேற்றமடைந்துள்ளது. இலங்கையின் குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத்திணைக்களத்தின் அறி;க்கையின்படி , நகர்புரங்களில் எழுத்தறிவு வீதம் 95 வீதமாகவும், கிராமப்புரங்களில் 93 வீதமாகவும் , பெருந்தோட்டப்பகுதிகளில் 76 வீதமாகவும் காணப்படுகிறது. இலங்கையில் பாலின பிரிவின்படி , ஆண்கள் 94 சதவீத கல்வியறிவினையும், பெண்கள் 91.1 சதவீத கல்வியறிவினையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் 8 ம் திகதி , கொண்டாடப்படுகின்ற உலக எழுத்தறிவு தினத்தில் , எழுத்தறிவை கற்றுக்கொள்ளவேண்டியதன் அவசியம் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் எழுத்தறிவை பெற்றுக்கொள்ள முடியாமல் போன வயது வந்தோருக்கு முறைசாரா கல்வித்திட்டத்தின் மூலம் , எழுத்தறிவை போதிக்கும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் எழுத்தறிவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை எழுத்தறிவை பெற்றுக்கொள்ள முடியாமைக்கான காரணங்களாக உள்ள சமூக நிலைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. வருமை, போஷாக்கின்மை , அரசியல் நெருக்கடிகள் , கலாச்சார பாகுபாடு, அடிமைப்படுத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் உலக நாடுகளில் இன்றும் எழுத்தறிவின்மை காணப்படுகிறது என்பதை ஏற்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எழுத்தறிவு என்பது மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட ஒரு அம்சம். தனிநபர் ஆளுமையிலிருந்து சமூக மனிதவள அபிவிருத்தி மற்றும் கல்வி செயற்பாடுள் மற்றும் அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன எழுத்தறிவிலேயே தங்கியுள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் எழுத்தறிவென்பது உண்ணும் உணவை விடவும், பார்க்கும் கண்ணை விடவும் முக்கியம் பெறுகிறது. கல்வி என்பது பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்த முடித்தவுடன் முடிவதில்லை. அது வாழ்நாள் முழுவதும் திகழ வேண்டும். கல்விக்கு முடிவே கிடையாது.................................................................................................பிரசன்னா
குன்னக்குடி வைத்தியநாதன்
குன்னக்குடி வைத்தியநாதன்
கர்நாடக இசையிலும் திரையிசைப்பாடல்களிலும் இசை ரசிகர்களை மாத்திரமன்றி , பாமர மக்களையும் , தனது வயலின் இசையால் மயக்கிய வயலின் சக்கரவர்த்தி , குன்னக்குடி வைத்தியநாதன். வயலின் என்றால் அது இவரின் பெயரை சொல்லும். 1935 ம் ஆண்டு, மார்ச் மாதம் 2 ம் திகதி , சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் பிறந்தவர் குன்னக்குடி வைத்தியநாதன். அவரின் பெற்றோர் ராமசாமி சாஸ்திரி , மீனாட்சி ஆகியோர். வைத்தியநாதன் இளம் வயதிலேயே, கர்நாடக இசைக்கலைஞரான தனது தந்தை ராமசாமி சாஸ்திரியிடம் வாய்ப்பாட்டு, வயலின் ஆகியவற்றை இசைக்க கற்றுத்தேர்ந்தார். தனது 12 ஆவது வயதிலேயே இசைக்கச்சேரிகளில் பங்கேற்று, சாதனை புரிந்த குன்னக்குடி வைத்தியநாதன் , கர்நாடக இசையில் சிறந்து விளங்கிய அரியாக்குடி ராமானுஜ ஐயங்கர் , செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர், மகாராஜபுரம் சந்தானம் , சித்தூர் சுப்ரமணியபிள்ளை ஆகியோருடன் இணைந்து பல கச்சேரிகளில் பங்கேற்றார். மேலும் பலரோடு இணைந்து, கச்சேரிகளை அரங்கேற்றிய குன்னக்குடி வைத்தியநாதன், தனித்தும் இசைக்கச்சேரிகளை நடத்தியுள்ளார். பாமர மக்களும் ரசிக்கும் வண்ணம் கர்நாடக இசையினையும், திரையிசைப்பாடல்களையும் தனது வயலினில் வாசித்து மகிழ்வித்தார். இசைவித்தகர்களில் இருந்து, பாமர மக்கள் வரை , தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் வைத்தியநாதன் என்றால் இசை மழை என்று பெருமைப்பேசும் வகையில், இளம் வயதிலேயே அவர் புகழ்பெற்றார். திரையிசைப்பாடல்களுக்கு இசையமைப்பதிலும் தனது திறமையை வெளிக்காட்டிய அவர், 1969 ம் ஆண்டு, வா ராஜா வா படத்தின் மூலம் , இசையமைப்பாளராக அறிமுகமானார். குறித்த திரைப்படத்தின் பாடல்களானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. அதனைத்தொடர்ந்து, திருமலை தென்குமரி , தெய்வம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு, வைத்தியநாதன் இசையமைத்தார். அதில் தெய்வம் படத்தில் , கர்நாடக இசை மேதை மதுரை சோமு பாடிய மருதமலை மாமனியே முருகையா என்ற பாடல், அவருக்கு பெரும் புகழ்தேடித்தந்தது. இதேவேளை குறித்த பாடலை, தனது வயலின் மூலம் வாழ்நாள் இறுதிக்காலம் வரை , இசைத்து அனைவரையும் மகிழ்வித்தார். சுமார் 22 தமிழ் திரைப்படங்களில் இசையமைத்துள்ள குன்னக்குடி வைத்தியநாதனுக்கு, 1970 ம் ஆண்டு, வெளிவந்த திருமலை தென்குமரி திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் விருதும் வழங்கப்பட்டது.மேலும் தமிழக அரசின் கலைமாமனி விருதும் வழங்கப்பட்டு குன்னக்குடி வைத்தியநாதன் கௌரவிக்கப்பட்டார். வயலின் இசைக்கருகியில் பல புதுமைகளை செய்த பெருமை குன்னக்குடி வைத்தியநாதனையே சாரும். அயல் நாடுகளுக்கு சென்று, வயலின் இசைக்கச்சேரிகளை நடத்தியுள்ள குன்னக்குடி வைத்தியநாதனுக்கு, இந்திய மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. வயலின் சக்கரவர்த்தியான குன்னக்குடி வைத்தியநாதனின் மனைவி பெயர் பாகீரதீ. அவருக்கு சேகர் , ஸ்ரீனிவாசன் , ஸ்ரீதர், பாலசுப்ரமணியம் ஆகிய 4 மகன்களும், பானுமதி ராமகிருஷ்னண் எனும் மகளும் உள்ளனர். குறிப்பாக தோடி ராகத்தில் , வயலின் இசைப்பதில் அவருக்கு நிகர் அவரேயாவார். வயலின் கலையில் சக்கரவர்த்தியாக விளங்கிய குன்னக்குடி வைத்தியநாதன், இசைத்தெறப்பியிலும் முத்திரை பதித்துள்ளார். மேலும் ராக ஆராய்ச்சி மையம் எனும் அமைப்பை நிறுவி, இசையால் நோய்களை குணமாக்க முடியுமென்ற ஆய்விலும் அவர் ஈடுபட்டிருந்தார். வயலின் இசைக்கருவியில் பல்வேறு புதுமைகளை செய்து, இசை ரசிகர்களை மகிழ்வித்து, வயலின் இசை சக்கவர்த்தியாக விளங்கிய குன்னக்குடி வைத்தியநாதன், கடந்த 2008 ம் ஆண்டு செப்டெம்பர் 8 ம் திகதி தனது 75 ஆவது வயதில் , இறையடி சேர்ந்தார். குன்னக்குடி வைத்தியநாதன், இவ்வுலகை விட்டு பிரிந்த போதிலும், அவர் இசையமைத்த பாடல்கள் , அவரின் வயலின் இசை என்பன இன்றும் எம் காதோடு சென்று, இதயத்தை மகிழ்விக்கின்றன. அவரின் இசைப்பயணம் என்றும் எம்மால் மறுக்க முடியாதவை. மறக்க முடியாதவை. இறந்தும் எம்முல் வாழும் குன்னக்குடி வைத்தியநாதன், ஒரு இசை சகாப்தம். .....................................................பிரசன்னா
நீல் ஆம்ஸ்ரோங்.
நீல் ஆம்ஸ்ரோங்.
மனிதனின் விண்வெளி தொடர்பான பார்வையினை செம்மைப்படுத்திய பெருமைக்குரியவர். விண்வெளி நோக்கிய மனிதனின் பயணத்திற்கு அழியா புகழ்சேர்த்து அடித்தளமிட்டவர். நிலவில் முதன்முதலில் கால்தடம் பதித்து, மனித இனத்திற்கு பெருமை தேடித்தந்தவர் அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ரோங். 1930 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் திகதி அமெரிக்காவின் ஒஹியோ நகரில் நீல்ஆம்ஸ் ரோங் பிறந்தார். இவர் அமெரிக்கராக இருந்தாலும். ஸ்கொட்லாந்து மற்றும் ஜேர்மன் பரம்பரையை சேர்ந்தவராவார். சாதளை நாயகனின்ன தந்தையான ஸ்டீபன் ஆம்ஸ்ரோங் ஒரு கணக்காளர். நீல் ஆம்ஸ்ரோங் தனது இளமைக்காலத்தில் வானில் பறப்பதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவரின் ஆர்வத்தை அறிந்த தந்தை ஆம்ஸ்ரோங்கின் வானில் பறப்பது தொடர்பான கற்கைநெறிகளை கற்பதற்கு வழிவகுத்தார். அதற்கமைய 1944 ம் ஆண்டு இது தொடர்பான கல்வியை நீல் ஆம்ஸ்ரோங் ஆரம்பித்தார். அவரது ஆர்வத்தால் 15 வது வயதிலேயே விமானிக்கான சான்றிதழை பெற்றார். பல்வேறு துறைகளில் தனது திறமைளை வளர்ப்பதில் ஆம்ஸ்ரோங் ஆர்வம் காட்டினார். அதற்கிணங்க வானில் பறக்கும் அவரது ஆர்வம். அவரை விண்வெளி பொறியியல் துறையில் கல்வி கற்பதற்கு சந்தர்ப்பம் அளித்தது. அதற்கமைய 1947 ம் ஆண்டு பேர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்து விண்வெளி பொறியில் துறையை கற்க ஆரம்பித்தார். பல்கலைக்கழக கல்வி மூலம் நீல் ஆம்ஸ்ரோங் 1955ம் ஆண்டு வானுர்தி பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். 1949 ம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ம் திகதி விமானம் தொடர்பான பயிற்சிகளை பொறுவதற்கு நீல்ஆம்ஸ்ரோங்கிற்கு அமெரிக்க கடற்படை அனுமதியளித்தது.
18 மாத பயிற்சிகளுக்கு பின்னர் நீல்ஆம்ஸ்ரோங் அமெரிக்க கடற்படை விமானியாக தரமுயர்த்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1951ம் ஆண்டு கொரியாவுக்கெதிரான யுத்தத்தில் அமெரிக்க விமானங்களில் விமானியாக நீல்ஆம்ஸ்ரோங் செயற்பட்டார். அவருக்கு போர் பயணங்களுக்கான 20 பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து போர் பயணங்களில் விரக்திகண்ட நீல்ஆம்;ஸ்ரோங் தனது 22 வயதில் கடற்படையிலிருந்து விலகினார். விமான பரிசோதகராக வரவிரும்பிய நீல்ஆம்ஸ்ரோங் அதனை நிறைவேற்ற எட்வேர்ட் விமான படைத்தளத்தில் இணைந்து கல்வி கற்றார். விமான ஆராய்ச்சி துறையில் பல வருடங்கள் சேவையாற்றிய அவர் 1958ம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு விண்வெளி வீரராக வருவதற்கு விருப்பம் கொண்டார். அதற்கு அமெரிக்க விண்வெளி ஆராய்;ச்சி நிறுவனமான நாசாவை தெரிவு செய்தார். அவரின் அதீத திறமை மற்றும் ஆர்வம் அவரை நாசாவில் இணைக்க வழிவகுத்தது. அதற்கமைய 1962ம் ஆண்டு நாசாவின் எபோல 8 மற்றும் எபலோ 9 விண்கலங்களின் ஆராய்ச்சி கட்டமைப்பில் நீல்ஆம்ஸ்ரோங் பணியாற்றினார். அதன் மூலம் 1966 ம் ஆண்டு முதன் முறையாக ஜெமினி 8 எனும் விண்வெளிவிமானத்தின் கட்டளை விமானியாக பணியாற்றினார். அவரது அதீத திறமையினால். 1968 ம் ஆண்டு டிசம்பர் 23 ம் திகதி எபலோ 11 விண்கலத்தின் கட்டளையிடும் தலைவராக செயற்படும் அரியவாய்ப்பு ஆம்ஸ்ரோங்கிற்கு கிட்டியது. அதற்கமைய சந்திரனுக்கு அனுப்பி முதலாவது விண்கலமான அப்பலோ 11 யில் நீல்ஆம்ஸ்ரோங்குடன் மைக்கல் கொளின்ஸ் மற்றும் பேஸ் அல்ரீ ஆகியோர் பயணம் செய்தனர்.
குறித்த விண்வெளி ஓடம். 1969ம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் திகதி சந்திரனில் தரையிறங்கியது. சந்திரனில் முதலில் கால்வைப்பதில் பேஸ் ஏல்ரினுக்கு ஏற்பட்ட தயக்கம் காரணமாக ஏணியொன்றின் மூலம் இறங்கி நீல்ஆம்ஸ்ரோங் நிலவில் முதல் கால்தடம் பதித்தார். அதன்போது நான் எபலோ விண்கலத்தின் மூலம் நிலவில் கால்வைக்கிறேன் எனும் கூற்றை ஆம்ஸ்ரோங் தெரிவித்தார். அதுவே மனிதன் முதலில் பேசிய முதல் வார்த்தை…. அவர் கால் தடம் பதித்த அந்தநாள் மனித வரலாற்றில் திருப்புமுனையான நாளாக அமைந்துள்ளது. சந்திரனில் தரையிறங்கிய நீல்ஆம்ஸ்ரோங் மனிதனின் சிறிய நடவடிக்கையின் மூலம் மனித இனத்திற்கான பாரிய துணிகரமான செயல் உருவானது எனும் புகழ் மிக்க கூற்றை நீல்ஆம்ஸ்ரோங் தெரிவித்தார். நீல்ஆம்ஸ்ரோங் சந்திரனில் கால்தடம் பதித்து 20 நிமிடங்களின் பின்னர் பேஸ் அல்ரின் சந்திரனில் கால்தடம் பதித்தார். இரண்டரை மணித்தியாலங்கள் சந்திரனில் தங்கியிருந்த அபலோ 11 விண்கலம் மீண்டும் ப+மிக்கு திரும்பியது…. ப+மிக்கு வந்த சாதனை மனிதர் நீல் ஆம்ஸ்ரோங்கை அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகள் மரியாதைக்குரிய வரவேற்பளித்தன… பலநாடுகளுக்கு சென்று தனது விண்வெளி அனுபவம் தொடர்பில் நீல்ஆம்ஸ்ரோங் சிறப்புரையாபற்றினார்..அதனை தொடர்ந்து கால் தடம் பதித்து பிரபஞ்சத்தில் சாதனை படைத்த நீல்ஆம்ஸ்ரோங்கிற்கு பல்வேறு விருதுகள் கிடைத்தன. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சட் நிக்ஸன் மற்றும் ஜிம்மி காடரினால் ஆம்ஸ்ரோங் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். விண்வெளி ஆராய்ச்சியிலிருந்து ஓய்வுபெற்ற நீல்ஆம்ஸ்ரோங் வர்த்தகதுறையில் தனது கவனத்தை செலுத்தினார். அதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 7 ம் திகதி சுகவீனம் உற்ற நிலையில் நீல்ஆம்ஸ்ரோங் ஒஹியோ மாகாணத்திலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி தனது 82 வயதில் நீல்ஆம்ஸ்ரோங் இவ்வுலகை விட்டு விடைபெற்றார். பல்வேறு சாதனைக்குரிய சந்திரனில் கால் தடம் பதித்த முதலாவது மனிதனென்ற அழியா சாதனையாளார் என்ற பல்வேறு நூல்கள் கருத்துக்கள் அறிக்கைகள் போன்றன வெளிவந்தன. இருந்தபோதிலும் ஆம்ஸ்ரோங்கின் வாழ்க்கையில் இடம்பெற்ற சில கசப்பான உணர்வுகள் இவ்வுலகிற்கு வெளிக்கொணரப்படவில்லை என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதேவேளை இறப்பின் பின்னர் நீல்ஆமஸ்ரோங்கின் இறுதிகிரியைகள் சகல அரச மரியாதைகளுடனும் இடம்பெறாமைக்கான காரணம் மர்மமாகவே உள்ளது. எவ்வாறெனினும் மனிதனது வேறு கிரகங்கள் தொடர்பான விண்வெளி ஆராய்ச்சிக்கு அடித்தளமிட்டு நிலவில் கால் தடம் பதித்த ஆராய்ச்சிகளுக்கு தன்னம்பிக்கை வித்திட்ட நீல்ஆம்ஸ்ரோங் என்றும் எம் நெஞ்சை விட்டு நீங்கா ஆம்ஸ்ரோங்…...........................................................பிரசன்னா

உலக சிறுவர் தினம்
உலக சிறுவர் தினம்……01.10.2012
எதிர்கால உலகின் தலைவர்களாகவும் இந்த உலகை காப்பதற்கு தயாராகும் பாதுகாவலர்களாகவும் இருப்பவர்கள் சிறுவர்கள். இளமையில் கல் சிலையில் எழுத்து எனும் வாக்கிற்கமைய சிறுவயதிலேயே சிறுவர்கள் வாழும் சூழல் அவர்களின் எதிர்கால வாழ்;க்கையில் தாக்கம் செலுத்துகிறது. அதற்கமைய உலகளாவியரீதியில் ஏற்படுகின்ற யுத்தங்கள் உள்நாட்டு பிரச்சினைகள் என்பன அதிகளவில் நேரடியாக சிறுவர்களேயே பாதிக்கிறது. மேலும் சமூகத்திலுள்ள சில விசமிகளின் செயற்பாடுகளால் சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் எனும் நோக்கோடு அவர்களை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 1 ம் திகதி சர்வதேச சிறுவர் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. சிறுவர்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களின் உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கென ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1989;ம் ஆண்டு முதல் சர்வதேச சிறுவர் தினத்தை பிரகடனப்படுத்தியது. எனினும் கடந்த 1924 ம் ஆண்டிலேயே சிறுவர்கள் முதன் முதலில் சிறுவர் உரிமைகள் தொடர்பிலான கொள்ளை வெளியிடப்பட்டது. அதன்பின்னர் கடந்த 1959 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் சிறுவர்களுக்கான சகல உரிமைகள் தொடர்பான தெளிவான கொள்கை பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்நிலையிலேயே கடந்த 1979ம் ஆண்டு உலக சிறுவர் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு சிறுவர்கள் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய கடந்த 1989 ம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் சிறுவர் உரிமைகள் தொடர்பான கொள்ளை பிரகடனத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது. இதனிடையே கடந்த 1954 எம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானத்தின் அடிப்படையில் சர்வேதச சிறுவர் தினத்தை அமுல்படுத்தும் பொறுப்பு யுனிசெப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கமைய யுனிசெப், யுனெஸ்கோ மற்றும் சேவ் த சைல்ட போன்ற அமைப்புக்கள் என பல்வேறு செயற்திட்டங்களை முன்வைத்து செயற்பட்டுவருகிற்னறன. 18 வயதிக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என ஐக்கியநாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சாசனம் வரையறை செய்துள்ளது.
• வாழ்வதற்கும் முன்னேற்றுவதற்குமான உரிமை
• பிறப்பின் போது பெயரொன்றையும் இன அடையாளத்தையும் பெற்றுக்கொள்ளும் உரிமை..
• பெற்றோரை தெரிந்துகொண்டு அவர்களது பாதுகாப்பை பெற்றுக்கொள்வதற்கான உரிமை
• பெற்றோரிடமிருந்து தம்மை தனிமைப்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமை..
• கருத்தை வெளிப்படுத்தும் உரிமை…
• சிந்திப்பதற்கும் மனச்சாட்சிப் படி நடப்பதற்கும் சமயம் ஒன்றை பின்பற்றுவதற்குமான உரிமை…
• பொருளாதார சுரண்டல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை..
• பாலியல் வல்லுறவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் உரிமை
• சித்திரவதைகள், தண்டனைகளிலிருந்து தவிரித்துக் கொள்ளும் உரிமை…
• சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்குமான உரிமை என சிறுவர்களுக்கு பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் உலகளாவிய ரீதியில் இவற்றில் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படுகிறதா என்பது. கேள்விக்குறியான விடயம். இதனிடையே சிறுவர்கள் உடல் ரீதியான துஷ்பிரயோகம் உளவியல் ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகம் உணர்வு ரீதியான துஷ்பியோகம் புறக்கணிப்பு ரீதியான துஷ்பிரயோகமென பலவழிகளில் அவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். உலகில் வாழ்கின்ற மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்களாவர். இவ்வாறு எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் இருக்கும் சிறுவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிவித்தலின் படி ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சிறுவர்கள் யுத்தத்தால் வழங்கப்படுகின்றனர். மேலும் 2 இலட்சத்து 50 ஆயிரத்குக்பும் அதிகமான சிறுவர்கள் யுத்தங்களில் போர்வீரர்களா செயற்பட்டு வருகி;னறனர். மேலும் 12 மில்லியனுக்கும் அதிமான சிறுவர்கள் பல்வேறு காரணங்களினால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறு நிர்க்கதிக்குள்ளான சிறுவர்கள் தவறான பாiயி;ல் சென்று பல்வே குற்றச்செயல்களில் ஈடுபடுத்துவதற்கும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு நாடுகளும் சிறுவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள் பாதுகாக்க வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் அதற்கென பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. எனினும் இன்று உலகில் பல்வேறு நாடுகளில் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுதல் , பாலியல் துஷ்பிரயோகம், கல்வியைத் தடுத்தல் , சிறுவர்களை கடத்துதல் போன்ற பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் எமது நாட்டில் 14 வயதிற்கீழுள்ள சிறுவர்களை வேலைக்கமர்த்துதலுக்கு எதிராக பல சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலங்கையில் கட்டாயக்கல்வி அமுல்படுத்தப்பட்டு அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் பாதுகாக்க வேண்டியவர்கள் என்பதன் காரணமாக அவர்களுக்கு பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வருடம் …… …………………………………………………………………….. எனும் தொனிப்பொருளில் சிறுவர் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்களாக கருதப்படு வேண்டிய நிலையில் அவர்கள் தமது வாழ்க்கையில் பெரும் சவால்களை எதிர்நோக்கியள்ளனர். இவ்வாறு சிறுவர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு ஒவ்வொரு சமூகமும் பொறுப்புக் கூறவேண்டிய கட்டாயத்திலிருக்கிறது. இந்த ப+மியில் வாழ்கின்ற மனித இனமான நாம் எதிர்காலத்திலும் நல்லதொரு உலகை கட்டியெழுப்ப வாய்ப்பளிக்க வேண்டியது கட்டாயமல்லவா???? சிறுவர்களுக்கெதிரான நடவடிக்கைககளை தடுத்து அவர்களை பாதுகாத்து நாளைய நல்ல உலகத்திற்பு இன்றே வழிவகுப்போம்……சிறுவர்கள் நாளைய தலைவர்கள்…
..........................................................................................................................பிரசன்னா

Saturday, September 29, 2012
அன்னை தெரேசா
உதவி செய்வதன் மூலம் உலகில் அனைவராலும் அறியப்பட்ட உன்னதமான பிரஜை அன்னை தெரேசா 1910.08.26 ம் திகதி அல்பேனியா நாட்டில் அன்னைத் திரேசா பிறந்தார். இந்திய குடியுரிமைகள் பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட் சகோதரியுமான இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜரிஜிய அன்னை தெரேசா ஆகஸ்ட் 26 ம் திகதி பிறந்த போதிலும் தான் திருமுளுக்கு பெற்ற ஆகஸ்ட் 27ம் திகதியே தனது உண்மை பிறந்தநாளாக கருதினார். குடும்பத்தில் இளையவரான இவர் 8 வயதாக இருக்கும் போது தனது தந்தையை இழந்தார். தந்தையின் மரணத்தின் பின்னர், அன்னை தெரேசா தனது 12வது வயதில் தெய்வ நம்பிக்கையுள்ள வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்தார். அதற்கமைய தனது 18 வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி லோரேட்டோ சகோதரிகளின் சபையில் மதப்பிரசாகராக இணைந்து கொண்டார். அதன் பின்னர் 1929 ம் ஆண்டு இந்தியாவை வந்தடைந்த அன்னை தெரேசா இமய மலை அருகேயுள்ள டார்ஜீலிங்கில் தனது கன்னியர் மட பயிற்சியை ஆரம்பித்தார். குறித்த காலப்பகுதியில் மதப் பிரசாகர்களான காவல் புனிதரான தெரேசா லிசியுவின் பெயரை தனக்கு தனக்கு தெரேசா என தேர்ந்தெடுத்துக்கொண்டார். அதன் பின்னர் 1937 மே 14ம் திகதி தனது அர்ப்பணிப்பு பிரமாணங்களை எடுத்துக்கொண்டார்.
1943 மற்றும் 1946 ம் காலப்பகுதிகளில் இந்தியாவின் கல்கதா நகரில் வறுமை நிலை மற்றும் பஞ்சம் ஆகிய துயரங்களால் மக்கள் அவதியுற்றனர். அத்துடன் ஹிந்து முஸ்லிம் வன்முறைகளும் நகரத்தில் தலை தூக்கியிருந்தன.; குறித்த பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுமென அன்னை தெரேசா தீர்மானம் கொண்டார். அதற்கமைய 1948 ம் ஆண்டு ஏழைகளுடானான தனது ஊழியத்தை ஆரம்பித்தார். இந்தியாவிலுள்ள குடிசை பகுதிகளுக்குள் அன்னை தெரேசா நடமாடினார். அதன் பின்னர் சமூகத்தில் ஆதரவற்றோர், பட்டினியாய் வாழ்வோர் நோயுற்றோர் போன்றோரின் தேவைகளை நிறைவேற்ற தொடங்கினார். இத்தகைய செயற்பாடுகள் இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை விரைவில் ஈர்த்தது. அவர்களிடமிருந்து அன்னை தெரேசே பாராட்டுக்களையும் பெற்றார்.
1950 ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ம் திகதி பிறர் அன்பின் பணியாளராக பிற்காலத்தில் உருவெடுக்க போகும் சபையை ஆரம்பிக்க அன்னை தெரேசாவுக்க அனுமதி கிடைத்தது. ஆரம்பத்தில் 13 உறுப்பினர்களை கொண்ட சிறியதொரு அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட இது இன்று 40 இலட்சத்துக்கும் அதிகமான அருட் சகோதரிகளால் நடாத்தப்படுகிறது. 1952ம் ஆண்டு கல்கதா நகரில் பல்வேறு தொளு நோய்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென நல்வாழ்வு மையமான சாந்தி நகரை (சமாதானத்தின் நகரம்) ஆரம்பித்தார். அதன் பின்னர் சமூகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கென ஒரு இல்லத்தை அமைப்பதற்கான அவசியத்தை அன்னை தெரேசா உணர்ந்தார். அதற்கமைய 1955ம் ஆண்டில் நிர்மலா சிசு பவனையும், The Children’s Home of the immaculate Heart இல்லத்தையும் ஆரம்பித்தார். குறித்த இல்லங்கள் நாளடைவில் இந்தியா முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டன. அன்னை தெரேசா இத்தைகைய இல்லங்களை உலகம் முழுவதும் விஸ்த்தரித்தார். இந்நிலையில் அன்னை தெரேசா பல வழிகளினாலும் விமர்சிக்கப்பட்டபோதிலும் அவற்றை கருத்திற்கொள்ளாது. தனது சேவையை வெற்றிகரமாக முன்னெடுத்தார்.