சுந்தராம்பாள்…… 21.09.2012
20 ம் நூற்றாண்டின் மிக முக்கிய 100 தமிழர்களில் ஒருவராக கருதப்படுபவர். தமிழிசை நாடகம் அரசியல் திரைப்படம், ஆண்மிகம் என பல துறைகளில் புகழ்பெற்றவர். அனைவராலும் கே.பீ சுந்தரம்பாள் என அழைக்கப்பட்ட கொடுமுடி, பாலாம்பாள் சுந்தரம்பாள். கடந்த 1908 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ம் திகதி தமிழ்நாடு கோவை கொடுமுடியில் பாலாம்பாளின் மகளாக பிறந்தார் கே.பீ.சுந்தரம்பாள் சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர் ஏழ்மைக் குடும்பம் என்பதால் வறுமையின் சீற்றம் இவரை அதிகப்படியான தாக்கத்திற்குள்ளாக்கியது. இவருக்கு கனகசபாபதி, சுப்பம்மாள் எனும் இரு சகோதரர்கள் இருந்தனர். அவர்களையும் தன் தாயையும் காப்பாற்றுவதற்கு தனது 7 வயதிலிருந்தே குடும்பத்திற்காக உழகை;க ஆரம்பித்தார். இளம் வயதிலேயே சிறந்த குரல் வளம் பெற்றிருந்த சுந்தராம்பாள் அவர் வாழ்ந்த ஊரிலுள்ள கோயில்களில் பாடல்களை பாடி அனைவரினதும் வரவேற்பு பெற்றார். இந்நிலையில் இவரின் பாடும் திறனை கண்ட வேலுநாயர் எனும் இயக்குனர் அவரை தன்னுடைய நாடகங்களில் குழந்தை வேடங்களில் நடிப்பதற்கு அழைத்து சென்றார். அதற்கமைய கே.பீ. சுந்தரம்பாள் வேலூர் நாயர் இயக்கி நல்ல தங்காள் எனும் நாடகத்தில் ஆண்வேடம் ஏற்று நடித்திருந்தார் குறித்த நாடகத்தில் அவர் பாடிய பசிக்குதே வயிறு பசிக்குதே என்ற பாடலை தனது குடும்ப வறுமையினை நினைவில் வைத்து உணர்ச்சி ப+ர்வமாக பாடி அனைவரினதும் வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து பல நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த கே.பீ.சுந்தரம்பாள் தனது சொந்தக்குரலிலே பாடல்களை பாட ஆரம்பித்தார். அதற்கமைய கடந்த 1917 ம் ஆண்டு இலங்கையின் கொழும்புக்கு வருகை தந்த கே.பீ.சுந்தரம்பாள் இங்குள்ள பல ஊர்களுக்கும் சென்று கடந்த 1929 ம் ஆண்டு வரை பல நாடங்களை அரங்கேற்றி இந்தியா திரும்பினார். அவர் நடித்த வள்ளித்திருமணம் , நல்ல தங்காள், கோவலன், ஞானசவுந்தரி, பவளக்கொடி போன்ற நாடகங்கள் புகழ்பெற்றவையாக காணப்பட்டது. கே.பீ.சுந்தரம்பாளின் புகழ் உலகமெங்கிலும் பரவியிருந்த அக்காலப்பகுதியில் கடந்த 1926 ம் ஆண்டு கொழு;புக்கு நாடக குழுக்களுடன் வருகை தந்தபோது எஸ்.ஜி. கிட்டப்பா என்பவரை சந்தித்தார். தனது குரல் வளத்தாலும் நடிப்பினாலும் பலரது கவனத்தை ஈர்த்து புகழுடன் இருந்த கிட்டப்பாவுடன் கே.பீ.சுந்தரம்பாள் இணைந்து பல நாடகங்களை நடிக்க ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து கிட்டப்பாவும் சுந்தரம்பாளும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் பல்வேறு இசைத்தட்டுகளில் கே.பீ.சுந்தரம்பாளின் பாடல்கள் பதிவு செய்யப்பட்டு உலகெங்கிலுமுள்ள இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கடந்;த 1933 ம் ஆண்டு டிசம்பர மாதம் 2 ம் திகதி கே.பீ. சுந்தரம்பாளின் கணவர் எஸ்.ஜி.கிட்டப்பா தனது 28 வது வயதில் உயிரிழந்தார். அப்போது 25 வயது பெண்ணாக இருந்த கே.பீ.சுந்தரம்பாள் அன்றிலிருந்து எந்தவொரு ஆண் நடிகருடனும் சோடி சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொணடு அதனை தனது வாழ்நாளின் இறுதி வரை காப்பாற்றி வந்தார். கணவிரின் இறப்பின் பின்னர் சில கால இடைவெளிக்கு பின்னர் மீண்;டும் நாடக துறைக்கு வந்த கே.பீ.சுந்ரம்பாள் பெரும்பாலான நாடகங்களில் ஆண்வேடம் தரித்து பெண் வேடத்திற்கு வேறு பெண் நடிகர்களை நடிக்கவைத்தார். அதனைத் தொடர்ந்து 1935 ம் ஆண்டு வெளிவந்த பக்த நந்தனார் எனும் திரைப்படத்தின் ஊடாக நடிகராக திரையுலகில் கால்தடம் பதித்த கே.பீ.சுந்தரம்பாள் இப்படத்திலுள்ள 41 பாடல்களில் 19 பாடல்களை பாடியுள்ளார். அதனைத் தொடர்ந்து மணிமேகலை, ஒளவையார், ப+ம்புகார், மகா கவி காளிதாஸ், திருவிளையாடல் ,கந்தன் கருணை , உயிர்மேல் ஆசை, துணைவன், சக்தி லீலை, காரைக்கால் அம்மையார, திருமலை தெய்வம் உள்ளிட்ட 12 திரைப்படங்களில் அவர் பாடி நடித்துள்ளார். அவர் நடித்து கடந்த 1953 ம் ஆண்டு வெளிவந்த ஒளவையார் திரைப்படம் அவருக்கு பெரும் புகுழை தேடித்தந்துது. மேலும் அவர் பாடிய பழம் நீயப்பா ஞான பழம் நீயப்பா என்ற பாடல் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதனைத் தொடர்ந்து அரசியல் துறையில் கால்தடம் பதித் அவர் பிரச்hi நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். பிரச்சார மேடைகளில் காந்தியடியோ பரம ஏழை என பாடல் பாடி காந்தி எடிகளை பாடல்கள் மூலம் புகழ் பரப்பியவர்களில் கே.பி.சுந்தரம்பாள் முக்கிய இடம்பிடித்துள்ளார். இந்தியாவில் மாத்திரமில்லாமல் உலகளாவிய ரீதியில் இசை ரசிகர்களை தனது குரல்களால் ஈர்த்த கே.பீ.சுந்தரம்பாளுக் அறிஞர் அண்ணாதுறை கொடுமுடி கோகுலம் எனும் பட்டத்தை வழங்கினார். இசை உலகில் கே.பீ.சுந்தராம்பாள் பெறாத விருதுகளே என்னும் அளவுக்கு பாராட்டுக்களை பெற்றுள்ளார். மேலும் காமராஜர் தமிக முதல்வராக இருந்தபோது கே.பி . சுந்தரம்பாள் சட்டமன்ற மேல் சபை உறுப்பினராகவும் பதவிவகித்தார். அர்த்தமுள்ள கலைவாழ்;க்கையினைக இவ்வுலகில் 72 வருடங்களாக வாழ்ந்து வந்த கே.பீ. சுந்தரம்பாள் கடந்த 1980 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ம் திகதி இறையடி சேர்ந்தார். உலகளாவிய ரீதியில் இயல், இசை, நாடகம் எனும் துறைகளிலும் தனது பங்களிப்பினை செலுத்தி கலை உலகை ஆட்சிசெய்த கே.பீ. சுந்தரம்பாள் தமிழ் உலகில் என்றும் அழியா சகாப்தமாகும்…......................… ...................................................................................................................................
பிரசன்னா
No comments:
Post a Comment
hi