எம்.ஆர்.ராதா……
திரையுலகில் பரவலாக பேசப்பட்ட நடிகர்களில் ஒருவர் நகைச்சுவை நடிகராக, வில்லன் நடிகராக, மேடை நாடகத்தில் புகழ் பெற்றவருமாக திகழ்ந்தவர். திரையுலகில் நடிகர் வேல் என அழைக்கப்பட்ட எம்.ஆர்.ராதா. கடந்த 1907 ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் சென்னையில் ராஜகோபால் ராசம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் எம்.ஆர்.ராதா எனும் ராதகிருஸ்ணன். மதராஸ் ராஜகோபால் அவர்களின் மகன் ராதகிருஸ்ணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதாவாகும். ராதாவின் தந்தை ரஷ்ய எல்லைப்பகுதியில் வசுலீயா எனும் இடத்தில் இராணுவ வீரராக கடமையாற்றி போரில் மரணமடைந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்த எம்.ஆர்.ராதா தாயுடன் முரண்பட்டு வீட்டை விட்டு வெளியேறி சென்னை எழும்ப+ர் ரயில் நிலையத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக செயற்பட்டார். குறித்த இடத்தில் ராதாவைப் பார்த்த ஆலந்தூர் போய்ஸ் கம்பனி உரிமையாளர் ஆலந்தூர் டப்பி அரங்க நாயிடுசிதம்பரம் தனது நாடக கம்பனியில் நடிப்பதற்காக ராதாவினை அழைத்து செல்கிறார். அதனைத் தொடர்ந்து பல நாடாக கம்பனிகளில் தனது நடிப்பு துறையினை வெளிக்காட்டி நாடக ரசிகர்கள் மத்தியிலும் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றார். தனத வாழ்க்கையில் நாடகத்தை மட்டும் நம்பியிராமல் ஒரு மெக்கானிக்காகவும், எலக்ரீசியனாகவும் தனது தொழிலினை எம்.ஆர்.ராதா மேற்கொண்டார். அக்காலத்தில் நாடக நடிகர்களுக்கு பெண்தருவது என்பது எட்டாக்கனியாக இருந்த வேளையில் அவரின் தொழில் ராதாவின் திருமண வாழ்க்கைக்கு உதவியது. எம்.ஆர். ராதாவிற்கு எம்.ஆர்.ஆர். வாசு , ராதா ரவி ஆகிய மகன்களும் ராதிக நிரோசா ஆகிய மகள்களும் உள்ளனர். அவர்களும் சினிமா துறையில் நடித்த வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. தான் எடுத்துக் கொண்ட அத்தனை நாடக பாத்திரத்திலும் உணர்ச்சி ப+ர்வமான நடிப்பை வெளிப்படுத்தி எம்.ஆர்.ராதா சில சமயங்களில் சர்ச்சைக்குள்ளான நிலையில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டும் இருக்கிறார். இதனிடையே நாடகமுதுறையில் புகழ்பெற்று விழங்கிய எம்.ஆர்.ராதா கடந்த 1937 ம் ஆண்டு வெளிவந்த ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி எனும் திரைப்படத்தின் ஊடாக திரையுலக வாழ்வை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து 1942 ம் ஆண்டு வரை சுமார் 5 திரைப்படங்களில் நடித்த எம்.ஆர்.ராதா தனது சினிமா வாழ்வை விட்டு மீண்டும் நாடக துறைக் சென்றார். அதன்பின் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு தான் நாடகமாக அரங்கேற்றிய ரத்தக்கண்ணீர் நாடகத்தினை கடந்த 1954 ம் ஆண்டு திரைப்படமாக எடுத்து கதாநாயகனாக மீண்டும் திரையுலக வாழ்க்கைகுள் நுழைந்தார் எம்.ஆர்.ராதா. அதனைத் தொடர்ந்து வில்லனாகவும் நகைச்சுவை நடிகராகவும் பாத்திரமேற்று நடிக்க ஆரம்பித்த எம்.ஆர்.ராதா தனது வாழ்நாளில் 125 திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த ரத்தக்கண்ணீர், 1000 ருபாய், கைகொடுத்த தெய்வம், பாவமன்னிப்பு, புதிய பறவை, பலே பாண்டியா, பெற்றால்தான் பிள்ளையா மற்றும் தாயைக் காத்த தனையன் ஆகிய திரைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டன. எனினும் அவருக்கு நாடகங்கள் நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காணப்பட்டது. இதேவேளை தன்னிச்சையாக செயற்பட்டு தனக்கு நியாயம் என்று படுகின்ற விடயத்தினை எந்த சூழலிலும் துணிந்து செய்யக்கூடிய மனம் படைத்தவர் நடிகர் எம்.ஆர். ராதா தனது இறுதி நாள் வரை தந்தை பெரியாரின் கொள்கைகளை பின்பற்றினார். அதற்கிணங்க பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட திராவிட கழகத்தின் முன்னணி ஆதரவாளராக எம்.ஆர்.ராதா செயற்பட்டார். அவர் காமராஜரின் தனிப்பட்ட நண்பராக இருந்து பெரியார் காங்கிரசை ஆதரித்த போது அவர் காமராஜருக்காக தேர்தலில் வாக்குசேகரித்தார். இவரது அரசியல் சாய்வினாலும் தொழில் ரீதியிலும் எம்.ஜி.ஆருடன் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தார். கடந்த 1952 ம் ஆண்டு திருச்சி தேவர் மன்றத்தில் எம்.ஆர். ராதா போர்வாள் எனும் நாடகத்தை அரங்கேற்றினார். அப்போது தந்தை பெரியார் முன்னிலையில் அவருக்கு வழங்கப்பட்ட பட்டம்தான் நடிகவேல். தனது அரசியல் வாழ்விலும் மாறுபட்ட கருத்துக்களை கொண்ட எம்.ஆர்.ராதா சமூக சீரழிவுக்கு எதிரான துணிச்சலா போராட்டங்கள் பகிர்த்தறிவு பிரச்சாரம் போன்றவற்றினை முன்னெடுத்துள்ளார். இதுபோன்ற அரசியல் செயற்பாடுகளாலும் தொழில் ரீதியான முரண்பாடு காரணமாகவும் கடந்த 1967 ம் ஆண்டு திரையுலகில் புரட்சித் தலைவர் என அழைப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு 3 அரை வருட சிறைத்தண்டனையும் அனுபவித்தார். ராதா மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தால் எம்.ஜி.ஆர் தனது இயல்பான குரல் வளத்தை இழந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. அதனைத்தொடர்ந்து மீண்டும் தனது திரைவாழ்வில் தனித்துவமிக்க நடிப்பினை வெளிக்காட்டி எம்.ஆர்.ராதா கடந்த 1979 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் திகதி தனது 72 வது வயதில் மண்ணுலகை விட்டு பிரிந்தார். தந்தை பெரியார் பிறந்த அதேதினத்தில் பெரியாரின் 101 வது பிறந்தநாளன்று எம்.ஆர்.ராதா உயிரிழந்தமை குறிப்பிடத்தப்பது. சினிமா துறையிலிருந்தே அந்த துறையுடன் தொடர்புடைய சீர்கேடுகளை தைரியமாக வெளிக்கொணர்ந்தவர் எம்.ஆர்.ராதா. நாடக துறையில் தனது கலை வாழ்;க்கையினை ஆரம்பித்து சினிமாவில் ஜொலித்து அரசியலில் கால்தடம் பதித்து மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம்பிடித்த நடிகவேல் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை காலவெள்ளத்தில் என்றும் அழியாத கல்வெட்டாகவே பதிந்துள்ளது…….........................................................................................................பிரசன்னா
No comments:
Post a Comment
hi