Sunday, September 30, 2012




ந்தவொரு  மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும், படிக்கவும் தெரியாமல் இருத்தல் எழுத்தறிவின்மை என ஐக்கிய நாடுகள் சபை தனது சாசனத்தில் வரையறை செய்துள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு செம்டெம்பர் மாதம் 8 ம் திகதி உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகிறது.  எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், எழுத்தறிவற்றவர்கள் இல்லாத உலகை ஏற்படுத்துவதுமே உலக எழுத்தறிவு தினத்தின் பிரதான நோக்கம். கடந்த  1965 ம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் 8 ம் திகதி தெஹரான் நகரில் சர்வதேச கல்வி அமைச்சர்கள்  மாநாடு இடம்பெற்றது. குறித்த மாநாட்டில் உலக அளவில் எழுத்தறிவு இன்மையால்  ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் , ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் மாதம் 8 ம் திகதி சர்வதேச எழுத்தறிவு தினமாக அனுஷ்டிக்க தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் 1965 ம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ம் திகதி யுனெஸ்கோ நிறுவனம் செப்டெம்பர் மாதம் 8 ம் திகதி சர்வதேச எழுத்தாளர் தினமாக பிரகடனப்படுத்தியது.  அதற்கமைய  1966 ம் ஆண்டு முதல் எழுத்தறிவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒரு மனிதன் எந்த மொழியிலும் எளிய வார்த்தைகளை எழுதவும், படிக்கவும் தெரியாமையே, எழுத்தறிவின்மை என ஐக்கிய நாடுகள் சபை எழுத்தறிவின்மையை வரையறுத்துள்ளது. இந்நிலையில் உலகில் சுமார் 80 கோடி வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக காணப்படுகிறார்கள்.  அதாவது வயது வந்தவர்களில் 5 பேரில் ஒருவருக்கு எழுத படிக்க தெரியாது. அவர்களில்  3 இல் இரண்டு பகுதியினர் பெண்கள். மேலும் உலகில் 11 கோடி சிறுவர்கள் பள்ளிக்கூட வசதியில்லாமல் காணப்படுகின்றனர். 1998 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பின் அடிப்படையில் உலக சனத்தொகையில் 20 வீதமானோர் எழுத்தறிவற்றவர்களாக காணப்பட்டனர். எனினும் அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை முகவர் அமைப்பின் அறிக்கையின்படி தற்போது, உலக சனத்தொகையில் எழுத்தறிவு வீதம் 82 ஆக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை கடற்த 2006 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்கமைய தெற்கு மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளிலேயே ,  படிப்பறிவில்லாதவர்கள் அதிகம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மனித அபிவிருத்தி உள்ளடக்க புள்ளிவிபரப்படி ,  உலகில் 100 சதவீத எழுத்தறிவு பெற்றுள்ள நாடு என்ற பெருமையை ஜோர்ஜியா பெற்றுள்ளது.  இரண்டாவது இடத்தில் 99.8 வீத எழுத்தறிவுடன் எஸ்டோனியா நாடும், 3 ம் இடத்தில் 99.8 வீத எழுத்தறிவுடன் லாட்வியா நாடும் , 99.8 வீத எழுத்தறிவுடன் 4 ம் இடத்தில் க்ய+பாவுடன் காணப்படுகின்றன.  இதேவேளை 99 வீத எழுத்தறிவுள்ள பட்டியலில் 49 நாடுகள் காணப்படுகின்றன. மேலும்  98 வீத எழுத்தறிவுள்ள 8 நாடுகளும் ,  97 வீத எழுத்தறிவுள்ள 10 நாடுகளும்,  காணப்படுகின்றன.  இப்பட்டியலில் இலங்கைக்கு 99 ஆவது இடம் கிடைத்துள்ளது.  இலங்கையின் எழுத்தறிவு வீதம் 90.8 வீதமாகும். மேலும் தெற்காசியாவுடன் ஒப்பிடும்போது எழுத்தறிவு வீதத்தில் இலங்கை முதலிடத்தில் காணப்படுகிறது. குறித்த பட்டியில் இந்தியாவுக்கு 159 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் எழுத்தறிவு வீத அதிகரிப்பிற்கு 5 தொடக்கம், 14 வயதான வயதெல்லை கட்டாயக்கல்விக்கான வயதெல்லையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையே ஆகும். இலங்கையானது யுனெஸ்கோவின் கல்விசார் அபி;விருத்தி திட்டங்களில் இணைந்து செயற்படுவதற்கு 1949 ம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ம் திகதி யுனெஸ்கோ அமைப்பில் இணைந்துகொண்டது. இன்று இலங்கையில் எழுத்தறிவு வீதமானது நகர்புரங்களிலேயே முன்னேற்றமடைந்துள்ளது. இலங்கையின் குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத்திணைக்களத்தின் அறி;க்கையின்படி , நகர்புரங்களில் எழுத்தறிவு வீதம் 95 வீதமாகவும், கிராமப்புரங்களில் 93 வீதமாகவும் , பெருந்தோட்டப்பகுதிகளில் 76 வீதமாகவும் காணப்படுகிறது. இலங்கையில் பாலின பிரிவின்படி , ஆண்கள் 94 சதவீத கல்வியறிவினையும், பெண்கள் 91.1 சதவீத கல்வியறிவினையும் பெற்றுள்ளனர்.   இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் 8 ம் திகதி , கொண்டாடப்படுகின்ற உலக எழுத்தறிவு தினத்தில் ,  எழுத்தறிவை கற்றுக்கொள்ளவேண்டியதன் அவசியம் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் எழுத்தறிவை பெற்றுக்கொள்ள முடியாமல் போன வயது வந்தோருக்கு முறைசாரா கல்வித்திட்டத்தின் மூலம் , எழுத்தறிவை போதிக்கும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் எழுத்தறிவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை எழுத்தறிவை பெற்றுக்கொள்ள முடியாமைக்கான காரணங்களாக உள்ள சமூக நிலைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. வருமை, போஷாக்கின்மை , அரசியல் நெருக்கடிகள் , கலாச்சார பாகுபாடு, அடிமைப்படுத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் உலக நாடுகளில் இன்றும் எழுத்தறிவின்மை காணப்படுகிறது என்பதை ஏற்க  வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எழுத்தறிவு என்பது மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட ஒரு அம்சம். தனிநபர் ஆளுமையிலிருந்து சமூக மனிதவள அபிவிருத்தி  மற்றும் கல்வி செயற்பாடுள் மற்றும் அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன எழுத்தறிவிலேயே தங்கியுள்ளன.  இந்நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் எழுத்தறிவென்பது உண்ணும் உணவை விடவும், பார்க்கும் கண்ணை விடவும் முக்கியம் பெறுகிறது. கல்வி என்பது பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்த முடித்தவுடன் முடிவதில்லை. அது வாழ்நாள் முழுவதும் திகழ வேண்டும். கல்விக்கு முடிவே கிடையாது.................................................................................................பிரசன்னா

No comments:

Post a Comment

hi