Saturday, September 29, 2012

அன்னை தெரேசா

உதவி செய்வதன் மூலம் உலகில் அனைவராலும் அறியப்பட்ட உன்னதமான பிரஜை அன்னை தெரேசா 1910.08.26 ம் திகதி அல்பேனியா நாட்டில் அன்னைத் திரேசா பிறந்தார். இந்திய குடியுரிமைகள் பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட் சகோதரியுமான இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜரிஜிய அன்னை தெரேசா ஆகஸ்ட் 26 ம் திகதி பிறந்த போதிலும் தான் திருமுளுக்கு பெற்ற ஆகஸ்ட் 27ம் திகதியே தனது உண்மை பிறந்தநாளாக கருதினார். குடும்பத்தில் இளையவரான இவர் 8 வயதாக இருக்கும் போது தனது தந்தையை இழந்தார். தந்தையின் மரணத்தின் பின்னர், அன்னை தெரேசா தனது 12வது வயதில் தெய்வ நம்பிக்கையுள்ள வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்தார். அதற்கமைய தனது 18 வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி லோரேட்டோ சகோதரிகளின் சபையில் மதப்பிரசாகராக இணைந்து கொண்டார். அதன் பின்னர் 1929 ம் ஆண்டு இந்தியாவை வந்தடைந்த அன்னை தெரேசா இமய மலை அருகேயுள்ள  டார்ஜீலிங்கில் தனது கன்னியர் மட பயிற்சியை ஆரம்பித்தார். குறித்த காலப்பகுதியில் மதப் பிரசாகர்களான காவல் புனிதரான தெரேசா லிசியுவின் பெயரை தனக்கு தனக்கு தெரேசா என தேர்ந்தெடுத்துக்கொண்டார். அதன் பின்னர் 1937  மே 14ம் திகதி தனது அர்ப்பணிப்பு பிரமாணங்களை எடுத்துக்கொண்டார்.

1943  மற்றும் 1946 ம் காலப்பகுதிகளில் இந்தியாவின் கல்கதா நகரில் வறுமை நிலை மற்றும் பஞ்சம் ஆகிய துயரங்களால் மக்கள் அவதியுற்றனர். அத்துடன் ஹிந்து முஸ்லிம் வன்முறைகளும் நகரத்தில் தலை தூக்கியிருந்தன.; குறித்த பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுமென அன்னை தெரேசா தீர்மானம் கொண்டார். அதற்கமைய 1948 ம் ஆண்டு ஏழைகளுடானான தனது ஊழியத்தை ஆரம்பித்தார். இந்தியாவிலுள்ள குடிசை பகுதிகளுக்குள் அன்னை தெரேசா நடமாடினார். அதன் பின்னர் சமூகத்தில் ஆதரவற்றோர், பட்டினியாய் வாழ்வோர் நோயுற்றோர் போன்றோரின் தேவைகளை நிறைவேற்ற தொடங்கினார். இத்தகைய செயற்பாடுகள் இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை விரைவில் ஈர்த்தது. அவர்களிடமிருந்து அன்னை தெரேசே பாராட்டுக்களையும் பெற்றார்.
1950 ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ம் திகதி பிறர் அன்பின் பணியாளராக பிற்காலத்தில் உருவெடுக்க போகும் சபையை ஆரம்பிக்க அன்னை தெரேசாவுக்க அனுமதி கிடைத்தது. ஆரம்பத்தில் 13 உறுப்பினர்களை கொண்ட சிறியதொரு அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட இது இன்று 40 இலட்சத்துக்கும் அதிகமான அருட் சகோதரிகளால் நடாத்தப்படுகிறது. 1952ம் ஆண்டு கல்கதா நகரில் பல்வேறு தொளு நோய்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென நல்வாழ்வு மையமான சாந்தி நகரை (சமாதானத்தின் நகரம்) ஆரம்பித்தார். அதன் பின்னர் சமூகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கென ஒரு இல்லத்தை அமைப்பதற்கான அவசியத்தை அன்னை தெரேசா உணர்ந்தார். அதற்கமைய 1955ம் ஆண்டில் நிர்மலா சிசு பவனையும், The Children’s Home of the immaculate Heart    இல்லத்தையும் ஆரம்பித்தார். குறித்த இல்லங்கள் நாளடைவில் இந்தியா முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டன. அன்னை தெரேசா இத்தைகைய இல்லங்களை உலகம் முழுவதும் விஸ்த்தரித்தார். இந்நிலையில் அன்னை தெரேசா பல வழிகளினாலும் விமர்சிக்கப்பட்டபோதிலும் அவற்றை கருத்திற்கொள்ளாது. தனது சேவையை வெற்றிகரமாக முன்னெடுத்தார்.

No comments:

Post a Comment

hi