Sunday, September 30, 2012

அறிஞர் அண்ணாதுரை


அறிஞர் அண்ணாதுரை  15.09.2012 பிறந்தநாள்….

ந்த வாக்கியமும் ஒரு வார்த்தையை கொண்டு துவங்காது அந்தவார்த்தை ஏனென்றால்… ஏனென்றால்? ஏனென்றால் என்பது… ஒர் இணைப்பு சொல் என விளக்கம் தந்தவர். தமிழகத்தின் 6 வது முதலமைச்சராக பதவி வகித்தவர். எல்லோராலும் பரவலாக அறிஞர் அண்ணா என அறியப்பட்டவர் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை. 1909 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ம் திகதி இந்திய காஞ்சிபுரத்திலுள்ள நெசவு தொழிலலாளர் குடும்பமொன்றில்  நடராஜன் மற்றும் பங்காறு அம்மாளுக்கு மகனாக பிறந்தவர் அண்ணாதுரை. சென்னை பச்சையப்பர் உயர் நிலை பள்ளியிலும் பின்னர் கல்வி கற்ற அண்ணா 1934 ம்  ஆண்டு இளம் கலை மாமணி மேதகமை மற்றும் முதுகலை மாமணி பொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புக்களை மேற்கொண்டார். தமிழலிலும் ஆங்கிலத்திலும் மிகச் சிறந்த பேச்சாளரும் எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு சீர்திருத்த நாடகங்களையும்  எழுதி இயக்கியதோடு அதிலொரு பாத்திரமாகவும் நடடித்துள்ளார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி அதனூடாக தனது திராவிட சீர்திருத்த கருத்துக்களை முதல் முதலாக பரப்பியவரும் அண்ணாதுரை ஆவார்.  இதேவேளை தமிழில் அடுக்கு மொழிகளுடன் மிக நாகரீகமான முறையில் அனைவரையும் கவருகின்ற வகையில் தனது கறகரத்த குரலில் வளத்துடன் பேசும் திறன் பெற்றவர்.  இதேவேளை அண்ணா துரை எழுதிய மிகச் சிறந்த நாவல்களான வேலைக்காறி ஓர் இரவு, போன்ற நாவல்கள் திரைப்படமாக எழுதப்பட்டன. மேலும் அறிஞர் அண்ணாவிற்கு ரி.வி. நாராயண சுவாமி கே.ஆர். ராமசாமி, என்.எஸ் கிருஸ்ணன், எஸ்.எஸ். ராஜேந்திரன், சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி. ராமசந்திரன் ஆகியோர் பக்கபலமாக விளங்கியுள்ளனர். நெசவாளர் குடும்பத்தில்  பிறந்தவரான அண்ணதுரை தனது ஆரம்ப வாழ்;க்கையை பள்ளிக்கூட ஆசிரியராக ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் அவர் செயற்பட்டார். அதனைத் தொடர்ந்து அக்காலத்தில் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நீதிக்கட்சியில் சேர்ந்த அண்ணாதுரை பெரியாருடன் திராவிட கழகத்தில் இணைந்து மூட நம்பிக்கைகளுக்கெதிரான பகுத்தறிவு கருத்துக்களையும் சமூக சீர்திருத்த கருத்துக்களை பரப்புவது தொடர்பிலும் அதிக ஈடுபாடு காட்டினார். இந்நிலையில் பெரியாருடன் ஏற்பட்ட சில கருத்து முரண்பாடுகள் காரணமாக 1949 ம் ஆண்டு பெரியாரை விட்டு விலகி திராவிட முன்னேற்றக் கழகம் எனும் புதிய இயக்கமொன்றினை நிறுவினார். தொடர்ச்சியாக அவர் மக்கள் மீது கொண்ட அக்கறை மற்றும் அவரது உரிமை போராட்டங்கள் என்பன அவரை  மக்கள் மத்தியில் சிறந்த தலைவர் என்ற இடத்திற்கு கொண்டு சென்றது. அதற்கமைய 1967 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட அண்ணா துரை தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் முதலாவது திராவிட ஆட்சியை அமைத்தது. அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்டதாக விளங்கியது. மேலும் தமிழகத்திலிருந்த மும்மொழி சட்டத்தினை தகர்த்தெறிந்து இருமொழி சட்டத்தினை கொண்டு வந்தார். இதேவேளை மதராஸ் மாநிலம் என அழைக்கப்பட்ட சென்னை மாகாணத்தினை தமிழ் நாடு என பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தார். இதேவேளை அரசியலில் காங்கிரசில்லாத திராவிட கட்சிகளில் முதல் பங்களிப்பாளராக அண்ணதுரை விளங்கினார். இதேவேளை இந்தியா குடியரசான பிறகு ஆட்சியமைத்த முதல் காங்கிரஸ் அல்லாத திராவிட கட்சி என்ற பெருமையுடன் ஆட்சியமைத்தவர் அறிஞர் அண்ணாதுரையாவார்.  இந்நிலையில் 1967 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அண்ணாதுரை தமிழ் நாட்டில் 6 வது முதலமைச்சராகவும் தெரிவானார் எனினும் அவர் இரண்டு வருடகாலமே தனது முதலமைச்சர் பதவியை நீடித்தார். புற்றுநோய் தாக்கத்திற்குள்ளாகிய அறிஞர் அண்ணா மருத்துவ மனையில் அனுமதிக்கப்ட்ட நிலையில் கடந்த 1969 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3 ம் திகதி உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். இது கிண்ணஸ் உலகப்புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. இறுதி மரியாதையில் சுமார் 150 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தலைவரான அண்ணாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டதோடு அவரின் நினைவை போற்றும் வகையில் அவ்விடத்தில் அண்ணா சதுக்கம் எனும் நினைவிடமும் அமைக்கப்பட்டது, இதேவேளை அவர் வாழ்ந்த காஞ்சிபுர இல்லத்திற்கு பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் எனும் பெயர் சூட்டப்பட்டு நினைவுச்சின்னமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதோடு அங்கு அண்ணாவின் அமர்ந்த நிலையிலான சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை தி.முகாவிலிருந்து பிரிந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரன்  அண்ணாவினை கௌரவப்படுத்தும் முகமாக தான் ஆரம்பித்த கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என பெயர் வைத்தார். இதேவேளை அண்ணாவினை கௌரவப்படுத்தும் விதத்தில் தமிழகத்தில் தி.மு.க. தலைமை செயலக கட்டிடத்திற்கு அண்ணா அறிவாலயமெனவும் தமிழக தொழிநுட்ப பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் அவரை கௌரவப்படுத்த தமிழ் நாட்டின் பிரதான பாதையொன்றிற்கு அண்ணாசாலை என பெயர் மாற்றப்பட்டுள்ளதோடு தமிழ் நாட்டின் சில குடியிருப்புகளுக்கு அண்ணா நகர் எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 2009 ம் ஆண்டு இந்திய மத்தியரசு அண்ணா நினைவாக அவரின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபா நாணயத்தை வெளியிட்டது. மேலும் கடந்த 2010 ம் ஆண்டு அண்ணாவின் நூற்றாண்டு ப+;ர்த்தியை நினைவு கோரும் வகையில் தமிழக அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும் உருவாக்கியுள்ளது. இந்திய மக்களின் உள்ளங்களை வென்று தன்னிகரற்ற தலைவராக வாழந்த அறிஞர் அண்ணா என்றும் மக்களின் சொத்து…....................................பிரசன்னா

No comments:

Post a Comment

hi