…
உலக கிரிக்கட் வரலாற்றில் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு தனியிடத்தை பெற்றுத் தந்த பந்துவீச்சாளர். தனது சுழலின் மூலம் உலகையே தன்மீதான பார்வைக்கு இட்டுச்சென்ற உலக சாதனை பந்து வீச்சாளர் சேன் வோன். 1969 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ம் திகதி அவுஸ்திரேலிய விக்டோரிய நகரில் பிறந்த ஷேன் கெய்த்வோன் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களுள் ஒருவராவார். கடந்த 1922ம் ஆண்டு முதல் 2007 ம் ஆண்டு வரையான 15 வருடங்கள் அவுஸ்திரேலிய அணிக்காக அவர் விளையாடியுள்ளார். உலகில் வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த வேளையில் அதனை தகர்த்து சுழல் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தை கிரிக்கெட்டில் புகுத்திய பெருமைக்குரியவர் ஆரம்பத்தில் கிரிக்கட் வரலாற்றில் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கமே நிலவி வந்தது. இந்நிலையில் துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கம் நிலவிய காலகட்டத்தில் தனது பந்து வீச்சினை செம்மை செய்து அந்தக்காலப்பகுதியிலும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார் சேன் வோன். முத்தையா முரளிதரண், சச்சின் டெண்டுல்கார், ப்ரைன் லாரா போன்ற கிரிக்கட் சகாப்தங்கள் விளையாடிய காலப்பகுதியில் தன்னையும் கிரிக்கெட்டின் சகாப்தமாக உலகிற்கு வெளிப்படுத்திக்கொண்டார் சேன் வோன். ஆரம்பகாலத்தில் ஹாம் செயார்இ விக்டோரியா ஆகிய பிராந்திய அணிகளுக்காக விளையாடிய சேன்வோன் 1992 ம் ஆண்டு இந்திய அணிக்கெதிராக சிட்னியில் விளையாடிய அவுஸ்திரேலிய அணிக்காக தனது கிரிக்கட் வாழ்வை ஆரம்பித்தார். வோன் தனது முதலாவது போட்டியில் முதல் இனிங்சில் ஒரு விக்கெட்டினை வீழ்த்தி தனது டெஸ்ட் கிரிக்கட் வாழ்வினை ஆரம்பித்தார். இதேபோல் ஒரு நாள் கிரிக்கட் போட்டிகளில் 1993 ம் ஆண்டு நியுசிலாந்து வெலிங்டனில் நடைபெற்ற நியுசிலாந்து அணிக்கெதிரான போட்டிக்காக அவுஸ்திரேலிய அணியில் விளையாடினார். இப்போட்டியில் சேன் வோன் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தி தனது ஒருநாள் சர்வதேச போட்டிக்கான ஆரம்பத்தை மேற்கொண்டார். அதற்கமைய கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஆசிய பதினொருவர் அணிக்கும் ஐசிசி உலக பதினொருவர் அணிக்குமிடையிலான போட்டியே அவரது இறுதி ஒருநாள் சர்வதேச போட்டியாக அமைந்தது. போட்டியில் ஐசிசி உலக பதினொருவர் அணிக்காக விளையாடிய சேன் வோன் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 12 வருட காலமாக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் சேன்வோன் பல்வேறு சாதனைளை புரிந்துள்ளார். குறித்த காலப்பகுதியில் 194 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள சேன் வோன் 293 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியமையே ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் சேன்வோனின் சிறந்த பந்து வீச்சு பெறுதியாகும். இதேவேளை 1992 ம் ஆண்டு தனது டெஸ்ட் வாழ்வை ஆரம்பித்த சேன்வோன் கடந்த 2007 ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக சிட்னியில் நடைபெற்ற ஆசஸ் கிண்ண போட்டியிலேயே இறுதியாக விளையாடினார். இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுக்களால் இங்கிலாந்தை வீழ்த்தியது. குறித்த போட்டியில் சேன்வோன் மொத்தமாக இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியதோடு துடுப்பாட்டத்தில் 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார். இதுவரை 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சேன்வோன் 708 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 128 ஓட்டங்களுக்கு 12 விக்கெட்டுக்களை வீழத்தியமையே அவரின் சிறந்த பந்து வீச்சு பெறுதியாகும். அவர் 10 தடவைகள் 10 விக்கெட் பெறுதியினையும் 37 தடவைகள் 5 விக்கெட் பெறுதியினையும் 48 தடவைகள் 4 விக்கெட் பெறுதியினையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பதிவுசெய்துள்ளார். எனினும் இலங்கை அணியின் உலக பந்து வீச்சு சகாப்தமாக முத்தையா முரளிதரண் அவரின் சாதனையை முறியடித்து 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி அதிக வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வீரர் என்ற பெருமையையும் சேன்வோன் தனதாக்கி கொண்டார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 1018 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ள ஷேன்வோன் 55 ஓட்டங்களை அதிகூடிய ஒட்டமாக பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்;டில் 12 அரைச்சதங்களை கடந்துள்ள ஷேன்வோன் 3154 ஓட்டங்களை பெற்றுள்ளதோடு 99 ஓட்டங்களை அதிகூடிய ஓட்டமாக பெற்றுள்ளார். மேலும் 66 ருவன்றி 20 போட்டிகளில் விளையாடியுள்ள சேன்வோன் 66 விக்கெட்டுக்களை வீழ்த்தியதோடு 210 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கட் வாழ்விலிருந்து ஒய்வினை அறிவித்த சேன்வோன் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டு முதலாவது ஐபிஎல் பருவகாலத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு தலைமை தாங்கி அவ்வணியினை சம்பியனாகவும் கொண்டுவந்தார். கிரிக்கட் விளையாடிய போது சேன்வோன் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்த போதிலும் தனது பந்து வீச்சு பாணியினால் அனைவரையும் கவர்ந்திருந்தார். சுழல் பந்து வீச்சாளர்களுக்கு கிரிக்கெட்டில் தனி முத்திரை பதித்து பல்வேறு சாதனைகளுடன் கிரிக்கெட்டில் வலம் வந்த ஷேன்வோன் என்றும் சுழலின் நாயகன்……........................................................................................................பிரசன்னா
No comments:
Post a Comment
hi