Tuesday, October 30, 2012

பனாமா கால்வாய்


பனாமா கால்வாய்

லகின் அதிசயங்களில் ஒன்றாக பலகாலம் தெரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட மனித வரலாற்றில் மிகப்பெரிய கட்டுமாணங்களில் இதுவும் ஒன்று சுமார் 400 வருட வரலாறு கொண்ட கட்டுமானமாது இன்றும் நவீனமயப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.  அவ்வாறு மனிதனின் கற்பனையில் சாத்தியமான கட்டுமானமாக இன்றும் ஆச்சரியத்துக்குரியதாக காணப்படுவது பனாமா கால்வாய் அட்லான்டிக் சமுத்திரம் பசுபிக் சமுத்திரம் ஆகியவற்றின் ஊடாக கப்பல்கள் பயணிப்பதற்காக குறுக்கு இணைப்பாக பனாமாக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. பனாமா நாட்டின் வரலாற்று சின்னமாக குறித்த கால்வாய் காணப்படுகிறது. அட்லான்டிக் பகுதியிலுள்ள கப்பல்கள் கொலோன் எனும் பகுதியின் ஊடாக பல மைல்கள் பயணித்து கெடூன் எனும் இடத்தை அடைந்தவுடன் தடுப்பு தொட்டிகளின் ஊடாக கடல் மட்டத்திலிருந்து 85 அடி உயரத்திற்கு உயர்த்தப்பட்டு 32 மைல்கள் வரை பயணித்று மறுகரையிலுள்ள ஹைலாட் பகுதியில் 3 தொட்டிகளின் உதவியுடன் கடல் மட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு மிரப் லொரஸ் பிரதேசத்தின் ஊடாக 11 மைல்கள் பயணித்து பசுபிக் சமுத்திரத்தில் பயணிக்கின்றன. இதற்கு வழியமைத்து கொடுத்தது பனாமா கால்வாயாகும். பனாமாக கால்வாயின் வரலாறு கடந்த 1524 ஆம் ஆண்டு ஆரம்பித்தது. ஸ்பானியர்ளகின் கட்டுப்பாட்டில் தென் அமெரிக்க நாடுகள் இருந்த காலத்தில் கடல்மார்க்கத்தில் பொன்னையும் பொருளையும் குறுக்கு வழி மார்க்கமாக சேர்ப்பத்தில் தேடிய பாதையின் விளைவே பனாமாக கால்வாய்க்கு முதன்முதலில் வித்திட்டது. அதற்கமைய கடந்த 1529 ஆம் ஆண்டு ஸ்பானிய மன்னரால் பனாமாக கால்வாய்;க்கான திட்டமிடல்கள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் கட்டுமான பணிகள் ஆரம்பித்து 1534 ஆம் வருடம் கைவிடப்பட்டது. 1534 ஆம் ஆண்டு  ஐரோப்பாவில் உருவான போர் காரணமாக கைவிடப்பட்டது. எனினும் பல்லாயிரணக்கான உயிர்களை பலிகொடுத்து பல நூறாண்டுகளுக்கு பிறகு குறித்த கால்வாய் திட்டம் அமெரிக்காவினால் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. ஸ்பானியர்கள் பிரித்தானியர்கள் பிரான்ஸ் நாட்டவர்கள், ரஷ்ய நாட்டவர்கள் என பலர் குறித்த கால்வாய் பணிகளை மேற்கொண்டு வெற்றிபெற முடியாத நிலையில் கைவிட்டனர். எனினும் கடந்த 1889 ஆம் ஆண்டு சுமார் 250 மில்லியன் டொலர்கள் செலவில் அமெரிக்க அரசாங்கம் குறித்த பனாமாக கால்வாய் கட்டுமாணத்தினை நிறைவு செய்து வரலாற்றில் இடம்பிடித்தது. பனாமா நாட்டிலுள்ள 51 மைல்கள் நீளமான இரு வழிப் பயணப் பாதைகளையும் 3 படிமுறை உயரங்களையும் கொண்டது பனாமாக கால்வாய்hகும். குறித்த கால்வாய் பல வருட கட்டுமாணத்தின் பின்னர் கடந்த 1914 ஆம் அண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி சர்வதேச கப்பல் போக்குவரத்pற்காக திறக்கப்பட்டது. இதன் கட்டுமாண பணிகளில் தினமும் சராசரியாக 44 ஆயிரம் வேலையாட்கள் முழு நேரம் கடமையாற்றினர். வளைந்தும் நெலிந்தும் செல்லும் பனாமாக கால்வாய் கடல் மட்டத்திலிருந்து 290 அடி ஆழத்திலும் 275 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. பனாமாக கால்வாயின் பெரும்பகுதி சீமெந்தினால் கட்டப்பட்டதாக கட்டுமாணத்திற்கான 5 மில்லியன் தொன் சீமெந்துகள் அமெரிக்காவிலிருந்து கப்பல் மூலமாக  பனாமாவிற்கு எடுத்துவரப்பட்டது. பனாமாக கால்வாயின் இரு மரங்களிலும் 3 சோடி தொட்டிகளும் சீமெந்தினால் கட்டப்பட்டுள்ளன. அதில் அமைக்கப்பட்டுள்ள இராட்சத கதவுகள் வி வடிவில் மூடி திறக்கும் வகையில் அமைக்கப்பட்டுளு;ளன. ஒவ்வொரு கதவுகளும் சராசரியாக 750 தொன் எடை கொண்டவையாகும். மேலும் ஒவ்வொரு கதவுகளும் 64 அடி அகலமும் 7 அடி உயரமும் கொண்டதாகும். குறித்த கதவுகள் அனைத்தும்  மின்சாரத்தின் உதவியுடன் மூடி திறக்கப்படுகின்றன. மேலும் தொட்டிகள் ஒவ்வொன்றும் 110 அடி அகலமும் ஆயிரம் அடி நீளமும் உள்ளனவாகும். ஒரு கப்பலானது பனாமாக கால்வாயை கடப்பதற்கு சராசரியாக 52 மில்லியன் கலன் நீர் தேவைப்படுகின்றது. ஒவ்வொரு தொட்டிகளிலுமுள்ள நீரின் அளவை உயரத்துவதற்கும் தாழ்த்துவதற்கும் சராசரியாக 15நிமிடங்கள் தேவைப்படுகின்றன. தொட்டிகள் ஊடாக கப்பலானது சராரியாக 85 அடி உயரத்திற்கு உயர்த்த அல்லது தாழ்த்துவதற்கு நீர் பயன்படுத்தப்படுகிறது. மேலும் குறித்த பனாமாக கால்வாயை கடப்பதற்கு 8 தொடக்கம் 10 மணிநேரம் எடுக்கும். இதன்காரணமாக அட்லான்டிக் மற்றும் பசுபிக் சமுத்திரத்தையும் கடந்து கப்பல் பயணிப்பதற்கான நேரத்தில் 40 மடங்கு நேரம் மிச்சமாகின்றது. அதிகளவில் ஈரவலய காடுகளைக் கொண்ட பனாமா நாட்டில் மழை வீழ்ச்சிக்கு பஞ்சமில்லை என்பதால் பனாமாக கால்வாயை சுற்றி இயற்கை எழில் கொஞ்சும் பசுமை காடுகளும் இயற்கை மலைத்தொடர்களும் காணப்படுகின்றன. மேலும் கப்பல் போக்குவரத்தினால் விரயமாகும் தண்ணீரை அந்நாட்டின் மழைவீழ்ச்சி ஈடு செய்கிறது. மேலும் வரலாற்று குறிப்புகளின் அடிப்படையில் பனாமாக கால்வாயின் கட்டுமாண காலங்களில் விபத்துக்கள் தொற்றுநோய்கள் தற்கொலைகள் காரணமாக சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மனித உயிர் இழப்புகள் ஏற்ப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. பனாமாக கட்டுமாண காலத்தில் குறித்த பகுதியிலிருந்து தோண்டப்பட்ட மண் கல் பாறை என்பவற்றின் தொகை பூமியின் ஒரு அந்தத்தில் இருந்து மறு அந்தம் வரை 16.2 சதுர அடி பரப்புள்ள துளையிடுவதற்கு சமமானதாக ஒப்பிடப்படுகிறது. மேலும் கால்வாயின் இரு அந்தங்களிலும் 15 அங்கல விட்டமுள்ளதும் 20 மைல்கள் எறிவீச்சு உள்ளதுமான பீரங்கிகள் நிலையாக நிறுவப்பட்டுள்ளன. எனினும் குறித்த பீரங்கிகள் இன்று வரை சுடுவதற்கு பாவிக்கும் நிலை ஏற்படவில்லை. மேலும் பனாமாக கால்வாய்pன் கட்டுமான பணிகளுக்கென 27 ஆயிரம் தொன் எடைகொண்ட வெடிமருந்துகள் பாவிக்கப்பட்டுள்ளன. வருடம் முழுவதும் 24 மணிநேரம் இயங்கும் கால்வாயின் ஊடாக பயணிக்கும் கப்பல்களில் 68 வீதமான கப்பல்கள் அமெரிக்காவிற்கு பயணிப்பதாகும். குறித்த கப்பல் பயணிப்பதற்காக கட்டணத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 349 டொலர்கள் செலுத்தப்பட்டமை வரலாற்று சாதனையாகவுள்ளது. பனாமாக கால்வாயின் ஊடாக கடந்த 1914 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் அண்டு வரை 9 இலட்சத்து 22 அயிரத்திற்கும் அதிகமான கப்பல்கள் பயணித்துள்ளன. இந்நிiயில் கடந்த 1+903 ஆம் ஆண்டு முதல் தனது கட்டுப்பாட்டில் பனாமாக கால்வாயை வைத்திருந்த அமெரிக்கா கடந்த 1977 ஆம் ஆண்டு பனாமா நாட்டுடன் கைச்சாத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த 1990 ஆம் அண்டு டிசம்பர் 31 ஆம் திகதி சம்பிரதாய பூர்வமாக பனாமாவிடம் பனாமா கால்வாயை ஒப்படைத்தது. இந்நிலையில் பனாமா நாட்டினால் நிர்வாகத்திற்கு கொண்டுவரப்பட்ட குறித்த கால்வாய் தற்காலத்தில் பெருகி வரும் நவீன இராட்சத  கப்பல்களையும் உள்வாங்கும் வகையில் நவீனமானதும் மிகவும் விரிவானதுமான கால்வாயுமாக அ மைக்கப்பட்டு வருகிறது கடந்த 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்டுமான பணிகள் எதிர்வரும்  2016 ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது, புதிய கட்டுமாணத்தற்கான உத்தேச செலவு 5.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கட்டப்பட்திலிருந்து வருடம் முழவதம் இயங்கிய பனாமாக கால்வாய் மண்சரிவு அமெரிக்க இராணுவ தேவை கடும் மழை காரணமாக கடந்த 1915 , 1989, 2010 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மூடப்பட்டன. சுமார் 400 வருடத்திற்கு மேலாக கால்வாய் பணிகளின் பயனை தற்போது பனாமா நாடு அனுபவிக்கிறது. மேலும் பனாமா நாட்டின் தேசிய வருமானத்தில் மிகப்பெரும் பங்களிப்பு பனாமா கால்வயின் ஊடாக கிடைக்கப்பெறுகிறது. இவ்வாறு மனிதனின் கட்டுமான வரலாற்றில் வாழ்நாள் வரை வாழ்ந்துகொண்டிருக்கும் பனாமாக கால்வாய இன்றும் என்றும் உலகின் அழியா சொத்துக்களில் ஒன்று… சுழலும் உலகில் வலம் வரும் வசந்த்தின் வலம் வரும் நீங்களும் பனாமாக கால்வாயில் வலம் வர வாழ்த்துக்கள்.....................................பிரசன்னா  

No comments:

Post a Comment

hi