Tuesday, October 9, 2012

சேகுவேரா


சேகுவேரா……

சோசலிச புரட்சி, மார்க்சியவாதம், அரசியல் உள்ளிட்ட பலதுறைகளில் தனது முத்திரையை பதித்து உலகளாவியரீதியில் அறியப்பட்டவர். ஆயுதமற்ற புரட்சியைமுன்னெடுத்து புரட்சியில் தனிமுத்திரை பதித்து உலகில் இன்று அனைவராலும் அறியப்பட்ட புரட்சியாளர் சேகுவேரா. கடந்த 1928ம்  ஆண்டு ஜூன் மாதம் 15 ம் திகதி ஆர்ஜேன்டினாவிலுள்ள உள்ள ரோசாரியோ எனும் இடத்தில் பிறந்தார் சேகுவாரா என அனைவராலும் அழைக்கப்பட்ட ஏணஸ்டோ குவேரா டிலா சேனா ஸ்பானிய பாஸ்கர் ஐரீசிய மரபுவழிகளை கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளையாக பிறந்தவர் சேகுவேரா இவரது குடும்பம். இடது சாரிசார்பான குடும்பமாக இருந்ததன் காரணமாக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்தநோக்கு இவருக்குகிடைத்தது. மேலும் அவரது தந்தைசோசலிசத்தின் ஆதரவாளர் என்பதால் சோஷலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு அதுவழிகாட்டியது. வாழ்க்கை முழவதும் இவரை ஆஸ்மாநோய் பாதித்திருந்தாலும் இவர் சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இளம் வயதிலேயே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் கொண்ட சேகுவேரா கவிதைகள் மீதும் அதிகஆர்வம் கொண்டிருந்தார். குவேராவின் வீட்டில் சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான நூல்கள் காணப்பட்டன. இதுவேஅவரின் தனித்துவமான கருத்துக்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மருத்துவராக  விரும்பிய சேகுவேரா கடந்த 1948 ம் ஆண்டு மருத்துவ படிப்பிற்காக புவனஸ் அயஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அதற்கமையகடந்த 1951 ம் ஆண்டில் தனது படிப்பிலிருந்து ஒருவருட ஓய்வினை எடுத்துக் கொண்ட சேகுவேராதனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்காவிற்கான பயணத்தை ஆரம்பித்தார். இதன்போது அவர் மோட்டார் சைக்கிள் டயரி எனப்படும் நூலையும் எழுதிவெளியிட்டார். ஆயுதம் ஏந்தியபுரட்சி மூலமே சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வுகாண முடியுமென ஷேகுவேராநம்பினார். இதனால் எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்காஎனும் புரட்சிக் கொள்கையை ஷேகுவேரா முன்வைத்தார். தனது கல்வி நடவடிக்கையிலும் கவனம் செலுத்திய ஷேகுவேரா 1953 ஆம் ஆண்டு ஜீன் மாதம் மருத்துவ டிப்ளோமா பட்டத்தை பெற்றார். முற்போக்கு சிந்தனையை கொண்டிருந்த ஷேகுவேராபின்னர் பிடல் கெஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைந்துகொண்டார். 1959 ஆம் ஆண்டுகுறித்த இயக்கம் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. ஷேகுவேரா கியூப அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டார். 1965 ஆம் ஆண்டு கியூபாவிலிருந்து வெளியேறிய ஷேகுவேரா கொங்கோ மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிச போராட்ட வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கினார். உலகிலுள்ள புரட்சி இயக்கங்களினால் மரியாதைக்குரியவராக சேகுவேரா கருதப்படுகின்றார். 1966 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் கெரில்லாபோரை வழிநடத்தும் நோக்கத்துடன் பொலிவியாவிற்குள் நுழைந்த சேகுவேரா பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார். 5 நாடுகளை எல்லையாக கொண்ட பொலிவியாவின் கெரில்லா போராட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் ஏனைய நாடுகளுக்கும் விரிவுபடுத்துவதே சேகுவேராவின் பிரதான நோக்கமாக காணப்பட்டது. பிடல் கெஸ்ட்ரோவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த சேகுவேரா ‘சே’ என்றே அழைக்கப்பட்டார். சே என்பது நண்பர் என்றபொருள் கொண்ட ஆர்ஜன்டின சொல்லாகும். சேகுவேராவின் போரட்ட வலிமையால் அமெரிக்கா உட்பட பலநாடுகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளன. கல்வியறிவும், போராட்டகுணமும் திடகாத்திரமும் கொண்ட சேகுவேராவை கொன்றொழிப்பது இலகுவான காரியம் அல்லவென அவருக்கு எதிரான சக்திகள் உணர்ந்துகொண்டன. எனினும் சேகுவேராவின் புரட்சிக்கு முற்றுப்புள்ளிவைக்க அவரது மரணத்தின் மூலமே முடியுமென அமெரிக்கா திட்டவட்டமாக நம்பியது. இதனால் அமெரிக்க உளவுப் பிரிவு 24 மணிநேரமும் சேகுவேராவை ஒழிப்பதற்கான திட்டத்தில் ஈடுபட்டது. இந்நிலையில் பொலிவியா நாட்டில் வைத்து அமெரிக்கசிறப்பு இராணுவத்தினரால் சேகுவேராகைது செய்யப்பட்டார். அவர் பொலிவியாலுள்ளலாகி குவேரா எனும் இடத்தில் 1967 ஆம் ஆண்டு ஒக்டோர் மாதம் 9 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார். தன்னை கொலை செய்யவந்தவனை பார்த்ததும், கைதியாகவிருந்த நேரத்திலும் கூட சேகுவேரா கொலை செய்யவந்தவனிடம்  “ஒருநிமிடம் பொறுநான் எழுந்துநிற்கிறேன் பிறகுஎன்னை சுடு” என்று கூறிமரணத்தின் போதுவீரனாகவே சேகுவேரா இறந்துள்ளார். உலகில் பல்வேறுபோராட்ட இயக்கங்களில் பல தலைவர்கள் தோன்றியிருந்தாலும் கூட சேகுவேராவை போன்று எந்த ஒருவரையும் போராட்டவீரராக உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. சேகுவேரா மரணித்தபோதும் அவரது கொள்கைகள் இன்றும் பின்பற்றப்படுகின்றன. உலக நாடுகளிலுள்ள பலவாகனங்களிலும் ஏன் இலங்கையில் கூட முச்சக்கரவண்டி முதல் பலவாகனங்களிலும் சேகுவேராவின் முகம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு அவரை கௌரவிக்கும் காட்சியைநாம் காண்கின்றோம். இது சேகுவேராவிற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும். மரணித்தும் இன்னும் உலகமக்களின் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் போராட்டவீரர் சேகுவேராவின் வாழ்க்கை ஓர் சரித்திரமாகும்............................................................................பிரசன்னா

No comments:

Post a Comment

hi