Tuesday, October 9, 2012

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்….



பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்….

ளிமையான தமிழில் பாமர மக்களுக்கும் விளங்க கூடிய வகையில் தனது கருத்துக்களை வெளி;;க்கொணர்ந்தவர். தான் எழுதிய பாடல்கள் மூலம் தமிழ் திரையுலக பாடல்களுக்கு தனி அந்தஸ்த்து தேடி தந்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். கடந்த 1930 ம் ஆண்டு நான்காம் மாதம் 13 ம் திகதி தமிழ் நாட்டின் தஞ்சாவ+ர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகேயுள்ள சங்கம் படைத்தான் காடு எனும் சிற்றூரில் பிந்தார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இவரின் தாய் தந்தை அருணாசலனார் , ரிசாலாட்சி ஆகியோராவார். எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்;. 2ம் ஆண்டு வரையே பள்ளிப்படிப்பை மேற்கொண்டார்.  தனது 19வது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் கொண்ட பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கிராமிய மண்ணைத் தழுவிய பாடல்களில் அதிக ஆர்வம் கொண்டார். தனது தந்தையான அருணாசலனார் கவிதை எழுதும் ஆற்றல் உடையவர். அதேபோல் அவரை வளர்த்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சகோதரரும் கவிதை  பாடுதல் மற்றும் ஒவியத்துறைகளில் சிறந்து விளங்கியமை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தர்த்தின் திறமைகளை இயல்பாகவே வளர்த்துக்கொள்ள வாய்ப்பளித்தது. இளம் வயதிலேயே பாடல்களை பாடுவதில் ஆர்வம் காட்டிய கல்யாண சுந்தரம் நாடகம், சினிமா போன்றவற்றை பார்த்து விட்டு அதிலுள்ள பாடல்களை திறம்பட பாடுவதற்கு பழகிகொண்டார். பகுத்தறிவு கொள்கைகள் கமினியுசிய கொள்கைகள் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.  தனது பாடல்களில் உருவங்களை காட்டமல் உணர்ச்சிகளை வெளிக்காட்டியவர் நாட்டிலிருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக்காட்டியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும் ஆவேசத்தையும்  உணர்ச்சி பொங்க தனது பாடல்களில் வெளிக்கொணர்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். கடந்த 1955 ம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலையேற்றி அத்துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார். மேலும் நாடகத்துறையில் ஈடுபாடு கொண்ட அவர் பல நாடகங்களிலும் நடித்திருந்தார். திரையுலகில் அவர் எழுதிய அனைத்து பாடல்களும் முத்தான பாடல்களாக அமைந்தது. இவரது பாடல் எழுதும் திறன் சமூக கருத்துக்கள் நிறைந்த வரிகள் என்பன அனைவரையும் வெகுவாக கவர்;ந்தன. அதனைத்தொடர்ந்து கடந்த 1957 , 58 ம் ஆண்டு காலப்பகுதிகளில் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன் ஆகியோர் நடித்த திரைப்படங்களில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்கள் இடம்பெற்றன. எம்.ஜி.ஆரின் முதல் சொந்த படமான நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு கல்யாண சுந்தரம் எழுதிய பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றிபெற்றன. அதில் தூங்காதே தம்பி தூங்காதே எனும் பாடல் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அவரின் பாடல் திறனைக் கண்டு கவிஞர் கண்ணதாசன் அவரை புகழ்ந்து  பாராட்டியுள்ளார். திரையுலகில் பாட்டு எழுதுவோர் வரலாம் போகலாம் ஆனால் ஒரு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் இனி வரமாட்டான். ஆரம்பமானான் ஒரு பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்கினான் மண்ணுக்குள்ளே…திரையுலகில் அவனே தத்துவ ஞானி! ஆழ்ந்த சிந்தனை, அழுத்தமான சொல்லாட்சி, ஒருவரிக்கு ஒருவரி உயிர்கொடுக்கும் தன்மை அவன் எழுதிய எல்லா பாடல்களிலும் உள்ளதென கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார். தனது கவிதை வளர்ச்சிக்கும் திரைப்பட உலக பிரவேசத்திற்கும் துணையாக பாரதிதாசன் விளங்கியதால் தன்னுடைய கவிதை, கடிதம உள்ளிட்டவற்றை எழுதும் போது முதலில் பாரதிதாசன் துணை என எழுதுவது அவரது வழக்கம்.   அவர் புகழின் உச்சியிலிருந்த போது கடந்த 1959 ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் மீண்டும் தனக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக சென்னை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 1959 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ம் திகதி தனது 29 வயதில் இறையடிசேர்ந்தார். அவரது மனைவியின் பெயர் கௌரவாம்பாள் அவருக்கு அவர் உயிரிழந்த போது 5 மாத கைக்குழந்தையொன்றும் இருந்தது. குறுகிய காலத்தில் பரந்த சிந்தனையை உருவாக்கி பல பாடல்களை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தமிழ் உலகிற்கு மிகப்பெரிய இழப்பு….இந்நிலையில் அவரை கௌரவப்படுத்துவதற்கு அவரது மறைவிற்கு பின் கடந்த 1981 ம் ஆண்டு தமிழக அரசில் பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படுவதாக அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.அறிவித்தார். இதேவேளை கடந்த 1955 ம் ஆண்டு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டது. மேலும் அவரின் நினைவை போற்றும் வகையில் இந்திய தஞ்சாவ+ரில் தமிழக அரசினால் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணி மண்டபம் அமைக்கப்பட்டது. 29 வருடங்கள் மாத்திரமே இவ்வுலகில் வாழ்ந்த புரட்சி கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மக்களின் வாழ்வியலில் எழுச்சி வரணே;டுமென பாடுபட்டவர். பட்டு;க்கோட்டை கல்யாண சுந்தரம் என்றும் மக்கள் மனதில்… நீங்காத நினைவுகளாய்;….......................................................................................................................பிரசன்னா 

No comments:

Post a Comment

hi