சார்லி சாப்ளின் (28.10.2012)
திரையுலகிற்கு நகைச்சுவை பாத்திரத்தை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். இவரை திரையில் பார்க்கும் போதே துன்பங்கள் நீங்கி , உள்ளங்கள் சிரிக்குமளவில் தன் நகைச்சுவையால் அனைவரையும் கவர்ந்த ஒருவர். நடிகர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் என பல பரிமாணங்களில் வெற்றிபெற்று இன்றும் நகைச்சுவையின் முகவரியாக காணப்படுபவர் சார்ளி சாப்ளின். இவர் , கடந்த 1889 ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 16 ம் திகதி , இலண்டனில் வால்வோர்த் சார்ள்சுக்கும், ஹனா ஹரியாத் ஹில்லுக்கும் மகனாக பிறந்தார் சார்ள்ஸ் ஸ்பென்சர் சாப்ளின் எனப்படும் சார்ளி சாப்ளின். இவரது தாய் , தந்தையருக்க்pடையில் பிரிவு ஏற்பட , சிறுவயதிலேயே தாயின் பராமரிப்பிலேயே சார்ளி சாப்ளின் வளர்ந்தார். இந்நிலையில் கடந்த 1896 ம் ஆண்டில் ,வேலையெதுவும் கிடைக்காத நிலையில், சார்ளியும் , அவரது சித்தியும் லம்பெத்திலுள்ள வேர்க் ஹவுஸ் ஒன்றில் தங்கியிருந்த தங்களது வாழ்க்கையினை கொண்டுசென்றனர். இதனிடையே அவரது தந்தை , சார்ளி சாப்ளினுக்கு 12 வயதாகும் போது, உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து மன உளைச்சலுக்குள்ளான அவரது தாய், சிறிது காலத்தில் உயிரிழந்தார். அதனையடுத்து, தனது வாழ்க்கையை தானாகவே நடத்திக்கொள்ள வேண்டிய கட்டத்திலிருந்த சார்ளி சாப்ளின், நாடகங்கள் நடித்தல், மேடைகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றல் என தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். சாப்ளினுக்கு 5 வயதாகும்போதே , அவர் தனது தாயின் உதவியுடன் நடிப்புத்துறையில் களமிறக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து பல்வேறுபட்ட வேடங்களில் நடித்த சார்ளி சாப்ளின், தனது தாயின்வழிகாட்டலுக்கமைய நடிப்புத்துறையையே தெரிவுசெய்தார். இந்நிலையில் சாப்ளினின் நடிப்புத்திறமையினை பார்த்த தயாரிப்பாளர் மேக் செனட் , அவரது நிறுவனமான கீஸ்டோன் திரைப்பட நிறுவனத்தில் சாப்ளினை இணைத்துக்கொண்டார். அதில் கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்திய சார்ளி சாப்ளின், பின்னர் கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார். அதிலும் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்த சார்ளி சாப்ளின், மக்கள் மனதில் வேகமாக இடம்பிடித்து தனக்கென ஒரு பாணியினை உருவாக்கினார். மேலும் அவர் குறித்த நிறுவுனத்தில் ஆரம்பத்தில் 150 டொலர்களை மாத்திரமே ஊதியமாக பெற்றவந்த நிலையில், தனது அபரிதமான வளர்ச்சியினால் கடந்த 1917 ம் ஆண்டுகளில் ஒரு மில்லியன் டொலருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். குறித்த நிறுவனத்தில் தொழில்புரியும்போதே அவர் புதிய படைப்புக்களை இயக்கவும், அவற்றை வெளியிடவும் தனது திறமையால் அனுமதி பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து தனது அனுபவங்களை பயன்படுத்தி , கடந்த 1919 ம் ஆண்டு, யுனைட்டன் ஆர்ட்டிஸ்ட் எனும் கலையகத்தை ஆரம்பித்தார். இந்நிலையில் திரையுலகில் கதை வசனமின்றி, தனது உடல் அசைவினாலும் தன்னிகரற்ற நடிப்பினாலும், நகைச்சுவைகளை வெளிப்படுத்தி , அதன்மூலம் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு கலைஞராக சார்ளி சாப்ளின் வளர்ந்தார். கடந்த 1927 ம் ஆண்டிலேயே , பேசும் திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்திருந்தன. எனினும் கடந்த 1930 ம் ஆண்டு வரை சாப்ளின் பேசும் படங்களிலிருந்து ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் சார்ளி சாப்ளின் , முதன்முதலில் நடித்த பேசும் திரைப்படம் , கடந்த 1940 ம் ஆண்டு வெளியான த கிரேட் டிக்டேட்டர் எனும் திரைப்படமாகும். குறித்த திரைப்படமானது ஹிட்லரையும், அவரது கொள்கையையும் எதிர்த்து குரல்கொடுத்த படமாகும். குறித்த திரைப்படம் அமெரிக்க , 2 ம் உலகப்போரிற்கு செல்வதற்கு முன்பதாக வெளியிடப்பட்டது. குறித்த திரைப்படத்தில் சாப்ளின் ஹிட்லர் மற்றும் ய+த இனத்தை சேர்ந்த ஒருவராக இரட்டை வேடம் கொண்டு நடித்திருந்தார். குறித்த திரைப்படத்தை ஹிட்லர் இரண்டு முறைகள் பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவர் திரைப்படங்களில் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்கவைத்திருந்தாலும், இவரது வாழ்க்கை சற்று கடினமான வாழ்க்கையாகவே அமைந்தது. இவரது திருமணங்கள் அனைத்தும் விவாகரத்திலேயே சென்று முடிந்தது. மேலும் இவரது திரையுலக வெற்றிகள் மூலமாக இவருக்கு கிடைத்த புகழ் பலமுறை அவரது தனிப்பட்ட வாழ்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. சாப்ளின் கடந்த 1918 ம் ஆண்டு, தனது 28 ஆவது வயதில் 16 வயதுமிக்க மில்ட்ரெட் ஹாரிசை திருமணம் முடித்தார். எனினும் கடந்த 1920 ம் ஆண்டு இருவருக்குமிடையில் , விவாகரத்து ஏற்பட்டுது. பின்னர் தனது 35 ஆவது வயதில் 16 வயதான லீடா கிரே என்பவரை கடந்த 1924 ம் ஆண்டு திருமணம் முடித்துக்கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்த நிலையில் , இவர்களது வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்தது. மேலும் குறித்த திருமண வாழ்க்கையானது ஒப்பந்த அடிப்படையில் நிறைவுபெற வருமான வரி சிக்கல்களினாலும் மன அழுத்தத்தினாலும் பெருமளவில் பாதிக்கப்பட்ட சார்ளி சாப்ளின், தனது நகைச்சுவை பாத்திரத்தில் ஒருபோதும் இவற்றை வெளிப்படுத்தியதில்லை. இதனிடையே சாப்ளின் தொடர்பாக பல அந்தரங்க விடயங்கள் நீதிமன்றத்தினால் வெளியிடப்பட, அவர் மீதான எதிர்ப்பு பிரச்சாரங்கள் ஆரம்பமாகின. இந்நிலையில் சாப்ளின் தனது 47 ஆவது வயதில் , கடந்த 1936 ம் ஆண்டு பாலட் கொடர்டை ரகசியமாக திருமணம் முடித்துக்கொண்டார். சில வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த இவரது திருமண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிவடைந்தது. பின்னர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சார்ளி சாப்ளின், தனது புகழை இழக்கும் தருவாய்க்கு சென்றார். இதேவேளை பின்னர் தனது 54 ஆவது வயதில், கடந்த 1943 ம் ஆண்டு சார்ளி சாப்ளின் 17 வயதான ஓணா ஓணீ என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 8 குழந்தைகள் பிறந்து அதன்பின், சீரான திருமண வாழ்க்கை சாப்ளின் மேற்கொண்டாலும், அவர் மீது எழுந்த ஒவ்வொரு கசப்பான அனுபவங்களும் அவரை , மேலும் பாதித்தது. இதனிடையே இவரது திரைப்படங்களில் பாட்டாளிகள் மற்றும் ஏழைகளின் கவலைக்கிடமான நிலைமையினை சித்தரித்து காட்சிகள் அமைக்கப்பட்டதன் காரணமாக அவர் அமெரிக்க கொள்கைளுக்கு புரம்பான நடவடிக்கைளில் ஈடுபடுவதாகவும், அவர் கம்ய+னீசிய வாதியெனதும் சந்தேகிக்கப்பட்டார். மேலும் அவரை கண்காணிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, அமெரிக்காவில் சாப்ளின் வாழும் உரிமையை நீகக்வும் முயற்சிகள் இடம்பெற்றன. சார்ளி சாப்ளின் பெற்ற வெற்றிகள் அனைத்தும் அமெரிக்காவில் பெறப்பட்டவையென்றாலும், அவர் பிரித்தானிய குடியுரிமையுள்ள ஒரு நபராகவே வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 1952 ம் ஆண்டில் சார்ளி சாப்ளின் , இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அவர் அங்கிருந்து நாடு திரும்புவதை தவிர்ப்பதற்கு சூழ்ச்சிகள் இடம்பெற்று அவர் அமெரிக்கா திரும்புவதற்கான அனுமதிச்சீட்டு இரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக அவர் ஐரோப்பாவிலேயே தங்கி வாழ்ந்ததோடு, பெரும்பாலும் வெவே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிலேயே வாழ்ந்தார். இந்நிலையில் இவர் கடந்த 1977 ம் ஆண்டு, தனது 88 ஆவது வயதில் , டிசம்பர் மாதம் 25 ம் திகதி , உயிர்நீத்தார். இவரது உடல் வார்ட் நகரிலுள்ள கல்லரையில் அடக்கம் செய்யப்பட்டது. எனினும் அவரது குடும்பத்தாரிடம் பணம் பரிப்பதற்காக , இவரது உடல் கல்லரையிலிருந்து திருடப்பட்டது. எனினும் திருடர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டு, அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. அவர் 2 முறை சிறப்பு ஓஸ்கார் பெற்ற பெருமைக்குரியவராவார். த சக்சஸ் மற்றும், த ஜாஸ் சிங்கர் ஆகிய திரைப்படங்களுக்காக இவருக்கு ஒஸ்கார் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 1975 ம் ஆண்டு மார்ச் மாதம் 4 ம் திகதி பிரித்தானியாவின் 2 ம் எலிசபெத் அரசியினால் சாப்ளினுக்கு சேர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் கடந்த 1985 ம் ஆண்டு அவரை கௌரவிக்கும் நோக்கில் , இங்கிலாந்து அரசு இவரது உருவத்தை அஞ்சர் தலையொன்றில் வெளியிட்டு பெருமையளித்தது. இதேவேளை கடந்த 1994 ம் ஆண்டு ,அமெரிக்க அஞ்சர் தலையொன்றிலும் இவரது உருவம் பொறிக்கப்பட்டது. இதனிடையே சார்ளி சாப்லினின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில், கடந்த 1992 ம் ஆண்டு சாப்ளின் எனும் திரைப்படமும் வெளியிடப்பட்டது. இதனிடையே கடந்த 2005 ம் ஆண்டு நடைபெற்ற நகைச்சுவையாளர்களின் நகைச்சுவையாளர் எனும் கருத்துக்கணிப்பில் உலகத்தின் தலைசிறந்த 20 நகைச்சுவை நடிகர்கர்களில் ஒருவராக சாப்ளின் தெரிவுசெய்யப்பட்டார். நகைச்சுவை என்ற ஒரு விடயத்தை திரைப்படத்துறையில் அறிமுகம் செய்து, வசனங்களின்றி தன் உடல் அசைவினால் கோடிக்கணக்கான உள்ளங்களை சிரிக்க வைத்து, அனைவரது மனதிலும் இடம்பிடித்து, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சொந்த வாழ்க்கையில் எத்தனையோ சோகங்களை சுமந்தாலும் , மக்களை தங்களது கவலை மறந்து சிரிக்கசெய்த சார்ளி சாப்லின் ஒரு சகாப்தம்............................................................................................................பிரசன்னா
No comments:
Post a Comment
hi