Thursday, October 4, 2012

உலக அமைதிநாள்


உலக அமைதிநாள்… 21.09.2012

னித உள்ளங்களில்தான் போர் தோன்றுவதனால் மனித உள்ளங்களிலதான் அதைமிக்கான அரண்களும் அமைக்கப்பெறல் வேண்டும் என்பது யுனஸ்கோ அமைப்பின் முகவுரை வாசகம். ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் பிரகடனத்தின் மூலம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 21 ம் திகதி உலக அமைதிநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. குறித்த அமைதிநாளானது கடந்த 1981 ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத்தில் வரும் 3 வது செவ்வாய்க்கிழமைகளிலேயே கொண்டாப்பட்டு வந்தது, எனினும் கடந்த 2002 ம் ஆண்டிலிருந்து உலக அமைதிநாளானது ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 21 ம் திகதி கொண்டாடப்பட்டுவருகிறது. அமைதி என்பதற்கு தமிழில் பல அர்த்தங்கள்  காணப்படுகின்றன. யுத்தம், பகைமை, வன்முறை என்பவற்றிற்கு எதிர்ச்சொல்லாக அமைதி பயன்படுத்தப்படுகிறது. அமைதியென்பது தற்கால பயன்பாட்டில் பகைமை இல்லாத நிலையை குறிக்கும் மகாத்மா காந்தியின் கூற்றின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட  சமூகமொன்றில் வன்முறைகள் இல்லாமல் இருக்கலாம் ஆனால் சமூக நீதியின்மை காரணமாக அங்கே அமைதியிருப்பதாக கருதமுடியாது எனும் அமைதி குறித்த நோக்கினை மகாத்மா காந்தி கொண்டிருந்தார். அதனடிப்படையில் அமைதிக்கு வன்முறை இல்லாமை மாத்திரமன்றி நீதியும் இருக்க வேண்டியது அவசியமென உணர்த்தப்பட்டது. உலகின் சகல முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது சமாதானமாகும். வரலாற்றில் இவ்வுலகம் பல யுத்தங்களை கடந்து வந்துள்ளது. 20 ம் நூற்றாண்டில் நடைபெற்ற இரண்டு உலக மகா யுத்தங்கள் கோடிக்கணக்கான உயிர்களையும் சொத்துக்களையும் பலியடுத்தன. அதற்கமைய 2ம் உலக மகா யுத்தத்தின் பின்னர் கடந்த 1945 ம் ஆண்டு உலக சமாதானத்திற்காக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் நிறுவப்பட்டது. குறித்த ஸ்தாபனத்தினால் உலக நாடுகளிடையே ப+சல்களையும் போர்களையும் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் அவர்களால் இதுவரை துப்பாக்கிகளுக்கும் குண்டுகளுக்கும் ஓய்வு கொடுக்க முடியும். அதனடிப்படையில் உலகில் நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் பாரிய பொறுப்பு யுனஸ்கோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனிடையே உலக சமாதான முயற்சியொன்றின் போது கடந்த 1961 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக இருந்த ஹாமர்சீல்ட் விமான விபத்தொன்றில் உயிரிழந்தமை வரலாற்று சுவடாகும். அவர் உயிர்;த்துறந்த செப்டம்பர் மாதம் 3 ம் வாரத்தில் செவ்வாய்க்கிழமையே உலக அமைதிநாளக கடைப்பிடிக்கப்பட்டு வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை விஞ்ஞானத்தின் மிக சிறந்த விஞ்ஞானியாக கருதப்படும் அல்பேர்ட் ஐன்ஸ்றீன் படைகொண்டு அமைதியை ஏற்படுத்த முடியாது நல்லுணர்வால்தான் அதனைப் பெறமுடியும் என தெரிவித்தார். இந்தநோக்கத்தில் யுனஸ்கோ நிறுவனம் பாரிய முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புக்களை முன்னெடுத்து வருகின்றது. உலக மக்களை இனம் , பால், மொழி, சமயபேதமின்றி ஐநா சாசனத்தில் உறுதிசெய்யப்படுகின்ற நீதிக்கும் சட்டஆட்சிக்கும் மனித உரிமைகளுக்கும் அடிப்படை சுதந்திரங்களுக்கும் உலகளாவிய நன்மதிப்பை வளர்ப்பதற்கென கல்வி அறிவியல் பண்பாடு மூலமாக நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தி சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் பாடுபடுவதே யுனஸ்கோ அமைப்பின் நோக்கமாகும். அதாவது யுனஸ்கோவின் பணி கல்வி, அறிவியல், பண்பாட்டு தொடர்களின் வழியாக  உலக சமாதானம் மனித இனத்தின் பொது நலன் ஆகிய குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும் இதுவே அவ்வமைப்பின் குறிக்கோள்களாகும். இதே குறிக்கோள்களின் பெயரிலேயே ஐநா அமையமும் ஐநா சாசனமும் நிறுவப்பட்டது. மனித உரிமைகளையும் கடமைகளையும் செயற்படுத்துவதற்கு இன்றியமையாது தேவைப்படுகின்ற விடயம் சமாதானமாகும். அதாவது குடிமக்கள் அனைவரும் முதன்மை பெறும் ஒருங்கிணைந்து வாழும் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளும் சுதந்திரமான , நியாயமான சட்ட ஆட்சியுடைய சமத்துவம் ஒருமைப்பாடு என்பதுதான் சமாதானமாகும். சமாதானம் மேம்பாடு ஜனநாயகம் போன்ற மூன்றும் ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன. கடந்த 5 தசாப்தங்களாக பயங்கரவாதம் என்ற போர்வையில் அமைதிக்கான அச்சுறுத்தல்கள் ஏற்பட்ட வண்ணமே உள்ளன சமாதானம் என்பது கோட்பாட்டில் மாத்திரம் நின்று விடாது செயற்பாட்டால் இயங்கும் போதுதான் அது அர்த்தமுள்ளதாகும்.சமதானம் என்பது மாறுபாடுகளின் சேர்க்கை.. கலாசாரங்களின் இனக்கலப்பு,.. அது அறுவக்கோட்பாடு அல்ல , மாறாக பண்பாட்டு அரசியல் சமூக பொருளாதார சூழல்களில் ஆழமாக வேரூன்றிய ஒன்றாகுமென அறிஞர் கால்ரோஸ் பியுண்டஸ் தெரிவித்துள்ளார்.  உலகளாவிய ரீதியில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வந்த காலம் முதல் சமாதானத்திற்கான பங்களிப்பு வழங்கியோருக்கும் நிறுவனங்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் போரின் காரணமாக உலக மக்களுக்கு ஏற்பட்ட சொல்ல முடியாத துயரங்களை எவராலும் இதுவரை தடுத்து நிறுத்த முடியவில்லை.. போர் உணர்வினை சமாதான உணர்வாக மாற்றமுடியுமானால் அது உலகளாவிய கிராமத்தின் மிக உன்னத சாதனமாக அமையும்.. உலகில் உன்னத படைப்புக்களான மனித இனத்தை சேர்ந்த நாம் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் சாதிகளுக்கும் இடையிலும் பிரதேசங்களுக்கிடையிலும் வேற்றுமைகளை பார்த்து அழகான இந்த உலக வாழ்வை அழிவுமிக்கதாக மாற்றுவதே தடுக்க வேண்டும்…எமக்குள் இருக்கும் போர் குணங்களையும் முரண்பாட்டு குணங்களையும் இல்லாதொழித்து வாழும் வரை இன்பத்தின் சொர்க்கமாகு இருக்கும் இந்தப+மியில் அமைதியை பேணி சமாதானமான வாழ்க்கையை வாழ முயற்சிப்போம்…....................................................................................................பிரசன்னா

No comments:

Post a Comment

hi