Sunday, October 21, 2012

சர்வாதிகாரி ஹிட்லர்….

சர்வாதிகாரி ஹிட்லர்….


யுத்தம், வீரம், சர்வாதிகாரம், என்ற வார்த்தைகளை கேட்கும்போதெல்லாம் இவரின் பெயர் , அவ்வப்போது அனைவரையும் ஞாபகப்படுத்திச்செல்லும், 2 ம் உலக மகா யுத்தம் இடம்பெறுவதற்கும்,  சுமார் 20 கோடி பேருக்கு மேல் உயிரிழப்பதற்கும், காணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். இன்றும் , சர்வாதிகார ஆட்சியென்று சொல்வதற்கு பதிலாக, அனைவரும் ஹிட்லரின் ஆட்சி என்று சொல்லுமளவுக்கு, வரலாற்றில் இடம்பிடித்தவர், ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லர். இவர் , கடந்த 1889 ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 20 ம் திகதி  வடஆஸ்திரியாவிலுள்ள பிரானோ எனும் ஊரில், எலோய்ஸ்; ஹிட்லர், கிளாரா போல்ஸ் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் ஹிட்லர். தான்   பிறந்தது முதலே, நோயுற்றவராக இருந்த ஹிட்லர், அடிக்கடி சுகயீனமுற்ற நிலையில், பிறந்து ஒரு வருடத்திற்கு பின்னரே சீரான உடல்நிலையை பெற்றார். மேலும் தனது தாயின் மீது ஹிட்லர், அதிக பக்தியும் , பாசமும் கொண்டவராக காணப்பட்டார். இதேவேளை தனது தந்தையின் மூன்றாவது மனைவியின் பிள்ளையான ஹிட்லர், தந்தையின் ஏனைய மனைவிமார்களின் துன்புறுத்தல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் இளம் வயதிலேயே உள்ளாகியிருந்ததாக,  தனது மெயின் கேம் எனும் சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தார்.  ஹிட்லர் பாடசாலையில் படிக்கும்போது, வகுப்பில் முதல் மாணவனாக வரும் அளவிற்கு, கல்வியில் சிறந்து விளங்கினார். எனினும் அவர் 6 ம் வகுப்பிற்கு பின்னர் , கல்வியில் சோபிக்காத நிலையில் , படிப்பில் ஆர்வம் குறைந்து , சித்திரங்கள் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. அதன் காரணமாக அழகான ஓவியங்களை வரைவதற்கான ஆற்றலை சிறுவயதிலேயே பெற்றார். மேலும் மாணவப்பருவத்திலேயே நாவல்கள் படிக்கும் ஆர்வம் கொண்ட அவர், போர்கள் பற்றிய கதைகளில் அதிக நாட்டம் கொண்டிருந்தார்.  இந்நிலையில் கடந்த 1903 ம் ஆண்டில் ஹிட்லரின் தந்தை இறந்தபிறகு தந்தையின் கண்டிப்பு இல்லாமல்  வளர்ந்த ஹிட்லர் நாட்கள் செல்ல , முரடனாக மாறினார். மாணவர்கள், ஆசிரியர்களுடன் சண்டையிடும் அளவிற்கு, தனது மனநிலையை மாற்றியமைத்துக்கொண்டார்.  தனது 17 ஆவது வயதில் கல்லூரி இறுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஹிட்லர்,  தனது முரட்டுத்தனத்தினால் கணக்கின்றி ,  கல்வியினை புரக்கணித்தார்.  இந்நிலையில் தனது கல்லூரி தேர்வினை பயன்படுத்தி, கடந்த 1907 ம் ஆண்டில் ஓவியக்கல்லூரியில் இணைய முயன்றபோதும் , ஹிட்லருக்கு அனுமதி கிடைக்கவில்லை. பின்னர், அதேயாண்டில் தனது தாய் இறந்துபோக  மனமுடைந்த ஹிட்லர் , ஓவியங்களை வரைந்து தனது வாழ்வாதாரத்தை மேற்கொண்டார்.  இவரின் ஓவியங்கள் மக்களிடம் நன்மதிப்பு பெற்றதன் காரணமாக சொந்தமாக ஓவியக்கூடமொன்றை அமைத்து , வாழ்க்கையை  தொடர்ந்தார். இதனிடையே, சிந்தியா எனும் பெண்ணை காதலித்த ஹிட்லருக்கு காதல் தோல்வி ஏற்பட, ஹிட்லர் இராணுவத்தில் இணைந்துகொண்டார். அதற்கமைய முதலாம் உலகப்போரின் போது ஜேர்மனி இராணுவத்தில் இணைந்து, பணியாற்றினார். அதற்கமைய கடந்த 1918 ம் ஆண்டு, முதலாம் உலகப்போரில் ஜேர்மனி தோல்வியடைந்தது.  தோல்விக்கு ஜனநாயக வாதிகளும் , ய+தர்களும் தான் காரணமென நினைத்த ஹிட்லர் , உலகம் முழவதையும் ஜேர்மனியின் ஆதிகத்தின்கீழ் கொண்டுவர வேண்டுமென விரும்பினார். பேச்சு வல்லமை மிக்கவரான ஹிட்லர் , தேசிய சோசலிஸ்ட் ஜேர்மனி தொழிலாளர் கட்சியில் இணைந்து, தனது பேச்சுவல்லமையினால் குறுகிய காலத்தில், கட்சியின் தலைமைப்பதவியை வகித்தார்.  இந்நிலையில் நாட்டின்  நிர்வாகம் சீரற்ற காணப்படுவதாக சுட்டிக்காட்டி ,  அரசாங்கத்திற்கெதிராக மக்களை தூண்டிவிட்டு, ஆட்சியை கைப்பற்ற முயன்ற ஹிட்லருக்கு தோல்வியே கிடைத்தது.   அதன் காரணமாக அப்போதைய ஜேர்மனி அரசாங்கம் அவரை கைதுசெய்து, 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும்,  பின்னர் அது ஓராண்டு தண்டனையாக குறைக்கப்பட்டது. சிறையில் இருந்தபோதே ஹிட்லர் எனது போராட்டம் எனும் பெயரில் தனது சுயசரிதையை எழுதினார்.  தொடர்ந்தும் தனது முயற்சிகளை மேற்கொண்ட ஹிட்லர் , தனது கட்சியின் பெயரை , நாசிக்கட்டி என மாற்றி, நாடு முழுவதிலும் அரசாங்கத்திற்கெதிராக கிளர்ச்சிகளை ஏற்படுத்தி, மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார். இவருடைய இராஜதந்திரங்கள் வெற்றிபெற்ற நிலையில் , அரசாங்கத்திற்கெதிராக மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பாராளுமன்ற கட்டிடம் இடித்து எரிக்கப்பட்டதோடு,  அப்போதைய ஜேர்மனி ஜனாதிபதியாக இருந்த ஹில்ட்டன் பேர்க், மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்தார்.  இந்நிலையில் கடந்த 1933 ம் ஆண்டு, ஜனவரி  மாதம் 30 ம் திகதி , ஜனாதிபதி ஹில்ட்டன் பேர்க்,  ஹிட்லரை அந்நாட்டின் பிரதமராக நியமித்தார். இந்நிலையில் ஜனாதிபதி ஹில்ட்டன் பேர்க்,  மரணமடைய , ஜனாதிபதி பதவியை கைப்பற்றிக்கொண்ட ஹிட்லர்  ஜேர்மனியின் சர்வாதிகாரியானார்.  பாராளுமன்றத்தை கலைத்து, இராணுவத்திணைக்களத்தினையும், இராணுவ தளபதி பதவியினையும் தானே ஏற்றுக்கொண்டார். அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் தடை செய்து,  ஜேர்மனியில் இனி , ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லையென அறிவித்தார். அவரின் ஆட்சிக்காலத்தில் தினமும் சராசரியாக 6 ஆயிரம் தொடக்கம், 10 ஆயிரம் பேர் வரை விஷப்புகையிட்டு கொல்லப்பட்டனர். ஹிட்லரால் சுமார் 50 லட்சதம்திற்கும் அதிகமான யூதர்கள் கொல்லப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுளளது.  மேலும் கடந்த 1939 ம் ஆண்டு, அல்பேனியா , செக்கோச்லோவாக்கியா  ஆகிய நாடுகளை கைப்பற்றிய ஹிட்லர் , போலந்து நாட்டின் மீது படையெடுத்தார். இதனால் 2 ம் உலக மகாயுத்தம் ஆரம்பமாகியது. ஆரம்பத்தில் உலக மகா யுத்தத்தில் ஹிட்லரின் கைகள் ஓங்கியிருந்தது. எனினும் ஜேர்மனிக்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்த பின்னர் ஹிட்லரின் ஆதிக்கம் குறைவடைந்து ஜேர்மனி தலைநகரான பேர்லினில் ஹிட்லர் சுரங்கம் அமைத்து மறைந்து வாழ்ந்தார். இந்நிலையில் கடந்த 1945 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பேர்லின் நகர் மீது ரஸ்யா விமான குண்டுகளை வீசியதன் காரணமாக ஹிட்லரின் பாதாள சுரங்கம் சிறியளவிலான பாதிப்புக்குள்ளாகியது. இந்நிலையில் தனது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்த சர்வதிகாரி ஹிட்லர் மரண சாசனம் ஒன்றை எழுதினார். அதில் பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கப்பட்ட நிலையில் “நான் எந்த ஜேர்மன் நாட்டு மண்ணுக்காக கடந்த 12 வருடங்களாக பாடுபட்டுவந்தேனோ இந்த ஜேர்மன் மண்ணிலேயே என்னையும், எனது காதலி ஈவாவையும் உடனே எரித்துவிடுங்கள் என குறிப்பிட்ட விடயம் அனைவரையும் சற்று சிந்திக்க வைத்தது. இந்நிலையில் கடந்த 1930 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ம் திகதி இரவு 9 மணியளவில் இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வதிகாரி முசொலினியும் அவரது மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியறிந்த ஹிட்லர் முகம் வாடினார். மேலும் அன்றிரவு 12 மணியளவில் பேர்லின் நகரம் முற்றிலுமாக ரஷ்ய படைகள் வசமாகிவிட்டதெனவும் ஹிட்லர் வசித்து வந்த சுரங்க மாளிகை தகர்க்கப்படலாமெனவும் அவருக்கு செய்தி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தனது உதவியாளர்களை அழைத்த ஹிட்லர் நானும் ஈவாவும் ஒன்றாக இறந்து விடப்போகின்றோம் நாங்கள் இறந்த பின் எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுற்றி எரித்து சாம்பலாக்கிவிடுமாறு அறிவித்தான், சிறிது நேரத்தில் தனது காதலியை அழைத்து அறைக்குள் சென்ற ஹிடலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். அவரது காதலி சைனட் அருந்தி அதே இடத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரினதும் உடல்கள் உதவியாளர்களால் எரிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் குறித்த இடத்திற்கு வந்த ரஷ்ய படைகள் அவரின் நடவடிக்கையினை பார்த்து திகைத்துப்போனதாக குறிப்பிடப்படுகிறது. ஹிடலர் ஈவ் இரக்கமின்றி மனித கொலைகளை செய்த கொடியவராக இருந்தாலும் சில நல்ல குணங்களும் அவர் வசப்பட்டது. அவருக்கு புகைப்பிடித்தல் பழக்கமோ, மாமிசங்கள் உண்ணும் பழக்கம் இல்லையென வரலாற்று சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. சர்வதிகாரி எனும் சொல்லிற்கு மறுமொழியாக தன்பெரை வரலாற்றில் பதிய செய்து உலக வாழ்க்கையை முடித்துக்கொண்ட ஹிட்லர் இன்றும் உலக மக்கள் மனதில் சர்வதிகாரியாகவே வாழ்கிறார். ................................................................பிரசன்னா  



No comments:

Post a Comment

hi