தஞ்சை பெரும்கோயில்
தமிழ் மக்களின் பாரம்பரிய சமய பண்பாட்டு கோட்பாடுகளை உலகளாவிய ரீதியில் பரப்புவதற்கு மிகப் பெரிய பங்குவகித்த வரலாற்று சின்னம் இந்து மதத்தவரின் உருவ வழிபாட்டின் கோட்பாட்டிற்கமைய அவர்களின் பாரம்பரியம் மற்றும் சமயத்தின் தொன்மை என்பவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டும் இந்து மதத்தின் ஆதார சின்னமாக விளங்குவது தஞ்சை பெரும்கோவில். இந்திய தமிழ் நாட்டின் தஞ்சாவ+ர் எனும் ஊரில் தமிழர்களின் கலை, கலாசாரம், கற்பனை, சிற்ப திறனை எடுத்துக்காட்டும் சின்னமாக தஞ்சை பெரும் கோயில் அமைந்துள்ளது. கடந்த கி.பி. 986 ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ராஜராஜ சோளமன்னா சேர,பாண்டிய, பல்லவ, சாலூக்கிய மன்னர்களை வெற்றிகொண்டு அவர்களின் நாடுகளை தன்வசப்படுத்தினார். இந்நிலையில் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்த நகர் அனைத்தையும் ஒன்றுசேர்த்து தனது புகழை பரப்புவதற்காக அமைக்கப்பட்ட கோயிலே தஞ்சை பெரும் கோவிலாகும். அதனடிப்படையில் கிறிஸ்த்துவுக்கு பின் 1003 ம் ஆண்டில் தொடங்கிய தஞ்சை பெரும் கோவிலின் கட்டுமான பணிகள் கி.பி. 1010 ம் ஆண்டு நிறைவடைந்தது. 7 வருடங்களில் பல சிறப்புகளுடன் கூடிய தஞ்சை பெரும் கோயில் அமைக்கப்பட்டது. அதற்கமைய ஆலயத்தின் முதன்மை கோபுரத்தின் உயரம் 215 அடி அதாவது 65 மீற்றர் என கணக்கிடப்பட்டுள்ளது. அது கருவரைக்கு மேற்பகுதியில் 96 அடி சதுரமான அடித்தளத்தின் மேல் ஒரே கல்லால் உருவாக்கப்பட்டுள்ளமை அதன் விசேட சிறப்பாகும். இதேவேளை குறித்த கோபுரத்தின் நிழல் எந்தவொரு காலத்திலும் நிலத்தில் படாத வண்ணம் கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பக் கிரகத்தில் மாத்திரம் சூரிய வெளிச்சம் படும் அற்புதமான கட்டிட கலையால் ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் கருவரையில் அமைந்துள்ள மூல லிங்கம் ஆவுடையார் எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. அது விசேட ரக கல்லில் உருவாக்கப்பட்டுள்ளதோடு அதன் உயரம் 23 அடியும் சுற்றளவு 54 அடி உடையதாகவும் காணப்படுகிறது. மேலும் கோவிலின் முற்பகுதியில் அமர்ந்த நிலையிலுள்ள தனிக்கல்லில் செதுக்கிய நந்தி 25 டொன் எடையும் 20 அடி உயரமும் 8 அடி அகலமும் 20 அடி நீளமும் உடையது. கோபுரத்தின் உச்சியிலுள்ள கலசம் 3.8 மீற்றர் உயரமும் 89 டொன் எடையும் உடைய தனியான 25 அடி சதுரக்கல்லில் செதுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. குறித்த கலசத்தினை உச்சியில் அமைப்பெதற்கான கல்லை அக்காலத்தில் 6 கிலோ மீற்றர் தூரத்திலிருந்து கொண்டு வந்த மகா திறமை இன்றும் புரியாத புதிராகயுள்ளது. இதுவே அவ்வாலயத்தின் அழியாத புகழுக்கு காரணமாகும். தஞ்சை பெரும் கோயில் கட்டுவதற்கு இந்தியாவின் பல பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களின் மொத்த அளவு ஜீஷா ப்ரமிட் கட்டுவதற்கு பயன்படுத்திய கற்களை விடவும் பெரியதென ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர். குறித்த ஆலயத்தின் பரப்பானது 200 தாஜ்மகால்களை உள்ளடக்கும் அளவுக்கு விசாலமானதாகவும் பிரமாண்டமானதாகவும் காணப்படுகிறது. இதேவேளை கோயிலின் பல இடங்களில் கல்வெட்டுக்கள் மற்றும் சிற்பங்கள் என்பன தென்படுவதாகவும் அவை அனைத்தும் ராஜ ராஜ சோழ மன்னன் காலத்திற்குரியதெனவும் சொல்லப்படுகிறது. மேலும் அவற்றின் 107 பந்திகளில் கல்வெட்டு வசனங்கள் 108 சிவ தாண்ட வடிவங்கள் சமய நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு என பல விடயங்கள் காணப்படுகின்றன. ஆலயத்தில் வெளிப்பகுதியில் சோள பேரரசன் ராஜ ராஜனின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆலயமானது தஞ்சை பெருவுடையார் கோயில் பெரிய கோயில் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. பல பண்டைய சிற்பக்கலை வெளிப்பாடுகளை கொண்ட தஞ்சய பெருங்கோயிலானது யுனஸ்கோவினால் உலக கலாசார சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் நெற்களஞ்சியமென வர்ணிக்கப்பட்ட தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள தஞ்சை பெருங்கோயிலானது உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களின் தொன்மை சிறப்பினையும் அழியா புகழினையும் எடுத்துச்செல்லும் வரலாற்று சான்றாகும். தஞ்சை பெருங்கோயில் தமிழர்களின் வரலாற்று சுவடுகளின் தஞ்சம்…….............பிரசன்னா
No comments:
Post a Comment
hi