Sunday, October 21, 2012

ஈபிள் டவர்


ஈபிள் டவர்..

லக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்டது. பிரான்ஸ் நாட்டை அடையாளப்படுத்தும் சின்னமாகவும் திக்கற்றவர்களுக்கு ஒரு களங்கரை விளக்கமாகவும் காணப்படுவது பிரான்சின் ஈபிள் கோபுரம். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான  பாரிஷ் நகரத்தின் மையத்தில் வானுயர்ந்த கோபுரமாக காணப்படும் கோபுரம் ஈபிள் கோபுரம் உலக சுற்றுலா துறையின் முக்கிய தளமாக மாறியுள்ளது. அண்மைய மதிப்பீட்டின் அடிப்படையில் கோபுரம் ஐரோப்பாவின் விலைமதிப்பு மிக்க நினைவுச்சின்னமாக பெயரிடப்பட்டுள்ளது. மேலும் பிரான்சின் பொருளாதாரத்தில் ஆண்டுதோறும் 344 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்களை ஈபிள் டவர் ஈட்டித்தருவதாக அண்மைய புள்ளிய விபரம் சுட்டிக்காட்டுகின்றது.  கடந்த 1887 ம் ஆண்டு ஈபிள் டவரின் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய கடந்த 1889 ம் ஆண்டு மார்ச் மாதம் 31 ம் திகதி ஈபிள் கோபுரம் திறக்கப்பட்டது.  இதனை 121 வேலையாட்கள் இரண்டு வருடம் 2 மாத காலத்தில் கட்டி முடித்தனர். இது அகில உலக கண்காட்சி மற்றும் பிரன்ச் புரட்சி நூற்றாண்டு நிiவு ஆகியவற்றை நினைவு கூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது. கடந்த 1887 ல் ஈபிள் டவர் நிர்மாணிக்க தொடங்கிய காலத்தில் அதனை 20 வருடங்களின் பின்னர் இடிப்பதாக திட்டமிடப்பட்டது. எனினும் குறித்த திட்டம் பின்னர் கைவிடப்பட்ட தற்காலத்தில் அது நிரந்தர சின்னமாகி உலக புகழ்பெற்று விளங்குகின்றது. கோபுரத்தின் மொத் உயரம். 984 அடியாகும். அதாவது 324 மீற்றராகும். சுமார் 100 சதுர மீற்றர் பரப்பில் 8 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள் அதாவது தற்போதைய பெறுமதியில் 30 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் செலவில் ஈபிள் கோபுரம் கட்டிமுடிக்கப்பட்டது. கோபுரமானது முற்றுமுழுதாக 18 ஆயிரத்து 38 விசேட உருக்கு இரும்பு துண்டங்களால் உருவாக்கப்பட்டது. துண்டங்கள் அனைத்தும் 2.5 மில்லியன் தரையாணிகளின் உதவியுடன் பொருத்தப்பட்டுள்ளது. கோபுரத்தின் மொத்த  எடை 10 ஆயிரத்து 100 தொன் என கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு 7 வருடத்திற்கும் ஒருமுறை 60 தொன் எடையுடையதும் மண் நிறம் கொண்டதுமான வர்ணக்கலவை கோபுரத்திற்கு ப+சப்படுகிறது. கோபுரமானது மொத்தமாக 3 தட்டுகள் கொண்டு காணப்படுகிறது. அதில் மொத்தமாக 1665 படிக்கட்டுக்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு கோபுர தட்டுக்களிலும் உணவகம் கண்காட்சி மண்டபம். ஓய்வெடுக்கும் பகுதி சுற்றுலா வெளி தகவல் நிலையம் என்பவை காணப்படுகின்றன. ஈபிள் கோபுரத்தின் உச்சிப்பகுதி கடந்த 1909 ம் ஆண்டிலிருந்து வானொலி ஒளிபரப்பு தேவைக்கும் கடந்த 1957 ம் ஆண்டிலிருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் கோபுரத்தின் நிலகீழ் பகுதியில் சுரங்க வானொலி நிலையமும் இயங்கிவருகிறது. ஈபிள் கோபுரமானது கட்டிமுடிக்கப்பட்ட காலத்திலிருந்து கடந்த 1930 ஆண்டு வரையான 40 வருடங்களில் உலகின் மிகவும் உயரமான கோபுரம் எனவும் பெயர் பெற்றிருந்தது. கோபுரத்தின் அடிப்பகுதியில் 4 முகப்புகளிலும் ஒன்றில் 18 பெயர் வீதம் பிரான்ஸ் நாட்டின் 72 விஞ்ஞானிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்;டுள்ளன. பிரான்சின் ஈபிள் கோபுரமானது அந்நாட்டினை உலகளாவிய ரீதியில் அடையாளப்படுத்திக்காட்டியது. கோபுரமானது மனிதனின் சாமார்த்தியமிக்க தொழிநுட்ப நகர்வுகளை உலகுக்கு எடுத்துக்காட்டி இன்றும் அசையாமல் உயர்ந்து நிக்கிறது. உலகில் இன்றும் தலைநிமிர்ந்து வாழும் ஈபிள் கோபுரம் மனித வரலாற்றின் சாதனை பட்டியலில் தன்னையும் இணைத்து வானுயர வாழ்கிறது...............பிரசன்னா 

No comments:

Post a Comment

hi