Thursday, October 18, 2012

உலக தர நிர்ண நாள்

உலக தர நிர்ண நாள்

ரமற்ற பொருட்களை கொள்வனவு செய்வது சாத்தியமற்ற விடயம் அவ்வாறு தரமான பொருட்களை உற்பத்தி செய்தும் அதனை தரமான பொருள் என்பதை நிர்ணயிக்க ஒரு சான்று தேவை அவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்ற தரமான பொருட்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட அமைப்பே உலக ஐ.எஸ்.ஓ. என அழைப்படும் உலக தரக்கட்டுப்பாட்டு நிறுவனமாகும். உலக தரக்கட்டுப்பாட்டு அமைப்பானது கடந்த 1974 ஆம் ஆண்டு ஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் குறித்த அமைப்பில் வளர்ச்சியடைந்த நாடுகள் மாத்திரமே உறுப்பினராகவிருந்தன. இந்நிலையில் படிப்படியாக அனைத்து நாடுகளும் உறுப்பினர் அந்தஸ்த்தை பெற்று  தற்போது ஐ.எஸ்.ஓ அமைப்பில் 100க்கும் அதிகமான நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலகத்தர நிறுவனத்தின் அலுவலங்கள் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்படுகின்றன. மேலும் 500க்கும்  அதிகமான நிறுவனங்கள் உலக தர நிர்ணய நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. அதற்கிணங்க தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்துவதற்கு அறிவுரை மற்றும் ஆலொசனைகளை வழங்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி உலக தர நிர்ணய தினம் கொண்டாடப்படுகிறது. சீர்த்திருத்தத்திற்கான அனைத்துலக நிறுவனமான ஐ.எஸ்.ஓ அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையமான ஐ.ஈ.சி. மற்றும் அனைத்துலக தொலைத்தொடர்பு ஒன்றியமான ஐ.டி.யூ ஆகிய நிறுவனங்களின் வழிமுறைக்குட்பட்டு உலக தரங்களை உருவாக்கப் பாடுபடும் தொழில்துறை வல்லுனர்களின் சேவையை பாராட்டவும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விளங்க வேண்டிய சீரமை தன்மையை உலகளாவிய ரீதியில் வலியுறுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. அதற்கிணங்க அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையம்,; அனைத்துலக தொலைத்தொடர்பு ஒன்றியம் மற்றும் அனைத்துலக தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியன இணைந்து சந்தைகளை உருவாக்கல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் பணக்கார மற்றும் வறிய நாடுகளுக்கான வேறுபாடுகளை கலைவது போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த 3 அமைப்புகளும் ஒன்று சேர்ந்து கடந்த 1969 ஆம் ஆண்டிலிருந்து ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதியை உலக தர நிர்ணய நாளாக அனுசரிக்கின்றன. உலகளாவிய நாடுகளின் உற்பத்தி பொருட்கள் ஐ.எஸ்.ஓ சான்றிதழை பெரும் பட்சத்தில் அது தரம்வாய்ந்த பொருள் எனவும் பாவனைக்கு உகந்த பொருள் எனவும் வழங்கப்படுகிறது. அதற்கிணங்க இலங்கையில் மாத்திரமில்லாமல் உலக நாடுகளிலுள்ள ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது உற்பத்தி பொருட்களுக்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் அதாவது உலக தர நிர்ணய சான்றிதழை பெறும் நோக்கில் தரமான பொருட்களை உற்பத்தி செய்கின்றன. மக்களுக்கு தரமான பொருட்களை பாவனைக்கு பெற்றுத்தர செயற்ப்பட்டு வரும் உலக தர நிர்ணய அமைப்பின் செயற்பாடு என்றும் நன்மதிப்புக்குரியது.,...........................................பிரசன்னா 


No comments:

Post a Comment

hi