ஜெமினி கணேசன்
பொற்கால தமிழ் சினிமாத்துறை வரலாற்றில் , முப்பெரும் தேவர்கள் என அழைக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். தனக்கு கிடைத்த அத்தனை கதாபாத்திரங்களிலும் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தி , திரையுலக ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பெற்று, அனைவராலும் காதல் மன்னன் என அழைக்கப்பட்டவர் நடிகர் ஜெமினி கணேசன். இவர் கடந்த 1920 ம் ஆண்டு, நவம்பர் மாதம் 17 ம் திகதி , தமிழகத்தின் புதுக்கோட்டையில் பிறந்தார். ஆரம்பகாலத்தில் ஆசிரியராக பணியாற்றிய ஜெமினி கணேசன் , தனது திரையுலக வாழ்க்கைக்கென ஜெமினி கணேசன் நிறுவனத்தில் மேலாளராக இணைந்து, தனது திரையுலகுடனான வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னாளில் அந்நிறுவனத்தின் பல வெற்றிப்படங்களில் கதாநாயகனாக நடித்த அவர் ,பல நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் அதிகாரியாகவும் ஜெமினி நிறுவனத்தில் கடமையாற்றினார். இவர் கடந்த 1947 ம் ஆண்டு வெளிவந்த ,மிஸ் மாலினி எனும் திரைப்படத்தில் சிறிய வேடமொன்றை ஏற்று ,நடித்திருந்தார். எனினும் தொடர்ச்சியாக அவர் மக்கள் மனதில் இடம்பிடிப்பதற்கு ஏதுவாக அமைந்த திரைப்படம் கடந்த 1952 ம் ஆண்டில் வெளியான தாயுள்ளம் எனும் திரைப்படமாகும். இதில் , ஆர் எஸ் மனோகர் , கதாநாயனகானவும், ஜெமினி கணேசன் வில்லனாகவும் வேடமேற்கு நடித்திருந்தார். பின்னாளில் ஜெமினி கணேசன், கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தவுடன் ,நடிகர் மனோகர் வில்லன் காதாபத்திரத்தில் நிலைபெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இசந்நிலையில் ஜெமினி கணேசன், முதன்முதலாக கதாநாயகன் வேடமேற்று நடித்த திரைப்படம் , கடந்த 1953 ம் ஆண்டு வெளியான பெண் எனும் திரைப்படமாகும். அதனை தொடர்ந்து கடந்த 1953 ம் ஆண்டு, மனம் போல மாங்கல்யம் எனும் திரைப்படத்தில் ஜெமினி கணேசன் இரட்டை வேடமேற்று நடித்திருந்தார். குறித்த திரைப்பட்மானகது அவரது திரைவாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்தது. அதேபோல் ,இத்திரைப்படத்திலேயே, நடிகையர் திலகம் என அழைக்கப்படும் நடிகை சாவித்திரியை அவர் திருமணம் செய்துகொண்டார். சந்திதத் அவர் , அதேகாலப்பகுதியில் ஜெமினி கணேசனின் மிகப்பெரிய நடிப்புத்திறமை அவரை எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிறந்த முறையில் எடுத்துக்காட்டியது. ஆரம்பத்தில் ஆர் கணேஸ் எனும் பெயருடன் இவர் திரையுலகில் நடித்துவந்தார். எனினும் ஆரம்பத்தில் சிவாஜி கணேசனும் கணேசன் எனும் பெயரைக்கொணடே திரைப்படங்களில் நடித்து வந்ததன் காரணமாக ஆர் கணேசன் தன்னை ளர்த்த நிறுவனமான ஜெமினி நிறுவனத்தை தன் பெயருக்கு முன்னாள் இணைத்து ஜெமினி கணேசன என மாற்றிக்கொண்டார். காதல் மற்றும் குடும்ப கதைகளில் நடித்து பெயர்வாங்கிய ஜெமினி கணேசன வஞ்சிக்கோட்டைவாலிபன் எனும் திரைப்படத்தினூடாக ஒரு சாகச நாயகனாகவும் தன்னை நிலைநிறுத்தினார். சிவாஜி கணேசன், எம் ஜீ ஆர்என அக்கால திரையுலக ராஜாக்கள் வாழ்ந்த நிலையில் ,தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை அவர் வைத்pதிருந்தர். மேலுமு; அக்காலத்தில் மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களை வழங்கிய இயக்குனர்களாக கே எஸ் கோபாலகிருஷ்ணண் , ஸ்ரீதர் ,கே பாலச்சந்தர், பீம்சிங் ஆகியோரின் படங்களுக்கு முதல் தெரிவாக , ஜெமினி கணேசனே காணப்பட்டார். மேலும் அவர்களின் இயக்கத்தில் ஜெமினி கணேசன நடித்து வெளிவந்த பல திரைப்படங்கள் காலத்தால் அழியாதவை. மேலும் நடிகர் திலகம் கே பாலசந்தர் விரும்பி இயக்கிய நடிகர்களில் ஜெமினி கணேசனும் ஒருவராவார். தாமரை நெஞ்சம், பூவா தலையா, இரு கோடுகள், வெள்ளிவிழா , புன்னகை , கண்ணா நலமா, நான் அவன் இல்லை என இவர்களின் வெற்றிக்கூட்டணி தொடர்ந்தது. மேலும் நான் அவன் இல்லை திரைப்படத்தை தயாரித்து, பல வேடங்களில் நடித்திருந்த ஜெமினி கணேசனுக்கு பிலிம் பேர் விருதும் வழங்கப்பட்டது. தானொரு முன்னணி கதாநாயகனாக இருந்தபோதும் , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் எம் ஜீ ஆர் போன்ற இறவா புகழ்பெற்ற நடிகர்களு;டன் இணை பாத்திரங்களில் நடித்தள்ளார். அதற்கமைய நடிகர் திலகத்துடன் பாசமலர் , பாவமன்னிப்பு பார்த்தால் பசி தீரும் , வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்களில் அவருக்கு இணையான நடிப்பினை ஜெமினி கணேசன வெளிப்படுத்தியிருந்தார் . எம் ஜு ஆருடன் முகராசி எனும் ஒரு திரைப்படத்தில் மாத்திரமே ஜெமினி கணேசன நடித்துள்ளார். பின்னர் திரைக்கு வந்த ஜெய்சங்கர் , ஏ வி எம்ராஜன் முத்துராமன் ஆகியோருடனும் இவர் , பல திரைப்படங்களில் நடித்துள்ளார். எந்தவொரு நட்சத்திர நடிகையுடனும் இயல்பாக பொறுந்திவிடும் இவரது திறன். இவரை காதல் மன்னணன் என அடையாளப்படுத்தியது. இவருடன் சாவித்திரி, அஞ்சலி தேவி , பத்மினி, சரோஜாதேவி மற்றும் ஜெயந்தி ஆகியோர் அதிகளவான திரைப்படறங்களில் நடித்துள்ளனர் . ஜெமினி கணேசன் தமிழ், ஹிந்தி ,தெழுங்கு, மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் 200ற்கும் மெற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு ஏ எம் ராஜா, பீ பீ ஸ்ரீனிவாஸ் ஆகியோரது குரல்கள் ஒத்திருந்ததால், டி எம் சௌந்தரராஜனைவிட , இவர்களே ஜெமினி கணேசனுக்கு அதிகளவில் பாடல்களுக்கு குரல் கொடுத்தனர். பின்னர் ,பாடும் நிலா எஸ் பீ பீயும் ஜெமினி கணேசனின் பாடல்களுக்கு குரல் கொடுத்துள்ளார். மேலும் ஷ ஜெமினி கணேசன தனது இயல்பான குரலில் பாடக்கூடிய திறனையும் பெற்றிருந்தார். மேலும் இவரது வாரிசாக நடிகை ரேக்கா திரையுலகில் நடித்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அது மாத்திரமின்றி அவர் இதயமலர் எனும் திரைப்படத்தினை இயக்கியுமுள்ளார். அவர் கதாநாயகான நடித்த இறுதி திரைப்படம் கடந்த 1970 ம் ஆண்டு வெளிவந்த லலிதா என்ற திரைப்படமாகும்; . பின்னாளில் தனது நாயகம் அந்தஸ்தை விட்டு குணச்சித்திர பாத்திரங்களில் ஜெமினி கணேசன நடிக்க ஆரம்பித்தார். ப அவர் இறுதியாக குணச்சித்திர பாத்திp0ரத்’தில் நடித்த திரைப்படம் நடிகர் கமலஹாசன் நடித்து வெளிவந்த ஒளவை சண்முகி என்ற திரைப்படாகும். இப்படியான மிகபபெரும் சகாப்தமாக வாழ்ந்த அவர் கடந்த 2005 ம் ஆண்டு , மார்ச் மாதம் 22ம ;திகதி சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல நோய்களால் பாதி;ப்படைந்து, இறையடி சேர்ந்தார். இவருக்கு பத்மஸ்ரீ, நடிப்பு செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளும் பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. திரையுலக மும்மூர்த்திகள் என அழைக்கப்பட்டவர்களில் தனக்கென ஒரு பாணியை அமைத்து, அனைத்து திரை ரசிகர்கள் இதயத்திலும் நீங்காத இடம் பிடித்த , காதல் மன்னன் ஜெமினி கணேசன், இன்றும் ஞாபக சுவடுகளோடு எம் ஒவ்வொருவரதும் இதயத்தில்.....................................................................பிரசன்னா
No comments:
Post a Comment
hi