Monday, December 3, 2012

ஜவஹர்லால் நேரு


ஜவஹர்லால் நேரு

காத்மா காந்தியினால் சுதந்திரம் பெற்றுத்தரப்பட்ட சுதந்திர இந்தியாவினை முதற்முறையாக ஆட்சிசெய்த பெருமைக்குரியவர். நீதி, நேர்மை, கோட்பாடு என காந்தியவாதத்தின் கருத்துக்களை முன்னிலைப்படுத்தி, இந்தியாவில் மாத்திரமின்றி உலகம் போற்றும் தலைவராக வாழ்;ந்தவர் இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு. இவர் கடந்த 1889 ம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ம் திகதி  இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் அலகாபாத் எனும் இடத்தில் மோதிலால் நேருவுக்கும், சுவரூபராணி அம்மையாருக்கும் , மகனாக பிறந்தார்.  நேரு, ஹிந்தி , சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை தனது இளம் பராயத்திலே கற்றதோடு இந்திய கலைகளும் அவருக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. மேலும் இவரின் தந்தையான மோதிலால் நேரு, தனது மகன் இந்திய குடிமக்கள் சேவைக்கு, தகுதிபெறவேண்டுமென விரும்பி,  மேற்படிப்புக்காக இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தார்.  எனினும் நேரு, குறித்த பள்ளிவாழ்க்கை முற்றிலும் விரும்பவில்லையெனவும் , தனது தந்தையின் விருப்பத்திற்காகவே கல்வி கற்றதாகவும் தனது வரலாற்றுக்குறிப்புக்களில்   குறிப்பிட்டுள்ளார். பின்னர் தனது பள்ளிப்படிப்பை முடித்து லண்டன் கேம்பிரிஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த 1907 ம் ஆண்டு தேர்வுப்பரீட்சைகளில் தோற்றி, அந்நாட்டின் டிரின்டி கல்லூரியில் இணைந்து இயற்கை  அறிவியலை கற்றார்.  அதற்கமைய கடந்த 1910 ம் ஆண்டு, குறித்த பல்கலைக்கழகத்தில்  2 ம் இடத்தை பெற்று பட்டம் பெற்றார்.  அதற்கமைய நேரு தனது தந்தையின் விருப்பத்திற்காகவே படித்து சட்டத்துறையிலும் பட்டத்தை பெற்ற நிலையில், இந்தியா திரும்பினார். அதற்கமைய கடந்த 1916 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ம் திகதி கமலா கவ்ல் எனும் பெண்ணை திருமணம் செய்தார். அவர்களுக்கு இந்திரா பிரியதர்சினி எனும் பிள்ளையும் பிறந்தது. அவர் பின்னாளில்  பிரதமராகவும், பதவிவகித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.  இந்நிலையில் கடந்த 1916 ம் ஆண்டில் , தனது தந்தையின் வழிகாட்டலின் கீழ், காந்தியடிகளை சந்தித்த நேரு,  காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டதோடு, காந்தியடிகளின் ஆர்ப்பாட்ட வலிமைகளில் பெரிதும்  ஈர்த்து,  காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினராகவும், காந்தியடிகளின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகவும் மாறினார்.  அதற்கமைய 1920 ம் ஆண்டில் காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த நேரு,  கடந்த 1921 ம் ஆண்டு முதன்முறையாக சிறைக்கு சென்றார். பின்னர் கடந்த 1922 ம் ஆண்டில் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், காந்தியுடன் இணைந்து பலபோராட்டங்களை நடத்திய காரணங்களுக்காக 9 வருடங்களாக அவர் சிறைவாசம் அனுபவித்தார்.  தனது சிறைவாசத்தின்போது, ஜவஹர்லால் நேரு  உலக வரலாற்றின் காட்சிகள், சுயசரிதை , இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். குறித்த படைப்புக்கள் அவரை ஒரு சிறந்த எழுத்தாளராக பெருமைப்படுத்தியதோடு, இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது.  இந்நிலையில் கடந்த 1929 ம் ஆண்டு காந்தியடிகளின் வழிகாட்டலில் இந்திய தேசிய காங்கிரசை தலைமையேற்று நடத்தினார். மேலும் இளம் வயதிலேயே மகாத்மாகாந்தியின் வழிகாட்டலின்கீழ், அவர் காங்கிரசின் இடதுசாரி தலைவராகவும் செயற்பட்டுள்ளார். அதற்கமைய நேரு , துடிதுடிப்பு மிக்க  புரட்சித்தலைவராக ஆங்கில அரசின் பிடியிலிருந்து இந்தியாவை விடுவித்து, முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார்.  மேலும் கடந்த 1947 ம் ஆண்டு,  ஓகஸ்ட் மாதம் 15 ம் திகதி , சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிச்சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம், உலகியல் வாதம் ,ஏழைகள் ,தாழ்த்தப்பட்டவர்கள் பற்றிய அவரது அக்கறை ,அவரை வழிநடத்தி இன்றுவரை இந்தியாவில் தாக்கத்தை உண்டாக்கிய வழிமையான திட்டங்களை உருவாக்க செய்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. சில சமயங்களில் நேருவை , நவீன இந்தியாவின் சிற்பியெனவும், அழைக்கப்படுவதோடு, . இந்நிலையில் இந்தியாவின் முஸ்லிம் பண்டிதர் நேரு எனவும் அழைக்கப்பட்டார். லீக்கின் முஸ்லிம்களுக்கான பாகிஸ்தான் எனும் தனிநாடு கோரிக்கை உள்நாட்டு மோதல்களை ஏற்படுத்தியது. மேலும் தனது சமாதான முயற்சிகள் தோல்விகண்ட நேரு, இந்தியாவின் பிரிவினைவாதத்திற்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்.  அதனைத்தொடர்ந்து பல முறை, பாகிஸ்தானிய தலைவர்களுடனும் நேரு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டபோதும் அவை வெற்றியளிக்கவில்லை. இதனிடையே கடந்த 1947 ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் இந்து பாகிஸ்தான ;போரை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தபோதிலும்,  அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. எனினும் இந்தியாவை உலகில் தன்னிகரற்ற நாடாக உருவாக்கும் திட்டத்தில் மும்முரமாக இறங்கய பிரதமர் ஜவஹர்லால் நேரு,  கடந்த 1951 ம் ஆண்டு, தனது முதல் ஐந்தாண்டு திட்டத்தை வரைந்தார். கல்வி, மருத்துவம் , அறிவியல் , பொருளாதாரம் தொழில்நுட்பம் என பல துறைகளையும் தனது திட்டங்களால் அபிவிருத்தி செய்தார். மேலும்  நேரு உலகின் பல நாடுகளும் வியக்கும் வண்ணம் இந்தியாவின் ஆட்சி கட்டமைப்புக்களை மாற்றியமைத்து, கடந்த 1947 ம் ஆண்டு  முதல், கடந்த 1964 ம் ஆண்டு வரை இந்தியாவை தலைமைத்துவமேற்று வழிநடத்தினார்.  குறித்த காலப்பகுதியில் நேருவிற்கு மக்களின் ஆதரவு அதிகப்படியாகவே  காணப்பட்டது. இந்நிலையில் பல தேர்தல்களில் காங்கிரசை மிகப்பெரிய வெற்றிப்பாதைக்கு இழுத்துச்சென்ற நேரு பல முறை பிரச்சினைகளையும் , விமர்சனங்களையும் அவரது அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.  சில சமயங்களில் அவர் தனது பதவியை விட்டும் விலகுவதற்கு முடிவெடுத்ததாக குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1953 ம் ஆண்டு முதல் நேருவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக அவர்,  காஷ்மீரில் ஓய்வெடுத்து வந்தார். எனினும் சிலர்  அவர் இந்தியாவை  சீனா ஊடுறுவவதன் காரணமாக  , தான் தப்பித்துக்கொள்வதற்கு நடத்தப்படும் நாடகமென விமர்சித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 1964 ம் ஆண்டு, காஷ்மீரிலிருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பிய ஜவஹர்லால் நேரு, பக்கவாதத்தாலும், மாரடைப்பாலும் அவதியுற்றார். தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 1964 ம் ஆண்டு மே மாதம் 24 ம் திகதி  இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, உயிர்நீத்தார்.  அவரது பூதவுடல் இந்து சமய சடங்குகளின் முறைப்படி யமுனை நதிக்கரையில்  தகனம் செய்யப்பட்டது.  இந்தியாவின் முதல் பிரதம மந்திரி மற்றும் பாதுகாப்பு வெளியுறவுத்துறை அமைச்சராக மிக சக்திவாய்ந்த வெளிநாட்டுக்கொள்கையுடன் நவீன இந்திய அரசாங்கத்தை மற்றும் அரசியல் கலாச்சாரத்தை வடிவமைத்ததில் முக்கிய பங்கு வகித்தார்.  இந்நிலையில் அவரின் தலைமைத்துவத்தை பாராட்டி , கடந்த 1989 ம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தினால் நினைவுத்தபால் தலையொன்றும் வெளியிடப்பட்டது.  மேலும் அவர் அணிந்த உடை அவரின் பெயராலேயே இன்றும்  அழைக்கப்படுகிறது.  நேருவின் ஞாபகார்த்தமாக இந்தியாவில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளதோடு, மும்பை நகருக்கு அருகில் ஜவஹர்லால் நேரு துறைமுகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேரு பிரதமராக இருந்த காலத்திpல் அவரது இல்லமாக இருந்த தீன் மூர்த்தி பவான் தற்போது, அவரது நினைவாக அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. சிறந்த ஆங்கில எழுத்தாளராக திகழ்ந்த நேரு, த டிஸ்கவரி ஒப் இந்தியா, கிளைம்ஸ் ஒப் வேல்ட் ஹிஸ்ட்ரி , மற்றும் டுவெட்ஸ் ப்ரீடம் , அதனோடு சுயசரிதை ஆகியவற்றை இவ்வுலகிற்கு தந்தளித்துள்ளார். சுமார் 17 வருடங்களுக்கும் மேலாக சுதந்திர இந்தியாவினை வழிப்படுத்திய ஜவஹர்லால் நேரு இந்தியாவை கட்டியெழுப்பிய முதல் தலைவராவார். .............................................................................................................................................பிரசன்னா 

No comments:

Post a Comment

hi