புரூஸ்லீ………………..
ஹொலிவுட் திரைப்படங்களில் ஏவுகணைகளையும் ஏகே 47 துப்பாக்கிகளையும் பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்களின் ரசனையை மாற்றிய வீரர் இவர். கைகளையும் கால்களையும் பயன்படுத்தி உலகை வெல்ல முடியுமென உணர்த்தியவர் இவர். சீனாவின் தற்காப்பு கலையை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்ற பெருமைக்குரிய தற்பாதுகாப்பு கலை நிபுணர். இவர் குன்ப+ கலையின் பிதா மகன் எனவும் அழைக்கப்படுகிறார். 6 படங்களில் மாத்திரம் நடித்திருந்தாலும் உலகின் மூலை முடுக்கெங்குமுள்ள ஒவ்வொரு திரை உலக ரசிகனையும் தனது அற்புத கலை நுட்பத்தால் தன்பால் ஈர்த்த ஹொலிவுட் நடிகர் புரூஸ்லி இவர் கடந்த 1940 ம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ம் திகதி அமெரிக்காவின் ஜோன் ப்ரான்சிஸ்கோவின் சைனா டவுன் எனும் பகுதியிலுள்ள மருத்துவ மனையொன்றில் புரூஸ்லி பிறந்தார். இவரது தந்தையான லீ ஹோய் சுவேன் ஒரு நடிகர் ஆவர். இவரது தயாரின் பெயர் க்ரேஸ் என்பதாகும். புரூஸ்லிக்கு அவரது பெற்றோர்கள் சீன மொழியில் உலக பாதுகாவலர் என பொருள் படும் லீ ஜூன்பேன் எனும் பெயரை சூட்டினர். எனினும் புரூஸ்லி பிறந்த வைத்தியசாலையில் அவருக்கு மருத்துவம் செய்த தாதி என அவரை புரூஸ் என செல்லமாக அழைக்க அதுவே இவரது பெயராக பிற்காலத்தில் நிலைபெற்றது. புரூஸ்லி பிறந்து 3 மாதமாகும் போது அவரது குடும்பம் சீனாவின் ஹொங்கொங்கிற்கு வருகை தந்தது. இந்நிலையில் தனது 12 வது வயதுவரை ஹொங்கொங்கிலுள்ள லோஷல் கல்லூரியில் கல்வி பயின்ற புரூஸ்லி பின்னர் ப்ரான்சிஸ் சேவியர் கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த 1959 ம் ஆண்டு தனது 18 வது வயதில் ஹொங்ஹோங்கில் ஒரு நபரை புரூஸ்லி தாக்க அதனை அறிந்து கொண்ட அவனது பெற்றோர் அவரைப் பாதுகாப்பதற்காக புரூஸ்லியை ஜோன் ப்ரான்சிஸ்கோவிற்கு அனுப்பி வைத்தனர். குறித்த நபரை புரூஸ்லி தாக்கிய போது அவர் பயன்படுத்திய தற்காப்பு கலை பரவலாக பேசப்பட்டது. பின்னர் சென் ப்ரான்ஸிஸ்கோவில் தனது படிப்பை தொடர்ந்தார் புரூஸ்லி. அவரது தந்தை ஒரு நடிகர் என்பதால் சிறுவயதிலிருந்தே அவ்வப்போது திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களை ஏற்று புரூஸ்லி நடித்துள்ளார். மேலும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் புரூஸ்லி நடித்தார். அதற்கமைய திரை உலக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பார்வை புரூஸ்லி மீது விழுந்தது. அதனைத் தொடர்ந்து கோல்டன் ஹோவஸ்ட் எனும் நிறுவனம் கடந்த 1971 ம் ஆண்டு தயாரித்த பிக் போஸ் எனும் திரைப்படத்தில் புரூஸ்லி முதன் முதல் கதா நாயகனாக நடித்தார். எனினும் அதற்கு முன்பே மர்லோ எனும் திரைப்படத்தில் முக்கிய கதா பாத்திரமொன்றில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் முதல் கதாநாயகனாக நடித்த த பிக் போஸ் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே புரூஸ்லி ஹொங்கொங் முழுவதும் பிரபலமாக அறியப்பட்டிருந்தார். இவர் பொக்சின் மற்றும் ஏனைய தற்காப்பு கலைகளில் காட்டிய திறமையின் காரணமாக இவர் பரவலாக அறியப்பட்ட நிலையில் பிக்போஸ் திரைப்படம் வெளிவந்தது. அதற்கமைய திரைப்படமானது ஆசியாவில் 12 மில்லியன் டொலர்களை வசூலித்து மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இவரின் அதி வேக சண்டை காட்சிகள் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 1972 ம் ஆண்டு வெளிவந்த பிஸ்ட் ஒப் பிவுரி திரைப்படம் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலித்து மிகப் பெரிய வெற்றியடைந்தது. அதே ஆண்டில் புரூஸ்லி கதை எழுதி இயக்கிய வே ரூ த ட்ராகன் திரைப்படம் புரூஸ்லியின் புகழை உலகளவில் கொண்டு சென்றதோடு அவருடன் சேர்;ந்து குங்ப+ கலையும் பிரபல்யமடைந்தது. இக்கால கட்டத்தில் புரூஸ்லியின் குங்ப+ கலை ஹொலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக்கொடுத்த புரூஸ்லி இளைஞர்களின் ஆதர்ஸ நாயகனாக உருவெடுத்தார். புரூஸ்லி சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் எதிரியை தாக்கும் வேகத்திற்கு அன்றைய தொழிநுட்பத்தால் கூட ஈடுகொடுக்க முடியவில்லை. மேலும் தனது உடம்பை எவ்வாறு பேணுவது என்று உலகுக்கு கற்றுக்கொடுத்த ஆசானும் இவராவார். இவ்வாறு குங்ப+ கலையை வளர்ப்பதில் அதிக நாட்டம் செலுத்திய புரூஸ்லி குங்ப+ கலைக்குள் பல வித்தியாசமான முறைகளை உலகிற்கு வெளிப்படுத்தினார். அதற்கமைய அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புரூஸ்லி உருவாக்கிய என்டர் த ட்ராகன் திரைப்படம் ஹொலிவுட்டை மாத்திரமின்றி உலகையே ஆட்கொண்டது. குறித்த திரைப்படமானது அன்றைய காலப்பகுதியில் அமெரிக்காவில் மாத்திரம் 8 இலட்சத்து 50 ஆயிரம் டொலர்களை வசூலித்தது. உலகம் முழுவதும் 200 மில்லியன் டொலர்களை வசூலித்து வெற்றி நடைபோட்ட என்ர த ட்ராகன் திரைப்படம் புரூஸ்லியை தற்காப்பு கலையின் முடிசூடா மன்னன் ஆக்கியது. ஆனால் குறித்த திரைப்படத்தின் வெற்றியை புரூஸ்லியால் பார்க்க முடியவில்லை என் ட ட்ராகன் திரைப்படம் வெளியாவதற்கு 3 வாரங்களுக்கு முன்பே அதாவது கடந்த 1973ம் ஆண்டு ஜூலை மாதம் 20 ம் திகதி புரூஸ்லி தனது 32 வது வயதில் மர்மமான முறையில் மரணத்தை தழுவினார். அன்றிரவு தூக்க மாத்திரையை எடுத்துக்கொண்டு உறங்கிய தற்காப்பு கலையின் நாயகன் பின்னர் கோமா நிலைக்கு சென்று ஹொஹ்கோங்கிலுள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமலையே காலமானார். இன்றுவரை புரூஸ்லியின் மரணம் மர்மமாகவே உள்ளது. புரூஸ்லி என்ற சகாப்தம் சொற்ப காலங்கள் மாத்திரமே திரை உலகை ஆட்சி செய்தாலும் திரை உலகின் போக்கையே மாற்றிச் சென்றார். புரூஸ்லியின் அசைவுகளில் செய்து பார்க்காத ரசிகர்களே இல்லைய அன்றைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை ஒவ்வொருவரது வீட்டிலும் புரூஸ்லியின் தற்காப்பு கலை அடையாள புகைப்படங்கள் அவரை நினைவு கூறிக்கொண்டே இருக்கிறது. மேலும் கராத்தே கலையுடன் சில நுணுக்கங்களை சேர்த்து புரூஸ்லி உருவாக்கிய புதிய தற்காப்பு கலை அவரது பெயரிலேயே புரூஸ்லி குங்ப+ என அழைக்கப்பட்டது. இதனை தத்துவ பாடத்துடன் இணைத்து ஜே கே டி எனும் புதிய பயிற்சியை புரூஸ்லி அறிமுகப்படுத்தினார். மேலும் உள்ளொளி தற்காப்பு கலையான ஜூட் குண் டோ வை தோற்று வித்தவரும் இவராவார். இதனிடையே ஒரு அங்குல தாக்குதல் என்பதை அறிமுகப்படுத்தி அனைவரையும் வியப்படையச் செய்தார். தாக்கப் போகும் நபருக்கும் இவருக்குமிடையே ஒரு அங்குல இடைவெளி இருந்தாலும் எதிரியை நிலைகுலைய செய்யலாமென கூறியதோடு அதனை நிரூபித்துக் காட்டினார். புரூஸ்லியை தொடர்ந்து இவரைப்போன்ற மாதிரிகள் பலர் உருவாகியிருந்தாலும் புரூஸ்லிக்கு முன்பும் அவருக்கு பின்பும் உண்மையான தற்காப்பு கலை அடைந்த நடிகன் இல்லை. இந்நிலையில் அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹொங்கொங் அரசு அவரது முழு உருவ வெண்கல சிலையொன்றை நிறுவியுள்ளது. மேலும் டைமஸ் பத்திரிகை நடத்திய கடந்த நூற்றாண்டில் சமூகத்தை பாதித்த சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் புரூஸ்லியும் இணைக்கப்பட்டுள்ளார். என்டர த ட்ராகன், த பிக் போஸ். கேம் ஒப் டெத், பிஸ்ட் ஒப் பிவுரி, வே ஒப் த ட்ராகன் ,உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தற்காப்பு கலை நிபுணராக வளர்ந்ததோடு அனைத்துலக திரையுலக ரசிகர்கள் மனதில் ரோல் மொடலாக வளர்ந்து இன்றும் நினைவுகளோடு வாழும் புரூஸ்லி 20 ம் நூற்றாண்டின் தன்னிகரற்ற தற்பாதுகாப்பு கலை நிபுணர்களில் ஒருவர்.......................பிரசன்னா
No comments:
Post a Comment
hi