Sunday, December 2, 2012

மேரி கியூ

 மேரி கியூரி    06.11.2012

பார சிந்தனையும் அளவற்ற பொறுமையையும், சிறந்த அறிவையும் கொண்டு இயல்பியல் துறையில் சாதனை புரிந்த மற்றுமொரு உன்னத படைப்பாளி இருளில் ஒளியைக் கண்ட முதற்பெண்மணி என உலகில் அனைவராலும் அழைக்கப்ப்டவர் இயல்பியல்  துறையில் இன்றும் அனைவராலும் மதிக்கத்தக்களவு பல சாதனைகளை புரிந்த இயல்பியலாளர்  மேரி கியுரி. இவர் 1867 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் திகதி போலந்தின் வார்சா நகரில் வறுமையுடன் வாழ்ந்த பிரென்ச் பெற்றோருக்கு மேரி கியூரி கடைசி மகளாக பிறந்தார். தந்தையார் பௌதீகவியல் ஆசிரியராக கடமையாற்றியதுடன் தாய் பாடசாலையொன்றின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். மேரி கியுரிக்கு நான்கு பெண் சகோதரிகள் இருந்தனர். பெண் அடிமைத்தனம் நிறைந்த அன்றைய காலகட்டத்தில் போலந்து பல்கலைக்கழகங்களில் பெண்கள் கற்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. யாருடைய துணையுமின்றி கற்றோர் சமூகத்திற்கு மத்தியில் தனது கல்வியின் மகத்துவத்தை உலகமே போற்றும் அளவிற்கு பதிவு செய்தவர் மாரி கியூரி. 1891 ஆம் ஆண்டு தனது 24 ஆவது வயதில் மேல்படிப்பிற்காக பாரிஸ் நகரிற்கு சென்றார். அங்கு கடுங்குளிரில் போதுமான உணவின்றி, உடை இல்லாமல் பாழடைந்த தங்குமிடத்தில் சிரமத்தோடு படிப்பை தொடர்ந்தார் மேரி கியுரி. வெறும் சொக்லெட்டை மாத்திரம் உண்டு தனது பசியை போக்கியுள்ளார். சில சந்தர்ப்பங்களில் உணவின்றி மேரி கியுரி மயக்கம் அடைந்துள்ளார். அவற்றையெல்லாம் கருத்திற்கொள்ளாளது தனது படிப்பை தொடர்வதெற்கென கடும் முயற்சியில் ஈடுபட்டார். பாரிசில் மாலை நேரங்களில் கல்வி கற்பித்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு மேரி கியுரி தனது மேற்படிப்பை தொடர்ந்தார். பின்னர் 1893 ஆம் ஆண்டு இயற்பியல் பட்டமும் 1894 ஆம் ஆண்டு கணிதவியல் பட்டமும் பெற்ற அவர் பல்வேறு இரும்பு உலோகங்களின் காந்தவியலில் ஏற்ப்பட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்ய இயற்பியல் மற்றும் வேதியியல் துறையில் விரிவுரையாளரான பியரி கியுரியின் உதவியை நாடினார். குறித்த சந்திப்பிற்கு பின்னர் இருவருக்குமிடையில் காதல் ஏற்பட பின்னர் இருவரும்  திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் இருந்தனர். இருவரும் இணைந்து அடுத்த பத்தாண்டுகள் ஒன்றாக இயல்பியல் துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். 1896 ஆம் ஆண்டு ஹென்றி பெக்கொரல் யுரேனியத்தின் கதிரியக்க செயலை கண்டுபிடித்தார். இந்த புதிய ஆய்வு மேரி கியூரிக்கு புதிய சிந்தனையை உருவாக்கியது. இதன்மூலம் அவர் பெக்ரோலுக்கு மாணவியானார். அதன்பின்னர் மேரி கியூரி யுரேனியக் கதிர்வீச்சு பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு ஆராய்ச்சி கட்டுரையொன்றையும் எழுதினார். அதன்பின்னர் யுரெனிய மாதிரிகளின் மின்னோட்ட பண்பினை மாரி கியுரி ஆய்வு செய்தார்.  குறித்த மூவரின் உழைப்பின் பயனாக கதிர்வீச்சு பற்றிய இவர்களுடைய ஆராய்ச்சி உலகில் இயல்பியல் துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. அறிவியல் ரீதியான முக்கியமான, தனித்துவ கண்டுபிடிப்பாக இது காணப்பட்டது. அதற்காக 1903 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு ஹென்றி பெக்கொரல் மற்றும் மேரி கியுரியின் கணவர் பியரி கியுரிக்கு வழங்க நோபல் கமிட்டி தேர்வு செய்தது. அதனை அறிந்;த பியரி கியுரி, மேரி கியுரியின் உண்மையான உழைப்பிற்கு நோபல் பரிசு இல்லையா எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் பியரி கியுரி, ஹென்றி பெக்ரோல் ஆகியோருடன் இணைந்து மேரி கியூரிக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. பின்னர் கதிர்வீச்சு பற்றி மேரி கியூரி ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பயனாக யுரெனியத்தின் அளவு கதிர்வீச்சின் தன்மையை நிர்ணயிக்கிறது எனும் தன்னுடைய முந்தைய ஆய்வுடன் ஒப்பிட்டார். யுரேனியத்தை விடவும் கதிர்வீச்சு மிகுந்த, ஏதேனும் தனிமங்கள் கலந்திருக்கும் என்ற தன்னுடைய கருத்தினை பியரியிடம் கூறியபோது அவரும் அதனை ஏற்றுக்கொண்டார். ஒரு பெண் இத்தகைய அரியதோர் கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். என்பதை அன்றையகால ஆராய்ச்சியாளர்கள் நம்ப மறுத்தனர். சிலர் கேலியும் செய்தனர். 1898 ஆம் ஆண்டு ஜீலை மேரியும் பியரியும் இணைந்து அதனை ஆய்வு செய்து போலோனியம் எனும் புதிய தனிமத்தை கண்டுபிடித்தனர். அதன்பின்னர் 1898 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேரி கியுரி தனது ஆய்வை மேலும் வலுப்படுத்தினார். அதன் பயனாக கதிரியக்கத் தன்மை கொண்ட ரேடியத்தை கண்டுபிடித்தார். 1902 ஆம் ஆண்டு வெற்றிகரமாக ஒரு கிராம் அளவு ரேடியத்தின் உப்பான ரேடியம் குளொரைடு பிரித்தெடுத்தனர். குறித்த காலப்பகுதியில் பியரி 1906 ஆம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்தார். கணவரின் மரணம் மேரி கியுரியை வெகுவாக பாதித்தது. அதன்பின்னர் இரு பிள்ளைகளையும் வளர்த்துக்கொண்டு எஞ்சிய நேரத்தை விஞ்ஞான ஆய்வுக்கு பயன்படுத்தினார். தனது ஆராய்ச்சிகளை தனியாக மேற்கொண்ட மேரி கியுரி ரேடியம் குளொரைடு உப்பிலிருந்து தூய ரேடியம் தனிமத்தை பிரித்தெடுத்தார். சிறிய கண்டுபிடிப்புகளுக்கே காப்புரிமை வாங்கிக்கொள்ளும் அறிவியலாளர்கள் மத்தியில் தன்னுடைய ரேடியம் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை பெற்று;கொள்ளாது தன் கண்டுபிடிப்புகள் மனித குலத்திற்கு பயன்பட வேண்டும் என மேரி கியுரி நினைத்தார். பல ஆண் அறிவியலாளர்கள் நிறைந்த உலகில் பெண்ணின் பெருமையை உயர்த்திய மேரி கியுரி வேதியல் துறையில் நோபல் பரிசை 1903 மற்றும் 1911 ஆம் ஆண்டுகளில் பெற்றார். வேதியல் மற்றம் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்ற முதற்பெண்மணியாக மேரி கியுரி திகழ்ந்தார். இரவு பகலாக ஆராய்ச்சி செய்து கண்டெடுத்த ரேடியக் கதிர்களின் கூரிய தீ அம்புகளுக்கு மாரி கியுரியின் கைகள் இரையாகின. கணவரின் இறப்பின் பின்னர் 28 ஆண்டுகாலம் வாழந்த மாரி கியுரி பல அரிய ஆக்கப் பணிகளை நிறைவேற்றினார். முதல் உலக மகா யுத்தத்தின் போது மேரியும் அவரது மகள் ஐரீனும் இணைந்து எக்ஸ்ரே கதிர்ப்பட வரைவைச் சீர்ப்படுத்தி காயம் அடைந்தோருக்கு நோய் ஆய்வுக் கருவியை ஏற்பாடு செய்தார்கள். 1932 ஆம் ஆண்டு தான் பிறந்த ஊரில் ரேடிய ஆய்வத்தை நிறுவினார். ரேடியம் கதிர்களுக்கு பலியாகி  லியுக்கிமியாவில் நோய்வாய்ப்பட்டு 1934 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 4 ஆம் திகதி விண்ணுலக எய்தினார். மேரி கியுரியின் வாழ்வின் அசுர விஞ்ஞான சாதனை, கதிரியக்க மூலகங்களின் இருப்பை நிரூபித்து. அவற்றைப் பிரித்துக் காட்டியது. ரேடியம் கண்டு பிடிப்பிற்காகவே பிறந்து, ரேடியக் கதிரியக்கம் தாக்கியே இறந்த பெண்மணி அறிவியல் துறையில் மங்காத மாணிக்கமாக இன்றும் திகழ்கின்றமை விசேட அம்சமாகும். ..............................................................................................................................................பிரசன்னா
No comments:

Post a Comment

hi