நோபல் பரிசு
ஒரு மனிதனின் படைப்புக்களையும் ,அவனது திறமையினையும் தட்டிக்கொடுத்து, பாராட்டுவதென்பது, அவனிடமிருந்து மேலமிக படைப்புக்களையும், அவனுடைய திறமையின் உச்சகட்ட வெளிப்பாட்டையும் பெற்றுக்கொள்வதற்கு அடிப்படையாக அமையும். அந்த வகையில் உலகளாவிய ரீதியில் எவ்வித பேதங்களுமின்றி உண்மையான திறமையுடையவனுக்கு, பலதரப்பட்ட போட்டிகளுக்கு மத்தியில் உலக அங்கீகாரம் பெற்றுக்கொடுக்கும் வகையில், சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விருது, நோபல் பரிசாகும். இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதி மற்றும் பொருளியல் ஆகியவற்றுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. குறித்த பரிசு, வழங்கப்படுகின்ற விடயம் இப்போது, உலகில் மிக முக்கிய நிகழ்வாக அமைகிறது. ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதம் 10 ம் திகதி நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதுவரை 800 ற்கும் அதிகமான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த நோபல் பரிசு வழங்குவதற்கு பின்னணியில், ஒருவரின் சாதனையும், மரணமும் மறைந்து காணப்படுகிறது. உலக கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் நோபல் பரிசினை , வழங்குவதற்கு, அடித்தளம் அமைத்தவர் சுவீடனின்
வேதியியல் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் சாதனை படைத்த அல்பிரட் நோபல் ஆவார். கடந்த 1833 ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 21 ம் திகதி, சுவீடனில் பிறந்த எல்பிரட் நோபல், ஒரு வேதியியலாளராகவும், பொறியியலாளராகவும் தன்னை வளர்த்துக்கொண்டார். பின்னர், இரும்பு ஆலையை நடத்திவந்த நோபல், அதனை பெரும் ஆயுத உற்பத்தி தொழிற்சாலையாக மாற்றி பலவித புகையற்ற இராணுவ வெடிபொருட்களுக்கு முன்னோடியான பொலிஸ்டிக்கை கண்டுபிடித்தார். இது பின்னாளில் யுத்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு ஆயுதங்களை உருவாக்குவதங்கு அடித்தளம் அமைத்தது. இதைப்பயன்படுத்தி தனது வாழ்நாளில் நோபல் பெருமளவான செல்வங்களை சேர்த்த்தார். அவரது வருமானத்தின்பெரும்பகுதி அவர் கண்டுபிடித்த 355 புதிய கண்டுபிடிப்புக்களால் கிடைத்தவையாகும். அவற்றில் முக்கியமான கண்டுபிடிப்பு, டைனமைட் ஆகும் இது தற்போதைய உலகத்தில் உயிர்களை பலியெடுப்பதற்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் தலைமை இயக்குனராக உருவெடுத்துள்ளது. இதனை கண்டுபிடித்த பின்னர் நோபல், உலகளாவிய ரீதியில், பேசப்பட்ட போதிலும், இவரது கண்டுபிடிப்பு, இவரை மரணத்தின் வியாபாரி என சொல்லும் அளவிற்கு, இவரை வளர்த்துவிட்டது. ஒரு பத்திரிக்கையில் வெளிவந்த குறித்த செய்தியை அறிந்தநோபல், தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்புக்கள் உலகை அச்சுறுத்தும் ஆயுதங்கள் என்பதை உணர்ந்து தனது சொத்தில் 94 வீதத்தினை மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்தவர்களுக்கு பயன்படுத்துமாறு உயில் எழுதினார். அதற்கமையவே , இயற்பியல் வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு தனது பெயரிலேயே பரிசில்களை வழங்குமாறு நோபல் தனது உயிலில் எழுதிவைத்தார். அழிக்கும் ஆயுதங்களால் தான் பெற்றுக்கொண்ட செல்வங்கள், ஆக்கும் உயிர்களுக்கு செல்லட்டும் என்பதே அவரின் வாழ்நாளின் இறுதி ஆசையாகும். இந்நிலையில் கடந்த 1895 ம் ஆண்டு, டிசெம்பர் மாதம் 10ம் திகதி தனது 63 ஆவது வயதில், எல்பிரட் நோபல் உயிரிழந்தார். அவர் தனது கடைசி உயிலினை 1895 ம் ஆண்டு, நவம்பர் மாதம் 27 ம் திகதி பெரிசிலிருந்த சுவீடன், நோர்வே மன்றத்தில், கையளித்தார். அதனைத்தொடரந்து அவரின் உயிலின் மேலிருந்த அச்சம் காரணமாக அவரின் உயிலை கடந்த 1897 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதியே நோர்வே பாராளுமன்றம் அங்கீகரித்தது. அதன்பின்னர் குறித்த நோபர் பரிசு வழங்குவதற்கென விசேட உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் நோபல் பரிசை பெறுபவர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் 1905ம ; ஆண்டு நோர்வேயும், சுவீடனும் பிரிந்த பிறகு, அமைதிக்கான நோபல் பரிசை வழங்குவதற்கான பொறுப்பு, நோர்வேயிடம் வழங்கப்பட்டதோடு, ஏனைய பரிசில்களையும் வழங்கும் பொறுப்பு சுவீடனிடம் வழங்கப்பட்டது. கடந்த 1900 ம் ஆணடு ஜீன் மாதம் 29 ம் திகதி முதல் நோபல் அரக்கட்டளை ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு, நோபலின் உயிலின்படி அதன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் நோபல் பரிசு வழங்கும் நடவடிக்கைகளுக்கு , எப்பொழுதும் சில எதிர்ப்புக்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதனையும் தாண்டி, நோபலின் எண்ணங்கள் , நோபல் பரிசினால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் நோபலின் சொத்தை முதலீடாக கொண்டு செயற்படும் குறித்த அரக்கட்டளைக்கு சுவீடன் , அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகள் முழுமையான வரிவிலக்கீடு அளித்துள்ளது. நோபல் பிறந்த ஊரான, ஸ்டாக்ஹோமை தலைமையகமாக கொண்டு குறித்த நோபல் அரக்கட்டளை இயங்கி வருகிறது. நோபல் பரிசு பெறுபவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை, அரசாங்கங்கள், சர்வதேச நீதிமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள், கல்லூரி தலைவர்கள், முன்னாள் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களால் பரிந்துரை செய்யப்படுபவர்களின் விபரங்கள் நோபல் குழவிற்கு அனுப்பப்பட்டு, அதன்பின்னர் ஆலோசனைகள் இடம்பெற்று, சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது. இதேவேளை எல்பிரட் நோபல் குறிப்பிட்டதற்கு மேலதிகமாக கடந்த 1968 ம் ஆண்டு முதல், சுவீடனால் பொருளியலுக்கான நோபல் பரிசு இதனுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. அதற்கமைய வருடந்தோரும் எல்பிரட் நோபலின் நினைவுத்தினமான டிசெம்பர் மாதம் 10 ம் திகதி , நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பிரதான நிகழ்வு சுவீடனிலுள்ள ஸ்டொக்ஹொம் நகரில் இடம்பெறுவதோடு, அமைதிக்கான நோபல் பரிசு மாத்திரம் நோர்வேயிலுள்ள ஒஸ்லோ நகரில் வழங்கப்படுகிறது. நோபல் வாழ்ந்த காலத்தில் நோர்வேயும், சுவீடனும் ஒரே நாடாக இருந்ததன் காரணமாகவே இவ்வாறு நோபல் பரிசு பிரித்து வழங்கப்படுகிறது. தான்கண்டுபிடித்த கண்டுபிடிப்புக்களில் மக்களுக்கு நலன்கிடைத்திருந்தாலும், சில கண்டுபிடிப்புக்கள் மக்களையே அழிக்கும் ஆயதமாக மாறிவிட்டமையை உணர்ந்த எல்பிரட் நோபலினால், உருவாக்கப்பட்ட நோபல் பரிசு, அவரை வாழ்நாள் முழுதும் தவறான எண்ணக்கவிலிருந்து பாதுகாக்கிறது. எனினும் அவர் கண்டுபிடித்த டைனமைட் இன்றும் அழிவின் அடித்தளமாகவே உலகை வலம் வருகிறது. எவ்வாறெனினும் உலக படைப்பாளிகளையும், கண்டுபிடிப்பாளர்களையும் உன்னத மனிதர்களையும் அடையாளம் காட்டி, அவர்களின் தொடர்ச்சியான சாதனைகளுக்கு வழிவகுக்கும், நோபல் பரிசு, உலக அங்கீகாரங்களில் ஒன்று.............................................. பிரசன்னா
No comments:
Post a Comment
hi