Sunday, September 30, 2012

உலக சிறுவர் தினம்

உலக சிறுவர் தினம்……01.10.2012

எதிர்கால உலகின் தலைவர்களாகவும் இந்த உலகை காப்பதற்கு தயாராகும் பாதுகாவலர்களாகவும் இருப்பவர்கள் சிறுவர்கள். இளமையில் கல் சிலையில் எழுத்து எனும் வாக்கிற்கமைய சிறுவயதிலேயே சிறுவர்கள் வாழும் சூழல் அவர்களின் எதிர்கால வாழ்;க்கையில் தாக்கம் செலுத்துகிறது. அதற்கமைய உலகளாவியரீதியில் ஏற்படுகின்ற யுத்தங்கள் உள்நாட்டு பிரச்சினைகள் என்பன அதிகளவில் நேரடியாக சிறுவர்களேயே பாதிக்கிறது. மேலும் சமூகத்திலுள்ள சில விசமிகளின் செயற்பாடுகளால் சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்  எனும் நோக்கோடு அவர்களை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 1 ம் திகதி சர்வதேச சிறுவர் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. சிறுவர்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களின் உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கென ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1989;ம் ஆண்டு முதல் சர்வதேச சிறுவர் தினத்தை பிரகடனப்படுத்தியது. எனினும் கடந்த 1924 ம் ஆண்டிலேயே சிறுவர்கள் முதன் முதலில் சிறுவர் உரிமைகள் தொடர்பிலான கொள்ளை வெளியிடப்பட்டது. அதன்பின்னர் கடந்த 1959 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் சிறுவர்களுக்கான சகல உரிமைகள் தொடர்பான தெளிவான கொள்கை பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்நிலையிலேயே கடந்த 1979ம் ஆண்டு உலக சிறுவர் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு சிறுவர்கள் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய கடந்த 1989 ம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் சிறுவர் உரிமைகள் தொடர்பான கொள்ளை பிரகடனத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது. இதனிடையே கடந்த 1954 எம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானத்தின் அடிப்படையில் சர்வேதச சிறுவர் தினத்தை அமுல்படுத்தும் பொறுப்பு யுனிசெப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கமைய யுனிசெப், யுனெஸ்கோ மற்றும் சேவ் த சைல்ட போன்ற அமைப்புக்கள் என பல்வேறு செயற்திட்டங்களை முன்வைத்து செயற்பட்டுவருகிற்னறன.  18 வயதிக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என ஐக்கியநாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சாசனம் வரையறை செய்துள்ளது.
•    வாழ்வதற்கும் முன்னேற்றுவதற்குமான உரிமை
•    பிறப்பின் போது பெயரொன்றையும் இன  அடையாளத்தையும் பெற்றுக்கொள்ளும் உரிமை..
•    பெற்றோரை தெரிந்துகொண்டு அவர்களது பாதுகாப்பை பெற்றுக்கொள்வதற்கான உரிமை
•    பெற்றோரிடமிருந்து தம்மை தனிமைப்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமை..
•    கருத்தை வெளிப்படுத்தும் உரிமை…
•    சிந்திப்பதற்கும் மனச்சாட்சிப் படி நடப்பதற்கும் சமயம் ஒன்றை பின்பற்றுவதற்குமான உரிமை…
•    பொருளாதார சுரண்டல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை..
•    பாலியல் வல்லுறவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் உரிமை
•    சித்திரவதைகள், தண்டனைகளிலிருந்து தவிரித்துக் கொள்ளும் உரிமை…
•    சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்குமான உரிமை என சிறுவர்களுக்கு  பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் உலகளாவிய ரீதியில் இவற்றில் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படுகிறதா என்பது. கேள்விக்குறியான விடயம். இதனிடையே சிறுவர்கள் உடல் ரீதியான துஷ்பிரயோகம் உளவியல் ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகம் உணர்வு ரீதியான துஷ்பியோகம் புறக்கணிப்பு ரீதியான துஷ்பிரயோகமென பலவழிகளில் அவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர்.  உலகில் வாழ்கின்ற மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்களாவர். இவ்வாறு எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் இருக்கும் சிறுவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படுகின்றனர்.  ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிவித்தலின் படி ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சிறுவர்கள் யுத்தத்தால் வழங்கப்படுகின்றனர். மேலும் 2 இலட்சத்து 50 ஆயிரத்குக்பும் அதிகமான சிறுவர்கள் யுத்தங்களில் போர்வீரர்களா செயற்பட்டு வருகி;னறனர். மேலும் 12 மில்லியனுக்கும் அதிமான சிறுவர்கள் பல்வேறு காரணங்களினால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறு நிர்க்கதிக்குள்ளான சிறுவர்கள் தவறான பாiயி;ல் சென்று பல்வே குற்றச்செயல்களில் ஈடுபடுத்துவதற்கும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.  இந்நிலையில் ஒவ்வொரு நாடுகளும் சிறுவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள் பாதுகாக்க வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் அதற்கென பல்வேறு  நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. எனினும் இன்று உலகில் பல்வேறு நாடுகளில் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுதல் , பாலியல் துஷ்பிரயோகம், கல்வியைத் தடுத்தல் , சிறுவர்களை கடத்துதல் போன்ற பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் எமது நாட்டில் 14 வயதிற்கீழுள்ள சிறுவர்களை வேலைக்கமர்த்துதலுக்கு எதிராக பல சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலங்கையில் கட்டாயக்கல்வி அமுல்படுத்தப்பட்டு அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் பாதுகாக்க வேண்டியவர்கள் என்பதன் காரணமாக அவர்களுக்கு பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வருடம் ……  …………………………………………………………………….. எனும் தொனிப்பொருளில் சிறுவர் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்களாக கருதப்படு வேண்டிய நிலையில் அவர்கள் தமது வாழ்க்கையில் பெரும் சவால்களை எதிர்நோக்கியள்ளனர். இவ்வாறு சிறுவர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு ஒவ்வொரு சமூகமும் பொறுப்புக் கூறவேண்டிய கட்டாயத்திலிருக்கிறது. இந்த ப+மியில் வாழ்கின்ற மனித இனமான நாம் எதிர்காலத்திலும் நல்லதொரு உலகை கட்டியெழுப்ப வாய்ப்பளிக்க வேண்டியது கட்டாயமல்லவா???? சிறுவர்களுக்கெதிரான நடவடிக்கைககளை தடுத்து அவர்களை பாதுகாத்து நாளைய நல்ல உலகத்திற்பு இன்றே வழிவகுப்போம்……சிறுவர்கள் நாளைய தலைவர்கள்…

..........................................................................................................................பிரசன்னா

No comments:

Post a Comment

hi