Sunday, September 30, 2012

செப்டம்பர் 11 தாக்குதல்….



11.09.2012 அமெரிக்க உலக கோபுரம் மீதான தாக்குதல்….

லகை தன் கட்டுக்கோப்பிற்குள் கொண்டுவர நினைக்கும் அமெரிக்காவிளை உருகுலைய வைத்தநாள் இன்று. கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் திகதி அமெரிக்க வரலாற்றில் பாரிய இழப்பை சந்தித்த நாள் அவ்வாண்டின் இதே தினத்தில் இதேபோன்றதொரு செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் அமைந்துள்ள உலக வர்த்தக மையமான பென்டகன் மீது  அல்குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். குறித்த சம்பவம் இடம்பெற்று  இன்றுடன் 11 வருடங்கள் ப+ர்த்தியாகின்றன. வல்லரசு நாடான அமெரிக்காவுக்கெதிராக பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதலாக பென்டகன் தாக்குதல்   வரலாற்றில் பதியப்பப்பட்டுள்ளது. நிவ்யோர்க் நகரில் கம்பீரமாக காட்சியளித்த உலக வர்த்தக மையத்தின் வடக்கு மற்றும் தென்பகுதி கட்டிடங்கள்  110 மாடிகளை உள்ளடக்கிய பாரிய கட்டிடமாகும். 1922 ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட குறித்த கட்டிடம் அந்த ஆண்டிலிருந்து 1973 ம் ஆண்டு வரை உலகின் மிக உயரமான கட்டிடமாக காணப்பட்டது. குறித்த கட்டிடமீது 1993 ம் ஆண்டு முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 6 பேர் கொல்லப்பட்டதோடு கட்டிடம் சிறியளவிலான சேதங்களுக்குள்ளாகியது.
இந்நிலையில் 2ம் தடவையாக குறித்த கட்டிடமீது கடந்த 2001 ம் ஆண்டு 11 ம் திகதி 2 வது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 2 ஆயிரத்து 973 பேர் கொல்லப்பட்டதோடு 6291 பேர் காயங்களுக்குள்ளாகினர். கொல்லப்பட்டவர்களில் 300 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். குறித்த தாக்குதலுக்காக கடத்தப்பட்ட 4 விமானங்களிலிமிருந்த 246 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு 19 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். வல்லரசு நாடான அமெரிக்கா பயங்கரவாதத்திற்கெதிராக  மேற்கொண்ட அழுத்தத்தினூடாக சந்தித்த பாரிய அழிவு இதுவென அரசியல் ஆய்வாளலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமது ஆதிக்கத்தை உலக ரீதியில் நிலைநிறுத்த விரும்பும் அமெரிக்காவை , ஆட்டிப்பார்க்க விரும்பிய அல்குவைதா அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லாடனின் திட்டமே செப்டெம்பர் 11 தாக்குதல். நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் விமானங்கள் கடத்தப்பட்டு, மேற்கொள்ளப்பட்டது. 2001 ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் டபிள்ய+ புஷ்சின் ஆட்சிக்கு , அல்குவைதா அமைப்பினரால் வழங்கப்பட்ட நினைவுப்பரிசாக பென்டகன் தாக்குதல்  அமைந்துள்ளது.
நெருப்பில் வீழ்ந்தாலும் மீள உயிர்பெற்று எழும் பீனிக்ஸ் பறவையை போல, தம்மால் மீண்டும் எழ முடியுமென வல்லரசு நாடான அமெரிக்கா சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளது. அழிப்பது  எளிது ஆக்குவது கடினம் என்பதை புரந்தள்ளி , அமெரிக்க பொறியியலாளர் நவீன தொழில்நுட்பங்கனூடாக சாதித்து காட்டியுள்ளனர்.  நிய+யோர்க்கின் பெருமைக்குரிய  பென்டகன் அழிக்கப்பட்டபோது இருந்த நிலையை விட,  பல மடங்கு நவீனமான முறையில் தற்பொழுது கட்டியெழுப்பபட்டு வருகிறது. சுமார் 3.8 பில்லியம் டொலர் செலவில் 104 மாடிகளுடன் கட்டப்படும் புதிய 4 கட்டிடங்களும் 16 ஏக்கர் நிலப்பரப்பில் அமையப்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை அடுத்த ஆண்டு நினைவுதினத்திற்குள் நிறைவுசெய்யவுள்ளதாக அமெரிக்க பொறியிலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதனிடையே குறித்த தாக்குலானது அல்குவைதா அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட போதிலும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஸ் தாக்குதல் தொடர்பில் அறிந்திருந்த போதிலும் அதனை பாரதூரமான தாக்குதலாக மாற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாக சில உத்தியோகப+ர்வமற்ற தகவல்கள் வெளிவந்த போதிலும் அது இதுவரை உறுதிப்படுத்தவில்லை எவ்வாறெனினும் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 11 வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று இரட்டைகோபுரம் இருந்த இடத்தில் நடைபெற்றது. மேலும் உலகளாவிய ரீதயில் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களும் இன்று நினைவு தினத்தை அனுஸ்டித்தனர். எவ்வாறெனினும் மனித உயிர்களை காவுகொண்டு இலட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ள நடாத்தப்பட்ட தாக்குதலானது எப்போது மறக்கவும் மன்னிக்கவும் முடியாத சம்பவமாகும். இந்நிலையில் செப்டம்பர் 11 தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கென இந்நாளில் நாமும் பிரார்த்திப்போம்…...............................................................பிரசன்னா





No comments:

Post a Comment

hi