தந்தை பெரியார்…… 17.09.2012
சமூக சீர்திருத்ததிற்காகவும் சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும் மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும் பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாக கருதப்படும் திராவிட கழகத்தினை தோற்றுவித்தவர். பரவலாக பெரியார் என அறியப்படும் வெங்கட் ராமசாமி கடந்த 1879 ம் ஆண்டு செப்டம்பர் மாதம்17 ம் திகதி தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் வெங்கட்ட நாயக்கர் சின்னத்தாயம்மாள் ஆகியோருக்கு பிறந்தார் ஈ.வே. ராமசாமி;. வசதியான குடும்பத்தில் பிறந்த ஈ.வே.ராமசாமி எனும் தந்தை பெரியார் 5 ம் ஆண்டு வரை மாத்திரமே கல்வி பயின்றார். அதன் பின் கல்வியில் நாட்டம் இல்லாமையினால் தனுத 12 வது வயதுமுதல் தந்தையின் வணிகத் தொழிலை மேற்கொண்டார். சிறுவர் வயதிலிருந்தே மூடநம்பிக்கைகளிலும் சமய குருமார்களிடமும் வெறுப்புக்கொண்டிருந்த தந்தை பெரியார் குறித்த விடயத்திலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை தனக்குள் வளர்த்துக்கொண்டார். இந்நிலையில் தனது 19 வது வயதிலேயே 13 வயதான நாகம்மையாரை திருமணம் செய்துகொண்டார். தனது கணவனினன் புரட்சிகரமான செயல்களுக்கு தன்னை முழுமையாக ஆட்படுத்திக்கொண்ட நாகம்மையார், தந்தை பெரியாருடன் இணைந்து பல போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார். தொடர்ச்சியாக மதங்கள் மீமு கொண்டுள்ள வெறுப்பு மற்றும் மூடநம்பிக்கைகள் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த தந்தை பெரியார், தனது அரசியல் வாழ்வினையும் ஆரம்பித்தார். அதற்கமைய பெரியார் 1919 ம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்தி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் மகாத்மா காந்தியின் கதர் ஆடையை உடுத்திக்கொண்டதோடு பிறரையும் உடுத்தும்படி செய்தார் மேலும் மதுபான கடைகளை மூடுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த அவர் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கெதிராக போராட்டங்களையும் நடத்தியுள்ளார். இதேவேளை தீண்டாமையை வேறிருக்க அரும்பணியாற்றியுள்ளார். இந்நிலையில் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக கடந்த 1921 ம் ஆண்டு தந்தை பெரியார் சிறைத்தண்டனையை அனுபவித்தார். இந்நிலையில் கடந்த 1922 ம் ஆண்டு தந்தை பெரியார் சென்னை இராசதானியின் காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அது தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் என வழங்கப்படுகிறது. இந்நிலையில் அரசபணிகள் , கல்வி போன்றவற்றின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த தந்தை பெரியாரின் எண்ணங்களே காங்கிரஸ் கட்சி ஏற்கமறுத்தது. அதன் காரணமாக கடந்த 1925 ம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். இதனிடையே கடந்த 1924 ம் ஆண்டு முதல் 25 ம் ஆண்டு வரை கேரளாவிலுள்ள வைகம் எனும் இடத்தில் சாதி எதிர்ப்பு சத்தியகிரகம் போராட்டத்தினை பெரியார் மேற்கொண்டார். அதில் வெற்றி கண்ட அவருக்கு வைகம் வீரர் என பெயர் சூட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூடப்பழக்க வழக்கங்களை சமூதாயத்திலிருந்து ஒழித்து மக்களை அறிவின்மையிலிருந்து மீட்டெடுத்து தெளிவுடையோராக மாற்ற கடந்த 1925 ம் ஆண்டு தந்ததை பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதனிடையே அவர் தனது கொள்கைகளையும் கருத்துக்களையும் வெளிநாடுகளுக்கு சென்று பரப்பியுள்ளார்;. அதற்கமைய கடந்த 1929 ம் ஆண்டு முதல் 1932 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எகிப்து கிறீஸ் துருக்கி, ரஷ்யா, ஜேர்மனி, இங்கிலாந்து, ஸ்பெய்ன், பிரான்ஸ், மலேசியா, சிங்கப்ப+ர், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று தனது கொள்கைகளை தெளிவுபடுத்தினார். பெரியாரின் சுயமரியாதை கொள்கையானது ரஷ்யாவின் கமினியுசிய கொள்கையை ஒத்ததாக காணப்பட்டது. இதேவேளை கடந்த 1937 ம் ஆண்டு சென்னையில் ஹிந்தி கட்டாயப்பாடமாக பாடசாலையில் கற்பிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பெரியார் கடந்த 1916 ம் ஆண்டு ஆரம்பித்த நீதிக்கட்சியின் ஊடாக தமிழ் நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டார். தமிழ்நாடு தமிழனுக்கே என்று முதல் முதலில் முழக்கமிட்டவர் தந்தை பெரியாராவார். இந்நிலையில் பெரியாரினால் ஆரம்பிக்கபட்ட அவரின் தலைமையில் செயற்பட்டு வந்த நீதிக்கட்சி கடந்த 1944 ம் ஆண்டு பெரியாரினால் திராவிட கழகம் என பெயர் மாற்றப்பட்டது. இதனிடையே திராவிட கழகத்தின் தந்தைபெரியாரின் தலைமை தளபதியாக இருந்த அறிஞர் அண்ணா துரை அவரிடமிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக்கழகம் எனும் தமிழ் கட்சியினை ஆரம்பித்தார். தந்தை பெரியார் திராவிட நாடு அல்லது தனித்தமிழ் நாடு கோரிக்கையினை முன்வைத்தார். எனினும் அறிஞர் அண்ணா துரை மத்திய அரசாங்கத்துடன் இணைந்து கூடுதல் அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சி பெறுவதில் அக்கறை காட்டினார். குறித்த கருத்துவேறுபாடு இருவருக்குமிடையிலான பிரிவுக்கு காரணமாகும். தனது இறுதி காலத்தில் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மாள் என்பரை மறுமணம் புரிந்தமையும் அவரின் கொள்கையிலிருந்து பலர் விலகுவதற்கு காரணமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. எனினும் தனது கொள்கைகளையும் கருத்துக்களையும் தொடர்ச்சியாக அவர் வலியுறுத்தி வந்தார். தந்தை பெரியாரின் சமூதாய பங்களிப்பை பாராட்டி யுனஸ்கோ அவருக்கு புத்துலக தொலைநோக்காளர் , தென்கிழக்காசியாவின் சோக்கரடீஸ் , சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை என பல்வேறு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கியுள்ளன. இந்நிலையில் கடந்த 1973 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ம் திகதி தனது இறுதி கூட்டத்தில் தந்தை பெரியார் கலந்துகொண்டார். குறித்த கூட்டத்தினை தொடர்ந்து சுகவீனம் உற்றநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும் உறுதியான பகுத்தறிவு சிற்பி என அனைவராலும் போற்றப்பட்ட தந்தை பெரியார் சிகிச்சை பலனின்றி கடந்த 1973 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் திகதி தனது 94 வது வயதில் இறையடி சேர்ந்தார். இந்நிலையில் தந்தை பெரியாரை நினைவுப்படுத்தும் வகையில் அவர் போரட்டம் நடத்திய கேரள மாநிலம் வைக்கம் எனும் இடத்தில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரின் அமர்ந்த நிலையிலான 4 அடி உயர உருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.. மேலும் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை தமிழ்நாடு அரசாங்கம் பெரியார் அண்ணா நினைவு இல்லமாக மாற்றி அங்கு அவரின் சிலை வைக்கப்பட்டுள்ளதோடு அவரின் புகைப்படங்கள் மற்றும் வாழ்க்கை வரலாறு என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தனக்கென சுயசிந்தனையினை வளர்த்து மக்கள் வாழ்வில் மூடநம்பிக்கையினை இல்லாதொழித்து மக்களை சுயமரியாதையுடன் வாழ வைப்பதற்கென வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் எம் ஒவ்வொருவரினதும் இதயங்களை விட்டு பிரியார்……………...................................................................................................பிரசன்னா
No comments:
Post a Comment
hi