Sunday, September 30, 2012

நீல் ஆம்ஸ்ரோங்.

 நீல் ஆம்ஸ்ரோங்.


னிதனின் விண்வெளி தொடர்பான பார்வையினை செம்மைப்படுத்திய பெருமைக்குரியவர். விண்வெளி நோக்கிய மனிதனின் பயணத்திற்கு அழியா புகழ்சேர்த்து அடித்தளமிட்டவர். நிலவில் முதன்முதலில் கால்தடம் பதித்து, மனித இனத்திற்கு பெருமை தேடித்தந்தவர் அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ரோங். 1930 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் திகதி அமெரிக்காவின் ஒஹியோ நகரில் நீல்ஆம்ஸ் ரோங் பிறந்தார். இவர் அமெரிக்கராக இருந்தாலும். ஸ்கொட்லாந்து மற்றும் ஜேர்மன் பரம்பரையை சேர்ந்தவராவார். சாதளை நாயகனின்ன தந்தையான ஸ்டீபன் ஆம்ஸ்ரோங் ஒரு கணக்காளர். நீல்  ஆம்ஸ்ரோங் தனது இளமைக்காலத்தில் வானில் பறப்பதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவரின் ஆர்வத்தை அறிந்த தந்தை ஆம்ஸ்ரோங்கின் வானில் பறப்பது தொடர்பான கற்கைநெறிகளை கற்பதற்கு வழிவகுத்தார். அதற்கமைய 1944 ம் ஆண்டு இது தொடர்பான கல்வியை நீல் ஆம்ஸ்ரோங் ஆரம்பித்தார். அவரது ஆர்வத்தால் 15 வது வயதிலேயே விமானிக்கான சான்றிதழை பெற்றார். பல்வேறு துறைகளில் தனது திறமைளை வளர்ப்பதில் ஆம்ஸ்ரோங் ஆர்வம் காட்டினார். அதற்கிணங்க வானில் பறக்கும் அவரது ஆர்வம். அவரை விண்வெளி பொறியியல் துறையில் கல்வி கற்பதற்கு சந்தர்ப்பம் அளித்தது. அதற்கமைய 1947 ம் ஆண்டு பேர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்து விண்வெளி பொறியில் துறையை கற்க ஆரம்பித்தார். பல்கலைக்கழக கல்வி மூலம் நீல் ஆம்ஸ்ரோங் 1955ம் ஆண்டு வானுர்தி பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். 1949 ம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ம் திகதி விமானம் தொடர்பான பயிற்சிகளை பொறுவதற்கு நீல்ஆம்ஸ்ரோங்கிற்கு அமெரிக்க கடற்படை அனுமதியளித்தது. 
18 மாத பயிற்சிகளுக்கு பின்னர் நீல்ஆம்ஸ்ரோங் அமெரிக்க கடற்படை விமானியாக தரமுயர்த்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1951ம் ஆண்டு கொரியாவுக்கெதிரான யுத்தத்தில் அமெரிக்க விமானங்களில் விமானியாக நீல்ஆம்ஸ்ரோங் செயற்பட்டார். அவருக்கு போர் பயணங்களுக்கான 20 பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து போர் பயணங்களில் விரக்திகண்ட நீல்ஆம்;ஸ்ரோங் தனது 22 வயதில் கடற்படையிலிருந்து விலகினார். விமான பரிசோதகராக வரவிரும்பிய நீல்ஆம்ஸ்ரோங் அதனை நிறைவேற்ற எட்வேர்ட் விமான படைத்தளத்தில் இணைந்து கல்வி கற்றார். விமான ஆராய்ச்சி துறையில் பல வருடங்கள் சேவையாற்றிய அவர் 1958ம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு விண்வெளி வீரராக வருவதற்கு விருப்பம் கொண்டார். அதற்கு அமெரிக்க விண்வெளி ஆராய்;ச்சி நிறுவனமான நாசாவை தெரிவு செய்தார். அவரின் அதீத திறமை மற்றும் ஆர்வம் அவரை நாசாவில் இணைக்க வழிவகுத்தது. அதற்கமைய 1962ம் ஆண்டு நாசாவின் எபோல 8 மற்றும் எபலோ 9 விண்கலங்களின் ஆராய்ச்சி கட்டமைப்பில் நீல்ஆம்ஸ்ரோங் பணியாற்றினார். அதன் மூலம் 1966 ம் ஆண்டு முதன் முறையாக ஜெமினி 8 எனும் விண்வெளிவிமானத்தின் கட்டளை விமானியாக பணியாற்றினார். அவரது அதீத திறமையினால். 1968 ம் ஆண்டு டிசம்பர் 23 ம் திகதி எபலோ 11 விண்கலத்தின் கட்டளையிடும் தலைவராக செயற்படும் அரியவாய்ப்பு ஆம்ஸ்ரோங்கிற்கு கிட்டியது. அதற்கமைய சந்திரனுக்கு அனுப்பி முதலாவது விண்கலமான அப்பலோ 11 யில் நீல்ஆம்ஸ்ரோங்குடன் மைக்கல் கொளின்ஸ் மற்றும் பேஸ் அல்ரீ ஆகியோர் பயணம் செய்தனர். 
குறித்த விண்வெளி ஓடம். 1969ம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் திகதி சந்திரனில் தரையிறங்கியது. சந்திரனில் முதலில் கால்வைப்பதில் பேஸ் ஏல்ரினுக்கு ஏற்பட்ட தயக்கம் காரணமாக  ஏணியொன்றின் மூலம் இறங்கி நீல்ஆம்ஸ்ரோங் நிலவில் முதல் கால்தடம் பதித்தார். அதன்போது நான் எபலோ விண்கலத்தின் மூலம் நிலவில் கால்வைக்கிறேன் எனும் கூற்றை ஆம்ஸ்ரோங் தெரிவித்தார். அதுவே மனிதன் முதலில் பேசிய முதல் வார்த்தை…. அவர் கால் தடம் பதித்த அந்தநாள் மனித வரலாற்றில் திருப்புமுனையான நாளாக அமைந்துள்ளது. சந்திரனில் தரையிறங்கிய நீல்ஆம்ஸ்ரோங் மனிதனின் சிறிய நடவடிக்கையின் மூலம் மனித இனத்திற்கான பாரிய துணிகரமான செயல் உருவானது எனும் புகழ் மிக்க கூற்றை நீல்ஆம்ஸ்ரோங் தெரிவித்தார். நீல்ஆம்ஸ்ரோங் சந்திரனில் கால்தடம் பதித்து 20 நிமிடங்களின் பின்னர் பேஸ் அல்ரின் சந்திரனில் கால்தடம் பதித்தார். இரண்டரை மணித்தியாலங்கள் சந்திரனில் தங்கியிருந்த அபலோ 11 விண்கலம் மீண்டும் ப+மிக்கு திரும்பியது…. ப+மிக்கு வந்த சாதனை மனிதர் நீல் ஆம்ஸ்ரோங்கை அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகள் மரியாதைக்குரிய வரவேற்பளித்தன… பலநாடுகளுக்கு சென்று தனது விண்வெளி அனுபவம் தொடர்பில் நீல்ஆம்ஸ்ரோங் சிறப்புரையாபற்றினார்..அதனை தொடர்ந்து கால் தடம் பதித்து பிரபஞ்சத்தில் சாதனை படைத்த நீல்ஆம்ஸ்ரோங்கிற்கு பல்வேறு விருதுகள் கிடைத்தன. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சட் நிக்ஸன் மற்றும் ஜிம்மி காடரினால் ஆம்ஸ்ரோங் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். விண்வெளி ஆராய்ச்சியிலிருந்து ஓய்வுபெற்ற நீல்ஆம்ஸ்ரோங் வர்த்தகதுறையில் தனது கவனத்தை செலுத்தினார். அதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 7 ம் திகதி சுகவீனம் உற்ற நிலையில் நீல்ஆம்ஸ்ரோங் ஒஹியோ மாகாணத்திலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி தனது 82 வயதில் நீல்ஆம்ஸ்ரோங் இவ்வுலகை விட்டு விடைபெற்றார். பல்வேறு சாதனைக்குரிய சந்திரனில் கால் தடம் பதித்த முதலாவது மனிதனென்ற அழியா சாதனையாளார் என்ற பல்வேறு நூல்கள் கருத்துக்கள் அறிக்கைகள் போன்றன வெளிவந்தன. இருந்தபோதிலும் ஆம்ஸ்ரோங்கின் வாழ்க்கையில் இடம்பெற்ற சில கசப்பான உணர்வுகள் இவ்வுலகிற்கு வெளிக்கொணரப்படவில்லை என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதேவேளை இறப்பின் பின்னர் நீல்ஆமஸ்ரோங்கின் இறுதிகிரியைகள் சகல அரச மரியாதைகளுடனும் இடம்பெறாமைக்கான காரணம் மர்மமாகவே உள்ளது. எவ்வாறெனினும் மனிதனது வேறு கிரகங்கள் தொடர்பான விண்வெளி ஆராய்ச்சிக்கு அடித்தளமிட்டு நிலவில் கால் தடம் பதித்த ஆராய்ச்சிகளுக்கு தன்னம்பிக்கை வித்திட்ட நீல்ஆம்ஸ்ரோங் என்றும் எம் நெஞ்சை விட்டு நீங்கா ஆம்ஸ்ரோங்…...........................................................பிரசன்னா

No comments:

Post a Comment

hi