Sunday, September 30, 2012

பாரதியார்



பாரதியார் 

விதை எழுதுபவன் கவியன்று கவிதையே வாழ்க்கையாக உடையவன,;
வாழ்க்கையே கவிதையாக செய்தோன் அவனே கவி….
அவர்தான் சுப்பிரமணிய பாரதி….
1882 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ம் திகதி இந்தியாவின் எட்டயபுரத்தில்  சின்ன சுவாமி ஐயருக்கும் லக்ஸ்மி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார் சுப்பையா என அழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி சுப்பையா தனது 11ம் வயதில் பள்ளியில் படித்துவரும் போது கவிப்புயம் ஆற்றலை வெளிப்படுத்தினார். பிற்காலத்தில் ஒரு கவிஞராக எழுத்தாளராக பத்திரிகை ஆசிரியராக விடுதலை வீரராக சமூக சீர்திருத்தவாதியாக தனது பரிமாணங்களை வகுத்துகொண்டவர் சுப்பிரமணிய பாரதி. தமிழில் கவிதை மற்றும் உரைநடையில் தன்நிகரற்ற பேரறிவாளர் தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். அவர் மகாத்மா காந்தி பாலகங்காதர திலக உ.வே.சு ஐயர் சிதம்பரபிள்ளை மற்றும் மகான் அறவிந்தர் ஆகியோர் வாழ்ந்த இந்திய வரலாற்றில் திருப்பு முனையான காலப்பகுதியில் வாழ்ந்தவர் சுப்பிரமணிய பாரதி தமிழர் நலன் இந்திய விடுதலை பெண் விடுதலை சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து அவர் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் எனினும் அவரின் கவித்திறனை பாராட்டி எட்டயபுர அரச சபையால் அவருக்கு பாரதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. சுப்பிரமணிய பாரதி சுப்பையா, பாரதியார், சக்திதாசன், மகாகவி, புதுக்கவிதை புலவன், கவிஞாயிறு என பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்பட்டார். பாரதி தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம், வங்காளம், ஹிந்தி, பிரன்ச் போன்ற மொழிகளில் தனிப்புலமை பெற்றவர் அம்மொழிகளில் தனிச்சிறப்பு மிக்க படைப்புக்களை தமிழ் மொழியாக்கம் செய்தவர் சுப்பிரமணியம் பாரதி. பலமொழிகளில் தனிபுலமை பெற்றிருந்தாலும் யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என கவி புனைந்தார் கவி ஞாயிறு பாரதி. பழந்தமிழ் காவியங்களின் மீது தனிஈடுபாடு கொண்ட பாரதி அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் கொண்ட மாமேதையாவார். தேசிய கவி என்ற முறையிலும் உலகம் தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவித்திறனாலும் அவர் உலகில் தலை சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழ் தன்னிகரற்ற கவியேறு பாரதி, குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், போன்ற படைப்புக்கள் பாரதியின் தன்னிகரற்ற படைப்புக்களாகும். கவிஞராகயிருந்த பாரதி 1904 ம் ஆண்டு முதல் 1906 ம் ஆண்டு வரை பத்திரிகை ஆசிரியராக செயற்பட்டுள்ளார். பாரதி தாசனை முதன்மையாக கொண்டு கவி புனைந்த பாரதி பாடல்களின் இலக்கண கட்டுக்களை தகர்த்தெறிந்தார். இவருக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல் பொருள்கொள் யாப்பு, அணி, என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதையே புனைந்தனர். இலக்கண சட்டங்களை தகர்த்தெறிந்த பாரதி புதுக்கவிதையென புகழப்படும் பாமரரும் கேட்டுணரும் வசனக் கவிதையையும் தமிழுக்கு தந்தவர் சுப்பிரமணியம் பாரதி மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என  பெண்கள் உரிமை தொடர்பிவ் குரல் கொடுத்த முதல் பெண் சுப்பிரமணிய பாரதியார்…. இந்திய நாட்டின் விடுதலைக்கென மக்களை தெளிவு படுத்தும் பல கவிதைகளை புனைந்துள்ள சுப்பிரமணிய பாரதி தேசிய கவியாக போற்றப்பட்டார். 1897 ம் ஆண்டு செல்லம்மா என்பவரை மணந்த சுப்பிரமணிய பாரதி 1898 ம் ஆண்டு தொழில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையை அடைந்தார். அதனைத் தொடர்ந்து எட்டயபுரம் அரண்மனையில் பணிபுரிந்த அவர் சில காலங்களில் எட்டயபுரத்தை விட்டு காசிக்கு சென்றார். பின்னர்; மீண்டும் எட்டயபுரத்து மன்னனால் பாரதி அழைக்கப்பட்டு 1898 ம் ஆண்டு முதல் 1902 ம் ஆண்டு வரை பாரதி அரண்மனையில் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளராக பணிபுரிந்த சுப்பிரமணிய பாரதி இந்தியாவில் ஆலயமொன்றிற்கு வழிபாட்டிற்காக சென்ற அவர் யானை தாக்கியதால் சுகயீனத்துக்குள்ளாகிய நிலையில் கடந்த 1921 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் திகதி தனது 39 ம் வயதில் இறையடிசேர்ந்தார். பாரதியின்; புதுமையை சொல்லும் வகையில் எடுக்கப்பட்டு கடந்த 2000 ம் ஆண்டு வெளிவந்த பாரதி திரைப்படம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினையும் பெற்றது. மேலும் இன்றும் சிறுவர் முதல் பெரியோர் வரை பாரதியின் கவிதைகளையும் பாடல்களையும் படித்து ரசிக்காதவர்கள் சிந்தையைத் தூண்டாதவர்கள் இருக்க முடியாதென்பது மகா கவி பாரதியின் பெருமையை எடுத்தியம்புகிறது, தமிழ் இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றின் புதுமைகள் பலசெய்து பாமர மக்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் தமது படைப்புக்களை வெளிக்கொணர்ந்து மக்கள் மனதில் சிந்தனை எண்ணத்தை தூற்றிவிட்;ட மகாகவி சுப்பிரமணிய பாரதி தமிழ் மொழியில் என்றும் அணையா விளக்கு………… .................................பிரசன்னா


No comments:

Post a Comment

hi