Monday, December 3, 2012

எய்ட்ஸ்



 எய்ட்ஸ் (01.12.2012)
20ம் நூற்றாண்டின்  இறுதிக்காலப்பகுதியிலிருந்து,  இன்று வரை உலகை ஆட்டிப்படைக்கும் பயங்கர ஆட்கொல்லி இது. உலக மனிதர்கள் மத்தியில் பலவிதமான நோய்கள் வந்து மறைந்திருந்தாலும் இந்த நோய் வந்து மனிதன் மறையும் வரை உடலில் ஒட்டியிருக்கும். மனித வரலாற்றில் இதுவரை தீர்வு காணமுடியாத நோயாக உருவெடுத்திருப்பது எச் ஐ வி என அழைக்கப்படும் எய்ட்ஸ் நோயாகும்.  பல மில்லியன் உயிர்களை காவுகொண்டுள்ள இந்த கொடிய நோயைப்பற்றிய முழுமையான விபரங்களை,  அறிந்திருக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் காலத்தின் தேவையாகும். எச் ஐ வி எனப்படும் மிக நுண்ணிய வைரசினால் குறித்த நோய் உருவாக்கப்படுகிறது. எய்ட்சை உண்டாக்கும்  எச் ஐ   வைரஸ், மனித  உடலின் நிர்ப்பீடண தொகுதியை நேரடியாக தாக்குகிறது. அதன் காரணமாக மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாக குறைந்து, பிற்காலத்தில்  பலவிதமான நோய்களுக்கு மனிதன் உட்பட்டு,  இறக்க நேரிடும். ஒருவர் பலருடன் உடலுறவு கொள்ளுதல், பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளுதல், போன்றவை எய்ட்ஸ் நோய் உருவாகுவதற்கு பிரதான காரணமாகும். எனினும் வைத்திய நிறுவனங்களில் பாதுகாப்பற்ற சிகிச்சை முறை, போன்றவையும் எய்ட்ஸ் நோய் தொற்றுவதற்கு காரணமாக அமைகின்றன. மேலும் எய்ட்ஸ் நோயானது தாயிடமிருந்து,  குழந்தைக்கு பரவும் சந்தர்ப்பமும் அதிகம் நிகழ்ந்திருக்கிறது. கர்ப்ப காலம் , மகப்பேரு காலம் மற்றும் தாய்ப்பாலூட்டும்  காலங்களில் குழந்தைகளுக்கும் எய்ட்ஸ் நோய் தொற்றும் வாய்ப்பு காணப்படுகிறது. எச் ஐ வியானது மனித உடலின் எல்லா திரவங்களிலும் படிந்திருக்கிறது. எனினும் இரத்தம் , விந்து, தாய்ப்பால் மற்றும் பெண்ணுறுப்புக்களில் உருவாகும் திரவங்கள் என்பவற்றினூடாகவே அதிகளவில் பரவுகிறது. இதன்காரணமாகவே பாதுகாப்பற்ற உடலுறவு எய்ட்ஸ் நோயை தோற்றுவிக்கும் முக்கிய காரணியாக மாறுகிறது. ஆனால் எய்ட்ஸ் நோய் தொற்றுக்கு உள்ளானவர்களிடம்  நாம் சாதாரண சமூக பழக்க வழக்கங்களில் ஈடுபவடுவதினூடாகவோ, கை குழுக்குதல் , தொடுதல், கட்டியணைத்தல், விளையாடுதல் ஆகியவற்றினூடாகவோ ,வியர்வை ,  கண்ணீர், சிறுநீர் மற்றும் பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்துதல்,  அவர்கள் பயன்படுத்தும் உணவுப்பாத்திரத்தை பயன்படுத்துதல், தும்மல், இருமல் , அவர்கள் பயன்படுத்தும் ஆடைகள்  மற்றும் முத்தமிடுதல் ஆகியவற்றினூடாகவும் பரவுவதில்லை. எச் ஐ வி நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களிடம் பலருக்கு அதன் ஆரம்பநிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிவதில்லை. எனினும் சிலருக்கு புளு காய்ச்சல் எனப்படும் அறிகுறி எச் ஐ வி நோய்த்தொற்றுக்கு உள்ளாகி 3 அல்லது 4 வாரங்களில் தெரியவரும்.  இந்நிலையில்  எச் ஐ வி நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களில் குழந்தைகளுக்கு இரண்டு வருடங்களில் அதன் நோய் அறிகுறிகள் தென்படும். எனினும் வயது வந்தவர்களுக்கு சுமார் 10 வருடங்களுக்கு பின்னரே அதன் நோய் அறிகுறிகள் வெளிப்படும்.  உடல்நலக்குறைவு , காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு, இரவு நேரங்களில் வியர்வை, நடுக்கம்,  வயிற்றுப்போக்கு, வாந்தி,  நெரிக்கட்டுதல்,  போன்ற அறிகுறிகள் வெளிப்படும்.  ஆரம்பநிலையில் எச் ஐ வி தொற்றை கண்டுபிடிப்பது கடினமான விடயமாகும். உடலின் நோய் எதிர்ப்பு கலங்கலான வெண்குருதி சிறுதுணிக்கைகளை எச் ஐ  வைரஸ் முற்றாக அழித்து, உடலிலுள்ள ஏனைய தொகுதிகளையும் ஊடுறுவிய பின்னர், எய்ட்ஸ் நோய்க்கான அறிகுறிகள் வெளிப்படும். உடல் எடை குறைவு, தொடர்ச்சியான காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியன , எச் ஐ வியின் மிக முக்கிய அறிகுறிகளாகும். இவ்வாறு மனிதனை அணு அணுவாக கொல்லும் எய்ட்ஸ் நோய், முதன்முதலில் கடந்த 1981 ம் ஆண்டு,  கண்டுபிடிக்கப்பட்டது.  அமெரிக்காவை சேர்ந்த நபரொருவரே முதலாவது எய்ட்ஸ் நோயாளியாக கண்டுபிடிக்கப்பட்டார். குறித்த நோயாளி கண்டுபிடிக்கப்பட்டு, 7 வருடங்களுக்குள் அதாவது கடந்த 1988 ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ம் திகதிவரை ஒரு லட்சத்து, 19 ஆயிரத்து 818 பேர் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். எனினும் குறித்த நோயை உருவாக்கும் வைரஸ்   கடந்த 1983 ம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தபோதிலும் கடந்த 1986 ம் ஆண்டே  குறித்த வைரஸ் எச் ஐ வி என அடையாளம் காணப்பட்டு, பெயரிடப்பட்டது.  அதற்கமைவாக எய்ட்ஸ் தினம் பற்றிய எண்ணக்கரு முதன்முதலாக கடந்த 1988 ம் ஆண்டில் நடைபெற்ற எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. குறித்த மாநாட்டிலேயே எய்ட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படவேண்டுமென தீர்மானம் எட்டப்பட்டது. அதற்கமைவாகவே ஒவ்வொரு டிசெம்பர் மாதம் முதலாம் திகதி, எய்ட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படவேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், டிசெம்பர் மாதம் முதலாம் திகதி  எய்ட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது,  ஒவ்வொரு நாட்டு அரசுகளும், தன்னார்வ தொண்டர் நிறுவனங்களும் இந்நாளை ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. எய்ட்ஸ் மேலும் பரவாமல் தடுக்குவும், அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களை குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும். இந்நிலையில் கடந்த 1996 ம் ஆண்டு, எய்ட்சுக்காக கூட்டு ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி ,  செயல்பாட்டிற்கு வந்தது. இதுவே,  உலக எய்ட்ஸ் தினத்திற்கான திட்டம் மற்றும் ஊக்குவிப்பை செய்தது.  அதனைத்தொடர்ந்தே கல்வியினூடாக எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு கருப்பொருளின்கீழ், உலக எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 1988 ம் ஆண்டு முதல் ,2004 ம் ஆண்டு வரை எய்ட்ஸ் தினம் ஐக்கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் நிறுவனத்தால், நேரடியாக மேற்கொள்ளப்பட்டுவந்தது. எனினும் கடந்த 2005 ம் ஆண்டு முதல் இதன் பொறுப்பு உலக எய்ட்ஸ் பிரச்சாரம் எனும் அமைப்பிடம் , ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்முறை பூச்சியமாக்குதல் எனும் தொனிப்பொருளில் சர்வதேச எய்ட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. எய்ட்சுக்கான குறியுPடாக சிவப்பு நிற நாடா பயன்படுத்தப்படுகிறது. உலகில் அதிகளவான எய்ட்ஸ் நோயாளர்களை கொண்ட நாடாக, தென்னாபிரிக்கா காணப்படுகிறது.  அங்கு அதிகளவாக பெண்களே எச் ஐ வீ தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். தென்னாபிரிக்காவை தொடர்ந்து, நைஜீரியா மற்றும்  இந்தியா ஆகிய நாடுகள் எச் ஐ வீ நோயாளர்களை அதிகம் கொண்ட நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கடந்த 2006 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி , 3லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள், எச் ஐ வி தொற்றினால் உயிரிழந்திருந்தனர்.  39.5 மில்லியன் மக்கள் எச் ஐ வீ நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியது. இதேவேளை இலங்கையிலும் எய்ட்ஸ் நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்கள் காணப்படுகின்றனர். இவ்வருடம் மாத்திரம் எய்ட்ஸ் நோயினால் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரத்து 597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலகளாவிய ரீதியில் தற்போது, எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வுகள் அதிகரித்துள்ளதாகவும், ஆரம்பகாலத்தை விட தற்போது அதன் தொற்று குறைவடைந்து வருவதாகவும், சுட்டிக்காட்டப்பட்டாலும்,   எச் ஐ வீ நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களின் வீதம் , அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.  இதுவரை எச் ஐ வீ யினை முற்றாக குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கப்படாவிடினும், அதன் தாக்கத்தை குறைப்பதற்கு மனிதனால் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பாவனையிலும் உள்ளது. குணப்படுத்தவே முடியாது என மனிதக்கடவுள்களான விஞ்ஞானிகளாலும்,  வைத்தியர்களாலும் கைவிடப்பட்ட குறித்த நோயிலிருந்து இனிவரும் சமுதாயம் தங்களை பாதுகாத்துக்கொள்வது அவசியமாகும். ஒருவனுக்கு ஒருத்தி எனும் எமது பண்பாடு எய்ட்ஸ் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியுமென்பதை வலியுறுத்தி நிற்கிறது.  ஆசைக்கு அடிமைப்பட்டு ஆபத்தை விலைகொடுத்து வாங்குவதை மனிதகுலம் நிறுத்த வேண்டும். எச் ஐ வீ எனும் கொடூர அரக்கனின் பிடியிலிருந்து, இந்த உலகம் , விரைவில் விடைபெறவேண்டும்.  அதற்கு ஆறரிவு கொண்ட மனிதஇனம் நாம் குறித்த நோய் தொடர்பான விழிப்புணர்வை தங்களுக்குள்ளும், பிறருக்கும் ஏற்படுத்தி தொற்றுநோயற்ற சமுதாயத்தை உருவாக்க முன்வரவேண்டும். ஆபத்தான ஆசையை எறிப்போம். எய்ட்சை பூச்சியமாக்குவோம்......................................... பிரசன்னா 

யுனெஸ்கோ


 யுனெஸ்கோ
ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனங்களில் ஒன்றான யுனெஸ்கோ நிறுவனம் 1945 ம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ம் திகதி உருவாக்கப்பட்டது. அதன் உறுப்பு நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்பாடல் துறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே யுனஸ்கோ நிறுவனத்தின் பிரதான பணியாகும். இதன் மூலம் உலகின் இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் சம நீதி என்பதை உறுதிப்படுத்துவதே இவ்வமைப்பின் நோக்கமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் அதிகார பத்திரத்தில் அடங்கியுள்ள விதிகளின் அடிப்படையில் யுனஸ்கோவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. கல்வி, இயற்கை அறிவியல், சமூக மற்றும் மனித அறிவியல், பண்பாடு, செய்தி தொடர்பு போன்ற 5 விடயங்கள் மூலம் யுனெஸ்கோ அமைப்பின் நோக்கங்கள் நிறைவேற்றப்படுகின்றன.  இந்நிலையில் உலகில் இடம்பெற்ற பல்வேறு பிரச்சினைகளில் தலையிட்டு அதற்கான  தீர்வைப்பெற்றுக்கொடுப்பதில் யுனஸ்கோ பாரிய பங்கு வகித்தது. 1950 முதல் 1908 ம் ஆண்டு வரை இன வெறிக்கெதிராக யுனெஸ்கோ பாடுபட்டது. இதன்போது 1956 ல் ஆபிரிக்க குடியரசு தமது நாட்டின் இனப்பிரச்சினையில் யுனெஸ்கோ தலையிடுவதாக கூறி அதன் உறுப்புரிமையிலிருந்து விலகி கொண்டது. அதன் பின்னர்; நெல்சன் மண்டேலா தலைமையில் மீண்டும் யுனெஸ்கோவுடன் இணைந்தது. 1968 ம் ஆண்டு யுனெஸ்கோ மாநாட்டின் விளைவால் “ மனிதன் மற்றும் உயிர்கோள திட்டம்” உருவானது. 1989 ல் உலகளாவிய வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. யுனெஸ்கோ தனது நடவடிக்கைகளை அதன் 5 நிரல்கள் மூலமாக தனது செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. சமூக அக்கறையுள்ள நிகழ்வுகள் தினங்கள் என்பவற்றை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்ட யுனெஸ்கோ திட்டங்களை வகுப்பதற்கான நிதியுதவிகளையும் பெற்றுக்கொடுத்தது. 323 சர்வதேச அரச சாரா நிறுவனங்களுடன் குறித்த அமைப்பு உத்தியோகப+ர்வ உறவுகளைக்கொண்டது. அனைவருக்கும் தரம் வாய்ந்த கல்வி, வாழ் நாள் முழுவதும் கல்வி, செய்தி தொடர்பு மூலம் அறிவார்ந்த சமூகத்தை ஏற்படுத்தல் என்பவற்றிற்கு யுனெஸ்கோ முன்னுரிமை வழங்கியது. ஜெனிவாவில் யுனெஸ்கோ சர்வதேச கல்வி பணியகம் நிறுவப்பட்டுள்ளது. அதில் கல்விசார் கருத்துக்கள், முறைகள் மற்றும் கட்டமைப்புக்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் யுனெஸ்கோ கூட்டு மற்றும் தேசிய அலுவலகங்களுக்கு பிரத்தியேகமாக ஆதரவளித்தது. அதன் நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் பிரத்தியேகமான துறைகளை யுனஸ்கோ அமைப்பின் நிறுவனங்களாகும். யுனெஸ்கோ தபால் தலைகளை பலநாடுகள் வெளியிட்டுள்ளன. குறித்த அமைப்பின் முத்திரையில் அதன் தலைமை அலுவலக அமைப்பும் ஒரே பொருளை அடிப்படையாக கொண்டுள்ளன. 1955 ல் ஐக்கிய நாடுகளின் அஞ்சல் நிர்வாகம் யுனெஸ்கோவை பெருமைப்படுத்த அஞ்சல் தலைகளை வெளியிட்டது. குறித்த தபால் தலைகள் பல்வேறு நாடுகளின் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டன. இதேவேளை 193 உறுப்பு நாடுகளையும் 7 பங்கு பற்று உறுப்பினர்களையும் கொண்;ட யுனெஸ்கோ அமைப்பு களப்பணி அலுவலகங்கள் மூலமாக செயற்படுகிறது. வரலாற்று திட்டங்களை உயர்த்துதல், உலக பண்பாடு மற்றும் இயற்கை மரபுரிமை ஆகியவற்றை பாதுகாப்பதற்கு உலகளாவிய ஒத்துழைப்புக்களை பெறுவதே யுனஸ்கோவின் திட்டமாகும். இது உலக நாடுகளின் முன்னேற்ற குழுவின் ஓர் அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது............................................................................................பிரசன்னா 

கலைவாணர் என்.எஸ்.கிருஸ்ணன்


கலைவாணர் என்.எஸ்.கிருஸ்ணன். 29.11.2012

தமிழ் சினிமா துறையில் பல கலைஞர்கள் உருவாகி சாதித்து மறைந்திருந்தாலும் எம் ஞெ;சில் நீங்காத இடத்தை பிடித்த சிலரே உள்ளனர். அவர்களில் தங்களின் தனித்துவத்தைப் பேணிய கலைஞர்களே இன்றும் பேசப்படுகின்றனர். இந்திய தமிழ் திரையுலகில் உதித்த நகைச்சுவையாளர்களில் தனது தனித்தன்மை வெளிப்பாட்டினால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்களில் இவரும் ஒருவர். இவர்  அனைவராலும் கலைவாணர் என அழைக்கப்பட்டார். நகைச்சுவையில் சமூக கருத்துக்களையும் மக்களை விழிப்படைய செய்யும் சிந்தனைகளையும் உட்படுத்தி ரசிகர்களையும் சிரிக்கவைத்தவர் பழம் பெரும் நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஸ்ணன் ஆவார். இவர் கடந்த 1908 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இந்தியாவின் நாகர் கோவில் எனும் ஊரில் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணன் சிறுவயதிலேயே நாடககொட்டகைகளில் குளிர்பானம் விற்கும் பையனாக தொழில்புரிந்து வந்தார். பின்னர் சாதாரண வில்லுப்பாட்டு கலைஞராக தன்னை கலையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து நாடகத்துறையில் நுழைந்த அவர் சொந்த நாடக கம்பனியை நடத்தும் அளவிற்கு தன்னை வளர்த்துக்கொண்டார். அதே காலப்பகுதியில் தமிழ் திரைப்படத்துறை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்பட்டது. இந்நிலையில் திரையுலகில் நுழைந்த என்.எஸ்.கிருஷ்ணன் நகைச்சுவை பாத்திரத்தை தெரிவு செய்து அதில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி தன்னையொரு சிறந்த முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்த்து திரையுலகில் நிலையான இடத்தினை பெற்றார். இவர் நடித்த முதலாவது திரைப்படம் கடந்த 1936 ஆம் ஆண்டு வெளிவந்த சதீலீலாவதி எனும் திரைப்படமாகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும் திரைப்படத்திலும் பயன்படுத்துவதை வளக்கமாக கொண்டிருந்தார். அவர் யார் மனதையும் புண்படுத்தாமல் தனது நகைச்சுவை மூலமாக சமுதாயத்திற் கருத்துக்களை பரப்பினார். இவரது மனைவி மதுரம் என்பவரும் பிரபல நடிகை என்பதன் காரணத்தினால் இவர்கள் இருவரும் இணைந்தே பல திரைப்படங்களில் நத்திருந்தனர். இதேவேளை நகைச்சவைகளை சினிமா காட்சிகளா மாத்திரமன்றி பாடல்களாகவும் அமைக்க முடியுமென நிரூபித்தவர் கலைவானன் என்.எஸ்.கிருஷ்ணன் ஆவார். ஒரு நடிகனாக மாத்திரமன்றி சிறந்த சமுதாய விழிப்புணர்வு கருத்தக்களை கொண்ட மனிதனாகவும் ஒரு பாடகராகவும் படைப்பாளியாகவும் பன்முகத்திறமைகளை தனக்குள் கொண்டவர் ஆவார். பழங்கால கலைகளில் பண்பினை வீணடிக்காமல் அவற்றை புதமைப்படுத்தி மக்களுக்கு ஏற்ற விதத்தில் தந்தவர் கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணன் அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டுமென அக்கறை மற்றும் ஆர்வம் கொண்ட அவர் தான் நடித்த ஏரத்தாள 150 திரைப்படங்களுக்குமே தனது சீர்த்திருத்த கருத்துக்களை தைரியமாக திரையில் எடுத்துச் சொன்னவர் ஆவார். திரையுலகில் சமுதாய சீர்த்திருத்த கருத்துக்களை வாரி வழங்கிய இவர் தனது சொந்த வாழ்க்கையில் ஏனையவர்களுக்கு உதவிகளை வாரி வழங்குவதிலும் வல்லலாகவே காணப்பட்டார். காந்தியடிகள் மீது அதிக பற்றுக்கொண்ட என்.எஸ்.கிருஷ்ணன் தனது சொந்த செலவில் அவருக்கு நினைவுத் தூபியையும் எழுப்பியுள்ளமை அவரது தேசப்பற்றினை எடுத்துக்காட்டியது. இதேவேளை இவ்வாறான கலையுலக வாழ்வை ரசனையுடன் வாழ்ந்த என்.எஸ்.கிருஷ்ணன் அவ்வப்போது சில பிரச்சினைகளிலும் சிக்குண்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இவரது வாழ்க்கையில் இவர் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டமை இவரது கலைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.  30 மாத சிறைவாழ்க்கையின் பின்னர் விடுதலை பெற்ற கலைவானன் என்.எஸ்.கிருஷ்ணன் மீண்டும் தனது திரையுலக வாழ்வை ஆரம்பித்து திரையுலகில் தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டார். அவர் நடித்த அம்பிகாபதி, மதுரை வீரன், நல்லதம்பி ஆகிய திரைப்படங்கள் அவருக்கு பெரும் புகழை பெற்றுக்கொடுத்தது. மேலும் ஒரு இயக்குனராக அவர் பணம் மற்றும் மணமகள் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமுதாய கருத்துக்களை நகைச்சுவையின் ஊடாகவும் திரைப்பட பாடல்கள் ஊடாகவும் இவர் வெளிப்படுத்தும் பாணியை தற்போதைய தமிழ் திரையுலக நகைச்சுவை நடிகரான விவேக் பின்பற்றி வருவதன் காரணமாக அவருக்கு சின்னக்கலைவானன் எனும் பட்டமும் வழங்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. தமிழ் திரையுலக வரலாற்றை பொறுத்தவரை நகைச்சுவையில்  புதிய பரிமாணத்தை புகுத்தி தமிழ் திரையுலகில் அனைவரும் எதிர்பார்க்கும் அளவிற்கு தனது பாத்திரத்தாலும் நடிப்பினாலும் கொண்டுச் சென்ற கலைவாணன் என்.எஸ்.கிருஷ்ணன் சுகயீனமுற்ற நிலையில் கடந்த 1957 ஆம் ஆண்டு ஓகஸ்;ட் மாதம் 30 ஆம் திகதி தனது 49 ஆவது வயதில் உயிரிழந்தார். அவரை கௌரவப்படுத்தும் முகமாக தமிழ் நாடு அரசு சென்னையிலுள்ள அரச அரங்கத்திற்கு கலைவானர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது. மேலும் குறுகிய காலமே திரையுலகை ஆட்சி செய்திருந்தாலும் தான் திரையுலகில் வாழ்ந்த காலம் பொற்காலம் என நிரூபிக்கும் அளவிற்கு தன்னை நிலைநிறுத்தி தமிழ் திரையுலக வரலாற்றில் தனக்கும் ஒரு பங்குண்டு என்பதை நிரூபித்துச் சென்று கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணன் கலையுலகில் முத்தான சொத்துக்களில் ஒருவர் ....................................................................................................................................பிரசன்னா 

புரூஸ்லீ


புரூஸ்லீ………………..
ஹொலிவுட் திரைப்படங்களில் ஏவுகணைகளையும் ஏகே 47 துப்பாக்கிகளையும் பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்களின் ரசனையை மாற்றிய வீரர் இவர். கைகளையும் கால்களையும் பயன்படுத்தி  உலகை வெல்ல முடியுமென உணர்த்தியவர் இவர். சீனாவின் தற்காப்பு கலையை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்ற பெருமைக்குரிய தற்பாதுகாப்பு கலை நிபுணர். இவர்  குன்ப+ கலையின் பிதா மகன் எனவும் அழைக்கப்படுகிறார். 6 படங்களில் மாத்திரம் நடித்திருந்தாலும் உலகின் மூலை முடுக்கெங்குமுள்ள ஒவ்வொரு திரை உலக ரசிகனையும் தனது அற்புத கலை நுட்பத்தால் தன்பால் ஈர்த்த ஹொலிவுட் நடிகர் புரூஸ்லி இவர் கடந்த 1940 ம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ம் திகதி அமெரிக்காவின் ஜோன் ப்ரான்சிஸ்கோவின் சைனா டவுன் எனும் பகுதியிலுள்ள மருத்துவ மனையொன்றில் புரூஸ்லி பிறந்தார். இவரது தந்தையான லீ ஹோய் சுவேன் ஒரு நடிகர் ஆவர். இவரது தயாரின் பெயர் க்ரேஸ் என்பதாகும். புரூஸ்லிக்கு அவரது பெற்றோர்கள் சீன மொழியில் உலக பாதுகாவலர் என பொருள் படும் லீ ஜூன்பேன் எனும் பெயரை சூட்டினர். எனினும் புரூஸ்லி  பிறந்த வைத்தியசாலையில் அவருக்கு மருத்துவம் செய்த தாதி என அவரை புரூஸ் என செல்லமாக  அழைக்க அதுவே இவரது பெயராக பிற்காலத்தில் நிலைபெற்றது. புரூஸ்லி பிறந்து 3 மாதமாகும் போது அவரது  குடும்பம் சீனாவின் ஹொங்கொங்கிற்கு வருகை தந்தது. இந்நிலையில் தனது 12 வது வயதுவரை ஹொங்கொங்கிலுள்ள லோஷல் கல்லூரியில் கல்வி பயின்ற புரூஸ்லி பின்னர் ப்ரான்சிஸ் சேவியர் கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த 1959 ம் ஆண்டு  தனது 18 வது வயதில் ஹொங்ஹோங்கில் ஒரு நபரை புரூஸ்லி தாக்க அதனை அறிந்து கொண்ட அவனது பெற்றோர் அவரைப் பாதுகாப்பதற்காக புரூஸ்லியை ஜோன் ப்ரான்சிஸ்கோவிற்கு அனுப்பி வைத்தனர். குறித்த நபரை புரூஸ்லி தாக்கிய போது அவர் பயன்படுத்திய தற்காப்பு கலை பரவலாக  பேசப்பட்டது. பின்னர் சென் ப்ரான்ஸிஸ்கோவில் தனது படிப்பை தொடர்ந்தார் புரூஸ்லி. அவரது தந்தை ஒரு நடிகர் என்பதால் சிறுவயதிலிருந்தே அவ்வப்போது திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களை ஏற்று புரூஸ்லி நடித்துள்ளார். மேலும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் புரூஸ்லி நடித்தார். அதற்கமைய திரை உலக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பார்வை புரூஸ்லி மீது விழுந்தது. அதனைத் தொடர்ந்து கோல்டன் ஹோவஸ்ட் எனும் நிறுவனம் கடந்த 1971 ம் ஆண்டு தயாரித்த பிக் போஸ் எனும் திரைப்படத்தில் புரூஸ்லி முதன் முதல் கதா நாயகனாக நடித்தார். எனினும் அதற்கு முன்பே மர்லோ எனும் திரைப்படத்தில் முக்கிய கதா பாத்திரமொன்றில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் முதல் கதாநாயகனாக நடித்த த பிக் போஸ்  திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே புரூஸ்லி ஹொங்கொங் முழுவதும் பிரபலமாக அறியப்பட்டிருந்தார். இவர் பொக்சின் மற்றும் ஏனைய தற்காப்பு கலைகளில் காட்டிய திறமையின் காரணமாக இவர் பரவலாக  அறியப்பட்ட நிலையில் பிக்போஸ் திரைப்படம் வெளிவந்தது. அதற்கமைய திரைப்படமானது ஆசியாவில் 12 மில்லியன் டொலர்களை வசூலித்து மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இவரின் அதி வேக சண்டை காட்சிகள் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 1972 ம் ஆண்டு வெளிவந்த பிஸ்ட் ஒப் பிவுரி திரைப்படம் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலித்து மிகப் பெரிய வெற்றியடைந்தது. அதே ஆண்டில் புரூஸ்லி கதை எழுதி இயக்கிய வே ரூ த ட்ராகன் திரைப்படம் புரூஸ்லியின் புகழை உலகளவில் கொண்டு சென்றதோடு அவருடன் சேர்;ந்து குங்ப+ கலையும் பிரபல்யமடைந்தது. இக்கால கட்டத்தில் புரூஸ்லியின் குங்ப+ கலை ஹொலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக்கொடுத்த புரூஸ்லி இளைஞர்களின் ஆதர்ஸ நாயகனாக உருவெடுத்தார். புரூஸ்லி சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் எதிரியை தாக்கும் வேகத்திற்கு அன்றைய தொழிநுட்பத்தால் கூட ஈடுகொடுக்க முடியவில்லை. மேலும் தனது உடம்பை எவ்வாறு பேணுவது என்று உலகுக்கு கற்றுக்கொடுத்த ஆசானும் இவராவார். இவ்வாறு குங்ப+ கலையை வளர்ப்பதில் அதிக நாட்டம் செலுத்திய புரூஸ்லி குங்ப+ கலைக்குள் பல வித்தியாசமான முறைகளை உலகிற்கு வெளிப்படுத்தினார். அதற்கமைய அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புரூஸ்லி உருவாக்கிய என்டர் த ட்ராகன் திரைப்படம் ஹொலிவுட்டை மாத்திரமின்றி உலகையே ஆட்கொண்டது. குறித்த திரைப்படமானது அன்றைய காலப்பகுதியில் அமெரிக்காவில் மாத்திரம் 8 இலட்சத்து 50 ஆயிரம் டொலர்களை வசூலித்தது. உலகம் முழுவதும் 200 மில்லியன் டொலர்களை வசூலித்து வெற்றி நடைபோட்ட என்ர த ட்ராகன் திரைப்படம் புரூஸ்லியை தற்காப்பு கலையின் முடிசூடா மன்னன் ஆக்கியது.  ஆனால் குறித்த திரைப்படத்தின் வெற்றியை புரூஸ்லியால் பார்க்க முடியவில்லை என் ட ட்ராகன் திரைப்படம் வெளியாவதற்கு 3 வாரங்களுக்கு முன்பே அதாவது கடந்த 1973ம் ஆண்டு ஜூலை மாதம் 20 ம் திகதி புரூஸ்லி தனது 32 வது வயதில் மர்மமான முறையில் மரணத்தை தழுவினார். அன்றிரவு தூக்க மாத்திரையை எடுத்துக்கொண்டு உறங்கிய தற்காப்பு கலையின் நாயகன் பின்னர் கோமா நிலைக்கு சென்று ஹொஹ்கோங்கிலுள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமலையே காலமானார். இன்றுவரை புரூஸ்லியின் மரணம் மர்மமாகவே உள்ளது. புரூஸ்லி என்ற சகாப்தம் சொற்ப காலங்கள் மாத்திரமே திரை உலகை ஆட்சி செய்தாலும் திரை உலகின் போக்கையே மாற்றிச் சென்றார்.  புரூஸ்லியின் அசைவுகளில் செய்து பார்க்காத ரசிகர்களே இல்லைய அன்றைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை ஒவ்வொருவரது வீட்டிலும் புரூஸ்லியின் தற்காப்பு கலை அடையாள புகைப்படங்கள் அவரை நினைவு கூறிக்கொண்டே இருக்கிறது. மேலும் கராத்தே கலையுடன் சில நுணுக்கங்களை சேர்த்து புரூஸ்லி உருவாக்கிய புதிய தற்காப்பு கலை அவரது பெயரிலேயே புரூஸ்லி குங்ப+ என அழைக்கப்பட்டது. இதனை தத்துவ பாடத்துடன் இணைத்து ஜே கே டி எனும் புதிய பயிற்சியை புரூஸ்லி அறிமுகப்படுத்தினார். மேலும் உள்ளொளி தற்காப்பு கலையான ஜூட் குண் டோ வை தோற்று வித்தவரும் இவராவார்.  இதனிடையே ஒரு அங்குல தாக்குதல் என்பதை அறிமுகப்படுத்தி அனைவரையும் வியப்படையச் செய்தார். தாக்கப் போகும் நபருக்கும் இவருக்குமிடையே ஒரு அங்குல இடைவெளி இருந்தாலும் எதிரியை நிலைகுலைய செய்யலாமென கூறியதோடு அதனை நிரூபித்துக் காட்டினார். புரூஸ்லியை தொடர்ந்து இவரைப்போன்ற மாதிரிகள் பலர் உருவாகியிருந்தாலும் புரூஸ்லிக்கு முன்பும் அவருக்கு பின்பும் உண்மையான தற்காப்பு கலை அடைந்த நடிகன் இல்லை. இந்நிலையில் அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹொங்கொங் அரசு அவரது  முழு உருவ வெண்கல சிலையொன்றை நிறுவியுள்ளது. மேலும் டைமஸ் பத்திரிகை நடத்திய கடந்த நூற்றாண்டில் சமூகத்தை பாதித்த சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் புரூஸ்லியும் இணைக்கப்பட்டுள்ளார். என்டர த ட்ராகன், த பிக் போஸ். கேம் ஒப் டெத், பிஸ்ட் ஒப் பிவுரி, வே ஒப் த ட்ராகன் ,உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தற்காப்பு கலை நிபுணராக வளர்ந்ததோடு அனைத்துலக திரையுலக ரசிகர்கள் மனதில் ரோல் மொடலாக வளர்ந்து இன்றும் நினைவுகளோடு வாழும் புரூஸ்லி 20 ம் நூற்றாண்டின் தன்னிகரற்ற தற்பாதுகாப்பு கலை நிபுணர்களில் ஒருவர்.......................பிரசன்னா 

சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா


சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா

ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முன்னிலை வகிக்கும் காரணிகளில் கல்வி அறிவு பிரதான பங்குவகிக்கிறது. அதற்கமைய ஒரு நாட்டின் கல்வி நிலையினை வளர்ப்பதற்கு ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் முன்னின்று உழைக்கும் அளவிற்கு கல்வி என்ற ஒன்று முக்கியத்துவம் அடைந்துள்ளது. அந்த வகையில் “கண்ணுடை என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையார் கல்லாதார்” எனும் வல்லுவனின் வாக்குக்கமைய ஒவ்வொரு நாட்டிற்கும் இரண்டு கண்களாகவே பார்க்கப்படுகிறது. ஆசியாவை பொறுத்தவரையில் இலங்கையின் கல்வி அறிவு வீதத்தை அதிகரிப்பதற்கு பாடுபட்;ட தலைவர்களில் இலங்கையின் இலவசக் கல்வியின் தந்தை எனப்போற்றப்படும் சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரா முதன்மை பெற்றுள்ளார். இவரே இலங்கையில் முதன் முதலில் இலவசக் கல்வியினை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவராவார். இவர் கடந்த 1884 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ம் திகதி அம்பலாங்கொடையில் பிறந்தார். கிறிஸ்த்தோபர் வில்லியம் விஜயகோன் கன்னங்கர எனும் சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர தனது ஆரம்பக் கல்வியை அம்பலாங்கொடை வெஸ்லி ஆங்கில உயர் பாடசாலையிலும் பின்னர் காலி ரிச்மன்ட் கல்லூரியிலும் மேற்கொண்டார். பிரித்தானிய ஏகாதிபத்திய நாடுகளில் மிகச் சிறந்த மாணவர்க்குரிய பரிசையும் இவர் பெற்றார். பின்னர் இவர் மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். தொடர்ந்து சட்டத்துறையில் தகுதி பெற்ற அவர் பின்பு காலியில் சட்டத்தரணியாக கடமையாற்றினார். தனது  சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி கடந்த 1919 ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். அவர் அரசியலில் பல நகர்வுகளை மேற்கொண்டு கடந்த 1931 ம் ஆண்டு இலங்கையில் கல்வி அமைச்சரமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அதற்கமைய அன்றிலிருந்து 1946 ம் ஆண்டு வரை இலங்கையின் கல்வி அமைச்சராக செற்பட்டு நாட்டின் கல்வி வளர்ச்சியில் அளப்பெரிய சேவையினை வழங்கியுள்ளார். அவரை இன்றும்  கல்வியின்  தந்தையாக இலங்கையின் கல்வி வளர்ச்சியின் கடவுளாக போற்றுவதற்கும் அவரால் அமுல்படுத்தப்பட்ட முதலாம் தரம் முதல் பல்கலைக்கழகம் வரையான இலவச கல்வி திட்டம் காணப்படுகின்றது. உண்மையிலும் அவர் கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் தாய் மொழியை கல்விய+டாக மொழியாக்குதல் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்றல் மத்திய மகா வித்தியாலயத்தை ஆரம்பித்தல் போன்ற திட்டங்களும் ஒவ்வொரு பிள்ளைக்கும் தமது பெற்றோரின் சமயத்தை கற்பித்தல் குறைந்த வருமானம் உடைய குடும்பங்களை சார்ந்த பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் வழங்குதல் பொதுவான பாடத்திட்டம் தயாரித்தல் பாடசாலைகளுக்கு விளையாட்டு மைதானங்களை அமைத்துக்கொடுத்தல் போன்ற திட்டங்களையும் முன்னெடுத்தார். மேலும் மாணவர்கள் இசை, நடனம், மெய் வல்லுனர் விளையாட்டுக்கள் ஆகியவற்றை கற்க ஆரம்பித்தல், 2 ம் தரம் முதல் ஆங்கிலப் பாடம் கற்பதை கட்டாயமாக்குதல் போன்றவை அவர் கல்வித்துறைக்கு ஆற்றிய சேவைகளில் முக்கியமானவையாகும் இவரது கல்வி தொடர்பான திட்டங்களாக இலங்கையில் கல்வி நிலையில் புதிய திருப்பத்தினை ஏற்படுத்தியது. அன்றைய காலப்பகுதியில் ஆசியாவில் மிக அபிவிருத்தி அடைந்த நாடு எனும் நிலையை இலங்கை அடைந்தது. வெளிநாட்டவரின் ஆதிக்கத்தின் கீழிருந்த ஒரு கட்டமாக இருந்த போதிலும் இலங்கையின் கல்வி நிலையை உயர்த்துவதற்கு தோள் கொடுத்த மகானாவான் கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு எனும் வாக்கியத்தை இலங்கை வாழ் மக்களுக்கு உரித்தாக்கி இறந்தும் வாழ் மகானாவார். தற்போது எங்கோர் மூலையிலுள்ள ஏழையும் கல்வியைப் பெறுவதற்கு வழிசமைத்த சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர இலங்கை கல்வித்துறையில் தன்னிகரற்ற தலைவர் ஆவார். இவ்வாறு இலங்கை மக்களை உலகளாவிய ரீதியில் முன்னிலைப்படுத்த அயராது உழைத்த சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரா கடந்த 1969 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ம் திகதி தனது 75 வது வயதில் உயிர் நீத்தார். இறந்தும் வாழும் சகாப்தம் என்பதையும் தாண்டி இன்று இலங்கையிலுள்ள ஒவ்வொரு மாணவர்களும் சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா என்பரை வணங்கியே கல்விக்குள் நுழைவது அவரை பெருமை சேர்க்கும் விடயமாகும்.அழியா சொத்தான கல்வியைத் தந்த தேசிய கல்வித் தந்தை சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா இலங்கை வரலாற்றில் அழியாத வரலாற்று நாயகன்.................................................................பிரசன்னா 

சேர் பொன்னம்பலம் ராமநாதன்



சேர் பொன்னம்பலம் ராமநாதன்…26.11.2012

இலங்கை வரலாற்றில் பல அரசியல் தலைவர்கள் உருவாகி சாதித்து இறந்தும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதில் தமிழ் இனத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பல முன்னணி தேசிய தலைவர்களும் எமக்கு வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்துள்ளனர். அந்த வகையில் இலங்கையின் தேசிய தலைவர்களுள் ஒருவரும் சிறந்த அரசியல்வாதியாகவும் வாழ்ந்தவர், சேர். பொன்னம்பலம் ராமநாதன் இவர் கடந்த 1851 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ம் திகதி யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த கேட் முதலியார் அருணாசலம் பொன்னம்பலத்திற்கு இரண்டாவது மகனாக கொழும்பில் பிறந்தார். இவர் குமார சுவாமி முதலியார் மற்றும் இலங்கையின் தேசிய தலைவர்களுள் ஒருவரான சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரருமாவார். இவர் தனது ஆரம்ப  கல்வியை கொழும்பு வேத்தியர் கல்லூரியில் பயின்றார். பின்னர் தனது 13 வது வயதில் பிரசிடன்சி கல்லூரியில் கல்வி கற்பதற்காக இவர் சென்னைக்கு சென்றார். அதனைத் தொடர்ந்து சட்டக் கல்வியை பயின்ற இவர் கடந்த 1873 ம் ஆண்டிலேயே உயர்நீதிமன்ற வழக்கறிஞரானார். பின்னர் சொலிஷ்டர் ஜெனரலாக பதவிவகித்து கடந்த  1906 ம் ஆண்டு தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இதனிடையே கடந்த 1879 ம் ஆண்டு இலங்கையின் சட்ட சபை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சேர் பொன் ராமநாதன் கடந்த 1911 ம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் சட்ட சபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். இந்நிலையில் விக்டோரியா மகா ராணியின் 50 ஆண்டு நிறைவு விழாவுக்கு இலங்கையின் பிரதிநிதியாக செல்வதற்கு சேர் பொன் ராமநாதனே தெரிவுசெய்யப்பட்டார். குறித்த விழாவின் போது அவருக்கு இலங்கையின் முழுமையான தேசியவாதியென பிரித்தானியா அரசு தங்க பதக்கம் வழங்கி கௌரவித்தது. மேலும் கடந்த 1921 ம் ஆண்டு  அவர் பிரித்தானியா அரசினால் சேர் பட்டம் வழங்கி  கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் கொண்ட இவர் இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி நாட்டவர்களின் நலன்களை பாதுகாத்தார். மேலும் அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர்களின் கொடுமையில் சிக்குண்ட சிங்கள தலைவர்களை போராட்டத்தின் மூலம் மீட்டெடுத்து அனைத்தின மக்களும் இன வேறுபாடின்றி அனைவராலும் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். இவர் அரசியல் மூலம் மக்களுக்கு பல நலத்திட்டங்களை மேற்கொண்டு அனைத்தின மக்களின் இதயத்திலும் இடம் பிடித்தார். பின்னர் சமயத் தொண்டுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சேர் பொன் இராமநாதன், இந்துக்களின் கல்வி மேம்பாட்டிற்காக இவர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே இரண்டு பாடசாலைகளை நிறுவியுள்ளார். இவற்றில் உடுவிலில் அமைந்துள்ள ராமநாதன் பெண்கள் கல்லூரி இன்றும் யாழப்பாணத்தின் மிக முக்கிய கல்லூரிகளில் ஒன்றாக விளங்குகின்றது. இவரால் ஆண்களுக்காக அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பரமேஷ்வரா கல்லூரி கடந்த 1970 ம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் யாழ் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் ஒரு பகுதியாக்கப்பட்டது. இதேவேளை பல சமய தத்துவம், யோக நெறி என்பவற்றை தெளிவாக கற்றறிந்த சேர் பொன்னம்பலம் ராமநாதன் கீழத்தேய மெய்யியல் தூதுவராக கடந்த 1905 ம் ஆண்டு முதல் 1906 ம் ஆண்டு வரை அமெரிக்காவுக்கு சென்று  சொற்பொழிவுகள் ஆற்றி பெயர் பெற்றார். இதேவேளை கடந்த 1906 ம் ஆண்டு சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் முதல் மாநாட்டிற்கு தலைமை வகித்த பெருமைக்குரியவர் ஆவார். இதனிடையே சேர் பொன் ராமநாதனின் தந்தை கடந்த 1857 ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்டிமுடித்த ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயம் எழுந்தருளிய இடத்திலேயே இவர் கடந்த 1907 ம் ஆண்டு கருங்கற் பனியாக புதிய கோயிலொன்றை கட்ட ஆரம்பித்து கடந்த  1912 ம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ம் திகதி கும்பாவிசேகம் செய்வித்தார். இதேவேளை கடந்த 1923 ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் சைவ வித்தியா விருத்தி சங்கம் தோன்றுவதற்கு காரணமாக இருந்த சேர் பொன் ராமநாதன் அதன் முதல் தலைவராகவும் பள்ளிககூடங்களின் முகாமையாளராகவும் அதன் போசகராவும் விளங்கினார். இந்நிலையில் இவர் கடந்த 1930 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி 79 வயதில் இறையடி சேர்ந்தார். இவ்வாறு தனது சொந்த வாழ்விலும் சமூக வாழ்விலும் பொது நலன் கருதியே வாழ்ந்த இவரை கௌரவிக்கும் முகமாக இலங்கை அரசாங்கத்தினால். பழைய பாரளுமன்ற கட்டிட தொகுதியில் சேர் பொன் ராமநாதனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாழ்ந்த தமிழ் தலைவர்களில் அனைத்தினத்தவரும் ஏற்றுக்கொண்ட தேசிய தலைவராக வாழ்ந்த சேர் பொன்னம்பலம் ராமநாதன் இலங்கையின் வரலாற்று நாயகர்களில் ஒருவர். .............................................................................பிரசன்னா 

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிக்கும் நாள்… 25.11.2012


பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிக்கும் நாள்… 25.11.2012
உலகில் ஆண்களுக்கு நிகராக நாங்களும் வரவேண்டும் எனும் இலட்சியப் போக்குடன்   பல நாடுகளில் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் தங்களின் தன்னம்பிக்கையும் வளர்த்து சாதித்து வருகின்றனர். பெண்கள் நாட்டின் கண்கள்  என சொல்லுமளவிற்கு முக்கியமானவர்கள். இறைவனின் படைப்பின் உன்னத படைப்பான பெண்கள் இந்த உலகில் ஆக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர்கள். அவ்வாறிருக்கும் பெண்கள் பல வன்முறைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் உட்படுத்தப்படுவது உலகில் சாதாரண விடயமாக மாறிவந்துள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 25 ம் திகதி பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்புநாள் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன. இன்றைய சமுதாயத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் பல விதங்களில் இடம்பெறுகின்றன. தொழிற்சாலைகளில் அலுவலகங்களில் மருத்துவ மனைகளில் பாடசாலைகளிலென பல இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன. இதேவேளை குடும்ப உறுப்பினர்களாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பொதுவாக துஷ்பிரயோகம் குடும்ப வன்முறை, சீதனக் கொடுமை, பெண் சிசுக் கொலை, பாலியல் வல்லுறவு, தரக் குறைவாக நடத்துதல், அடிமைத்தனம் மற்றும் உடல் உள ரீதியான துன்புறுத்தல்கள் என்பன பெண்களுக்கு எதிரான வன்முறைகளாக காணப்படுகின்றன.  கடந்த 1999 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ம் திகதி இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தின் போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. குறித்த தினம் அனுஸ்டிக்கப்படுகின்றமைக்கு 3 சகோதரிகள் முக்கிய காரணிகளாக அமைந்தனர். கடந்த 1960 ம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ம் திகதி டொமினிக் குடியரசின் மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்பட்ட 3 சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக  அந்நாட்டின் ஆட்சியாளன் ரபாயல் டுருஜிலியோ உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்படும் பெண்களுக்கு எதிராக இவர்கள் குரல் கொடுத்ததன் காரணமாகவே மூவரும் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கமைய மறக்க முடியாத வண்ணத்துப்ப+ச்சிகள் என பின்னர் உலகில் பெயர் பெற்ற குறித்த மெராபல் சகோதரிகள் லத்தீன் அமெரிக்காவின் பெண்களுக்கெதிரான வன்முறை கொடுமையின் சின்னமாக மாறினர். இந்நிலையில் கடந்த 1980 ம் ஆண்டு முதல் குறித்த நாளானது அவர்களின் படுகொலைளை நினைவு கோர்வதற்காகவும் பால் நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் அனுஸ்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 1999 ம் ஆண்டு முதல் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளான நவம்பர் மாதம் 25 ம் திகதி  , பெண்களுக்கு  எதிரான அனைத்துலக வன்முறை எதிர்ப்பு நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நவம்பர் மாதம் 25 ம் திகதி முதல் தொடர்ந்து வரும் 16 நாட்களுக் பால் நிலை வன்முறைகளுக்கெதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். நவம்பர் மாதம் 25 ம் திகதி முதல் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் மாதம் 10 ம் திகதி வரை குறித்த செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை தன்னை கொழுத்துவோமென பாரதியார் சொன்ன கூற்றுக்கு அமைய பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க உலக வாழ் மனிதர்கள் நாம் ஒன்று சேர்வோம்...............................................பிரசன்னா