Monday, October 15, 2012

அப்துல் கலாம்


அப்துல் கலாம்


நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதை எல்லாம் விட நீ சிறந்தவன், ‘உயர்ந்தவன்’ என்ற உறுதி வேண்டும்! இன்னல்களும் பிரச்சினைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புக்கள் என்பது எனது நம்பிக்கையென பொன்மொழி தந்தவர். “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கங்கள்! எனும் ஒரு வாக்கியத்தால் உலகளாவிய இளைஞர்களுக்கு உறுதி மொழி வழங்கியவர். சாதாரண கிராமம் ஒன்றில் பிறந்து ஒரு நாட்டை ஆளும் தலைவர் என்ற அந்தஸ்த்தை பிடித்து உலகளாவிய விஞ்ஞான துறையின் வளர்ச்சியில் தனது பங்கையும் பாரியளவில் வகித்துவருபவர், முன்னாள் இந்திய குடியரசு தலைவரும் அணு விஞ்ஞானியுமான “ஏவுகணை மனிதன்” என அழைக்கப்படும் டொக்டர் அப்துல் கலாம். கடந்த 1931 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ம் திகதி இந்தியாவின் தமிழ் நாட்டின் ராமேஸ்வரும் எனும் ஊரில் பிறந்தார் அப்துல் கலாம் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் என அழைக்கப்படும். ஆவுல் பஹீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் ஏழ்மையான குடும்பம் ஒன்றில் பிறந்த டொக்டர் அப்துல் கலாம் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவர். அப்துல் கலாம் தனது ஆரம்பகால கல்வி செலவுக்காக நாளிதழ்களை விற்று கல்வியை மேற்கொண்டவர். ராமேஸ்வரத்திலுள்ள சுவாட்ஸ் உயர்நிலை பள்ளியில் கல்விபயின்ற அப்துல் கலாம் திருச்சி சென் ஜோசப் கல்லூரியில் விஞ்ஞான அடிப்படை கல்வியை கண்டார். இந்நிலையில்  கடந்த 1954 ம் ஆண்டு சென்னை பொறியியல் துறைக்கல்லூரியில் சிறப்பு பொறிநுணுக்கு டாக்டர் பட்ட படிப்பினை ஆரம்பித்த அவர் கடந்த  1957 ம் ஆண்டு குறித்த படிப்பினை நிறைவு செய்து அப்துல் கலாம் விமானவியல் பொறியியல் துறையினை தெரிவு செய்தார். தனது பட்டபடிப்பின் போதே பெங்ளுரிலுள்ள ஹிந்துஸ்தான் விமான தொழிற்கூடத்தில் பயிற்சிக்கு சென்றார். அப்துல் கலாம் அதற்கிணங்க ஹிந்துஸ்தான் விமான தொழிற் கூடத்தில் பயிற்சிகளை முடித்து பட்டம் பெற்றார். அதற்கிணங்க தனது இலட்சியமான விமானியாக வரவிரும்பிய அப்துல் கலாமிற்கு இராணு அமைச்சகத்தின் தொழில்நுணுக்க விருத்தி மற்றும் உற்பத்திதுறை விருத்தி கூடத்தில் தொழில்புரிவதற்கான வழிகிடைத்தது. மேலும் இந்திய விமான படையில் ஊழியத்திலும் தொழில் புரிவதற்கான வாய்ப்பு கிடைத்தது. குறித்த இரண்டிற்கும் விண்ணப்பித்த அப்துல் கலாமிற்கு நடைபெற்ற தேர்வில் தோல்வியே கிடைத்தது. தோல்வியோடு வீடு திரும்பிய அப்துல் கலாமிற்கு நம்பிக்கை தந்த பெருமைக்குரியவர் சுவாமி சிவானந்தாவாகும். தன்னுடைய நிலைமையினை சுவாமி சிவானந்தாவிடம் எடுத்துக்கூறிய  அப்துல் கலாம் அவரின் வாக்கிற்கமைய தனது கடவுளின் எண்ணங்களுக்கிணங்க செயற்பட உத்தேசித்தார். அதனைத்தொடர்ந்து , பல தொழில்முயற்சிகளை மேற்கொண்ட கலாநிதி அப்துல் கலாம், கடந்த 1962 ம் ஆண்டு, இந்திய விண்வெளி திட்டத்தில், தொழில்புரிய ஆரம்பித்தார். அதற்கிணங்க 1963 ம் ஆண்டு முதல் 1982 ம் ஆண்டு வரையான 20 ஆண்டுகள் அப்துல் கலாம், இந்திய விண்வெளி  ஆராய்ச்சிக்கூடத்தில் பல பதவிகளில் பணிபுரிந்தார். பின்னர், தும்பாவில் துணைக்கோள் ஏவுகணை குழுவில் இணைந்துகொண்ட டொக்டர் அப்துல் கலாம், எஸ் எல் வீ 3 எனும் ஏவுகணை படைப்பு திட்டத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.  அதில் 44 துணை சாதனங்களை வடிவமைத்து, பயிற்சி செய்து, எஸ் எல் வீத திட்டத்தினை செம்மை செய்து, வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவ பணிபுரிந்தார். இதுவரை அவர், 5 ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். நாக ஏவுகணை திட்டம், பிரித்வீ ஏவுகணை திட்டம், ஆகாய ஏவுகணை திட்டம், திரிசுல் ஏவுகணை திட்டம், இக்னி ஏவுகணை திட்டம் ஆகிய பல முக்கிய ஏவுகணை திட்டங்களில் டொக்டர் அப்துல் கலாம் பிரதான பங்கு வகித்தார். உலகம்’ போற்றுமு; விஞ்ஞானியாகவிருந்த டொக்டர் அப்துல் கலாம் சிறந்த ஆன்மீகவாதியாகவும் காணப்பட்டார்.  அவர் இஸ்லாமிய மதத்தை பின்பற்றிய போதிலும் ,ஒரு சிறந்த ராம பக்தராக விளங்கினார்.  மேலும் தனது அறையில் நடராஜர் வெண்கல சிலையை வைத்து தினமும் ப+ஜிக்கும் பழக்கமும் அப்துல் கலாமிற்கு உண்டு. அதனைத்தவிர வீணை இயற்றுவது, ராகங்களை ரசிப்பது, கவிதை புனைவது எனும் துறைகளிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் தனது வாழ்க்கையை பற்றி எழுதிய அக்னி சிறகுகள் எனும் நூல் , இன்றும் உலகில் சாதிக்கத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும்,  வழிகாட்டியாகவுள்ளது. மேலும் அவர் எழுச்சி தீபங்கள் , இந்தியா 2020  மற்றும் அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை எனும் நூல்களையும் எழுதியுள்ளார். உலகம் போற்றும் விஞ்ஞானியான அப்துல் கலாம் பொன்மொழிகள், கவிதைகள், வாசகங்கள் என தன்னுடைய இலக்கியத்துறை மேன்மையினையும் வெளிப்படுத்தினார்.  இந்திய நாட்டின் ராணுவ ரொக்கட் படைப்பின் பிதாவாக அப்துல் கலாம் போற்றப்படுகிறார்.  இந்நிலையில் கடந்த 2002 ம் ஆண்டு ஜீலை மாதம் 25 ம் திகதி இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக அப்துல் கலாம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலிருந்து கடந்த 2007 ம் ஆண்டு ஜீலை மாதம் 25 ம் திகதி வரையான 5 வருடங்கள் இந்திய நாட்டின் குடியரசு தலைவராக , அப்துல் கலாம் சேவையாற்றினார்.  இந்;நிலையில் அவரை , கௌரவப்படுத்தும் முகமாக கடந்த 1997 ம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான ,  பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. மேலும் கடந்த 1981 ம் ஆண்டு, பத்மப+ஷனன் விருதும் ,கடந்த 1990ம் ஆண்டு பத்மவிபூஷணண் விருதும் கலாநிதி அப்துல் கலாமுக்கு வழங்கப்பட்டது. சாதாரண ஒரு, ஏழைக்குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் இதுவரை காலமும் விஞ்ஞானத்தின் வளர்ச்சியிலும், சமூகத்தின் மேம்பாட்டிலும் தன்னை முற்றுமுழுதாக ஈடுபடுத்தி வருகிறார். அவரது சொற்பொழிவுகளும் , வார்த்தைகளும், உலகிலுள்ள அனைவரையும்  ஈர்த்த ஒரு விடயமாகும். ஒவ்வொரு நாடும் அப்துல் கலாமை ,  தங்களது நாட்டில் , சொற்பொழிவாற்ற வர அழைக்கும் இத்தருணத்தில் அவர் இலங்கைக்கு , பல முறை விஜயம் மேற்கொண்டு எமது மாணவ சமூகத்திடம் தனது கருத்துக்களை பகிரந்துகொண்டமை எமக்கு பெருமைக்குரிய விடயம்.  எனினும் அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற தமிழர்களின் பெருமைமிகு, மாநாடான செம்’மொழி மாநாட்டில் அப்துல் கலாம் , புரக்கணிக்கப்பட்டமை அனைவர் மனதிலும் ஆறாத வடுவினை ஏற்படுத்தியது. எனினும் அவர் புரக்கணிக்கப்பட்டமைக்கான காரணம் இதுவரை சொல்லப்படவில்லை. தமிழ் பேசும் மக்களின்  பெருமையை உலகுக்கு உணர்த்திய சிறுப்புக்குரியவரும் ,இந்தியாவை அணுவாயுத வல்லராச மாற்றியதில் பெரும் பங்கு வகித்த ஏவுகணை மனிதன் கலாநிதி அப்துல் கலாம், செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ளாமை, மாநாட்டை நிறைவடைய செய்யவில்லை. தன்னுடைய வாழ்நாளை அணுவிஞ்ஞான துறைக்கும்,  விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கும்  அர்ப்பணித்துள்ள அப்துல் கலாம் இன்றும் எளிமையான வாழ்வையே வாழ்ந்து வருகிறார். சாதாரண கிராமமொன்றில் வறிய குடும்பத்தில் பிறந்து , இன்று உலகம் போற்றும் மகானாக வாழும் கலாநிதி அப்துல் கலாம் , வாழும் சரித்திரம்….....................................................................................................பிரசன்னா 

No comments:

Post a Comment

hi