Saturday, October 27, 2012

ஆபிரகாம்லிங்கன்



ஆபிரகாம்லிங்கன் (26.10.2012)

னித இனத்திலேயே ஒருவர் மற்றொருவரை அடிமையாக நடத்துகின்ற போக்குஇ மனித இனம் தோன்றிய காலத்திலேயே தொடங்கிவிட்டது. பணம்இ பதவிஇ நிறம்இ இனம்இ மொழி ஆகியவற்றைக்கொண்டு மனிதர்கள் பிரிவதும்இ பேதம் காணுவதும்இ அதன் மூலம் கலவரங்கள் மூள்வதும் இன்றும்  இடம்பெற்று  வருகிறது.அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடியவர்கள் உலகில் பலருண்டு. அவர்களில் தலைசிறந்தவர்  மனிதன் முயற்சித்தால் எந்தவொரு காரியத்தையும் செய்து முடித்துவிடலாம் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர். சாதாரண எளிய குடும்பமொன்றில் பிறந்து தனது இடைவிடாத முயற்சியினால் , உலக வல்லரசான அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவிவகித்தவர் ஆக்கமேதை ஆபிரகாம் லிங்கன். இவர் கடந்த 1809 ம் ஆண்டு, பெப்ரவரி  மாதம் 12 ம் திகதி அமெரிக்காவின் கென்டக்கியில் , ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார் ஆபிரகாம்லிங்கன். அவரது தந்தை தோமஸ் லிங்கன் ஒரு தச்சராவார். அவரது தாயின் பெயர் நான்சி ஹாங்ஸ் என்பதாகும். சிறுவனாக இருந்தபோதே தந்தையின் தச்சுப்பணிகளில், லிங்கன் உதவிப்புரிந்து வந்தார்.  ஆபிரகாம்லிங்கனுக்கு 9 வயதாகும்போது அவர்  தனது தாயை இழந்தார். அதன்பின்னர் ஏழ்மைக்குடும்பம் என்பதால் ஆபிரகாம்லிங்கனால் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. பிறருக்கு உதவி செய்தல், அடுத்தவர் மீது  அன்பு செலுத்துதல் , கலகலப்பாக பழகுதல்,  வேடிக்கையாக பேசுதல் என சிறுவயதிலேயே , பல அரிய குணங்களை கொண்ட ஆபிரகாம்லிங்கன் மீது,  மற்றவர்களுக்கு விருப்பம் ஏற்பட்டது.  ஆபிரகாம்லிங்கன் வாழ்ந்த காலத்தில் அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்கள் அடிமைகளாக  விற்கப்படும்  நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன. அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் கொடுமைகளை பார்த்த ஆபிரகாம்லிங்கன் அதனை எவ்வாறாவாது தடுத்து நிறுத்த வேண்டுமென சிந்தித்தார். அதற்கான வழிமுறைகளை  கண்டறிய ஆபிரகாம்லிங்கன்  பல முயற்சிகளை  மேற்கொண்டார்.  அதனைத்தொடர்ந்து தனது 22 ஆவது வயதில் அலுவலகமொன்றில் குமாஸ்தாவாக வேலைபார்த்த ஆபிரகாம்லிங்கன் சொந்த தொழில் முயற்சியை மேற்கொண்டு அதில் தோல்வியடைந்தார். பின்னர் ,  அஞ்சல் காரராக பணியாற்றிய அவர் , இரவல் புத்தகங்களை வாங்கி சுயமாக கற்று, ஒரு வழக்கறிஞராகினார். இந்நிலையில் அரசியலில் ஈடுபடுவதன்  மூலமே அடிமைத்தனத்தை ஒழிக்க முடியுமென முடிவுக்கு வந்த ஆபிரகாம்லிங்கன்,  கடந்த 1834 ம் ஆண்டு , தனது 25 ஆவது வயதில் முதன்முதலாக  இலிநோய் மாநில சட்டமன்ற  பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார்.  அதனைத்தொடர்ந்து நடைபெற்ற அமெரிக்க செனட்சபை தேர்தலிலும்   வெற்றிபெற்று ,செனட்சபைக்கும் தெரிவானார் ஆபிரகாம்லிங்கன். அமெரிக்க தேசத்தின் வரலாறு, அமெரிக்க அரசியல், அன்றைய அமெரிக்காவின் நிலைமை, நீக்ரோக்களை அடிமையாக நடத்தும் வழக்கம், வெள்ளையர், கறுப்பர் என்ற பாகுபாடு, தேசத்தை சீரழிக்கும் சூழ்ச்சிகள் என்பவற்றையெல்லாம் தனது

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெளிவுபடுத்திய ஆபிரகாம்லிங்கன்,  மக்கள் மனதில் இடம்பிடித்து,  அமெரிக்க செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.  அதனைத்தொடர்ந்து சில காரணங்களுக்காக அரசியலை விட்டு விலகிய ஆபிரகாம்லிங்கன், 5 ஆண்டுகள் தனியார் துறையில் வழக்குறைஞராக பணியாற்றினார்.  பின்னர்  1854 ம் ஆண்டில் , மீண்டும் அரசியலில் நுழைந்த ஆபிரகாம்லிங்கன், அரசியலில் கடுமையாக உழைத்தார். அவரின் முயற்சியால் கடந்த 1860 ம் ஆண்டு, அமெரிக்காவின் 16 ஆவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில்  , அவர் அடுத்த ஆண்டு  ஜனவரி முதல், அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர். அதன்பின் அமெரிக்காவில் அடிமைத்தனம் இருக்க கூடாதென பிரகடனம் செய்தார்.  இந்நிலையில் ஆபிரகாம்லிங்கனின் குறித்த பிரகடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் தென்பகுதியிலுள்ள மாநிலங்கள் , பிரிந்து சென்றன.  அதனைத்தொடர்ந்து தென் மாநிலத்திற்கும் , ஆபிரகாம்லிங்கனை ஆதரித்த வடமாநிலத்திற்குமிடையில் உள்நாட்டு போர் ஆரம்பமானது. இந்நிலையில் இரு மாநிலங்களையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆபிரகாம்லிங்கன், அடிமைத்தலையையும் , அமெரிக்காவை ஒன்றுபடுத்தவும் உள்நாட்டு போர் அவசியமென்பதை உணர்ந்தார். அதன் காரணமாக சுமார் 4 வருடங்களாக ஆபிரகாம்லிங்கன், அமெரிக்காவில் உள்நாட்டு போரை நடத்தினார். அதனைத்தொடர்ந்து தென் மாநிலம் தோற்கடிக்கப்பட்டு, ஆபிரகாம்லிங்கனின் உயரிய சிந்தனைக்கு வெற்றிகிடைத்தது.  அதற்கமைய 1865 ம் ஆண்டில் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டுமென்ற தீர்மானம் அமெரிக்க மக்களைவில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.   மேலும் யுத்த காலத்தின்போது, கடந்த 1863  ம் ஆண்டு, ஆபிரகாம்லிங்கன்
ஆற்றிய கெட்டிச்பேர்க் பேருரையில் , விடுதலை உணர்ச்சி மிக்க ஐக்கிய அமெரிக்காவை பாதுகாப்பதற்கே ,  உள்நாட்டு போர் நடத்தப்படுகிறது.  எல்லா மாந்தரும்  சமத்துவ நிலையில் படைக்கப்பட்டவர்கள் என அவரின் உண்ணத வாசகம் அனைவரையும்  ஈர்த்தது. மேலும் மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம்   ,மக்களால் ஆளப்படும் அரசாங்கம் எனும் வாக்குமொழிகள் அழிந்துபோகாது என்பது ஆபிரகாம்லிங்கனின் மிகப்புகழ்பெற்ற மக்களாட்சி குறித்த விளக்கமாகும்.  இந்நிலையில் கடந்த 1842 ம் ஆண்டு, தனது 33 ஆவது வயதில் , மேரி டோட் எனும் பெண்ணை மணந்த ஆபிரகாம்லிங்கனுக்கும் , 4 ஆண்குழந்தைகள் பிறந்தனர். இதனைத்தொடர்ந்து,  கடந்த 1864 ம் ஆண்டு, நடைபெற்ற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது தடவையாகவும் ஆபிரகாம்லிங்கன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அதனைத்தொடர்ந்து அவர் இரண்டாவது முறையாக பதவியேற்று ஒருமாத காலத்துள் அமெரிக்காவில் இடம்பெற்ற அனைத்து, போர் நடவடிக்கைகளையும் முடிவுக்கு கொண்டு வந்த அவர், அமெரிக்காவில் அமைதியான நிலைமையை ஏற்படுத்தினார்.  இந்நிலையில் கடந்த 1865 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ம் திகதி , ஆபிரகாம்லிங்கன் தனது மனைவியுடன்  அமெரிக்கன் கசின் எனும் நாடகத்தை பார்ப்பதற்காக சென்றவேளை, நாடக அரங்கத்தில் வைத்து, ஜோன் வில்ஸ் ப+த் எனும் நாடக நடிகன் ஆபிரகாம்லிங்கனை குறிவைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். படுகாயங்களுக்கு  உள்ளாகிய அவர், கடந்த 1865 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ம் திகதி தனது 56 ஆவது வயதில் உயிரிழந்தார்.  பிரிந்துபோன வட, தென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன. மேலும் தென்பகுதி அமெரிக்க அடிமைகளான கறுப்பினத்தவர்களுக்கு விடுதலை கிடைத்தது. எனினும் அமெரிக்காவை பொறுத்தவரையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நிகழ்வினை, நிகழ்வதற்கு காரணமாக இருந்த ஆபிரகாம்லிங்கனால் கண்டுகளிக்க முடியாமல் போனமை , அனைவரது மனதினையும் நெகிழச்செய்தது. இந்நிலையில் அமெரிக்க வரலாற்றை பொறுத்தவரையில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து,  வரலாற்று ரீதியான கறுப்பின , வெள்ளையர் முரண்பாடுகளை தீர்த்து, மறக்க முடியாத  ஆக்கமேதையாக ஆபிரகாம்லிங்கன் போற்றப்படுகிறார். இந்நிலையில் அமெரிக்காவின் சிறந்த அதிபருக்கான வாக்கெடுப்புகளில் ஆபிரகாம்லிங்கன் தொடர்ச்சியாக முதல் 3 இடங்களுக்குள் தரப்படுத்தப்பட்டுள்ளார். மேலும்  கடந்த 2004 ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்போது ஆபிரகாம்லிங்கனை பல வரலாற்று  ஆய்வாளர்கள் சிறந்த  ஜனாதிபதியாக முதலிடத்தில் தரப்படுத்தினர்.  அமெரிக்காவின் ஜோர்ஜ் வொஷிங்டனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது  ஜனாதிபதியாக ஆபிரகாம்லிங்கன் போற்றப்படுகிறார். ஆபிரகாம்லிங்கன் படுகொலை செய்யப்பட்;ட பின்னர், அவர் அமெரிக்க மக்களால் ஒரு தேசிய தியாகியென மரியாதை செய்யப்படுகிறார். மேலும் அடிமைத்தனத்தை ஒழிக்க போராடியதால் மக்களால் அவர் ,  ஒரு சிறந்த சுதந்திர போராளியாக வணங்கப்படுகிறார்.  தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை  விட தன்னுடைய  உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்!  எனும் வாக்கியத்தை கூறி,  உலகில் பலருக்கு முன்னோடியாக திகழ்ந்த ஆபிரகாம்லிங்கன் , உலகை மாற்றியவர்களில் ஒருவர்…...........................................பிரசன்னா 

No comments:

Post a Comment

hi