Friday, October 5, 2012

பேர்மூடா முக்கோணம்

 பேர்மூடா முக்கோணம்


லகில் பல மர்மமான பிரதேசங்கள் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் வெறும் வாதங்களோடு நின்றுவிடுகின்றன. விந்தைமிகு விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் மனிதன் விண்வெளியை எட்டிப்பிடித்திருந்தாலும், வேறு உலகில் கால்தடம் பதித்திருந்தாலும் ப+மியிலுள்ள சில மர்மப்பிரதேசங்களை இதுவரை அவனால் கண்டு பிடிக்கவும் முடியவில்லை. மர்மங்களுக்கான காரணமும் இதுவரை அறியப்படவில்லை. அப்படி  ப+மியில் கண்டு பிடிக்கமுடியாத மர்மமான முறையில் மர்மங்கள் இடம்பெறும் ஒரு பிரதேசம் பேர்மூடா முக்கோண பிரதேசம்.  இதனை பிசாசு முக்கோணம் என்றும் அழைப்பர். புளோரிடா நீரிணைப்பு பஹாமாஸ் மற்றும் மொத்த கரேபியன் தீவுப்பகுதி மற்றும் அத்லாண்டிக் சமுத்திரத்தின் கிழக்கிலிருந்து பேர்மூடாவின் மத்திய மற்றும் அத்லாண்டிக் தீவுப்பகுதிகள் ஆகியவை குறித்த முக்கோணப்பகுதியின் சில எல்லைகளாகும் குறித்த பகுதி உலகின் மிகவும் அதிகமான கப்பல் போக்குவரத்து பகுதியாக காணப்படுகிறது. இதன் வழியாக அமெரிக்கா ஐரோப்பா, மற்றும் கரேபியன் தீவுகளிலுள்ள துறைமுகங்களுக்கு தினம்தோறும் கப்பல்கள் கடந்து செல்கின்றன. அதேபோல் குறித்த பகுதியினூடாக புளோரிடாவுக்கும் தீவுகளுக்கும் இடையிலும் பொழுது போக்கு வானூர்திகளும் பயணித்த வண்ணம் உள்ளன இதேவேளை புளோரிடா கரேபியன்தீவுகள் மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு செல்லும் அதிகளாவான வர்த்தக மற்றும் தனியார் வானூர்திகள் குறித்த கடற்பகுதியினை கடந்தே பயணிக்கின்றன. ஆனால் பேர்மூடா முக்கோணமென வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் செல்கின்ற எந்தவொரு பொருளும் இதுவரை கரைதிரும்பவில்லை. அந்த பொருட்கள் கடலில் இருப்பதற்கான சான்றுகளும் இல்லை. இந்நிலையில் ஏனைய கடற்பகுதிகளில் சாதாரணமாக நிகழ்கின்ற நிகழ்வுகளே பேர்மூடா முக்கோண கடற்பகுதிகளிலும் நிலவுகின்றது. எனினும் குறித்த முக்கோண கடற்பரப்பு தொர்பில் பல்வேறு அறிஞர்கள் அறிவியலாளர்கள் , சமயவாதிகள், மற்றும் ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். சிலர் அந்த பகுதியில் புவியீர்ப்பு விசை இல்லையென தெரிவிக்கின்றனர் .சிலர் அப்பகுதியில் கடற்கொள்ளையர்கள் கடத்தல்காரர்கள் அல்லது யுத்த நோக்குடன் செயற்படும் சில குழுக்களால் அந்த பகுதிக்குள் செல்கின்ற கப்பல்கள் வானூர்திகள் விமானங்கள் என்பவற்றை கடத்துவதாக தெரிவிக்கின்றனர். சிலர் புராணக்கதைகளை காரணம் காட்டி பேர்மூடா முக்கோண பகுதியில் மர்மம் நிலவுவதை நியாயப்படுத்துகின்றனர். ஆனால் இதுவரை பேர்மூடா முக்கோண பகுதியில் என்ன நடக்கின்றது…என்பதை யாராலும் தெளிவாக அறியமுடிவில்லை. காரணம் அந்தப்பகுதிக்கு செல்கின்ற எந்தவொரு பொருளும் திரும்பிவராத நிலையில் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிகள் வெற்றியளிக்குமா என்ற கேள்வி எழும்புகிறது. அதேபோல் சில அறிவிலயல் ஆய்வாளர்கள் பேர்மூடா முக்கோண பகுதியில் கடக்கின்ற பொருட்கள் தொலைவதற்கான காரணம் மெதன் ஹைரோட்சைட்டுக்களென குறிப்பிடுகின்றர். குறித்த முக்கோண கரையோர பகுதிகளில் இயற்கை எரிவாயுவின் ஒருவடிவமான மெதன் ஹைரோட்சைட்டுக்கள் காணப்படுவதாகவும் நீரின் அடர்த்தியை மெதன் ஹைரோட்சைட் குறைத்து குமிழிகள் குறிப்பிட்ட ஒருவடிவமைப்பை கொண்டு கப்பலை மூழ்க செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்க ஆய்வாளர்களின் கருத்தின்படி பேர்மூடா முக்கோண பகுதியில் கடந்த 15 வருடங்களில் எரிவாயு ஹைரோட்சைட்டுக்கள் தொடர்பான எவ்வித அறிகுறிகளும் இல்லையென சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில் குறித்த கடற்பகுதிகளில் இராச்சத முரட்டு அலைகள் தாக்கத்திற்குள்ளாகி கப்பல்கள் சிதைந்து போவதாக சில கருத்துக்களும் நிலவி வந்தன. ஆனால் இராச்சத அலைகள் கப்பலை சிதறடித்தாலும் வானில் பறக்கும் விமானங்களின் மறைவுக்கும் மர்மத்திற்குமு; காரணமாக அமைவதில்லை. இதுவரை பேர்மூடா முக்கோண பகுதியில் பல கப்பல்கள் விமானங்கள் வானூர்திகள் என்பன தொலைந்து போயுள்ளன. ஆனால் அவைகள் சிதைவடைந்தற்கான எவ்வித ஆதரங்களும் இதுவரை கிடைக்கவில்லை. உடைந்த கப்பலின் பாகங்களோ அல்லது விமானங்களின் பாகங்களோ அல்லது அதில் பயணித்த மனிதர்களின் உடல்களோ இதுவரை கரையொதுங்கவுமில்லை அந்தபகுதியின் அருகில் சென்றவர்கள் காணவுமில்லை. இதுதான் பேர்மூடா முக்கோண பகுதியில் மர்மம் நிகழ்வதற்கு தொடர்காரணங்களாக விளங்குகின்றன. ஆரம்பத்தில் இப்பகுதியில் பயணம் செய்த மிகப்பெரிய அளவிலான கப்பல்கள் காணமல்போயுள்ளன அதனை தொடர்ந்து  தேடும் பணிக்காக அனுப்பப்பட்ட நாலு விமானங்கள் மற்றும் மேலும் இரண்டு கப்பல்கள் காணமல் போனது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் குறித்த பேர்மூடா முக்கோண பகுதிக்கு ஏவுகணை ஒன்றினை செலுத்தி இருந்தனர். ஆனால் ஏவுகணை வெடிப்புக்குள்ளாகமல் அப்பகுதியில் மர்மமான முறையில் காணமல் போனமை அந்த மர்மப்பகுதி மீதான உலகின் பார்வையினை மேலும் மிளிரசெய்தது.

No comments:

Post a Comment

hi