Thursday, October 18, 2012

தோமஸ் அல்வா எடிஷன்…


தோமஸ் அல்வா எடிஷன்…

டைப்புக்கு வேண்டியது “ஆக்கும் உள் எழுச்சி ஒரு சதவீதம்” “வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம்” என தனது முயற்சியை பின்பற்றி  உலகை வெற்றி கண்டவர். இன்று உலகளாவிய மக்கள் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான மின்சாதனங்களுக்கு சொந்தமானவர் உலகுக்கே ஒளி தந்த மின் விளக்கை கண்டுபிடித்து ஒவ்வொருவரது வீட்டிலும் இன்றும் அணையா விளக்காக ஒளிந்து கொண்டிருப்பவர் அமெரிக்க கண்டு பிடிப்பாளர் தோமஸ் அல்வா எடிஷன். இவர் கடந்த 1847ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் திகதி அமெரிக்காவின் ஒஹியோவிலுள்ள மிலான் எனும் ஊரில் சாமுவேல் எடிசன், நாண்சி எடிசன் ஆகியோருக்கு 7 வது மகனாக பிறந்தார் தோமஸ் அல்வா எடிசன். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவரான  தோமஸ் அல்வா எடிசன் சிறுவயதிலேயே காது கேட்கும் திறனை இழந்;தார். அதன் காரணமாக தனது நடை, உடை பாவனையில் பாதிப்பை ஏற்பட்டது. குறித்த விடயமே உலகின் பல கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தது. சிறுவயதிலேயே நோய்வாய்;க்குட்பட்ட தோமஸ் அல்வா எடிசன் தனது 8 வது வயதிலேயே பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தார்;. பள்ளிக்கு சென்று 3 மாதங்களுக்கு  பின் அவரது ஆசிரியர் ஒருவர் எடிசனை மூளைக்கோளாறு உள்ளவன் என்று திட்டியதன் காரணமாக அன்றிலிருந்து தனது பள்ளி படிப்பை நிறுத்திக்கொண்டார். தொடர்ந்து தனது தாயுடன் வீட்டிலே கல்வி பயின்ற அவர், பின்னர் தன்னை புத்தகங்கள் வாசிக்கும் அளவுக்கு வளர்த்துக் கொண்டார். அதற்கிணங்க தனது 11 வது வயதிலேயே சேர் ஐசக் நியுட்டனின் கோட்பாடுகள் உள்ளிட்ட பல நூல்களை கற்க ஆரம்பித்தார், தோமஸ் அல்வா எடிசன்.  இவேளை தன்வசப்படுத்திய  அணுக்கரு அமைப்பை விளக்கிய விஞ்ஞானி நீல்போ, கணித விஞ்ஞான நிபுணர் சேர் ஐசக் நியுட்டன் ஆகியோரும் சிறுவயதிலேயே மூளை தளர்ச்சி உள்ளவர்களாக பள்ளிக்கூடங்களில் கருதப்பட்டனர். தொடர்ந்து தனது 21 ம் வயதில் விஞ்ஞானி மைகல் பரடேயின் மின்சக்தி பயிற்சி ஆராய்சிகள் குறித்தான பல குறிப்புகளை படித்து வந்த தோமஸ் அல்வா எடிசனுக்கு அவருடைய கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளம் இட்டவையாக காணப்பட்டது. கணித அறிவும், அறிவியல் இயற்பாடு எதையுமே முறையாக கற்காத தோமஸ் அல்வா எடிசன் சோதனைகள் மூலம் மாத்திரமே முயன்று பல அரிய தொழிநுட்ப கருவிகளை படைத்தார். இந்நிலையில் கடந்த 1860 ம்ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் தோமஸ் அல்வா எடிசனுக்கு ரயில் நிலையத்தில் தந்தி இயக்கும் தொழில் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து குறித்த வேலையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதிலிருந்து விலகி ரயில் நிலையத்தில் சிற்றுண்டிகள் விற்கும் நடவடிக்கையிலும் சில காலம் இறைச்சி விற்பனை வியாபாரியாகவும், சில காலம் காய் கறி வணிகராகவும் தொழில் புரிந்தார். இந்நிலையில் கடந்த 1862 ம் ஆண்டு ரயில் பெட்டியொன்றை அச்சகமாக மாற்றி அதிலிருந்து த வீக்லீ ஏரோல்ட் எனும் வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார். இந்நிலையில் தனது நுண்ணறிவினாலும் ஆய்வுகள் மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாகவும் கடந்த 1869 ம் ஆண்டு தனது 22 வயதில் ரயில் நிலையத்தில்  தொழில் புரிந்தபோது இரட்டை தந்தியடிப்பு சாதனத்தை பதிவுக்கு கருவியுடன் இணைத்து இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில் அனுப்பி காட்டினார். இதுவே இவரது முதலாவது கண்டு பிடிப்பாகும். இந்நிலையில் அமெரிக்காவின் நிய் ஜேசிக்கு சென்ற தோமஸ் அல்வா எடிசன் அங்குள்ள மெட்லோ ப+ங்காவில் தனது  ஆய்வகத்தை அமைத்தார். எடிசன் அதில் பங்குச் சந்தை புள்ளிகளை தொடராக பதிவேற்றும் தந்திக்கருவிகளை உருவாக்கினார். அதனைத் தொடர்ந்து தனது நண்பரான பிரான் பொக் என்பவருடன் இணைந்து உலக பதிப்பி மற்றும் வேறு பதிக்கும் கருவிகளை உருவாக்கினார். இந்நிலையில் கடந்த 1870 ம் ஆண்டு தொடக்கம் 1875 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தானியங்கி தந்தியினை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து தனது இராசாயன அறிவைப்பயன்படுத்தி மின்சாரப்பபேன பிரதி எடுப்பி போன்ற சாதனங்களை உருவாக்கினார். அதனைத் தொடர்ந்து இசைத்தட்டையும் உருவாக்கினார். எடிசன் புதிய பல கருவிகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் முனையும் போது சில புதிய கருவிகளும் கண்டு பிடிக்கப்பட்டன. அவற்றுள்; காபன் ட்ரான்ஸ் மீற்றர், ஒலி வரைவி, ஆகியன உள்ளடங்குகின்றன. மேலும் கண்டு பிடிப்புக்களில் அரிய கண்டுபிடிப்பாக என்றும் காணப்படுவது கடந்த  1852 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மின் குமிழியாகும் இதுவே ஆக்கமேதை எடிசனின் புகழை உலகெங்கும் பரப்பியது. அதனைத் தொடர்ந்து மின்சார மோட்டர், ரெலிபோன் ஸ்பீக்கர், மைக்ரோபோன்  ஆகியவற்றை கண்டுபிடித்ததோடு இதுவரை 1093 கண்டு பிடிப்புக்களின் காப்புரிமைகளை பதிவுசெய்துள்ளதோடு இன்னும் ஏராளமான பொருட்களை இவ்வுலகுக்கு தந்தளித்தார். 18 ம் 19 ம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மின்சக்தி இயந்திரயுகம் தோன்ற அடிகோலியவர்களுள் முக்கியமானவர் தோமஸ் அல்வா எடிசன.;  பள்ளிப்படிப்பு உயர்ந்த பட்டப்படிப்பு இல்லா தோமஸ் அல்வா எடிசன் கடின உழைப்பாலும் ஞான நுட்பத்தினாலும் பல வித சாதனங்களை படைத்து ஏழ்;மையிலிருந்து செல்வந்தரான மேதையாவார். மேலும் அவர் தன்னைப்பற்றி சொல்லும் போது நான் ஒரு விஞ்ஞானியல்ல டோலர், வெள்ளி நாணயம் சம்பாதிக்கும் உழைக்கும் ஒரு வாணிப படைப்பாளி எனத்தெரிவித்திருந்தார். அதற்கமைய ஆக்கமேதை தோமஸ் அல்வா எடிசன் தனது 84 வயது வரை இவ்வுலகில் வாழ்ந்தார். அதற்கமைய கடந்த 1931 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ம் திகதி நியுஜேசிலுள்ள வெஸ்ட் ஓரென்ஞ் நகரில் தனது 84 வயதில் உலகுக்கு ஒளிதந்த எடிசன் எனும் ஒளி விளக்கு அணைந்தது. அவரை கௌவரப்படுத்தும் நோக்கில் எடிசனின் உடல் அடக்கத்தின் போது அமெரிக்க முழுவதும் தேவையான விளக்குகளை தவிர ஏனைய அனைத்து மின் விளக்குகளும் ஒரு நிமிடத்திற்கு அணைக்கப்பட்டது. கடந்த 1931 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ம் திகதி மாலை வேளையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. எடிசன் உலகைவிட்டு பிரிந்திரிந்தாலும் அவரின் ஆத்மாவான மின்விளக்குகள் இன்னும் பல்லாயிரம் ஆண்டு ஒளிபாய்ச்சு கொண்டிருக்கும் என்பது அவரின் அழியா புகழை பறைசாற்றுகிறது. .........................................................................பிரசன்னா

No comments:

Post a Comment

hi