Thursday, October 18, 2012

கவியரசர் கண்ணதாசர்


கவியரசர் கண்ணதாசர்

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. என்ற வரிகளை உண்மையாக்கி சென்ற கவிஞர். பல தத்துவ மேதைகளால் சிந்தனைகளால் மட்டும் எட்ட முடிந்த விடயங்களை தனது கதவிதைகளாலும் வரிகளாலும் இவ்வுலகிற்கு தந்த காலத்தால் அழியாத புகழ்பெற்ற மாமனிதன் கவியரசர் கண்ணதாசர் இவர் கடந்த 1927 ஆம் ஆண்டு ஜீன் மாதம்; 24 ஆம் திகதி தமிழ்நாட்டில் சிறுகூடல்ப்பட்டி எனும் ஊரில் விசாலாட்சியாட்சி சாத்தப்பனார் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் கண்ணதாசன் என அழைக்கப்படும் முத்தைய்யா சிறுவயதிலேயே இவரை வியாபாரி ஒருவர் அவரது பெற்றோரிடமிருந்து 7 ஆயிரம் ரூபாய்க்கு தத்தெடுத்து வளர்த்து வந்தார். அவர் கண்ணதாசனுக்கு வைத்த பெயர் நாராயணன் என்பதாகும். தனது ஆரம்பகல்வியை சிறுகூடல்ப்பட்டியிலும் அமராவதி புதூர் உயர் நிலைப் பள்ளியில் 8 ஆம் ஆண்டு வரை கல்வி பயின்றார் கவியரசர் கண்ணதாசர். இவர் கடந்த 1943 ஆம் ஆண்டு தனது கல்வியை நிறுத்தி ஏஜாக்ஸ் எனும் நிறுவனத்தில் வேலைக்காக சென்றார். சிறு வயதிலேயே பாரதிதாசன், பாரதியார், போன்ற மகான்களின் கவிதைகள் மீது, அதிக ஆர்வம் கொண்டிருந்த  கவியரசர் கண்ணதாசன் அப்போதிருந்தே கவிதைகளை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். அதற்கமைய கடநற்த 1944 ம் ஆண்டு முதல், 1981 ம் ஆண்டு வரை தமிழுக்கும்,  தமிழ் சினிமாத்துறைக்கும் காலத்தால் அழியாத கவிதைகளையும், பாடல் வரிகளையும், பல்வேறு படைப்புக்களையும் தந்தளித்துள்ளார்.  இந்நிலையில் அவரது மொழிப்புலமையினை பயன்படுததி, சண்டமாருதம்இ திருமகள்இ திரை ஒலிஇ மேதாவிஇ தென்றல்இ தென்றல்திரைஇ முல்லைஇ கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக பணியாற்றினார்.  மேலும் கலையுலகில் கால்தடம் பதித்து, தமிழ் உலகை வையகம் போற்ற செய்த கவியரசர்  கண்ணதாசன் , அரசியலிலும் , கால்தடம் பதித்தார். அவர் தனியாக திரையுலகில் ஒரு பாடலாசிரியராக மாத்திரமல்லாமல், தயாரிப்பாளராகவும்,  நடிகனாகவும்,  மாபெரும் கவிஞனாகவும் வலம்வந்தவர் கவியரசராவார்.  முத்தையா எனும் இயற்பெயரை கொண்ட கண்ணதாசன் காரை முத்துப் புலவர்இ வணங்காமுடிஇ கமகப்பிரியாஇ பார்வதிநாதன்இ ஆரோக்கியசாமி ஆகிய பெயர்களிலும் அழைக்கப்பட்டார். ஆனால்   மக்கள் மனதில் நின்று நிலைத்த பெயர் கவியரசர் கண்ணதாசன் என்ற பெயராகும்.  அவர் எழுதிய பல பாடல்கள் இன்றும் காலத்தால் அழியாத  சொத்துக்களாகவும், தமிழுக்கு கிடைத்த முத்துக்களாகவும் மிளிர்ந்து வருகின்றன.  தத்துவம் , காதல் , குடும்பம், நட்பு,  சமூகம் , என பல்வேறு பட்ட கோணங்களில்  தனது வரிகளை கவிதைக்குள் அழைத்துவந்த கவியரசர் கவியுலகத்திற்கும்,  ஒரு புதிய யுகத்தினை ஆரம்பித்து வைத்தார் .  8 ம் ஆண்டுவரை மாத்திரம் கல்வி பயின்றிருந்தாலும், தமிழ் உலகில் எட்டாக்கனிகளையும் எட்டிப்பிடித்த பெருமைக்குரியவர்.  இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் ,  5 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட திரைப்பட பாடல்கள் , கவிதை நூல்கள், புதினங்கள், வாழ்க்கை சரித்தரங்கள் கட்டுரைகள் நாடகங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். அவரின் படைப்புக்களில் இயேசு காவியம், அர்த்தமுள்ள இந்துமதம் உள்ளிட்ட சில படைப்புக்கள் அவரை மேலும் உச்சத்திற்கு கொண்டுசென்றது.  மேலும் தன்னுடைய கவிப்புலமையால் , அவர் தமிழக அரசின் அரசவைக்கவிஞராக இருந்தார்.  கண்ணதாசனுக்கு பொன்னம்மா ,பார்வதி மற்றும் வள்ளியம்மை என மூன்று மனைவிமார்களும் , 14 குழந்தைகளும் உள்ளனர். தான் வாழும் வரை அவர் தமிழுக்கு தந்த ஒவ்வொரு வரிகளும் காலத்தால் என்றும் போற்றப்படுகின்ற வரிகளாக மாறின. இந்நிலையில் சுமார் 37 வருடங்கள் தனது  முத்தான  வரிகளாலும் , கட்டுக்கடங்கா சிந்தனையாலும் கவியுலகை தன்னகத்தே வைத்திருந்தவர் கவிஞர் கண்ணதாசன். இந்நிலையில் 1981 ம் ஆண்டு, ஜீலை மாதம் 24 ம் திகதி சுகவீனமுற்ற நிலையில் சிக்காகோவிலுள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார். அனைவரும் எனக்காக ஒருமுறையாவது அழுங்கள். அழத்தெறியாத உங்களை நம்பி நான் எப்படி சாவது. என வீரவரிகளை வைராக்கியத்துடன் சொல்லியிருந்த கவிஞர் கண்ணதாசன் ,   கடந்த 1981 ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 17 ம் திகதி தனது 54 ஆவது வயதில் கலையுலகை வாழவைத்து விண்ணுலகம் சென்றார். அவர் மறைந்தாலும் , இன்றைய இக்கணம் வரைக்கும்  அவருடைய நினைவுகளும் எண்ணங்களும் , அழியாமல் இவ்வுலகில் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. அவர் இறுதியாக தமிழ் உலகத்திற்கும், தமிழ் திரையுலகத்திற்கும், கலையுலகத்திற்கும்   கண்ணே, கலைமானே கண்ணிமயிலென கண்டென் உணை  நானே…எனும் வரிகளை தந்தளித்தார்.  கவியரசரை கௌரவிப்பதற்கு தமிழக அரசு அவரின் ஞாபகமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மண்டபததினை அமைத்துள்ளது.  அதில் கவியரசர் கண்ணதாசனின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளதோடு,  நூலகமொன்றும் இயங்கி வருகின்றது.  காலமகள் பெற்றெடுத்த கவிநாயகன் கண்ணதாசனின் உலகை விட்டுபிரிந்தாலும் ,அவரின் எண்ணங்கள் சிந்தனைகள் , அனைத்தும் அவரின் படைப்புக்கள் மூலம் இவ்வுலகை இன்னும் ஆட்சி செய்துதான் வருகிறது. ஆதிமுதல் பாரம்பரியம் கொண்ட தமிழ்மொழியில் ,ப+த்து உதிர்ந்த அற்புதமலர்களில்,  கவிஞர் கண்ணதாசனும் ஒருவர்..தமிழ்த்தாய் தந்த கவித்தலைமகன் என்றும் எம் நெஞ்சோடு.............................................................................................................பிரசன்னா 

No comments:

Post a Comment

hi