Tuesday, October 30, 2012

சௌமியமூர்த்தி தொண்டமான்


சௌமியமூர்த்தி தொண்டமான்

சுமார் 50 வருடகாலத்திற்கு மேலாக குடியுரிமைக்கும் கல்வி பெறுவதற்கும் போராட்டம் நடத்தப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட பெருந்தோட்ட மக்களை தலைநிமிர்ந்து வாழவைப்பதற்கு அடித்தளம் அமைத்தவர். இன்றும் இந்திய வம்சாவளி மக்களின் தன்னிகரற்ற தலைவராகவும் வாழ்வாதார உரிமைகளை பெற்றுத்தந்த மாகானாகவும் போற்றப்படுபவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆவார். இவர் கடந்த 1913 ஆம் ஆண்டு ஓகஸ்;ட் மாதம் 30 ஆம் திகதி இந்தியாவின் புதுக்கோட்டையில் அரச பரம்பரை வழிவந்த கருப்பைய்யா , சீதாம்மை ஆகியோருக்கு 5 ஆவது பிள்ளையாக பிறந்தார் சௌமியமூர்த்தி எனும் சௌமியமூர்த்தி தொண்டமான். இந்நிலையில் கடந்த 1924 ஆம் ஆண்டு தனது 11 ஆவது வயதில் சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கைக்கு வந்தார். அதற்கிணங்க கடந்த 1927 ஆம் ஆண்டு தனது 14 ஆவது வயதிலிருந்து கம்பளை புனித அந்திரேயர் கல்லூரியில் சௌமியமூர்த்தி கல்வியை மேற்கொண்டார். இதனிடையே குறித்த காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்திருந்த மகாத்மா காந்தி கண்டியில் ஆற்றிய உரை சௌமியமூர்த்தியின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன்காரணமாக இந்திய விடுதலை இயக்கத்தில் இவரது நாட்டம் அதிகரித்தது. இதேவேளை கடந்த 1932 ஆம் ஆண்டு சௌமியமூர்த்தி தொண்டமான் இந்தியாவைச் சேர்ந்த கோதை என்பவரை திருமணம் முடித்தார். அவர்களுக்கு இராமநாதன் எனும் குழந்தையும் பிறந்தது. பின்னர் தனது தந்தையின் தோட்ட நிர்வாகத்தினை ஏற்று இயக்கி வந்த தொண்டமான கடந்த 1940 ஆம் ஆண்டு அவரது தந்தை இறப்பதற்கு முன்பு தனது குடும்பத்தை இலங்;கைக்கு அழைத்து வந்தார். இந்நிலையில் கடந்த 1930 ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் ஹெட்டன் நகரில் இயங்கி வந்த காந்தி சேவா சங்கம் எனும் இயக்கத்தில் கூட்டங்களில் செல்வந்தராகவிருந்த சௌமியமூர்த்தி பங்கேற்று வந்தார். தனது தந்தைக்கு அரசியல் மீது ஆர்வம் இல்லையெனினும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த வேலையாட்கள் படும்  துயரங்களை அறிந்ததன் காரணமாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இயக்கம் உள்ளிட்ட பலவற்றில் உரையாற்றி வந்தார். பின்னர் கடந்த 1939 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 24 ஆம் திகதி ஜவஹர்லால் நேருவின் கருத்திற்கேற்ப ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரசின் கம்பளை கிளையின் தலைவராக சௌமியமூர்த்தி தொண்டமான்  தெரிவு செய்யப்பட்டார். கடந்த 1930 ஆம் ஆண்டின் இறுதிக் காலப்பகுதியில் ஏற்ப்பட்ட இந்திய எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அதிகளவான தோட்ட தொழிலாளர்கள் இலங்கை இந்திய காங்கிரசில் இணைந்தனர். இதன் காரணமாக குறித்த மக்களின் பிரச்சினை தொடர்பாக பேசவேண்டிய தேவை இலங்கை இந்திய காங்கிரசிற்கு ஏற்ப்பட்டது. எனினும் ஒரு அரசியல் கட்சியிடம் பேச்சுவார்த்தைகள் நடத்த அப்போதைய தோட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. மேலும் தொழிற்ச்சங்கங்களுடனேயே பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுமென அறிவித்தனர். அதன் விளைவாக கடந்த 1940 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை இந்திய காங்கிரசின் தொழிற்ச்சங்க கிளை ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப தலைவராக சௌமியமூர்த்தி தொண்டமான் தெரிவு செய்யப்பட்டார். மேலும் இதன் செயலாளராக இந்திய பாம்பே பல்கலைக்கழகத்தின் வர்த்தக பட்டதாரியும் இடதுசாரி கருத்துக்களை கொண்டவருமான அப்துல் அசீசும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதற்கமைய கடந்த 1940 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி இலங்கை இந்திய காங்கிரசின் ஆரம்ப நிகழ்வை தலைமையேற்று சௌமியமூர்த்தி தொண்டமான் நடாத்தியிருந்தார். இதுவே அவரது வாழ்வின் முதலாவது பிரதான அரசியல் நிகழ்வாகும். இந்நிலையில் கடந்த 1942 ஆம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரசின் தலைமைப் பதவிக்கான போட்டியில் அசீசிடம் தோல்வியடைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் கடந்த 1945 ஆம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரசினதும், அதன் தொழிற்ச்சங்கத்தினதும் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 1946 ஆம் ஆண்டில் கேகாலை தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்ப்பட்ட பிரச்சி;னைகளை தீர்ப்பதற்கு தொழிற்ச்சங்க போராட்டத்தை சௌமியமூர்த்தி ஆரம்பித்து அதில் வெற்றிகண்டார். இதேவேளை கடந்த 1947 ஆம் ஆண்டின் 95 பாராளுமன்ற அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டது. அதில் இலங்கை இந்திய காங்கிரஸ் 8 ஆசனங்களுக்கு போட்டியிட 7 ஆசனங்களை கைப்பற்றியது. அதில் சௌமியமூர்த்தி தொண்டமான் நுவரெலியா ஆசனத்தில் போட்டியிட்டு 9 ஆயிரத்து 386 வாக்குளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். பின்னர் இலங்கையின் முக்கிய அரசியல் சக்தியாக வளர ஆரம்பித்த சௌமியமூர்த்தி தொண்டமான் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இதேவேளை இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனாநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பரிப்பு சட்டத்தை எதிர்த்து பல போராட்டங்களை ஆரம்பித்தார். எனினும் அவரால் அப்போது குறித்த சட்டத்தை தடுத்து நிறுத்த முடியாத நிலையில் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க இறந்த பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொண்டமானும் ஏனைய 6 பிரதிநிதிகளும் மீண்டும் பாராளுமன்றத்திற்கு செல்ல தெரிவு செய்யப்படவில்லை. இந்தியர்கள் குடியுரிமை அற்றவர்களாக காணப்பட்டமையே இதற்கு காரணமாகும். இந்நிலையில் கடந்த 1952 ஆம் அண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி இல்ங்கை வாழ் இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு தொண்டமான பேரணியொன்றையும் சாத்தியாகிரக போராட்டமொன்றை நடத்த ஆரம்பித்தார். மேலும் அப்துல் அசீசுடன் இணைந்து பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியிலும் தனது சத்தியாகிரக போராட்டத்தை நடத்தி இந்திய மக்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் அளவிற்கு அனுமதி வாங்கினார். இந்நிலையில் ஆரம்பத்திலிருந்தே அசீசுடன் பல கருத்து முரண்பாடுகள் கொண்டிருந்த சௌமியமூர்த்தி தொண்டமான் பின்னர் கடந்த 1945 ஆம் ஆண்டு இவர்களது உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது. இந்நிலையில் கடந்த 1952 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகத அசீஸ் கடசியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் அசீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் எனும் புதிய கட்சி;யை ஆரம்பித்தார். இந்நிலையில் கடந்த 1954 ஆம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரசிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட இந்திய சார்பு குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் இலங்கை இந்திய காங்கிரசானது இலங்கை ஜனநாயக காங்கிரசாக பெயர்மாற்றப்பட்டது. அப்போது இலங்கை இந்திய காங்கிரசி;ன தலைவராக அசீச் செயற்பட்டார். இந்நிலையில் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற்ச்சங்கமானது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அசீஸ் கட்சியிலிருந்து வெளியேறியதன் காரணமாக ஏற்ப்பட்ட சட்டச்சிக்கல்களினால் கடந்த 1954 ஆம் ஆண்டு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமைப் பொறுப்பு  சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு வழங்கப்பட்டது, அதிலிருந்து கடந்த 1999 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவராக பதவி வகித்தார். இதேவேளை தொண்டமான் கடந்த 1956 ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டு கடந்த  1978 ஆம் ஆண்டு வரை அதில் பொறுப்பு வகித்து வந்தார். மேலும் கடந்த 1957 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சில முரண்பாடுகளை மலையகத்திற்கு புகுத்திய போது அதனை தடுத்து நிறுத்தி மலையகத்தை பிரச்சினைகளிலிருந்து பாதுகாத்திருந்தார். இதனிடையே கடந்த 1959 ஆம் ஆண்டு அசீஸின் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டது. அதில் தொண்டமான் தோல்வியுற்று பாரளுமன்றம் செல்ல முடியாத நிலையில் காணப்பட்டார். எனினும் கடந்த 1960 ஆம் ஆண்டில் இலங்கை பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  சௌமியமூர்த்தி தொண்டமானை தொழிலாளர் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்தார். அவர் கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த அவர் இலங்கையிலுள்ள அனைத்து மக்களுக்கும் தனது சேவையினை செவ்வனே செய்துள்ளார். மேலும் மலையகத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் சீர் செய்து மலையக கல்வியினை வளர்ப்பத்தில் பெரும் பங்காற்றியுள்ளார். அவரின் முயற்சியால் மலையகத்திலுள்ள பெரும்பாலான பாடசாலைகள் சுவீடனின் சீடா நிதியுதவியுடனான கல்வியமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகளின் கல்வி அபிவிருத்த pவேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு இன்றும் குறித்த நடவடிக்கை .இடம்பெறுகிறது,  மேலும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் சார்பில் பாராளுமன்ற அங்கத்துவம் பெறுதவற்கு வழியமைத்துக்கொடுத்த மாபெரும் தலைவர் இவராவார். அவர் செய்த போராட்டங்களை இன்று பெருந்தோட்ட மக்கள் குடியுரிமை பெற்று இந்நாட்டு பிரஜைகளாக வாழ்வதற்கு வழியமைத்தது. இந்நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தனது 86 ஆவது வயதில் பெருந்தோட்ட மக்களை தலைநிமிர்ந்து வாழவைத்த சௌமியமூர்த்தி தொண்டமான் உயிர்நீத்தார். சுமார் 21 வருடங்களாக இலங்கை பாராளுமன்றத்தில் அமைச்சராக பதவி வகித்த அவர் இறக்கும் வரை அதாவது 86 ஆவது வயது வரை அமைச்சுப் பதவியினை வகித்துள்ளார். மேலும் இலங்கையில் அதிகூடிய வயதில் அமைச்சராக செயற்ப்பட்டவரும் அவரே ஆவார். இதேவேளை தான் இறக்கும் வரை இலங்கை அரசியலில ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் தொண்டமான் இருந்து வந்தமை இலங்கை வாழ் மக்களின் அனைவரினதும் வரவேற்பையும் பெற்றது. இவரை கௌரவிக்கும் முகமாக இலங்கை அரசினால் பழைய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இவரின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் ஆரம்பித்த பல வேலைத்திட்டங்கள் இன்றும் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  மலையகத்தின் வளர்ச்சி, கல்வி, பொருளாதாரம் , குடியுரிமை அரசியல் , கலாசாரம் என அனைத்தையும் வளர்த்து இன்றும் என்றும் இந்திய வம்சாவளி மக்களின் மனதில் மாத்திரமில்லாமல் இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களின் இதயத்தில் குடிகொண்ட பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆவார். .............................................................................................................................................பிரசன்னா  

No comments:

Post a Comment

hi