Sunday, December 2, 2012

கிருபானந்தவாரியார் 08.11.2012


கிருபானந்தவாரியார் 08.11.2012

மிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மீக சொற்பொழிவில் தனக்கென தனிப்பெயரை ஏற்படுத்திக்கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர். எந்தவொரு சொறடபொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவையைக் கலந்து மகிழ்ச்சியை சேர்த்து சிறுகுழந்தைகளை கூட தன் பேச்சாற்றலால் கவர்ந்து வசப்படுத்திய மகான். சொற்பொழிவு என்று சொல்லும் போது முதலில் ஞாபகத்திற்கு வருபவர் சொற்பொழிவாளர் கிருபானந்தவாரியார். இவர்  கடந்த 1906 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ம் திகதி  இந்தியாவின் வேலூர் மாவட்டம் காட்வாடிக்கு அருகிலுள்ள காங்கேயனல்லூர் எனும் கிராமத்தில் மல்லையதாசர் கனகவல்லி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். ஆன்மீகத்தில் தனித்திறன் பெற்றிருந்த இவருக்கு இவரது தந்தையே குருவாவார். கிருபானந்தவாரியாருக்கு 3 வயது ஆகும் போதே அவரது தந்தை தமிழ் இலக்கணம் இலக்கியங்களை கற்றுக்கொடுத்தார். 8 வயதிலேயே கவி பாடும் ஆற்றல் பெற்ற இவர் இந்து சமய நூல்களிலுள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான தேவாரம் பாடல்கள் என்பவற்றை மனப்பாடம் செய்தார். மேலும் கற்றறிந்த புலவர்களுக்கே கடினமான சில படைப்புக்களை இவரே இயற்றினார்;. சொற்பொழிவாளராக இருந்த தனது தந்தைக்கு சொற்பொழிவொன்றுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட குறித் சொற்பொழிவை கிருபானந்தவாரியார் வழங்கினார். இளம் வயதிலேயே அத்தனை அனுபவமிக்க மொழிகளை சொற்பொழிவில் பயன்படுத்திய கிருபானந்தவாரியாரின் அறிவுக்கூர்மையை அனைவரும் பாராட்டினர். இந்நிலையில் தனது 18 வயதிலிந்து சொற்பொழிவு செய்வதை ஆரம்பித்த கிருபானந்தவாரியார் எளிமையான உரைநடையில் சொற்பொழிவை மேற்கொண்டமை கற்றோர் முதல் பாமரர் வரை அனைவரையும் அவர்பால் இழுத்தது. தனது 19 வது வயதில் தனது தாய் மாமன் மகளான அமிர்த லட்சுமியை அவர் திருமணம் செய்தார். எனினும் வாழ்நாள் வரை இவர்களுக்கு புத்திரபாக்கியம் இல்லை. அதன் காரணமாக கிருபானந்தவாரியார் சிறுவர்கள் மீது அதிக ஆசை கொண்டு அவர்களும் கவரும் வகையில் சொற்பொழிவை நிகழ்த்தினார். பெரும்பான்மையான தமிழ் கடவுளான முருகப்பெருமானின் வரலாற்றையும் அவர்களின் திருவிளையாடல்களையும் உள்ளடக்கியே இவரது சொற்பொழிவுகள் அமைந்தன. இந்நிலையில் முருகனைப்பற்றியே வாழ்நாள் முழுவதும் சொற்பொழிவை மேற்கொண்ட இவர் திருமுருக கிருபானந்தவாரியார் எனவும் அழைக்கப்பட்டார். சொற்பொழிவில் தனி முத்திரை பதித்த இவருக்கு சென்னை தமிழ் இசை மன்றத்தினர் இசைப் பேரறிஞர் பட்டம் வழங்கினர். முருகனை முதற் கடவுளாக கொண்டு இவர் தமிழில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினாலும் இவர் வடமொழி ஆதரவாளர் எனவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சொற்பொழிவை நிகழத்துவது மாத்திரமின்றி அதற்கு  எழுத்து வடிவம் கொடுப்பதிலும் சிறப்பு பெற்றார். மேலும் இந்து சமய தொன்மையையும் வரலாற்றையும் எடுத்துச்சொல்லும் பல நூல்களையும் இவர் மறுபதிப்பு செய்வதற்கு உதவிசெய்துள்ளார். வாழும் வரை முருகபக்தனாகவே வாழ்ந்து தமிழ் மொழிக்கு தனது சொற்பொழிவால் மெருகூட்டினார். இந்தியாவில் மாத்திரமின்றி அமெரிக்கா இலங்கை, சிங்கப்ப+ர், மலேசியா, லண்டன், சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளில் தனது சொற்பொழிவை நிகழ்த்தினார். அதன் காரணமாக இவருக்கு கலைமாமணி, திருப்புகழ் ஜோதி, பிரவசென சாம்ராட் இசைப் பேரரசு, அருள்மொழியரசு, எனப் பல பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் சொற்பொழிவுத்துறை, எழுத்துறை ஆகிய வற்றில் தடம் பதித்ததோடு சினிமா துறையிலும் கால் தடம் பதித்தார். அதற்கிணங்க சிவகவி எனும் திரைப்படத்திற்கு வசனங்கள் எழுதியுள்ளார். மேலும் துணைவன், திருவருள், தெய்வம் ஆகிய திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். மேலும்  நடிகரும், தமிழகத்தின் முதல்வருமான எம்.ஜி.ஆருக்கு இவர் பொன்மனச்செம்மல் எனும் பட்டத்தை வழங்கினார். இந்நிலையில் கடந்த 1993 ம் ஆண்டு லண்டன் நகருக்கு சென்று சொற்பொழிவாற்றிய நிலையில் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் கடந்த 1993 ம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ம் திகதி அவர் நாடு திரும்பினார். அதற்கமைய கடந்த 1993 ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையிலிருந்து சென்னைக்கு திரும்பும் வழியில் விமானத்தில் வைத்தே அவரது உயிர் இறைவனடி சேர்ந்தது. சிரித்த முகத்துடன் எதனையும் எதிர்கொள்ளும் இயல்புக்கு சொந்தக்காரரான கிருபானந்தவாரியார் தமிழ் பழமாக விளங்கிய என்றும் அழியா புகழை நிலை நாட்டி சென்றார். அவர் வாழ்ந்த வீடு இன்று நினைவில்லமாக மாற்றம் பெற்றுள்ளது. மேலும் இந்திய  அரசு கடந்த 2006 ம் ஆண்டு இவரது உருவம் பதித்த தபால் தலையை வெளியிட்டு கிருபானந்தவாரியாரை கௌரவப்படுத்தியது. ஆன்மீகத்துறையில் தனிமுத்திரை பதித்து தனது சொற்பொழிவால் இன்றும் எம் இதயத்தை இனிக்க செய்யும் அவரது வார்த்தைகள் அழியாத் தமிழின் சொத்துக்கள்………………. .....................................................................பிரசன்னா  

No comments:

Post a Comment

hi