யுனெஸ்கோ
ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனங்களில் ஒன்றான யுனெஸ்கோ நிறுவனம் 1945 ம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ம் திகதி உருவாக்கப்பட்டது. அதன் உறுப்பு நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்பாடல் துறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே யுனஸ்கோ நிறுவனத்தின் பிரதான பணியாகும். இதன் மூலம் உலகின் இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் சம நீதி என்பதை உறுதிப்படுத்துவதே இவ்வமைப்பின் நோக்கமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் அதிகார பத்திரத்தில் அடங்கியுள்ள விதிகளின் அடிப்படையில் யுனஸ்கோவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. கல்வி, இயற்கை அறிவியல், சமூக மற்றும் மனித அறிவியல், பண்பாடு, செய்தி தொடர்பு போன்ற 5 விடயங்கள் மூலம் யுனெஸ்கோ அமைப்பின் நோக்கங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இந்நிலையில் உலகில் இடம்பெற்ற பல்வேறு பிரச்சினைகளில் தலையிட்டு அதற்கான தீர்வைப்பெற்றுக்கொடுப்பதில் யுனஸ்கோ பாரிய பங்கு வகித்தது. 1950 முதல் 1908 ம் ஆண்டு வரை இன வெறிக்கெதிராக யுனெஸ்கோ பாடுபட்டது. இதன்போது 1956 ல் ஆபிரிக்க குடியரசு தமது நாட்டின் இனப்பிரச்சினையில் யுனெஸ்கோ தலையிடுவதாக கூறி அதன் உறுப்புரிமையிலிருந்து விலகி கொண்டது. அதன் பின்னர்; நெல்சன் மண்டேலா தலைமையில் மீண்டும் யுனெஸ்கோவுடன் இணைந்தது. 1968 ம் ஆண்டு யுனெஸ்கோ மாநாட்டின் விளைவால் “ மனிதன் மற்றும் உயிர்கோள திட்டம்” உருவானது. 1989 ல் உலகளாவிய வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. யுனெஸ்கோ தனது நடவடிக்கைகளை அதன் 5 நிரல்கள் மூலமாக தனது செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. சமூக அக்கறையுள்ள நிகழ்வுகள் தினங்கள் என்பவற்றை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்ட யுனெஸ்கோ திட்டங்களை வகுப்பதற்கான நிதியுதவிகளையும் பெற்றுக்கொடுத்தது. 323 சர்வதேச அரச சாரா நிறுவனங்களுடன் குறித்த அமைப்பு உத்தியோகப+ர்வ உறவுகளைக்கொண்டது. அனைவருக்கும் தரம் வாய்ந்த கல்வி, வாழ் நாள் முழுவதும் கல்வி, செய்தி தொடர்பு மூலம் அறிவார்ந்த சமூகத்தை ஏற்படுத்தல் என்பவற்றிற்கு யுனெஸ்கோ முன்னுரிமை வழங்கியது. ஜெனிவாவில் யுனெஸ்கோ சர்வதேச கல்வி பணியகம் நிறுவப்பட்டுள்ளது. அதில் கல்விசார் கருத்துக்கள், முறைகள் மற்றும் கட்டமைப்புக்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் யுனெஸ்கோ கூட்டு மற்றும் தேசிய அலுவலகங்களுக்கு பிரத்தியேகமாக ஆதரவளித்தது. அதன் நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் பிரத்தியேகமான துறைகளை யுனஸ்கோ அமைப்பின் நிறுவனங்களாகும். யுனெஸ்கோ தபால் தலைகளை பலநாடுகள் வெளியிட்டுள்ளன. குறித்த அமைப்பின் முத்திரையில் அதன் தலைமை அலுவலக அமைப்பும் ஒரே பொருளை அடிப்படையாக கொண்டுள்ளன. 1955 ல் ஐக்கிய நாடுகளின் அஞ்சல் நிர்வாகம் யுனெஸ்கோவை பெருமைப்படுத்த அஞ்சல் தலைகளை வெளியிட்டது. குறித்த தபால் தலைகள் பல்வேறு நாடுகளின் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டன. இதேவேளை 193 உறுப்பு நாடுகளையும் 7 பங்கு பற்று உறுப்பினர்களையும் கொண்;ட யுனெஸ்கோ அமைப்பு களப்பணி அலுவலகங்கள் மூலமாக செயற்படுகிறது. வரலாற்று திட்டங்களை உயர்த்துதல், உலக பண்பாடு மற்றும் இயற்கை மரபுரிமை ஆகியவற்றை பாதுகாப்பதற்கு உலகளாவிய ஒத்துழைப்புக்களை பெறுவதே யுனஸ்கோவின் திட்டமாகும். இது உலக நாடுகளின் முன்னேற்ற குழுவின் ஓர் அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது............................................................................................பிரசன்னா
No comments:
Post a Comment
hi