கலைவாணர் என்.எஸ்.கிருஸ்ணன். 29.11.2012
தமிழ் சினிமா துறையில் பல கலைஞர்கள் உருவாகி சாதித்து மறைந்திருந்தாலும் எம் ஞெ;சில் நீங்காத இடத்தை பிடித்த சிலரே உள்ளனர். அவர்களில் தங்களின் தனித்துவத்தைப் பேணிய கலைஞர்களே இன்றும் பேசப்படுகின்றனர். இந்திய தமிழ் திரையுலகில் உதித்த நகைச்சுவையாளர்களில் தனது தனித்தன்மை வெளிப்பாட்டினால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்களில் இவரும் ஒருவர். இவர் அனைவராலும் கலைவாணர் என அழைக்கப்பட்டார். நகைச்சுவையில் சமூக கருத்துக்களையும் மக்களை விழிப்படைய செய்யும் சிந்தனைகளையும் உட்படுத்தி ரசிகர்களையும் சிரிக்கவைத்தவர் பழம் பெரும் நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஸ்ணன் ஆவார். இவர் கடந்த 1908 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இந்தியாவின் நாகர் கோவில் எனும் ஊரில் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணன் சிறுவயதிலேயே நாடககொட்டகைகளில் குளிர்பானம் விற்கும் பையனாக தொழில்புரிந்து வந்தார். பின்னர் சாதாரண வில்லுப்பாட்டு கலைஞராக தன்னை கலையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து நாடகத்துறையில் நுழைந்த அவர் சொந்த நாடக கம்பனியை நடத்தும் அளவிற்கு தன்னை வளர்த்துக்கொண்டார். அதே காலப்பகுதியில் தமிழ் திரைப்படத்துறை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்பட்டது. இந்நிலையில் திரையுலகில் நுழைந்த என்.எஸ்.கிருஷ்ணன் நகைச்சுவை பாத்திரத்தை தெரிவு செய்து அதில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி தன்னையொரு சிறந்த முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்த்து திரையுலகில் நிலையான இடத்தினை பெற்றார். இவர் நடித்த முதலாவது திரைப்படம் கடந்த 1936 ஆம் ஆண்டு வெளிவந்த சதீலீலாவதி எனும் திரைப்படமாகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும் திரைப்படத்திலும் பயன்படுத்துவதை வளக்கமாக கொண்டிருந்தார். அவர் யார் மனதையும் புண்படுத்தாமல் தனது நகைச்சுவை மூலமாக சமுதாயத்திற் கருத்துக்களை பரப்பினார். இவரது மனைவி மதுரம் என்பவரும் பிரபல நடிகை என்பதன் காரணத்தினால் இவர்கள் இருவரும் இணைந்தே பல திரைப்படங்களில் நத்திருந்தனர். இதேவேளை நகைச்சவைகளை சினிமா காட்சிகளா மாத்திரமன்றி பாடல்களாகவும் அமைக்க முடியுமென நிரூபித்தவர் கலைவானன் என்.எஸ்.கிருஷ்ணன் ஆவார். ஒரு நடிகனாக மாத்திரமன்றி சிறந்த சமுதாய விழிப்புணர்வு கருத்தக்களை கொண்ட மனிதனாகவும் ஒரு பாடகராகவும் படைப்பாளியாகவும் பன்முகத்திறமைகளை தனக்குள் கொண்டவர் ஆவார். பழங்கால கலைகளில் பண்பினை வீணடிக்காமல் அவற்றை புதமைப்படுத்தி மக்களுக்கு ஏற்ற விதத்தில் தந்தவர் கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணன் அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டுமென அக்கறை மற்றும் ஆர்வம் கொண்ட அவர் தான் நடித்த ஏரத்தாள 150 திரைப்படங்களுக்குமே தனது சீர்த்திருத்த கருத்துக்களை தைரியமாக திரையில் எடுத்துச் சொன்னவர் ஆவார். திரையுலகில் சமுதாய சீர்த்திருத்த கருத்துக்களை வாரி வழங்கிய இவர் தனது சொந்த வாழ்க்கையில் ஏனையவர்களுக்கு உதவிகளை வாரி வழங்குவதிலும் வல்லலாகவே காணப்பட்டார். காந்தியடிகள் மீது அதிக பற்றுக்கொண்ட என்.எஸ்.கிருஷ்ணன் தனது சொந்த செலவில் அவருக்கு நினைவுத் தூபியையும் எழுப்பியுள்ளமை அவரது தேசப்பற்றினை எடுத்துக்காட்டியது. இதேவேளை இவ்வாறான கலையுலக வாழ்வை ரசனையுடன் வாழ்ந்த என்.எஸ்.கிருஷ்ணன் அவ்வப்போது சில பிரச்சினைகளிலும் சிக்குண்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இவரது வாழ்க்கையில் இவர் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டமை இவரது கலைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. 30 மாத சிறைவாழ்க்கையின் பின்னர் விடுதலை பெற்ற கலைவானன் என்.எஸ்.கிருஷ்ணன் மீண்டும் தனது திரையுலக வாழ்வை ஆரம்பித்து திரையுலகில் தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டார். அவர் நடித்த அம்பிகாபதி, மதுரை வீரன், நல்லதம்பி ஆகிய திரைப்படங்கள் அவருக்கு பெரும் புகழை பெற்றுக்கொடுத்தது. மேலும் ஒரு இயக்குனராக அவர் பணம் மற்றும் மணமகள் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமுதாய கருத்துக்களை நகைச்சுவையின் ஊடாகவும் திரைப்பட பாடல்கள் ஊடாகவும் இவர் வெளிப்படுத்தும் பாணியை தற்போதைய தமிழ் திரையுலக நகைச்சுவை நடிகரான விவேக் பின்பற்றி வருவதன் காரணமாக அவருக்கு சின்னக்கலைவானன் எனும் பட்டமும் வழங்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. தமிழ் திரையுலக வரலாற்றை பொறுத்தவரை நகைச்சுவையில் புதிய பரிமாணத்தை புகுத்தி தமிழ் திரையுலகில் அனைவரும் எதிர்பார்க்கும் அளவிற்கு தனது பாத்திரத்தாலும் நடிப்பினாலும் கொண்டுச் சென்ற கலைவாணன் என்.எஸ்.கிருஷ்ணன் சுகயீனமுற்ற நிலையில் கடந்த 1957 ஆம் ஆண்டு ஓகஸ்;ட் மாதம் 30 ஆம் திகதி தனது 49 ஆவது வயதில் உயிரிழந்தார். அவரை கௌரவப்படுத்தும் முகமாக தமிழ் நாடு அரசு சென்னையிலுள்ள அரச அரங்கத்திற்கு கலைவானர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது. மேலும் குறுகிய காலமே திரையுலகை ஆட்சி செய்திருந்தாலும் தான் திரையுலகில் வாழ்ந்த காலம் பொற்காலம் என நிரூபிக்கும் அளவிற்கு தன்னை நிலைநிறுத்தி தமிழ் திரையுலக வரலாற்றில் தனக்கும் ஒரு பங்குண்டு என்பதை நிரூபித்துச் சென்று கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணன் கலையுலகில் முத்தான சொத்துக்களில் ஒருவர் ....................................................................................................................................பிரசன்னா
No comments:
Post a Comment
hi