Monday, December 3, 2012

சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா


சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா

ரு நாட்டின் அபிவிருத்தியில் முன்னிலை வகிக்கும் காரணிகளில் கல்வி அறிவு பிரதான பங்குவகிக்கிறது. அதற்கமைய ஒரு நாட்டின் கல்வி நிலையினை வளர்ப்பதற்கு ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் முன்னின்று உழைக்கும் அளவிற்கு கல்வி என்ற ஒன்று முக்கியத்துவம் அடைந்துள்ளது. அந்த வகையில் “கண்ணுடை என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையார் கல்லாதார்” எனும் வல்லுவனின் வாக்குக்கமைய ஒவ்வொரு நாட்டிற்கும் இரண்டு கண்களாகவே பார்க்கப்படுகிறது. ஆசியாவை பொறுத்தவரையில் இலங்கையின் கல்வி அறிவு வீதத்தை அதிகரிப்பதற்கு பாடுபட்;ட தலைவர்களில் இலங்கையின் இலவசக் கல்வியின் தந்தை எனப்போற்றப்படும் சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரா முதன்மை பெற்றுள்ளார். இவரே இலங்கையில் முதன் முதலில் இலவசக் கல்வியினை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவராவார். இவர் கடந்த 1884 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ம் திகதி அம்பலாங்கொடையில் பிறந்தார். கிறிஸ்த்தோபர் வில்லியம் விஜயகோன் கன்னங்கர எனும் சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர தனது ஆரம்பக் கல்வியை அம்பலாங்கொடை வெஸ்லி ஆங்கில உயர் பாடசாலையிலும் பின்னர் காலி ரிச்மன்ட் கல்லூரியிலும் மேற்கொண்டார். பிரித்தானிய ஏகாதிபத்திய நாடுகளில் மிகச் சிறந்த மாணவர்க்குரிய பரிசையும் இவர் பெற்றார். பின்னர் இவர் மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். தொடர்ந்து சட்டத்துறையில் தகுதி பெற்ற அவர் பின்பு காலியில் சட்டத்தரணியாக கடமையாற்றினார். தனது  சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி கடந்த 1919 ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். அவர் அரசியலில் பல நகர்வுகளை மேற்கொண்டு கடந்த 1931 ம் ஆண்டு இலங்கையில் கல்வி அமைச்சரமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அதற்கமைய அன்றிலிருந்து 1946 ம் ஆண்டு வரை இலங்கையின் கல்வி அமைச்சராக செற்பட்டு நாட்டின் கல்வி வளர்ச்சியில் அளப்பெரிய சேவையினை வழங்கியுள்ளார். அவரை இன்றும்  கல்வியின்  தந்தையாக இலங்கையின் கல்வி வளர்ச்சியின் கடவுளாக போற்றுவதற்கும் அவரால் அமுல்படுத்தப்பட்ட முதலாம் தரம் முதல் பல்கலைக்கழகம் வரையான இலவச கல்வி திட்டம் காணப்படுகின்றது. உண்மையிலும் அவர் கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் தாய் மொழியை கல்விய+டாக மொழியாக்குதல் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்றல் மத்திய மகா வித்தியாலயத்தை ஆரம்பித்தல் போன்ற திட்டங்களும் ஒவ்வொரு பிள்ளைக்கும் தமது பெற்றோரின் சமயத்தை கற்பித்தல் குறைந்த வருமானம் உடைய குடும்பங்களை சார்ந்த பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் வழங்குதல் பொதுவான பாடத்திட்டம் தயாரித்தல் பாடசாலைகளுக்கு விளையாட்டு மைதானங்களை அமைத்துக்கொடுத்தல் போன்ற திட்டங்களையும் முன்னெடுத்தார். மேலும் மாணவர்கள் இசை, நடனம், மெய் வல்லுனர் விளையாட்டுக்கள் ஆகியவற்றை கற்க ஆரம்பித்தல், 2 ம் தரம் முதல் ஆங்கிலப் பாடம் கற்பதை கட்டாயமாக்குதல் போன்றவை அவர் கல்வித்துறைக்கு ஆற்றிய சேவைகளில் முக்கியமானவையாகும் இவரது கல்வி தொடர்பான திட்டங்களாக இலங்கையில் கல்வி நிலையில் புதிய திருப்பத்தினை ஏற்படுத்தியது. அன்றைய காலப்பகுதியில் ஆசியாவில் மிக அபிவிருத்தி அடைந்த நாடு எனும் நிலையை இலங்கை அடைந்தது. வெளிநாட்டவரின் ஆதிக்கத்தின் கீழிருந்த ஒரு கட்டமாக இருந்த போதிலும் இலங்கையின் கல்வி நிலையை உயர்த்துவதற்கு தோள் கொடுத்த மகானாவான் கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு எனும் வாக்கியத்தை இலங்கை வாழ் மக்களுக்கு உரித்தாக்கி இறந்தும் வாழ் மகானாவார். தற்போது எங்கோர் மூலையிலுள்ள ஏழையும் கல்வியைப் பெறுவதற்கு வழிசமைத்த சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர இலங்கை கல்வித்துறையில் தன்னிகரற்ற தலைவர் ஆவார். இவ்வாறு இலங்கை மக்களை உலகளாவிய ரீதியில் முன்னிலைப்படுத்த அயராது உழைத்த சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரா கடந்த 1969 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ம் திகதி தனது 75 வது வயதில் உயிர் நீத்தார். இறந்தும் வாழும் சகாப்தம் என்பதையும் தாண்டி இன்று இலங்கையிலுள்ள ஒவ்வொரு மாணவர்களும் சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா என்பரை வணங்கியே கல்விக்குள் நுழைவது அவரை பெருமை சேர்க்கும் விடயமாகும்.அழியா சொத்தான கல்வியைத் தந்த தேசிய கல்வித் தந்தை சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா இலங்கை வரலாற்றில் அழியாத வரலாற்று நாயகன்.................................................................பிரசன்னா 

No comments:

Post a Comment

hi