மனிதன் தன்னை இவ்வுலகிற்கு வாழ்வதற்கென பழக்கப்படுத்திய நாள் முதல் மனித இனத்திற்குள் யுத்தங்களும் நில அபகரிப்புகளும் இடம்பெற்று வந்துள்ளன. அன்றைய காலப்பகுதியில் ஒரு நாடு இன்னொரு நாட்டிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கு தங்களால் முடிந்த பல வியூகங்களை அமைத்து ஆட்சிகளை நிறுவி வந்துள்ளன. தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத அன்றைய காலப்பகுதியில் அவர்கள் செய்த ஒவ்வொரு படைப்புக்களும் இன்றைய மனிதனை பொறுத்தவரையில் ஆச்சரியமாகவே அமைகிறது. அவர்களால் இந்த விடயத்தினை எப்படி செய்திருக்க முடியும் என்றதொரு கேள்வி எழுந்தாலும் அப்போதுள்ள மனிதர்கள் சிறந்த உழைப்பாளிகளாகவும் பொறிமுறை சிந்தனை உள்ளவர்களாகவும் காணப்பட்டனர். அதனால்தான் அவர்களால் இவ்வுலகிற்கு தந்த பல படைப்புகள் இன்றும் அழியாத சொத்துக்களாய் பாதுகாக்கப்படுகின்றன. அப்படி பண்டையகால மனிதன் இவ்வுலகிற்கு தந்த பிரம்மாண்டமான சொத்துக்களில் இன்றும் ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம் தரும் ஒரு விடயம் சீனப் பெருஞ் சுவர் ஆகும். பண்டைய காலத்தில் பிற நாட்டு ஆக்கிரமிப்பகளையும் தடுப்பதற்கும் பிறநாட்டு படைகள் குதிரைகள் என்பன சீனாவிற்குள் ஊடுறுவதை தடுக்கும் பொருட்டு15 ஆம் 16 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அரனே சீனப் பெருஞ் சுவர் ஆகும். கற்களும் மண்ணும் கலக்கப்பட்டு உறுதியான சுவராக சீனப் பெருஞ்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சீனாவை ஆரம்பத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் அவற்றின் எல்லையை வலுப்படுத்துவதற்காக சீனப் பெருஞ் சுவர் ஆங்காங்கே எழுப்பியிருந்தனர். எனினும் கடந்த கி.மு. 221 ஆம் நூற்றாண்டில் சென் ஹி ஹ_வான் எனும் மன்னன்; எதிரி நாடுகளை கைப்பற்றி சீனாவில் ஒன்றிணைந்த கிங் வம்ச அரசை நிறுவினார். இந்நிலையில் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்புகளை பாதுகாப்பதற்கும ;மையப்படுத்தி ஆட்சியை மே;றகொள்வதற்கும் அவர் எண்ணினார். அதன் காரணமாக தனது பேரரசுக்குட்பட்ட நாடுகளில் இடையில் அமைந்திருந்த எல்லை சுவர்களை இடித்து அதற்கு வெளியே ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த சீன சுவரின் எல்லையை விஸ்தரித்தார். பின்னர் குறித்த சுவர் ஆட்சிக்கு வந்த பல மன்னர்களால் திருத்தப்பட்டும் விரிவாக்கப்பட்டும் தற்போதைய வடிவத்தை எடுத்துள்ளது. அதற்கமைய கி.மு. 208 ஆம் ஆண்டு கிங் வம்சத்தினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட சீனப் பெருஞ் சுவர் அமைக்கும் நடவடிக்கை கி.மு. முதலாம் நூற்றாண்டில் ஹான் வம்சத்தினாலும் கடந்த 1138 ஆம் ஆண்டு தொடக்கம் 1198 ஆம் ஆண்டு வரையான 10 வம்சங்களினதும் 5 அரசுக்களின் காலங்களிலும் கடந்த 1368 ஆம் அண்டு மிங் வம்சத்தினாலும் சீனப் பெருஞ் சுவர் அமைக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்டது. சீனப் பெருஞ் சுவரானது காடுகள் , பாலைவனங்கள், மலைப்பிரதேசங்கள் பனியுறை பிரதேசங்கள் என சீனாவின் சகல எல்லைகளையும் உட்படுத்தி நிற்கிறது. மிங் வம்ச காலப்பகுதியிலேயே சீனப் பெருஞ் சுவரின் கட்டுமாண பணிகள் உச்ச நிலையையடைந்தன. அதற்கமைய குறித்த ஆட்சிக்காலத்தின் போது சீனப் பெருஞ் சுவரில் 10 இலட்சம் படையினர் வரை காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே பல நூற்றாண்டுகளாக இடம்பெற்ற சீனப் பெருஞ் சுவரின் கட்டுமாண பணியின் போது 20 தொடக்கம் 30 இலட்சம் மக்கள் இறந்திருக்ககூடுமென கணிக்கப்படுகிறது. இந்நிலையில் யுத்தத்தினாலும் கட்டுமாண பணிகளாலும் சீனப் பெருஞ் சுவர்pல் பலர் உயிரிழந்ததன் காரணமக இச்சுவரை உலகின் அதி நீளமான மயானம் என்றும் அழைக்கப்படுகிறது. சீனப் பெருஞ்சுவரானது குறிப்பிடத்தக்க 3 பகுதிகளைக் கொண்டு உள்ளடக்கப்படுகிறது. ஜியோங் குவான் கடவை, ஜியா யுகுவான் கடவை, ஷாங் ஹாய் குவான் கடவை ஆகிய 3 பகுதிகளாக சீனப் பெருஞ் சுவர் வரையறுக்கப்படுகிறது. பெருஞ்சுவரின் நீளம் முழுவதும் இருந்த பாதுகாவலருக்கிடையிலான தகவல் தொடர்புகள் மற்றும் தேவையான கூடுதல் படைகளை அழைப்பதற்காக வசதிகளும் முக்கியமான தேவைகள் உள்ளிட்டவற்றை கருத்திற்கொண்டு மலை முகடுகளிலும் சுவர் பகுதிகளிலும் பிற உயரமான பகுதிகளிலும் சமிஞ்சை கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆரம்பகாலத்தில் மண் கற்கள் மரம் ஆகியவற்றை பயன்படுத்தி கட்டப்பட்ட சீனப் பெருஞ் சுவர் பின்னர் செங்கற்கள் ஓடுகள், சுண்ணாம்பு என்பவற்றை பயன்படுத்தியும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல உயிர்களை பலியெடுத்தும் நாட்டை பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்ட சீனப் பெருஞ் சுவர் மனித வரலாற்றில் மற்றுமொரு மிக்பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது. அதற்கமைய தற்போது சீனப் பெருஞ் சுவரின் பல இடங்களில் திருத்தப் பணிகள் இடம்பெறுவதோடு சில பகுதிகளில் பெருஞ்சுவர் உறுதியற்ற நிலையில் காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பெருஞ்சுவர் தொடர்பான விரிவான ஆய்வுகள் செய்யப்படாததன் காரணமாக தற்போது சீனப் பெருஞ் சுவரின் நீளம் குறித்து எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை. எனினும் ஏற்கனவே உள்ள தகவல்களின் அடிப்படையில் சீனப் பெருஞ் சுவரானது 7 ஆயிரத்து 200 கிலோமீற்றர் நீளமும் 3.5 மீற்றர் உயரமும் 4.5 மீற்றர் அகலமும் உடையாகும். இதனிடையே காலத்திற்கு காலம் சீனப் பெருஞ் சுவரின் நீளங்களும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதேவேளை சீனப் பெருஞ் சுவர் பாதுகாக்கப்படாவிடின் இன்னும் 20 ஆண்டுகளுக்குள் மணற்புயல் மற்றும் அறிப்பினால் அழிவடையக்கூடிய அபாயம் காணப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சீனப் பெருஞ் சுவரானது தற்போது உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகின்ற போதிலும் கிரேக்கர்களினால் அடையாளம் காணப்பட்ட பண்டைய உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக இது கருதப்படவில்லை. இதனிடையே கடந்த 1938 ஆம் ஆண்டு ரிச்சர்ட் ஹலிபொட்டர் எழுதிய அதிசயங்களில் இரண்டாவது எனும் புத்தகத்தில் சீனப் பெருஞ் சுவரை நிலவிலிருந்து பார்க்கமுடியுமென குறிப்பிட்டிருந்தார். எனினும் சீனப் பெருஞ் சுவரை நிலவிலிருந்து வெறுங்கண்களால் பார்க்கமுடியாதென பின்னர் ஆய்வுகள் நிரூபித்திருந்தன. இதேவேளை கடந்த 1987 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் சீனப் பெருஞ் சுவர் உலக பராம்பரிய தளங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. மனித கட்டுமாணத்தின் மற்றுமொரு உச்சகட்டமான சீனப் பெருஞ் சுவர் ஆரம்பகால மனித வராற்றினை நீண்டுச் செல்லும் நீண்டதொரு வரலாற்று குறிப்பாகும். ................................................................................................................பிரசன்னா
No comments:
Post a Comment
hi